Friday, November 28, 2008

பெற்றோர்கள் சிந்திக்க.....

இது ஒரு உண்மை சம்பவம். மிகவும் பரசித்தி பெற்ற ஒரு பள்ளி. அதில் 6 வயதே நிரம்பிய ஒரு சிறுவனின் கண்ணீர் சம்பவம் என் காதுகளுக்கு எட்டியது.

அந்த பள்ளியில் ஒரு சிறுவனன் 1 ஆம் வகுப்பில் படித்து வருகிறான். அவன் பெயர் ராஜா என்று வைத்துக்கொள்ளுவோம். ராஜா சுமாராக படிக்கும் மாணவன் என்று கூறினார்கள். படிப்பது முதல் வகுப்பு இதில் சுமார் என்ன, சுமார் இல்லாமல் என்ன? எப்போதும் சுமாராக மதிப்பெண்கள் வாங்கும் நம் ராஜா கடந்த மாதந்திர தேர்வில் எல்லா பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் நூற்றுக்கு தொன்னுத்தொன்பது மதிப்பெண்கள் வாங்கி
உள்ளான். இதை பாராட்டும் வகையில் ராஜாவின் வகுப்பூ ஆசிரியை அவர்கள், ராஜாவை ஊக்குவிக்கும் வகையில், V.Good and * * * இப்படி மூன்று ஸ்டார்கள் வழங்கி இருக்கிறார்கள். ராஜாவிற்கோ சந்தொஷம் மகிழ்ந்திருக்கிறான், தலை கால் புரியவில்லை. ஒவ்வொரு பாடம் கற்பிக்க வரும் ஆசிரிகைகளிடம் காண்பித்து, அவர்களும் ராஜாவை பாராட்டி கொஞ்சி அனுப்பி இருக்கிறார்கள். இவைகள் அனைத்தும் மதிய உணவு வேளை வரை தொடர்ந்து நடந்திருக்கிறது.

மதிய உணவு இடைவேளை முடிந்து, அடுத்து வந்த ஆசிரியையிடம் ராஜா, மிஸ் நான் 3 ஸ்டார்கள் வாங்கிஇருக்கிறேன் என்று காட்டி உள்ளான். அந்த ஆசிரியையும் அந்த மதிப்பெண் வாங்கிய தாளை வாங்கி பார்த்திருக்கிறார்கள். ஆனால் அந்த மதிப்பெண் தாளில் ராஜாவின் பெயர் மற்றும் அவன் வாங்கிய மதிப்பெண்கள் 66 என்று இருந்திருக்கிறது. அந்த ஆசிரியைக்கு ஒன்றும் புரியவில்லை. 66 மதிப்பெண்களுக்கு எல்லாம் ஸ்டார்ட்ஸ் போட மாட்டங்கப்பா. நீ அடுத்த முறை நல்லா படித்து, நல்ல மதிப்பெண் வாங்கினால் அப்போ உனக்கு நிறைய ஸ்டார்ஸ் எல்லாம் போடுவாங்க, இப்போ நீ போய் உன் இடத்தில் உட்கார் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் ராஜாவோ அய்யோ என் ஸ்டார்ஸ் எல்லாம் காணாம போய்டுச்சு. மிஸ் என் ஸ்டாட்ஸ் எல்லாம் வேணும், என் ஸ்டார்ட்ஸ் என்று விடாமல் அழுதிருக்கிறான். உடனே அந்த ஆசிரியை நல்ல புத்திமதிகள் கூறி
அவனை போய் இடத்தில் அமர சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ராஜா அதை கேட்காமல் ஸ்டார்ஸ் ஸ்டார்ஸ் என்று அழுததினால், ராஜாவின் வகுப்பாசிரியையை அழைத்து விபரம் கேட்டு இருக்கிறார்கள். வகுப்பு ஆசிரியையும் ஆமாம் மிஸ் அவன் 99 மதிப்பெண்கள் தான் ஒரு பாடத்தில் வாங்கி இருந்தான். நான்தான் அவனுக்கு 3 ஸ்டார்ஸ் போட்டேன், ஆனால் எப்படி ராஜாவின் மதிப்பெண்கள் 99 என்பது 66 ஆக மாறியது என்று ஒன்றும் புரியாமல் விளித்திருக்கிறார்கள். பிறகு மதிப்பெண் register ஐ சரிபார்த்திருக்கிறார்கள். அதில் ராஜாவின் மதிப்பெண் 99 ஆகத்தான் இருந்திருக்கிறது. எப்படி என்று மறுபடியும் வகுப்பிற்கு வந்திருக்கிறார்கள். ராஜாவின் முன்னால் ஒரு சிறு பெண் குழந்தை (அதே 6 வயது, பெயர் மாதவி என்று வைத்துகொள்ளுவோம்) அமர்ந்திருக்கிறாள். அவளின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆனால் மதிப்பெண் பட்டியலில் 66 என்று இருதிருக்கிறது. அனால் கையில் வைத்திருக்கும் மதிப்பெண் தாளில் மாதவியின் பெயருக்கு கீழ் 99 என்று இருந்துள்ளது. வகுப்பு ஆசிரியைக்கு ஒன்றும் புரியவில்லை. மாதவியை அருகே அழைத்து நீ வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு மாதவி எந்தவித தயக்கமும் இல்லாமல் 99 நான் தான் 99 வாங்கி இருக்குறேனே. என்று மதிப்பெண் தாளை கண்பித்துஇருக்கிறாள்.

இந்த வயதில் ஒரு பயம் இல்லாமல் இந்த பெண் இவ்வாறு கூறியது யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்த்திருக்கும் என்று கேள்வியுடன், மாதவியை முதல்வரிடம் அழைத்து சென்றிருக்கிறார்கள். முதல்வருக்கு செல்லும் முன்பே விபரம் அறிவிக்கப்பட்டது. அதனால் முதல்வர் மிகவும் அன்புடன் மாதவியை தன்னிடம் அழைத்து, என்னடா கண்ணா உன் மதிப்பெண் தாளை uncle க்கு காட்டும்மா, என்று கேட்டிருக்கிறார். அவளும் மதிப்பெண் தாளை மிகவும் மகிழ்ச்சியுடன் காட்டி இருக்கிறாள். அதில் எல்லா மதிப்பெண்கள் கூட்டுத்தொகை சரியாக 99 என்று இருதிருக்கிறது. நீ வாங்கினதா என்று அன்புடன் விசார்த்திதிருக்கிறார். மாதவி ஆமாம் uncle நான்தான் வாங்கி இருக்கிறேன் என்று கடுகளவு கூட தயங்காமல்
சொல்லி இருக்கிறாள். பிறகு முதல்வர் இனிப்பு, பரிசுகள் எல்லாம் கொடுத்து மதிப்பெண்களை பற்றி விசார்த்திருக்கிறார். எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு, நான் 99 வாங்கி இருக்கிறேன் என்று மறுபடியும் அதே தான் கூறி இருக்கிறாள். ஒன்றும் கூறாமல் மாதவியயை அனுப்பி விட்டு. தவறு எப்படி நடந்திருக்கு என்று கண்டுபிடிக்குமாறு வகுப்பாசிரியைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நடந்தது என்ன?

மதிய உணவு இடைவேளைக்கு அனைவரும் சென்றிருந்த நேரத்தில், மாதவி ராஜாவின் விடைத்தாளில் உள்ள ராஜாவின் பெயரை அழித்துவிட்டு, அதில் தன் பெயரை எழுதி, தன் விடைத்தாளில் தன் பெயரை அழித்துவிட்டு ராஜாவின் பெயரை எழுதி இருக்கிறாள் என்று கண்டுபிடித்து விட்டார்கள். மறுபடியும் மாதவியை கூப்பிட்டு விசாரித்தால், அப்போதும் அதே பதில்தான். இது என்னோட விடைத்தாள் நான் வாங்கிய மதிப்பெண்கள், நான் வாங்கிய 3 ஸ்டார்ஸ் என்று ஆணித்தரமாக கூறிஇருக்கிறாள். முதல்வர் எதுவும் பேசாமல் நாளைக்கு உன் அப்பா மற்றும் அம்மாவை அழைத்து வா என்றிருக்கிறார். பிறகு ஏன் இந்த பெண் இவ்வாறு செய்துள்ளது என்று தீர விசாரித்ததில், கிடைத்த உண்மை என்னவென்றால்? மாதவியின் பெற்றோர்கள் அவள் குறைந்த மதிபெண்கள் வாங்கும்போதெல்லாம் அவளுக்கு ஒரே திட்டு ஒரே அடியாம். அடி வாங்கி வாங்கி ஒரே ஒரு நண்பியிடம் சொல்லி
அழுவாளாம். அந்த நண்பி குழந்தையும் ஒன்றும் புரியாமல், அழாதே என்று கூறுவாளாம். இதை விசாரிக்குபோது அந்த சிறு குழந்தை கூறி இருக்கிறது. பிறகு அவர்கள் வீட்டு பக்கத்தில் குடித்தனம் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளார்கள். அவர்களும் அந்த குழந்தையை எப்போதும் அடிப்பார்கள். ஏன்னு கேட்டால் சரியா படிக்க
மாட்டேன்கிறாள் என்பார்களாம். இதை கேட்டு எனக்கு திக் என்று இருந்தது.

6 வயது என்பது ஒரு வயதே அல்ல. சில குழந்தைகள், சிறு குழந்தையாக இருக்கும்போதே நன்றாக படிக்கும் அறிவை பெறுகிறார்கள், சில குழந்தைகள் மெதுவாக நன்றாக படித்து விடுவார்கள். குழந்தைகள் ஏற்கனவே புத்தக மூட்டைகளை சுமந்து மிகவும் சொல்லவொண்ணா துயரத்தில் இருக்கிறாரகள் என்று தான் என் கண்ணோட்டத்தில் தெரிகிறது.
இது தவறாகவும் இருக்கலாம்.

6 வயதில் நல்ல மதிபெண் வாங்கவில்லை என்று அடித்ததில் அந்த சிறு குழந்தையின் போக்கு எவ்வளவு அபாயகரமாக மாறி இருக்கிறது பார்த்தீர்களா? குழந்தைகள் படிக்கவேண்டும் என்று கண்டிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். அதற்கு எவ்வளவோ வழி முறைகளை பெற்றோர்கள் கையாளலாம் அல்லவா ?

பெற்றோர்களின் இந்த செய்கை அந்த பிஞ்சு குழந்தையின் மனதை எவ்வளவு மோசமான முறையில் மாற்றி உள்ளது பார்த்தீர்களா? இது ஒரு கெட்ட செயலாகவும் இந்த சமுதாயத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது அல்லவா?

தயவு செய்து தாய்மார்களே, தந்தைமார்களே இது போன்ற நடவடிக்கைகளை குறைத்து கொள்ளவீர்கள் என்று நம்புகின்றேன்.

அந்த குழந்தைக்கு எந்த வித மன உளைச்சலும் ஆகாமல் பள்ளி நிர்வாகம் கவனித்து வந்துள்ளது என்பதை நான் மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

இது போல் பல மாதவிகள் வளராவண்ணம் பார்த்துகொள்வோமாக!!

ரம்யா

Wednesday, November 26, 2008

வைகைபுயலும் பார்த்திபனும்

வைகை: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளி வரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே, ஹேய் என்னதான் நடக்கும்ம்ம்ம், அடுத்த வரி என்னா, மறந்து போச்சே, என்னதான்....

பார்த்திபன்: டேய், டேய் வேலு இங்கே வாடா, வாடான்னா போய்கிட்டே இருக்கே?

வைகை: ஆத்தி இவரா, இங்க என்னா பண்னறாரு, மாட்டுனோம்னா கிண்டி கிழங்கு எடுத்து, நோன்டி நொங்குஎடுத்துருவாறே ம் என்னா செய்யலாம், கூப்பிடறாரே காதுலே விழாதமாதிரி போய்ட்டா என்னா ம்ம்ம், சரி இன்னொருதடவை கூப்பிடட்டும்.

பார்த்திபன்: கிட்ட வந்து தலையில் தட்ட,

வைகை: எனப்பா தலையிலே அடிக்கிறே ?

பார்த்திபன்: பின்னே என்னடா கூப்பிட்டா வரமாட்டியா, என்னா அப்படியே எருமை மாடு மாத்ரி நிக்கறே. உனக்கெல்லாம் அவளளவு ஏத்தம் ஆயிடுச்சு இல்லே?

வைகை: என்னாப்பா நானு எதோ யோசனையா போய்கிட்டு இருந்தேன். நீ கூப்பிட்டதை சத்தியமா கவனிக்கலைப்பா.

பார்த்திபன்: சரி எத்தனை அப்பா போடுவே ? என்னா பேச்சு இது? உனக்கு எவ்வளவு சொன்னாலும் ஒன்னும் புரியாத எருமையாட நீ?

வைகை: ஏப்பா எப்ப பார்த்தாலும் திட்டிகிட்டே இருக்கே. நான் என்னப்பா பண்ணினேன் உன்னைய?

பார்த்திபன்: மறுபடியும் அப்பாவா? சரி அதென்ன கண்ணுலே கருப்பு கண்ணாடி?

வைகை: கைதட்டிபடி, ஹையோ ஹையோ இது கூடவா உனக்கு தெரியாது? இதைதான் கூலிங்க்ளாஸ்ன்னு சொல்லுவாங்க.

பார்த்திபன்: யாரு சொல்லுவாங்க?

வைகை: எல்லாரும் அப்படித்தான்பா சொல்லுவாங்க.

பார்த்திபன்: எல்லரும்ன்னா யாரெல்லாம்?

வைகை: எல்லாரும்னா எல்லாரும் தான்

பார்த்திபன்: கேட்ட கேள்விக்கும் மட்டும் பதில் வரணும், தெரியுதா தேவை இல்லாமே கொக்கரிக்கக் கூடாது.

பார்த்திபன்: அதே எதுக்கு கண்ணிலே போட்டிருக்கே?

வைகை: வேணா மறுபடியும் சொல்லறேன், இத எல்லாரும் போடுவாங்க, நீ ஏதோ என்னைய வம்பிற்கு இழுக்கிற மாதிரி தெரியுது. இது சரி இல்லை.

பார்த்திபன்: நான் எங்கே இருக்கிறேன், உனக்கும் எனக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கு சொல்லுடா.

வைகை: ம்ம்ம் ஒரு 10 அடி இருக்கும்.

பார்த்திபன்: அப்புறம் நானு உன்னையே எப்படி இழுக்க முடியும்.

வைகை: என்ன இவன் என்னா பேசினாலும் ஒரு கொக்கி போடறானே, இவனை எப்படி சமாளிச்சு இடத்தை காலி பண்ணறது, வகையா சிக்கிட்டோமோ? கடவுளே காப்பாத்தப்பா, காலைலே கோவில் வாசல்லே கண்டெடுத்த 10 ரூவாயிலே ஒரு 2 ரூவா உன் உண்டியலில் போட்டுடறேன். என்னைய இவன் கிட்டே இருந்து காப்பாத்து.

பார்த்திபன்: என்னா நான் கேட்டுகிட்டே இருக்கேன், ஒன்னும் பதிலே இல்லே, தனியா பேசிக்கிறே, நீ என்னா லூசா?

வைகை: என்னாப்பா கேட்டே, எனக்கு ஒரே குழப்பமா போயிடுச்சு?

பார்த்திபன்: அதான் லூசான்னு கேட்டேன்.

வைகை: வேண்டாம்ப்பா ரெம்ப கேவலமா பேசறே, என் மாமன் பொண்ணுங்க வர நேரம், நான்தான் துணைக்கு வீடு வரை போகணும். என்னைய விட்டிரு.

பார்த்திபன்: நான் என்னா உன்னைய பிடிச்சா வச்சிருக்கேன்? உன்னைய கடத்திக்கொண்டா வந்திருக்கேன்? ஏண்டா இப்படி எல்லாம் உளர்றே.

வைகை: என்னது உளர்றறேனா? ஏம்ப்பா டார்ச்சர் பண்ணறே, சரி உன் கேள்வி என்னா?

பார்த்திபன்: நான் என்னா உனக்கு பரிச்சையா வைக்கிறேன். என்னா கேள்வின்னு கேக்கறே? அறிவுகெட்ட முண்டம். எதுக்கு கூலிங்க்ளாஸ் போட்டிருக்கே ?

வைகை : அதெல்லாம் ஒன்னும்மில்லேப்பா கண்ணுக்கு கொஞ்சம் குளிர்ச்சியா இருக்கட்டுமேன்னுதான் போட்டிருக்கிறேன்.

பாத்திபன்: குளிர்ச்சியா, அப்படீன்னா?

வைகை : அடிக்கிற வெயிலுக்கு அப்படியே குளுகுளுன்னு இருக்கும். அவ்வளவுதான்.

பார்த்திபன்: அதெப்பிடி குளுகுளுன்னு இருக்கும், கண்ணாடி உள் பக்கம் ஐஸ் ஓட்ட வச்சிருக்கியா? சொல்லுடா, சொல்லுடான்னா

வைகை: என்ன இவன் இப்படி கேள்வி கேட்டே அலம்பல் பன்னரானே எப்படி சமாளிக்கிறது, வசமா மாட்டிகிட்டோம்ன்னு மட்டும் தெரியுது, தப்பிக்க தான் தெரியலை.

பார்த்திபன்: கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் என்னடா திரு திருன்னு முழிக்கிறே.

வைகை: இல்லேப்பா உனக்கு இப்படி புரியவைக்கிறதுன்னு எனக்கு புரியலை.

பார்த்திபன்: நான் என்ன உன்னைய மாதிரி லூசா, சொல்லு எனக்கு எல்லாம் புரியும்.

வைகை: கூலிங்க்ளாஸ் போட்டா வெயில் தெரியாமே கண்ணுக்கு குளுமையா இருக்கும். அதான்பா போட்டிருக்கேன்.

பார்த்திபன்: அதென்னடா அதுலே A.C . பொருத்தி வச்சிருக்கே, குளுமையா இருக்கிறதுக்கு. நொள்ளைக்கண்ணு இருந்தாதான் இதை போடுவாங்க.

வைகை: அது சரி கேள்வி எலாம் பெரிசாத்தான் இருக்குது. நீ ஏம்ப்பா கூலிங்க்ளாஸ் போட்டிருக்கே ?

பார்த்திபன்: நான் நல்லா படிச்சவன், என் persanolity க்கு இது எடுப்பா இருக்குதுன்னு கூலிங்க்ளாஸ் போட்டிருக்கேன்.

வைகை : persanolity அதுவும் இவருக்கு, இருக்கட்டும் இருக்கட்டும், எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ உன்னைய பேசிக்கிறேன்.

பார்த்திபன்: என்னடா முறைக்கிறே. தானே முனுமுனுக்கிரே

வைகை: அதெல்லாம் சரி, கேள்வி எல்லாம் நல்லாத்தான் கேக்குறே, உனக்கு வேலே வெட்டி எதவும் கிடையாதா?

பார்த்திபன்: அதென்னடா வேலை - வெட்டி, சொல்லுடா

வைகை : வேலைன்னா வேலை வெட்டின்னா......

பார்த்திபன்: பேசத்தெரியாத லூசுதாண்டா நீ, கேள்விக்கும் பதில் சொல்ல தெரியாத பரதேசிதாடா நீ, போ போ எங்காவது போய் தொலை, என் முன்னாடி இதெல்லாம் போட்டுக்கிட்டு வந்து நிக்காதே. பயமா இருக்குது.

வைகை: லூஸ் அதுவும் நானு, நல்லா இருப்பா ரொம்ப நல்லா இரு, வந்துட்டானுங்க காலைலே வம்புக்கின்னே. அப்பா தப்பிச்சோம், சரி நம்ப பாட்டை தொடரலாம். அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே,.....

பார்த்திபன்: என்னா சத்தம் இன்னும் நீ போகலையா ?

வைகை: இல்லேப்பா போய்கிட்டு தானே இருக்கேன்......

ரம்யா


நல்லா இல்லைன்னாலும் ஓட்டு போடுவீங்க

Saturday, November 22, 2008

சிறுவனும் வைகைபுயலும்

வைகை: என்ன தான் சும்மா இருந்தாலும் எல்லா பயலுகளும் நம்பளை கேவலமா பார்க்கிற மாதிரியே தெரியுதே. இல்லே நம்மக்குதான் அப்படி தெரியுதோ? இல்லையே நம்ப கண்ணு நம்மளை ஏமாத்தாதே. இன்னைக்கு யாரு கிட்டேயும் சிக்காம நல்ல படியா வீ டு திரும்பனும். வெளியே கிளம்பும்போதே அக்கா திட்டிச்சு.

சிறுவன்: படிப்பு வராமல் சுற்றிக்கொண்டு இருக்கிறான். தினமும் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் ஒரே அடி உதைதான். மைதானத்தில் போயி தினமும் என்னா வெளையாட்டு தானாவே விளையாடறது. துணைக்கு ஒரு பயலுகளும் இல்லை. எல்லாரும் பள்ளிக்கூடத்திற்கு போயிடறாங்க. ம் என்ன செய்யறது? யோசித்து கொண்டே வருபோது நம் வைகை புயல் கண்ணுலே படறாரு. அவனுக்கு நம் வைகை புயலை பார்த்து ஒரு சந்தேகம் வந்து விட்டது. எப்ப பாரு இப்படி சுத்திகிட்டு அளும்பு பண்ணராரே. எப்படி அவராலே மட்டும் முடியுதுன்னு கேப்போம். கோவம் வந்து அடிச்சுப்புடுவாரோ? உகும், சேச்சே பார்க்க அப்படி எயல்லாம் ஒன்னும் தெரியலை. கொஞ்சம் நல்லவராத்தான் தெரியுது. கேட்டு பார்க்கலாம். இவரை பற்றி நம்ம அக்கா அம்மாவிடம் வெட்டியாவே திரியற ஒரு ஜென்மம்ன்னு சொல்லி சிரிச்சுது இல்லே. நம்பளோ சின்ன பையன், ஏதேனும் கேள்வி கேட்டா நம்மளை மதிச்சி பதில் சொல்லுவாரா? என்ன பண்ணலாம்? எதுக்கும் கேட்டு பார்க்கலாம்.

சிறுவன்: அண்ணே , அண்ணே, அண்ணே கொஞ்சம் நில்லுங்கண்ணே. என்று கூப்பிட்டான்.

வைகை: யாரோ நம்மளை அன்பா கூப்பிடற மாதிரி கேட்குதே. ம்கும் அதெல்லாம் ஒன்னும் இருக்காது. ஒரு பய நம்பளை மதிக்கமாட்டேன்கிறான். ஏன் நம்ம தெரு நாய் கூட காறி துப்புற மாதிரி
பாக்குது. முனகிக் கொண்டே நடக்க, மறுபடியும் குரல் கேக்டவே திரும்பி பார்த்த நம் வைகை புயல், அட இங்கே பாருய்யா, ஒரு பையன் நம்மளை நிஜமாகவே கூப்புடறான். என்ன ராஜா, எனையதான் கூபிட்டயா. சரி சீக்கிரம் சொல்லு. எனக்கு அவசரமா ஒரு வேலை இருக்கு.

சிறுவன்: அண்ணே இல்லைண்ணே

வைகை: என்னடா நோள்ளண்ணே சொல்லித்தொலை.

சிறுவன்: இல்லைண்ணே வந்து, வந்து

வைகை: என்னடா மறுபடியுமா? தாங்கமுடியலைடா சொல்லி தொலையேண்டா. சொல்லு, சொல்லு.

சிறுவன்: எண்ணே அவசரமா ஒரு வேலை இருக்குன்னு பொய் சொல்லறிங்க. எனக்கு எல்லாம் தெரியும்ண்ணே, ஊரிலேயே ரொம்ப சோம்பேறித்தனமா சுத்திக்கிட்டு திரியறளையாமே. அது உண்மையாண்ணே ?

வைகை: யோசனையுடன், இவன் நம்மளை பத்தி எல்லா வெவெரமும் தெரிஞ்சுகிட்டுதான் வம்பிற்கு இழுக்கிறான். என்ன இவன் என்னவோ குருகுருன்னே பாக்குறானே. நாம என்னோவ வெட்டிமுரிக்கிற மாதிரி. இருக்கட்டும், இருக்கட்டும் எதுக்கும் கேட்டு வைப்போம். ஏன்டா காலையிலே எந்த வேலையும் இல்லாமல் திரியறவனா நிய்? இன்னைக்கு நான் தான் உனக்கு கிடைச்சேனா. சரி, என்ன சந்தேகம்? சொல்லு சொல்லு சொல்லு.

சிறுவன்: நீங்க தண்ட சோறு தின்னுகிட்டு ஊர்ல வம்பு வளத்துக்கிட்டு இருக்கீங்களாம். அதனாலே உங்க கிட்டே எதுவும் பேச கூடாதுன்னு எங்க வீட்டலே சொல்லராங்கண்ணே. நீங்க அப்படியாண்ணே?

வைகை: இவன் இப்படி நம்மளை போட்டு டார்ச்செர் பான்னறானே. இவனை ஆரம்பத்திலேயே ஆப் பண்ணிடனும். இதே வேலையா திரியறாங்க போல இருக்கே. இந்த பேரு மாறனும்னா நாம ஏதாவது சென்ஜாகனுமே. என்ன செயலாம். ம்ம்ம்ம்ம்

சிறுவன்: அண்ணே நானு கேட்டதிற்கு ஒன்னும் பதிலே சொல்லலியேண்ணே. அண்ணே கோவிச்சுகாதிங்கண்ணே. எனக்கு படிப்பு வரலை. படி படின்னு எங்க வீட்டிலே என்னை ஒரே டார்ச்சர்
பண்ணறாங்க. நானும் உங்களோட சேர்ந்துட்டா நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல பொழுது போய்டும்ண்ணே, நானும் உங்களோட சேர்ந்திக்கிறேன்ண்ணே. அண்ணே அண்ணே.

வைகை: என்னடா ஏதோ கச்சியிலே சேரமாதிரி சொல்லறே. நான் இன்னும் அதெல்லாம் ஆரம்பிக்கலைடா. போட போ பள்ளிக்கூடம் போய் படிக்கிற வழியை பாரு. ஆளுங்களையும், முஞ்சிகளையும் பாரு. வந்துட்டானுங்க, கூட்டாளி வேணுமாம் கூட்டாளி. நானே ஏதோ அக்கா வீட்டில் குப்பை கொட்டிகிட்டு இருக்கேன். சரியான கேனப்பயலா இருப்பான் போல. பாக்குற எல்லாரும் நம்ப பேரை கெடுக்கனும்ன்னே பிறவி எடுத்து அலயரமாதிரி தெரியுது. இருக்கட்டும், இருக்கட்டும். இவனுகளுக்கு சரியான பாடம் சொலலித்தரனும்.

சிறுவன்: என்னண்ணே, நான் கேட்டதுக்கு ஒன்னும் பதிலே சொல்லலே. சொல்லுங்கண்ணே. நானும் உங்ககூட சேந்துக்கவா. நாம ரெண்டுபேரும் யாருக்கும் தெரியாம வேறே எங்காவது போய் எல்லா விளையாட்டும் விளையாடலம்ண்ணே. நீங்களும் யாரு கிட்டேயும் இதே சொல்லாதிங்க, நானும் யாருகிட்டேயும் சொல்லைண்ணே.

வைகை: யோசனையுடன் நிற்க

சிறுவன்: உங்களை பத்தி எங்க வீட்டிலே பேசிகிட்டு இருந்தாங்கண்ணே. அப்புறம்தான் உங்களை பத்தி எனக்கு தெரயும்ண்ணே. என்னைய உங்க நண்பனா செத்துககுங்கண்ணே.அண்ணே சொல்லுங்கண்ணே, அண்ணே சொல்லுங்கண்ணே

வைகை : நீ பெரிய K.P. சுந்தரம்பா அம்மா. உனக்கு டக்கு டக்குன்னு பதில் சொல்லானுமா. என்ன கேள்வி கேக்குறே. உங்க வீட்டிலே என்னை பத்தி எல்லாம் ஏன்டா பேசறாங்க?

சிறுவன்: இல்லேண்ணே, எங்க அக்காதான்.

வைகை: என்ன அக்காவா உனக்கு அக்காவெல்லாம் இருக்காங்களா. இத ஏன்டா மோதவே சொல்லை. கிறுக்கு பயபிள்ளே. சரி சரி நானு உன்னே எதுனாச்சும் திட்டுனேனா.

சிறுவன்: இல்லேண்ணே, சும்மாதானே பேசிகிட்டு இருக்கோம். நீங்க எப்பிடிண்ணே என்னைய திட்டமுடியும்? நானு அதை கேட்டு சும்மாவா விட்டுவிடுவேன், என்னை யாரவது கோவம் வரமாதிரி பேசினால், கட்ச்சிடுவேண்ணே, ஆனா உங்களை ஒன்னும் செய்யமாட்டேன், சும்மா வம்புக்குத்தான் பேச ஆரம்பிச்சேன், ஆனா உங்களை எனக்கு ரொம்ப பிடிசிடுச்ச்சுண்ணே. அதெல்லாம் சரிண்ணே, நானு கேட்டதிற்கு பதில் சொல்லுங்கண்ணே.

வைகை: என்னடா மிரட்டரமாதிறியே பேசறே. என்ன கேட்டாலும் பதில் சொல்லித்தான் ஆகணும். அக்கா இருக்காளே. எப்பிடியாவது இவனை சரிகட்டி, இவன் வழியாவே இவன் அக்காளையும் சரிகட்டிடனும். இவனே கொஞ்சம் சுமாராதான் இருக்கான் இவன் அக்கா எப்படி இருப்பாளோ. எப்படி இருந்தா என்ன, நமக்கும் ஒரு பொண்ணு அமைஞ்சா சரி. இவன் கிட்டே கொஞ்சம் பேசி நெப்பு தெரிஞ்சிக்கலாம். தம்பி உன் பேரு என்னா?

சிறுவன்: என் பேரு சுப்பிரமனிண்ணே, பேச்சை மாத்தாதிங்கண்ணே. இன்னைலே இருந்து நானும் உங்க செட் சரியா.

வைகை: இருடா நான் யோசிச்சு ஒரு முடிவை சொல்லறேன். பொருத்துகோடா, சரி உங்க அக்கா பேரு என்னா?

சிறுவன்: அது எதுக்குன்னே உங்களுக்கு?

வைகை: இவன் என்ன ரொம்ப வெவரமா இருப்பான் போல இருக்கே, என்று வைகை யோசிக்கும்போதே...

சிறுவன்: என்ன ரொம்ப யோசிக்கிரரே விடக்கூடாது இவரை, அண்ணே என்னண்ணே ரொம்ப யோசிக்கிறிங்க, நான் கேட்டதிருக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லை. காயா ? இல்லே பழமா?
சொல்லிபிடுங்கண்ணே.

வைகை: என்ன இவன் அக்காளை பத்தி பேச ஒன்னும் பிடி குடுக்கமாட்டேன்கிரனே என்ன செய்யலாம் .... யோசனையுடன் நிற்க
சிறுவன்: வெட்டியா திரியதுக்கு தானே சேர்த்துக்க சொன்னேன். அதுக்கு போய் இவ்வளவு யோசனயாண்ணே.

வைகை: என்னடா கேக்கறே? ஆள பார்த்தாதான் சின்ன பையன இருக்கே, ஆனா நீ ரெம்பா விவரமான பையனாத்தாண்டா இருக்கே.

சிறுவனின் தந்தை: டேய் சுப்பிரமணி எங்கே என்னடா நின்னு பேசிகிட்டு இருக்கே. பள்ளிகூடத்துக்கு போகலை. இவனே ஒரு போக்கெத்தவன். இவன் கூட ஒனக்கு என்னடா பேச்சு.
வைகை: இங்கே பாருங்க நீங்க உங்க மகனை திட்டுங்க, அடிங்க என்னவேன்னாலும் செய்யுங்க ஆனால் என்னைய பத்தி மட்டும் எதுவும் அனாவசியமாக பேசாதிங்க. அவன்தான் வந்து என்கிட்டே
வம்புக்கு இழுக்கிறான்.

சிறுவனின் தந்தை: என்னடா இதெல்லாம்.

சிறுவன்: அடிக்கதீங்கப்பா அவர்தான் என்னைய கூப்பிட்டு அக்கா பேரை கேட்டாரு.

சிறுவனின் தந்தை: சொன்னியாடா, சொன்னியாடா....

சிறுவன்: அடிக்கதீங்கப்பா, நான் சொல்லுவேனா, சொல்லமாட்டேன்னு சொன்னதும், சரி வாடா விளையாடலாம்னு கூப்பிட்டாருப்பா.

வைகை: சரியான வம்பு பிடிச்ச பையனா இருப்பான் போல இருக்கே, அநியாயத்திற்கு அவன் அப்பாவிடம் மாட்டி விட்டுட்டானே. இவன் நம்பளை என்ன சொல்லபோரானோ இன்னைக்கு யாரு முகத்திலே முழிச்சேனோ தெரியலையே. அக்கா வேற சொல்லிச்சு. இன்னக்கு எதனாச்சும் வம்பு இழுத்துகிட்டு வந்தே அவ்வளவுதான் அடுப்பு மேலே தூக்கி ஒக்கார வச்சிடுவேன். காட்டுக்கு போய் நாலு விறகு வெட்டினாலும் வெண்ணி தண்ணி போட உதவும். இப்படி எல்லாம் சொல்லி திட்டிச்சி. இது மட்டுமா இன்னும் எவ்வளவோ. என்னா ரெண்டு பெரும் நம்மையே பாக்கிறாங்களே, நாம யோசிச்ச நேரத்திலே இன்னும் என்னென்ன போட்டு கொடுத்தானோ, ஐயோ கடவுளே என்னையே காப்பாத்துப்பா. அவன் அப்பா முழிக்கிற முழியே சரி இல்லையே.

சிறுவனின் தந்தை: டேய் இங்கே வாடா

வைகை: என்னது டேயா, மருவாதி, மருவாதி.

சிறுவனின் தந்தை: மரியாதையா உனக்கா, டேய் வாடா இங்கேன்னா, அங்கேயே நின்னுகிட்டு திரு திருன்னு முளிக்கிறயா? என்னடா சொன்னே சுப்பிரமனிகிட்டே.

வைகை: என்ன சொல்லிப்புட்டேன்னு இவ்வளவு கோவமா பேசறீங்க?

சிறுவனின் தந்தை: கிட்டே வாடான்னா, அங்கேயே நின்னுகிட்டு அலம்பலா பண்ணறே? நானே அங்கிட்டு வரேன்.

வைகை: ஆத்தி இவன் என்னைய அடிக்க வரமாதிரி வரான். வடிவேலு ஓட்றா ஓட்றா, இப்படி மனசாச்சி கூறியபடி, பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடிக்கொண்டிருக்கும்போது, எதிரே வந்த தன் மாமா மேல் மோதி நிற்க. ஆத்தி, மாமா, மாமா அது வந்து நா இல்ல அவன்தான்.

மாமா: வீட்டுக்கு வா பேசிக்கிறேன்.

ரம்யா

மொக்கயா இருந்தாலும் ஓட்டு போடுங்களேன்





Sunday, November 16, 2008

சிந்திக்க ரம்யாவின் பங்கு

சிறு பையனும் மரமும்

மிகவும் சிறிய பையன் ஒருவன் ஒரு மரத்த்தடியில் பொம்மைகள் வைத்து விளையாடி கொண்டிருந்தான் .

ஒரு நாள் அந்த பையனுக்கு தான் விளையாடும் விளையாட்டு மிகவும் அலுப்பாக இருந்தது. அதனால் எனக்கு இந்த விளையாட்டு மிகவும் bore அடிக்குது. என்ன செய்யலாம் என்று அந்த மரத்திடம் கேட்டான்.

கேள்வயும் பதிலும் உங்களின் மேலான பார்வைக்கு

மரம் : சரி, என் மீது ஏறி எனது கிளைகளில் விளையாடு என்றது.
பையன்: மரத்தின் இந்த அறிவுரையினால் மிகவும் சந்தோஷம் அடைந்தான். மரத்தின் கிளைகளில் அமர்ந்து நிறைய விளையாட்டுக்கள் விளையாட அவனால் விளையாட முடிந்தது. வித விதமான விளையாட்டுக்களை விளையாடினான். அவன் மனதிற்கு மிகவும் உற்சாகமாகவும் இருந்தது.

நாட்கள் வேகமாக ஓடின. பையன் பள்ளிக்கு செல்லும் பருவம். அதனால் அதிக நேரம் படிப்பதில் செலவழித்தான். மரத்திடம் வந்து விளையாடுவது குறைந்தது. அப்படியும் ஒரு நாள் மரத்திடம் வந்தான். மரம் தனது பால்ய சிநேகிதனை பார்த்து ஒரே மகிழ்ச்சி அடைந்தது. உடனே வா நண்பா, என் மீது ஏறி எனது கிளைகளில் விளையாடு என்றது. அதற்கு அந்த பையன் அப்படி விளையாட மறுத்து விட்டான்.

பையன் : எனது உடைகள் அழுக்காகி விடும். அம்மா அடிப்பாங்க அதனால் என்னால் உன் மீது ஏறி விளையாட முடியாது என்றான்.

மரம் : சரி ஒரு நல்ல கயறு கொண்டுவா. அதை என் மீது கட்டி எனது கிளைகளை ஊஞ்சலாக்கி விளையடலமே என்றது.

இந்த மரத்தின் ஐடியா பையனுக்கு மிகவும் பிடித்தது. மரம் கூறியபடியே ஊஞ்சல் போல கயிற்றை கட்டி விளையாடி பார்த்தான். இந்த விளையாட்டு மிகவும் பிடித்தது.

தினமும் கொஞ்ச நேரம் வந்து மரத்தின் ஊஞ்சலில் ஏறி விளையாடி விட்டு போவதை வழக்கமாகி கொண்டான்.

அந்த சிறுவன் விளையாடும்போது வெட்பம் தாங்காமல் தவிக்கும் போது, மரம் மனது பொறுக்காமல் தன் நிழலை உபயோகப்படுத்தி கொள் என்றது. சிறுவனும் நிழலில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் விளையாடி களைத்து பின் செல்வான்.

சிறுவன் வளர்ந்து பெரியவனாகி கல்லூரி செல்ல ஆரம்பித்தான். அவனுக்கு சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓடி ஓடி நாட்கள் நகர்ந்தன. அந்த ஓட்டத்தின் நடுவில் ஒரு நாள் பால்ய நண்பனான மரத்திடம் வந்தான்.

மரமும் அவனை அடையாளம் கண்டு கொண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றது. வா நண்பா. எப்படி இருக்கிறாய் என்றது? அதற்கு அவன் நான் மிகவும் பசியுடன் இருக்கிறேன், எனது வயிறு பசியனால் மிகவும் துடிக்கிறது என்று மிகவும் வருத்தத்துடன் கூறினான்.

அதற்கு மரம் கூறியது எனது மரக்கிளையை இழுத்து வளைத்து பிடித்து அதில் இருக்கும் பழங்களை சாப்பிட்டு உன் வயிற்றை நிரப்பி கொள் என்றது.

அதற்கு அந்த வாலிபன் எந்த தயக்கமும் இல்லாமல் குதித்து கிளைகளை வளைத்து பிடித்து பழங்களை தின்றான். ஒரு வார காலத்தில் எல்லா கிளைகளில் உள்ள பழங்களும் காலியாகின.

எல்லா பழங்களும் காலியாகி மரம் பொலிவிழந்து விட்டது. அதன் பின் அந்த வாலிபன் அந்த மரத்தை திரும்பி கூட பார்க்கவில்லை.

அந்த வாலிபன் நடுத்தர வயதை அடைந்த போது ஒரு நாள் மரத்திடம் வந்தான். மரமும் இன்முகம் காட்டி வரவேற்றது. வா நண்பா சுகமாய் இருக்கிறாயா? என்றது.

வாலிபன் : நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நிறைய சம்பாதித்து விட்டேன். கை நிறைய பணம் இருக்கிறது. நான் வாழ்க்கையில் எல்லாவித சந்தோஷங்களையும் அடைந்து விட்டேன். நான் என் வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்று மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கிறேன். நல்ல மனைவி கிடைத்து இருக்கிறாள், நான் பெரிய வீடு வாங்கி இருக்கிறேன்.

ஆனால் நான் இப்போது உலகம் பூரா சுற்றி பார்க்க வேண்டும் இதுதான் இப்போதைய என் ஆசை என்றான்.

மரத்திற்கு மிகவும் வயதாகி விட்டது. ஆனாலும் பழைய நட்பு அல்லவா விட்டு கொடுக்க மனம் இல்லாமலும், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், சரி நண்பா, நீ ஒரு காரியம் செய். உடனே ஒரு அரிவாள் எடுத்து வந்து என்னிடம் என்ன தேவையோ அதை வெட்டி நல்ல போட் செய்து அதில் பிரயாணம் செய்து இந்த உலகத்தில் இருக்கும் அதிசயங்களை
உன் குடும்பத்துடன் கண்டு களிப்பாய் என்றது.

ஆனால் மறுபடியும் எந்த வித தயக்கமும் இல்லாமல் அந்த மனிதன் மரத்தை வெட்ட ஆரம்பித்தான், அந்த மரத்துடன் விளையாடி இருக்கிறன், அதன் நிழலில் களைப்பாறி இருக்கிறான், மரத்தின் பழங்களை சாப்பிட்டு பசியாறி இருக்கிறான். அந்த மரத்தை அறுத்து தனக்கு வேண்டிய படகு செய்தான். அந்த வேலை முடிந்ததும் செய்யப்பட்ட படகின் மீது சவாரி செய்து சென்று விட்டான். உறவினர்கள், படகு அளித்த மரம் அனைத்தையும் மறந்தான். மனசாட்சி என்ற ஒன்று அங்கு பஞ்சாகி போனது.

ஒரு நாள் வயதான ஒரு மனிதன் அந்த மரத்தை கடந்து சென்று கொண்டிருந்தான். கடக்கும்போது அந்த மரம் ஏதும் கூறவில்லை. அதனால் அந்த மரத்தை நிமிர்ந்து பார்த்தான்.

அந்த மரம் வெட்டியபின் எப்படி இருந்ததோ அப்படியே பொலிவிழந்து இருந்தது. அதன் கிளைகள் வளரவில்லை. சும்மா நானும் ஒரு மரம் என்று நின்று கொண்டிருந்தது. ஆனால் இந்த முறை மரம் மௌனம் சாதித்தது.

ஆனால் இப்போது அந்த வயதான மனிதன் அழுதான் மிகவும் சத்தமாக அழுதான். கண்ணிர் தாரை தாரையாக கண்களில் இருந்து வடிந்து கொண்டிருந்தது.

இப்போதுதான் அந்த மரம் மிகவும் நலிந்து போய் நடுங்கிய குரலில் பேச ஆரம்பித்தது உனக்கு கொடுக்க என்னிடம் என்ன இருக்கிறது. நீ எதற்கு அழுகிறாய் நண்பா ? என்னிடம் படகு செய்ய தண்டுகள் இல்லை, பசி தீர்க்க பழங்கள் இல்லை, நீ படுத்து களைப்பாற தேவையான நிழல் கொடுக்க கிளைகள் இல்லை, தற்போது என்னிடம் இருப்பது எல்லாம் எனது வேர் ஒன்று தான் என்றது.

அந்த மனிதன் யோசித்தான், இதுவும் ஒரு நல்ல ஐடியா தான். மரத்தின் வேர் அருமையான இடம் படுத்து உறங்குவதிற்கு. மரத்தின் வேர் அருமையான தூக்கத்தை கொடுக்கும் என்று முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். என்ற எண்ணம் தான் அவன் மனதில் ஓடியது.

மரம் நம் பெற்றோர்களையும் அந்த சிறுவன் நம்மையும் உணர்த்துகிறான்.

பி. கு.

இந்த கதையின் உட் கரு என்னவென்றால்? நான் யார் மனதையும் புண் படுத்த இதை எழுத வில்லை.

ஆனால் பலர் தன் பெற்றோர்களை கருவேப்பிலை போல் உபயோக படுத்தி விட்டு, வளர்ந்தவுடன் தூக்கி போட்டு விடுகிறார்கள்.

கைகள் விட்டு எண்ணி விடலாம் பெற்றோர்களை கடைசி வரை தன் கண்கள் போல பாது காத்து பார்த்து கொள்பவர்களை.

ஆனால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அந்த பெற்றோர்கள் நம்மை விட்டு பிரிவதை விரும்புவது இல்லை.

ஐயிரண்டு மாதங்கள் சுமந்து பெற்ற தாயின் - மறுபிறவி எடுத்த தாயின் - தியாகம் உணரப்படுவதில்லை.

குடும்ப பாரத்தை சுமக்க ஒரு தந்தை பட்ட கஷ்டங்கள் எல்லாம் காலாவதியாகி போய்விடுகின்றன.

மனிதன் வளர்ந்த பிறகு இவ்விருவரும் சுமையாக தெரிகிறார்கள்.

இந்த பதிவு நான் எழுதி இருப்பது யார் பெற்றோர்களை தனிமை படுத்துகிறார்களோ அவர்களுக்குத்தான். அவர்கள் மனம் திருந்தினால் முதியோர் இல்லங்கள் குறையும்.

பெற்றோர்களை நல்ல முறையில் கவனித்து கொள்பவர்களுக்கு சிரம் தாழ்த்தி என் நமஸ்காரங்களை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் .


ரம்யா

Sunday, November 9, 2008

சினிமா அனுபவங்கள்


சினிமா அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள என்னைய அழைத்ததிற்கு மிக்க நன்றி. இந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏற்கனவே என்னை அழைத்த அமிர்தவர்ஷிணி அம்மாவிற்கும், இப்போ அழைத்த குமார் அவர்களுக்கும் மிக்க நன்றி. என்னை நம்பி அழைத்து விட்டீர்கள் இதோ என் பதில்கள்


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரமபித்திர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்திர்கள்?

எங்கள் வீட்டில் சினிமாவிற்கு அழைத்து செல்வது என்பது மிகவும் அபூர்வம். யாரும் அழைத்து செல்லமாட்டார்கள். ஆனால் அடித்தது ஒரு பம்பர் பரிசு, எனது 11 வது வயதில் முதல் முதல் சினிமாவிற்கு அழைத்து செல்வதாக எனது அத்தை கூறினார்கள். அவ்வளவுதான், மனதிற்குள் மத்தாப்பு தான். நான் சினிமாவிற்கு போவதை சொல்லாத ஆளே இல்லை என்று தான் கூறவேண்டும். தாரே, தப்பட்டை எல்லாம் அடித்து விட்டு கிளம்பி விட்டேன். அங்கே போனால் தியட்டரில் கந்தன் கருணை. அடுத்த நாள் நண்பிகள் ஒரே கலாட்ட பண்ணி விட்டார்கள். அவர்கள் லிஸ்டில் இதெல்லாம் ஒரு படமே அல்ல. ஆனால் எனக்கு சினிமா பார்த்தது சந்தோஷமா இருந்தாலும், எல்லாரும் கிண்டல் செய்தது மனதிற்குள் வேதனையாக இருந்தது. இன்றும் அது பசுமையாக இருக்கிறது.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா ?

பொய் சொல்ல போறோம். எந்த வித ஆபாசம் இல்லாமல் ரசிக்க, சிந்திக்க வைத்த படம். நிலம் வாங்குவதில் எவ்வளவு சிக்கல் வரும் என்பதிற்கு நல்ல அறிவுரையாக மனதிற்கு பட்டது.

3. கடைசியாக அரங்கிலின்றி பார்த்த தமிழ் படம் எது? எங்கே, என்ன உணர்ந்திர்கள்?

வீட்டில் DVD இல் "காசேதான் கடவுளடா" இது போல் காமெடி கலந்த எந்த படமானாலும் நாங்க விடமாட்டோம். அருமையான நகைச்சுவை கலந்த படம் கண்களுக்கும், செவிக்கும் விருந்தான படம். எவ்வளவு தடவை பார்த்தாலும் திகட்டாது.


4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா

சொல்லவா அதை சொல்லவா, ஏகன். அந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாதுங்க. 6 பேர் சேர்ந்து அந்த படம் போனோம். வேலை அதிகமா இருந்ததாலே ஒரு மன மாற்றத்திற்காக போனோம். ஆஹா அஹகா மனமா மாறியது? சித்தம் கலங்கியது. அடுத்த நாள் நானே சென்று மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்ந்து விடுவேனோ என்று ஒரே பயமாக இருந்தது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மொத்தம் ஒரு ஐம்பது பேர் தான் படம் பார்த்து இருப்பார்கள். இரண்டாவது scene முடிந்தவுடன் எழுந்து வந்துவிடலாம் என்றால் உடன் வந்தவர்கள் என்னை எரித்து விடுவது போல் பார்த்ததால். படம் முழுவதும் பார்த்த அனுபவம் மறக்க முடியாது. தெய்வமே மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? ஏன் இந்த கொடுமை? நல்ல தரமான கதைகள் இல்லையா? ஒருவருக்குமே மதிப்பு இல்லை, உயரிருக்கு மதிப்பு இல்லை, முடிவா தெளிவா சொன்னால் எதற்குமே மதிப்பு இல்லாமல் நாம் எங்கோ பொய் கொண்டுள்ளோம்.
மற்றபடி என்னை பாதித்த சினிமா சிலநேரங்களில் சில மனிதர்கள், நாயகன், குணா.

6. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா - அரசியல் சம்பவம்

நம்ம சிரிப்பு நடிகர் வடிவேலுவின் அரசியல் பிரவேசம், தாக்குதல்கள். தடால் அறிக்கைகள். அவ்வளவேதான்.

7. தமிழ் சினிமா பற்றி வாசிப்பது உண்டா?

காலேஜ் படிக்கும்போது எல்லாம் சினிமா பற்றி படிக்க பிடிக்கும். கிசுகிசு எனக்கு தான் எப்போதும் முதல் இடம் அவ்வளவு GK உண்டு. வேலையில் சேர்ந்த பிறகு அதெல்லாம் இல்லை. சினிமா சம்பந்த பட்ட பத்திரிக்கைகள் கூட படிப்பது இல்லை.

8. தமிழ் சினிமா இசை

எனக்கு பாட்டு ரொம்ப இஷ்டம் எனது 9 வயதில் வீணை அரங்கேற்றம் எல்லாம் முடிந்தது, எனக்கு கர்நாடக சங்கீதம் என்றால் ரொம்ப பிடிக்கும். MLV, jesudoss இவர்கள் பாட்டு என்றால் உயிர்.

9. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பது உண்டா?அதிகம் தாக்கிய படங்கள்?

நான் தெலுங்கு படம் பார்ப்பேன். அதில் என்னை மிகவும் பாதித்த படம் மரோ சரித்ரா, நியாயம் காவாலி இந்த இரண்டும். ஆங்கில படம், ஹிந்தி படம் பார்ப்பேன். பாதிக்கிற அளவிற்கு கவனம் செலுத்தமாட்டேன். போவேன் வருவேன் அவ்வளவுதான்.


10. தமிழ் சினிமாவுடன் நேரடி தொடர்பு உண்டா ? என்ன செய்திர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்விர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?

ஆமாங்க நம் பத்மஸ்ரீ கமலகாசனுடன் அடுத்த பட பூஜைக்கு பேச்சு வார்த்தை நடந்து கொண்டு உள்ளது. அந்த படத்திற்கு கதை, திரைகதை, வசனம், மற்றும் என்னவல்லாம் தேவையோ அவை அனைத்தையும் கமல் பெரியமனது செய்து எனக்கு வாரி வழங்கிவிட்டார். நானும் சரியான முறையில் கேட்ச் பிடித்து பூஜைக்கு ரெடியாகி கொண்டிருக்கிறேன். இரண்டாவது ஜாக்க்பட் என்னவென்றால் நம்ம அஜித்திற்கு, வில்லன் படம் தொடர்ந்து சரியான charector அமையவில்லையாம். அதனால் கோலிவுட்டில் இருந்து இடைவிடாது தொலை பேசி தொல்லை பேசியாக மாறி உள்ளது. நான் ஓர் ஆள் என்ன செய்வது? அதனால் நம்ம குடுகுடுப்பையாரையும், ஜீவன் சாரையும், அமித்து அம்மாவையும் துணையாக அழைக்கலாமா என்று யோசிக்கிறேன். இது எப்படி இருக்கு?

11. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறிர்கள்?

ஏதோ அப்ப அப்ப ஒரு சில நல்ல படம் நமக்கு கிடைக்குதுங்கோ. தமிழ் நாட்டின் சாபக்கேடு என்னவென்றால் தரமான படம் அடிக்கடி நம்மை வந்து அடைவதில்லைங்கோ. அதனால் நம்ம வலை பூ நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம். என்ன என் யோசனை சரிதானே? குடுகுடுப்பையார் கதை வசனம், ஜீவன் திரைகதை வசனம், அம்மிது அம்மா music, ஒளிப்பதிவு நம்ம உருப்படாத அணிமா அவர்கள் மற்ற வேலைகள் யாருக்கு விருப்பமோ அவர்கள் பிரித்து எடுத்துகொள்வோம். சரியா? இவைகளை நான் கூறிய திட்டப்படி நடத்தினால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் நல்ல சிறப்பா மேலோங்கி ஒரு சொர்க்க பூமியாக மாற வாய்ப்பு கண்டிப்பாக உண்டு . அப்போதான் ஜவுளி வியாபாரம் பிச்சிகிட்டு போகும்.நமக்கும் சம்திங் தருவதாக துணிக்கடை முதலாளிங்க ERODE ( இரோட்டில்) இருந்து தொலைபேசியில் விடாது அழைப்பு விடுக்கிறார்கள், தைரியமும் அளிக்கிறார்கள். என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கோ.

பின் குறிப்பு: முக்கியமா நடிகர் மற்றும் நடிகைகளை தேர்ந்து எடுப்பதில் ஒரு கூட்டு முயற்சி இருந்தால் நாம் எடுக்கும் படம் தரமானதாக் இருக்கும் என்பது ஒரு சிறு பின் குறிப்பு.


12. அடுத்த ஓராண்டு தமிழ் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய செய்திகள் எதுவுமே பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட உஊடகங்களில் கிடையாது என்று வைத்து கொள்வோம் ? உங்களுக்கு எப்படி இருக்கும். தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறிர்கள்?


சினிமா வைத்து பெரிதாக திட்டம் போட்டவர்கள் எல்லாம் காலி. அவர்களின் சினிமா சார்ந்த அரசியல் வேலைகள் பாதிக்கப்படும். பத்திரிக்கைகள் வயலும் வாழ்வை பற்றி சிந்திக்கலாம். அதனால் அரசாங்கத்திடம் சென்று விளை நிலம், வீட்டு மனையாக ஆக மாறுவதை தடுக்க மக்கள் முயல வாய்ப்பு கண்டிப்பாக உண்டு என்று நினைக்கிறேன். விளைச்சல் பெருகினால் மத்தியதர மற்றும் எல்லா வித மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களின் விலை கட்டுப்படுத்த முடியும், நாட்டில் செழிப்பு ஓங்கும். மறுபடியும் பொற்காலம் மலர வாய்ப்பு கண்டிப்பாக உண்டு. ஏன் என்றால் மக்கள் தம்மை பற்றி சிந்திக்க அதிக நேரம் கிடைக்கும். இது வலிய வரும் ஒரு நாள் முதல்வர் போல் கிடைக்கும் வாய்ப்பு. என்ன தான் TV இருந்தாலும் நான் மேற் கூறியவைகள் கண்டிப்பாக நிகழ வாய்ப்பு உள்ளது. அதனால் இதை நடை முறை படுத்தினால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்கள். வசந்த காலம் மக்களை வந்து அடைய நிறைய வைப்புக்கள் உண்டு.

புலம்பல்கள்: ஏதோ எழுதி உள்ளேன். தவறாக இருந்தால் பெரிய மனது பண்ணி ஏற்றுகொள்ளுங்கள். (ஹி, ஹி, ஹி, ஹி)

நான் அழைப்பது யாரை? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ராப்

கயல்விழி