என் உடன் பிறந்த சகோதரிக்கு சில வருடங்கள் முன் விரல்களில் மூட்டுக்கு மூட்டு வீக்கமும் வலியும் வந்தது. எனது மாமாவிற்கு முதலில் என்ன வென்று புரியவில்லை.
அருகில் உள்ள மருத்தவரிடம் அழைத்து சென்றிருக்கிறார்கள்.
அவரும் சில மாத்திரைகள் (வலி நிவாரிணி - ப்ரூபென்) கொடுத்து அனுப்பி உள்ளனர். அப்போது வலி ஐம்பது சதவிகிதம் குறைந்ததினால், அடுத்த முறை வலி வந்த போது மறுபடியும் மருத்தவரிடம் சென்ற போதும் அதே மாத்திரியை தொடரச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இந்த விஷயம் எனக்கு தெரியவந்து, வலி நிவாரணி அதிகம் தொடர வேண்டாம், எனக்கு இது சரியாகப் படவில்லை , சரியான மருத்துவரை அணுகச் சொன்னேன். அதனால் உறவினர் ஒருவர் மருத்துவர் அவரிடம் சென்று காண்பித்த போது, நீங்கள் சரியான மருத்துவம் பார்க்கவில்லை என்று அவர் சில மருத்துவக் குறிப்புகளை கொடுத்துள்ளார், வேதனை தாங்க முடியாத என் சகோதரி அதையும் சாப்பிட்டிருக்கிறாள். மறுபடி நான் விசாரித்த போது அதே நிலை தொடர்ந்தது.
எனக்கு சரியான கோபம் என் மாமா மீது வந்தது, அதை காட்டி கொள்ளாமல் உடனே அவர்கள் இடத்திற்கு விரைந்து எனது சகோதரியை சென்னைக்கு அழைத்து வந்தேன். அப்போது என் வாசம் சென்னையில். எனது மருத்த்துவ நண்பர்களிடம் விசாரித்து, முதலில் Ortho சம்பத்த பட்ட மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அவர் நல்ல முறையில் மருத்துவத்தை தினம் தினம் ஒரு மாற்றத்துடன் செய்து வந்தார் (வாக்ஸ், பிசியோ) போன்றவைகளை ஒரு நாளைக்கு இருமுறை செய்தார்கள். இதற்கிடையில் என் சகோதரி இல்லாமல் அவர்கள் குடும்பம் (2 குழந்தைகள், மாமனார், மாமியார் மற்றும் கணவர்) மிகவும் பரிதாபமான நிலையில் இருந்ததால் உடனே அழைத்துச் செல்கிறோம் என்றார்கள்.
இரண்டு மாதங்கள் நான் வைத்து மருத்துவம் பார்த்தேன். சகொதரியின் மாமியாருக்கு மருமகள் தான் எல்லாம் செய்ய வேண்டும். அப்படி ஒரு குணம். ஏதோ நான் ஒரு தவறான செயல் செய்தது போல் என் மீது கோபம். அதன் அடிப்படையில், என்னிடம் மாமா வந்து நான் அழைத்துச் செல்கிறேன். இங்கு மருத்துவரிடம் நாங்கள் என்ன மருத்துவம் தொடர வேண்டும் என்று எழுதி வாங்கிக் கொடு என்றார்கள். எனக்கு உள்ளுக்குள் கோபம், மருத்துவம் முடியும் வரை நானே என் சகோதரியை வைத்திருக்கேன் என்று பல விதத்திலும் கூறிப் பார்த்தேன். கேட்பதாக இல்லை. இதுவே மூத்தவர்கள் யாரேனும் கூறி இருந்தால் கேட்டு இருப்பார்கள் போல. நான் மிகவும் இளையவள். நான் கூறியது எடுபடவில்லை.
சகொதரியின் குடும்பம் தங்கி இருப்பது திருச்சியில். மருத்துவத்தை அங்கு போயி தொடர்ந்தார்கள். இங்கே என் சகோதரிக்கு Steroid (வைசொலின்) ஆரம்பித்திருக்கிறார்கள். இதை சரியான முறையில் (Step By Step) சாப்பிட்டு நிறுத்தவேண்டும் என்று சென்னை மருத்துவர் கூறி இருந்தார். நான் அதை நினைவில் வைத்திருக்கச் சொல்லி தவறாமல் கூறிக் கொண்டிருந்தேன்.
இதற்கிடையே மறுபடியும் அதே மூட்டுக்கு மூட்டு வீக்கமும் வலியும் தாங்க முடியாமல் படுத்த படுக்கையாகிப் போனாள். போகாத இடங்கள் இல்லை, பார்க்காத வைத்தியம் இல்லை.
எங்க மாமா ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்டார். மாமனார், மாமியாருக்கோ என் அக்காதான் தினம் சமயல் செய்து ஆகவேண்டும். அவளோட வலிக்கு அங்கு புரிதல் இல்லாமல் போனது. இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் மனத்தாங்கல் ஆகிப் போயி விட்டது. எவ்வளவு முடியவில்லை என்றாலும் மூன்று வேளையும், நடுவில் எது செய்ய வேண்டுமானாலும் அக்காதான் செய்ய வேண்டும். இதில் நான் கடும் கோபத்தில் இருந்தேன்.
முகம் தெரியாதவர்கள் முடியவில்லை என்றாலே துடித்துப் போய் விடுவோம் இல்லையா??
இதை பார்த்துக் கொண்டு எவ்வாறு இருக்க முடியும்?? முடிவாகத் தெரிவித்து விட்டேன், என் அக்காவை சரியாக கவனித்துக் கொள்ள முடிந்தால் வைத்திருங்கள், இல்லை என்றால் என் அக்கா, எனது அக்காவாக மட்டும் என்னிடம் வரட்டும், நான் காப்பாற்றிக் கொள்கிறேன் என்று தெளிவாக கூறிவிட்டேன்.
இதில் என் அக்காவிற்கும் மிகவும் தெம்பு வந்து விட்டது. அதுவரை அமைதியாக இருந்த என் சகோதரி, தனது வேதனைகளை எப்பிடியாவது தீர்க்க ஒரு வழி கேட்டு பெங்களூரில் ஒரு பிரபல மருத்துவ மணையில் முழுவதுமாக பரிசோதித்து விட்டு, அவர்கள் பங்கிற்கு பல மருந்துகள் கொடுத்து உள்ளார்கள், நாட்கள் நகர, நகர அக்காவால் நடக்க முடியாமல் போனது, உட்கார முடியாமல் போனது.
என்ன வென்று மறுபடியும் xray, scan மருத்துவத்தில் என்ன என்ன உள்ளதோ அவ்வளவும் செய்து விட்டு கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தார்கள். Steroid மாத்திரை அதிகம் சாப்பிட்டதால் எலும்புகள் அனைத்தும் தேய்ந்து விட்டது.
உங்களுக்கு எதுவுமே செய்ய முடியாது. வேண்டுமானால் இடுப்பில் இரண்டு பக்கமும் மாற்று அறுவைச் சிகிச்சை (Hip Replacement) செய்ய வேண்டும் என்று கூறி விட்டார்கள். அதுவும் பதினைந்து வருடம் தான் நன்றாக நடக்க முடியுமாம். அதற்கும் ஒத்துக்கொண்டு, கோவையில் ஒரு பிரபல மருத்துவ மணையில் முதலில் இடுப்பில் ஒரு புறத்தில் அறுவை சிகிச்சை செய்தார்கள். ஒரு புறம் வலி குறைந்தது. அறுவை சிகிச்சை செய்யாத வலது பக்கம், வலி என்றால் அப்படி வலி துடித்துப் போயி விடுவாள்.
மறுபடியும் முதல் அறுவை சிகிச்சை முடிந்து நான்கு மாத இடைவெளியில், இரண்டாவது அறுவைச் சிகிச்சையும் நடந்தது. ஆனால் இந்த முறை போன முறை அவர்கள் கூறியது போல் அக்காவை பாது காத்தும், துடையில் இருந்து விரல்கள் வரை தினம் தினம் வலி அதிகாமாகி போக, நாங்கள் எல்லாம் மருத்துவரிடம் கேட்டால் ஒரு மாதத்தில் சரியாகி விடும் என்று சொல்லுவார்கள். ஒரு மாதம் ஆன பிற்கும் வலி அதிகமானதே தவிர குறையவில்லை. என் சகோதரியோ விரக்தியின் எல்லைக்கே போய் விட்டாள். மாமா கேட்க்கவே வேண்டாம். இதற்கிடையே அதே மருத்துவரிடம் நான் சென்று நேரடியாக பேசினால் ஒன்றும் பிடி கொடுக்க வில்லை. எனக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த மருத்துவர் எதிரில் என் சகோதரி துடிப்பது எங்கள் நெஞ்சே வெடித்து விடும் போல் ஆகிவிட்டது. ஒன்றும் இல்லை, உள்ளே ஏதாவது ரத்தக் கட்டு இருக்கும். இந்த மாத்திரைகளை சாப்பிடுங்கள் என்று கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.
ஆனால் அக்காவிற்கு நாளுக்கு நாள் அதிகமானதே தவிர, வலி அடங்குவது போல் தெரியவில்லை. மறுபடியும் படுத்த படுக்கையாகி விட்டாள். எனக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு, ரம்யா என்னை விஷ ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என்று ஒரே அழுகை. என்னால் வலி கொடுக்கும் வேதனை தாங்க முடிய வில்லை அம்மா என்று கதறி விட்டாள். மறுபடியும் படை எடுப்பு, இந்த முறைதான் பெரியமனது செய்து அறுவைச் சிகிச்சை நடந்த இடத்தில் ஸ்கேன் செய்து பார்த்தார்கள்.
அதில் எல்லாருக்குமே நன்றாக தெரிந்தது என்னவென்றால், அறுவை சிகிச்சை முடிந்து எதோ சிமெண்ட் வச்சி பூசுவார்களாம் (இதை படித்து எள்ளி நகையாடுவார்கள் சிலர், (ஆமாம் நான் மருத்துவம் படிக்கவில்லை. நான் இப்படித்தான் என் உணர்வுகளை உணர்த்த முடியும்).
சிமெண்ட் பூசும்போது மூன்று நரம்புகளையும் சேர்த்து வைத்து பூசி விட்டார்கள். இதுவும் சரியாக சொல்லப் படவில்லை. இந்த முறை அவர்கள் போகும் போது என்னால் உடன் போக முடியாத சூழ் நிலையில், மாமா மட்டு தனியாக அக்காவை அழைத்துக் கொண்டு சென்றார்.
உடனே மருத்துவ மணையில் தங்கி இரண்டு நாட்கள் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். மாமா போன முறை வந்த போதே இதை கூறி இருக்கலாமே என்று கேட்டதிற்கு சரியான பதில் இல்லை. அறுவை சிகிச்சை செய்தவர் கண்களில் படவே இல்லையாம்.
இவ்வளவிற்கும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு வருவதை உறுதி செய்தது விட்டுத்தான் சென்றார்கள்.
அறுவை சிகிச்சை செய்தவரை பார்க்க வேண்டும் கேட்டு என்று இருக்கிறார் என் மாமா, அதற்கும் சரியான பதில் இல்லையாம்.
இரண்டு நாட்கள் மருத்துவம் முடித்துக் கொண்டு, நேற்று முன்தினம் தான் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். முதல் அறுவை சிகிச்சை முடிந்த வீட்டிற்கு வரும் சமயம் ஒரு மருத்துவ காப்பீடு செய்து கொள்ளுமாறு கூறி இருக்கிறார்கள். அதன் முழு அர்த்தம் என்ன வென்றால், அறுவை சிகிச்சையால் ஏதேனும் பிரச்சனை வந்தால், அதுவும் ஒரு வருடத்திற்குள், பணம் எதுவும் செலவு செய்யாமல் மருத்துவம் பார்த்து அனுப்பப்படும் என்று கூறி அந்த insurence செய்திருக்கிறார்கள். இப்போது ஆகும் மருத்துவ செலவிற்கு அதை என் மாமா காண்பித்தால், இந்த மருத்துவத்திற்கு செல்லாது. நாங்கள் உள்ளே வைத்துள்ள எலும்பில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மட்டுமே இந்த காப்பீட்டு செல்லும் என்று கூறி இருக்கிறார்கள். என் மாமா எதுவும் பேசாமல் இரெண்டு நாட்கள் தங்கி மீண்டும் மருத்துவம் பார்த்து, கேட்ட பணத்தை கட்டி விட்டு வந்து இருக்கிறார். ஆனால் இன்று வரை என் சகோதரிக்கு குணம் ஆகவில்லை. அவளிடம் எனக்கு எப்படி இருக்கிறாய் என்று கேட்கவே பயமாக இருக்கிறது.
ஆனால் எனக்கு இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நம்மையே இப்படி அலைக்களித்தால், பாமரர்களை எவ்வளவு பாடு படுத்துவார்கள். அவர்களுக்கு யார் நியாயம் கேட்பார்கள். பணம் இருந்தது கட்டி விட்டார்கள். பணம் இல்லாமல் நமக்குத்தான் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வருடம் வரை அது சம்பந்தமாக வரு பிரச்சனைகளை இலவசமாக பார்த்துக் கொள்ளுவார்கள் என்று எதிர் பார்த்து சென்றிருந்தால், அவர்கள் நிலை என்ன?? கடன் வாங்கி வைத்தியம் செய்பவர்களும், வட்டிக்கு வாங்கி வைத்தியம் செய்து கொள்பவர்கள் கதி என்னா??? இதுதான் என் கேள்வி???
அக்காவின் குடும்பம்தானே என்று என்னால் இதை விட முடியாது. இதை தட்டி கேட்க வேண்டும் என்று என் மனம் துடி துடிக்கிறது.
சட்ட ஆலோசக மையம் மற்றும் மனித உரிமை கழகத்திடமும் இதை கொண்டு செல்லப் போகிறேன். நீதி கிடைக்குமா பார்க்கலாம்.
மூவர் தவறு செய்து இருக்கிறார்கள்
===============================
1.முதல் தவறு Steroid Withdrawal --> சரியான முறையில் செய்யவில்லை .
2. தவறான மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ள வைத்தது.
3. அறுவைச் சிகிச்சையின் போது போதிய கவனமின்மை.
இப்போதும் வலியுடன் தான் இருக்கிறாள் என் சகோதரி. மிகச்சிறிய வயதில் இந்த நோய் அவளுக்கு வந்திருக்க வேண்டாம்.
ஏன் இந்த சோதனை, இதுதான் நான் கடவுளிடம் கேட்பது. அக்காவின் குழந்தைகள் அம்மாவின் வேதனையில் தினம் தினம் அழுவதை என்ன சொல்ல.
பின் குறிப்பு:
===========
இந்த பதிவின் நோக்கம், எந்த நோய் வந்தாலும், அதற்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்தை மற்றும் மருத்துவர்கள் கொடுக்கும் சிகிச்சையை வேறு ஒரு மருத்துவரிடமும் மறு பரிசீலனை செய்து கொள்வதில் தவறே இல்லை. இரண்டு கருத்துக்களும் ஒத்துப் போகாவிட்டால், தேவையான் விளக்கம் தரவேண்டும் என்று நிலை உருவாக வேண்டும். அப்போதுதான் நம்மை போல் உள்ள மருத்துவம் சாரா அப்பாவி மக்கள் காப்பாற்றப் படுவார்கள்.
Steroid it’s very dangerous. உடலில் உள்ள எலும்புகள் அனைத்தையும் உருக்கும் சக்தி இதற்கு இருக்கிறது. இது சரியோ, தவறோ என்ற சர்ச்சைக்கு நான் வரவில்லை, என் சகோதரி இந்த மருந்து உட்கொண்டு பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்து, மனம் நொந்து இதை வெளியிடுகிறேன். மருத்துவம் செய்து கொள்பவர்களும் மிகவும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். அப்போதுதான் இது போல் பிரச்சனை வராமல் தடுத்துக் கொள்ள முடியும், நம்மையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
89 comments:
பயங்கர சீரியஸ் மேட்டர் போல ...
\\முகம் தெரியாதவர்கள் முடியவில்லை என்றாலே துடித்துப் போய் விடுவோம் இல்லையா?? \\
உண்மைதான்.
\\Steroid மாத்திரை அதிகம் சாப்பிட்டதால் எலும்புகள் அனைத்தும் தேய்ந்து விட்டது. \\
படு டேன்ஜர் மேட்டரு
\\(இதை படித்து எள்ளி நகையாடுவார்கள் சிலர், (ஆமாம் நான் மருத்துவம் படிக்கவில்லை. நான் இப்படித்தான் என் உணர்வுகளை உணர்த்த முடியும்).\\
அட விடுங்க இது ஒரு மேட்டரா ...
\\அறுவை சிகிச்சை செய்தவர் கண்களில் படவே இல்லையாம்.
இவ்வளவிற்கும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு வருவதை உறுதி செய்தது விட்டுத்தான் சென்றார்கள்.
அறுவை சிகிச்சை செய்தவரை பார்க்க வேண்டும் கேட்டு என்று இருக்கிறார் என் மாமா, அதற்கும் சரியான பதில் இல்லையாம். \\
அட பாவிங்களா ...
\\Steroid it’s very dangerous\\
எனது கருத்தும் இதுதான்.
(சில மருத்தவர்கள் என்னிடம் சொன்னது)
மிகவும் வருத்தமாக இருக்கிறது...
உங்கள் சகோதரி விரைவில் குணம் அடையவும், உங்களுக்கு நீதி கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்...
ரம்யா,
இதைப் படிக்கவே எனக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கு. மனதில் ஒரு வித படபடப்பு.
எப்படித் தான் உங்கள் அக்கா வலியுடன் இருக்கிறார்களோ? அவர்கள் சீக்கிரம் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
உங்கள் சகோதரியின் வலி குறைய எனது பிரார்த்தனைகள். வலி நிவாரணி எடுப்பது மிகவும் தவறான செயல். இதன் பக்கவிளைவுகள் மோசமாக இருக்கும். நானும் மருத்த்துவர்களின் அலட்சியத்தால அலைகழிக்கப்பட்டிருக்கிரேன். ஆனால் major problem இல்லை.
படிக்கிறப்ப கஷ்டமா தான் இருக்கு. அக்கா சீக்கிரம் குணம் அடைய ஆண்டவனை பிரார்த்திகிறேன்.
நடவடிக்கை எடுங்கள். ஆனால் இப்பொழுது வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்.
இதைப்பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை!!!
// Steroid it’s very dangerous. உடலில் உள்ள எலும்புகள் அனைத்தையும் உருக்கும் சக்தி இதற்கு இருக்கிறது. //
ஆம்.. ஸ்டெராய்ட் இன்ஜெக்சன், மாத்திரைகள் என்றுமே ஆபத்தான்வைதான்.
I pray to the almighty for the speedy recovery of your sister.
மிகவும் வருந்ததக்க பதிவு
இறைவனிடம் வேண்டுதல் தவிர வேறு தெரியவில்லை எனக்கு
//சட்ட ஆலோசக மையம் மற்றும் மனித உரிமை கழகத்திடமும் இதை கொண்டு செல்லப் போகிறேன். நீதி கிடைக்குமா பார்க்கலாம்.//
நிச்சயம் கிடைக்கும், போராடுங்கள், வெற்றி உமதே
கிடைக்கப்போகும் இந்த வெற்றி ஒரு உதாரணமாக இருக்க என் வாழ்த்துக்கள்
மருத்துவமனையை சும்மா விடாதீர்கள்.உங்கள் சகோதரியின் வலியை என்னால் உணர முடிகிறது.சென்னையில் வெங்கிடாச்சலம் டாக்டரிடம் ஒரு முறை காண்பிக்கவும்.Steroid medicine is dangerous. என்னுடைய நண்பனுக்கு நடந்தததான் உங்களுக்கு தெரியுமே........
first time intha pakkam varen nenakren..ipdi oru sogamaana post :(..roomba kashtama irunthichi padikarapo..consumer court edachum try paneengala?
entha hospital and yaru doctrngara matterlam publicise pannungs..ethachum news channel ilati magazinela aal terinja avanga moolama pressure poda try panlam...ozhungaana treatment thaan tharala atleast compensationachum ethachum thantaaganum
ramya,
I understand your feeling. Will pray to god that she recovers good and comes back healthy in a short span of time.
Whatever be the frustrations on your maama or on their family, resist from posting the details in blogs. In a way, it seems to be good to express the frustrations in open, but it is better to do it with your friends
//என் சகோதரியின் மீளாச் சோகம்!!!!!!!!!!//
நம்பிக்கை வையுங்கள் குணம் பெற முடியும்.
//அவரும் சில மாத்திரைகள் (வலி நிவாரிணி - ப்ரூபென்) கொடுத்து அனுப்பி உள்ளனர்.//
அய்யோ அது பக்க விளைவுகள் அதிகம் உள்ள மாத்திரை ஆச்சே!
உங்கள் சகோதரி விரைவில் குணம் அடையவும்,வலி குறையவும் மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.
அன்புடன் அருணா
கண்டிப்பாக இதை நீங்கள் நுகர்வோர் கோர்டுக்கு எடுத்து செல்லலாம்!
உயிர் ஒன்னும் கிள்ளுகீரை இல்லை!
சென்னை ராமச்சந்திராவில் பார்த்தீர்களா?
தற்ச்சமயம் சென்னை அரசு மருத்துவமனையிலிலேயே நிறைய வசதிகள் வந்து விட்டது.
நமது சக வலைப்பதிவர் டாக்டர் புருனோ கூட அங்கே தான் இருக்கிறார்.
மனம் தளராதீர்கள், விரைவில் குணமடையும்.
//thevanmayam said...
இதைப்பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை!!!//
ஒரு மருத்துவராக உங்களது ஆலோசனைகள் பயன்படலாம்.
தயவுசெய்து ஒதுங்காதீர்கள் நண்பரே!
////அவரும் சில மாத்திரைகள் (வலி நிவாரிணி - ப்ரூபென்) கொடுத்து அனுப்பி உள்ளனர்.//
அய்யோ அது பக்க விளைவுகள் அதிகம் உள்ள மாத்திரை ஆச்சே!//
கண்டிப்பாக ப்ரூபென் சற்றே ஹெவி டோஸ் தான்..
என் பாட்டி ( அப்பாவின் தாயார் ) கிட்டத்தட்ட 15 வருடங்கள் அந்த ப்ரூபென்னை
உபயோகித்து வந்தார்கள்..
அவர்களுக்கு ரூமாடிக் என்கிற கடும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வந்ததால்
இந்த மாத்திரை.
//ஆனால் எனக்கு இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நம்மையே இப்படி அலைக்களித்தால், பாமரர்களை எவ்வளவு பாடு படுத்துவார்கள்.//
பாமரர்கள் மட்டுமா..நடுத்தர வர்க்கங்கள் கூட இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
//சட்ட ஆலோசக மையம் மற்றும் மனித உரிமை கழகத்திடமும் இதை கொண்டு செல்லப் போகிறேன். நீதி கிடைக்குமா பார்க்கலாம். //
நிச்சயம் செய்ய வேண்டும்.
ப்ளாக் மட்டுமின்றி இன்னும் பல செய்தி ஊடகங்களுக்கு இவ்விஷயத்தை கொண்டு
செல்ல முயலுங்கள்..
உங்கள் அக்கா விரைவில் நலம் பெற எங்கள் பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு.
இது குறித்து,
உங்களுக்கு எங்கே எப்போது உதவிகள் வேண்டுமானாலும் என்னை தொடர்பு
கொள்ளலாம்.
நான் சென்னையில் தான் இருக்கிறேன்.
ரம்யா, எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு உங்க பதிவ படிச்ச பிறகு. மூட்டு வலி பிரச்சனை எப்படி இருக்கும் என்பதை நான் பார்த்து இருக்கிறேன்.
இப்படி உங்க அக்காவுக்கு நடந்து இருப்பது..நினைச்சு பார்க்கவே முடியல. இவ்வளவு சிரமப்பட்டு பதிவு எழுதி, மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்குறீர்களே, உங்க நல்ல மனசுக்கு கூடியவிரைவில் எல்லாமே நல்லதாய் நடக்கும்! உங்க அக்கா நிச்சயம் குணம் அடைவாங்க. கவலை வேண்டாம். கடவுளை வேண்டிகொள்கிறேன். :)
உங்கள் அக்கா விரைவில் நலமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்
//அவளிடம் எனக்கு எப்படி இருக்கிறாய் என்று கேட்கவே பயமாக இருக்கிறது.
//
உணர்வுகள் புரிந்து கொள்ள முடிகிறது ரம்யா...உங்கள் சகோதரி விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...
உங்கள் அக்கா விரைவில் நலமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்
சக பதிவர் டாக்டர் ப்ருனோ-விடம் ஆலோசனை கேட்கலாமே
தன்னுடைய செல் நம்பரை கூட கொடுத்திருக்கிறார்
உங்க அக்கா சீக்கிரம் குணமடைய பிராத்திக்கிறேன்
/*இந்த பதிவின் நோக்கம், எந்த நோய் வந்தாலும், அதற்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்தை மற்றும் மருத்துவர்கள் கொடுக்கும் சிகிச்சையை வேறு ஒரு மருத்துவரிடமும் மறு பரிசீலனை செய்து கொள்வதில் தவறே இல்லை. இரண்டு கருத்துக்களும் ஒத்துப் போகாவிட்டால், தேவையான் விளக்கம் தரவேண்டும் என்று நிலை உருவாக வேண்டும். அப்போதுதான் நம்மை போல் உள்ள மருத்துவம் சாரா அப்பாவி மக்கள் காப்பாற்றப் படுவார்கள். */
தற்காலத்தில் இது மிகவும் தேவையான ஒன்று. பல நேரங்களில் மருத்துவ ஆலோசனைகள் ஒத்துப்போவதில்லை. பல மருத்துவர்கள் விளக்கம் கூறா விட்டால் நமக்கு ஒன்றும் புரிவதில்லை. உங்கள் அக்கா விரைவில் குணம் பெற எனது பிரார்த்தனைகள்.
உங்க அக்காவுக்கு சீக்கிரம் குணமடைந்து விடும். பொறுப்புடன் பதிவு செஞ்சிருக்கீங்க..
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
விரைவில் குணம் அடைவார்கள்!
உங்கள் சகோதரி விரைவில் குணம் அடையவும்,வலி குறையவும் மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.
தங்களின் பதிவை படிக்கும் மற்றவர்களாவது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் சகோதரி விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்.
என் வலைப்பூ வந்து கருத்தூ சொன்னமைக்கு நன்றி சகோதரி!!!
vநம்மை முழுக்க முழுக்க தாங்கிப் பிடிப்பதே இந்த எலும்புகள்தான். அதில் கோளாறு என்றால் ரொம்பவே சிக்கலாகிவிடும்.
மருத்துவர்களின் பொறுப்பின்மையால் நானும் பலமுறை நேரடியாக அனுபவித்திருக்கிறேன். பெரிய அளவில் இல்லாவிடினும்... சிறு சிறு நோய்களுக்கே அலட்சியம் காண்பித்தால் பெரிய நோய்களுக்கு உயிரிழப்பே ஏற்படும் வகையில் அலட்சியம் காண்பிப்பார்கள்...
சில்சமயம் மருத்துவர்களைக் காணும்பொழுது எரிச்சலாக வரும்.!!!! எதற்கும் விழிப்புணர்வு மிக அவசியம்!!
தங்கள் சகோதரி உடல் பூரண நலமடைய பிரார்த்திக்கிறேன்.
ரம்யா
உங்களுக்கு வருவதெல்லாம் சோதனை மேல் சோதனையாதான் இருக்கு.
உங்களின் சகோதரிக்கும் சேர்த்து என் ப்ரார்த்தனைகள்
இந்த பதிவு யூத் விகடனில் ...
வாழ்த்துக்கள்
இந்த பதிவு யூத் விகடன்
குட் ப்ளாக்கில் இடம் பெற்றுள்ளது.
வாழ்த்துக்கள்...
மிகவும் வருத்ததிற்குரிய நிகழ்வு...
//சட்ட ஆலோசக மையம் மற்றும் மனித உரிமை கழகத்திடமும் இதை கொண்டு செல்லப் போகிறேன். நீதி கிடைக்குமா பார்க்கலாம்.
//
உங்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும். மனம் தளராதீர்கள்
ரம்யா,உங்கள் அக்காவின் முகம் தெரியாவிட்டாலும் அவரின் வேதனையை அனுபவித்த மாதிரி இருந்தது உங்கள் வலியோடு கலந்த உணர்வு.உங்கள் அக்கா கொடுத்து வைத்தவர்.இப்படி ஒரு தங்கை கூட இருக்க.உங்கள் அக்கா சுகமாய் திரும்பவும் நல்லபடி நடமாட ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்.
***Steroid it’s very dangerous**
There are thousands of steroids including Cholesterol and several sex hormones which are secreted in our body.
What kind of steroid you are talking about here?
Could you give me the chemical name of that particular steroid used as a pain killer?
Because, "Steroids are dangerous" is sort of misleading statement here.
------------------
**அவரும் சில மாத்திரைகள் (வலி நிவாரிணி - ப்ரூபென்) **
You mean Ibuprofen or something else?
Anyway, I am really sorry to know aout your sister :(
:(:(:(
உங்கள் சகோதரி இறையருளால் விரைவில் குணமாக வேண்டிக்கொள்கிறோம்.
உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்கிறோம்.
அக்காவின் வேதனை அடி வயிற்றைக் கலக்கும் என்பதை நாங்களும் எங்கள் சகோதரியின் உடல் நிலை குறித்து அனுபவித்திருக்கிறோம்.அந்த ரீதியில் உங்கள் பதிவு என்னை கலங்க வைத்து விட்டது .
இந்த பின்னூட்டம் வாசிக்கும் அனைத்து பதிவர்களும் அந்த சகோதரிக்காக மனமுவந்து பிரார்த்தனை செய்வோம்.
February 20, 2009 9:03 AM
அவர்கள் விரைவில் நலமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
என் சகோதிரிக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைத்து என் வலை உலக சகோதர, சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
/*
வருண் said...
***Steroid it’s very dangerous**
There are thousands of steroids including Cholesterol and several sex hormones which are secreted in our body.
What kind of steroid you are talking about here?
Could you give me the chemical name of that particular steroid used as a pain killer?
Because, "Steroids are dangerous" is sort of misleading statement here.
------------------
**அவரும் சில மாத்திரைகள் (வலி நிவாரிணி - ப்ரூபென்) **
You mean Ibuprofen or something else?
Anyway, I am really sorry to know aout your sister :(
*/
==================================
Ibuprofen
=========
It’s not steroid drug which also very dangerous to take regularly.
Any Cortisone
=============
Cortisone --> Regarding steroid, it is wonderful drug.
They are most useful drugs but they must be used with utmost caution.
It must be used only under proper medical supervision. Sudden withdrawal can be very very dangerous.
In my sister’s case, she was advised to take this Cortisone more than one year without proper step by step withdrawal.
Whenever she gone treatment for Joint Pains she was given both medicines.
அக்காவின் உடல் நலம் விரைவில் தேற இந்த தங்கையும் பிரார்த்தனைகள்..
//சட்ட ஆலோசக மையம் மற்றும் மனித உரிமை கழகத்திடமும் இதை கொண்டு செல்லப் போகிறேன்.//
வழக்கு தொடருங்கள் கட்டாயம் நீதி கிடைக்கும்..
படிக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அக்கா விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
உங்கள் அக்காவின் நிலையை எல்லோருடன் பகிர்ந்து கொண்டதன் மூலம் பலரையும் இது குறித்து சிந்திக்கவும் வைத்திருக்கிறீர்கள். எப்போதுமே வலி நிவாரணி குறிப்பாக ஸ்டிராய்ட் தொடர்ந்து சாப்பிடப் பரிந்துரைக்கப் பட்டால் ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று மருத்துவர்களை கன்சல்ட் செய்து கொள்வதும் நல்லது. அதே போல் வீட்டிலுள்ளவர்கள் இதுபோன்ற உடல்நலக் குறைவு இருப்பவர்களுக்கு கூடுமானவரை வேலைகளைக் குறைத்து அனுசரணையாக இருத்தலும் மிக அவசியம்.
உங்கள் அக்கா சீக்கிரம் நலம் பெற நானும் பிரார்த்திக்கிறேன் ரம்யா.
உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
ஐபு ப்ருப்ஃபென் அவ்வளவு டேஞெரஸ் இல்லைங்க. எனக்குத்தெரிய நெறையப் பேர் சாதாரணமாக "பீரியேட்ஸ்" சமயத்தில், லேசா தலைவலி, எல்லாத்துக்கும் just liek chocolate எடுப்பார்கள். நம்ம அட்வில் இதுதான்.
---------------
ஆனால் கார்டிக்கோ ஸ்டெராயிட்ஸ் மாசக்கனக்காக (oral intake) பயனபடுத்தியதன் விளைவுதான் இது!
ஏதோ ஒரு முட்டாள் டாக்டர் அப்படி செய்து இருக்கிறார் :(
அவர்களுக்கு வந்த அதே சைட் எஃபெக்ட்ஸ் இதிலும் சொல்லி இருக்கிறார்கள்!
***Other side effects that may be caused by the long-term use of steroids include cataracts, muscle weakness, avascular necrosis of bone and osteoporosis. These usually do not occur with less than four weeks of treatment.
Avascular necrosis of bone, usually associated with high doses of prednisone over long periods of time, produces hip pain and an abnormal MRI scan. It occurs most often in the hip, but it can also affect the shoulders, knees and other joints. Caught early, the joint can be saved by "decompression" by an orthopedic surgeon. Once full developed, avascular necrosis is painful and often requires surgical joint replacement for pain relief.
Steroids reduce calcium absorption through the gastrointestinal tract that may result in osteoporosis, or thinning of the bones. Osteoporosis can lead to bone fractures, especially compression fractures of the vertebrae, causing severe back pain. Calcium, at least 1500 mg of the calcium carbonate form or equivalent, should be taken. There are new medications (Fosamax in particular) that also may help to prevent osteoporosis.***
எனது சகோதரிக்கு, உளம் கனிந்து பிரார்த்தனை செய்த அனைத்து என் வலை உலக நண்பர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் எனது நன்றிகள்.
உங்கள் அனைவரின் பிரார்த்தனை என்ற
அலைகள் சகோதரிக்கு நலம் பயக்கட்டும் என்று என் மனம் நிறைந்த நம்பிக்கையுடன், ஆசையுடனும்
உங்களுடன் சேர்ந்து நானும் என் சகோதரிக்கு பிரார்த்தனை செய்கிறேன்.
நன்றி --> ஜமால்
நன்றி --> சின்னப்பையன்
நன்றி --> விஜய்
நன்றி --> வித்யா
நன்றி --> வினோத் கெளதம்
நன்றி --> தேவா
நன்றி --> ராகவன் அண்ணா
நன்றி --> அபுஅஃப்ஸர்
நன்றி --> குடுகுடுப்பை
நன்றி --> gils
நன்றி --> மணிகண்டன்
நன்றி --> வால்பையன்
நன்றி --> அன்புடன் அருணா
நன்றி --> அ.மு.செய்யது
நன்றி --> Thamizhmaangani
நன்றி --> அத்திரி
நன்றி --> புதியவன்
நன்றி --> பாபு
நன்றி --> அமுதா
நன்றி --> கார்க்கி
நன்றி --> குசும்பன்
நன்றி --> தாரணி பிரியா
நன்றி --> அன்புமணி
நன்றி --> ஆதவா
நன்றி --> அமிர்தவர்ஷினி அம்மா
நன்றி --> அண்ணன் வணங்காமுடி
நன்றி --> ஹேமா
நன்றி --> வருண்
நன்றி --> rapp
நன்றி --> பாலராஜன்கீதா
நன்றி --> goma
நன்றி --> அப்துல்லா அண்ணா
நன்றி --> Poornima Saravana kumar
நன்றி --> நிஜமா நல்லவன்
//
அதே போல் வீட்டிலுள்ளவர்கள் இதுபோன்ற உடல்நலக் குறைவு இருப்பவர்களுக்கு கூடுமானவரை வேலைகளைக் குறைத்து அனுசரணையாக இருத்தலும் மிக அவசியம்.
//
சரியாச் சொல்லி இருக்கீங்க ராமலக்ஷ்மி
இதையேதான் நானும் விரும்புகிறேன்.
இந்த பதிவை என் சகோதரி நலம்
அடைந்து வந்தவுடன் படிக்கச் சொல்லுவேன், மாமவையும்
படிக்கச் சொல்லுவேன். என் சகோதரிக்கு எவ்வளவு பேரின் பிரார்த்தனைகள் இருந்த்திருக்கின்றது என்பது மிகவும் சந்தோஷத்தை
கண்டிப்பா கொடுக்கும்.
நன்றி ராமலக்ஷ்மி!!
நன்றி நசரேயன்.
உங்க்ள் பதிவை படிக்கும் போது உங்கள் அக்காவின் வேதனையை உணர முடிந்தது.
இப்போது எப்படி இருக்காங்க? விரைவில் முழுசுகம் பெற்றிட பிரரர்த்திக்கிறேன்.
உங்க்ள் பதிவை படிக்கும் போது உங்கள் அக்காவின் வேதனையை உணர முடிந்தது.
இப்போது எப்படி இருக்காங்க? விரைவில் முழுசுகம் பெற்றிட பிரரர்த்திக்கிறேன்.
உங்கள் சகோதரி விரைவில் நலமடைய பிரார்த்தனைகள்.
மருத்துவமனை மற்றும் சிகிச்சை தொடர்புடைய பில் மற்றும் ரிப்போர்ட்களை பத்திரபடுத்திவைக்கவும். இதில் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்
சகோதரி... சோகமேயானாலும், விபரமாத் தகவல்களைக் கொடுத்து இருக்கீங்க...மத்தவிங்களுக்கு ஒரு பாடம்!
சகோதரி விரைவில் நலமடைய பிரார்த்தனைகள்.
Hi
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
நன்றி --> சூர்யா ஜிஜி
நன்றி --> வாழவந்தான்.
//
பழமைபேசி said...
சகோதரி... சோகமேயானாலும், விபரமாத் தகவல்களைக் கொடுத்து இருக்கீங்க...மத்தவிங்களுக்கு ஒரு பாடம்!
//
புரிந்தமைக்கு மிகவும் நன்றி அண்ணா
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களினால்
சகோதரி குணம் ஆகிவிடுவாள்
எனற நம்பிக்கை வந்துவிட்டது அண்ணா!!
உங்க அக்கா விரைவில் குணமடைய விரும்புகிறேன்.தினம் எத்தனையோ பேர் மருத்துவர்கள் அலட்சியத்தால் வாழ்க்கையை இழக்கிறார்கள்.நான் என் தந்தையை இப்படி ஒரு மிருகத்தின் அலட்ச்சியமான சிகிட்சையால் பறி கொடுத்தேன். முதலில் சிறந்த மருத்துவரை பார்த்து குணமாக்கி விட்டு பிற்கு இதற்கு காரணமானவர்களை தண்டிக்கலாம். எல்லா ரிப்போர்ட்டுகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ளவும்
// ராமலக்ஷ்மி said...
உங்கள் அக்காவின் நிலையை எல்லோருடன் பகிர்ந்து கொண்டதன் மூலம் பலரையும் இது குறித்து சிந்திக்கவும் வைத்திருக்கிறீர்கள்.//
உண்மைதான்.
அக்கா சீக்கிரமா எல்லாம் சரியாகி எழுந்துவந்து உங்க இந்த பதிவ படிப்பாங்க.
விரைவில்குணமடைய என்னோட பிரார்த்தனைகள்.
நிச்சயமா நல்லதே நடக்குங்க நம்பிக்கையோட இருக்குங்க
அக்காவின் உடல் நலம் குறித்து எதுவும் முன்னேற்றம் உண்டா?
ஏதோ காரணத்துனால என்னோட முதல் கருத்துரை உங்களுக்கு பிடிக்கலை போல இருக்கு...தவறாய் இருந்தால் மன்னிக்கவும்.
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்....முடிந்தால் வாங்க
//
Nilavum Ammavum said...
அக்காவின் உடல் நலம் குறித்து எதுவும் முன்னேற்றம் உண்டா?
ஏதோ காரணத்துனால என்னோட முதல் கருத்துரை உங்களுக்கு பிடிக்கலை போல இருக்கு...தவறாய் இருந்தால் மன்னிக்கவும்.
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்....முடிந்தால் வாங்க
//
எனக்கு ஒன்றும் புரியவில்லையே
உங்க கருத்து எனக்கு வரவில்லையே
ஏன்னா சொல்லுங்களேன்.
இப்போதான் உங்க பதிவை படிச்சுட்டு
வரேன்
Nilavum Ammavum,
எனக்கு எல்லாமே பிடிக்கும்.
பிடிக்காது என்று ஒன்றுமே இல்லை. ஏதோ தவறு நடந்து இருக்கின்றது. கண்டு பிடிப்போம்.
//
Nilavum Ammavum said...
அக்காவின் உடல் நலம் குறித்து எதுவும் முன்னேற்றம் உண்டா?
ஏதோ காரணத்துனால என்னோட முதல் கருத்துரை உங்களுக்கு பிடிக்கலை போல இருக்கு...தவறாய் இருந்தால் மன்னிக்கவும்.
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்....முடிந்தால் வாங்க
//
அக்காவின் உடல் நலம் குணம் அடையவில்லை.
உங்களின் அன்பான விசாரிப்பிற்கு நன்றி.
தயவு செய்து என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
நான் எதுவும் delete செய்யவில்லை.
ஆனா எனது பதிவில் இரண்டு பின்னுட்டம் delete ஆகி இருப்பதை பார்த்தேன்.
எனது மின்னஞ்சல் கூட யாரோ open
செய்து இருக்கின்றார்கள்.
பிறகுதான் password மாற்றினேன்.
ஆனால் என் பதிவில் சில குளறு படிகள் நடந்து இருக்கின்றது.
யார் என்று கண்டுபிடிக்கத்தான் போராடிக்கொண்டு இருக்கின்றேன்.
முடிந்தால் என்னப்பா கண்டிப்பா உங்கள் பதிவை காண வருவேன்.
உங்கள் பதிவை நான் ரசித்ததினால் தானே அனைவருக்கும் சொன்னேன்.
***/..தயவு செய்து என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
/****
கண்டிப்ப்பா..உங்களை புடிச்சதுனால தானே நானும் வருத்தம் தெரிவித்தேன்...
சரி விடுங்க....password-ல special characters use பண்ணின track பண்றது கஷ்டம்...அந்த மாதிரி முயற்சி செய்ங்க....
இதுக்கு போயி இத்தனை பின்னூட்டம் ட்டுட்டீங்களே...என்னங்க போங்க....
Steroids and pain killers are very dangerous. It should be given only in extreme conditions. My friend went to a doctor for menstrual disorders that doctor gave steroids without telling anything to her. My friend was immediately attacked by sugar disease because of failure of pancreas due to steroids. Continuous usage of Pain killers will affect the kidneys. So makkale please be careful. I read in a magazine that for normal cold, headache, fever, cough and sneeze our people are going to medical shop and getting medicines. The shop owners are giving steroids for immediate recovery which is very very harmful. Cold, headache, fever, cough and sneeze may be symptoms of some other disease or they can be normal cold, headache, fever, cough and sneeze. So go to doctors make a habit of having a family doctor for your whole family. You can type the medicine name in google and find out about its ingredients and its plus and minus. But don't believe in googling as it may also provide wrong result as a competitor could have said something wrong about the medicines.
I pray to god that your sister should recover fast. Thanks for warning others.
Steroids can be given only to the patients if it is very very necessary and under the continuous supervision of a skilled doctor. The patient should be aware that the Dr is prescribing steroids and its consequences. So she/he should be given time to consult with some other doctors (if time permits) and if they too agree she/he can take the treatment.
1)during the course of the treatment he/she should not change the doctor
2) to have the dosage according to dr's advice
3) not changing the medicine's company like (same medicine different company)
Why cant we take up this with Dr. Anbumani Ramadoss? Why can't you just write to Dr. Anbumani Ramadoss a letter about your experience after you have formally moved with Human Rights and Law People. Wish your akka a speedy recovery. Wish that the black sheep doctors are punished.
உங்கள் பதிவை படித்து எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு ரம்யா.
உங்கள் அக்காவிற்க்காக நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
\\அறுவை சிகிச்சை செய்தவர் கண்களில் படவே இல்லையாம்.
இவ்வளவிற்கும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு வருவதை உறுதி செய்தது விட்டுத்தான் சென்றார்கள்.
அறுவை சிகிச்சை செய்தவரை பார்க்க வேண்டும் கேட்டு என்று இருக்கிறார் என் மாமா, அதற்கும் சரியான பதில் இல்லையாம். \\
இப்படி இருந்தால் இவர்களை என்ன செய்வது.
உயிரை உயிராக மதிக்க வேண்டும்.
அப்படி நினைக்காமல் இப்படி இருக்கிரார்களே.
தயவுசெய்து மருத்துவ சேவையை தொழிலாக நினைக்காதீர்கள்.
அக்கா இது ரொம்ப கொடுமையான வேலை. நீங்களும் உங்க உடம்பை கவனிச்சுகோங்க. :(
நன்றி --> Jasmine
நன்றி --> Nilavum Ammavum
நன்றி --> தமிழ் தோழி
நன்றி --> S.K.
உங்கள் சகோதரி நலம் பெற இறைவனை பிராதிக்குறேன்.
i believe your sister will recover soon for every problem temples are there if you have belief please search my blog www.astrologicalscience.blogspot.com
you can giveany search term for back bone also a temple is there. you can pray for your sister.
Post a Comment