Monday, April 27, 2009

மீண்ட சகோதரியின் அடுத்த பக்கம்!!

தேறிக் கொண்டிருக்கும் சகோதரியின் உடல் நிலை!!

எனது சகோதரியின் உடல்நிலை சோகத்தின் உச்ச நிலையை தொட்ட போது நான் மனம் நொந்து ஒரு பதிவு போட்டேன்.

அந்த இடுகைதான் சகோதரியின் மீளாச் சோகம்.

ஏற்கனவே தவறுசெய்த மருத்துவமனையில் மறுபடியும் பல சிகிச்சைகள் செய்தும், செய்ய வைக்கப் போராடிய போராட்டத்திற்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. மன வலியும், பண வலியும் தான் மிஞ்சியது. அலைச்சல், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் இருக்கே அதை வார்த்தைகளினால் கூற இயலாது.


அக்காவிற்கு மருத்துவம் செய்து கொண்டிருந்த மருத்துவமனையில் கடைசி வரை முடியவில்லை என்று கூறவில்லை. நேரே போனாலும் சரி, தொலை பேசியானாலும் சரி, அவர்கள் தொடர்ந்து கொடுப்பது வலி நிவாரணிதான். அதனால் எந்த வித பலனும் கிடைக்கவில்லை. முடியாது என்றும் இதுவரை கூறவில்லை.

இந்த ஆட்டத்திற்கு முடிவுகட்ட எண்ணி எங்கள் கதையை மனிதாபிமானத்துடன் கேட்ட ஒரு மனித தெய்வம் அருமையான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு மறுபடியும் எல்லா சோதனைகளும் செய்துவிட்டு, சகோதரியின் இன்றைய நிலையை எங்களுக்கு உணர்த்தி, என்ன செய்ய வேண்டும் என்றும் கூறினார். எங்களுக்கும் அவரின் பரிந்துரை மிகவும் உகந்ததாக இருந்ததினால் ஒத்துக் கொண்டோம்.


மறுபடியும் மருத்துவச் சிகிச்சை அதாவது அறுவை சிகிச்ச உதவியுடன் ஓரளவிற்கு வலியில் இருந்து விடுதலை கிடைத்து விட்டது. நடக்கும் அளவிற்கு தயார் செய்திருக்கின்றார்கள்.


ஆனால் சாதரண நிலையை அடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறி இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் அந்த குடும்பம் தனது இயல்பான வாழ்க்கை நிலைக்கு மாறியுள்ளது.


நான் எனது சகோதரி உடல் நிலை குறித்து எழுதிய இடுகையில் நீங்கள் அனைவரும் எனது சகோதரி உடல் நிலை விரைவில் குணம் அடைய வாழ்த்தினீர்கள். உங்களின் வாழ்த்து எனது சகோதரியின் உடல் நலம் தேற மிகவும் உதவியாக இருந்தது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்களின் அன்பிற்கும் எனது நன்றிகள்.








30 comments:

அண்ணன் வணங்காமுடி said...

me the first

Subbu said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

புதியவன் said...

//உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்களின் அன்பிற்கும் எனது நன்றிகள்.//

நட்பிற்குள் நன்றி தேவையில்லை ரம்யா...

உ(எ)ங்கள் சகோதரி பூரண குணமடைய வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

அவர் மீண்டு வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி ரம்யா. சீக்கிரமே அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட எங்கள் பிரார்த்தனைகள் தொடரும்.

சுரேஷ் குமார் said...

//
மறுபடியும் மருத்துவச் சிகிச்சை அதாவது அறுவை சிகிச்ச உதவியுடன் ஓரளவிற்கு வலியில் இருந்து விடுதலை கிடைத்து விட்டது. நடக்கும் அளவிற்கு தயார் செய்திருக்கின்றார்கள்.
//
வாவ்.. பரவாஇல்லையே.. உண்மையில் நல்ல செய்திதான்..
சகோதரி முழுதும் குணமடைய வாழ்த்துகிறேன்..

சுரேஷ் குமார் said...

//
செய்ய வைக்கப் போராடிய போராட்டத்திற்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை.
//
நல்ல விதமா சொன்னாவே ஒழுங்கா பண்ண மாட்டாங்க.. இப்டி கம்பல் பண்ணி பண்ணவெச்சா என்னாத்த பண்ணுவானுங்க..
இப்போவாச்சும் நல்ல மருத்துவர அடையாளம் கண்டீர்களே..! அவர்களின் உடல்நலம் தேற வாழ்த்துக்கள்..

சுரேஷ் குமார் said...

//
ஆனால் சாதரண நிலையை அடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறி இருக்கிறார்கள்.
//
இந்த அளவுக்கு நம்பிக்கை வந்திடுச்சுல்ல.. பாப்போம்..
இவ்ளோ நாள் பொருத்துடிங்கல்ல.. இன்னும் சில மாசம் தானே.. கண்டிப்பா நல்லா ஆகிடுவாங்க..

அண்ணன் வணங்காமுடி said...

வாழ்த்துக்கள். மீகவும் சந்தோசம். அவர்கள் உடல் நிலை நன்கு முன்னேற வாழ்த்துக்கள்

vinoth gowtham said...

சகோதரி விரைவில் முழுமையாக குணம் அடைய வாழ்த்துக்கள்..

பட்டாம்பூச்சி said...

சகோதரி பூரண குணமடைய வாழ்த்துக்கள்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் சகோதரி இயல்பு நிலைக்கு வரவும் எங்களது ப்ரார்த்தனைகள்.

இப்போதைய நிலைக்கு மகிழ்ச்சி.

அப்பாவி முரு said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
உங்கள் சகோதரி இயல்பு நிலைக்கு வரவும் எங்களது ப்ரார்த்தனைகள்.

இப்போதைய நிலைக்கு மகிழ்ச்சி.//

மேலிருக்கும் எங்களது - வில் நானும் இருக்கிறேன்

இராகவன் நைஜிரியா said...

சகோதரி விரைவில் மிக நன்றாக குணமடைய எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.

விரைவில் நன்கு குணமடைவார். கவலைப்படவேண்டாம்.

விஜய் said...

ரொம்ப நல்ல செய்தி. இம்மாதிரி பணத்தைப் பிடுங்கும் ஆஸ்பத்திரிகளை சும்மா விடக்கூடாது. அவர்கள் மீது அவதூறு புகார் கொடுத்தாலும் ஒண்ணும் ஆகப்போவதில்லை. ஆனால் அவர்களின் வண்டவாளங்களை வெளியுலகுக்குக் கொண்டு செல்லும் ஒரு நல்ல ஊடகம் இன்று நம் கையில் இருக்கிறது. அது என்ன மருத்துவமனை, எந்த டாக்டர் என்று நீங்கள் பகிர்ந்து கொண்டால், அங்கு இனிமேல் போகாமல் மக்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்தலாம்.

உங்கள் சகோதரி சீக்கிரமே எழுந்து ஓட எனது வாழ்த்துக்கள்.

ஆளவந்தான் said...

//
ஒரு மனித தெய்வம் அருமையான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
//
மற்றவர்களுக்கும் உதவும் என்று கருதினால், மருத்துவமனையின் பெயரை வெளியிடலாம்.

ச்சின்னப் பையன் said...

உ(எ)ங்கள் சகோதரி பூரண குணமடைய வாழ்த்துக்கள்...

வழிப்போக்கன் said...

ஒரு மனித தெய்வம் அருமையான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு மறுபடியும் எல்லா சோதனைகளும் செய்துவிட்டு, சகோதரியின் இன்றைய நிலையை எங்களுக்கு உணர்த்தி, என்ன செய்ய வேண்டும் என்றும் கூறினார்.//

நீண்ட காலத்துக்கு அவர் நல்லா இருக்கட்டும்.....
:)))

குடுகுடுப்பை said...

பூரண குணமடைய வாழ்த்துக்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

சகோதரி பூரண குணமடைய வாழ்த்துக்கள்...

வால்பையன் said...

சகோதரி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்!

sarathy said...

எங்கள் சகோதரி பூரண குணமடைய வாழ்த்துக்கள்..

லவ்டேல் மேடி said...

நீங்கோ கவலபடாதீங்கோ அம்முனி... !!! உங்க நல்ல மனசுக்கு உங்க சகோதரி நல்லபடியா கொனமாயி... நல்லாருப்பாங்கோ ....!!! அவிங்கோ சீக்கிரம் கொனமாவனுமின்னு நாங்குளுமும் சாமிக்கிட்ட வேண்டிக்கிரோமுங்கோ ..... !!! தாமசமானாலுமும் ... அவிங்கோ கொனமாவரதுதானுங் முக்கியமுங்கோ..... !!!

" வாழ்க வளமுடன்..."

அ.மு.செய்யது said...

//மறுபடியும் மருத்துவச் சிகிச்சை அதாவது அறுவை சிகிச்ச உதவியுடன் ஓரளவிற்கு வலியில் இருந்து விடுதலை கிடைத்து விட்டது. நடக்கும் அளவிற்கு தயார் செய்திருக்கின்றார்கள். //

நிறைவான‌ செய்தி ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து.

உங்க‌ள் ச‌கோத‌ரி முழுகுண‌ம‌டைய‌ எங்க‌ள் துஆக்கள் எப்போதும் உண்டு.

அ.மு.செய்யது said...

//புதியவன் said...
//உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்களின் அன்பிற்கும் எனது நன்றிகள்.//

நட்பிற்குள் நன்றி தேவையில்லை ரம்யா...
//

அதானே !!! நன்றியா அப்படின்னா ?

ஆ.ஞானசேகரன் said...

//ஆனால் சாதரண நிலையை அடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறி இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் அந்த குடும்பம் தனது இயல்பான வாழ்க்கை நிலைக்கு மாறியுள்ளது.//

உங்கள் சகோதரி இயல்பு நிலை அடைய நண்பனின் பிராத்தனைகளும். வாழ்த்துகளும் உண்டு ரம்யா.. நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்...

நட்புடன் ஜமால் said...

//உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்களின் அன்பிற்கும் எனது நன்றிகள்.//

நட்பிற்குள் நன்றி தேவையில்லை ரம்யா...

உ(எ)ங்கள் சகோதரி பூரண குணமடைய வாழ்த்துக்கள்...


நானும் சொல்லிக்கிறேன்

R.Gopi said...

தற்போது தான், தங்கள் இணையதளம் / வலைப்பதிவை பார்த்தேன்...........

மருத்துவமும் இப்போது அரசியல் போலாகி விட்டது. SELF-MEDICATION மிகவும் தவறு...

ஆரம்பத்திலேயே நன்றாக பரிசோதனை செய்யப்பட்டு, தகுந்த சிகிச்சை அளித்தால், எப்படிப்பட்ட நோயும் குணமாகும். நாம் அனைவரும் நம் வாழ்வில், ஏதாவது ஒரு தருணத்தில், இதை உணர்ந்திருக்கிறோம்.

தங்கள் சகோதரி உடல்நிலை தேறி வருவதில் மகிழ்ச்சி.

அவர் நல்ல உடல்நிலையுடன் நீண்ட நாள் வாழ, நாம் படைத்தவனின் பாதம் பணிந்து வேண்டுவோம்............

நேரம் கிடைக்கும்போது இங்கேயும் வாருங்கள்.......

(www.edakumadaku.blogspot.com & www.jokkiri.blogspot.com)

தமிழரசி said...

உங்கள் சகோதரி முழு அளவில் சுகம் பெற விழைந்து இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்....

sakthi said...

engal sagothari poorana kunam adaya
prarthikindren ramya

நசரேயன் said...

வாழ்த்துக்கள்