Friday, January 30, 2009

வலைச்சரம்



விழா மேடை: வலைச்சரம்
பரிந்துரை: நண்பர் ஜமால்
ஏற்பு : நண்பர் சீனா

அதுவும் 100 வது ஆசிரியர் என்ற சிறப்பு வேறு. என் மனது சந்தோஷம் என்ற காட்டாற்றில் சிக்கி திணறுகிறது.

நண்பர் ஜமால்! உங்களுக்கு என்மேல் அதிக நம்பிக்கை.

நண்பர் சீனா!! அவர்களே உங்களுக்கோ அதை விட அதிக நம்பிக்கை.
துணிந்து விட்டீர்கள் ரம்யாவை ஆசிரியராக அழைக்க.

நன்றி நண்பர் ஜமால்
நன்றி நண்பர் சீனா

வலைச்சரம் தொகுப்பாசிரியராக என்னை தேர்ந்தெடுத்துள்ளார்.

தொகுப்பாசிரியராக பணியாற்றப்போகும் நாட்கள்
From 02/02/2009 To 08/02/2009.
இந்த ஏழு நாட்கள் எப்படி நகரப் போகின்றன, என்ன செய்யப்போகிறேன்.

எனக்குள் ஏன் இந்த புலம்பல்கள், அதான் நீங்க எல்லாம் எனக்குத் துணையா இருக்கீங்களே. அப்புறம் என்ன?

எழுந்து நடக்க வேண்டியதுதான் வலைச்சர மேடைக்கு.

பொடி நடையா நடந்து வந்து நீங்கள் அனைவரும் என்னுடன் கலந்து கொள்ளுங்கள்.

நன்றியுடனும், நட்புடனும்
உங்கள்
ரம்யா

Tuesday, January 27, 2009

காதலன் காதலிக்கு சமர்பித்த.......

காதலன்: கண்மணி உனக்கு நான் ஒரு அருமையான கவிதை எழுதி வச்சிருக்கேன் படிக்கட்டுமா??


காதலி: ம்ம்ம்ம் படிங்க கேப்போம்



விளைநிலம் இல்லேன்னா விவசாயி இல்லே
விவசாயி இல்லேன்னா விளைச்சல் இல்லே
விளைச்சல் இல்லேன்னா வருமானம் இல்லே
வருமானம் இல்லேன்னா வாழ்வே இல்லே

சிந்தனை இல்லேன்னா சிறப்பு இல்லே
கவிஞர்கள் இல்லேன்னா கவிதை இல்லே
அறிவியல் இல்லேன்னா நவீனம் இல்லே
நவீனம் இல்லேன்னா நாகரீகம் இல்லே


செடி இல்லேன்னா மரம் இல்லே
மரம் இல்லேன்னா பூ இல்லே
பூ இல்லேன்னா காய் இல்லே
காய் இல்லேன்னா கனி இல்லே


மலர் இல்லேன்னா மகரந்தம் இல்லே
மகரந்தம் இல்லேன்னா வண்டு இல்லே
தேனீ இல்லேன்னா தேன்கூடு இல்லே
தேன்கூடு இல்லேன்னா தேன் இல்லே

கணினி இல்லேன்னா வலைப்பூ இல்லே
வலைப்பூ இல்லேன்னா வலைப்பதிவு இல்லே
வலைப்பதிவு இல்லீன்னா பிண்ணுட்டம் இல்லே
பிண்ணுட்டம் இல்லேன்னா நண்பர்கள் இல்லே

குறும்பு இல்லேன்னா இளமை இல்லே
ஆரோக்கியம் இல்லேன்னா சந்தோஷம் இல்லே
சந்தோஷம் இல்லேன்னா சிரிப்பு இல்லே
சிரிப்பு இல்லேன்னா எதுவுமே இல்லே


இசை இல்லேன்னா பாட்டு இல்லே
பாட்டு இல்லேன்னா ஆட்டம் இல்லே
ஆட்டம் இல்லேன்னா அரங்கம் இல்லே
அரங்கம் இல்லேன்னா ஆட்கள் இல்லே


காற்று இல்லேன்னா உயிர் இல்லே
கண்கள் இல்லேன்னா கண்ணீர் இல்லே
கண்ணீர் இல்லேன்னா காதல் இல்லே
காதல் இல்லேன்னா உலகமே இல்லே




என் அன்பே ஆருயிரே நீ இல்லேன்னா ????

காதலி:
சீக்கிரம் சொல்லுங்க எங்கப்பா வீட்டுக்கு வரதுக்குள்ளே வீடு போயி சேரனும் ரொம்ப "இல்லே" சொல்லிட்டீங்க கேட்டுகிட்டு தானே இருக்கேன்.


என்னை புகழ்ந்து ஒரு கவிதை சொல்லறேன்னு சொல்லிட்டு இதெல்லாம் நல்லாவா இருக்கு ??


உங்களை நம்பி நானும் சொல்லுங்கன்னு சொன்னேனே என்னை நானே எதையாவது எடுத்து .....................

இதுலே என்னா நீ இல்லேன்னா??? ஒரே இழுவையா இருக்கு சொல்லி தொலைங்க.



காதலன்:
நீ ரொம்ப பேசிட்டே. ஏம்மா அவசரப்படறே. இரு சொல்லறேன். நீ இப்படி எல்லாம் சொன்னேன்னா நான் சொல்ல வந்ததை மறந்துடுவேன். கொஞ்சம் அமைதியா இரு. இதோ இப்போ சொல்லிடறேன்.

பாரு உனக்காக ஒரு ரோஜா கொண்டு வந்துள்ளேன் இதுக்கு முன்னாடி எவ்வளவு ரோஜா கொடுத்து இருக்கேன். எப்பவும் சந்தோஷமா மொகத்தை வச்சுக்கோ. இஞ்சி தின்ன .............. மாதிரி.........





என் அன்பே ஆருயிரே நீ இல்லேன்னா ????








வண்டலூர் ஜூ இல்லே !!!!

காதலி:

நீயும் ஒரு காதலனா ???

வண்டலூரில் இருக்கும் என்னை எப்படியடா காதலித்தாய்??

அங்கேயே உன்னை வெளிக்கொணர்ந்தாய் நீயும் வண்டலூர் வரவுன்னு??

டிஸ்கி: இதை யார் மனதையும் புண் படுத்த அல்ல சும்மா ஒரு தமாசு அவ்வளவுதான்.

Thursday, January 22, 2009

வைகைப்புயலும் / சின்னக்கலைவாணரும்

வைகை: அப்பாடா ஒருவழியா சந்தைக்கு போயிட்டு வந்தாச்சு. இன்னைக்கு தான் மாமா சொன்ன வேலையை சரியா செஞ்சிருக்கோம். இன்னைக்கு மாமாவும் திட்டாது, அக்காவும் திட்டாது. நிறைய நேரம் இருக்குதே. வீட்டுக்கு இவ்வளவு சீக்கிரமாவா போறது? கையிலே வேறே நிறைய பணம் இருக்கு. சரி போய்டலாம். எதுக்கு வம்பு. ஆனா சந்தையிலே அலைஞ்சதுலே தலைய வேறெ வலிக்குதே. ம்ம்ம் ஆ அதோ ஒரு டீ கடை இருக்கே. அங்கே போயி ஒரு சிங்கிள் டீ அடிச்சாதான் தலை வலி போகும். என்னா, இந்த கடையிலே ஒரே கூட்டமா இருக்கு! சரி, வெறும் டீ மட்டும்தானே! பெஞ்சியிலே ஒக்காரா எடம் கெடைக்குமா? முயற்சி பண்ணலாம். டேய், கொஞ்சம் தள்ளி உக்காரு.

சீனி: என்னா டேயா? உடம்பு எப்படி இருக்கு? பேரு தெரியாது. அத வச்சு கூப்பிடு.

வைகை: இதென்னடா! வந்த இடத்திலே தலை வலி போயி திருகு வலி வந்திடும் போல இருக்கே! வேலு, கொஞ்சம் அடக்கி வாசி. சரிடா சீனி, கொஞ்சம் தள்ளி உக்காரு. அண்ணனுக்கு உடம்பு சரி இல்லை.

சீனி: என்னாது மறுபடியும் 'டாவா'? மரியாதையா பேசு. இல்லேன்னா கை கால் இடம் மாறிடும்.

வைகை: ஆத்தி கை காலை எடம் மாத்திடுவியா? எப்பிடி நடப்பேன், எப்படி டீ குடிப்பேன்? அது சரி, இவனுக மாதிரி ஆளுங்க கிட்டே தைரியமா பேசணும். நீ என்னாடா கசாப்பு கடையிலையா வேலை செய்யறே? என்னைய பாத்தா வேறெ மாதிரி தெரியுதா? ஏண்டா? எல்லாரும் தப்பு தப்பா பேசறீங்க?

சீனி: உக்காந்து தொலை .

வைகை: கொஞ்சம் இடம் கிடைச்சிடுச்சு. எவனுக கிட்டேயும் சிக்காம சீரளியாமே இன்னக்கு நேரத்தை ஓட்டனும்.

சின்னக்கலைவாணர்: என்னா எல்லாரும் இங்கே வந்து டேரா போட்டு இருக்கீங்க. எது மேலேயோ எதுவோ மொய்க்கிற மாதிரி. ஒரு அடுப்பு, அது மேலே ஒரு பாத்திரம், இரெண்டு பேப்பர், இரெண்டு பெஞ்சி இது இருந்தா போதும், வந்து உக்காந்திருவீங்களே!வாசு, உனக்கும் வேலை வெட்டி எதுவும் கிடையாதா? இங்கே என்னா பண்ணறே?என்னா குடிக்கிறே?

வாசு: ம்ம் கண்ணு தெரியலை ராவாவா அடிக்கறேன்? டீ தானே குடிக்கிறேன். வந்தோமா வேலையை பாத்தோமான்னு இருக்கணும். வெட்டி வம்பு இழுக்கக் கூடாது.

சின்னக்கலைவாணர்: வாசு, நீ ரொம்ப பேசிட்டே. படிப்பு வருதோ இல்லையோ பேச்சு நல்லா வருது. தள்ளி உக்காரு. என்னாது கையிலே. தினத்தந்தி பேப்பரா?

வாசு: இல்லே தினமலர். என்னோடது இல்லே, அந்த அண்ணா கொடுத்தாரு.

சின்னக்கலைவாணர்: சரி சரி அடங்கு யாருதா இருந்தா என்னா. கொஞ்சம் இப்படி குடு. ஆ ஐயோ!! என்னடா இது? தாம்பரத்திலே தாலி / செயின் இரண்டையும் அறுத்துட்டாங்களா? குரோம்பேட்டைலே கத்தி குத்தா? பல்லாவரத்திலே முகம் தெரியாத பாடி கிடக்குதா? மொதல்ல ரெண்டும் சரி எப்படியாவது கண்டு பிடிச்சிடுவாங்க. பல்லாவரம் கேசு எப்படி? முகம் அடையாளம் தெரியாமே பாவம் நம்ப போலிசு. அடுத்து என்னா, என்னாது பெரம்பூரில் பிரபல ரவுடி Encounter இல் சுட்டு கொல்லப்பட்டான். இது சரியான தீர்ப்பு.

வாசு: என்னா ஒரே அதிர்ச்சி அடையற மாதிரி நடிக்கரே, படிச்சது போதும்! பேப்பரை குடு. மத்தவங்க படிக்கவேணாம்?

சின்னக்கலைவாணர்: என்னாடா எல்லாருமே ஓசி பேப்பர் படிக்கத்தானே டீ கடைக்கு வரானுங்க. நானும் அதுக்குதான் வந்திருக்கேன். கொஞ்சம் பொறு. படிச்சிட்டு தரேன்.

வாசு: வேணாம் எனக்கு ரொம்ப கோவம் வரும். அழிச்சாட்டியம் பண்ணாதே. இதோ அங்கே இருக்காரே அவருதான் மொதல்லே இந்த பேப்பரை கையிலே எடுத்தாரு. அதுக்குள்ளே ஒவ்வொருத்தரா படிச்சிகிட்டே போறாங்க. அவருக்கு கொடுக்கத்தான் நான் கையிலே வச்சிருந்தேன். கொடு, அவரு கிட்டே குடுத்திடலாம்.

சின்னக்கலைவாணர்: என்னாடா மறுபடியும் சொல்லறேன் இது ஓசி பேப்பர் யாரு வேணாலும் படிக்கலாம். கொஞ்சம் இரு. முக்கியமான செய்தி.

வாசு: அண்ணே இவரு பேப்பர் தர மாட்டேங்கிறாரு.

சின்னக்கலைவாணர்: என்னாடா மெட்ராஸ் சிட்டிலே அட்ராசிட்டி பன்னரவங்களை படிக்கலாம்னு வந்தா நீ ரொம்ப டார்ச்சர் பண்ணறியே?

வைகை: என்னா எதிர்லே இருக்குற பெஞ்சிலே ஒரே சத்தமா இருக்கு. யாரு அது பேசிகிட்டே இருக்காங்க. ம்ம்ம்ம்.... யாரு அவன் எதிரிலே உக்காந்து இருக்கிறவன், ம்ம் ஐயோ ஆத்தி இவனா? அன்னைக்கே நம்பளை தேவை இல்லாமே அடி வாங்க வச்சிட்டானே. சரி தெரியாத மாதிரி இருந்துக்கரலாம்.

சேது: ஏண்ணே, ஒருமாதிரி இருக்கீங்க?

வைகை: சும்மா இருடா, ஒரே நொயிய் நொயிய்ன்னுகிட்டு.

வைகை: தலைலே துண்ட போட்டு மூடிக்கிரலாம். சுத்தி சுத்தி பாக்கறானே. நாம்ப இங்கே இருக்கிறது தெரிஞ்சிருக்குமோ? ம்கும் பாக்கரானோ? பாத்தா அப்படியும் தெரியலை. அப்பப்பா, அந்த பக்கம் சீனி, இந்த பக்கம் சேது போட்டு இடிச்சி தள்ளுறாங்க. சேது கொஞ்சம் தள்ளி உக்காருப்பா. அண்ணனுக்கு கால் ஒரு பக்கமா வலிக்குது.

சின்னக்கலைவாணர்: இந்தாடா பேப்பேர், சரி எனக்கு ஒரு டீ குடுங்கோ, டீக்கு காசு கொடுக்க எவனாவது இருக்கானா. ஒரு மூஞ்சியும் தெரிஞ்ச மாதிரி இல்லையே. சரி குடிச்சி முடிக்கறதுகுள்ளே மாட்ட மாட்டானுங்களா என்னா. ஆமா எதிரிலே யாரு தல மேலே துண்டு போட்டுக்கிட்டு. அட நம்ம வேலு. பாத்துட்டு பாக்காத மாதிரி நடிக்கிறானே. சரி ஒரு ஆளு கிடைச்சிட்டான். சீக்கிரம் டீ குடுங்கடா, அவன் போறதுக்குள்ளே மடக்கனும்.

சேது: ஏண்ணே தலையிலே துண்ட போட்டு மூடறீங்க?

வைகை: ம்ம் தலையிலே செரங்கு. அப்படியே விட்டா ஈ மொய்க்கும். அதான் மூடறேன். வாயை மூட்றா. நான் என்னா செஞ்சா உனக்கு என்னா போச்சு. வந்து எவ்வளவு நேரம் ஆகுது, டீ தர மாட்டேங்கிறானேன்னு தவிச்சு கிட்டு இருக்கேன். இதுலே கேள்வி கேட்டு அறுக்கறே.

சேது: ஏண்ணே கோவிச்சுக்கிரீங்க மேலுக்கு நல்லா இல்லையா? இந்த நேரத்துலே எங்கே போயிட்டு வரீங்க.

வைகை: ம்ம்ம் சந்தைக்கு (அன்பா கேக்கரான தெனாவெட்டா கேக்கரான. ஒருத்தனையும் எடை போட முடியலை) .

சேது: ஏதாவது யாவரமா அண்ணே?

வைகை: ஆமா பத்து கோழி, பத்து ஆடு வித்துட்டு வரேன் போதுமா. இல்லே இன்னும் ஏதாவது தெரியனுமா. வந்துட்டானுக.

சேது:
அண்ணே ஆடு என்னா விலைக்கு வித்தீங்க? கோழி என்னா விலைக்கு வித்தீங்க?

சின்னக்கலைவாணர்: எனக்கு தெரிய கூடாதுன்னு தலையிலே துண்டு ம்ம்... நான் யாருடா. இரு உன் துண்டு இப்போ நான் வெக்கற வேட்டுல பறக்குது பாரு. என்னா பக்கத்திலே பரிவர்த்தனை பண்ணறான். கொஞ்சம் ஒட்டு கேட்டு வெப்போம். எதுக்கும் உதவும்.

வைகை: ம்ம்ம்... ஆடு ஒன்னு ரூவா 2500ன்னு பத்து ஆடும், கோழி ஒன்னு ரூவா 850ன்னு 10 கோழியும் வித்துட்டு துட்டை எடுத்துகிட்டு வந்திருக்கேன். அதுக்கு என்னா இப்போ?

சின்னக்கலைவாணர்: அட இவ்வளவு பணத்தோட இவனை வீட்டுக்கு அனுப்பலாமா? அது சரியாகுமா? ஆகவே ஆகாது. டீ கடைக்காரரே உன்னோட பாக்கியும் தரேன். ஸீ பாய்ஸ் லுக் அட் மீ, இன்னைக்கி உங்க எல்லாருக்கும் என்னோட treat. என்னா வேணாலும் வாங்கி சாப்பிடுங்க. எல்லாத்துக்கும் நானே பணம் பைசல் பண்ணிடறேன். சீக்கிரம் டீ குடு. கை நம நமங்குதே.

சேது:என்னாண்ணே! இவ்வளவு அசால்டா துட்டு வச்சிருக்கேன்னு சொல்லறீங்க. காலம் கெட்டு கெடக்குது. ஆமா துட்ட எங்கே வச்சிருக்கீங்க?

வைகை : நான் எங்கே வச்சிருந்தா உனக்கு என்னாடா? வயசுக்கு தகுந்த மாதிரி பேச்சு இருக்கணும் சரியா. என்னாதிது கை தன்னால பணம் இருக்குற இடத்துக்கு போகுது. அதெ இந்த பயபிள்ளே வேறே பாக்கறானே. ஒன்னும் இல்லேடா கொஞ்சம் அரிக்குது. அதான் சொரியறேன்.

சேது: நான் ஒன்னும் கேக்கலையே அண்ணே (மனசுக்குள்ளே - அண்ணே. பணம் அங்கே தான் வச்சிருக்கீங்களா?)

வைகை: ஏண்டா குறுகுறுன்னு பாக்கறே?

சேது: ஒன்னும் இல்லேண்ணே சும்மாதான் பாத்தேன்.

சின்னக்கலைவாணர்: ஹல்லோ வேலு, இங்கே பாரு நாந்தான் உன் நண்பன். என்னா பாத்தும் பாக்காத மாதிரி உக்காந்து இருக்கே?

வைகை: ஆஹா கண்டு பிடிச்சிட்டானே, இப்போ என்னா செய்யலாம்! ம்ம்ம்... இங்கனக்குள்லேயே திரும்பி உக்காரலாம்.

சின்னா அண்ட் கோ: ஒரு கூட்டம் சின்ன கலைவாணரை நோக்கி வேகமாக வருகிறது.

சின்னக்கலைவாணர்: வாங்க வாங்க டீ சாப்பிடவா வந்தீங்க? உங்களுக்கு உக்கார சீட் இல்லே ஆனா டீ இருக்கு. உங்களுக்கும் சேர்த்து நானே காசு கொடுக்கிறேன். சாப்பிடுங்க சாப்பிடுங்க.

சின்னா அண்ட் கோ: எங்களுக்கே டீ கொடுக்கிறியா? அல்வா தான் குடுக்கத் தெரியும்னு நினைச்சோம்.

சின்னக்கலைவாணர்: யார்ரா நீங்க? அது சரி இதெல்லாம் ஏன் என்கிட்டே பேசறீங்க. டீ குடிக்க வந்தா டீ குடிச்சிட்டு போகாம? என்னாங்கடா? கூட்டமா வந்தா நான் பயந்திடுவேனா? எண்ணி 10 Days தான் அப்புறம் நான் இருப்பது எங்கே தெரியுமா?

சின்னா அண்ட் கோ: எங்கேடா இருப்பே? காயலாங் கடையிலே தான் இருப்பே! அது தெரியுமா உனக்கு?

சின்னக்கலைவாணர்: டேய்! என்னாங்கடா, நானும் வந்ததிலே இருந்து பாக்கறேன். ஏதோ பேசிகிட்டே இருக்கீங்க? இன்னைக்கு தான் நான் இங்கே. அடுத்த வாரம் நான் அமெரிக்காலே இருப்பேன். போங்க போங்க யாருன்னு தெரியாமே விளையாட்டு வச்சிக்காதீங்க.

வைகை: அப்போ இன்னைக்கி நான் தப்பிச்சேனா? அவன் மாட்டிகிட்டானா? இனிமே துண்டு எதுக்கு. சேது தள்ளி உக்காரு. இப்போ தான் ஜமா களை கட்டுது. நீயும் வேடிக்கை பாரு. அவனை பொரட்டி எடுக்கப் போறாங்க.

சேது: யாருண்ணே அது?

வைகை: அவனை எனக்கு கொஞ்சமா தெரியும் அவ்வளவுதான். ஆனா ரொம்ப தெரியாது. இந்த பதில் இப்போ போதும் உனக்கு. பேசாமே வேடிக்கை பாரு.

சேது: அண்ணே தெரியும்னு சொல்லிட்டு ஏண்ணே சும்மா உக்காந்து இருக்கீங்க? போயி அந்த கூட்டத்தை என்னான்னு கேளுங்க. அவங்களை பாத்தா ரொம்ப பயந்து வருது.

வைகை: டேய் சும்மா இரு. என்னை யாரு கிட்டேயும் கோத்து விடாதே. இன்னைக்கு நான் ஒழுங்கா வீடு போயி சேரனும்.

சின்னக்கலைவாணர்: இதோ எதிரிலே உக்காந்து இருக்காரே அவரும் என் நண்பர் தான். அவரு பேரு வேலு. அவருகிட்டே என்னை பத்தி கேட்டு பாருங்கடா. எடுங்கடா என் தோள் மேலே இருந்து கையை. கன்ட்ரி ப்ரூட்ஸ்.

வைகை: ஆத்தி! விதி வில்லங்கமா இல்லே வேலை செய்யுது. ஏண்டா ஏண்டா என்னைய எல்லாரும் அப்படி பாக்குறீங்க. உங்களுக்கும் அவனுக்கும் என்னா பிரச்சனயோ அதை பேசி தீத்துக்குங்க. என்னைய அப்படி எல்லாம் பாக்காதீங்கடா.

சின்னா அண்ட் கோ: என்னடா நீ எங்க கிட்டே பணம் வாங்கினே. அமெரிக்கா போனவுடன் டாலர் அனுப்பறேன்னு சொன்னே. ஆனா உன்னைய பாத்தா அமிஞ்சிகரையே தாண்ட மாட்டே போல இருக்கு. பணமும் வரலை வட்டியும் வரலை. கண்டுக்கலாம்னு வந்தா, எவனையோ கை காட்டறே.

வைகை : கேளு! கேளு! நல்லா கேளு! ஏலே அங்கிட்டு திரும்பி நாக்கை பிடுங்கிக்கோ. கடன் வாங்கிகிட்டு என் நண்பன்னு சொல்லி கிட்டா திரியறே.

சின்னா அண்ட் கோ: அவனை பாத்தா ஆடு திருடின கள்ளனாட்டமா முழிக்கிறான். கூட்டமா அலையறீங்களா?

சேது: அண்ணே இவரு ஆடு திருடலை. ஆடு வித்துட்டு வந்திருக்காரு.

வைகை: டேய் இதை அவன் உங்கிட்டே கேட்டானா. ஏண்டா தேவை இல்லாம இதெல்லாம் சொல்லறே. ஆரம்பம் ஆயிடுச்சா. ம்ம்.. இன்னைக்கு அவ்வளவுதான்!!!!

சின்னா அண்ட் கோ: ஒ அப்படியா!! என்னா இதெல்லாம் ??

சின்னக்கலைவாணர்: இல்லே நான்தான் பத்து ஆடு குடுத்து சந்தையிலே வித்துட்டு வரச்சொன்னேன். கோழி கூட விக்க சொன்னேன். அந்த பணத்திலே தான் உங்களுக்கும் குடுத்திட்டு டீ கடைக்கு செட்டில் பண்ணிட்டு அமெரிக்கா போகணும். அவன் கொடுத்துடுவான் போயி அவன் கிட்டே வாங்கிக்கங்க.

வைகை: இவ்வளவு வெவரம் அவனுக்கு எப்படி தெரிஞ்சிது. ஆத்தி மாமா வெட்டி ஊறுகா போட்டிடுவாறே! தலைய வலிக்கிதுன்னு ஒதுங்கினேன். இங்கே ஒரு சனி ஒதுங்கும்னு தெரியாம போச்சே! எல்லாம் போச்சே! எல்லாமே போச்சே!!

சின்னா அண்ட் கோ: டேய் எட்றா பணத்தை

வைகை: ம்ம்... ஏன் மிரட்டறீங்க. என் கிட்டே பணம் இல்லே.

சேது: அண்ணே! பணத்தை அண்ணன் டவுசருகுள்ளே முடிஞ்சி வச்சிருக்காரு

வைகை: படு பாவி, ஏண்டா காட்டி குடுக்குரே

சேது: பாவம்ண்ணே உங்க நண்பர் குடுத்துடுங்கண்ணே!

வைகை: யாரு வீட்டு பணத்தை யாருகிட்டே கொடுக்க சொல்லறே?இதுக்குதான் வெவரம் கேட்டியா? வாடா, உன்னைய ஒரு நாள் வெச்சிக்கறேன்!

சின்னா அண்ட் கோ: பணத்தை எட்றா மொதல்லே.

சின்னக்கலைவாணர்: வேலு குடுத்திருடா, நான் கண்டிப்பா திருப்பி தந்துடறேண்டா.

வைகை: ஆத்தி இது எங்க அக்கா பணம். எங்க மாமா அவ்வளவுதான்!

சின்னா அண்ட் கோ: என்னங்கடா டிராமாவா போடறீங்க. பிடிடா அவனை. துட்டை எடுடா. ம்ம்ம்... என்னடா பணம் குறையுதே. தகிடு தத்தம் வேலை பண்ணறியா? நீ வாங்கின பணம் முழுவதும் இல்லே. ஆமா அன்னைக்கி என்னா திட்டினே?

சின்ன கலைவாணர்: என்னா திட்டினேன்! எப்போ திட்டினேன்! ஒண்ணுமே புரியலையே!

சின்னா அண்ட் கோ: நல்லா யோசி பனியன் போட்ட....

சின்னக்கலைவாணர்: பனியன் போட்ட சனியனுங்களான்னு சொன்னேன் அது வேறே ஆளுங்க இல்லே, அதுவும் நீங்களாடா???

சின்னா அண்ட் கோ: அதுக்கு இன்னொரு நாள் வந்து கவனிச்சிக்கறோம். மீதி எப்போ தாரே?

சின்னக்கலைவாணர்: வேலு மீதி எப்போ கொடுக்கலாம்?

வைகை: மீதியா! ஏண்டா பீதியை கிளப்பரே, உன் சகவாசமே எனக்கு வேண்டாம். நான் உன் நண்பனே இல்லே!

Wednesday, January 21, 2009

ரம்யா வந்துட்டேன் !!!!




வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன்!!!

சிறு இடைவெளிக்கு பிறகு வந்திட்டேன்
நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க???

தெரியும் எல்லாரும் என்னைய மறந்து போய்ட்டீங்க
இருக்கட்டும் இருக்கட்டும் உங்களை எல்லாம் நல்லா கவனிச்சுக்கிறேன்.

பொங்கல் நல்லா சாப்பிட்டீங்களா?
எனக்கும் சேர்த்து நல்லா சாப்பிட்டு இருப்பீங்க
அதான் தெரியுதே !!!

இப்போ போயி அப்புறம் வரேன்.

Thursday, January 8, 2009

வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்

ஏலகிரி மலையில் நான் கண்டு களித்தது சில எனது நண்பர்களான உங்களின் பார்வைக்கு


மாலை பொழுதின் மயக்கத்திலே
மறையும் ஆதவன் அழகினிலே
மயங்கி நின்றேன் மலைமேலே
மதியை பார்த்து மயங்கிய
ஆதவனோ மறைகிறான்
மலைகளுக்கிடையே
வெட்கிய ஆதவனை க்ளிக்கியது நாங்க.

மக்களையும் மரங்களையும் பனி என்ற ஜில் அரக்கன் மறைக்கப் பார்க்கிறான். மலை மேலே இருந்து க்ளிக்கியது.


இது தொலைநோக்கு பார்வையில் உங்களுக்காக கிளிக்கியது


இது ஏலகிரியில் சுற்றி பாக்க வேண்டிய இடங்கள் இதுவும் உங்களுக்காக




நாங்கள் தங்கி இருந்த விடுதியில் வேலை செய்பவர்களின் கைவண்ணம்.



இதுவும் அவங்களோட கை வண்ணம் தான்

இதுவும் அவங்களோட கை வண்ணம் தான்.


இவை எல்லாம் படகுத்துறை வேறு வேறு கோணங்களில் கிளிக்கியது










.
























.







.











மலையரசன் ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும் ஒரு பகுதி.





ஏலகிரியில் உள்ள முருகன் கோயில் நுழைவாயில் பாதுகாவலர் போல யாருன்னு தெரியாமலே கிளிக்கியது.








இதுவும் ஆதவனை மறைக்க மேக கூட்டங்கள் கன்னி முயற்சி
செய்கின்றன .










நண்பர்கள் ஏனோ வெட்கி எதையோ தேடுகிறார்கள் ஒரு வேளை இருவரும் சேர்ந்து இழந்து விட்ட இளமையை தேடுகிறார்கள் போல









போய்க்கொண்டிருக்கும்போது முன்னால் கண்ட பாதையின் அழகு








இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன்.





Monday, January 5, 2009

வைகை புயல் - சினிமா அனுபவம்



வைகை: காலையிலே இருந்து அக்கா ரொம்ப வேலை வாங்கிடிச்சு. இப்பத்தான் வெளியிலே வர முடிஞ்சுது. மணி என்னா ஆத்தி சாயாங்காலம் 5 1/2 மணி ஆகிடிச்சு. இன்னைக்கி வெளி பொழப்பே கெட்டு போச்சே! எவ்வளவு வேலை! சரி, கொஞ்ச நேரம் பொழுதை போக்கிட்டு வீடு போய் சேரலாம். இருக்கறதே கொஞ்ச நேரம் தான்.

மாமா வரதுக்குள்ளே வீடு போய் சேரனும். அதுக்குள்ளே இன்னைக்கி என்னா செய்யலாம்? எது பண்ணாலும் ப்ரிச்சனை வராமா பாத்துக்கணும். (கொஞ்ச தூரத்தில் சுப்பிரமணி சில பசங்களுடன் செல்வது தெரிகிறது) சுப்பிரமணி எங்கே போறான்? கேக்கலாம்.

வைகை: சுப்பிரமணி, ஏலே சுப்பிரமணி, ஏலே சுப்பிரமணி எங்கேடா போறே?

சுப்பிரமணி: ஏண்ணே போகும்போதே எங்கே போறேன்னு கேக்கறீங்க. போற காரியம் அவ்வளவுதான்!

வைகை: கோச்சுக்காதேடா, சொல்லுடா எங்கேடா போறே, நானும் உன் கூட வரேண்டா. டேய் ப்ளீஸ்டா.

சுப்பிரமணி: போங்கண்ணே அன்னிக்கே ஒரு வேலை வாங்கி கொடுத்தேன். அங்கே என்னோட பேரை கெடுத்துட்டீங்க. மறுபடியும் உங்களை என் செட்டுலே சேக்க பயமா இருக்குண்ணே.

வைகை: சேச்சே! அதே மாதிரி இன்னிமே நடக்காதுடா.

சுப்பிரமணி: சரி வாங்கன்னே நாங்க படத்துக்கு போரோம்ண்ணே. யாரு படம் தெரியுமாண்ணே? மக்கள் திலகம் படம் "எங்க வீட்டு பிள்ளை". வரீங்களாண்ணே?

வைகை: சரிடா. உங்க எல்லாத்துக்கும் சேத்து படத்துக்கு நானே சீட்டு வாங்கிடறேன். சரியாடா சுப்பரமணி, சந்தோசமா?

சுப்பிரிமணி: ரொம்ப சந்தோசம்ண்ணே, டேய் அண்ணே நம்ப எல்லாருக்கு சேந்தே சீட்டு வாங்கிடறாராம். வாங்கடா போகலாம். நம்ப படத்துக்கு கொண்டு வந்த காசுக்கு தீனி எதுனாச்சும் வாங்கி திங்க்லாம்டா.

வைகை: என்னா படம் முடிஞ்சி போச்சு, இந்த பயலுகளை ஒருத்தனை கூட காணலை. சரி நம்ப கிளம்பலாம். ரொம்ப நேரம் ஆச்சுன்னா அக்கா பேசும். ஒரே இருட்டா இருக்கே. வாத்தியார் படம் பாத்துருக்கோம், பயப்படக்கூடாது; தைரியமா வீடு போய் சேரனும். நினைப்பை மாத்திக்குவோம். நல்ல படம் பாத்த சந்தோசம் மனசிலே அப்படியே நச்சுன்னு உக்காந்திடுச்சி.

என்னதான் படம் பாத்தாலும் நம்ப தலைவரு படம் பாத்தாலே மனசுக்கு ஒரு தெகிரியம் கூடிப்போகுத்ல்லே. இனிமே ஒரு பய நம்ம கிட்டே வம்பு வச்சிக்க முடியாதபடி நடந்துக்கணும். நான்தான் மக்கள் திலகமா மாறிட்டேன் இல்லே

குரல் : வேலு, வேலு

வைகை: நான் ஆணை இட்டால் அது நடந்து விட்டால் இந்த ஏழைகள்... அப்புறம் என்னா? அட அதுக்குள்ளே மறந்து போச்சா???

குரல் : வேலு, வேலு

வைகை: யாரு யாரோ கூப்பிடறமாதிரி இருக்கு. சேச்சே அதெல்லாம் ஒன்னும் இல்லே. நமக்கு அநியாயத்துக்கு கற்பனை.

குரல் : ஏலே வேலு, என்னடா நான் கூப்பிடறேன் என்னான்னு கேக்காம போறே

வைகை: ஆமா நெசமாலுமே யாரோ கூப்பிடறாங்க. அடி ஆத்தி. (மனசாட்சி) வேலு பயப்படாதே. இப்போதானே தைரியசாலின்னு மெச்ச்கிட்டு வந்தே. MGR ஐ நினைவில் வச்சுக்க. தைரியம் தன்னாலே வந்திடும்.

குரல் : என்னா வேலு? அண்ணன் கூப்பிடறேன். பேசாமே போறே!

வைகை: என்னாது அண்ணனா, சரி கேட்டு வைப்போம். யாரு???

குரல் : நான்தான் வேலு, மாடசாமி அண்ணன்.

வைகை: என்னாது மாடசாமியா? அது பைத்தியம் இல்லே. இங்கே என்னா பண்ணுது. அந்த பைத்தியமும் நம்ப பின்னாடியே வந்திருக்குமோ? இருக்கும் இருக்கும். பைத்தியம் தானே. பாவம் அது மட்டும் எங்கே போகும்? அது இருக்கட்டும, இவனை எப்படி சமாளிக்கறது?

குரல்: என்னா வேலு கூப்பிட கூப்பிட பதில் சொல்ல மாட்டேங்கிறே.

வைகை: இல்லே நான் நெம்ப அவசரமா போய்கிட்டு இருக்கேன். இந்த ராத்திரிய்லே நீங்க ஏண்ணே இந்த பக்கம் வந்தீங்க? உங்க கிட்டே அப்புறமா பேசறேன். எதுக்கு வம்பு. அன்னைக்கே கல்லு எடுத்து அடிக்க வந்தான். வேகமா நடப்போம். எவனா இருந்தா நமக்கு என்னா. இந்த மாடசாமி எவ்வளவுதான் நல்லவனா பேசினாலும் லூசு லூசுதானே இல்லேன்னா ஆயிடும்? ஓடினா தொரத்துவானோ? என்ன ஒன்னும் கணிக்க முடியலையே, சரி வேகமா பாடிகிட்டே நடப்போம்.

குரல்: டேய் நில்லுடா எங்கேடா வேகமா ஓடறே? அதெல்லாம் இங்கே நடக்காது. திரும்பிப்பார்.

வைகை: என்னா மிரட்டறான்? கல்லால அடிச்சாலும் அடிப்பான். எதுக்கும் திரும்பிப்பாத்துடலாம். அக்கா அப்பவே சொல்லிச்சு நேரம் ஆயிடுச்சுடா எங்கேயும் போகாதேடான்னு. கேக்கலை நான் கேக்கலை.

குரல் : என்னா திரும்பமாட்டியா. நானே முன்னே வரேன். இப்போ பார் நான் யார் தெரியுதா?

வைகை: மாடசாமியண்ணே தானே! அதுக்கென்ன ஒரு பில்டப்!!

குரல் : நல்லா பாருடா, நான்தான் மாடசாமியோட அண்ணன் பெரியசாமிடா. என்னை தெரியலை? நல்லா பாரு தெரியும்.

வைகை: மாடசாமி அண்ணனா, இதே மொதல்லே சொல்லமாட்டீங்க. நான் மாடசாமியண்ணனோன்னு நினைச்சி பயந்துட்டேன். சரி நீங்க இங்கே என்னா பண்ணறீங்க?

குரல் : நானா? இந்த எடமே என்னோடத்துதானே? என்னாடா கேள்வி கேக்கறே? நான் இருக்கிற வழியா வந்திட்டு எங்கே இருக்கேன்னா கேக்கறே?

வைகை: என்னா இவனுமா ஆரம்பிச்சுட்டான். ஆமா இவன் இடமா இது, இது என்னா இடம் சரியா தெரியலையே. ஒரே இருட்டா இருக்கே. அண்ணே இது என்னா இடம்ன்னே. உங்க தோட்டமா இது. சாரின்னே, தெரியாம வந்துட்டேன். இதோ போய்டறேன். ஒரே திருட்டு பயமா, அதான் நம்பளையும் திருடன் நினைச்சிட்டார். சரிண்ணே நான் வரேன். என்னா பதிலே காணோம். அண்ணே அண்ணே எங்கேன்னே இருக்கீங்க? எங்கே காணோம். எங்கிட்டாச்சும் போய் இருப்பாரு.

வைகை: என்னா ஒரே மயான அமைதியா இருக்கு. வேலு பயப்படக்கூடாது. மக்கள் திலகம் படம் பாத்தொமில்லே. "நான் ஆணை இட்டால் அது நடந்து விட்டால் இங்கு வேதனை படமாட்டார். உயிர் உள்ள வரை அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்". பாட்டு தப்புன்னு தெரியுது என்னா செய்யறது?? ஓடணுமே கடவுளே நீ எங்கேப்பா இருக்கே? சரி மறுபடியும் கவனத்தை மாத்தலாம், அப்போதான் பயம் குறையும் .

வைகை: அப்பா என்னா மாதிரி பாட்டு அமைஞ்சிருக்கு வாத்தியாருக்கு. அது மாதிரி சாட்டையை எடுத்து சும்மா சொளட்டனும். எல்லா பயலும் ஓடிடுவானுகல்லே. எவ்வளவு பாடினாலும் இன்னும் நம் இடத்திற்கு போக ஒரு அரை மணியாவது ஆகும். எப்படி பயப்படாம போறது? நம்ப பாடற பாட்டே நம்ப பயப்படறதை காட்டி குடுக்குதே! என்னா செய்யலாம்? இந்த பக்கமா வந்திருக்க கூடாதோ? எப்பிடி போறதுன்னே வழி தெரியலியே. எங்கிட்டு பாத்தாலும் ஒரே பயமா வருதே. டேய் வேலு உனக்கு சினிமா தேவையாடா? கண்ணாடிகாரன் லூசுன்னு திட்டற மாதிரியே வந்து மாட்டிகிட்டேனே? இப்படி தனியா பொலம்ப ஆரம்பிச்சிட்டியே வேலு?

வைகை: இந்த மாடசாமியோட அண்ணன் எங்கே போனாரு? ஐயோ இப்போதானே யாவகத்துக்கு வருது. மாடசாமியோட அண்ணன் தூக்கு மாட்டிகிட்டு செத்துட்டாரு இல்லே!ஐயோ கடவுளே, மனுசங்க கிட்டே மாட்டி சின்னா பின்ன மாவது போதாமே பேயி கிட்டேயுமா? நானு இப்போ என்னா செய்வேன்? எங்கே இருக்கேன்னு தெரியலையே? பயமா இருக்கு. சத்தமா பாடிகிட்டே போவோம். எ எ எ ,, என்னா பாட்டு வரமாட்டேங்குது. ஐயோ ஐயோ நான் என்னா செய்வேன். இப்படி தனியா மாட்டிகிட்டேனே. சரி ஓடலாம்.

குரல் : டேய் வேலு எங்கேடா ஓடறே? நில்லுடா.

வைகை: போங்கடா நீங்களும் உங்க மிரட்டலும். நான் ஓடிட்டேன்னில்லே!!!