Wednesday, February 18, 2009

என் சகோதரியின் மீளாச் சோகம்!!!!!!!!!!



என் உடன் பிறந்த சகோதரிக்கு சில வருடங்கள் முன் விரல்களில் மூட்டுக்கு மூட்டு வீக்கமும் வலியும் வந்தது. எனது மாமாவிற்கு முதலில் என்ன வென்று புரியவில்லை.


அருகில் உள்ள மருத்தவரிடம் அழைத்து சென்றிருக்கிறார்கள்.


அவரும் சில மாத்திரைகள் (வலி நிவாரிணி - ப்ரூபென்) கொடுத்து அனுப்பி உள்ளனர். அப்போது வலி ஐம்பது சதவிகிதம் குறைந்ததினால், அடுத்த முறை வலி வந்த போது மறுபடியும் மருத்தவரிடம் சென்ற போதும் அதே மாத்திரியை தொடரச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இந்த விஷயம் எனக்கு தெரியவந்து, வலி நிவாரணி அதிகம் தொடர வேண்டாம், எனக்கு இது சரியாகப் படவில்லை , சரியான மருத்துவரை அணுகச் சொன்னேன். அதனால் உறவினர் ஒருவர் மருத்துவர் அவரிடம் சென்று காண்பித்த போது, நீங்கள் சரியான மருத்துவம் பார்க்கவில்லை என்று அவர் சில மருத்துவக் குறிப்புகளை கொடுத்துள்ளார், வேதனை தாங்க முடியாத என் சகோதரி அதையும் சாப்பிட்டிருக்கிறாள். மறுபடி நான் விசாரித்த போது அதே நிலை தொடர்ந்தது.


எனக்கு சரியான கோபம் என் மாமா மீது வந்தது, அதை காட்டி கொள்ளாமல் உடனே அவர்கள் இடத்திற்கு விரைந்து எனது சகோதரியை சென்னைக்கு அழைத்து வந்தேன். அப்போது என் வாசம் சென்னையில். எனது மருத்த்துவ நண்பர்களிடம் விசாரித்து, முதலில் Ortho சம்பத்த பட்ட மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அவர் நல்ல முறையில் மருத்துவத்தை தினம் தினம் ஒரு மாற்றத்துடன் செய்து வந்தார் (வாக்ஸ், பிசியோ) போன்றவைகளை ஒரு நாளைக்கு இருமுறை செய்தார்கள். இதற்கிடையில் என் சகோதரி இல்லாமல் அவர்கள் குடும்பம் (2 குழந்தைகள், மாமனார், மாமியார் மற்றும் கணவர்) மிகவும் பரிதாபமான நிலையில் இருந்ததால் உடனே அழைத்துச் செல்கிறோம் என்றார்கள்.


இரண்டு மாதங்கள் நான் வைத்து மருத்துவம் பார்த்தேன். சகொதரியின் மாமியாருக்கு மருமகள் தான் எல்லாம் செய்ய வேண்டும். அப்படி ஒரு குணம். ஏதோ நான் ஒரு தவறான செயல் செய்தது போல் என் மீது கோபம். அதன் அடிப்படையில், என்னிடம் மாமா வந்து நான் அழைத்துச் செல்கிறேன். இங்கு மருத்துவரிடம் நாங்கள் என்ன மருத்துவம் தொடர வேண்டும் என்று எழுதி வாங்கிக் கொடு என்றார்கள். எனக்கு உள்ளுக்குள் கோபம், மருத்துவம் முடியும் வரை நானே என் சகோதரியை வைத்திருக்கேன் என்று பல விதத்திலும் கூறிப் பார்த்தேன். கேட்பதாக இல்லை. இதுவே மூத்தவர்கள் யாரேனும் கூறி இருந்தால் கேட்டு இருப்பார்கள் போல. நான் மிகவும் இளையவள். நான் கூறியது எடுபடவில்லை.


சகொதரியின் குடும்பம் தங்கி இருப்பது திருச்சியில். மருத்துவத்தை அங்கு போயி தொடர்ந்தார்கள். இங்கே என் சகோதரிக்கு Steroid (வைசொலின்) ஆரம்பித்திருக்கிறார்கள். இதை சரியான முறையில் (Step By Step) சாப்பிட்டு நிறுத்தவேண்டும் என்று சென்னை மருத்துவர் கூறி இருந்தார். நான் அதை நினைவில் வைத்திருக்கச் சொல்லி தவறாமல் கூறிக் கொண்டிருந்தேன்.


இதற்கிடையே மறுபடியும் அதே மூட்டுக்கு மூட்டு வீக்கமும் வலியும் தாங்க முடியாமல் படுத்த படுக்கையாகிப் போனாள். போகாத இடங்கள் இல்லை, பார்க்காத வைத்தியம் இல்லை.


எங்க மாமா ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்டார். மாமனார், மாமியாருக்கோ என் அக்காதான் தினம் சமயல் செய்து ஆகவேண்டும். அவளோட வலிக்கு அங்கு புரிதல் இல்லாமல் போனது. இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் மனத்தாங்கல் ஆகிப் போயி விட்டது. எவ்வளவு முடியவில்லை என்றாலும் மூன்று வேளையும், நடுவில் எது செய்ய வேண்டுமானாலும் அக்காதான் செய்ய வேண்டும். இதில் நான் கடும் கோபத்தில் இருந்தேன்.


முகம் தெரியாதவர்கள் முடியவில்லை என்றாலே துடித்துப் போய் விடுவோம் இல்லையா??

இதை பார்த்துக் கொண்டு எவ்வாறு இருக்க முடியும்?? முடிவாகத் தெரிவித்து விட்டேன், என் அக்காவை சரியாக கவனித்துக் கொள்ள முடிந்தால் வைத்திருங்கள், இல்லை என்றால் என் அக்கா, எனது அக்காவாக மட்டும் என்னிடம் வரட்டும், நான் காப்பாற்றிக் கொள்கிறேன் என்று தெளிவாக கூறிவிட்டேன்.


இதில் என் அக்காவிற்கும் மிகவும் தெம்பு வந்து விட்டது. அதுவரை அமைதியாக இருந்த என் சகோதரி, தனது வேதனைகளை எப்பிடியாவது தீர்க்க ஒரு வழி கேட்டு பெங்களூரில் ஒரு பிரபல மருத்துவ மணையில் முழுவதுமாக பரிசோதித்து விட்டு, அவர்கள் பங்கிற்கு பல மருந்துகள் கொடுத்து உள்ளார்கள், நாட்கள் நகர, நகர அக்காவால் நடக்க முடியாமல் போனது, உட்கார முடியாமல் போனது.


என்ன வென்று மறுபடியும் xray, scan மருத்துவத்தில் என்ன என்ன உள்ளதோ அவ்வளவும் செய்து விட்டு கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தார்கள். Steroid மாத்திரை அதிகம் சாப்பிட்டதால் எலும்புகள் அனைத்தும் தேய்ந்து விட்டது.


உங்களுக்கு எதுவுமே செய்ய முடியாது. வேண்டுமானால் இடுப்பில் இரண்டு பக்கமும் மாற்று அறுவைச் சிகிச்சை (Hip Replacement) செய்ய வேண்டும் என்று கூறி விட்டார்கள். அதுவும் பதினைந்து வருடம் தான் நன்றாக நடக்க முடியுமாம். அதற்கும் ஒத்துக்கொண்டு, கோவையில் ஒரு பிரபல மருத்துவ மணையில் முதலில் இடுப்பில் ஒரு புறத்தில் அறுவை சிகிச்சை செய்தார்கள். ஒரு புறம் வலி குறைந்தது. அறுவை சிகிச்சை செய்யாத வலது பக்கம், வலி என்றால் அப்படி வலி துடித்துப் போயி விடுவாள்.

மறுபடியும் முதல் அறுவை சிகிச்சை முடிந்து நான்கு மாத இடைவெளியில், இரண்டாவது அறுவைச் சிகிச்சையும் நடந்தது. ஆனால் இந்த முறை போன முறை அவர்கள் கூறியது போல் அக்காவை பாது காத்தும், துடையில் இருந்து விரல்கள் வரை தினம் தினம் வலி அதிகாமாகி போக, நாங்கள் எல்லாம் மருத்துவரிடம் கேட்டால் ஒரு மாதத்தில் சரியாகி விடும் என்று சொல்லுவார்கள். ஒரு மாதம் ஆன பிற்கும் வலி அதிகமானதே தவிர குறையவில்லை. என் சகோதரியோ விரக்தியின் எல்லைக்கே போய் விட்டாள். மாமா கேட்க்கவே வேண்டாம். இதற்கிடையே அதே மருத்துவரிடம் நான் சென்று நேரடியாக பேசினால் ஒன்றும் பிடி கொடுக்க வில்லை. எனக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த மருத்துவர் எதிரில் என் சகோதரி துடிப்பது எங்கள் நெஞ்சே வெடித்து விடும் போல் ஆகிவிட்டது. ஒன்றும் இல்லை, உள்ளே ஏதாவது ரத்தக் கட்டு இருக்கும். இந்த மாத்திரைகளை சாப்பிடுங்கள் என்று கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

ஆனால் அக்காவிற்கு நாளுக்கு நாள் அதிகமானதே தவிர, வலி அடங்குவது போல் தெரியவில்லை. மறுபடியும் படுத்த படுக்கையாகி விட்டாள். எனக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு, ரம்யா என்னை விஷ ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என்று ஒரே அழுகை. என்னால் வலி கொடுக்கும் வேதனை தாங்க முடிய வில்லை அம்மா என்று கதறி விட்டாள். மறுபடியும் படை எடுப்பு, இந்த முறைதான் பெரியமனது செய்து அறுவைச் சிகிச்சை நடந்த இடத்தில் ஸ்கேன் செய்து பார்த்தார்கள்.


அதில் எல்லாருக்குமே நன்றாக தெரிந்தது என்னவென்றால், அறுவை சிகிச்சை முடிந்து எதோ சிமெண்ட் வச்சி பூசுவார்களாம் (இதை படித்து எள்ளி நகையாடுவார்கள் சிலர், (ஆமாம் நான் மருத்துவம் படிக்கவில்லை. நான் இப்படித்தான் என் உணர்வுகளை உணர்த்த முடியும்).


சிமெண்ட் பூசும்போது மூன்று நரம்புகளையும் சேர்த்து வைத்து பூசி விட்டார்கள். இதுவும் சரியாக சொல்லப் படவில்லை. இந்த முறை அவர்கள் போகும் போது என்னால் உடன் போக முடியாத சூழ் நிலையில், மாமா மட்டு தனியாக அக்காவை அழைத்துக் கொண்டு சென்றார்.


உடனே மருத்துவ மணையில் தங்கி இரண்டு நாட்கள் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். மாமா போன முறை வந்த போதே இதை கூறி இருக்கலாமே என்று கேட்டதிற்கு சரியான பதில் இல்லை. அறுவை சிகிச்சை செய்தவர் கண்களில் படவே இல்லையாம்.


இவ்வளவிற்கும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு வருவதை உறுதி செய்தது விட்டுத்தான் சென்றார்கள்.


அறுவை சிகிச்சை செய்தவரை பார்க்க வேண்டும் கேட்டு என்று இருக்கிறார் என் மாமா, அதற்கும் சரியான பதில் இல்லையாம்.


இரண்டு நாட்கள் மருத்துவம் முடித்துக் கொண்டு, நேற்று முன்தினம் தான் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். முதல் அறுவை சிகிச்சை முடிந்த வீட்டிற்கு வரும் சமயம் ஒரு மருத்துவ காப்பீடு செய்து கொள்ளுமாறு கூறி இருக்கிறார்கள். அதன் முழு அர்த்தம் என்ன வென்றால், அறுவை சிகிச்சையால் ஏதேனும் பிரச்சனை வந்தால், அதுவும் ஒரு வருடத்திற்குள், பணம் எதுவும் செலவு செய்யாமல் மருத்துவம் பார்த்து அனுப்பப்படும் என்று கூறி அந்த insurence செய்திருக்கிறார்கள். இப்போது ஆகும் மருத்துவ செலவிற்கு அதை என் மாமா காண்பித்தால், இந்த மருத்துவத்திற்கு செல்லாது. நாங்கள் உள்ளே வைத்துள்ள எலும்பில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மட்டுமே இந்த காப்பீட்டு செல்லும் என்று கூறி இருக்கிறார்கள். என் மாமா எதுவும் பேசாமல் இரெண்டு நாட்கள் தங்கி மீண்டும் மருத்துவம் பார்த்து, கேட்ட பணத்தை கட்டி விட்டு வந்து இருக்கிறார். ஆனால் இன்று வரை என் சகோதரிக்கு குணம் ஆகவில்லை. அவளிடம் எனக்கு எப்படி இருக்கிறாய் என்று கேட்கவே பயமாக இருக்கிறது.


ஆனால் எனக்கு இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நம்மையே இப்படி அலைக்களித்தால், பாமரர்களை எவ்வளவு பாடு படுத்துவார்கள். அவர்களுக்கு யார் நியாயம் கேட்பார்கள். பணம் இருந்தது கட்டி விட்டார்கள். பணம் இல்லாமல் நமக்குத்தான் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வருடம் வரை அது சம்பந்தமாக வரு பிரச்சனைகளை இலவசமாக பார்த்துக் கொள்ளுவார்கள் என்று எதிர் பார்த்து சென்றிருந்தால், அவர்கள் நிலை என்ன?? கடன் வாங்கி வைத்தியம் செய்பவர்களும், வட்டிக்கு வாங்கி வைத்தியம் செய்து கொள்பவர்கள் கதி என்னா??? இதுதான் என் கேள்வி???


அக்காவின் குடும்பம்தானே என்று என்னால் இதை விட முடியாது. இதை தட்டி கேட்க வேண்டும் என்று என் மனம் துடி துடிக்கிறது.

சட்ட ஆலோசக மையம் மற்றும் மனித உரிமை கழகத்திடமும் இதை கொண்டு செல்லப் போகிறேன். நீதி கிடைக்குமா பார்க்கலாம்.


மூவர் தவறு செய்து இருக்கிறார்கள்
===============================
1.முதல் தவறு Steroid Withdrawal --> சரியான முறையில் செய்யவில்லை .

2. தவறான மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ள வைத்தது.

3. அறுவைச் சிகிச்சையின் போது போதிய கவனமின்மை.

இப்போதும் வலியுடன் தான் இருக்கிறாள் என் சகோதரி. மிகச்சிறிய வயதில் இந்த நோய் அவளுக்கு வந்திருக்க வேண்டாம்.

ஏன் இந்த சோதனை, இதுதான் நான் கடவுளிடம் கேட்பது. அக்காவின் குழந்தைகள் அம்மாவின் வேதனையில் தினம் தினம் அழுவதை என்ன சொல்ல.


பின் குறிப்பு:
===========
இந்த பதிவின் நோக்கம், எந்த நோய் வந்தாலும், அதற்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்தை மற்றும் மருத்துவர்கள் கொடுக்கும் சிகிச்சையை வேறு ஒரு மருத்துவரிடமும் மறு பரிசீலனை செய்து கொள்வதில் தவறே இல்லை. இரண்டு கருத்துக்களும் ஒத்துப் போகாவிட்டால், தேவையான் விளக்கம் தரவேண்டும் என்று நிலை உருவாக வேண்டும். அப்போதுதான் நம்மை போல் உள்ள மருத்துவம் சாரா அப்பாவி மக்கள் காப்பாற்றப் படுவார்கள்.

Steroid it’s very dangerous. உடலில் உள்ள எலும்புகள் அனைத்தையும் உருக்கும் சக்தி இதற்கு இருக்கிறது. இது சரியோ, தவறோ என்ற சர்ச்சைக்கு நான் வரவில்லை, என் சகோதரி இந்த மருந்து உட்கொண்டு பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்து, மனம் நொந்து இதை வெளியிடுகிறேன். மருத்துவம் செய்து கொள்பவர்களும் மிகவும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். அப்போதுதான் இது போல் பிரச்சனை வராமல் தடுத்துக் கொள்ள முடியும், நம்மையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.




Tuesday, February 10, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் இந்த தலைப்புல தொடர்பதிவு எழுத சொல்லி நம்ப தாரிணி மேடம் எனை தெரியாம கூப்பிட்டுடாங்க. நான் ஒரு ஒழுங்கீனம்னு அவிகளுக்கு தெரியாது பாவம். எப்படின்னு கேக்கறீங்களா? அவங்க என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்தது Jan'24 தேதி. இன்னைக்கு என்னா தேதி ஆகுது?? இது ஒழுங்கீனம் தானே?
அழைத்த தாரிணி உங்களக்கு ஒரு பெரிய நன்றி.
என்னா எழுதுதறது ஒரே குழப்பம்.

குழம்பி குழம்பி அப்புறமா கண்டு பிடிச்சுட்டேன். யாரு நானு யாரு.. அதானே எனக்கே தெரியலை??

நான் பிச்சிகிட்டு தான் இதை எழுதி இருக்கேன். படிக்கிற நீங்களும் கொஞ்சமா பிச்சுக்கோங்க ப்ளீஸ்!!!
இதுல மூணு பேரை இணைக்கனுமாம். அது வழி வழியாக வளரனுமாம். நான் எழுதருதுன்னு தயார் ஆகிவிட்டேன். நீங்களும் படிக்க தயாராஆஆஅ?

1. செய்யது (மாட்டினே மவனே)
2. அபுஅஃப்ஸர் (ஹா ஹா ஹா)
3. ராகவன் அண்ணா (எழுதிவிடுவார் )

மூணு பேரையும் அவங்க கிட்டே சம்மதம் கேட்காம இணைச்சுட்டேன். திட்டு உண்டு என்று என் மனசாட்சி சொல்லுது. பின்னே என்னாங்க?

எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமே இந்த மாதிரி செய்தது எந்தவிதத்திலேயும் நியாயம் இல்லை தான்.

என்னா செய்யா. விதி வலியது. பிச்சிகட்டும்.

சரி நாம்ப இப்போ விஷயத்துக்கு வருவோம். இந்த சொற்கள் உங்களுக்கு தெரியாம இருந்தா தெரிஞ்சிக்கோங்க.

தெரிஞ்சிருந்தா ரம்யாவை கண்டுக்காமா விட்டுருங்க.

நானும் பிழைச்சி போய்டறேன் சரியா??

இங்கே பாருங்க உங்க விதி எவ்வளவு வில்லங்கமா வேலை செய்யுதுன்னு!!!!!

நடுகற் கோயில் : பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் 'நடுகற் கோயில்' என்று வழங்குவார்கள்.

பள்ளிப்படை: அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது 'பள்ளிப்படை' என்று வழங்கப்படும்.

சைன்யம்: படை . அதாங்க போருக்கு போற படை (நீங்க வேறே ஏதாவது நினைச்சுகாதீங்க)

அந்தகாரம்: இருட்டு

சுளுந்து: நெருப்பை கொளித்தி பிடித்து கொண்டு அந்த காலத்தில் இருட்டில் நடப்பார்கலாம்

கமுக்கம்: ரகசியம்

தொம்பை:அந்த காலத்தில் இதில் நெல், அரிசி போன்றவைகளை சேமித்து வைத்திருப்பார்களாம் .

அட்டாலி: அந்த காலத்தில் தட்டு முட்டு சாமான்களை சேகரித்து வைக்கும் இடம். இதுதான் இந்த காலத்துப் பரண்.

அப்பா ஒரு வழியா முடிச்சுட்டேனுங்க.

பிடிச்சி இருந்தாலும், பிடிக்கா விட்டாலும் நீங்க என்னா எனக்கு ஒட்டு போடாமலா இருக்கப் போறீங்க?

இவ்வளவு நேரம் படித்து தெரிந்து கொண்டதிருக்கு ரொம்ப நன்றிங்க.

சரி நான் வர்ட்டா?? (சூப்பர் ஸ்டார் ஸ்டைல் இதே படிக்கணும் சரியா??)