Tuesday, May 26, 2009

கேள்வியும் பதிலும் ரம்யா!!

என்னை நம்பி இந்தத் தொடர் ஆட்டத்துக்கு அழைத்தவர்கள் நிஜமாவே கொஞ்சம் தைரியம் உள்ளவர்கள்தான்.

பலர் இந்த தொடர் ஆட்டத்தில் தங்கு தடை இன்றி கலந்து கொண்டு வெற்றிவாகையும் சூடி உள்ளனர். இப்போது இருவர் இந்த ஆட்டத்தில் என்னை களம் இறக்கி உள்ளனர்.

அருமையான நண்பர், பாசக்கார நண்பர், அக்கறையான நண்பர், சிறிய வயதானாலும் அபாரமான அறிவைப் படைத்தவர். எந்த தலைப்பைக் கொடுத்தாலும் பிச்சி பிச்சி எடுத்திடுவார். அந்த அளவிற்கு பலவிதமான ஞானங்களைப் பெற்றவர். இது மிகைபடுத்திக் கூறியது அல்ல. செய்யதிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு நான் கூறி இருப்பது நன்றாகத் தெரியும். இவர் நல்ல கதை எழுதக் கூடியவர். மற்றவர்கள் எழுதுவதும் நல்ல முறையில் வரவேண்டும் என்ற நல்ல மனம் படைத்தவர். இன்னும் கூறிக் கொண்டே போகலாம். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் இந்த நண்பரைப் பற்றி ஆராயலாம்.

"என்ன பாசம்தான் காரணம். தங்கச்சியாச்சே... அப்புறம் அவரின் எழுத்துத் திறமை. நேசம் காட்டும் பண்பு... இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம்".

இராகவன் அண்ணாவின் இந்த வரிகளைப் படித்து எனது கண்கள் பனித்துவிட்டன. பாசத்திற்கு நன்றி என்ற சொல் வலுவிழந்து விட்டது அண்ணா!

வலையுலகத்தில் எனக்கு கிடைத்த அருமையான உடன் பிறப்பு. அக்கறையான, அன்பான அண்ணா. வேலைப் பளுவின் காரணமாக நான் இப்போது GMail வருவது இல்லை. நண்பர்களாகிய நாம் தொடர்பு கொள்வதே ஜிமெயில் சாட்டிங் வழியாகத்தானே! தொடர்ந்து சில நாட்கள் என்னை காணவில்லை என்றால் அடுத்து அண்ணாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். என்னம்மா ஆச்சு என்றுகொடுத்த கேக்கும்போதே அந்த குரலில் அன்பு, அக்கறை குழைந்து வரும். இது போல் பல நல்ல உள்ளங்களைக் கொடுத்த இந்த வலைப்பதிவிற்கு நான் மிகவும் நன்றி கூறிக் கொள்கின்றேன்.
எனதருமை நண்பர்களுக்கு என்னோட வேண்டுகோள்

எனக்கு அலுவலக வேலை அதிகமாக இருப்பதாலும்,போதிய நேரமின்மையாலும் எனது நண்பர்களின் இடுகைகளை படிக்க முடியவில்லை. என்னை தவறாக நினைக்காமல் எனது அன்பு நெஞ்சங்களான நீங்கள் என்னை மன்னித்து தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களில் எனது வேலைப் பளு குறைந்துவிடும் பழையபடி உங்கள் ரம்யா வலையுலா வர ஆரம்பித்து விடுவேன் என்று நம்புகின்றேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் தோழர்களே! மற்றும் தோழியர்களே!

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எனக்கு இந்தப் பெயரை வைத்தது எங்க பாட்டி. என்னை ரொம்ப அன்பா வளத்தாங்க. என்னோட ஒவ்வொரு செயலையும் ரசிச்சு அதிலே அமிழ்ந்து இந்தப் பெயரை எனக்கு செல்லமாக வைத்ததாக கூறுவார்கள். நான் இருக்கும் சூழலில் மிகவும் அழகாக வைத்துக் கொள்வேனாம், அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்குமாம் (ரொம்ப பீலா விடறமாதிரி இருக்கு இல்லே?? என்ன செய்ய பாட்டி சொன்னதை நான் அப்படியே இங்கே கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேனே!) அதனால் இந்தப் பெயர் வைத்ததாகவும் கூறுவார்கள். இந்த பெயர் விளக்கம் எனது ஏழாவது வயதில் கேட்டறிந்தது. மறுபடியும் இந்த பெயர் காரணத்தை பின்னோக்கி போகச் செய்த எனதன்பு நண்பர் செய்யதுக்கு மிக்க நன்றி.இந்த பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா??

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கடைசியாக நான் அழுதது! என்னை எனது வலை நண்பர்கள் வீட்டில் சந்தித்துவிட்டு, சென்று வருகின்றோம் என்றார்களே அப்போது அழுதேன் மனதிற்குள்ளே. வெளியே சிரித்தேன். "உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கின்றேன் என்ற பாடல் அன்று எனது வாழ்க்கையில் உண்மையாகிப் போனது இல்லையா நண்பர்களே?? "

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும்! கையெழுத்திற்காக பல பரிசுகள் வாங்கி இருக்கேன். என்னப்பா சிரிக்கிறீங்க? ஐயோ மெய்யாலுமேதான்! (ஆனா இப்ப எப்படின்னு கேக்காதீங்க! எல்லாம் கணினியே நமஹா!)

4.பிடித்த மதிய உணவு என்ன?
ம்ம்ம்.... வத்தக்குழம்பு, அப்பளம், உருளைக்கிழங்கு வதக்கல், கத்தரிக்காய் வதக்கல், தயிர் சாதம் அதனுடன் மாங்கா ஊறுகாய். (இதை எழுதும்போதே பசிக்குதே)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நட்பு உடனே நமக்கு வராதுங்கோ. நண்பர்களின் பேச்சோட தன்மை பொறுத்துதான் நான் நட்பை வளர்த்துக்குவேன். பார்த்தவுடனே பழகிட மாட்டேன். இவர்கள் உனது நண்பர்கள் என்று என் மனது என்று சொல்லுகின்றதோ அன்றில் இருந்து அந்த நட்பை எனது உயிரின் மேலான நட்பாகக் கருதுவேன். மறக்க மாட்டேன். நிறைய சண்டை போடுவேன். அடிக்கடி கோபித்துக் கொள்வேன். இதெல்லாம் என்னோட ஸ்பெஷல் காரெக்டர்! யாருகிட்டேயாவது மேலே கூறி இருக்கும் ஸ்பெஷல் ஐட்டங்களை காண்பித்து இருந்தால் இதை படித்த பிறகு என் மீது கோபம் இருக்காதுன்னு ஒரு அசட்டு நம்பிக்கைதான்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ரெண்டிலேயும் குளிக்கப் பிடிக்கும்!

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களின் பேச்சுக்கேற்ற முகபாவத்தை அதில் ஏற்படும் உணர்வுகளை வெகுவாக ரசிப்பேன்.

அப்புறம் என்ன? நான் பேச ஆரம்பித்துவிடுவேன்ல்லே!! பேசலைன்னா எனக்கு நெஞ்சு வலிக்கும். அதான் நான் எப்போதும் பேசிகிட்டே இருப்பேன். பாவம் என் நண்பர்கள் மற்றும் என் சகோதரி.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் கிட்டே எனக்கு பிடிச்ச விஷயம் கோபம் வந்த அடுத்த நிமிடம், கோபமும் மறந்து போகும், அதன் காரணமும் மறந்து போகும். இந்த எனது உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். பிடிக்காத விஷயம் சிறிய விஷயங்கள் கூட எனது மனதை பாதித்துவிடும். அவ்வாறு இருக்கக் கூடாது என்று நினைத்தாலும் என்னால் அது மட்டும் முடியாது. சில நிமிடங்கள் அமைதியாக இருக்க முயலுவேன் பாதிப்பை மறக்க. அந்த சில நிமிடங்கள் வரை பாதித்தது பாதித்ததுதான். அமைதி ஒரு நல்ல தீர்வை எனக்குக் கொடுக்கும்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எனக்கு சரி பாதி என்கின்ற உறவு இல்லைங்கோ! அதனால் இந்த கேள்வியில் இருந்து தப்பிச்சேன். ஹி ஹி ஹி ஹி!

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என்னை வளர்த்த பாட்டிங்க. ஏனென்றால் இன்று நான் இருக்கும் இந்த நிலைமை அவர்கள் பார்த்தால் ரொம்ப சந்தோஷப் படுவாங்க. அவங்க பெரிய மேதை, புத்திசாலி, தைரியசாலி. அவர்கள் இப்போது என்னை பார்க்க உயிருடன் இல்லையே என்ற வருத்தம் தான்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?வெளிர்நீலம் கலரிலே ஜீன்ஸ் நேவிப்ளூ டி ஷர்ட்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சமா இந்த பதில்களை எழுதிக் கொண்டிருக்கின்றேன். கணினியைதான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். கேட்க ஒன்றும் இல்லை.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு வர்ணமாக மாற ஆசை.

14.பிடித்த மணம் ?
மல்லிகையின் மணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
எல்லோருமே எனதருமை நண்பர்கள்தான். அதில் சிலரைத்தான் நான் இங்கு அழைத்திருக்கின்றேன். மற்றவர்களை மீதி உள்ளவர்கள் அழைக்கட்டும் என்ற ஒரு நல்ல எண்ணம்தான். என் மீது மிகவும் அக்கறை கொண்டவர்கள். எனது உயர்வில் பங்கேற்பவர்கள். எனக்கு எல்லா நேரத்திலும் உறுதுணையாக இருப்பவர்கள். இப்படி கூறிக் கொண்டே போனால் எவ்வளவு வேண்டுமானாலும் கூறலாம். அதற்கு முடிவே இல்லை.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அ.மு.செய்யது மற்றும் இராகவன் நைஜீரியா
இருவரின் எல்லா பதிவுகளுமே எனக்கு மிகவும் பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?
நான் கல்லூரியில் வாலிபால் விளையாட்டிலே பெரிய பிஸ்தா(பீலா இல்லே உண்மைதான்). பிடிச்சதுன்னு ஒன்னும் இல்லை. எல்லாமே பிடிக்கும்.
18.கண்ணாடி அணிபவரா?
ஆமாம்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைச்சுவை மிக்க படங்கள்தான் ரொம்ப பிடிக்கும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன் (எனக்குப் பிடிக்கவே இல்லை. அந்த படம் பார்த்து ஒரு வாரம் தூங்கவே இல்லை)

21.பிடித்த பருவ காலம் எது?
இளவேனிற் காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போ எந்த புத்தகமும் படிக்க நேரம் இல்லைங்க. ஆனா எனதன்புத் தோழி அமிர்தவர்ஷிணி அம்மா பரிசாகக் கொடுத்தது சிவசங்கரி அம்மா எழுதின "சிறு கதை தொகுப்பு" என்ற புத்தகம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்துக் கொடுள்ளேன்.
23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
படமே வைப்பதில்லைங்க. வைத்தால்தானே மாற்றுவது!

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் நான் பாடுவது. (என்ன செய்ய மற்றவர்கள் சொல்ல மாட்டாங்க அதான் நானே சொல்லிக்கறேனாக்கும்). பிடிக்காத சத்தம் யாராவது சத்தமா சண்டை போட்டால்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் நானே தொடர்ந்து பேசுவது.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தவறு என்று தெரிந்தும் அதைத் தொடர்ந்து யாராவது செய்தால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அப்படி எதுவும் எனக்குள்ளே இருப்பது போல் எனக்கு தெரியவில்லையே.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அடிக்கடி செல்ல நினைப்பது கொடைக்கானால்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
மதர் தெரிசாவில் ஒரு ரவை அளவு இருக்கவேண்டும் என்று ஆசை.

31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
கணவன் என்கின்ற உறவு எனக்கு இல்லை. அப்படி கூட செய்வாங்களா? (கணவருக்குத் தெரியாமல்). அப்படி இருந்திருந்தால் தெரியாமல் எதுவுமே செய்ய மாட்டேன். 50/50 என்ற ஆன பிறகு மறைப்பதில் அர்த்தம் இல்லை அல்லவா? இது எனது சொந்த கருத்து. மறைக்க ஆரம்பித்தால் குழப்பம்தான் அதிகமாகும். இது இரு பாலாருக்கும் பொருந்தும். மறைத்து வாழ்ந்தாலும் உண்மையான வாழ்வு என்னவாகும்? நினைத்தாலே பயமா இருக்கு.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வு! அது ஒரு அழகான காவியம். ரசனையுடனும், புரிதலுடனும் வாழ்ந்தால் வாழ்வு ஒரு சொர்க்கம். இதுதான் வாழ்வு பற்றி என்னோட கணிப்பு.
தொட‌ர்ப‌திவுக்கு நான் அழைப்ப‌து
============================

309 comments :

1 – 200 of 309   Newer›   Newest»
sakthi said...

me the firstuuuuuuuuuuu

sakthi said...

இருங்கப்பா படிச்சிட்டு வரேன்

கும்மி ரொம்ப நாள் ஆச்சு ரம்யா

sakthi said...

நான் இருக்கும் சூழலில் மிகவும் அழகாக வைத்துக் கொள்வேனாம், அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்குமாம் (ரொம்ப பீலா விடறமாதிரி இருக்கு இல்லே?? என்ன செய்ய பாட்டி சொன்னதை நான் அப்படியே இங்கே கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேனே!) அதனால் இந்தப் பெயர் வைத்ததாகவும் கூறுவார்கள்

நிஜமாவா???

so sweet

நசரேயன் said...

me too in

RAMYA said...

ஹாய் சக்தி நல்ல இருக்கீங்களா??

RAMYA said...

//
நசரேயன் said...
me too in

//

வாங்க நெல்லைப் புயலே!!

RAMYA said...

நெட் சரி இல்லே ஒரே problem அட்ஜஸ்ட் கூட செய்ய முடியலை ஒரே டென்ஷன்!!

sakthi said...

கையெழுத்திற்காக பல பரிசுகள் வாங்கி இருக்கேன். என்னப்பா சிரிக்கிறீங்க? ஐயோ மெய்யாலுமேதான்! (ஆனா இப்ப எப்படின்னு கேக்காதீங்க! எல்லாம் கணினியே நமஹா!)

நம்பிட்டோம்

நசரேயன் said...

//தலைப்பைக் கொடுத்தாலும் பிச்சி பிச்சி எடுத்திடுவார்.//

என்ன பிச்சி.. பிச்சி ரம்யா???

sakthi said...

நசரேயன் said...

me too in

நசரேயன் அண்ணா நலமா??

sakthi said...

வத்தக்குழம்பு, அப்பளம், உருளைக்கிழங்கு வதக்கல், கத்தரிக்காய் வதக்கல், தயிர் சாதம் அதனுடன் மாங்கா ஊறுகாய். (இதை எழுதும்போதே பசிக்குதே)

ஆஹா போதுமா

நசரேயன் said...

//"என்ன பாசம்தான் காரணம். தங்கச்சியாச்சே... அப்புறம் அவரின் எழுத்துத் திறமை. நேசம் காட்டும் பண்பு... இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம்".//

சொல்லிகிட்டே ஊட்டி போறீங்களா ???

sakthi said...

இவர்கள் உனது நண்பர்கள் என்று என் மனது என்று சொல்லுகின்றதோ அன்றில் இருந்து அந்த நட்பை எனது உயிரின் மேலான நட்பாகக் கருதுவேன். மறக்க மாட்டேன். நிறைய சண்டை போடுவேன். அடிக்கடி கோபித்துக் கொள்வேன். இதெல்லாம் என்னோட ஸ்பெஷல் காரெக்டர்!

சேம் ப்ளட்

கை கொடுங்க ரம்யா

நசரேயன் said...

//நசரேயன் said...

me too in

நசரேயன் அண்ணா நலமா??//

நலம், இன்னைக்கு பூ லான் தேவி கடைப்பக்கம் தான் யாவாரம்

நசரேயன் said...

//இராகவன் அண்ணாவின் இந்த வரிகளைப் படித்து எனது கண்கள் பனித்துவிட்டன. பாசத்திற்கு நன்றி என்ற சொல் வலுவிழந்து விட்டது அண்ணா!//
அது என்ன புயலா வலுவிழக்க??

sakthi said...

பேச்சுக்கேற்ற முகபாவத்தை அதில் ஏற்படும் உணர்வுகளை வெகுவாக ரசிப்பேன்.
அப்புறம் என்ன? நான் பேச ஆரம்பித்துவிடுவேன்ல்லே!!

அது

ரசித்தேன் இந்த பதிலை

sakthi said...

என் கிட்டே எனக்கு பிடிச்ச விஷயம் கோபம் வந்த அடுத்த நிமிடம், கோபமும் மறந்து போகும், அதன் காரணமும் மறந்து போகும்.

அவ்வளவு நல்லவுகளா நீங்க
நம்ப முடியலை தாயி

நசரேயன் said...

//வலையுலகத்தில் எனக்கு கிடைத்த அருமையான உடன் பிறப்பு. அக்கறையான, அன்பான அண்ணா. வேலைப் பளுவின் காரணமாக நான் இப்போது GMail வருவது இல்லை. நண்பர்களாகிய நாம் தொடர்பு கொள்வதே ஜிமெயில் சாட்டிங் வழியாகத்தானே! தொடர்ந்து சில நாட்கள் என்னை காணவில்லை என்றால் அடுத்து அண்ணாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். என்னம்மா ஆச்சு என்றுகொடுத்த கேக்கும்போதே அந்த குரலில் அன்பு, அக்கறை குழைந்து வரும். இது போல் பல நல்ல உள்ளங்களைக் கொடுத்த இந்த வலைப்பதிவிற்கு நான் மிகவும் நன்றி கூறிக் கொள்கின்றேன்.//

கண்டிப்பா அண்ணன் கடைப்பக்கம் வருவாரு, இம்புட்டு ஐஸ் .. சலதோசம் பிடிச்சிக்க போகுது

sakthi said...

நசரேயன் said...

//நசரேயன் said...

me too in

நசரேயன் அண்ணா நலமா??//

நலம், இன்னைக்கு பூ லான் தேவி கடைப்பக்கம் தான் யாவாரம்

ம்ம்ம்

நடக்கட்டும்

நடக்கட்டும்

நசரேயன் said...

//எனக்கு அலுவலக வேலை அதிகமாக இருப்பதாலும்,போதிய நேரமின்மையாலும் எனது நண்பர்களின் இடுகைகளை படிக்க முடியவில்லை. //

கடல்ல தீ அணைக்கிற வேலையா?

sakthi said...

ஏனென்றால் இன்று நான் இருக்கும் இந்த நிலைமை அவர்கள் பார்த்தால் ரொம்ப சந்தோஷப் படுவாங்க. அவங்க பெரிய மேதை, புத்திசாலி, தைரியசாலி. அவர்கள் இப்போது என்னை பார்க்க உயிருடன் இல்லையே என்ற வருத்தம் தான்.

feeling sad for tis da

நசரேயன் said...

//என்னை தவறாக நினைக்காமல் எனது அன்பு நெஞ்சங்களான நீங்கள் என்னை மன்னித்து தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன். //

இதுக்கு நீங்க தேர்தல்ல நிக்கலாம்

நசரேயன் said...

//இன்னும் ஓரிரு மாதங்களில் எனது வேலைப் பளு குறைந்துவிடும் பழையபடி உங்கள் ரம்யா வலையுலா வர ஆரம்பித்து விடுவேன் என்று நம்புகின்றேன்.//

ஏன் வேலைவிட்டு தூக்கப்போரங்களா?

sakthi said...

பிடித்த பருவ காலம் எது?இளவேனிற் காலம்.

அப்படின்னா என்னங்க

இந்த அப்பாவி பொண்ணுக்கு புரியற மாதிரி சொல்லுங்க ரம்யா

RAMYA said...

//
நசரேயன் said...
//தலைப்பைக் கொடுத்தாலும் பிச்சி பிச்சி எடுத்திடுவார்.//

என்ன பிச்சி.. பிச்சி ரம்யா???

//

நல்லா எழுதும் திறமைப் படைத்தவர் என்று அர்த்தம்!

sakthi said...

உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?எனக்கு சரி பாதி என்கின்ற உறவு இல்லைங்கோ! அதனால் இந்த கேள்வியில் இருந்து தப்பிச்சேன். ஹி ஹி ஹி ஹி!

தப்பிச்சுட்டீங்க

வாழ்த்துக்கள் தப்பிச்சவர்க்கு

ஹ ஹ ஹ ஹ

sakthi said...

வெளிர்நீலம் கலரிலே ஜீன்ஸ் நேவிப்ளூ டி ஷர்ட்.

gud combination

sakthi said...

கருப்பு வர்ணமாக மாற ஆசை.

கருப்பு தான் எனக்கும் பிடிச்ச கலரு

நசரேயன் said...

//எனக்கு இந்தப் பெயரை வைத்தது எங்க பாட்டி. என்னை ரொம்ப அன்பா வளத்தாங்க. என்னோட ஒவ்வொரு செயலையும் ரசிச்சு அதிலே அமிழ்ந்து இந்தப் பெயரை எனக்கு செல்லமாக வைத்ததாக கூறுவார்கள்.//

ஹலோ பாட்டி பதிவை படிக்க மாட்டங்க என்கிற தைரியம் ?

RAMYA said...

//
பிடித்த பருவ காலம் எது?இளவேனிற் காலம்.

அப்படின்னா என்னங்க

இந்த அப்பாவி பொண்ணுக்கு புரியற மாதிரி சொல்லுங்க ரம்யா
//

குளிர் காலத்திற்கும் வெயில் காலத்திற்கும் இடைப்பட்ட காலம் ஷக்தி!

நசரேயன் said...

//இந்த பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா?//

ஆமா.. "ரம்" யா

sakthi said...

அயன் (எனக்குப் பிடிக்கவே இல்லை. அந்த படம் பார்த்து ஒரு வாரம் தூங்கவே இல்லை)

அவ்வளவு மோசமா???

RAMYA said...

//
sakthi said...
உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?எனக்கு சரி பாதி என்கின்ற உறவு இல்லைங்கோ! அதனால் இந்த கேள்வியில் இருந்து தப்பிச்சேன். ஹி ஹி ஹி ஹி!

தப்பிச்சுட்டீங்க

வாழ்த்துக்கள் தப்பிச்சவர்க்கு

ஹ ஹ ஹ ஹ
//

ஷக்தி சொன்னா சரியா இருக்கும்!!

நசரேயன் said...

//கடைசியாக நான் அழுதது! என்னை எனது வலை நண்பர்கள் வீட்டில் சந்தித்துவிட்டு, சென்று வருகின்றோம் என்றார்களே அப்போது அழுதேன் மனதிற்குள்ளே. வெளியே சிரித்தேன். "உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கின்றேன் என்ற பாடல் அன்று எனது வாழ்க்கையில் உண்மையாகிப் போனது இல்லையா நண்பர்களே?? "//

ஏன் சாப்பாடு சரி இல்லையா?

RAMYA said...

//
நசரேயன் said...
//இந்த பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா?//

ஆமா.. "ரம்" யா
//

ha ha ha ha

நசரேயன் said...

//ரொம்ப பிடிக்கும்! கையெழுத்திற்காக பல பரிசுகள் வாங்கி இருக்கேன். என்னப்பா சிரிக்கிறீங்க? ஐயோ மெய்யாலுமேதான்! (ஆனா இப்ப எப்படின்னு கேக்காதீங்க! எல்லாம் கணினியே நமஹா!)//

எல்லாம் என் தலை எழுத்து

sakthi said...

பிடித்த சத்தம் நான் பாடுவது. (என்ன செய்ய மற்றவர்கள் சொல்ல மாட்டாங்க அதான் நானே சொல்லிக்கறேனாக்கும்). பிடிக்காத சத்தம் யாராவது சத்தமா சண்டை போட்டால்.

ஒரு ஆடியோ க்ளிப் சேர்த்திருக்கலாம்

நசரேயன் said...

//ம்ம்ம்.... வத்தக்குழம்பு, அப்பளம், உருளைக்கிழங்கு வதக்கல், கத்தரிக்காய் வதக்கல், தயிர் சாதம் அதனுடன் மாங்கா ஊறுகாய். (இதை எழுதும்போதே பசிக்குதே)//

உங்க சமையல் கிடையாது, அதையும் சொல்லுங்க

RAMYA said...

//
sakthi said...
அயன் (எனக்குப் பிடிக்கவே இல்லை. அந்த படம் பார்த்து ஒரு வாரம் தூங்கவே இல்லை)

அவ்வளவு மோசமா???
//

படுக்க வச்சி வயிற்றை அறுக்கராங்களா! அதை பார்த்து எனக்கு ஒரே வாந்தி ஒரு வரமா சாப்பாடே பிடிக்கலைப்பா!

நசரேயன் said...

//நட்பு உடனே நமக்கு வராதுங்கோ.//

தந்தி அடிச்சா வருமா?

sakthi said...

நான் கல்லூரியில் வாலிபால் விளையாட்டிலே பெரிய பிஸ்தா(பீலா இல்லே உண்மைதான்). பிடிச்சதுன்னு ஒன்னும் இல்லை. எல்லாமே பிடிக்கும்.

விளையாட்டு

வீராங்கனைக்கு

வாழ்த்துக்கள்

நசரேயன் said...

//நிறைய சண்டை போடுவேன்.//

அது பதிவிலே தெரியுது

sakthi said...

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?அமெரிக்கா.

ஓ அமெரிக்கா ரிடர்ன் ரம்யான்னு சொல்லுங்க

RAMYA said...

//
நசரேயன் said...
//ம்ம்ம்.... வத்தக்குழம்பு, அப்பளம், உருளைக்கிழங்கு வதக்கல், கத்தரிக்காய் வதக்கல், தயிர் சாதம் அதனுடன் மாங்கா ஊறுகாய். (இதை எழுதும்போதே பசிக்குதே)//

உங்க சமையல் கிடையாது, அதையும் சொல்லுங்க
//

இதெல்லாம் நான் செய்தால் ரொம்ப நல்லா இருக்கும் நசரேயன்
எங்க வீட்டுக்கு உங்க தங்க்ஸ் கூட்டிகிட்டு வாங்க அவங்களுக்கும்
எப்படி செய்யறதுன்னு சொல்லித்தாரேன்!

நசரேயன் said...

//
அவர்களின் பேச்சுக்கேற்ற முகபாவத்தை அதில் ஏற்படும் உணர்வுகளை வெகுவாக ரசிப்பேன். //

ஏன் அடுத்த படத்துக்கு ஹீரோ வாய்ப்பு கொடுக்கவா?

RAMYA said...

//
நசரேயன் said...
//நிறைய சண்டை போடுவேன்.//

அது பதிவிலே தெரியுது
//

அடப்பாவிங்களா நான் எங்கே சண்டைப் போட்டேன்??

RAMYA said...

//
நசரேயன் said...
//
அவர்களின் பேச்சுக்கேற்ற முகபாவத்தை அதில் ஏற்படும் உணர்வுகளை வெகுவாக ரசிப்பேன். //

ஏன் அடுத்த படத்துக்கு ஹீரோ வாய்ப்பு கொடுக்கவா?
//

ஆமா ஆமா ஆமா கதை ரெடியா :-)

நசரேயன் said...

//அப்புறம் என்ன? நான் பேச ஆரம்பித்துவிடுவேன்ல்லே!! பேசலைன்னா எனக்கு நெஞ்சு வலிக்கும். அதான் நான் எப்போதும் பேசிகிட்டே இருப்பேன். பாவம் என் நண்பர்கள் மற்றும் என் சகோதரி.//

ஒ.. அப்படியா.. நீங்க பேசினா கேட்கவங்களுக்கு நெஞ்சு வேடிக்குமாமே !!!

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆமா நான் எத்தினாவது???

அ.மு.செய்யது said...

//அருமையான நண்பர், பாசக்கார நண்பர், அக்கறையான நண்பர்,//

avvvvvvvvvvvvvvvvvvvv

http://urupudaathathu.blogspot.com/ said...

50 நானா??

அ.மு.செய்யது said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து 50 போட்டம்ல...

நசரேயன் said...

//என் கிட்டே எனக்கு பிடிச்ச விஷயம் கோபம் வந்த அடுத்த நிமிடம், கோபமும் மறந்து போகும், அதன் காரணமும் மறந்து போகும். //

ஞாபக மறதிக்கு இவ்வளவு பில்டப் ?

http://urupudaathathu.blogspot.com/ said...

ஜஸ்ட் மிஸ்!!!1

அ.மு.செய்யது said...

//சிறிய வயதானாலும் அபாரமான அறிவைப் படைத்தவர்.//

இது எப்ப...?? சொல்லவேயில்ல...

நசரேயன் said...

//அமைதி ஒரு நல்ல தீர்வை எனக்குக் கொடுக்கும்.//

சரி.. பாட்டி

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
ஆமா நான் எத்தினாவது???
//

வாங்க வாங்க அணிமா வணக்கம்!!

அ.மு.செய்யது said...

//இவர் நல்ல கதை எழுதக் கூடியவர்.//

நல்லா கதை வுடுவான்னு சொல்றத கொஞ்சம் பூசினாப்ல சொன்னா நாங்க நம்பிடுவோமா ???

http://urupudaathathu.blogspot.com/ said...

///என்னை நம்பி இந்தத் தொடர் ஆட்டத்துக்கு அழைத்தவர்கள் நிஜமாவே கொஞ்சம் தைரியம் உள்ளவர்கள்தான்.///

கொஞசம் தான் தைரியம் உள்ளவர்களா??

ஏன் எதுனா ஆட்டோ ரெடி பன்றீங்களா??

நசரேயன் said...

//என்னை வளர்த்த பாட்டிங்க. ஏனென்றால் இன்று நான் இருக்கும் இந்த நிலைமை அவர்கள் பார்த்தால் ரொம்ப சந்தோஷப் படுவாங்க. அவங்க பெரிய மேதை, புத்திசாலி, தைரியசாலி. அவர்கள் இப்போது என்னை பார்க்க உயிருடன் இல்லையே என்ற வருத்தம் தான்.//

இப்ப இருந்தா என் பதிவை படி .. பதிவை படின்னு சொல்லியே மேல அனுப்பி இருப்பீங்க

sakthi said...

அ.மு.செய்யது said...

//இவர் நல்ல கதை எழுதக் கூடியவர்.//

நல்லா கதை வுடுவான்னு சொல்றத கொஞ்சம் பூசினாப்ல சொன்னா நாங்க நம்பிடுவோமா ???

அதானே செய்யது அண்ணா

அ.மு.செய்யது said...

//மற்றவர்கள் எழுதுவதும் நல்ல முறையில் வரவேண்டும் என்ற நல்ல மனம் படைத்தவர். இன்னும் கூறிக் கொண்டே போகலாம். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் இந்த நண்பரைப் பற்றி ஆராயலாம்.
//

மிக்க நன்றி !!!! மிகவும் நெகிழ்ந்தேன்.

வலையுலகம் எனக்கு இப்படி பட்ட நண்பர்களை தந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது கண்கள் பனிக்கின்றன.

நசரேயன் said...

//கேட்க ஒன்றும் இல்லை.//

நீங்க மட்டும் பேசிகிட்டே இருக்கும் போது எப்படி கேட்க முடியும்

sakthi said...

நசரேயன் said...

//என் கிட்டே எனக்கு பிடிச்ச விஷயம் கோபம் வந்த அடுத்த நிமிடம், கோபமும் மறந்து போகும், அதன் காரணமும் மறந்து போகும். //

ஞாபக மறதிக்கு இவ்வளவு பில்டப் ?

ஹஹஹ

இது எல்லாம் கண்டுக்கபடாது நசரேயன் அண்ணா

நசரேயன் said...

//மல்லிகையின் மணம்//

மாற்றான் தோட்டத்து

அ.மு.செய்யது said...

//வலையுலகத்தில் எனக்கு கிடைத்த அருமையான உடன் பிறப்பு.//

உங்களுக்கு மட்டுமா ??

அவள் எல்லோருக்கும் ஒரு தந்தையை போன்றவர்.அவரது அறிவுரைகள் சிலநேரங்களில் என்னை மாற்றியிருக்கிறது.

http://urupudaathathu.blogspot.com/ said...

//அ.மு. செய்யதுஅருமையான நண்பர், பாசக்கார நண்பர், அக்கறையான நண்பர்,///

அவ்வ்வ்வ்வ்...
முடியல... தாங்க முடியல...

RAMYA said...

வாங்க வாங்க அ.மு.செய்யது வணக்கம்.

என்னோட நெட் சரி இல்லை அதான் வணக்கம் சொல்ல தாமதமாகிவிட்டது!

அ.மு.செய்யது said...

//ம்ம்ம்.... வத்தக்குழம்பு, அப்பளம், உருளைக்கிழங்கு வதக்கல், கத்தரிக்காய் வதக்கல், தயிர் சாதம் அதனுடன் மாங்கா ஊறுகாய். (இதை எழுதும்போதே பசிக்குதே)//

இங்க சப்பாத்தியும் சப்ஜியுமா வாழ்க்க போயிட்டிருக்குனு நானே கவலைப்பட்டுருக்கேன்...

நசரேயன் said...

//இப்படி கூறிக் கொண்டே போனால் எவ்வளவு வேண்டுமானாலும் கூறலாம். அதற்கு முடிவே இல்லை. //

பதிவுக்கு ???

நசரேயன் said...

//நான் கல்லூரியில் வாலிபால் விளையாட்டிலே பெரிய பிஸ்தா(பீலா இல்லே உண்மைதான்). பிடிச்சதுன்னு ஒன்னும் இல்லை. எல்லாமே பிடிக்கும்.
//

இல்லை ..பதிவுகளில் கும்மி அடிப்பது

sakthi said...

மற்றவர்கள் எழுதுவதும் நல்ல முறையில் வரவேண்டும் என்ற நல்ல மனம் படைத்தவர். இன்னும் கூறிக் கொண்டே போகலாம். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் இந்த நண்பரைப் பற்றி ஆராயலாம்.

நிஜம் செய்யது

தங்களின்
பின்னூட்டங்கள்
மிக அழகாய்
பதிவரை
ஊக்குவிக்கும்
வகையில் உள்ளது

அ.மு.செய்யது said...

/நிறைய சண்டை போடுவேன். அடிக்கடி கோபித்துக் கொள்வேன்.//

நாங்க கும்மிய‌ சண்டையில தான் ஆரம்பிப்போம்.

http://urupudaathathu.blogspot.com/ said...

//சிறிய வயதானாலும் அபாரமான அறிவைப் படைத்தவர். ///

என்னா அவருக்கு ஒரு மூனு வயசு இருக்குமா??

RAMYA said...

//
நசரேயன் said...
//தலைப்பைக் கொடுத்தாலும் பிச்சி பிச்சி எடுத்திடுவார்.//

என்ன பிச்சி.. பிச்சி ரம்யா???

//

நல்லா எழுதும் திறமைப் படைத்தவர் என்று அர்த்தம்!

sakthi said...

அப்படி எதுவும் எனக்குள்ளே இருப்பது போல் எனக்கு தெரியவில்லையே.

கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது

நசரேயன் said...

//அயன் (எனக்குப் பிடிக்கவே இல்லை. அந்த படம் பார்த்து ஒரு வாரம் தூங்கவே இல்லை)//

ஆமா, எனக்கும் தான் தாம்னா கனவிலே ...

அ.மு.செய்யது said...

//அது ஒரு அழகான காவியம். ரசனையுடனும், புரிதலுடனும் வாழ்ந்தால் வாழ்வு ஒரு சொர்க்கம்.//

பல வேதனைகளை தாண்டி ஜெயிப்போர் சொல்லும் பதில் இது.

sakthi said...

அது ஒரு அழகான காவியம். ரசனையுடனும், புரிதலுடனும் வாழ்ந்தால் வாழ்வு ஒரு சொர்க்கம். இதுதான் வாழ்வு பற்றி என்னோட கணிப்பு.

அருமை

அருமையான கணிப்பு ரம்யா

அ.மு.செய்யது said...

// உருப்புடாதது_அணிமா said...
//சிறிய வயதானாலும் அபாரமான அறிவைப் படைத்தவர். ///

என்னா அவருக்கு ஒரு மூனு வயசு இருக்குமா??
//

ஆமாண்ணே...என்ன முன்னாடி ஒரு ரெண்டு வரும் ..அம்புட்டுதான்.

sakthi said...

நசரேயன் said...

//அயன் (எனக்குப் பிடிக்கவே இல்லை. அந்த படம் பார்த்து ஒரு வாரம் தூங்கவே இல்லை)//

ஆமா, எனக்கும் தான் தாம்னா கனவிலே ...

ஹ ஹ ஹ ஹ

யப்பா முடியலை

சிரிப்பை சொல்றேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

///எந்த தலைப்பைக் கொடுத்தாலும் பிச்சி பிச்சி எடுத்திடுவார். அந்த அளவிற்கு பலவிதமான ஞானங்களைப் பெற்றவர். ///

விஞ்ஞானமா? இல்ல மெய்ஞானமான்னு எல்லாம் கேக்க மாட்டேன்..

RAMYA said...

//
நசரேயன் said...
//நான் கல்லூரியில் வாலிபால் விளையாட்டிலே பெரிய பிஸ்தா(பீலா இல்லே உண்மைதான்). பிடிச்சதுன்னு ஒன்னும் இல்லை. எல்லாமே பிடிக்கும்.
//

இல்லை ..பதிவுகளில் கும்மி அடிப்பது
//

அது அப்போ! கும்மி இப்போ!

sakthi said...

அ.மு.செய்யது said...

// உருப்புடாதது_அணிமா said...
//சிறிய வயதானாலும் அபாரமான அறிவைப் படைத்தவர். ///

என்னா அவருக்கு ஒரு மூனு வயசு இருக்குமா??
//

ஆமாண்ணே...என்ன முன்னாடி ஒரு ரெண்டு வரும் ..அம்புட்டுதான்.

அவ்ளோ சின்ன பையனா
அப்ப எனக்கு தம்பி

அ.மு.செய்யது said...

//மற்றவர்கள் எழுதுவதும் நல்ல முறையில் வரவேண்டும் என்ற நல்ல மனம் படைத்தவர். இன்னும் கூறிக் கொண்டே போகலாம். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் இந்த நண்பரைப் பற்றி ஆராயலாம்.

நிஜம் செய்யது

தங்களின்
பின்னூட்டங்கள்
மிக அழகாய்
பதிவரை
ஊக்குவிக்கும்
வகையில் உள்ளது//

மிக்க நன்றி ஷக்தி !!!

உங்கள் பாராட்டுக்களுக்கு..( அப்படியே வானத்துல பறக்கற மாதிரி ஃபீலாவுதுங்க..)

நசரேயன் said...

அணிமா, செய்யது கும்மியை தொடரட்டும், நான் டீ குடிச்சிட்டு வாரேன்.

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//சிறிய வயதானாலும் அபாரமான அறிவைப் படைத்தவர். ///

என்னா அவருக்கு ஒரு மூனு வயசு இருக்குமா??
//

இது சூப்பர் கேள்வி அணிமா!!

மணிநரேன் said...

ரசித்தேன் உங்கள் பதில்களை...;)

sakthi said...

அ.மு.செய்யது said...

//ம்ம்ம்.... வத்தக்குழம்பு, அப்பளம், உருளைக்கிழங்கு வதக்கல், கத்தரிக்காய் வதக்கல், தயிர் சாதம் அதனுடன் மாங்கா ஊறுகாய். (இதை எழுதும்போதே பசிக்குதே)//

இங்க சப்பாத்தியும் சப்ஜியுமா வாழ்க்க போயிட்டிருக்குனு நானே கவலைப்பட்டுருக்கேன்...

அதாவது கிடைக்குதேனு சந்தோஷப்படனும் செய்யது தம்பி

அ.மு.செய்யது said...

//sakthi said...

அவ்ளோ சின்ன பையனா
அப்ப எனக்கு தம்பி
//

யக்கா..!!!

ஆஹா..ஒரு குத்து மதிப்பா தான் கேட்டீங்களா..

நானாத்தான் உளறிட்டனா ???

நசரேயன் said...

அணிமா, செய்யது,சக்தி கும்மியை தொடரட்டும், நான் டீ குடிச்சிட்டு வாரேன்.

http://urupudaathathu.blogspot.com/ said...

///வலையுலகத்தில் எனக்கு கிடைத்த அருமையான உடன் பிறப்பு. அக்கறையான, அன்பான அண்ணா.///

அன்பில் அவருக்கு நிகர் அவரே!!!

RAMYA said...

//
நசரேயன் said...
//அயன் (எனக்குப் பிடிக்கவே இல்லை. அந்த படம் பார்த்து ஒரு வாரம் தூங்கவே இல்லை)//

ஆமா, எனக்கும் தான் தாம்னா கனவிலே ...
//

ட்ரிங் ட்ரிங் ஹல்லோ யாரு தங்க்ஸ் தானே பேசறது இங்கே உங்க வூட்டுகாரு தாம்னா பற்றி ஏதோ சொல்லுறாரு கொஞ்சமா என்னான்னு கேளுங்க :-)

http://urupudaathathu.blogspot.com/ said...

//நசரேயன் said...

அணிமா, செய்யது கும்மியை தொடரட்டும், நான் டீ குடிச்சிட்டு வாரேன்.///

ஊட்டுகார அம்மினிக்கு டீ போட போரேன்னு சொல்லாம சொல்ரீயளா??

அ.மு.செய்யது said...

//RAMYA said...
//
நசரேயன் said...
//நான் கல்லூரியில் வாலிபால் விளையாட்டிலே பெரிய பிஸ்தா(பீலா இல்லே உண்மைதான்). பிடிச்சதுன்னு ஒன்னும் இல்லை. எல்லாமே பிடிக்கும்.
//

இல்லை ..பதிவுகளில் கும்மி அடிப்பது
//

அது அப்போ! கும்மி இப்போ!
//

ஒரு காலத்துல ரம்யா..நசரேயன்..ஜமாலு,,,நாங்கெல்லாம் அடிச்ச கும்மி இருக்கே !!!! மிட் நைட் வரைக்கும் மூச்சு திணற திணற பின்னூட்டம் போடுவம்ல..

sakthi said...

அ.மு.செய்யது said...

//மற்றவர்கள் எழுதுவதும் நல்ல முறையில் வரவேண்டும் என்ற நல்ல மனம் படைத்தவர். இன்னும் கூறிக் கொண்டே போகலாம். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் இந்த நண்பரைப் பற்றி ஆராயலாம்.

நிஜம் செய்யது

தங்களின்
பின்னூட்டங்கள்
மிக அழகாய்
பதிவரை
ஊக்குவிக்கும்
வகையில் உள்ளது//

மிக்க நன்றி ஷக்தி !!!

உங்கள் பாராட்டுக்களுக்கு..( அப்படியே வானத்துல பறக்கற மாதிரி ஃபீலாவுதுங்க..)

அட நிஜத்தை சொன்னா நம்புங்க பா
செய்யது உங்களின் பின்னூட்டங்கள் ஆத்மார்த்மானதாய்
இருப்பதாக எனக்கு தோன்றும்

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//சிறிய வயதானாலும் அபாரமான அறிவைப் படைத்தவர்.//

இது எப்ப...?? சொல்லவேயில்ல...
//

இது கூட தெரியாத உங்களுக்கு, இல்லே தன்னடக்கம் தடுக்குதா :-)

அ.மு.செய்யது said...

100

http://urupudaathathu.blogspot.com/ said...

100 நானா?

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///எந்த தலைப்பைக் கொடுத்தாலும் பிச்சி பிச்சி எடுத்திடுவார். அந்த அளவிற்கு பலவிதமான ஞானங்களைப் பெற்றவர். ///

விஞ்ஞானமா? இல்ல மெய்ஞானமான்னு எல்லாம் கேக்க மாட்டேன்..
//

எல்லாமே !!

அ.மு.செய்யது said...

//sakthi said...
100
//

மிஸ்ஸாயிடுச்சு அக்கா...

பழைய ஃபார்ம் போகலன்னு நினைச்சிட்டேன்.

http://urupudaathathu.blogspot.com/ said...

100ம் போச்சா??

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

sakthi said...

ஒரு காலத்துல ரம்யா..நசரேயன்..ஜமாலு,,,நாங்கெல்லாம் அடிச்ச கும்மி இருக்கே !!!! மிட் நைட் வரைக்கும் மூச்சு திணற திணற பின்னூட்டம் போடுவம்ல..

அப்படியா

சொல்லவேயில்லை என்கிட்ட

sakthi said...

மீ த 100

அ.மு.செய்யது said...

//RAMYA said...
//
உருப்புடாதது_அணிமா said...
///எந்த தலைப்பைக் கொடுத்தாலும் பிச்சி பிச்சி எடுத்திடுவார். அந்த அளவிற்கு பலவிதமான ஞானங்களைப் பெற்றவர். ///

விஞ்ஞானமா? இல்ல மெய்ஞானமான்னு எல்லாம் கேக்க மாட்டேன்..
//

எல்லாமே !!
//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே....

RAMYA said...

//
மணிநரேன் said...
ரசித்தேன் உங்கள் பதில்களை...;)

//

நன்றி மணிநரேன்!

sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

100ம் போச்சா??

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அழப்படாது அணிமா அண்ணாச்சி

அரசியல்ல இது எல்லாம் சகஜம்

அ.மு.செய்யது said...

// sakthi said...
ஒரு காலத்துல ரம்யா..நசரேயன்..ஜமாலு,,,நாங்கெல்லாம் அடிச்ச கும்மி இருக்கே !!!! மிட் நைட் வரைக்கும் மூச்சு திணற திணற பின்னூட்டம் போடுவம்ல..

அப்படியா

சொல்லவேயில்லை என்கிட்ட
//

டீச்சர் ரம்யா...சொல்லுங்க...அக்கா கிட்ட...

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//நசரேயன் said...

அணிமா, செய்யது கும்மியை தொடரட்டும், நான் டீ குடிச்சிட்டு வாரேன்.///

ஊட்டுகார அம்மினிக்கு டீ போட போரேன்னு சொல்லாம சொல்ரீயளா??
//

அதே அதே உண்மையை எப்படியோ கண்டு பிடிச்சிட்டீங்களே அணிமா
நீங்க கிரேட் :-)

http://urupudaathathu.blogspot.com/ said...

//என்னை தவறாக நினைக்காமல் எனது அன்பு நெஞ்சங்களான நீங்கள் என்னை மன்னித்து தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன்.///

கவலையே படாதீங்க.. அடுத்த தேர்தலுக்கு எங்க ஆதரவு உன்களுக்கு தான்..

( இந்த ஆதரவு தானே கேட்டீங்க??)

http://urupudaathathu.blogspot.com/ said...

//செய்யதிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு நான் கூறி இருப்பது நன்றாகத் தெரியும். இவர் நல்ல கதை எழுதக் கூடியவர்.///

நல்லா கதை கூட சொல்லுவார்ன்னு கேள்விப்பட்டதுண்டு..

sakthi said...

வலையுலகத்தில் எனக்கு கிடைத்த அருமையான உடன் பிறப்பு. அக்கறையான, அன்பான அண்ணா. வேலைப் பளுவின் காரணமாக நான் இப்போது GMail வருவது இல்லை. நண்பர்களாகிய நாம் தொடர்பு கொள்வதே ஜிமெயில் சாட்டிங் வழியாகத்தானே! தொடர்ந்து சில நாட்கள் என்னை காணவில்லை என்றால் அடுத்து அண்ணாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். என்னம்மா ஆச்சு என்றுகொடுத்த கேக்கும்போதே அந்த குரலில் அன்பு, அக்கறை குழைந்து வரும்.

எந்த அண்ணாவை சொல்லறீங்க
நம் சிங்கை
பாசமிகு நட்பையா??

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//RAMYA said...
//
நசரேயன் said...
//நான் கல்லூரியில் வாலிபால் விளையாட்டிலே பெரிய பிஸ்தா(பீலா இல்லே உண்மைதான்). பிடிச்சதுன்னு ஒன்னும் இல்லை. எல்லாமே பிடிக்கும்.
//

இல்லை ..பதிவுகளில் கும்மி அடிப்பது
//

அது அப்போ! கும்மி இப்போ!
//

ஒரு காலத்துல ரம்யா..நசரேயன்..ஜமாலு,,,நாங்கெல்லாம் அடிச்ச கும்மி இருக்கே !!!! மிட் நைட் வரைக்கும் மூச்சு திணற திணற பின்னூட்டம் போடுவம்ல..
//

ஆமாம் செய்யது, அந்த காலம் எல்லாம் இனிமேல் வராதா?
நாம் எல்லாரும் வேலைப் பளுவினால் ரொம்ப மாறிவிட்டோம்னு நினைக்கின்றேன்!

http://urupudaathathu.blogspot.com/ said...

///எனது வேலைப் பளு குறைந்துவிடும் பழையபடி உங்கள் ரம்யா வலையுலா வர ஆரம்பித்து விடுவேன் என்று நம்புகின்றேன்.///

ஆஹா.. 7 1/2 சீக்கிரம் வரப்போகுதா??

இஃகி இஃகி

sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

//செய்யதிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு நான் கூறி இருப்பது நன்றாகத் தெரியும். இவர் நல்ல கதை எழுதக் கூடியவர்.///

நல்லா கதை கூட சொல்லுவார்ன்னு கேள்விப்பட்டதுண்டு..

அப்படியா

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//RAMYA said...
//
உருப்புடாதது_அணிமா said...
///எந்த தலைப்பைக் கொடுத்தாலும் பிச்சி பிச்சி எடுத்திடுவார். அந்த அளவிற்கு பலவிதமான ஞானங்களைப் பெற்றவர். ///

விஞ்ஞானமா? இல்ல மெய்ஞானமான்னு எல்லாம் கேக்க மாட்டேன்..
//

எல்லாமே !!
//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே....
//

அதுக்குதான் நண்பர்கள் வேறே எதுக்கு:-)

அ.மு.செய்யது said...

//உருப்புடாதது_அணிமா said...
//என்னை தவறாக நினைக்காமல் எனது அன்பு நெஞ்சங்களான நீங்கள் என்னை மன்னித்து தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன்.///

//

உங்க வலையில ஃபாலோவர்ஸ் பட்டன் எங்க இருக்கு ??

sakthi said...

ஆமாம் செய்யது, அந்த காலம் எல்லாம் இனிமேல் வராதா?
நாம் எல்லாரும் வேலைப் பளுவினால் ரொம்ப மாறிவிட்டோம்னு நினைக்கின்றேன்!

காலத்தின் கட்டாயம்

மாறித்தானே ஆகவேண்டும்

http://urupudaathathu.blogspot.com/ said...

//அ.மு.செய்யது said...

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே....///

என்ன பன்றது?? ரனகளம் ஆக்கியே ஆகனும்ன்னு முடிவு பன்னிட்டா, அப்புறம் இதுக்குஎல்லாம் கவலப்பட்டா??

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
// sakthi said...
ஒரு காலத்துல ரம்யா..நசரேயன்..ஜமாலு,,,நாங்கெல்லாம் அடிச்ச கும்மி இருக்கே !!!! மிட் நைட் வரைக்கும் மூச்சு திணற திணற பின்னூட்டம் போடுவம்ல..

அப்படியா

சொல்லவேயில்லை என்கிட்ட
//

டீச்சர் ரம்யா...சொல்லுங்க...அக்கா கிட்ட...
//

இப்போதான் எடுத்து விட்டிடுடோமில்லே கப்புன்னு பிடிச்சுக்க வேண்டியதுதான் :-)

sakthi said...

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//நசரேயன் said...

அணிமா, செய்யது கும்மியை தொடரட்டும், நான் டீ குடிச்சிட்டு வாரேன்.///

ஊட்டுகார அம்மினிக்கு டீ போட போரேன்னு சொல்லாம சொல்ரீயளா??
//

அதே அதே உண்மையை எப்படியோ கண்டு பிடிச்சிட்டீங்களே அணிமா
நீங்க கிரேட் :-)

ஹ ஹ ஹ ஹ

அனுபவமா அணிமா???

http://urupudaathathu.blogspot.com/ said...

///sakthi said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அழப்படாது அணிமா அண்ணாச்சி

அரசியல்ல இது எல்லாம் சகஜம்///

எனக்கே அரசியலா??

இதுக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//என்னை தவறாக நினைக்காமல் எனது அன்பு நெஞ்சங்களான நீங்கள் என்னை மன்னித்து தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன்.///

கவலையே படாதீங்க.. அடுத்த தேர்தலுக்கு எங்க ஆதரவு உன்களுக்கு தான்..

( இந்த ஆதரவு தானே கேட்டீங்க??)
//

மொத்தத்திலே ஆதரவுன்னு சொல்லி இருக்கொமில்லே அப்புறம் அதுலே என்ன சந்தேகம் :-)

sakthi said...

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
// sakthi said...
ஒரு காலத்துல ரம்யா..நசரேயன்..ஜமாலு,,,நாங்கெல்லாம் அடிச்ச கும்மி இருக்கே !!!! மிட் நைட் வரைக்கும் மூச்சு திணற திணற பின்னூட்டம் போடுவம்ல..

அப்படியா

சொல்லவேயில்லை என்கிட்ட
//

டீச்சர் ரம்யா...சொல்லுங்க...அக்கா கிட்ட...
//

இப்போதான் எடுத்து விட்டிடுடோமில்லே கப்புன்னு பிடிச்சுக்க வேண்டியதுதான் :-)

பிடிச்சுட்டேன் உங்க பேரையும்
ரம்யா டீச்சர்

http://urupudaathathu.blogspot.com/ said...

125ம் போச்சா??

நான் கோச்சிக்கிட்டு போறேன்..

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///sakthi said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அழப்படாது அணிமா அண்ணாச்சி

அரசியல்ல இது எல்லாம் சகஜம்///

எனக்கே அரசியலா??

இதுக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

ஆமாம் ஆமாம் உஷாரு உஷாரு அணிமா அவர்களே :)

sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

///sakthi said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அழப்படாது அணிமா அண்ணாச்சி

அரசியல்ல இது எல்லாம் சகஜம்///

எனக்கே அரசியலா??

இதுக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கர்சீப் வேணுமா
ஏன்னா 125 கூட நான் தான்

அ.மு.செய்யது said...

//உருப்புடாதது_அணிமா said...
//அ.மு.செய்யது said...

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே....///

என்ன பன்றது?? ரனகளம் ஆக்கியே ஆகனும்ன்னு முடிவு பன்னிட்டா, அப்புறம் இதுக்குஎல்லாம் கவலப்பட்டா??
//

உசுப்பேத்துனது அவங்க..

ரணகளம் ஆக்குனது நீங்க...என்னா ஒரு கலவரம் .....???

http://urupudaathathu.blogspot.com/ said...

///அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்குமாம் ///

ரம்மின்னா இந்த சீட்டுக்கட்டுல வருமே அந்த ரம்மியா??

( இது எப்படி?)

sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

125ம் போச்சா??

நான் கோச்சிக்கிட்டு போறேன்.

யாரும் போககூடாது

அப்பறம் தல வந்த சொல்லிடுவேன்

ஆமா

sakthi said...

135

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///எனது வேலைப் பளு குறைந்துவிடும் பழையபடி உங்கள் ரம்யா வலையுலா வர ஆரம்பித்து விடுவேன் என்று நம்புகின்றேன்.///

ஆஹா.. 7 1/2 சீக்கிரம் வரப்போகுதா??

இஃகி இஃகி
//

அணிமா 7 1/2 இல்லே ஜென்மச்சனி
அதே சிரிப்புடன் இஃகி இஃகி :-)

அ.மு.செய்யது said...

//sakthi said...
உருப்புடாதது_அணிமா said...

//செய்யதிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு நான் கூறி இருப்பது நன்றாகத் தெரியும். இவர் நல்ல கதை எழுதக் கூடியவர்.///

நல்லா கதை கூட சொல்லுவார்ன்னு கேள்விப்பட்டதுண்டு..

அப்படியா
//

ஆமா...அடுத்த வாரத்துல சிறுவர்மலர் ல என்னோட கதை ஒன்னு வருது...எல்லாரும் படித்து பயனடைவீர்.

sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

///அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்குமாம் ///

ரம்மின்னா இந்த சீட்டுக்கட்டுல வருமே அந்த ரம்மியா??

( இது எப்படி?)

உம்ம பேருக்கு தகுந்த மாதிரியே கேள்வி கேட்கறீங்க

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//உருப்புடாதது_அணிமா said...
//அ.மு.செய்யது said...

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே....///

என்ன பன்றது?? ரனகளம் ஆக்கியே ஆகனும்ன்னு முடிவு பன்னிட்டா, அப்புறம் இதுக்குஎல்லாம் கவலப்பட்டா??
//

உசுப்பேத்துனது அவங்க..

ரணகளம் ஆக்குனது நீங்க...என்னா ஒரு கலவரம் .....???
//

என்ன கலவரமா? ரத்த ஆறு ஓடுதா? சொல்லவே இல்லே :)

அ.மு.செய்யது said...

//உருப்புடாதது_அணிமா said...
///அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்குமாம் ///

ரம்மின்னா இந்த சீட்டுக்கட்டுல வருமே அந்த ரம்மியா??

( இது எப்படி?)
//

அந்த ரம்மியில்ல..

அவங்க "ரம்"யா....இது பழைய பேரு..

http://urupudaathathu.blogspot.com/ said...

//எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா??///

அட இத பார்ரா??
இது வேற இருக்கா???

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்குமாம் ///

ரம்மின்னா இந்த சீட்டுக்கட்டுல வருமே அந்த ரம்மியா??

( இது எப்படி?)
//

கொழுந்து ஒன்னும் சொல்ல முடியலை:)

sakthi said...

அ.மு.செய்யது said...

//sakthi said...
உருப்புடாதது_அணிமா said...

//செய்யதிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு நான் கூறி இருப்பது நன்றாகத் தெரியும். இவர் நல்ல கதை எழுதக் கூடியவர்.///

நல்லா கதை கூட சொல்லுவார்ன்னு கேள்விப்பட்டதுண்டு..

அப்படியா
//

ஆமா...அடுத்த வாரத்துல சிறுவர்மலர் ல என்னோட கதை ஒன்னு வருது...எல்லாரும் படித்து பயனடைவீர்.

கண்டிப்பா என் சகோதரர் கதை வருகின்றது என்றால்
அது அம்புலிமாமா,கோகுலம் எதில் வந்தாலும் வாங்கி படிக்கப்படும்

sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

//எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா??///

அட இத பார்ரா??
இது வேற இருக்கா???

ஹ ஹ ஹ ஹ

RAMYA said...

//
டீச்சர் ரம்யா...சொல்லுங்க...அக்கா கிட்ட...
//

இப்போதான் எடுத்து விட்டிடுடோமில்லே கப்புன்னு பிடிச்சுக்க வேண்டியதுதான் :-)

பிடிச்சுட்டேன் உங்க பேரையும்
ரம்யா டீச்சர்
//

Thanks and very good sakthi :)

அ.மு.செய்யது said...

//அது அம்புலிமாமா,கோகுலம் எதில் வந்தாலும் வாங்கி படிக்கப்படும்//

பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா ??

sakthi said...

100 + 150 அடித்ததற்கு வாழ்த்து தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம்

http://urupudaathathu.blogspot.com/ said...

sakthi said...

ஊட்டுகார அம்மினிக்கு டீ போட போரேன்னு சொல்லாம சொல்ரீயளா??
//

அதே அதே உண்மையை எப்படியோ கண்டு பிடிச்சிட்டீங்களே அணிமா
நீங்க கிரேட் :-)

ஹ ஹ ஹ ஹ

அனுபவமா அணிமா???///

அனுபவமா?? நல்லா வாயில வரும் ( வாந்தியான்னு கேக்க கூடாது)

தகுதியுள்ள பிரம்மச்சாரியாக்கும் நான்..

http://urupudaathathu.blogspot.com/ said...

//எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா??///

அட இத பார்ரா??
இது வேற இருக்கா???

sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

sakthi said...

ஊட்டுகார அம்மினிக்கு டீ போட போரேன்னு சொல்லாம சொல்ரீயளா??
//

அதே அதே உண்மையை எப்படியோ கண்டு பிடிச்சிட்டீங்களே அணிமா
நீங்க கிரேட் :-)

ஹ ஹ ஹ ஹ

அனுபவமா அணிமா???///

அனுபவமா?? நல்லா வாயில வரும் ( வாந்தியான்னு கேக்க கூடாது)

தகுதியுள்ள பிரம்மச்சாரியாக்கும் நான்..

அப்படி சொன்னா தானே தெரியும் அண்ணாச்சி

http://urupudaathathu.blogspot.com/ said...

//எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா??///

அட இத பார்ரா??
இது வேற இருக்கா???

அ.மு.செய்யது said...

சூடு கொறையுது..பத்தாது..இன்னும் கொளுத்தி போடுங்க...

http://urupudaathathu.blogspot.com/ said...

//sakthi said...

100 + 150 அடித்ததற்கு வாழ்த்து தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம்///

வேனுமுன்னா முதுகுல 100-150 அடி அடிக்கலாம்... என்ன சொல்றீங்க??

RAMYA said...

//
sakthi said...
100 + 150 அடித்ததற்கு வாழ்த்து தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம்
//

சக்தி அது எப்படி உஷாரா 100 + 150 எல்லாம் நீங்களே அடிச்சிட்டீங்க :-)

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா??///

அட இத பார்ரா??
இது வேற இருக்கா???

//

ஆமா ஆமா அணிமா :)

அ.மு.செய்யது said...

//RAMYA said...
//
sakthi said...
100 + 150 அடித்ததற்கு வாழ்த்து தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம்
//

சக்தி அது எப்படி உஷாரா 100 + 150 எல்லாம் நீங்களே அடிச்சிட்டீங்க :-)
//

இந்த ராஜதந்திரத்தை சொல்லி கொடுத்தது நான் தான் என்ற உண்மையை இங்கே சொல்ல வேண்டாம்.

வீண்புகழாரம் அரசாட்சிக்கு கேடு.

160 கூட நான் தான்

கூலா ஏதாவது சாப்பிட்டுட்டு வாங்களேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

//எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா??///

அட இத பார்ரா??
இது வேற இருக்கா???

sakthi said...

அ.மு.செய்யது said...

//RAMYA said...
//
sakthi said...
100 + 150 அடித்ததற்கு வாழ்த்து தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம்
//

சக்தி அது எப்படி உஷாரா 100 + 150 எல்லாம் நீங்களே அடிச்சிட்டீங்க :-)
//

இந்த ராஜதந்திரத்தை சொல்லி கொடுத்தது நான் தான் என்ற உண்மையை இங்கே சொல்ல வேண்டாம்.

வீண்புகழாரம் அரசாட்சிக்கு கேடு.

ஹ ஹ ஹ ஹ

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
சூடு கொறையுது..பத்தாது..இன்னும் கொளுத்தி போடுங்க...
//

பாத்து கொளுத்துங்கப்பா கணினி எரியப்போகுது :-)

sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

//எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா??///

அட இத பார்ரா??
இது வேற இருக்கா???

அட மாத்து பா

sakthi said...

170

sakthi said...

170

KARTHIK said...

அடக்கொடுமையே பதிவ படிச்சு முடிச்சு வர்ரதுக்குல்ல 164லா தாங்காதுடா சாமி.

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//RAMYA said...
//
sakthi said...
100 + 150 அடித்ததற்கு வாழ்த்து தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம்
//

சக்தி அது எப்படி உஷாரா 100 + 150 எல்லாம் நீங்களே அடிச்சிட்டீங்க :-)
//

இந்த ராஜதந்திரத்தை சொல்லி கொடுத்தது நான் தான் என்ற உண்மையை இங்கே சொல்ல வேண்டாம்.

வீண்புகழாரம் அரசாட்சிக்கு கேடு.
//

Super Super Super :))

sakthi said...

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
சூடு கொறையுது..பத்தாது..இன்னும் கொளுத்தி போடுங்க...
//

பாத்து கொளுத்துங்கப்பா கணினி எரியப்போகுது :-)

ஆம் செய்யது

sakthi said...

கார்த்திக் said...

அடக்கொடுமையே பதிவ படிச்சு முடிச்சு வர்ரதுக்குல்ல 164லா தாங்காதுடா சாமி.

வருக கார்த்திக்

sakthi said...

175

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//sakthi said...

100 + 150 அடித்ததற்கு வாழ்த்து தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம்///

வேனுமுன்னா முதுகுல 100-150 அடி அடிக்கலாம்... என்ன சொல்றீங்க??
//

யாரை அடிக்கப் போறீங்க அணிமா??

RAMYA said...

//
கார்த்திக் said...
அடக்கொடுமையே பதிவ படிச்சு முடிச்சு வர்ரதுக்குல்ல 164லா தாங்காதுடா சாமி.
//

வாங்க வாங்க கார்த்திக் வணக்கம்
நல்லா இருக்கீங்களா ??

sakthi said...

அ.மு.செய்யது said...

//அது அம்புலிமாமா,கோகுலம் எதில் வந்தாலும் வாங்கி படிக்கப்படும்//

பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா ??

இல்லை வீட்டிலே குழல்விளக்காய் நாந்தான் இருக்கேனே அதுவே போதும்
செய்யது தம்பி

sakthi said...

180

அ.மு.செய்யது said...

//கார்த்திக் said...
அடக்கொடுமையே பதிவ படிச்சு முடிச்சு வர்ரதுக்குல்ல 164லா தாங்காதுடா சாமி.
//

இந்த மாதிரி தான் ஜமால் ஜமால்னு (ஒருத்தர் தான்) இருக்காரு..

டீ குடிச்சிட்டு வர்றதுக்குள்ள பத்தாயிரம் பின்னூட்டம் தாண்டிட்டாரு..

sakthi said...

180 அடித்ததுக்கு செய்ய்து தம்பிக்கு வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

//sakthi said...
அ.மு.செய்யது said...

//அது அம்புலிமாமா,கோகுலம் எதில் வந்தாலும் வாங்கி படிக்கப்படும்//

பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா ??

இல்லை வீட்டிலே குழல்விளக்காய் நாந்தான் இருக்கேனே அதுவே போதும்
செய்யது தம்பி
//

யு மீன் குலவிளக்கு ????? அந்த மெகா சீரியல்ல நடிச்சது நீங்க தானா ??

sakthi said...

அ.மு.செய்யது said...

//கார்த்திக் said...
அடக்கொடுமையே பதிவ படிச்சு முடிச்சு வர்ரதுக்குல்ல 164லா தாங்காதுடா சாமி.
//

இந்த மாதிரி தான் ஜமால் ஜமால்னு (ஒருத்தர் தான்) இருக்காரு..

டீ குடிச்சிட்டு வர்றதுக்குள்ள பத்தாயிரம் பின்னூட்டம் தாண்டிட்டாரு..

அதானே

பின்னூட்ட சுனாமிகளின் செயல் அல்லவா அது

sakthi said...

அ.மு.செய்யது said...

//sakthi said...
அ.மு.செய்யது said...

//அது அம்புலிமாமா,கோகுலம் எதில் வந்தாலும் வாங்கி படிக்கப்படும்//

பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா ??

இல்லை வீட்டிலே குழல்விளக்காய் நாந்தான் இருக்கேனே அதுவே போதும்
செய்யது தம்பி
//

யு மீன் குலவிளக்கு ????? அந்த மெகா சீரியல்ல நடிச்சது நீங்க தானா ??

not tat one

tis means tube light

sakthi said...

185

அ.மு.செய்யது said...

//பின்னூட்ட சுனாமிகளின் செயல் அல்லவா அது//

மூச்சு முட்ட காப்பி பேஸ்ட் பண்ண எங்களுக்கு தானே தெரியும்...

sakthi said...

எங்க ரம்யா டீச்சரை காணோம்

sakthi said...

அ.மு.செய்யது said...

//பின்னூட்ட சுனாமிகளின் செயல் அல்லவா அது//

மூச்சு முட்ட காப்பி பேஸ்ட் பண்ண எங்களுக்கு தானே தெரியும்..

நானும் தான்

RAMYA said...

//
sakthi said...
எங்க ரம்யா டீச்சரை காணோம்
//

இங்கேதான் இருக்கேன் நெட் ஒரே probem !

அ.மு.செய்யது said...

//tis means tube light//

குழல் விளக்கு இப்ப தான் அர்த்தம் புரிஞ்சது..மீ டு சேம்..

sakthi said...

190

அ.மு.செய்யது said...

ஓ.கே..வீட்டுக்கு கிளம்புறேன்.

டிரைவர் காலிங்...

sakthi said...

ப‌ள்ளியில் ப‌டித்த‌ ம‌னப்பாட‌ செய்யுட்க‌ள்,வேதியில் ச‌ம‌ன்பாடுக‌ள்,
வ‌ரலாறு புத்த‌க‌ம் முழுவ‌தும் இருக்கும் வ‌ருட‌ குறிப்புக‌ள்,196 நாடுக‌ளின் த‌லைந‌க‌ர‌ங்க‌ள்,அமெரிக்காவில் இருக்கும் 81 மாநில‌ங்கள்,பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தவர்கள் அணிந்திருந்த உடையின் நிறம்,பேசிய வார்த்தைகள் முதற்கொண்டு,தூக்க‌த்தில் எழுப்பி கேட்டாலும் சொல்வேன். (ரெம்ப ஓவரா போயிட்டமோ.. )

அவ்வளவு அறிவாளியா நீங்க

வாழ்த்துக்கள்

நசரேயன் said...

//21.பிடித்த பருவ காலம் எது?
இளவேனிற் காலம்.//

நம்ம ஊரிலே அப்படி எல்லாம் இருக்கா?

sakthi said...

அ.மு.செய்யது said...

ஓ.கே..வீட்டுக்கு கிளம்புறேன்.

டிரைவர் காலிங்...

நானும் கிளம்பறேன் ரம்யா டீச்சர்

நசரேயன் said...

//22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போ எந்த புத்தகமும் படிக்க நேரம் இல்லைங்க. ஆனா எனதன்புத் தோழி அமிர்தவர்ஷிணி அம்மா பரிசாகக் கொடுத்தது சிவசங்கரி அம்மா எழுதின "சிறு கதை தொகுப்பு" என்ற புத்தகம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்துக் கொடுள்ளேன்.//

அதிலே இருந்து சுட்ட கதைதானா ??

சில்லுனு ஒரு சவ்வு

அ.மு.செய்யது said...

//சில்லுனு ஒரு சவ்வு//

ஹா..ஹா...

நசரேயன் said...

//படமே வைப்பதில்லைங்க. வைத்தால்தானே மாற்றுவது! //
ஏன் உங்க பாட்டி படம் இல்லையா??

நசரேயன் said...

//பிடித்த சத்தம் நான் பாடுவது. //

நீங்க கத்துவது அப்படித்தானே

sakthi said...

1,100,125,150,175,200
ஒரே ஆளா நின்னு அடித்ததை பெருமையாக கொண்டு இப்போதைக்கு
கிளம்புகிறேன் மீதி ஆட்டம் காலையில்
தொடரும்

அ.மு.செய்யது said...

//sakthi said...
ப‌ள்ளியில் ப‌டித்த‌ ம‌னப்பாட‌ செய்யுட்க‌ள்,வேதியில் ச‌ம‌ன்பாடுக‌ள்,
வ‌ரலாறு புத்த‌க‌ம் முழுவ‌தும் இருக்கும் வ‌ருட‌ குறிப்புக‌ள்,196 நாடுக‌ளின் த‌லைந‌க‌ர‌ங்க‌ள்,அமெரிக்காவில் இருக்கும் 81 மாநில‌ங்கள்,பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தவர்கள் அணிந்திருந்த உடையின் நிறம்,பேசிய வார்த்தைகள் முதற்கொண்டு,தூக்க‌த்தில் எழுப்பி கேட்டாலும் சொல்வேன். (ரெம்ப ஓவரா போயிட்டமோ.. )

அவ்வளவு அறிவாளியா நீங்க
//

அது நா இல்லீங்க...என்ன வுட்ருங்க..

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
ஓ.கே..வீட்டுக்கு கிளம்புறேன்.

டிரைவர் காலிங்...
//

Bye அ.மு.செய்யது!!

நசரேயன் said...

//என்ன செய்ய மற்றவர்கள் சொல்ல மாட்டாங்க அதான் நானே சொல்லிக்கறேனாக்கும்//

பாதிக்கிற சாக்கிலே கேட்கிறவன் காது கைமா ஆகிவிடும் என்பதால் ..

sakthi said...

நசரேயன் அண்ணா டீ சாப்பிட்டாச்சா

RAMYA said...

//
நசரேயன் said...
//22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போ எந்த புத்தகமும் படிக்க நேரம் இல்லைங்க. ஆனா எனதன்புத் தோழி அமிர்தவர்ஷிணி அம்மா பரிசாகக் கொடுத்தது சிவசங்கரி அம்மா எழுதின "சிறு கதை தொகுப்பு" என்ற புத்தகம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்துக் கொடுள்ளேன்.//

அதிலே இருந்து சுட்ட கதைதானா ??

சில்லுனு ஒரு சவ்வு
//

அடபாவமே அந்த கதை எவ்வளவு நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்லறாங்க. அதே போயி சவ்வுன்னு சொல்லிட்டீங்களே :)

நசரேயன் said...

//அமெரிக்கா.//

நான் மேப்பிலே ௬ட பார்த்தில்லை

அ.மு.செய்யது said...

அ.மு.செய்யது ரெம்ப பெரிசா இருக்கு...

அ.மு.செ நு மாத்திக்கலாம்னு இருக்கேன்..உங்க கருத்துக்களை சொல்லுங்கோ..

sakthi said...

அ.மு.செய்யது said...

//sakthi said...
ப‌ள்ளியில் ப‌டித்த‌ ம‌னப்பாட‌ செய்யுட்க‌ள்,வேதியில் ச‌ம‌ன்பாடுக‌ள்,
வ‌ரலாறு புத்த‌க‌ம் முழுவ‌தும் இருக்கும் வ‌ருட‌ குறிப்புக‌ள்,196 நாடுக‌ளின் த‌லைந‌க‌ர‌ங்க‌ள்,அமெரிக்காவில் இருக்கும் 81 மாநில‌ங்கள்,பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தவர்கள் அணிந்திருந்த உடையின் நிறம்,பேசிய வார்த்தைகள் முதற்கொண்டு,தூக்க‌த்தில் எழுப்பி கேட்டாலும் சொல்வேன். (ரெம்ப ஓவரா போயிட்டமோ.. )

அவ்வளவு அறிவாளியா நீங்க
//

அது நா இல்லீங்க...என்ன வுட்ருங்க..

ஒக்கே விட்டுட்டேன்

கிளம்புங்க

குட் நைட்

டேக் கேர்

sakthi said...

நசரேயன் said...

//அமெரிக்கா.//

நான் மேப்பிலே ௬ட பார்த்தில்லை

நம்பிட்டேன்

RAMYA said...

//
நசரேயன் said...
//படமே வைப்பதில்லைங்க. வைத்தால்தானே மாற்றுவது! //
ஏன் உங்க பாட்டி படம் இல்லையா??
//

இருக்கு அலுவலகத்திலே போயி அதெல்லாம் வச்சுக்குவாங்களா??
நானே அதெல்லாம் வச்சுகிட்டா, வேலை செய்யறவங்க எல்லாம் தாமன்னா படம் வச்சுக்க மாட்டாங்க :)

«Oldest ‹Older   1 – 200 of 309   Newer› Newest»