Tuesday, March 23, 2010

பெண்ணே நீயும் பெண்ணா!!!!!

தோழி ஒருத்தியை வேண்டினேன்!
தேவதை ஒருத்தி வந்தாள்!
தேன் துளிகளையேந்தி...!!


தொய்வென சொன்ன வேளைகளில்
தோள்களை கொண்டு சுமந்திடுவாள்!
பாசத்தின் பராமரிப்பு செலவை
பண்பை தந்து போற்றிடுவாள்...!!


அன்பின் முகவரி ஏந்தி
அண்டைவீட்டை அணுகினேன்!
அவளின் முகவரி தந்து
அனுப்பி வைத்தனர் இங்கு!


நலமா என்று கேட்டிடுவாள்
நலம் என சொல்லும் முன்
நா வறண்டிடுவாள்
நலம் பல நான் எய்திடவே....!!


எங்கள் நட்பை சொல்ல
நாட்குறிப்பெடுக்க
நிரம்பி வழிந்தது
நல்ல செய்திகளே..!!


துயரங்கள் துடைக்கும்
தூயவள் அவள்!
சிறு துரும்புக்கு
தீங்கிழைக்காத தாயவள்!!


உதவி கேட்டு வருவோர்க்கு
உள்ளத்தை இல்லமாய் தந்திடுவாள்!
அமைதி தேடி வருவோரின்
ஆற்றாமை அறிந்து அன்பை தந்திடுவாள்!!


கூர்வாளும் கூர்மையையுமாய்
எங்கள் நட்பு
போர்வாள் கொண்டு
பயணித்த போதும்
காயங்கள் ஏற்படுத்தாத களமானோம்!!


வாழ்க்கை என்னும் வட்டத்தை
வழக்காடு மன்றமாய் கொண்டாலும்
தீர்ப்பு என வரும் போது
நீதி வழுவா நெறிமுறையில்
நன்மை பயப்பாள் நல்குவோர்க்கு!!


அம்மையும் அப்பனும் ஆனவள்!
ஐம்புலன் அடக்க பயின்றிட்டாள்!
அச்சமென்பதை துச்சமாக்கிய
கரப்பான்பூச்சிக்கு பயந்த தைரியசாலி!!


நட்பை கொள்முதல் செய்திட்டு
பரிவை பறிமுதல் செய்கின்றாள்!
கரிசனமே இவள் அரியாசனம்!
அரசியின் கவிதை இவளுக்கு சரியாசனம்!!தோழி தமிழரசி அலங்காரமான வார்த்தைகளின் கோர்வைகளினால் கவிதை ஒன்றை எழுதிக் கொடுக்க, அதை என் பதிவில் அரங்கேற்றம் செய்துள்ளேன்.எழுதி வடிவமைத்துக் கொடுத்த தோழி தமிழரசிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!!


நமக்குள் இருக்கும் நட்பை உயர்ந்த முறையில் வெளிப்படுத்திய உனது பெருந்தன்மைக்கு நான் என்ன கொடுக்க தமிழ்?


என்றென்றும் இதே அன்புடன இருக்க ஆசைப் படுகிறேன் தமிழ். உன் அன்பிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.


Monday, March 1, 2010

ரம்யாவும் தோழிகளும்!!!

மகளிர் அணி!!அப்பாடா ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு இடுகை பப்ளிஷ் பண்ணியாச்சு.. எவ்வளவு தடவை படிச்சாலும் அருமையா இருக்குதே!இதுக்கு பின்னூட்டங்கள் வந்து குவியும்ன்னு தோணுது. ரொம்பதான் எதிர் பாக்கிறோமோ??ஆமா!! ஆமா! ம்ம்ம்ம்.. எழுதினதையே படிச்சு படிச்சு எழுத்தெல்லாம் காணாமல் போயிடப் போகுது!!

நம்மளே சும்மா சும்மா படிச்சிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கு? இருந்தாலும் படிக்காமல் இருக்க முடியலையே?

இன்னொருமுறை படிச்சுடலாம். என்ன எழுத்தெல்லாம் காணமல் போய்டுச்சு. அட இதென்ன கூத்து? கண்ணை கசக்கிகிட்டு பார்த்தா எழுத்தெல்லாம் லேசா தெரியுது, அழிஞ்சி போகல! நமக்கு பசியும் தூக்கமும்தான் கண்ணை கெடுத்துடுச்சு. இருக்கும்... இருக்கும்... சரி... ஒரு வாய் சாப்பிடலாம்..

அட இந்த நேரம் பார்த்து கைபேசி சிணுங்குதே! யாரா இருக்கும்?? வணக்கம் யாருங்க??
நானு ஆறும் இல்லை ஏழும் இல்லை!

அதென்னா வணக்கம்? ஹலோ சொல்லக் கூடாதா ??

அது இருக்கட்டும் நீங்க யாருன்னு சொல்லவேயில்லே! நான் ஹலோ சொல்ல மாட்டேன்....

ஏன் சொல்லமாட்டீங்க?

சொல்லமாட்டேன்னா சொல்லமாட்டேன் விட்டுடுங்களேன், வேணும்னா அதுக்கு தனியா ஒரு இடுகை போடறேன்... ஆமா நீங்க யாரு.....

சனியனே! நான்தான் உன்னோட பிரண்டு லதா பேசறேன்.. மண்டு மண்டு என்னோட குரல் உனக்கு தெரியலையா? ஆமா உன்னோட ப்ளாக்லே புதுசா ஏதாவது எழுதி இருக்கியா?

அட அதுக்குள்ளே படிச்சிட்டியா! எப்படி இருந்துச்சு சொல்லு சொல்லு..

அட நீ வேறே இப்போதான் என்னோட குழந்தைங்க, ராஜ் எல்லாரும் தூங்க போனாங்க. கம்யுட்டரை ஆன் பண்ணலாம்னு யோசிக்கும்போது உன்னோட நினைவு வந்திச்சி. அதான் நீ ஏதாவது எழுதி அதை நான் படிக்காம போனா நாளைக்கு போன் பண்ணி திட்டுவியேன்னு பயம் வந்திச்சி. அதான் போன் பண்ணி கன்பார்ம் பண்ணிகிட்டேன்.

அடபாவி மவளே! என்னோட இடுகை படிச்சிட்டு பாராட்ட போன் பண்றேன்னு நினைச்சேன், கடைசியிலே இப்படி கவுத்திட்டியேடி

இல்லேப்பா! எனக்கு நேரமே இல்லே ரொம்ப பிஸி...

சரி சரி எனக்கு வேறே போன் வருது.. இரு உன்னை அப்புறமா வச்சுக்கிறேன்! போனை வைடி மொதல்லே!!

வணக்கம் யாருங்க பேசறீங்க??

ஹேய் ரம்யா! நான்தான் விஜி பேசறேன்..

என்னாப்பா எப்படி இருக்கே?? ராம் நல்லா இருக்காரா, வர்ஷா, பப்பு நல்லா இருக்காங்களா?

ரம்யா! எல்லோரும் நல்லா இருக்கோம். அதெல்லாம் இருக்கட்டும் என்ன பதிவு போட்டு இருக்கேப்பா?

ஹையோ! ஹையோ! படிச்சுட்டீங்களா மயிலு?

இல்லே படிக்க நேரமே இல்லே, இந்த புள்ளங்களோட சல்ல தாங்கல! இப்போ புதுசா பஸ் வேறே விட்டிருக்கோம் இல்லையா? அதுலே யாரு எங்கே ஏர்றாங்க, எங்கே இறங்குராங்கன்னு கவனிக்கவே நேரம் பத்தலை! இதுலே இதெல்லாம் வேறே செய்யனுமா?

நானும்தான் அந்த பஸ்சுலே காசு போட்டு இருக்கேன். மறந்து போச்சா மவளே மயிலு! ஆனா டிரைவர் கண்டக்டர் மேலே ஒரு கண்ணு இருக்கட்டும். வெள்ளிக் கிழமைன்னா கலெக்சன் அதிகமா இருக்கும்! உஷாரு...! உஷாரு....!!

அது சரி, என்னோட இத்தனை பிஸி செடியூல்லே உன்னோட இடுகையை படிக்கலைன்னு என்னை நீ தப்பா நினைப்பியா என்ன? அதான் கேட்டேன் ரொம்ப நாள் ஆயிடுச்சே.. எழுதுவியா இல்லே ப்ளாக் எழுதறதையே நிறுத்திடுவியா??

அடபாவி மக்கா! இப்படி எல்லாம் முடிவோட ஒரு கூட்டமே அலையுது போல! எம்மா தாயே விஜி இரு, நான் அப்புறமா உனக்கு போன் போடறேன். இப்போ யாரோ கூப்பிடறாங்க...

ஓ சரி சரி!! வந்தவங்களை கவனி...

அடபோப்பா போன்லே கூப்பிடறாங்க..

அப்பா நான் தப்பிச்சேன்!

என்னா சொன்னீங்க?

இல்லே சரின்னு சொன்னேன்..

ம்ம் அது.... வணக்கம் யாருங்க பேசறீங்க?

நான்தான் டெல்லியில் இருந்து பேசறேன்..

டெல்லியில் இருந்தா? பிரைம் மினிஸ்டர் ஆபிசிலே இருந்தா பேசறீங்க? என்னோட ப்ளாக் அவ்வளவு தூரம் பரவிடுச்சா? சரி யாரு பேசறீங்க ??

என்னை பேசவிட்டாதானே நான் யாருன்னு சொல்லுவேன்? அதுக்குள்ளே கற்பனையா? அது சரி..

சரி சொல்லுங்க... யாரு?

ஹேய் நான்தான்பா உன்னோட பிரண்டு விக்னேஸ்வரி!

விக்கியா? அட எப்படிப்பா இருக்கே? கண்டிப்பா நான் அடுத்த முறை வரும்போது உங்க வீட்டுக்கு வரேன்.

நாங்க வீடு மாத்தலாம்னு இருக்கோம்! ஆமா உங்க டெல்லி பயணம் எப்போ?

நீங்க வீடு மாத்தினா என்னா? நான் விசாரிச்சிக்கிட்டு வந்துடுவேன்லே!

இல்லேப்பா விசாரிச்சி வர முடியாது. ரொம்ப கஷ்டம் அதான் சொன்னேன்!!

அதெல்லாம் இருக்கட்டும் புதுசா ஒரு இடுகை போட்டு இருக்கேன் படிச்சு பாருங்க.. இடுகை எனக்கே ரொம்ப புடிச்சிருக்கு...

அட என்னாப்பா நீயே எழுதிட்டு உனக்கே புடிச்சிருக்குன்னு சொல்லறே? கேக்க நல்லவா இருக்கு?

அட என்னாப்பா ரொம்ப டேமேஜ் பண்றீங்க? படிச்சுதான் பாருங்களேன்!

ஹல்லோ! ஹலோ! ரம்யா எனக்கு காது கேக்கலை! சத்தமா பேசுங்க?

விக்கி நான் சத்தமாதான் பேசறேன். இதுக்கு மேலே கத்தினா பக்கத்து வீட்டுக்காறாங்க திட்டுவாங்க!! என்னோட ப்ளாக் பாருங்க. புதுசா எழுதி இருக்கேன் படிங்க...

ரம்யா நீங்க பேசறதே எனக்கு காதுலே விழல.. நாளைக்கு பஸ்சுலே மீட் பண்ணுவோம்.. சரியா?

இல்லே விக்கி.. அட போனை வச்சிட்டாங்களே!

வேணும்னே காது கேக்கலைன்னு சொல்லி இருப்பாங்களோ.. ச்சேச்சே! விக்கி அந்த மாதிரி எல்லாம் சொல்ல மாட்டாங்க. நிஜமாவே காதுலே விழல போல.. அட கடவுளே கடைசியிலே இப்படி ஆயிடுச்சே !! ம்ம்ம்ம்.... இப்போவாவது சாப்பிட போலாம்....

மறுபடியும் அலைபேசியின் செல்லச் சிணுங்கல்..

ம்ம்ம்... வணக்கம் யாருங்க பேசறது?

நான்தான் சித்தூரிலே இருந்து தமிழரசி பேசறேன்! நல்லா இருக்கியாடா?

ஐயோ! தமிழ் எப்படி இருக்கீங்க?

ஐயோ தமிழா! என்னாச்சு ரம்யா? ஏதாவது பிரச்சனையா??

இல்லேப்பா சந்தோஷத்துலே ஐயோன்னு கத்திட்டேன்!

பார்த்து அக்கா பயந்திடப் போறாங்க!

அக்கா தூங்கிட்டாங்க தமிழ்!

ஆமா எவ்வளவு நேரமா உனக்கு போன் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் தெரியுமா?? ஒரே பிஸி.. அலுத்து போயிட்டேன் போடா!!

இல்லே வரிசையா நிறைய பேரு பேசினாங்க தமிழ்..

நிறைய பேரு பேசினாங்களா? என்னாச்சு ரம்யா?

ஒண்ணும் ஆகலை! நீங்க ஏன் அப்பப்போ அதிர்ச்சியாறீங்க தமிழ்? நான் ஒரு இடுகை போட்டிருக்கேன் இல்லையா?

அப்படியா எனக்கு தெரியாதே! சொல்லவே இல்லே?

இப்பதான் சொல்றேனில்லே அப்புறம் என்ன? இடுகை போட்டிருக்கேன். படிங்க, படிச்சிட்டு சொல்லுங்க! ஏன்னு கேளுங்க? இந்த இடுகை எனக்கு ரொம்ப புடிச்சிது..

என்ன பேசறே ரம்யா?? நீ எழுதினதுதானே உனக்கு புடிக்காமலா பப்ளிஷ் பண்ணுவே!

என்ன தமிழ் படிங்க படிச்சிட்டு சொல்லுங்க....

ஹையோ சாரி ரம்யா எங்க வீட்டுலே நெட் புட்டுகிச்சி. நானே என்னோட இடுகையை பப்ளிஷ் பண்ண முடியலையேன்னு உக்காந்திருக்கேன். போர் அடிச்சிதுன்னு உனக்கு போன் பண்ணினேன்.

அடபாவி சொர்ணாக்கா!! இது பரவா இல்லையா? எங்கேயாவது சென்டர்லே போய் படிங்க!

அதெல்லாம் ரொம்ப தூரம்.. போக முடியாது!

மாமாவை ஆபிஸ் போகும் போது ட்ராப் பண்ணச் சொல்லுங்க

மாமா ஊரிலே இல்லையே!!

அட போங்கப்பா!! இப்ப என்ன பண்றது? பேசாம இங்கே கிளம்பி வந்திடுங்க.. எங்க வீட்டுலே படிக்கலாம்.

அதுசரி குழந்தைங்களுக்கு ஸ்கூல் இல்லையா?? உன்னோட பதிவு படிக்கறதுதான் ரொம்ப முக்கியமா? என்ன ரம்யா நீ ரொம்ப சின்னப் பிள்ளைத்தனமா பேசறே!

வரட்டும் அப்போ படிக்கறேன்.. எப்படியும் நீ அடுத்த இடுகை போட ஒரு மாதம் ஆகும். உன்னோட இடுகையை எப்போ படிச்சாலும் புரியும். சரி எனக்கு தூக்கம் வருது.. போனை கட் பண்ணட்டாப்பா??

இல்லைன்னா மட்டும் என்ன பண்ணபோறீங்க? ம்ம்ம் வைங்கோ!!