தாள லயத்தோடு இசைப்பதிலா
ஜதிக்கேற்ப நடனம் அமைப்பதிலா
ஜதிக்கேற்ப ஆடும் நாட்டியத்திலா
மழையில் நனைந்து மகிழ்வதிலா
மழலையின் மந்தகாஸ சிரிப்பிலா
மழலையின் குதலைப் பேச்சிலா
மகளின் மணக்கோலத்திலா
மதியை விழுங்கும் மலையின் வீரத்திலா
மலைக்கு போர்வையான பனியை ரசித்த தருணத்திலா
மரத்தில் ரீங்காரமிடும் பறவைகளின் சப்த்தத்திலா
தோகை விரித்து ஆடும் மயிலின் ஆட்டத்திலா
அன்னைக்கு அகம் அமைப்பதிலா
பிறர்க்கு தானம் தர்மம் செய்வதிலா
எண்ணங்களை எழுத்தாய் வடிவமைப்பதிலா
வர்ணங்கள் பல நம்மைச் சுற்றி வருவதிலா
இல்லத்தை செல்வத்தால் நிரப்புவதிலா
இயந்திர வாழ்க்கையை இனிமையாக்குவதிலா
இந்திரன் சந்திரன் என்ற புகழ் வார்த்தைகளாலா
இல்லாததை திடீரென்று அடையும் தருணத்திலா
தங்கத்திடம் தஞ்சம் புகுவதிலா
தான தர்மங்கள் செய்வதிலா
தத்துவம் சொல்வதினாலா
தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் தருணத்திலா
நாணயம் நம்மைத் தேடி வருவதிலா
நன்றி மறவா தன்மையினாலா
நடப்பை உச்சத்தில் உணரும் சமயத்திலா
நஞ்சை கண்டு நகரும் தருணத்திலா
வீடு நிறைந்து உலா வரும் விருந்தினர்களாலா
வீடு நிறைய பணத்தை சேர்த்த மகிழ்ச்சியிலா
பிறரிடம் நீ காட்டும் அன்பிலா
எதிரி உன்னிடம் காட்டும் அன்பிலா
வானவில்லின் வண்ணத்தில் மயங்கும் தருணத்திலா
கண்சிமிட்டும் விண் மீன்களை ரசிக்கும் தருணத்திலா
விண்ணைத் தொட்டு பறக்கும் விமானத்தை ரசிக்கும் தருணத்திலா
மாற்றாந்தாயின் மாறா அன்பிலா
ஆடம்பரச் செலவுகளின் உச்சத்திலா
டிஸ்கி: எங்கே?? எங்கே?? எங்கே கிடைக்கும் தெரிந்தவர்கள் கூறுங்கள். இது கவிதை அல்ல எனது மனதில் ஓடிய சந்தேகங்களின் தொகுப்பு. எதில் சொர்க்கம் என்பதை எனக்கு உணர்த்துங்கள் நண்பர்களே!!
என் தேடுதலுக்கு பதில் கிடைக்கும் என்று ஏங்கும் உங்கள் (கேப்டன் ஸ்டைலில்)ரம்யா... ம்யா... யா.. யா