Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Friday, March 6, 2009

இருள் மறைந்து ஒளி பிறந்தது !!



விண்ணில் மின்னிய
நட்சத்திர பட்டாளங்களை
கார் மேகம் சூழ்ந்து
காரிருளில் விழுங்கியது


விதி வீறு கொண்டு எழுந்து
வீர விளையாட்டுக்கு விரைந்து செல்ல
வழியன்றி தவித்த தாரகை
தோன்றினாளோ கண் முன்னே

காத்திருந்த கால தேவன்
கண்விழித்தான் மெல்ல
இருளில் மூழ்கிய என்னை
கட்டி அணைத்தான் மெல்ல

திக்கெட்டும் நோக்கினான்
நோக்கும் திசையெல்லாம்
திக்கில்லா தோன்றியது நானே
இறுக்கிட்டான் அணைப்பை

கலியுகத்தேவன் அசைந்திட்டான் மெல்ல
கதிரவனை நோக்கினான்
காரிருளை போக்கினான்
ஜொலித்தன விண்மீன்கள்

காரிருள் அகன்றன
காலத்தேவனால் அல்ல
மழைமேகங்கள் சூழ்ந்தன
கலியுகத்தேவனால் அன்றோ

சூல் கொண்ட மேகம்
மழை நீரை பிரசவிக்க
நீர் கொண்ட விழிகள்
கண்ணீரை காணிக்கையாக்க

பிழைத்து வந்த என்னை
காத்திருந்த என் அன்னை
உச்சி முகர்ந்தாளே - இரு கரம்
கூப்பி வணங்கிட்டாளே மீட்டவனை




Monday, March 2, 2009

படம் பார்த்து கதை சொல்லுங்க!!!

இயற்கையின் யதார்த்தம்

ஆஹா நந்தவனத்தில் நடப்பதே ஒரு தனி சுகம்தான்!!


நீங்களும் கொஞ்சம் வாங்க இந்த மலர்களை ரசிக்க!!




நண்பர்களின் விளையாட்டில் யார் தான் மயங்கி நிற்க மாட்டார்கள்??


ஆஹா தண்ணீரில் நடப்பது என்பதே ஒரு தனி ஆனந்தம்தான்.



இயற்கையின் சீற்றம், யார் மீது கோவம்??



ஐயோ!! நான் கட்டிய வீடு சிதைந்து விட்டதோ??


நான் ஓடுவதோ என் உணவிற்காக!!!


நான் ஓடுவதோ என் உயிருக்காக!!!