Showing posts with label காதல் கவுஜை - கன்னி முயற்சி. Show all posts
Showing posts with label காதல் கவுஜை - கன்னி முயற்சி. Show all posts

Tuesday, December 9, 2008

தொலைந்த காதலனின் கனவுகள்!!!

தீபத்து ஒளியிலே
தென்பட்ட உன்முகம்
கோடி மின்னல்களை கொண்டிருக்க
ஒளி தாங்காமல் திகைத்த நான்

வெளியே வந்து மதியை நோக்க
அங்கே மதி தன் ஒளி மங்கி நிற்க
மதியின் ஒளி மங்கைக்கு இடம் பெயர
அதனால் மதியின் குளிர்ச்சி குறைந்து
இயற்கை திகைத்து நிற்க

மங்கையின் மதி வதனத்தில் மயங்கிய நான்
அப்படியே அந்த அழகு சிலையை
சித்திரமாக வடிக்க
வடித்த சித்திரத்தில் மயங்கி நின்ற நான்
என்னிலை மறந்தேன்

நாட்கள் பல ஓடின
மாதங்கள் சில ஓடின
என்னை மறந்த நிலையை
நான் விலக்கி விட்டு

ஓடோடி வந்தேன் உன்னை காண
விதியின் கொடுமை என்னவென்பேன்
கால சக்கர சுழற்சியில்
என் கை நழுவி போனாய் நீ

மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மலர்ந்து சிரிக்கின்றாய்
நீ சிரித்தால் தீபாவளி
நான் அழுதால் கண்வலி

உன் வழியில் நான் வந்து
முடிந்த என் ஒரு தலை காதலை
புதுப்பிக்க நியாயம் இல்லையே
மறக்க வேறு எதை நினைக்க
உன்னையே நினைக்க மனம் ஏங்குதே

மறக்க வருடங்கள் பல ஆகலாம்
தினம் தினம் வரும் உன் நினைவு
தரும் தொல்லைகளை
நான் என்ன செய்ய

உன்னை பார்த்த அந்த முதல் நாள்
மதி மயங்கிய அந்த ஒருநிமிடம்
மீண்டும் மீண்டும் வேண்டும்
என்கிறது என் மனம்

மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன்

நான் உணர்ந்த இந்த உண்மையை
உறதி செய்தேன் ஒரு நாள்
தாடியை வளர்க்கவில்லை ஆனால்
நான் ஒரு கலியுக தேவதாஸ்

உன்னையே நினைத்து உருகி உருகி
காதலால் மனம் கசிந்து
என்னை மறந்து,
என் நினைவுகள் துறந்து...

அடுத்து ஒரு தீப ஒளிக்காக காத்திருக்கிறேன் ......

மொக்கையானாலும் ஒட்டு போடுங்க