
இந்த படம் நாங்க எடுக்கலை அங்கே இருந்து வாங்கி வந்தேன். ஏன்னா நாங்க சென்ற போது கொஞ்சமாகத்தான் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
திருக்காரிக்கரை (காரியாற்றின் கரையிலுள்ள ஊர். எனவே 'காரிக்கரை' . என்றாயிற்று) தற்போது மக்கள் "ராமகிரி" என்று அழைக்கின்றனர்.
அழகிய பசுமை நிறைந்த ஊராகத் திகழ்கிறது.
இங்குள்ள நந்தியின் வாயிலிருந்து இடையறாது நீர் கொட்டிக் கொண்டேயுள்ளது. இந்நீர் (தீர்த்தக்) குளத்தில் நிரம்பி 'காரியாறு' என்றும் பெயருடன் ஓடுகிறது. இங்கிருந்து கோனே ஃபால்ஸ் பயணமானோம்.
செல்லும் வழி எல்லாம் நண்பர்கள் பட்டாளம். அவர்களை பார்த்தவுடன் மனதிற்குள் ஒரே குஷியாகிப் போனது. பாருங்க குழந்தையை எவ்வளவு அழகா வச்சிக்கிட்டு இருக்காங்க.
அம்மா தண்ணீர் அருந்தும் போது குழந்தையும் சேர்ந்து தண்ணீர் குடித்ததை காண மிகவும் அழகாக இருந்தது..
நந்தி வாயில் இருந்து வரும் தண்ணீர் இப்படி குளமாகிறது. அதில் எல்லாரும் குளிக்கறாங்க!!
NOTE: கோனே ஃபால்ஸ் ஆந்திராவைச் சேர்ந்த அருமையான சுற்றுலா தளம். சென்னையில் இருந்து சுமார் 60KM தொலைவில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த புத்தூரில் இருந்து 10KM தொலைவில் அமைந்துள்ளது. நுழை வாயிலில் அழகிய வளவு அமைத்திருக்கிறார்கள். அதில் "கைலாசானாதா கோனே ஃபால்ஸ்" என்று எழுதி இருக்கும்.



























