Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Monday, August 10, 2009

நான் பெற்ற வலையுலக விருதுகள்!!

நன்றிகள் பல கோடி மக்கா!!




''சுவாரஸ்ய வலைப்பதிவு விருதினை'' நண்பர் ஜீவன், அன்புத்தம்பி சுரேஷ், அன்புத்தம்பி கனகராஜ் பாண்டியன் மூவரும் எனக்கு இந்த விருதினை வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் மூவருக்கும் என் நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.

என் பதிவுகளையும் சுவாரஷ்யமாக்கியத்திற்கு...

மிக்க நன்றி ஜீவன்
மிக்க நன்றி சுரேஷ்
மிக்க நன்றி கனகராஜ் பாண்டியன்

ரூல்ஸ் படி நான் இந்த விருதினை ஆறு பேருக்கு வழங்க வேண்டும். ஆனா எல்லோரும் இந்த விருதினை வாங்கி விட்டார்கள். வாங்காதவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. அதனால்........

என் நண்பர்கள் அனைவருக்கும் இந்த விருதினை தர விரும்புகிறேன்! எனது நண்பர்கள் அனைவரும் இந்த விருதினை பெரிய மனது பண்ணி ஏற்றுக் கொள்ளுங்கள்!

தனிப்பட்ட முறையில் இந்த ரெண்டு அவார்டுகளையும் எனதன்பு சகோதரர்கள் அண்ணன் வணங்காமுடி மற்றும் S.குமார் இருவருக்கும் கொடுக்க ஆசைப் படுகிறேன். இது வரை இந்த அவார்டுகள் இந்த இருவருக்கும் சேரவில்லை என்று நம்பி கொடுக்கிறேன். இவர்கள் இருவருக்கும் கொடுக்கும் விருதுகளின் பெயர்கள் முறையே ! "Interesting Blog Award" AND "This Blogger Is My Best Friend"

இந்த இருவருக்கும் ஒரு வேண்டுகோள்!!

நீங்கள் எவ்வளவு பேருக்கு கொடுக்க ஆசைப் படுகிறீர்களோ அவ்வளவு பேருக்கும் கொடுக்க தடை ஏதும் இல்லை சகோதரர்களே!!
அதே போல் சிறந்த நட்புக்கான "This Blogger Is My Best Friend" விருது, எனது அன்புச் செல்லம் தோழி தாரிணிப்ரியா எனக்கு கொடுத்தது. விருதுக்கு நன்றி தாரிணி. மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதீத கனவுகளோடு தாரிணியுடன் கூட்டு சேர்ந்து எனது சமையல் கலையை உலகறிய பரப்ப வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த கனவுக்கு நல்ல ஆப்பு வச்சிட்டாங்க. ஏன்னா அலுவலகத்தில் ஆணி அதிகமாகிவிட்டது. அதனால் என்னோட சமையல் கலை திறமையை முழுவதுமாக வெளிப்படுத்த முடியவில்லை. அதுக்காக எனக்கு சமைக்கத் தெரியாது என்று சில எதிர் கட்சிகள் தவறுதலாக பிரச்சாரம் செய்வதாக அறிந்தேன். இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே :)

ஆனா மக்கா இவங்க சொல்றதை எல்லாம் நம்பாதீங்க. நான் ரொம்ப நல்லா சமைப்பேன். என்னோட சமையல் பாகம் நள மகராஜவோட கம்பேர் பண்ற அளவுக்கு பிரபலம். (என்ன செய்யறது யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க அதான் நானே சொல்லிக்கறேன்) அதுலே பாருங்க (இதெ V.K.ராமாசாமி ஸ்டைல்லே படிக்கவும்) நான் ஒரு தக்காளி சாம்பார் வைப்பேன், அதோட வாசனையை உணர்ந்தவர்கள் பனிரெண்டு இட்லி தின்பது உறுதிங்க.என்னோட சமயல் அருமை தெரிஞ்சிக்கோங்களேன் ப்ளீஸ்பா :))

சரி நம்ப மாட்டேங்கிராங்கப்பா! ம்ம் இதெல்லாம் கடந்து வந்து ஜெயிக்கணும் என்று ஒரு முடிவிற்கு வந்து விட்டேன். ஒரு நாள் நானே சமைச்சு எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொல்றவங்களை எல்லாம் வரிசையா உக்கார வச்சி சாப்பாடு போடபோறேன். :))


தாரிணி நன்றி, மறுபடியும் சமையல் அறையில் நான் ஒரு கலக்கு கலக்க விரைவில் வருகிறேன்!!!

அடுத்து ஏதாவது விருது கொடுத்தா அதோட சேர்த்து முடிப்பு ஏதாவது கொடுத்தீங்கன்னா எனக்கு உதவியா இருக்கும் :))

அதையும் போட்டோ எடுத்து ப்லாக்லே போட்டுக்கறேன் ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி...

விருது கொடுத்த அனைவருக்கும் நன்றிப்பா!!
உங்கள் ரம்யா........

Tuesday, May 19, 2009

ரம்யாவின் "Will To Live" ஒரு வயது!


"WILL TO LIVE" வின் ஆண்டு நிறைவு!!


வலையுலகத்திற்குள் கால்கள் பதித்து இன்றோடு வருடம் ஒன்று ஆகிவிட்டது. எனக்கு நண்பர்கள் எண்ணிக்கை அதிகமானதற்கு காரணம் யார்? பெரிய கேள்விக்குறி? இல்லை! இல்லை! என்னோட வலைப்பதிவான "WILL TO LIVE" இவங்க தான் காரணம்.
நன்றி! "WILL TO LIVE"

ஒரு வயது முடிந்துவிட்ட நிலையில் இன்று என்னைச் சற்றே திரும்பி பார்க்க வைக்கின்றது எனது "Will To Live".

என்ன சாதித்தேன்! எதை அடைந்தேன்! இந்த கேள்விகளுக்கு என்னால் பதில் கண்டிப்பாகச் சொல்ல முடியும். சாதித்தது பலரின் நெருங்கிய தோழியாகிப் போனது, அடைந்தது சகோதர மற்றும் சகோதரிகளின் மனதில் நீங்கா அன்பு மற்றும் அக்கறை.

நிறைய நண்பர்கள், சகோதரிகள் இந்த வலையுலகத்தில் கிடைக்கப் பெற்றேன். அதற்கு உதவியாக இருந்த இந்த "Will To Live" என்ற எனது வலைப்பதிவிற்கு வாழ்க! என்ற ஒற்றைச் சொல் போதுமா? இல்லை நன்றி என்ற ஒற்றைச் சொல்தான் போதுமா? போதாது. எந்த ஒற்றைச் சொல்லும் நிறைவைத் தராது.

உங்களின் அனைவரின் நட்பும், அன்பும், வாழ்த்துக்களும் என்னுடன் வரும் வரை நானும் எனது "Will To Live" உங்களுக்கு நன்றி கூறிக் கொண்டே இருப்போம்!

எனது நண்பர்கள், சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் அனைவருக்கும்
"Will To Live" வழியாக ரம்யா நன்றி கூறிக் கொள்கின்றேன்.


நன்றி! நன்றி! நன்றி!