
Wednesday, November 3, 2010
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே!!!

Tuesday, October 26, 2010
சொர்க்கம் எங்கே? எதில்?? எப்போ கிடைக்கும்??
தாள லயத்தோடு இசைப்பதிலா
ஜதிக்கேற்ப நடனம் அமைப்பதிலா
ஜதிக்கேற்ப ஆடும் நாட்டியத்திலா
மழையில் நனைந்து மகிழ்வதிலா
மழலையின் மந்தகாஸ சிரிப்பிலா
மழலையின் குதலைப் பேச்சிலா
மகளின் மணக்கோலத்திலா
மதியை விழுங்கும் மலையின் வீரத்திலா
மலைக்கு போர்வையான பனியை ரசித்த தருணத்திலா
மரத்தில் ரீங்காரமிடும் பறவைகளின் சப்த்தத்திலா
தோகை விரித்து ஆடும் மயிலின் ஆட்டத்திலா
அன்னைக்கு அகம் அமைப்பதிலா
பிறர்க்கு தானம் தர்மம் செய்வதிலா
எண்ணங்களை எழுத்தாய் வடிவமைப்பதிலா
வர்ணங்கள் பல நம்மைச் சுற்றி வருவதிலா
இல்லத்தை செல்வத்தால் நிரப்புவதிலா
இயந்திர வாழ்க்கையை இனிமையாக்குவதிலா
இந்திரன் சந்திரன் என்ற புகழ் வார்த்தைகளாலா
இல்லாததை திடீரென்று அடையும் தருணத்திலா
தங்கத்திடம் தஞ்சம் புகுவதிலா
தான தர்மங்கள் செய்வதிலா
தத்துவம் சொல்வதினாலா
தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் தருணத்திலா
நாணயம் நம்மைத் தேடி வருவதிலா
நன்றி மறவா தன்மையினாலா
நடப்பை உச்சத்தில் உணரும் சமயத்திலா
நஞ்சை கண்டு நகரும் தருணத்திலா
வீடு நிறைந்து உலா வரும் விருந்தினர்களாலா
வீடு நிறைய பணத்தை சேர்த்த மகிழ்ச்சியிலா
பிறரிடம் நீ காட்டும் அன்பிலா
எதிரி உன்னிடம் காட்டும் அன்பிலா
வானவில்லின் வண்ணத்தில் மயங்கும் தருணத்திலா
கண்சிமிட்டும் விண் மீன்களை ரசிக்கும் தருணத்திலா
விண்ணைத் தொட்டு பறக்கும் விமானத்தை ரசிக்கும் தருணத்திலா
மாற்றாந்தாயின் மாறா அன்பிலா
ஆடம்பரச் செலவுகளின் உச்சத்திலா
Monday, October 4, 2010
கேள்விகள் ரம்யா.. மாட்டிக் கொண்டவர் நசரேயன்!!
போச்சி, அப்புறமா அதே பாணியிலே அமெரிக்கா ன்னு தலைப்பிலே வச்சி இடுகைகள் எழுதினேன், அதும் சூட்டுக்கு போச்சி. இப்ப அதையெல்லாம் நினைச்சி பார்த்தா,
இதெல்லாம் ஒரு பொழைப்பா நினைச்சிக்குவேன்.
Sunday, September 5, 2010
மணமகள் தேவை!!!!!

நல்ல வேலையில் அதுவும் இன்று வரை கணினித் துறையில் சிறந்த முறையில் பணி புரிந்து கொண்டிருக்கும் ஒரு ஆனழகனுக்கு மணமகள் தேவை!!
மணமகள் படிப்புத் தகுதி மற்றும் படித்த பல்கலைகழகம்:
கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் எந்த படிப்பு படித்திருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும். மணமகள் கண்டிப்பாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது விதிக்கப் படும் பல விதிகளில் இதுவும் ஒன்று. எந்தத் துறையானாலும் ஏற்றுக் கொள்ளப்படும். அதுவும் உயர் பதவியில் இருப்பது கூடுதல் தகுதியாக கண்டிப்பாகக் கருதப்படும்.
உயர் பதிவியில் இருப்பதினால், அலுவலகத்தில் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் காட்டும் கண்டிப்பும், கெடுபிடியும் என்னிடம் கண்டிப்பாக காட்டக் கூடாது. மீறி காட்டினால் மனித வதை சட்டத்தின் கீழ் யாரிடம் வத்தி வைக்கவேண்டுமோ அதை கச்சிதமாக செய்து முடித்து விடுவேன்.
மணமகள் என்னை விட அதிகம் சம்பளம் வாங்கவேண்டும். மனைவியின் இந்த தகுதியினால் எனக்கு எந்தவித குற்ற உணர்வோ அல்லது மன உளைச்சலோ கண்டிப்பா வராது என்று உறுதி அளிக்கிறேன்.
பின் தூங்கி முன் எழவேண்டும் என்றெல்லாம் கெடுபிடி கிடையாது. எப்பொழுது வேண்டுமானாலும் உறங்கலாம், எப்பொழுது வேண்டுமானாலும் எழலாம். எப்பொழுது எழுந்தாலும் அவங்கதான், காபியிலே ஆரம்பித்து தேவையான எல்லா உணவுகளும் அருமையான சுவையுடன் தயாரித்து விட்டு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். இது கட்டளைன்னு சொன்னா அதுக்கு நான் பொறுப்பு ஆகமாட்டேன்.
வீட்டில் இருந்தபடியே வேலை செய்து கிழிச்சா போதும்ன்னு என்னோட மேனேஜர் சொல்லிட்டார். அதனால் அலுவலகத்திற்கு செல்லும் கெடுபிடி எனக்கு இல்லை. அதுக்காக வீட்டு வேலை எல்லாம் செய்வேன் என்று எதிர் பார்க்கக் கூடாது.
அவங்க அலுவலகத்தில் எல்லாம் கொண்டு ட்ராப் பண்ண முடியாது. அவங்களேதான் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். ஏனெனில் அதே நேரத்தில் என்னோட நண்பர் ஒருவரை தினமும் அலுவலகத்தில் கொண்டு சேர்க்கவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. அதற்காக அவரிடம் கடன் வாங்கி இருப்பதாக எல்லாம் தப்பு தப்பாக எண்ணக் கூடாது. மேலும் என்னோட இந்த நடவடிக்கையிலே குற்றம் கண்டுபிடித்தால் அதுக்கும் நான் பொறுப்பு ஆகமாட்டேன். ஏன், எதுக்கு, என்ன, எப்பொழுது இது போன்ற கேள்விகள் எனக்கு அறவே பிடிக்காது என்பதையும் தைரியமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். மீறி கேட்டாலும் விடை எப்போதும் என்னிடம் கண்டிப்பாக கிடைக்காது. இதுக்கு திமுரு என்றெல்லாம் பட்டம் சூட்டக் கூடாது
நான் என் கணவரைவிட அதிகம் சம்பாதிக்கிறேன் என்ற எண்ணம் எந்த சந்தர்பத்திலும் கண்டிப்பாக வரக்கூடாது. எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்கணும். அடிக்கடி ஹோட்டல், சினிமா, பீச், பார்க் அழைத்துப் போகுமாறு தொந்தரவு பண்ணக் கூடாது. கண்டிப்பாக தோழிகளுடன் கூட எங்கும் செல்லக் கூடாது. ஏனெனில் மனைவியாக வரவிருப்பவள் எப்போதும் என்னை மட்டுமே சார்ந்து இருக்கணும். இதெல்லாம் கண்டிப்பு என முத்திரைக் குத்தக் கூடாது. மீறி எனக்கு தவறான முத்திரை குத்தி தன் தோழிகளிடமோ அல்லது பெற்றோர்களிடமோ போட்டு கொடுத்தால் அதற்கு என் சார்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வருடத்தில் ஒரு முறையாவது ஹோட்டல், சினிமா, பீச், பார்க் இந்த இடங்களுக்கெல்லாம் கண்டிப்பாக அழைத்துச் செல்வேன், என்பதை மிகவும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அடிக்கடி வீட்டுக்கு விருந்திற்கு அழைத்து வருவேன். அவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் ருசியான சாப்பாடு பரிமாறி உபசரிக்கணும். முகத்தில் எப்போதும் மலர்ச்சியையே முன் நிறுத்தி அனைவரிடமும் அன்பாகப் பேசி உபசரித்து வழி அனுப்பவேண்டும். நான் எங்கு வேண்டுமானாலும் எனது தோழிகளுடன் செல்வேன். அது என்னோட சொந்த விருப்பத்தின் கீழ் வருகிறது. அதற்காக் போட்டி மனப்பான்மையுடன் மனைவியாக வரவங்க நடந்துக் கொள்ளக் கூடாது.
மேலே கூறி இருக்கும் எல்லாவற்றையும் மிக கவனமாகவும், சிரத்தையாகவும் படிக்கவும். கூறப்பட்டுள்ள என்னோட விருப்பங்களுக்கு ஒத்துப் போகத் துடிக்கும் மணமகள் உடனே என்னை தொடர்பு கொள்ளலாம். அவசரப்பட்டு ஒத்துக் கொண்டுவிட்டு, திருமணம் முடிந்த பிறகு எனது கொள்கைகள் கேவலமாகத் தெரிந்தாலும் வெளியே யாரிடமும் குறை கூறக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.
நான் ஒரு தடவை சொன்னால் ஆயிரம் தடவை சொன்ன மாதிரி.
இப்படி எல்லாம் நிபந்தனைகளை அள்ளி வீசி மணமகள் தேடும் தனது ஆருயிர் நண்பருக்காக, தானும் களத்தில் இறங்கி மணமகள் தேடும் படலத்தில் ஈடுபட்டிருக்கும் எனது நண்பரின் முழுத் தகவல்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
இந்த அரிய சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன் படுத்திக்கொள்ளப் போகும் மணமகளுக்கு வாழ்த்துக்களை அட்வான்சாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது நண்பரின் அடையாளம் கையிலே துண்டு இருக்கும். அதைப் பார்த்து யாரும் அரசியல்வாதி என்று ஒரு முடிவான முடிவிற்கு வந்து விடாதீர்கள். துண்டு நண்பரின் வாழ்க்கையில் பின்னி பிணைந்த ஒரு அரும்பெரும் பொருள் என்று கூறினால் அது மிகையாகா.
மேலே கூறி இருக்கும் சிறிய கருத்துக்களை மலர்ந்த முகத்துடன் ஏற்றுக் கொள்ளும் மணமகள் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
தெளிவான முகவரி
=================
குண்டக்க மண்டக்க கும்மி அடிப்போர் சங்கம்
என் கனவில் தென்பட்டது (கடை பேரு)
கூகிள் ஆண்டவர் ரோடு
ப்ளாக்ஸ்பாட் குறுக்கு சந்து
தமிழ்மணம் போஸ்ட்
பொறுப்பு அறிவித்தல்: சும்மா படிச்சிட்டு மறந்திடுங்க, நண்பரை திட்டாதீங்க.
Wednesday, August 18, 2010
வைகைப் புயலின் அட்டகாசம் - PART - II

"அவங்க தான் போயி சேர்ந்துட்டாங்களேடா! அதை ஏன் இப்போ நினைனவு படுத்தறே?"
"என்னடி ரொம்ப பீலிங்கி காட்டறயா? இப்படியே அவன பேசவிட்டு அவனோட வாயை பாத்துகிட்டே இரு வெளங்கிடும்"
"நீங்க உள்ளே போயி கை கால் கழுவிகிட்டு வாங்க. கஞ்சி காச்சி வச்சிருக்கேன் ஒரு முழுங்கு குடிச்சிட்டு கடையாண்ட போயிட்டு வந்திடுங்க. சரக்கு வரலைன்னு கடையிலே இருந்து சேகர் மத்தியானமே போன் பண்ணினான். போயிட்டு வாங்க அதுக்குள்ளே சமைச்சிடறேன்
"என்னாது கஞ்சியா ஏண்டி சமைக்கலை?"
"நீங்க இல்லாதனாலே சமைக்கலே கஞ்சிதான் காச்சினேன். இனிமேதான் சமைக்கணும். வேலு அந்த மண்ணெண்னை அடுப்பை பத்தவை, பத்தவச்சா குப்பு குப்புன்னு சத்தம் கேக்குது பாரு"
"ஆமா இவனை போய் இந்த வேலையை செய்ய சொல்றே! அடுப்ப பத்தவக்கறேன்னு சொல்லிட்டு வீட்டையே பத்த வச்சிடப் போறான். யாரு கிட்டே என்ன வேலை வாங்கறதுன்னு உனக்கு வெவஸ்தையே இல்லாமப் போச்சு.."
"வேணாம்க்கா என்னைய நெம்ப மட்டமா நினைக்கவேணாம்னு சொல்லி வை"
"நீங்க ராத்திரிக்குதானே வரதா சொன்னிங்க? அதனாலே மத்தியானம் வெறும் கஞ்சியோட நிறுத்திட்டேன். நெத்திலி மீனும், கருவாடும் வாங்கி வச்சிருக்கேன்; கஞ்சி குடிக்க பிடிக்கலைன்னா..... இருங்க ஒரு அஞ்சு நிமிஷத்திலே சமைச்சிடுறேன், சாப்பிட்டப்பறம் கடைக்குப் போலாம்"
"எனக்கு வேணாம் வடிச்சி உன் தம்பி தலையிலே கொட்டு, ஒரு வேலை செய்ய துப்ப காணோம் நின்னுகிட்டு வேடிக்கை பாக்கறதைப் பாரு"
"நான் உங்க கிட்டேதான் பேசிகிட்டு நிக்கேன், நீங்க ஏன் தம்பியை வம்புக்கு இழுக்குறீங்க?
"ஆமாண்டி அவனை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது அதான்."
"போங்க பெத்த புள்ளையாட்டமா நம்மளையே சுத்தி சுத்தி வாரான் அவனை வையாதீங்க? பாவம் பெத்தவங்களும் போயி சேர்ந்துட்டாங்க, அவனக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ண வேண்டாமா? அதைதான் நான் எப்போதும் யோசிச்சிகிட்டே இருக்கேன்"
"கல்யாணம்.... அதுவும் இவனுக்கு அதுசரி"
"வேணாம் மாமா! நீங்க என்ன வேலை சொன்னீங்களோ அதை நாளைக்கு கச்சிதமா முடிச்சிடுவேன்; சந்தைக்குப் போயி என்ன விக்கணும்? அதை வெவரமா சொன்னா என்னாவாம்?? எதை வித்துட்டு எதை வாங்கணுமோ அதையும் வெவரமா சொன்னா வாங்கியாந்திடுவேன். என்னைய இதுக்கு மேலே எதுவும் சீண்ட வேணாம், அக்கா நீயும் மாமனுக்கு கொஞ்சம் சொல்லி வை"
"ஆமாங்க என்ன பண்ணனும்னு நீங்க சொன்னது எனக்கே புரியல.. இன்னொரு தடவை சொல்லுங்க "
"அது சரி நீ அவனோட அக்காதானே! உனக்கு மட்டும் சட்டுன்னு வெளங்கிடுமா? எல்லாம் என் தலைவிதி; அதாண்டி நம்ம சின்னுவை (கெடாவை) வித்துட்டு ஆட்டுகுட்டி நாலு வாங்கி வரச்சொன்னேன். அதைதான் சுருக்கமா 'வளர்ந்ததை வித்துட்டு வளர்றதை வாங்கிவான்னு சொன்னேனேன்.' ஒண்ணு சொன்னா பத்து புரிஞ்சிக்கவேண்டாம் அவனவன் கோடு போட்டா ரோடு போடறான். நீங்க மட்டும் இன்னும் வெளங்காமையே இருங்க, போடா போ என் முன்னாடி இப்படி நிக்காதே! உங்க கூட பேசியே எவ்வளவு நேரம் ஆச்சு இப்படியே பஞ்சாயத்து வச்சிக்கிட்டு இருந்தா ஒருநாள் நானும் வெளங்காம போயிடுவேன். சரி நீ சமைச்சு வை நான் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்"
"சரிங்க சீக்கிரமா வந்துடுங்க"
"ம்ம்ம்... உன் தம்பிக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லி வை"
"ம்ம்ம்ம்... போயிட்டு சீக்கிரமா வந்துடுங்க"
"அப்பாடா மாமா கிளம்பிட்டருக்கா... கிளம்பிட்டாரு.. என்னக்கா எப்ப பார்த்தாலும் இப்படி கடிஞ்சிகிட்டே இருக்காரே! உனக்கு கோவமே வராதாக்கா "
"கடைக்குத்தான் போயி இருக்காரு இரு இப்ப வந்திடுவாரு ஜப்பானுக்கு போயிட்ட மாதிரி சந்தோஷப் படறே!"
"பின்ன என்னக்கா.. எப்ப வாயை தொறந்தாலும் விளங்க மாட்டே, விளங்காமே போயிடுவே, நானும் விளங்க மாட்டேன் இதை தவிர உன்னோட புருஷன் வேறே ஏதாவது பேசி இருக்காரா? என்ன பிரிச்சனைக்கா அவருக்கு ?"
"உனக்கு ரொம்ப திமிருடா, உன்னை சும்மா உக்கார வச்சி சோறு போடறாரே! அதுக்கு நீ இதுவும் பேசுவே இன்னமும் பேசுவே, நாளைக்கு அவரு சொன்ன வேலையை கச்சிதமா முடிக்கிற வழியை பாரு"
"என்ன நீ கூட ரொம்ப கோச்சுக்கரே.. சரிக்கா விடு விடு"
"டேய் வேலு சமைச்சிண்டேடா, கஞ்சியும் குடிக்கலே, சாப்பிட வாடா"
"மாமா வரட்டும் எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம்க்கா"
"அம்மா அப்பா வந்திட்டாரு... வந்திட்டாரு... வந்து பாரு..." இது அந்த தம்பதியரின் சீமந்த புத்திரன் மாது"
"ஏண்டா இப்படி கத்தறே? ஏங்க கை கால் கழுவிகிட்டு வாங்க சாப்பிடலாம்; வேலு கூட நீங்க வரட்டும்னு சாப்பிட காத்திருக்கான்"
"பரவா இல்லையே உன் தம்பிக்கு என் மேலே இவ்வளவு பாசமா? இல்லே நடிக்கிறானா?" பய நம்ம மேலே பாசமாத்தான் இருக்கான் போல, நாமதான் ரொம்ப வேலுவை நோகடிச்சுட்டோமோ இருக்கட்டும்.. இருக்கட்டும்.. இப்படியே இருந்தாதான் அவனை திருத்த முடியும்.
"ஏங்க எப்ப பார்த்தாலும் அவனை ஏதாவது சொல்லிகிட்டே இருக்கீங்க?
"சரி சரி சோத்தைப் போடு. ஏண்டா நிக்கறே இப்படி உக்காரு"
"இருக்கட்டும் மாமா நீங்க மொதல்ல சாப்பிடுங்க நானும் அக்காவும் அப்பறமா சாப்பிட்டுக்குறோம்."
"அட இங்கே பாருய்யா! அக்கா மேலே கரிசனத்தை.. அடச்சே உக்காந்து சாப்பிடு.."
"சரிங்க மாமா...." அப்பாடா... அப்பாடா....!! சாப்பிட்டு முடிச்சாச்சு. நல்ல சாப்பாடு கருவாட்டு குழம்பும், நெத்திலி வருவலும் எம்புட்டு நல்லா இருக்கு, அக்காவுக்கு அப்படியே நம்ம அம்மாவோட கை பக்குவம். பாவம் அக்கா இந்த சிடுமூஞ்சியை கட்டிக்கிட்டு அல்லாடுது....
"என்னடா யோசிக்கற மாதிரி நடிக்கறே? மனசுக்குள்ளே என்னைய திட்டிகிட்டு நிக்கிறியா?
"நான் ஏன் உங்களை திட்டபோறேன், நாளைக்கு போப்போற என்னோட வேலையை பத்தி யோசிக்கிறேன்"
"ஆமா நீ யோசிச்சிட்டாலும்.. அதை ஏன் இங்கே நின்னுகிட்டு செய்யறே"
"சரி நன் யோசிக்கலை டிவி பார்கலாமுல்லே"
"ம்ம்ம்ம்.. என்னமோ செய்யி, செய்யறது உனக்கே நல்லா இருந்தா சரி"
"ஏன் மாமா நீங்க மட்டும் டீவி பாக்கறீங்க நானும் கொஞ்சம் நேரம் பக்ககூடாதா.."
"மாமா... மாமா... இங்கே நின்னுகிட்டு என்ன பண்றீங்க? என்னடா அங்கே நின்னா உங்கப்பா கேள்வி கேக்கறாரு, இங்கே நின்னா நீ கேள்வி கேக்கறே? ஏண்டா உங்க குடும்பமே எல்லாரும் ஒரு மார்க்கமாதான் பேசுவீங்களா?
"என்னாது குடும்பமா? யாரை சொல்றீங்க? எங்க அம்மா, அப்பா, தாத்தா, சித்தப்பா, பெரியப்பா, சின்ன அத்தை, பெரியத்தை, எங்க பாட்டி, சின்ன தாத்தா எல்லாரையும் சொல்றீங்களா? இருங்க இதை எங்கப்பாகிட்டே சொல்றேன்"
டேய் இருடா.. இருடா... ஏண்டா! இப்படி வில்லங்கமாவே யோசிக்கறே? கொஞ்சம் சின்னபுள்ளையா யோசிக்க மாட்டியா?
"நான் சின்ன புள்ளையா? ஒன்பதாவது படிக்கிறேன் தெரியுமுல்லே? அது சரி நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க மாமா?"
"நானா? நிறைய படிச்சிருக்கேன்."
"அதான் எது வரைன்னு கேக்குறேனுல்லே!"
"அதா அது வந்து.. வந்து இல்லே.. அதை சொன்னா உனக்கு புரியாது"
"சொல்லுங்க எனக்கு நல்லாவே புரியும்"
இவன் போற ரூட்டே சரி இல்லே, எப்படியாவது பேச்சை மாத்தியாகணும், "டேய் டீவிலே ஒரு பொண்ணு பேசிகிட்டு நிக்குதே என்ன சொல்லுது?"
"ஐயோ மாமா இது கூட விளங்கலையா? சர்தான்... அந்தக்கா ஒன்னும் பேசிகிட்டு நிக்கலை? வானிலை அறிக்கை சொல்லிக்கிட்டு இருக்காங்க"
"என்னவாம்? மழை வருமா வராதா?
"வரும்... ஆனா வராது..."
"டேய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்ன என்கிட்டவேவா?"
"சரி சரி கோச்சுக்காதீங்க வாங்க நான் கொல்லப்பக்கம் போனும்"
"எதுக்குடா நான் வரமாட்டேன் போ, இந்த நேரத்துலே அங்கே வர பயந்து வருது "
"ஏன்? நான் சின்ன பையன் எனக்குதான் பயம் உங்களுக்குமா?"
"கொஞ்ச நேரம் முன்னாடிதானேடா பெரிய பையன்னு சொன்னே? இப்போ சின்ன பையனாயிட்டியா?"
"அதெல்லாம் எனக்கு தெரியாது வாங்கன்னா வாங்க. இல்லேன்னா அப்பா கிட்டே சொல்லிடுவேன். அப்பா... அப்பா..."
"டேய் வாயை மூடுடா, வந்து தொலைக்கிறேன்"
"மாமா உங்க கையி ஏன் இப்படி நடுங்குது"
"நீ ஏண்டா என் கையை புடிக்கறே? மொதல்லே கையை விடு, போ போயி வேலையை முடிச்சிட்டு வந்து தொலை"
"டப் டப் டப டப டப்"
"ஐயோ மாமா யாரோ இருட்டுலே இருக்காங்க.. ஓடுங்க.. ஓடுங்க.."
"ஐயோ யாருடா அது? எங்கே நிக்கறாங்க? ஓடியா.. ஓடியா.. ஆத்தாடி மூச்சு வாங்குதே"
"வேகமா ஓடுங்க மாமா அவங்க இப்போ சத்தமில்லாம நம்ப பின்னாடி வராங்க போல இருக்கு"
"ஓட முடியலடா! ஆமா எங்கேடா நிக்கறாங்க? புளியமரத்துகிட்டேவா இல்லே வேப்பமரத்துகிட்டேவா ? அது சரி........ ஒரு ஆளா இல்லே இரண்டு மூணு பேரா? எதுக்கு அங்கே நிக்கறாங்க?
"மாமா எனக்கு என்ன தெரியும்? யாரோ கை தட்டினாங்க உங்களுக்கு கேக்கலையா? அதான் நான் உங்களை ஓடச் சொன்னேன்"
"என்னா கை தட்டினாங்களா லூசுப் பயலே! லூசுப் பயலே! கை தட்டினது வேறே யாரும் இல்லை நான்தான்டா"
"என்ன நீங்க கை தட்டினீங்களா? நீங்கதான் லூசு மாமா! ஏன் மாமா கை தட்டினீங்க? "
"அது இல்லேடா, ராத்திரியிலே இந்த மாதிரி இடத்துலே நடக்கும் போது இப்படிதான் கை தட்டிகிட்டே போகணும்"
"எதுக்கு கை தட்டனும்?
"ராத்திரியிலே அது.. அது.. ப்ரீயா சுத்தும்! நம்மளை பாத்தவுடனே பாசக்கார பயலுகன்னு ஒரே போடா போட்டுடும். அதுக்காகத்தான் இப்படி கையை தட்டிகிட்டே போனா வழியிலே நிக்காம ஓடிடும், புரிஞ்சுதா?"
"டேய் எங்கேடா இருக்கே நான் தனியாதான் பேசிகிட்டு இருக்கேனா?"
"மாமா நான் இங்கே இருக்கேன். பயப்படாதீங்க, இருங்க வந்திடறேன்"
"சரிடா! பயபடாம சீக்கிரமா வா"
"கை தட்டுங்க மாமா எனக்கு பயந்து வருதே!" இந்த மாமா ரொம்ப பயப்படறாரே லேசா பயமுறுத்தி பார்ப்போம். நினைத்து முடிப்பதற்குள் வித்தியாசமான சத்த கேட்க ஆரம்பிக்குது. அட இது என்ன சத்தம்? இதுவும் மாமாவோட வேலையா இருக்குமோ? அந்த சத்தம் வர்ற திக்கு நோக்கி கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் மாது.
"சர சர சர சர சர சர...."
"என்னடா கை தட்ட சொன்னா சருகுமேலே நடக்கற, ஓரமா வாடா, எனக்கு பயந்து வருது"
"மாமா நான் எங்கே சருகு மேலே நடக்கறேன், நான் கிணத்துப் பக்காமால்லே நிக்கறேன்"
"ஐயோ அப்படின்னா என்னா சத்தம் இது? எனக்கு புரிஞ்சி போச்சு"
"என்னா மாமா புரிஞ்சி போச்சு?"
"என்னாடா கேள்வி எனக்கு வயத்தை கலக்குது. வரவேண்டியது வந்துடுச்சு போல! ஓடியா... ஓடியா..... ஓடியா... ஓடியாடா ஓடலாம்... "
டிஸ்கி:நண்பர்கள் வளருமா என்று பயந்ததால், அவர்களின் பயத்தை போக்க இந்த தொடரை முடிக்கிறேன். எழுதற ஃப்ளோ கட்டுப் படுத்த முடியாமல் பீரிட்டு வந்தாலும்:)நண்பர்களின் நன்மையைக் கருதி, என்னோட ஆணிகளுக்கும் மதிப்பு கொடுத்து முடிக்கிறேன் :)
சுபம்
ரம்யா...
Tuesday, August 10, 2010
வைகைப் புயலின் அட்டகாசம்!!

தம்பியும் அக்காவும் பாக்குற ஸ்டைலை பார்த்தீங்களா? வாங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன பிரச்சனைன்னு பார்க்கலாம்!!
"அப்பாடா என்ன வெயிலு என்ன வெயிலு தாங்க முடியலைடா சாமி"
"என்னாடா திண்ணையிலே உக்காந்துகிட்டு பொலம்பறே"
"என்னக்கா என்னைய பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?"
"என்னடா நான் கேள்வி கேட்டா நீ என்னைய கேள்வி கேக்கறே? வர வர உனக்கு பதில் சொல்ற பழக்கமே இல்லாம போச்சு!"
"ஆமா நான் தெரியாமத்தான் கேக்கறேன் வெயில்லே அலஞ்சி, திரிஞ்சி இப்படி கருத்து போயி வந்திருக்கேனே! தம்பியை உள்ளே கூட்டிகிட்டு போயி கொஞ்சம் மோரோ இல்லே இளநீரோ கொடுக்கப்பிடாது, திண்ணையிலே குத்த வச்சு கேள்வியா கேக்கறே?"
"ஏண்டா கறுத்து போயிட்டியா? எங்கே என்னைய பார்த்து சொல்லு"
"சரி சரி விடு இதை போய் பெரிசு படித்திகிட்டு.. போக்கா போ உள்ளே ஏதாவது வேலை இருந்தா பாரு"
"நாங்க எல்லாம் வேலை பார்த்திகிட்டுதான் இருக்கோம் அதை நீ சொல்ல வேண்டாம்..."
"சரி சரி எங்களுக்கும் வேலை வந்திடுச்சில்லே!"
"என்னாடா அதிசயமா இருக்கு உனக்கு வேலை வந்திடுச்சா? எங்கேயிருந்து வந்திச்சிடா? ரயில் ஏறி வந்துச்சா? இல்லே லாரி ஏறி வந்துச்சா? மூஞ்சியையும் மொகரகட்டையும் பாரு"
"இங்க பாரு நீயே இவ்வளவு கேவலமா உன் தம்பியை பேசலாமா? உக்காந்து யோசிக்கா யோசி"
"ஆமாண்டா எனக்கு வேறே வேலை இல்லை பாரு உன்னைய பத்தி யோசிக்கத்தான் பொறந்திருக்கிறேனாக்கும், சோம்பேறி! போ போய் கஞ்சி வச்சிருக்கேன் ஊத்தி குடி"
"என்னாது கஞ்சியா? சோறு இல்லையா? கஞ்சி எவனுக்கு வேணும்? பசி வயத்தை கிள்ளுதே.."
"டேய் ராத்திரிக்குத்தான் சோறாக்குவேன், இப்போ கஞ்சிதான்"
"என்னக்கா இப்படி செஞ்சிட்டே, கூட்டாளி வாசு சாப்பிட்டு போன்னு சொன்னான்.. நான் தான் எங்க அக்கா சமைச்சி வச்சிக்கிட்டு காத்திருக்கும்னு சொல்லிட்டு வந்தேன்! நீ என்னாடான்னா கஞ்சியை தூக்கி என் தலையிலே ஊத்தி சீக்காளி ஆக்கிடுவே போல இருக்கே?"
"உனக்காக எதுக்குடா நான் காத்திருக்கணும்? உங்க மாமா ஊரிலே இல்லே தெரியுமில்லே! இப்போ வார நேரம்தான்! மணி என்ன ஆகுது? இந்நேரத்துக்கு போய் சோத்துக்கு சண்டை போடறே? போ அந்த கஞ்சியை குடிச்சிட்டு, மாட்டு தொழுவத்தை கொஞ்சம் கழுவி விடு, எனக்கு இடுப்பு வலி தாங்கலை, ஒருத்தியாவே எம்புட்டு வேலைதான் செய்வேன்! அக்காவுக்கு ஏதாவது ஒத்தாசையா இருக்கணும்னு உனக்கு தோணுதா? போடா போ மொறைக்காதே"
"என்னாது ஒத்தாசையாவா? அதுவும் மாட்டுத் தொழுவத்தை நான் கழுவனும் அது சரி? மொத்தத்துலே நான் வீட்டு வேலை செய்யணும்னே முடிவு பண்ணிட்டியா? மாமா கிட்டே சொல்லி ஏதாவது வேலை போட்டு கொடுக்கச் சொல்லாம இந்த மாதிரி பேச்சை பேச எங்கே கத்துகிட்டே? ஏதோ அக்காவா இருக்கியேன்னு என்னோட கோவத்தை காட்டலை! எனக்குன்னு ஒரு நாதியும் இல்லே! உங்க ஊட்டோட இருக்கேன்னு உங்க எல்லாருக்கும் என்னைய பார்த்தா கேவலமாத்தான் இருக்கு!"
Saturday, July 31, 2010
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!

நட்பு என்ற ஏணியைக் கொண்டு இமயத்தையும் எட்டிடுவேனே!!

நட்பு என்ற பாலத்தைக் கொண்டு ஏழு கடலையும் கடந்திடுவேனே!!
துன்பத்தில் துவண்டு போகும் தருணங்களில், கைகோர்த்து தோள் சாயும்போது புது அவதானிப்பை உணர்கின்றேனே !!
காலங்கள் கடந்து போகும், உறவுகள் மறந்து போகும், மலர்கள் உதிர்ந்து போகும், காட்சிகள் மறைந்து போகும் ஆனால் இறுதிவரை நம்முடன் வருவது நட்பு ஒன்றே!
சிந்திக்க வைத்து, சிரிக்க வைத்து, இன்பத்திலும் துன்பத்திலும் உடன்வந்து உருகவைப்பதும் நட்பு ஒன்றே!!
அனைத்து நட்புள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!
என்றும் உங்கள் ரம்யா!!
Wednesday, June 30, 2010
Wedding Query........ ........ (SQL Style)
HUSBANDS QUERY
CREATE PROCEDURE MyMarriage (
BrideGroom Male (25) ,
Bride Female(20) )AS
BEGIN
SELECT Bride FROM india_ Brides
WHERE FatherInLaw = 'Millionaire'
AND Count(Car) > 20 AND HouseStatus ='ThreeStoreyed'
AND BrideEduStatus IN (B.TECH ,BE ,Degree ,MCA ,MiBA) AND Having Brothers= Null AND
Sisters =Yes

SELECT Gold ,Cash,Car,BankBalance
FROM FatherInLaw
UPDATE MyBankAccout
SETMyBal = MyBal + FatherInLawBal
UPDATEMyLocker
SET MyLockerContents = MyLockerContents + FatherInLawGold
INSERT INTO MyCarShed VALUES('BMW')
END
GO
Wife Writes The Below Query:
DROP HUSBAND;
Commit;

ச்சும்மா டைம்பாஸு...
டிஸ்கி: என் தோழி அனுப்பி நான் ரசித்தது, இப்போ உங்களுக்காக...:)
Wednesday, June 23, 2010
கோனே ஃபால்ஸ்!!

இந்த படம் நாங்க எடுக்கலை அங்கே இருந்து வாங்கி வந்தேன். ஏன்னா நாங்க சென்ற போது கொஞ்சமாகத்தான் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
திருக்காரிக்கரை (காரியாற்றின் கரையிலுள்ள ஊர். எனவே 'காரிக்கரை' . என்றாயிற்று) தற்போது மக்கள் "ராமகிரி" என்று அழைக்கின்றனர்.
அழகிய பசுமை நிறைந்த ஊராகத் திகழ்கிறது.
இங்குள்ள நந்தியின் வாயிலிருந்து இடையறாது நீர் கொட்டிக் கொண்டேயுள்ளது. இந்நீர் (தீர்த்தக்) குளத்தில் நிரம்பி 'காரியாறு' என்றும் பெயருடன் ஓடுகிறது. இங்கிருந்து கோனே ஃபால்ஸ் பயணமானோம்.
செல்லும் வழி எல்லாம் நண்பர்கள் பட்டாளம். அவர்களை பார்த்தவுடன் மனதிற்குள் ஒரே குஷியாகிப் போனது. பாருங்க குழந்தையை எவ்வளவு அழகா வச்சிக்கிட்டு இருக்காங்க.



நந்தி வாயில் இருந்து வரும் தண்ணீர் இப்படி குளமாகிறது. அதில் எல்லாரும் குளிக்கறாங்க!!
NOTE: கோனே ஃபால்ஸ் ஆந்திராவைச் சேர்ந்த அருமையான சுற்றுலா தளம். சென்னையில் இருந்து சுமார் 60KM தொலைவில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த புத்தூரில் இருந்து 10KM தொலைவில் அமைந்துள்ளது. நுழை வாயிலில் அழகிய வளவு அமைத்திருக்கிறார்கள். அதில் "கைலாசானாதா கோனே ஃபால்ஸ்" என்று எழுதி இருக்கும்.
Monday, June 21, 2010
பெருமாளும், பருப்பு போளியும்!!!


ஏதோ பருப்பு, போளி தராங்கன்னு ஓடி வந்தா தாரிணியை தாக்கி, ரம்யாவை தாக்கி, சின்ன அம்மிணியை தாக்கி ம்ம்ம்.. இந்த விஜிக்கு ஓவர் குறும்பு.
உங்கள் முன் சிரித்துக் கொண்டு வலம் வரும் இந்த ரம்யா சந்தித்த வேதனைகள்தான் எவ்வளவு?இந்த முன்னேற்றம் காண இடையில் ஏற்பட்ட தடங்கல்கல்தான் எவ்வளவு? ஏமாற்றங்கள்தான் எவ்வளவு? அவமானங்கள்தான் எவ்வளவு? எதுவுமே எண்ணிலடங்கா! கணக்கிலடங்கா! அந்த சூழ்நிலையில் தள்ளப்பட்ட நான், எழ முடியாமல் முடக்கப்பட்ட நான்,எப்படி சாதரணமாக நடமாட முடிந்தது? அந்த தைரியமும் துணிச்சலும் கொடுத்தது யார்? எங்கோ ஏதோ அண்டத்தில் இருக்கும் அரூவமான உருவம்தான் என்று என்னால் கூற முடியும்!
என உள்ளத்தில் ஒரு மூலையில் ஒளிக் கீற்றாய் அவ்வப்போது வந்து போகும் ஒரு ஜ்வாலைதான் எனக்கு மனதில் ஒரு நம்பிக்கையை கொடுத்தது. ரம்யா இதில் இருந்து மீண்டு வா! நடந்து வா! ஓடி வா! இந்த உணர்வுகளால் நான் திகைத்தேன். உன்னால் முடியும் என்று அவ்வப்போது அழைத்துக் கொண்டே இருந்தது. அந்த ஒளி அளித்த வெளிச்சத்தில் நான் மெதுவாக மிக மெதுவாக என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை விதையை மனதில் மிகவும் ஆழமாக பதித்தேன்.

Saturday, June 19, 2010
அதனாலென்ன!!
விடிய விடிய படித்தும்
விளங்காமல் போன பாடங்கள்
விடிந்ததும் கேலி செய்ததே!
****
வாழ்க்கைப் பாதைகளில்
வரைந்து வைத்த ஓவியம் போல்
கால இறகு பூக்களை தூவி வைத்ததே!
****
எந்த வடிவமும் பிடிப்பதில்லை
நான் மனதில் வடித்த
உன் முகம் தவிர
****
மலை உச்சிக்கு சென்று
உயிரை துறக்க நினைக்க
ஏதோ ஒன்று மனதை மாற்றியதே!
****
தேர்வுத் தாள்களில்
எழுதிய எழுத்துக்கள்
செல்லுபடியாகாமல் பரிசாக்கியது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே!
****
ஒரிஜினல் கவிதை எழுதியவர் ஈரோடு கதிர்: அவரின் வேறென்ன
கதிருக்கு எதர் கவிதை எழுதியவர்கள் ஏழு பேரு என்று சொன்னார்கள் அவர்கள் பின் வருமாறு:
கதிர் (ஒரிஜினல் கவிதை ): வேறென்ன?
பழமைபேசி: பிறகென்ன?
நிஜம்மா நல்லவன்: வேறென்ன?
இயற்கை ராஜி: நானில்லாமலென்ன?
வானம்பாடிகள்: கதிருக்கு எதிரு
நட்புடன் ஜமால் : அதனாலென்ன!!
விவசாயி: அதுக்கென்ன?
இவங்களோட சேர்த்து நானும் எழுதி இருக்கேன்.... நீங்க படிச்சிருப்பீங்க :)
எனக்கு தெரிஞ்சி இவ்வளவு பேருதான் எழுதி இருக்கோம். இன்னும் எவ்வளவு பேரு எழுதி இருக்காங்கன்னு இப்போ நிலவரப்படி தெரியல:) பொறுத்திருந்து பார்ப்போம்:)