Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Wednesday, August 18, 2010

வைகைப் புயலின் அட்டகாசம் - PART - II

வைகைப் புயலின் பிரச்சனை இன்னமும் முடிந்த மாதிரி தெரியல!! ம்ம்ம்... என்னான்னு பார்க்கலாம் வாங்க....


"என்னாது காலை உடைப்பீங்களா, சரிக்கா ரொம்ப சரி உன்னைய நம்பி ஆத்தாளும், அப்பனும் அனுப்பி வச்சாங்க பாரு அவங்களை சொல்லணும்"

"அவங்க தான் போயி சேர்ந்துட்டாங்களேடா! அதை ஏன் இப்போ நினைனவு படுத்தறே?"

"என்னடி ரொம்ப பீலிங்கி காட்டறயா? இப்படியே அவன பேசவிட்டு அவனோட வாயை பாத்துகிட்டே இரு வெளங்கிடும்"

"நீங்க உள்ளே போயி கை கால் கழுவிகிட்டு வாங்க. கஞ்சி காச்சி வச்சிருக்கேன் ஒரு முழுங்கு குடிச்சிட்டு கடையாண்ட போயிட்டு வந்திடுங்க. சரக்கு வரலைன்னு கடையிலே இருந்து சேகர் மத்தியானமே போன் பண்ணினான். போயிட்டு வாங்க அதுக்குள்ளே சமைச்சிடறேன்

"என்னாது கஞ்சியா ஏண்டி சமைக்கலை?"

"நீங்க இல்லாதனாலே சமைக்கலே கஞ்சிதான் காச்சினேன். இனிமேதான் சமைக்கணும். வேலு அந்த மண்ணெண்னை அடுப்பை பத்தவை, பத்தவச்சா குப்பு குப்புன்னு சத்தம் கேக்குது பாரு"

"ஆமா இவனை போய் இந்த வேலையை செய்ய சொல்றே! அடுப்ப பத்தவக்கறேன்னு சொல்லிட்டு வீட்டையே பத்த வச்சிடப் போறான். யாரு கிட்டே என்ன வேலை வாங்கறதுன்னு உனக்கு வெவஸ்தையே இல்லாமப் போச்சு.."

"வேணாம்க்கா என்னைய நெம்ப மட்டமா நினைக்கவேணாம்னு சொல்லி வை"

"நீங்க ராத்திரிக்குதானே வரதா சொன்னிங்க? அதனாலே மத்தியானம் வெறும் கஞ்சியோட நிறுத்திட்டேன். நெத்திலி மீனும், கருவாடும் வாங்கி வச்சிருக்கேன்; கஞ்சி குடிக்க பிடிக்கலைன்னா..... இருங்க ஒரு அஞ்சு நிமிஷத்திலே சமைச்சிடுறேன், சாப்பிட்டப்பறம் கடைக்குப் போலாம்"

"எனக்கு வேணாம் வடிச்சி உன் தம்பி தலையிலே கொட்டு, ஒரு வேலை செய்ய துப்ப காணோம் நின்னுகிட்டு வேடிக்கை பாக்கறதைப் பாரு"

"நான் உங்க கிட்டேதான் பேசிகிட்டு நிக்கேன், நீங்க ஏன் தம்பியை வம்புக்கு இழுக்குறீங்க?

"ஆமாண்டி அவனை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது அதான்."

"போங்க பெத்த புள்ளையாட்டமா நம்மளையே சுத்தி சுத்தி வாரான் அவனை வையாதீங்க? பாவம் பெத்தவங்களும் போயி சேர்ந்துட்டாங்க, அவனக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ண வேண்டாமா? அதைதான் நான் எப்போதும் யோசிச்சிகிட்டே இருக்கேன்"

"கல்யாணம்.... அதுவும் இவனுக்கு அதுசரி"

"வேணாம் மாமா! நீங்க என்ன வேலை சொன்னீங்களோ அதை நாளைக்கு கச்சிதமா முடிச்சிடுவேன்; சந்தைக்குப் போயி என்ன விக்கணும்? அதை வெவரமா சொன்னா என்னாவாம்?? எதை வித்துட்டு எதை வாங்கணுமோ அதையும் வெவரமா சொன்னா வாங்கியாந்திடுவேன். என்னைய இதுக்கு மேலே எதுவும் சீண்ட வேணாம், அக்கா நீயும் மாமனுக்கு கொஞ்சம் சொல்லி வை"

"ஆமாங்க என்ன பண்ணனும்னு நீங்க சொன்னது எனக்கே புரியல.. இன்னொரு தடவை சொல்லுங்க "

"அது சரி நீ அவனோட அக்காதானே! உனக்கு மட்டும் சட்டுன்னு வெளங்கிடுமா? எல்லாம் என் தலைவிதி; அதாண்டி நம்ம சின்னுவை (கெடாவை) வித்துட்டு ஆட்டுகுட்டி நாலு வாங்கி வரச்சொன்னேன். அதைதான் சுருக்கமா 'வளர்ந்ததை வித்துட்டு வளர்றதை வாங்கிவான்னு சொன்னேனேன்.' ஒண்ணு சொன்னா பத்து புரிஞ்சிக்கவேண்டாம் அவனவன் கோடு போட்டா ரோடு போடறான். நீங்க மட்டும் இன்னும் வெளங்காமையே இருங்க, போடா போ என் முன்னாடி இப்படி நிக்காதே! உங்க கூட பேசியே எவ்வளவு நேரம் ஆச்சு இப்படியே பஞ்சாயத்து வச்சிக்கிட்டு இருந்தா ஒருநாள் நானும் வெளங்காம போயிடுவேன். சரி நீ சமைச்சு வை நான் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்"

"சரிங்க சீக்கிரமா வந்துடுங்க"

"ம்ம்ம்... உன் தம்பிக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லி வை"

"ம்ம்ம்ம்... போயிட்டு சீக்கிரமா வந்துடுங்க"

"அப்பாடா மாமா கிளம்பிட்டருக்கா... கிளம்பிட்டாரு.. என்னக்கா எப்ப பார்த்தாலும் இப்படி கடிஞ்சிகிட்டே இருக்காரே! உனக்கு கோவமே வராதாக்கா "

"கடைக்குத்தான் போயி இருக்காரு இரு இப்ப வந்திடுவாரு ஜப்பானுக்கு போயிட்ட மாதிரி சந்தோஷப் படறே!"

"பின்ன என்னக்கா.. எப்ப வாயை தொறந்தாலும் விளங்க மாட்டே, விளங்காமே போயிடுவே, நானும் விளங்க மாட்டேன் இதை தவிர உன்னோட புருஷன் வேறே ஏதாவது பேசி இருக்காரா? என்ன பிரிச்சனைக்கா அவருக்கு ?"

"உனக்கு ரொம்ப திமிருடா, உன்னை சும்மா உக்கார வச்சி சோறு போடறாரே! அதுக்கு நீ இதுவும் பேசுவே இன்னமும் பேசுவே, நாளைக்கு அவரு சொன்ன வேலையை கச்சிதமா முடிக்கிற வழியை பாரு"

"என்ன நீ கூட ரொம்ப கோச்சுக்கரே.. சரிக்கா விடு விடு"

"டேய் வேலு சமைச்சிண்டேடா, கஞ்சியும் குடிக்கலே, சாப்பிட வாடா"

"மாமா வரட்டும் எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம்க்கா"

"அம்மா அப்பா வந்திட்டாரு... வந்திட்டாரு... வந்து பாரு..." இது அந்த தம்பதியரின் சீமந்த புத்திரன் மாது"

"ஏண்டா இப்படி கத்தறே? ஏங்க கை கால் கழுவிகிட்டு வாங்க சாப்பிடலாம்; வேலு கூட நீங்க வரட்டும்னு சாப்பிட காத்திருக்கான்"

"பரவா இல்லையே உன் தம்பிக்கு என் மேலே இவ்வளவு பாசமா? இல்லே நடிக்கிறானா?" பய நம்ம மேலே பாசமாத்தான் இருக்கான் போல, நாமதான் ரொம்ப வேலுவை நோகடிச்சுட்டோமோ இருக்கட்டும்.. இருக்கட்டும்.. இப்படியே இருந்தாதான் அவனை திருத்த முடியும்.

"ஏங்க எப்ப பார்த்தாலும் அவனை ஏதாவது சொல்லிகிட்டே இருக்கீங்க?

"சரி சரி சோத்தைப் போடு. ஏண்டா நிக்கறே இப்படி உக்காரு"

"இருக்கட்டும் மாமா நீங்க மொதல்ல சாப்பிடுங்க நானும் அக்காவும் அப்பறமா சாப்பிட்டுக்குறோம்."

"அட இங்கே பாருய்யா! அக்கா மேலே கரிசனத்தை.. அடச்சே உக்காந்து சாப்பிடு.."

"சரிங்க மாமா...." அப்பாடா... அப்பாடா....!! சாப்பிட்டு முடிச்சாச்சு. நல்ல சாப்பாடு கருவாட்டு குழம்பும், நெத்திலி வருவலும் எம்புட்டு நல்லா இருக்கு, அக்காவுக்கு அப்படியே நம்ம அம்மாவோட கை பக்குவம். பாவம் அக்கா இந்த சிடுமூஞ்சியை கட்டிக்கிட்டு அல்லாடுது....

"என்னடா யோசிக்கற மாதிரி நடிக்கறே? மனசுக்குள்ளே என்னைய திட்டிகிட்டு நிக்கிறியா?

"நான் ஏன் உங்களை திட்டபோறேன், நாளைக்கு போப்போற என்னோட வேலையை பத்தி யோசிக்கிறேன்"

"ஆமா நீ யோசிச்சிட்டாலும்.. அதை ஏன் இங்கே நின்னுகிட்டு செய்யறே"

"சரி நன் யோசிக்கலை டிவி பார்கலாமுல்லே"

"ம்ம்ம்ம்.. என்னமோ செய்யி, செய்யறது உனக்கே நல்லா இருந்தா சரி"

"ஏன் மாமா நீங்க மட்டும் டீவி பாக்கறீங்க நானும் கொஞ்சம் நேரம் பக்ககூடாதா.."

"மாமா... மாமா... இங்கே நின்னுகிட்டு என்ன பண்றீங்க? என்னடா அங்கே நின்னா உங்கப்பா கேள்வி கேக்கறாரு, இங்கே நின்னா நீ கேள்வி கேக்கறே? ஏண்டா உங்க குடும்பமே எல்லாரும் ஒரு மார்க்கமாதான் பேசுவீங்களா?

"என்னாது குடும்பமா? யாரை சொல்றீங்க? எங்க அம்மா, அப்பா, தாத்தா, சித்தப்பா, பெரியப்பா, சின்ன அத்தை, பெரியத்தை, எங்க பாட்டி, சின்ன தாத்தா எல்லாரையும் சொல்றீங்களா? இருங்க இதை எங்கப்பாகிட்டே சொல்றேன்"

டேய் இருடா.. இருடா... ஏண்டா! இப்படி வில்லங்கமாவே யோசிக்கறே? கொஞ்சம் சின்னபுள்ளையா யோசிக்க மாட்டியா?

"நான் சின்ன புள்ளையா? ஒன்பதாவது படிக்கிறேன் தெரியுமுல்லே? அது சரி நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க மாமா?"

"நானா? நிறைய படிச்சிருக்கேன்."

"அதான் எது வரைன்னு கேக்குறேனுல்லே!"

"அதா அது வந்து.. வந்து இல்லே.. அதை சொன்னா உனக்கு புரியாது"

"சொல்லுங்க எனக்கு நல்லாவே புரியும்"

இவன் போற ரூட்டே சரி இல்லே, எப்படியாவது பேச்சை மாத்தியாகணும், "டேய் டீவிலே ஒரு பொண்ணு பேசிகிட்டு நிக்குதே என்ன சொல்லுது?"

"ஐயோ மாமா இது கூட விளங்கலையா? சர்தான்... அந்தக்கா ஒன்னும் பேசிகிட்டு நிக்கலை? வானிலை அறிக்கை சொல்லிக்கிட்டு இருக்காங்க"

"என்னவாம்? மழை வருமா வராதா?

"வரும்... ஆனா வராது..."

"டேய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்ன என்கிட்டவேவா?"

"சரி சரி கோச்சுக்காதீங்க வாங்க நான் கொல்லப்பக்கம் போனும்"

"எதுக்குடா நான் வரமாட்டேன் போ, இந்த நேரத்துலே அங்கே வர பயந்து வருது "

"ஏன்? நான் சின்ன பையன் எனக்குதான் பயம் உங்களுக்குமா?"

"கொஞ்ச நேரம் முன்னாடிதானேடா பெரிய பையன்னு சொன்னே? இப்போ சின்ன பையனாயிட்டியா?"

"அதெல்லாம் எனக்கு தெரியாது வாங்கன்னா வாங்க. இல்லேன்னா அப்பா கிட்டே சொல்லிடுவேன். அப்பா... அப்பா..."

"டேய் வாயை மூடுடா, வந்து தொலைக்கிறேன்"

"மாமா உங்க கையி ஏன் இப்படி நடுங்குது"

"நீ ஏண்டா என் கையை புடிக்கறே? மொதல்லே கையை விடு, போ போயி வேலையை முடிச்சிட்டு வந்து தொலை"

"டப் டப் டப டப டப்"

"ஐயோ மாமா யாரோ இருட்டுலே இருக்காங்க.. ஓடுங்க.. ஓடுங்க.."

"ஐயோ யாருடா அது? எங்கே நிக்கறாங்க? ஓடியா.. ஓடியா.. ஆத்தாடி மூச்சு வாங்குதே"

"வேகமா ஓடுங்க மாமா அவங்க இப்போ சத்தமில்லாம நம்ப பின்னாடி வராங்க போல இருக்கு"

"ஓட முடியலடா! ஆமா எங்கேடா நிக்கறாங்க? புளியமரத்துகிட்டேவா இல்லே வேப்பமரத்துகிட்டேவா ? அது சரி........ ஒரு ஆளா இல்லே இரண்டு மூணு பேரா? எதுக்கு அங்கே நிக்கறாங்க?

"மாமா எனக்கு என்ன தெரியும்? யாரோ கை தட்டினாங்க உங்களுக்கு கேக்கலையா? அதான் நான் உங்களை ஓடச் சொன்னேன்"

"என்னா கை தட்டினாங்களா லூசுப் பயலே! லூசுப் பயலே! கை தட்டினது வேறே யாரும் இல்லை நான்தான்டா"

"என்ன நீங்க கை தட்டினீங்களா? நீங்கதான் லூசு மாமா! ஏன் மாமா கை தட்டினீங்க? "

"அது இல்லேடா, ராத்திரியிலே இந்த மாதிரி இடத்துலே நடக்கும் போது இப்படிதான் கை தட்டிகிட்டே போகணும்"

"எதுக்கு கை தட்டனும்?

"ராத்திரியிலே அது.. அது.. ப்ரீயா சுத்தும்! நம்மளை பாத்தவுடனே பாசக்கார பயலுகன்னு ஒரே போடா போட்டுடும். அதுக்காகத்தான் இப்படி கையை தட்டிகிட்டே போனா வழியிலே நிக்காம ஓடிடும், புரிஞ்சுதா?"

"டேய் எங்கேடா இருக்கே நான் தனியாதான் பேசிகிட்டு இருக்கேனா?"

"மாமா நான் இங்கே இருக்கேன். பயப்படாதீங்க, இருங்க வந்திடறேன்"

"சரிடா! பயபடாம சீக்கிரமா வா"

"கை தட்டுங்க மாமா எனக்கு பயந்து வருதே!" இந்த மாமா ரொம்ப பயப்படறாரே லேசா பயமுறுத்தி பார்ப்போம். நினைத்து முடிப்பதற்குள் வித்தியாசமான சத்த கேட்க ஆரம்பிக்குது. அட இது என்ன சத்தம்? இதுவும் மாமாவோட வேலையா இருக்குமோ? அந்த சத்தம் வர்ற திக்கு நோக்கி கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் மாது.

"சர சர சர சர சர சர...."

"என்னடா கை தட்ட சொன்னா சருகுமேலே நடக்கற, ஓரமா வாடா, எனக்கு பயந்து வருது"

"மாமா நான் எங்கே சருகு மேலே நடக்கறேன், நான் கிணத்துப் பக்காமால்லே நிக்கறேன்"

"ஐயோ அப்படின்னா என்னா சத்தம் இது? எனக்கு புரிஞ்சி போச்சு"

"என்னா மாமா புரிஞ்சி போச்சு?"

"என்னாடா கேள்வி எனக்கு வயத்தை கலக்குது. வரவேண்டியது வந்துடுச்சு போல! ஓடியா... ஓடியா..... ஓடியா... ஓடியாடா ஓடலாம்... "


டிஸ்கி:நண்பர்கள் வளருமா என்று பயந்ததால், அவர்களின் பயத்தை போக்க இந்த தொடரை முடிக்கிறேன். எழுதற ஃப்ளோ கட்டுப் படுத்த முடியாமல் பீரிட்டு வந்தாலும்:)நண்பர்களின் நன்மையைக் கருதி, என்னோட ஆணிகளுக்கும் மதிப்பு கொடுத்து முடிக்கிறேன் :)


சுபம்
ரம்யா...






Tuesday, August 10, 2010

வைகைப் புயலின் அட்டகாசம்!!


அண்ணன் வடிவேலுவை வம்பிற்கு இழுத்து ரொம்ப நாள் ஆச்சா அதான்....!!



தம்பியும் அக்காவும் பாக்குற ஸ்டைலை பார்த்தீங்களா? வாங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன பிரச்சனைன்னு பார்க்கலாம்!!

"அப்பாடா என்ன வெயிலு என்ன வெயிலு தாங்க முடியலைடா சாமி"

"என்னாடா திண்ணையிலே உக்காந்துகிட்டு பொலம்பறே"

"என்னக்கா என்னைய பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?"

"என்னடா நான் கேள்வி கேட்டா நீ என்னைய கேள்வி கேக்கறே? வர வர உனக்கு பதில் சொல்ற பழக்கமே இல்லாம போச்சு!"

"ஆமா நான் தெரியாமத்தான் கேக்கறேன் வெயில்லே அலஞ்சி, திரிஞ்சி இப்படி கருத்து போயி வந்திருக்கேனே! தம்பியை உள்ளே கூட்டிகிட்டு போயி கொஞ்சம் மோரோ இல்லே இளநீரோ கொடுக்கப்பிடாது, திண்ணையிலே குத்த வச்சு கேள்வியா கேக்கறே?"

"ஏண்டா கறுத்து போயிட்டியா? எங்கே என்னைய பார்த்து சொல்லு"

"சரி சரி விடு இதை போய் பெரிசு படித்திகிட்டு.. போக்கா போ உள்ளே ஏதாவது வேலை இருந்தா பாரு"

"நாங்க எல்லாம் வேலை பார்த்திகிட்டுதான் இருக்கோம் அதை நீ சொல்ல வேண்டாம்..."

"சரி சரி எங்களுக்கும் வேலை வந்திடுச்சில்லே!"

"என்னாடா அதிசயமா இருக்கு உனக்கு வேலை வந்திடுச்சா? எங்கேயிருந்து வந்திச்சிடா? ரயில் ஏறி வந்துச்சா? இல்லே லாரி ஏறி வந்துச்சா? மூஞ்சியையும் மொகரகட்டையும் பாரு"

"இங்க பாரு நீயே இவ்வளவு கேவலமா உன் தம்பியை பேசலாமா? உக்காந்து யோசிக்கா யோசி"

"ஆமாண்டா எனக்கு வேறே வேலை இல்லை பாரு உன்னைய பத்தி யோசிக்கத்தான் பொறந்திருக்கிறேனாக்கும், சோம்பேறி! போ போய் கஞ்சி வச்சிருக்கேன் ஊத்தி குடி"

"என்னாது கஞ்சியா? சோறு இல்லையா? கஞ்சி எவனுக்கு வேணும்? பசி வயத்தை கிள்ளுதே.."

"டேய் ராத்திரிக்குத்தான் சோறாக்குவேன், இப்போ கஞ்சிதான்"

"என்னக்கா இப்படி செஞ்சிட்டே, கூட்டாளி வாசு சாப்பிட்டு போன்னு சொன்னான்.. நான் தான் எங்க அக்கா சமைச்சி வச்சிக்கிட்டு காத்திருக்கும்னு சொல்லிட்டு வந்தேன்! நீ என்னாடான்னா கஞ்சியை தூக்கி என் தலையிலே ஊத்தி சீக்காளி ஆக்கிடுவே போல இருக்கே?"

"உனக்காக எதுக்குடா நான் காத்திருக்கணும்? உங்க மாமா ஊரிலே இல்லே தெரியுமில்லே! இப்போ வார நேரம்தான்! மணி என்ன ஆகுது? இந்நேரத்துக்கு போய் சோத்துக்கு சண்டை போடறே? போ அந்த கஞ்சியை குடிச்சிட்டு, மாட்டு தொழுவத்தை கொஞ்சம் கழுவி விடு, எனக்கு இடுப்பு வலி தாங்கலை, ஒருத்தியாவே எம்புட்டு வேலைதான் செய்வேன்! அக்காவுக்கு ஏதாவது ஒத்தாசையா இருக்கணும்னு உனக்கு தோணுதா? போடா போ மொறைக்காதே"

"என்னாது ஒத்தாசையாவா? அதுவும் மாட்டுத் தொழுவத்தை நான் கழுவனும் அது சரி? மொத்தத்துலே நான் வீட்டு வேலை செய்யணும்னே முடிவு பண்ணிட்டியா? மாமா கிட்டே சொல்லி ஏதாவது வேலை போட்டு கொடுக்கச் சொல்லாம இந்த மாதிரி பேச்சை பேச எங்கே கத்துகிட்டே? ஏதோ அக்காவா இருக்கியேன்னு என்னோட கோவத்தை காட்டலை! எனக்குன்னு ஒரு நாதியும் இல்லே! உங்க ஊட்டோட இருக்கேன்னு உங்க எல்லாருக்கும் என்னைய பார்த்தா கேவலமாத்தான் இருக்கு!"

"சரிடா ஏதோ தெரியாம சொல்லிட்டேன், அதுக்கு போயி இவ்வளவு பீல் பண்றே! சரி போ போய் கஞ்சியை குடி மாமா வந்தா உனக்கு வேலைக்கு சொல்றேன்"

"அதெல்லாம் வேணாம்... வேலை நானே தேடிகிட்டேன், நாளைக்கு காலையிலே அஞ்சு மணிக்கி எழுப்பி விட்டா அது போதும், இனிமே சம்பாதிச்சுதான் இந்த வீட்டுலே கையை நனைப்பேன். இன்னைக்கு மட்டும் கொஞ்சமா சாப்பிட்டுக்கிறேன்"

"சரிடா இப்படியே ஒரு ஆயிரம் தடவையாவது சொல்லி இருப்பே! வேலையையும் காணோம் ஒண்ணையும் காணோம். வெட்டிப் பேச்சு பொழைப்புக்கு ஆகாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க"

"எப்பவும் சொல்ற மாதிரி இந்த தடவ சொல்லலை நீ வேண்ணா பாரு! திடீர்ன்னு ஒரு நாள் நான் நெம்ப பெரிய ஆளா வளர்ந்துடுவேன்"

"இப்ப மட்டும் உன்னோட வளர்த்திக்கு என்ன கொறைச்சல்? உன் தலை எங்க வீட்டு நிலைப்படியை முட்டுது. "
"ஏங்க! வாங்க! நேரம் ஆகும்னு சொன்னீங்க, பரவா இல்லையே சீக்கிரம் வந்துட்டீங்க"

"போன வேலை வெள்ளனே முடிஞ்சிடுச்சும்மா அதான் வந்துட்டேன். நான் என்ன சில பேரு மாதிரி வெட்டியாவ ஊரை சுத்த முடியும்? எனக்குன்னு குடும்பம், புள்ள குட்டிங்க இருக்கே"

"இவரு சைட்லே நம்மள தாக்குறாரு?" வேலு இங்கே நிக்காதேடா ஓடிப் போய்டு இல்லேன்னா அந்த கஞ்சிக்கும் ஆபத்து வந்திடும். மனசாட்சி கதற அந்த இடத்தை விட்டு நைசா வேலு நழுவ முயல..

"டேய் எங்கேடா நழுவரே நில்லு இன்னைக்கு பூரா எங்கே சுத்துனே? காட்டுக்கு போனியா? பம்ப்செட் ரிப்பேர்ன்னு சொன்னானே குப்பன், என்ன பண்ணான்னு போய் பார்த்தியா? ஏம்மா நான் காலையிலே உன் கிட்டே சொல்லிட்டு போனேனே! வேலுவை காட்டுக்கு அனுப்புன்னு, வேலுகிட்டே நீ சொல்லலையா? இவன் ஏன் ஒரு மார்க்கமாவே முழிச்சிகிட்டு நிக்கறான்!"

"இல்லைங்க நான்தான் வேலுகிட்டே நீங்க சொன்னதை சொல்ல மறந்துட்டேன், சரி விடுங்க அதை குப்பனே சரி பண்ணிடுவான்"

"ஏங்க நம்ம வேலு நாளையிலே இருந்து வேலைக்கு போகப் போறானாம்"

"அதென்ன நாளையிலே இருந்து? இவ்வளவு நாள் இந்த அறிவு எங்கே போச்சாம்? பாத்துகிட்டே இரு இவனை பார்த்து நம்ம பய கெட்டு குட்டிச் சுவராகபோறான், நீ இவனக்கு ரொம்ப இடம் கொடுத்திட்டே"

"ஏங்க அவனை திட்டனும்னா நேரா திட்டுங்க ஏன் என்னையும் நம்ம புள்ளையையும் சேர்த்து திட்றீங்க?"

"ஆமாண்டி உன் தம்பிதானே! சொன்னவுடனே ரோஷம் பொத்துகிட்டு வந்திடுச்சோ? மொகறையை பாரு அப்படியே ஆடு திருடின கள்ளனாட்டமா முழிக்கிறான்"

"ஏன் மாமா எப்போ பார்த்தாலும் திட்டிகிட்டே இருக்கீங்க? நீங்க வேணா பாருங்க நான் ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் பெரிய ஆளா ஆகப்போறேன் என்ன பண்றதுன்னு தெரியாம திக்கி திணறி திண்டாடப் போறீங்க"

"டேய் இந்த லூசுத்தனமா பேசறதை மொதல்லே நிறுத்து? ஏண்டி உங்கள் குடும்பமே இப்படிதானோ?"

"ஏங்க தம்பியை திட்டனும்னா நல்லா திட்டுங்க! அது இல்லாம ஏன் எங்க குடும்பத்தையே இழுக்குறீங்க? பாருடா உன்னாலே நம்ம குடும்பமே கேவலப்பட்டு நிக்குது? இதெல்லாம் ஒரு பொழப்பான்னு நல்ல யோசிடா!"

"சரி சரி விடு உணர்ச்சி வசப்படாதே இப்ப உங்க குடும்பத்தை பத்தி நான் இல்லாததையும் பொல்லாததையுமா சொல்லிட்டேன்"

"வேணாங்க இதோட இந்த பேச்சை விட்டுடுங்க, என்ன வேலை செஞ்சு முடிக்கனுமோ அதை தம்பிகிட்டே நீங்களே நேரா சொல்லிடுங்க"

"ஏய்! அவங்கிட்டே சொல்ல எனக்கென்ன பயமா? ஒரு வேலை சொல்றேன் அதை நாளைக்கு கச்சிதாமா முடிச்சுகிட்டுவா பார்க்கலாம்"

"அதெல்லாம் முடியாது நாளைக்கு நான் வேலையிலே சேரப்போறேன்"

"அடங்கொன்னியா வீட்டுக்கு உதவியா ஒரு வேலை செய்ய சொன்னா வீம்பா பேசிகிட்டு நிக்கறே? என்னடி இதெல்லாம்? நீயே என்ன வேலைன்னு எடுத்து சொல்லு உன்னோட அருமை தம்பியாண்டான்கிட்டே!"

"ஏங்க நீங்களே அவன்கிட்டே என்ன பண்ணனும்னு சொல்லிடுங்க, அப்பறம் நான் சரியா சொல்லலைன்னு என்னை திட்டுவீங்க"

"சரிடா நாளைக்கு கொஞ்சம் கடைவீதிக்கு போய் உங்கக்காவுக்கு ஏதோ சாமான் வேணுமாம் அதெ வாங்கிகிட்டு, அப்படியே சந்தைக்கு போய் வளர்ந்ததை வித்துட்டு வளர்றதை வாங்கிகிட்டு வா! பணமெல்லாம் சுத்தமா கொண்டு வந்து கொடுத்திடனும் புரிஞ்சுதா?

"என்ன என்ன சொல்றீங்க? ஒண்ணுமே புரியலையே! வித்துட்டு அந்த வார்த்தை மட்டும் புரியுது வேறே எதுவும் புரியல"

"ஆமாண்டா உனக்கு ஒன்னும் புரியாது சாப்பிட மட்டும் வெவரமா புரியும், இந்த கருமத்துக்குதாண்டி உன்னையே விளக்கச் சொன்னேன். அவனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. சரியான கல்லுளி மங்கண்டி உன் தம்பி. புரியாத மாதிரியே உன்னாலே மட்டும் எப்படிடா நடிக்க முடியுது?"

"ஏங்க தம்பிய திட்டிகிட்டே இருக்கீங்க? எனக்கே வெவரம் புரியலையே.. கொஞ்சம் புரியுமபடியா சொன்னாதான் என்னவாம்? தம்பி புரியலன்னா நிதானமா கேட்டுக்கடா"

"வேணாம்க்கா நான் வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டேன் என்னை விட்டுடு அம்புட்டுதான் இப்போதைக்கு என்னால சொல்ல முடியும்"

"நான் சொன்ன வேலையை செய்யலைன்னா இந்த வீட்டுக்குள்ளே இருக்கக் கூடாது மீறி இருந்தா காலை உடைச்சிடுவேன்"

"என்னாது காலை உடைப்பீங்களா, சரிக்கா ரொம்ப சரி உன்னைய நம்பி ஆத்தாளும், அப்பனும் அனுப்பி வச்சாங்க பாரு அவங்களை சொல்லணும்.



வளரும் ரம்யா.....

Wednesday, June 30, 2010

Wedding Query........ ........ (SQL Style)


HUSBANDS QUERY

CREATE PROCEDURE MyMarriage (
BrideGroom Male (25) ,
Bride Female(20) )AS
BEGIN

SELECT Bride FROM india_ Brides
WHERE FatherInLaw = 'Millionaire'
AND Count(Car) > 20 AND HouseStatus ='ThreeStoreyed'
AND BrideEduStatus IN (B.TECH ,BE ,Degree ,MCA ,MiBA) AND Having Brothers= Null AND
Sisters =Yes

SELECT Gold ,Cash,Car,BankBalance
FROM FatherInLaw
UPDATE MyBankAccout
SETMyBal = MyBal + FatherInLawBal

UPDATEMyLocker
SET MyLockerContents = MyLockerContents + FatherInLawGold

INSERT INTO MyCarShed VALUES('BMW')
END

GO


Wife Writes The Below Query:

DROP HUSBAND;
Commit;


ச்சும்மா டைம்பாஸு...

டிஸ்கி: என் தோழி அனுப்பி நான் ரசித்தது, இப்போ உங்களுக்காக...:)


Tuesday, October 27, 2009

நகரங்களும் நம்மளும்!!


நான் இப்போது சில நகரத்தில் நடக்கும் சிறிய நிகழ்வுகளை கூறுகிறேன். நான் கூறும் நிகழ்வுகள் எந்த நகரத்தில் என்று நீங்கள்தான் கூற வேண்டும்!!

நகரம் 1
நான்கு நண்பர்கள் சேர்ந்து பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டிருக்கும்போதே இருவருக்குள் சண்டை வந்துவிட்டது. மூன்றாம் நண்பரும் நான்காம் நண்பரும் அவர்களுடன் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த இருவரின் சண்டை இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஆனால் சண்டை போடும் இருவரில் யாரு கரெக்ட் என்பதில் சண்டை போடாத இருவரும் விவாதம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 2
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். அவர்களுடன் இருந்த மூன்றாவது நண்பர் கண்டுக்காமல் தனியே நடக்க ஆரம்பித்தார்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 3
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். மூன்றாவது நண்பர் அவர்களுக்குள் சமாதானம் செய்ய பல முயற்சிகள் செய்தார். தோல்வியுற்றாலும் முயற்சியை கை விடவில்லை. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்து சண்டை போட்டு கொண்டிருந்த இரெண்டு நண்பர்களும் கூட்டு சேர்ந்து மூன்றாம் நண்பரை அடி பின்னி விட்டார்கள்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 4
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். பெரிய கூட்டம் நின்று அவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. உடன் வந்த மூன்றாவது நண்பர் சத்தம் போடாமல் ஒரு டீ கடையை திறந்து விட்டார். வியாபாரம் கொடிகட்டி பறக்க மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 5
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். உடன் வந்த மூன்றாவது நண்பர் அவர்களின் சண்டையை நிறுத்த உடனே ஒரு சாப்ட்வேர் தயாரிக்கிறார். அவர் தயாரித்த சாப்ட்வேரில் பக் இருந்ததினால் அவர்களின் சண்டையை நிறுத்த முடியாமல் போனது.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 6
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். அவர்கள் போட்டுக் கொள்ளும் சண்டையை மக்கள் கூட்டம் கூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது நண்பர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியில் பொறுமை இழந்து "அம்மா" இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார், தயவு செய்து அமைதி காக்கவும் என்று கெஞ்ச ஆரம்பித்தார்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 7
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். மூன்றாவது நண்பர் ஒரு பெட்டி நிறைய பீர் எடுத்து வருகிறார். அனைவரும் அமர்ந்து பீரை தேவையான அளவு அருந்துகிறார்கள். ஒருவொருக்கொருவர் திட்டிக் கொள்கிறார்கள். முடிவில் நண்பர்களாக அவரவர்கள் வீட்டிற்கு செல்கிறார்கள்....

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 8
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். முடிவில் அவரவர்கள் மொபைல் போனை எடுத்து அவரவர்கள் நண்பர்களை அவர்கள் இருப்பிடத்திற்கு உடனே வருமாறு அழைக்கிறார்கள். இப்பொழுது அங்கே ஐம்பது ஆட்கள் குழுமி விட்டார்கள். முடிவில் அனைவரும் சண்டை போட்டு கொள்கிறார்கள்.

கேள்வி: இது எந்த நகரம்??


டிஸ்கி: இது எனது தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவுக்கு ஒருவர் கேட்டுக் கொள்வது. அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் வெளி இட்டிருக்கிறேன். இது யார் மனதையும் புண் படுத்த அல்ல தமாஷாகப் பேசிக் கொள்வது தமாஷாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.



Monday, July 20, 2009

கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - பகுதி - 2

நம் வலை நண்பர்கள் திடீர் என்று தோன்றும் கிரிக்கெட் மைதானம்!!


பங்கேற்பவர்கள்
==============
கேப்டன்: டோணி
துணை கேப்டன்: ஜீவன்

விளையாடுபவர்களின் நிலைப்பாடு
================================

அம்பயர்
=======



ஆஸ்திரேலியா அணியில் விளையாடுபவர்களின் நிலைப்பாடு (ஆங்கிலத்தில் எழுதினதுக்கு மன்னிக்க)

கேப்டன்: Ricky Ponting
துணை கேப்டன்:Michael Hussey

Michael Hussey (Opening batsman), Matthew Hayden (Opening batsman), Adam Gilchrist (Keeper), Michael Clarke (middle order batsman), Simon Katich (Batsman). Andrew Symonds (All Rounder), Shane Watson (All-rounder), Brad Hogg - (All Rounder), Brett Lee (Bowler), Nathan Bracken (Bowler), Stuart Clark (Bowler)


அம்பயர்
=====
Steve Buckner (West Indies)

துணை கேப்டன் மைதானத்துக்குச் செல்லுமுன் க்லௌஸ் சரியாக உள்ளாதா என்று சரி பார்க்கிறார்.

நான் லவ்டேல் மேடிகிட்டே பேசிகிட்டே திரும்பினதும்! நம்ம அ.மு.செய்யது!

ஹாய் ரம்யாக்கா!! நீங்க எப்போ வந்தீங்க?? உங்களுக்கு விவரமே தெரியாதா? வழக்காமா ஆடறவங்க இல்லாததால, புதுசா ஆட எங்களை எல்லாம் வரசொல்லிட்டாங்க!

ஆனா எங்களைப் பத்தி அவங்களுக்கு (கிரிக்கெட் வாரியம்) விவரம் தெரியாததால எல்லாரும் பயப்படறாங்க.!! அதனால ஆட்டம் ஆரம்பிக்க இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகுமாம்...... இதைச் சொன்னா வெளியே கலவரமாகிப் போகும்னு எல்லாரும் பயப்படறாங்க!!

நான் பயத்துடன்.. அய்யய்யோ...! இவ்ளோ பிரச்சன இருக்கா இங்க....?

ஆமாம்க்கா! நம்ப கேப்டனுக்குகூட இன்னும் எங்களை எல்லாம் தெரியாது. இனிமேல்தான் அறிமுகப் படுத்தபோறாங்க!

ஒ அப்படியா.....??

லவ்டேல் மேடி குறுக்கிட்டு .....) அடங்கொன்னியா....... இந்த அநியாயத்த எங்க போய் சொல்றது.....!! தேனுங் அம்முனி .... நா சொன்னதுல உங்குளுக்கு நம்பிக்க இல்லியா......?? மருவுடியும் போயி அத... ஒரு கொளந்த புள்ளைகிட்ட கேக்குரீங்கோ......??

(சையதுக்கு கோபம் சூடேறுகிறது....!! மேடியை முறைக்கிறார்...!! )

மீண்டும் மேடி...!!! ஊட்டுல....... மம்....... மம் ........... சாபுட்டுகிட்டிருந்த கொளந்தைய அப்புடியே கூட்டியாந்துட்டாங்கோ அம்முனி ............. !!

வரும்போதுதேன் ரெண்டு பாக்கிட்டு டைகர் பிசுகட்ட முளுங்கீட்டு

வந்திருக்குரானுங் ........!! இன்னுமு.... எந்த நேரத்துல எந்த முட்டாய கேப்பான்னு தெரியாம நாங்களே பயுந்துகிட்டு இருக்குரோமுங்க்கோவ்....... ....!!! அங்க பாருங்... முளிக்குற முளிய......!! திருவிழாவுல பலூன திருடுன பய மாதிரி....!!!

மேடி..... சைய்யதிடம் .... ஏனுங் கொலந்தபுள்ள சார்....!! (முணுமுணுத்தல்: நேரமுடா சாமி.....) உங்குளுக்கு எத்தன பாகிட்டு பிசுகோத்து வேணு... எத்தன முட்டாய் வேணுமின்னு மொதவே சொல்லீடிங்கனா... அங்க நம்ம பய போத்தனூர் பொன்னுசாமி இருக்குரானுங் ... அவன்கிட்ட சொல்லி வாங்கியாரச் சொல்ரமுங் .....!!

வெளையாட்டு ஆரம்பிச்சதுக்கு அப்பறமா கேட்டீங்கனா ..... பொன்னுசாமி ஒரு மாதிரியான ஆளுங்க........ கலத்த புடுச்சு கடுச்சு வெச்சுபுடுவானுங்....!!! ஆமாங்.... இப்பவே சொல்லிபோட்டனுங்.....!! (சையது காதில் ரகசியமாக : இங்க பாரு தம்பி... இந்தக்காவ நம்பி பாகிட்டுல இருக்குற முட்டாய வெளியில எடுத்துராத....!! என்ன புருஞ்சுசுதா....)

என்ன மேடி ... சையது காதுல முணுமுணுக்குரிங்க....... !!!

அது ஒன்னுமில்லீங்க்கோவ்....!! இந்த அக்கா நெம்ப நல்லவிங்க.... வல்லவிங்க..... நாலெலுத்து படுச்சவிங்க..... ன்னு சொல்லி
வெச்சேனுங்.....!! நாளையிலிருந்து ... தம்பிய உங்ககிட்டயே டூசன் வரச் சொன்னனுங்கோவ்......!!!!

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மேடி...!! நான் டியூஷன் எல்லாம் எடுக்கறதில்ல.....!!!

ச்சேரிங்க்கா ....!! இந்த கொளந்த புள்ளைகிட்ட என்ன பேச்சு உங்குளுக்கு....!! நீங்க போய்... சித்த கோருங் அப்புடி.....!!!

செய்யது கடுப்பாகி! மேடி.... திஸ் இஸ் டூ மச்....!! என் பேர டேமேஜ் பண்றதே வேலையா போச்சு உங்குளுக்கு.....!!! என்னோட பிரெண்டு வணங்காமுடி வரட்டும்..... அப்பறம் கவனிச்சுக்கறேன் உங்களைய....!!!!

ஓஓஒவ்வ்.......!! இவுங்க ரெண்டு பேரும் .... பெரிய .... கோப்பெருஞ்ச்சோழரு.....பிசிராந்தையாரு.....!! இவுங்க ரெண்டு பேரும் வந்தா .... நாங்க அப்புடியே பயுந்து ஓடிப்போயிருவம்பாரு...!!

நெம்ப ஓவரா பேசுநீனா... சோப்புல இருக்குற முட்டாய புடுங்கீருவன் பாத்துக்கோ....!! அப்பறம் ... குப்பற படுத்துகிட்டு அழுதாலும் ... முட்டாய்
கெடைக்காது ...!!

சைய்யது குறுக்கிட்டு ...... வேண்டாம் நான் அப்புறம் சும்மா இருக்க மாட்டேன். என் கிட்டே வம்பு வச்சுக்காதீங்க........

தம்பி... வேண்டா... நீ ரொம்ப தம் கட்டி பேசற... இது நல்லதுக்கில்ல பாத்துக்க....!!

ராகவன் அண்ணா குரல் குறுக்கிடுகிறது.... லவ்டேல் மேடி, செய்யது இங்கே வாங்க... சீக்கிரமா வாங்க அங்கே என்ன பஞ்சாயத்து! ரம்யா நீ இன்னும் போகலையா?

ஐயோ ராகவன் அண்ணா கூப்பிடறாங்க போங்கப்பா இரெண்டு பெரும். சண்டை வேண்டாமே! ஓகே ஆல் தி பெஸ்ட். சரி அப்புறமா பார்க்கலாம்.. என்று நான் நடையை கட்டினேன் என் தோழிகளை நோக்கி...... !!!

டோணி ராகவன் அண்ணாவை நெருங்கி பேச ஆரம்பித்தார், நீங்க தானே ராகவன்?

ஆமா டோணி நான்தான் ராகவன் இங்கே என்னைத்தான் அம்பயரா நியமிச்சிருக்காங்க, உங்களுக்கு தமிழ் தெரியுமா?

எனக்கு கொன்ச்சம் கொன்ச்சம் தமிழ் தெர்யும் ராகவன். நீங்க தமிழ்லேயே சொல்லுங்க என்று தடால் அடியா டோனி ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்!

ஒ! அப்ப நல்லதா போச்சு. இது தமிழ்நாடு தமிழ் பேசினா எல்லாருக்கும் பிடிக்கும்.....குட்....

சரி இப்போ ஆடப்போரவங்களை நான் உங்களுக்கு அறிமுகப் படுத்தலாமா?

யா! ப்ளீஸ்...

இவர் பெயர் Mr.ஜீவன். இவர்தான் துணை கேப்டன். அருமையா ஆடும் திறமை வாய்ந்தவர் வேகப் பந்து வீச்சாளர். நிறைய விளையாடி பல முறை வெற்றியும் பெற்று,பலவிதமான பரிசுகளையும் வென்றிருக்கிறார். ரொம்ப அமைதியானவர்.

ஒ ஜீவன் வணக்கம்! வாழ்த்துக்கள்!! இந்தியாவிற்காக விளையாடப் போறீங்க. நல்லா விளையாடுங்க. உங்களை இந்த விளையாட்டு பெரிய லெவல்லே கொண்டு செல்ல வேண்டும். ஆல் தி பெஸ்ட்.

நன்றிங்க, நீங்க நல்லா தமிழ் பேசறீங்களே! உங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைச்சேன். என்னை வாழ்த்தியதியத்திற்கு மிக்க மகிழ்ச்சிங்க.

ஓகே ஜீவன் வாழ்த்துக்கள்!!

இவர் பெயர் வால்பையன். இவர் சுழர் பந்து வீச்சாளர். அருமையான பௌலர். நிறைய விளையாடி இருக்கிறார். பரிசுகளும் வென்றிருக்கிறார். ரொம்ப ஜாலி டைப்.

வாட் வால்பையன்? எனக்கு புரியல, என்னா பேரு இது? ஒன் மினிட் ராகவன் இவரு பேரு என்ன? மறுபடியும் சொல்லுங்க.

அய்யய்யோ!! இவருக்கு நான் எப்படி வால்பையனோட பேர புரிய வெக்கறது!!

(லவ்டேல் மேடி குறுக்கிட்டு ரகாவன் அண்ணாவிடம் ) எச்சூஸ்மி ..........!!!! ஏனுங்ணா.....நா வேணுமுனா சார்கிட்ட கொஞ்ச வெலாவாரியா எடுத்து சொல்லுட்டுமுங்களா...??

மேடி அவுருக்கு உங்க பாஷ புரியாது....!!!

அண்ணோவ்..... என்ன இப்புடி சொல்லிபோட்டிங்கோ .....!!!! ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தோணி சாரு ... நம்ம கவண்டம்பாளையத்துக்கு பொண்ணு பாக்க வந்திருந்தாரு..... அப்போ நம்ம காரமட ரங்கசாமிகிட்ட சாரு நெம்ப நேரம் நம்ப கோயம்புத்தூரு பாசையில பேசீட்டிருந்தாருங்ணோவ்......!!!

இஸ் இட்......!!!

நீங்க வேணுமின்னாலும் பாருங் ......!!!

அட... க்க்ம்ம்.... வணக்கமுங் தோணி சார் ....!!!! நா இதுக்கு முன்னாடி உங்களைய டெல்லி மீட்டிங்குல மீட் பண்ணுனது....அப்பறம் இப்பதானுங் சார் பாக்குறன் .....!!!!

வாட் .............??

(ராகவன் அண்ணா கடுப்பாகி....) யோவ் மேடி! வள..வளன்னு பேசாம ... வால் பையன இன்ரொடியூஸ் பண்ணுயா....!!!

செரிங்ணா......!!!!

சார்..... நல்லா பாத்துக்குங்க சார்........ !! இந்த காம்ப்ளக்ஸ் மண்டையன் பேருதானுங் வால் பையன்.......!!!

வால் பையன் கடுப்பாகி... யோவ் மேடி......!! உன்னோட வேலைய பாருயா..... !! நீயெல்லாம் இன்ரொடியூஸ் பன்னுலைன்னு யாருய்யா அழுதா.....!! அவருக்கு யார சொன்னாலும் விளையாடி முடியற வரைக்கும் யாரையுமே தெரியப்போறதில்ல.......!! போய் அந்தா பக்கமா நில்லு....!! நானே என்னோட பேர அவரு புரிஞ்சிக்கலைன்னு வருத்தமா இருக்கேன்....!! இதுலே நீ வேறே.....!!! உன் பேர சொன்னா மட்டும் கிட்டே வா....!!! புருஞ்சுதா.....???

லவ்டேல் மேடி கடுப்பாகி.... அடேய்..... A.....B....C...D.... மண்டையா......!! இவுரு பெரிய சல்மான்கான் மச்சா...... !! இவுருக்கு பேர கேட்டனையுமும் ..... " இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...." ன்னு பச்சக்குன்னு புருஞ்சுகோனுமா......!!!! யாருகிட்ட காட்டுற உன் டகால்டி வேலையெல்லா.....!! பிச்சுபுடுவ..... பிச்சு....!!!

இவர்களின் சண்டைகளுக்கு இடையே புகுந்து தோணி ஹே மேடி .... கூல் மேன்....!!

பாருங் சார்....!!! யென்ர நல்ல மனசு ... உங்குளுக்கு புரியுது....!!!! ஆனா.... இந்த பாப்கான் மண்டையனுக்கு மட்டு புரிய மாட்டேங்குது......!!!!

ஒரு வழியாக புரிந்து கொண்ட ஓகே .. ஓகே ...!! மேடி .... ஐ காட் யு... லீவ் திஸ் மேட்டர் ...!!.... ராகவன் சார்...........

லவ்டேல் மேடி கொஞ்சம் சும்மா இருப்பா. மீதி இருப்பவங்களை அறிமுகப் படுத்தனும்.

இவர் பெயர் Mr.நசரேயன். இவருதான் நம்ப அணியோட ஓபனிங் பேட்ச்மேன். நிறையா சிக்ஸ்சர் அடிப்பாரு. அதுதான் இவரோட தனித் திறமை. பல வெற்றிகளைக் கண்டவர், பல பரிசுகளை வென்றவர். ரொம்ப ஜாலி டைப்.

ஒ வணக்கம் நசரேயன்! ரெண்டு பேரும் கை கொடுத்துக்கறாங்க.

நன்றி Mr.டோணி

இவர் பெயர் Mr.குடுகுடுப்பை. வேகப் பந்து வீச்சாளர். நிறைய மாட்சுலே ஹாட்ரிக் அடிச்சிருக்காரு. வெற்றிகளும், பரிசுகளும் நிறைய பெற்றிருக்கிறார். ரொம்ப அமைதியானவர்.

ஒ வணக்கம் குடுகுடுப்பை! பெயரும் புது மாதிரி இருக்கு! ஆல் தி பெஸ்ட்.. உங்க பேரு உச்சரிக்க நல்லா இருக்கு.

நன்றி Mr.டோணி!

இவர் பெயர் Mr.உருப்படாதது அணிமா(ஆல் ரௌண்டர்). பந்து சுழற்றுவதிலும் பேட் சுழற்றுவதிலும் மிக வல்லவர். கை தேர்ந்த ஆட்டக்காரர். ரொம்ப ஜாலி டைப்.

வாட் இவரு பேரும் எனக்கு புரியலை. தமிழ்லே என்னா மீனிங் இவரு பேருக்கு.

அதா மேட்ச் முடிஞ்சவுடனே அவரே உங்ககிட்டே சொல்லுவாரு.

ஒ வெரி நைஸ்! ஆல் தி பெஸ்ட்.. என்னா உப்புடாத அணிம்மா!!

நன்றி Mr.டோணி.

உப்புடாத அணிம்மா இல்லே டோணி.. உருப்படாதது அணிமா!

ஓகே Mr.ராகவன் நெக்ஸ்ட்

இவர் பெயர் Mr.ஜமால்(விக்கெட் கீப்பர்). நல்ல சாதூரியமா ஆடக் கூடியவர். இவரும் ரொம்ப ஜாலி டைப்தான். கண் இமைக்கும் நேரத்தில் ரன் அவுட் பண்ணிடுவாரு. சுறு சுறுப்பான விக்கெட் கீப்பெர். இவரை பார்த்தாலே பேட்ஸ் மேன்களுக்கு கொஞ்சம் பயம்தான்.

ஒ வெரி நைஸ்! ஆல் தி பெஸ்ட்.. Mr.ஜமால்!

நன்றி Mr.டோணி!!

இவர் பெயர் Mr.அப்பாவி முரு(ஆல் ரௌண்டர்). பேட் மற்றும் பந்து வீசுவதில் இவருக்கு நிகர் இவரேதான். கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் விளையாட்டு சேர்ந்த கலவைதான் இந்த அப்பாவி முரு. நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். வெற்றிகள் பல இவரை தேடி வந்திருக்கின்றன. பரிசுகளும்தான்.

ஒ வெரி நைஸ்! ஆல் தி பெஸ்ட்.. Mr.அப்பாவி முரு!

நன்றி Mr.டோணி!!

இவர் பெயர் Mr.லவ்டேல் மேடி(ஆல் ரௌண்டர்). பீல்டிங் செய்வதில் இவரை அசைச்சுக்க முடியாது. குறும்பு அதிகம். ஆனா விளையாட்டுன்னு வந்திட்டா விளையாட்டுதான் முக்கியம்னு நினைப்பார். ரொம்ப ஜாலி டைப். இவரு கிட்டே பேசினீங்கன்னா பொழுது போவதே தெரியாது!

அண்ணாவ அப்படி இல்லே யோசிச்சு சொல்லுங்க...

என்ன மேடி உங்க பெயரே புதுசா இருக்கே..

எங்க அப்பத்தா வச்ச பேருங்கோவ்.. நெம்ப பயப்படாதீங்ககோவ். நாங்க நல்லா விளையாடி இந்தியா கண்டிப்பா ஜெஇச்சுடும்ங்ககோவ்.

ஆல் தி பெஸ்ட்.. Mr.லவ்டேல் மேடி!

நெம்ப நன்றிங்கோவ்.... Mr.டோணி!

இவர் பெயர் Mr.அ.மு.செய்யது - இவரும் நம்ப அணியோட ஓபனிங் பேட்ச்மேன். எங்க டீம்லே இவருதான் ரொம்ப ஜூனியர். கவாஸ்கருக்கு சச்சின் எப்படியோ அப்படி எங்களுக்கு இவரு. நல்லா கிரிக்கெட் விளையாடும் திறமை பெற்றவர். இவரோட பேட்டிங் தெரமையிலெ பந்து வீசரவங்க பயந்துதான் வீசுவாங்க. மீதி நீங்களே பாருங்களேன்.
வெற்றிகள் பல இவரை தேடி வந்திருக்கின்றன. பரிசுகளும்தான்.

ஒ வெரி நைஸ்! ஆல் தி பெஸ்ட்.. Mr.அ.மு.செய்யது!

நன்றி Mr.டோணி!

இவர் பெயர் Mr.அண்ணன் வணங்காமுடி(ஆல் ரௌண்டர்). எங்கேயோ வேடிக்கை பார்க்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா பாய்ந்து பந்தை பிடிக்கரதுலேயும், பேட் பிடிக்கிற அழகுலேயும் எதிராளிங்க நிலை குலைந்து போவாங்க. கொஞ்சம் குறும்பு கொஞ்சம் ஆட்டம் கலந்த கலவை இவரு. இவரோட விளையாட்டு ரொம்ப சுவாரசியமா இருக்கும் பாருங்களேன். இவரும் செய்யது போலவே நம்ப அணியில் ஜூனியர் ஆட்டக்காரர். வெற்றிகளும் பரிசுகளும் இவருக்கு சர்வ சாதாரணம்.

ஒ வெரி நைஸ்! ஆல் தி பெஸ்ட்.. Mr.அண்ணன் வணங்காமுடி. உங்க பேரு கூட ரொம்ப வினோதமா இருக்கு.

நன்றி Mr.டோணி!

ராகவன் எல்லாரையும் பற்றி ரொம்ப பெருமையா அறிமுகப் படுத்திட்டீங்க. இன்னும் சிறிது நேரத்துலே ஆட்டம் ஆரம்பமாகப் போகுது. பீல்டிங் செக் பண்ணனும். மீதி அப்புறம் பேசலாம். . ..

மீண்டும் சந்திப்போம்
ரம்யா....



Wednesday, July 15, 2009

கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - பகுதி - 1

நம் வலை நண்பர்கள் திடீர் என்று தோன்றும் கிரிக்கெட் மைதானம்!!

பங்கேற்பவர்கள்
===========
கேப்டன்: டோணி
துணை கேப்டன்: ஜீவன்

இவர்களுடன் விளையாடுபவர்கள்
=======================

வால்பையன், நசரேயன், குடுகுடுப்பை, உருப்படாதது அணிமா, ஜமால், அப்பாவி முரு, லவ்டேல் மேடி, செய்யது, அண்ணன் வணங்காமுடி

அம்பயர்
=======
இராகவன்நைஜீரியா

எப்படியோ இன்னைக்கு அலுவலகத்திற்கு விடுப்பு கொடுத்தாச்சு. நம் தோழிகள் மிகவும் அருமையான தோழிகள். ஏன்னு கேளுங்க! என்னோட நீண்ட நாள் ஆசையான நேரில் கிரிக்கெட் காண்பது என்ற ஆசையை பூர்த்தி செய்து விட்டார்கள். பத்து பேருக்கு டிக்கெட் வாங்கிட்டாங்க. பத்திலே நானும் ஒன்னு. ஒரே சந்தோஷ அலைகள் ஆர்ப்பரிக்க எப்போடா மைதானத்துக்கு போவோம்னு ஒரே கற்பனை. ஒரு வழியா எல்லாரும் ஒரு இடத்திலே சந்தித்தோம். யாருமே தாமதமாக வரலை. ஏன்னா அந்த அளவிற்கு கிரிக்கெட் மோகம் எல்லாருக்கும். அதுவும் டிக்கெட் வாங்கி பார்க்கிறதுன்னா சும்மாவா?

ஒரு முக்கியமான விஷயம் எனக்கு கிரிகெட் ரொம்ப பிடிக்கும். ரூல்ஸ் எல்லாம் கேக்கப்பிடாது :))

ஒரு வழியா டிக்கெட் கிழித்து உள்ளே சென்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். கிரிக்கெட் மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மைதானத்தில் எல்லாரும் கும்பலா நின்று கொண்டிருந்தார்கள். நம்மவர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து ஒவ்வொருவர் பெயரையும் உச்சரிக்காலாம் என்று பார்த்தால்.. அட இது யாரு நம்ம ப்லாக் நண்பர்கள் எல்லாரும் இருக்காங்க.

நிஜம்மாவா!! இவங்க எல்லாம் நம்ம ப்லாக் நண்பர்கள்தானா!! என்று மறுபடியும் உறுதிப் படுத்திக் கொண்டேன்.

ஆமாம்!! ஜீவன், வால்பையன், நசரேயன், உருப்படாதது அணிமா, ஜமால், அப்பாவி முரு, லவ்டேல் மேடி, செய்யது, அண்ணன் வணங்காமுடி இவங்க எல்லார் கூடவும் நம்ப ராகவன் நைஜீரியா பேசிகிட்டு இருந்தார். அட இவரு இங்கே என்ன பண்றாரு? நாம எங்கே வந்திருக்கோம்? இவங்க எல்லாம் எப்படி ஒண்ணா இருக்காங்க? ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரிலே வேலை செய்யறாங்க. இங்கே எப்படி!! ஒண்ணும் புரியலையே! எப்பவுமே அப்படிதான் ஒண்ணுமே புரியாது. புரிஞ்சாதான் அதிசயம் போங்க.

சரி, என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். ஆனா பாருங்க இவங்க மட்டும் எல்லாரும் ஒண்ணா வந்திருக்காங்க; என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலை. ம்ம்ம் மனதில் ஒரே கோவமா வந்திச்சு. எழுந்து மைதானத்தை நோக்கி ஓட ஆரம்பித்தேன். ஏம்மா இப்படி குறுக்காலே ஓடறே, அவங்க விளையாட ஆரம்பிக்கப் போறங்கன்னு சொல்லிக் கொண்டே அங்கே இருந்த காவலாளிங்க என்னை தொடர்ந்து ஓடி வந்தாங்க. அவங்க கைக்கு நான் சிக்கவே இல்லே. ஒரே ஓட்டாமா ஓடிட்டேன். யார் சொல்லியும் கேட்கலை. ஒரு வழியா ராகவன் அண்ணா கிட்டே போய் நின்னுட்டேன். அண்ணா எப்ப வந்தீங்க? இவங்க எல்லாம் எப்போ வந்தாங்க? ஏன் இங்கே வந்து நின்னுகிட்டு இருக்கீங்க? எல்லாரும் ஏன் இந்திய அணியினர் அணிந்திருக்கும் சீருடை போட்டிருக்காங்க?

ஏம்மா இவ்வளவு வேகமா பேசறே? இரு இரு நான் எல்லாம் உனக்கு சொல்றேன். ஆனா இப்போ அதுக்கு நேரம் இல்லே. விளையாட்டு ஆரம்பமாகப் போகுது. நீ மொதல்லே உன்னோட இடத்திலே போய் உக்காரு. விளையாட்டு முடிஞ்சவுடனே பேசுவோம். போம்மா! என்று என்னை அனுப்பவதிலேயே குறியா இருந்தார்.

பக்கத்திலே நின்னு விவாதம் செய்து கொண்டிருந்த அண்ணன் வணங்காமுடி ரம்யாக்கா நாங்களே குழப்பத்துலே இருக்கோம். எந்த முடிவுக்கும் வரமுடியலை. யாரு என்ன விளையாடப் போறோம்னு தெரியலை. அதுனாலே அப்புறமா நாங்க சொல்றோம் இப்போ நீங்க கிளம்புங்கக்கா.

இல்லே அண்ணன் வணங்காமுடி! யாரு சொல்லி நீங்க எல்லோரும் விளையாடப்போறீங்க? ஒரே புரியாத புதிரா இருக்கே!

ஐயோ ரம்யாக்கா எல்லாரும் வரதுக்குள்ளே போய்டுங்க என்று சற்றே அழுத்தமாக கூறினாரு அண்ணன் வணங்காமுடி.

பக்கத்துலே நண்பர் ஜீவன் நின்னுகிட்டு இருந்தாரு. அதெல்லாம் சரி நீங்க எப்போ இங்கே வந்தீங்கன்னு நண்பர் ஜீவன் கிட்டே கேட்டேன். அதுக்கு நண்பர் ஜீவன் ரம்யா அது ஒரு பெரிய கதை இப்போ சொல்ல முடியாது, நீங்க போய் உங்க இடத்திலே உக்காருங்க. இப்போ விளையாட்டு ஆரம்பம் ஆகப்போகுது என்றார்.

அருகே நின்று கொண்டிருந்த நண்பர் வால்பையனிடம் என்னப்பா ஒரு போன் பண்ணி கூட சொல்லலை? என்று நான் கேட்க அதுக்கு வால்பையன் எனக்கும் யாரும் சொல்லலை நேர வந்தாங்க, என்னை காரிலே அள்ளி போட்டுக்கிட்டு வந்துட்டாங்க. அப்படியே லவ்டேல் மேடியை வர்ற வழியிலே காரிலே ஏத்திகிட்டு வந்திட்டோம். இங்கே வந்து பார்த்தா கிரிக்கெட் ஆடனும்னு சொல்றாங்க. அதெல்லாம் ரெண்டு வருஷம் முன்னாடியே நிறுத்திட்டேன். பழக்கம் விட்டு போச்சுன்னு சொன்னாலும் கேக்கலை. சரி பார்க்கலாம்னு வந்துட்டோம், வந்தா இங்கே எல்லாருமே நம்ப நண்பர்கள்தான் இருக்காங்க. விவரம் கேட்க்க கூட நேரம் இல்லே. சரி விளையாடி முடிச்ச உடனே வெவரம் கேட்டுக்கலாம்னு நின்னுகிட்டு இருக்கேன். ஆமா நீங்க இங்கே எங்க? அட நான் கிரிக்கெட் பாக்க வந்தேன். இங்கே வேறே என்னா பாக்க முடியும்? சினிமாவா பார்க்க முடியும்? கேள்வி எல்லாம் சரியாதான் இருக்கு, நான் கேட்ட கேள்விக்குதான் இன்னும் யாருகிட்டே இருந்தும் பதில் வரலை.

இதன் நடுவே நம்ப நசரேயன் எங்களை கடந்து செல்கிறார். நசரேயன் நீங்க எப்போ வந்தீங்க?

ரம்யா! வணக்கம் நல்லா இருக்கீங்களா? டிக்கெட் அனுப்பி உடனே கிளம்பி வாங்கன்னு சொன்னாங்க, நான்தான் கிரிக்கெட் நல்லா விளையாடுவேன் இல்லையா! அதான் உடனே வந்துட்டேன்.

இங்கே பாருங்க யாரு என்னா விளையாடனம்னு இனிமேல் தான் யோசிச்சி ஒரு முடிவுக்கு வரணும். நீங்க நல்ல கேள்வியா கேட்டிருக்கீங்க. ஆனா பாருங்க பதில் சொல்ல நேரம் இல்லே.

என்னா! இனிமேல் தான் யோசிக்கப் போறீங்களா? அடபாவிங்களா? நான் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கேன்.

ரம்யா! இங்கே பாருங்க எல்லாருமே காசு கொடுத்துதான் டிக்கெட் வாங்கி இருக்காங்க. ரந்து பண்ணாமே அங்கே போய் உக்காருங்க. வாங்க குடுகுடுப்பை போலாம். ரம்யா கிட்டே அப்புறமா விவரம் பேசலாம். அவங்க கோவிச்சுக்க மாட்டாங்க.

அட குடுகுடுப்பையாரே! நீங்க எப்போ வந்தீங்க? எல்லாரும் வந்திருக்கீங்க ஆனா யாரும் என் கிட்டே சொல்லவே இல்லே?

நசரேயனுக்கும் எனக்கு சேர்த்துத்தான் டிக்கெட் போட்டு அனுப்பினாங்க. அதான் அவசரமா ஓடி வந்துட்டோம். இது ஒரு நல்ல சான்ஸ் இல்லையா? அதான் உங்ககிட்டே சொல்ல நேரம் இல்லே. தப்பா நினைச்சுக்காதீங்க ரம்யா. நசரேயன் வரச்சொல்லி அவசரப் படுத்தராறு. நம்ப எல்லாருமா அப்புறமா பேசுவோம். நீங்க உங்க இடத்துக்கு போங்க. நான் போறேன்

அப்படியா? இருங்க எனக்கும் ஒரு நேரம் வரும் அப்போ உங்களை எல்லாம் நல்லா கவனிச்சுக்கறேன்

இடையே அணிமா நீங்களுமா? ஆமாம் ரம்யா எனக்கும் டிக்கெட் அனுப்பினாங்க அதான் நானும் உடனே கிளம்பி வந்துட்டேன். எனக்கு ஆடத் தெரியும்னு ஒரு முறை ராகவன் அண்ணா கிட்டே சொல்லி இருந்தேன். அண்ணா கச்சிதாமா போட்டு கொடுத்திட்டாரு. திடீர்னு ஏற்பட்ட மாற்றம் விரிவான வெவரம் இனிமேதான் தெரியும்.

அப்படியா இருங்க அதுக்கு முன்னாடி நானே விசாரிக்கிறேன். திரும்பினால் ஜமால் அட என்னாப்பா நீங்களுமா??

என்ன ரம்யா? நீ இங்கே என்ன பண்றேப்பா? ஆட்டம் ஆரம்பமாகப் போகுது. இடத்திலே போய் உக்காருப்பா, நான் ஆட்டம் முடிந்தவுடனே பேசறேன். ஆமா அக்கா எங்கே? சுரே எங்கே? தனியாவா வந்தே?

அக்கா எல்லாம் வரலை நான்தான் என்னோட பிரண்ட்ஸ் கூட வந்தேன்.

போ போய் மொதல்லே உன்னோட இடத்திலே உக்காரு, ஏற்கனவே இங்கே ஒரே குழப்பமா இருக்கு நீ வேறே நடுவிலே குழப்பாதே.

நான் என்னாப்பா குழப்பறேன்? நீங்க எல்லாரும்தான் ப்லாக் எழுதறதை வீட்டு இங்கே வந்து குழப்பறீங்க? நாங்க எவ்வளவு காசு போட்டு டிக்கெட் வாங்கினோம் தெரியுமா?? கடைசிய்லே பார்த்தா எனக்கு இதுவரை ஒண்ணுமே புரியலை?

ஹேய், நான் அப்புறமா எல்லா விவரமும் சொல்றேன் இப்போ போய் உக்காருப்பா!

குறுக்கே நம்ப சகோதரர் முரு ரம்யா அக்கா சீக்கிரம் போங்க! அங்கே பாருங்க எங்க கேப்டன் வராரு.

யாரு உங்க கேப்டன்?

டோணி என்ன உங்களுக்கு கேப்டனைத் தெரியாதா?

ஐயோ அவருதான் கேப்டன்ன்னு தெரியும் ஆனா நீங்க எல்லாம் இருக்கீங்களே அதான் எனக்கு ஒண்ணுமே புரியலை?

அவரு ஏற்கனவே ரொம்ப கோபத்திலே இருக்காரு. நீங்க வேறே யாரு சொல்லியும் கேக்காம மைதானத்துலே வந்து நிக்கிறீங்க! அக்கா நான் அப்புறமா எல்லா வெவரமும் சொல்றேன்.

என்னாப்பா எல்லாரும் ஒரே மாதிரி பேசறீங்க? எனக்கு மொதல்லே பதில் சொல்லியாகனும் இப்போ! நீங்க எல்லாம் ஏன் இங்கே வந்தீங்க ? இதுக்கு பதில் சொல்லிடுங்க நான் போய்டறேன்.

ஐயோ அக்கா அதெல்லாம் பேச நேரம் இல்லை. அடுத்த அணியும் வந்திடுச்சு, நீங்க கிளம்புங்க என்றார் முரு

(லவ்டேல் மேடி உள்ளே என்ட்ரி ஆகிக் கொண்டிருக்கும்போது ... திடீரெண்டு ஒருவன் அருகில் வந்து.......) சார் .... வெறும் 499 ரூவாய் மட்டுமே.....!!!

(அவனை உத்து பார்த்துவிட்டு) அடேய்..... நீயா.....??? அடங்கொன்னியா.....!!!! அந்த டண்டணக்கா டி.வி யோட டிஷ் ஆண்டனா விளம்பரத்துக்கு வர்ற போண்டா வாயன்தான நீயி......!!!!

என்னது ...?? என்னோடது வெறும் 500 சேனல்......

அடங்கொ.......!! அடேய் ஹிப்போபோடமஸ் மண்டையா.. அப்புடியே அல்லகட்டி ஒதச்சனா...... காரமடைக்கு அந்தபக்கமா போய் குப்பற உளுந்துருவ பாத்துக்க........ (போண்டா வயன் தலை தெறிக்க ஓடுதல்..) ( பேசிக்கொண்டே திரும்புகையில் தீடீரெண்டு ரம்யா அக்காவை வழியில் காண்கிறார் மேடி) .

அட சாமீ ...... ரம்மியா அக்கோவ்.....!!!! நீங்ளா.....?? யென்ட்ர கண்ண யென்ட்ரனாலயே நம்ப முடியில.....!! நெசந்தானா......??? தேனுங் ரம்யாக்கோவ் வெளையாண்டுபோட்டு போவலாமின்னு வந்தீங்களா......???

அந்த ட்ரவுசர் மண்டையனுங்க எங்களையத்தா கூட்டீட்டு வந்தானுங்கன்னு பாத்தா.... உங்களையுமும் வெளையாடறதுக்கு கூட்டீட்டு வந்துருக்கானுங்க ........??

அட லவ்டேல் மேடி , நீங்க எல்லாம் எப்படி வந்தீங்கன்னு கேக்கறேன் யாரும் பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க. நீங்களாவது சொல்லுங்களேன்.

அக்கோவ்... நாங் நெம்ப பிசி...... !! டயத்த வேஸ்ட்டு பண்ணாதீங்கோ.... உங்குளுக்கு என்ன வேனுமுங்.......???

என்னது .... பிஸ்......பிஸ்ஸா.....??

ம்ம்க்கும்........ இதுல இது வேறையா.....!! பிசிங்கோவ்....... பிசி......!!

(முனுமுனுத்தல் : வெடி போட்டாகோடா கேக்காதாட்டிருக்குது......) ரம்யாக்கோவ் இப்புடி காத கொஞ்சம் கிட்ட கொண்டாங்....!!

அந்த கொடுமைய ஏனுங்கா கேக்குரீங்கோ....... !! வந்தவிங்கல்ல ஒரு ஆளைத் தவற ... எல்லாருக்குமும் கொரங்கு காசசாலும், கொசு இருமலும் வந்திருசுங்கோவ்....!!!!! அப்பறம் தலைவருங்கோ நெம்ப யோசிச்சுபாத்போட்டு..... , நம்ப ப்லாக்குதேன் நெம்ப பேமசாச்சே ......!!

ஒரு சலக்கா ... எங்கப்புச்சி தென்னந் தோப்புல இருந்து தென்ன மட்டைய பொறுக்க சொன்னத பதிவா போட்ருந்தேனுங்.....!! அத இந்த பெட்ரமாஸ் தளயனுன்க தப்பா படுச்சுபோட்டு ... நானேதோ நெம்ப பெரிய பேட்ஸ்மேன் ன்னு, நெனச்சுபோட்டு ... இங்க வெலையாட்ரதுக்கு இழுத்துகிட்டு வந்துட்டானுங்க.....!!!

எனக்கு ஒண்ணும் தெரியாது பாருங்....!! அப்பத்தேன் நம்ப வடக்பட்டி ராமசாமி சொன்னே, பக்கத்துல சும்மிங் பூல்ல நயந்தாராவோட "பில்லா" பார்ட்- 2 பட சூட்டிங்கின்னு...... அப்புடியே மட்டைய தூக்கிகிட்டு ஓடியாந்திட்டேனுங் .....!!!

ஐயோ எல்லாருக்குமே உடம்பு சரி இல்லையா? அட பாவமே! அப்போ இந்திய அணியிலே நான் யாரையும் பார்க்க முடியாதா? நான் வந்ததே அவங்களை எல்லாம் பார்க்கத்தானே? அட கொடுமையே?

அட தென்னுக்கா இப்புடி கேட்டுபோட்டீங்கோ.......??? அட நான்குளுமும் நம்ப இந்தியா டீமுக்குத்தேன் ஆட போரமுங்..... !!

உங்குளுக்கு நெம்ப டவுட்டா இருந்தா..... அங்க வடக்கோட்டுல பாருங்......., நம்ப மூலையூட்டுகார் பொண்டாட்டி அருக்கானிக்கா கோந்துட்டு இருக்குது ........ நீங்குளுமும் போய் சித்த அப்புடி கோந்துகிட்டு நாங்க எப்புடி வெலையாடுரோமின்னு பாருங்....!!!!!

சரி லவ்டேல் மேடி நான் என்னோட இடத்துக்கு போறேன். மேட்ச் முடியற வரைக்கும் இருக்கிறேன். லவ்டேல் மேடி எல்லார் கிட்டேயும் சொல்லுங்க. யாரும் என்னைய மறந்திடக் கூடாது சரியா.

அது சரி வர்ற வழியிலே வால்பையனோட உங்களையும் அள்ளிகிட்டு வந்ததா சொன்னாங்க. நீங்க ஷூட்டிங்க்ன்னு டூப் விடறீங்க...

ஹி ஹி ஹி நிசமாளுந்தான் சொல்றேங்க்கா... நீங்க வேணா நம்ப வடக்பட்டி ராமசாமிகிட்டே கேட்டு பாருங்கங்கோவ்....

எக்கா யாரோ கூப்பிடுதாக, யாரு தொ வரீனுங்க...

தொடரும்
ரம்யா........

Saturday, April 4, 2009

நசரேயன் அவர்களா இப்படி சொன்னது !!

இல்லே இல்லே அப்படி சொன்னது நசரேயன் இல்லே !!

நமது நண்பர் திரு.நசரேயன் அவர்கள் சொந்த ஊருக்கு வராராமாம். அதுக்கு விடுப்பு கேட்கப்போய் இருக்காரு. நசரேயன் மேலிடம் தற்சமயம் வேலை அதிகமா இருக்கு, இந்த நேரம் பார்த்து பொறுப்பில்லாமல் விடுப்பு கேட்கறீங்களே! இது நியாமா?? என்று பெரிய தலையின் காரியதரிசி மஞ்சள் அழகி கேட்டு இருக்கிறார்கள். அதற்கு நம் நசரேயன் தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது. என்று சற்று கோவமா சொல்லி இருக்காரு.

எனக்கு ரம்யா! ரம்யான்னு ஒரு தோழி இருக்காங்க. அவங்க பாருங்க எவ்வளவு சமத்தா பதிவு எல்லாம் எழுதறாங்க. நீங்க என்னடான்னா எப்ப பார்த்தாலும் பாஸ் பின்னாடியே சுத்திகிட்டு, அவரு சொன்னது பாதி, நீங்க சொல்லறது பாதின்னு பீலாவா விடறீங்க என்று நண்பர் தமிழில் கேட்க, அதற்கு அந்த மஞ்சள் அழகி நண்பர் என்ன பேசினாருன்னு புரியாமால் ஏதோ திட்டராருன்னு நினைச்சிகிட்டு, என்ன சொல்லறீங்க இப்போ என்று ஆங்கிலத்தில் கோவமாக கேக்க, அதற்குள் அங்கு வந்த M.D. என்ன பிரச்சனை நசரேயன் என்று கேட்க, நம்ம நண்பர், ஹி ஹி ஒன்றும் இல்லை வரச்சொல்லி என்னை மிரட்டறாங்கன்னு சொல்ல, அதற்கு M.D. அவங்க அந்த மாதிரி எல்லாம் சொல்ல மாட்டங்க.

உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க, இல்லைங்க சார், நான் பேசாம என் கம்ப்யூட்டர் முன்னாடிதான் உக்காந்து இருந்தேன், இவங்கதான் என்னை கூப்பிட்டு திட்டறாங்க சார், அதற்கு M.D. அப்படி எல்லாம் அவங்க திட்ட மாட்டங்க. நான் தான் உங்களை வரச்சொல்லி சொன்னேன்.அதுக்கு போயி அவங்களை தெரியாத பாஷையிலே பேசறீங்க. நீங்க தான் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர் ஆயிற்றே என்று கேட்டார். மனசுக்குள்ளே அந்த M.D.ஐ திட்டிகிட்டு,எச்சூச்மீ நான் வந்து, இல்லே ஊருக்கு போய், இல்லே லீவு வேணும். (அப்பாடா ஒரு வழியா லீவு கேட்டுடோம். சரி குடுப்பாரா இல்லையா?? பாப்போம்.)

M.D. சொன்னாரு, ஓகே ஒன்லி ரெண்டு வாரம்தான், அதுக்கு மேலே அங்கே போய் லீவு தொடர்ந்தால் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. அப்படின்னும் கோவமா சொல்லிட்டாரு. அப்பா உடனே இடத்தை காலி பண்ணிடலாம்னு வெளியே ஓடி வந்தாரு. வெளியே இருக்கவங்களுக்கு ஒன்னும் புரியலை. இவ்வளவு நேரம் நசரேயன் என்ன உள்ளே பேசிக்கிட்டு இருந்தாருன்னு ஒரே குழப்பம்ஸ். கேள்வியோட அவரை பார்த்தாங்க. ஆனா நம்ம நண்பர் யாரு கிட்டேயும் பேசலை. உடனே கைபேசி எடுத்து தங்ஸ்க்கு அம்மா தாயே துணி மணி எல்லாம் கட்டி வை.

எங்க அலுவலகத்திலே லீவு கொடுத்திட்டாங்க, மறக்காம எங்க வீட்டுக்கு வாங்கின பொருட்கள் எல்லாம் பத்திரமா எடுத்து வை. அப்புறம் மறந்துட்டேன்னு சொல்ல கூடாது என்று பட படன்னு சொல்லிட்டாரு. கொஞ்சம் வேகமா பேசிட்டோமோன்னு ஒரு சந்தேகம் வேறே.

சரி சாயங்காலமாத்தானே வீட்டுக்கு போகப் போறோம். அப்போ சமாளிச்சுக்கலாம். அப்படின்னு ஒரு பெரு மூச்சு விட்டுட்டு, சரி இப்போ என்ன செய்யலாம், இந்த ரம்யாவோட பதிவை படிக்கலாமா? வேண்டாமா? அப்படீன்னு ஒரே குழப்பம், ஏன்னா படிக்க ஆரம்பிக்கும்போதே, M.D. ரூமிற்கு போகவேண்டியதா போய்டுச்சு, அதான் ஒரே யோசனையா இருக்குதுன்னு உள்ளேயே பேசிகிட்டாரு.

நண்பர்களே! நீங்க எல்லாம் நம் நண்பர்க்கு சொல்லுங்க, நம்ப ரம்யா பதிவை படிச்சதனாலேதான் உங்களுக்கு ரெண்டு வாரம் லீவு கிடைச்சுது. இந்த வெவரத்தை நல்லா எடுத்து சொல்லுங்கப்புங்களா!!

பின்குறிப்பு

===========

ஊட்டிக்கு போகாலாம்னு எல்லாரும் சொன்னவுடனே, சரி எல்லாரும் ரயில்லே போகலாம் ஒரே ஜாலியா இருக்கும்னு முடிவு பண்ணின அடுத்த நிமிடம் டிக்கெட் முன்பதிவு பண்ண போனோமா, அவங்க ஒரு பேப்பரை கொடுத்து, அதுலே உங்களைப் பற்றி விளக்கமா எழுதுங்கன்னு சொன்னாங்களா?? இப்படி வெவரம் கேக்கறாங்கப்பா, இப்போ நான் என்ன செய்யனும்னு நசரேயன் அவர்களை போன் போட்டு கேட்டேன் , அதுக்கு நசரேயன், இல்லே ரம்யா உங்க வெவரம் எழுதி கொடுத்த உடனே உங்களுக்கு ஊட்டி போக டிக்கெட் கொடுத்திடுவாங்க. நான் அப்படிதான் டிக்கெட் முன் பதிவு பண்ணிட்டு அடிக்கடி ஊருக்கெல்லாம் போவேன் அப்படீன்னு விளக்கம் சொன்னாரு.

அதே போல அங்கே டிக்கெட் எங்கே கொடுப்பாங்கன்னு கேட்டேன், அதுக்கு அங்கே இருந்தவரு ஒருவர் சொன்னாரு, உங்களோட வர்றவங்க வெவரம், மற்றும் உங்க வெவரமும் எழுதி கொடுத்தா! ஊட்டிக்கு போக டிக்கெட் கொடுப்பாங்கன்னு சொல்லி என் கிட்டே ஒரு பேப்பரை கொடுத்தாரு. பரவா இல்லையே நம்ப நசரேயன் ரொம்ப விவரமான ஆளுதான். சரியாதான் நமக்கு சொல்லி கொடுத்திருக்காருன்னு எனக்கு நானே மனதுக்குள்ளே நசரேயனுக்கு ஒரு சபாஷ் போட்டுகிட்டேன்.

நானும் என்னைப்பற்றியும், என் கூட வரவங்களைப் பற்றியும் எழுதி கொடுத்துட்டு ஊட்டிக்கு போக டிக்கெட் கொடுங்கன்னு கேட்டேன். நீங்க முன்பதிவு பண்ணின டிக்கெட்டுக்கு இவ்வளவு பணம் தரனும், பணமும் சரியான சில்லரையும் குடுத்துடுங்கன்னு சொன்னாங்க. நான் சொன்னேன் இதில் உள்ள கேள்விகளுக்கு விடை எழுதினால் போதும் டிக்கெட் கொடுத்திடுவாங்கன்னு நசரேயன் சொன்னாதா சொன்னேன். அதுக்கு அந்த ரயில்வே அதிகாரிங்க யாருங்க அந்த நசரேயன்! லாலுக்கு வேண்டியவரா இல்லே லாலுவோட மறு பெயரா?? அப்படீன்னு கேட்டாங்க??, இல்லேம்மா மரியாதையா பணத்தைக் கொடுத்திட்டு டிக்கெட்டை வாங்கி கிட்டு போங்க, இல்லேன்னா இடத்தை காலி பண்ணிடுங்கன்னு சொன்னாங்க.

நான் வாங்கின சம்பளத்தை என்னோட மணிபர்சிலே வச்சி, மனிபர்சோட ஜிப்பை மூடி பத்திரமா வச்சிருந்து, அப்புறமா நான் என்னோட மணிபர்சை திறந்து அதுக்குள்ளே இருந்த என்னோட பணத்தை எடுத்துக் கொடுத்து டிக்கெட் வாங்கி ஊட்டி போயிட்டு வந்தேனாக்கும். ஆனா இந்த நண்பர் நசரேயன் என்னா சொன்னாருன்னா ஓசியிலே ஊட்டிக்கு போன ரம்யா.

இங்கே ஒரு உள்குத்து வச்சிருக்காரு, பாருங்க, ஐயா பாருங்க, அம்மா பாருங்க, அண்ணா பாருங்க, தம்பி பாருங்க, அக்கா பாருங்க, தங்கச்சிங்களா பாருங்க, இப்போ என்ன செய்யலாம்னு எல்லாருமா என்னா முடிவெடுத்திருக்கீங்க??

நல்லா கேட்டுக்கங்க, என் பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கி நான் ரயில் ஏறி ஊட்டி போனேன். இதுதாங்க நடந்த கதை.

Wednesday, April 1, 2009

ஊட்டி அனுபவம் நண்பர்களுடன் !!


முதல் பாகம் அன்று எழுதினேன் இல்லையா?? அதன் தொடர்ச்சிதான் இது!!

பாகம் II
==========

ஊரெல்லாம் சுற்றிவிட்டு மாலையில் நன்றாகச் சாப்பிட்டோம். வெளியே நிறைய காலேஜ் பசங்க டான்ஸ் எல்லாம் ஆடினாங்க. வேடிக்கை பாத்துட்டு எங்க ரூம்க்கு போனோம். என் தோழிகளின் தம்பிகள் மனதிற்குள் என்னைத் திட்டிக் கொண்டே எங்களுடன் வந்து விட்டார்கள். இதெல்லாம் நான் ஏற்கனவே கூறி விட்டேன். இப்போ தொடருவோம் சரியா ??

சிறிது நேரத்தில் விடுதி மேலாளர் ரூமிற்கு வந்தார். ரூமில் எல்லாம் வசதியா இருக்கான்னு பார்க்க வந்ததாக கூறினார். அதற்கு அக்கா கூறினார்கள், நாங்களே இன்னும் ரூமை பார்க்கவில்லை, இருங்க குளியல் அறை எல்லாம் சுத்தமாக இருக்கின்றதா என்று பார்க்கின்றேன் என்றார்கள்.


நானோ என்னங்க மேனேஜர்! ரூமிலே ஒரு Fan கூட இல்லே. நாங்க பத்து பேரு தங்கப் போறோம் Fan இல்லாம எப்படி தூங்கறதுன்னு கேட்டேன். அதற்கு அந்த மேலாளர் என்னை தலையில் இருந்து கால் வரை ஒரு மாதிரி பார்த்தார். பிறகு இங்கே எதுக்கும்மா Fan?? அதெல்லாம் இங்கே தேவையே இல்லை என்றார். என்னை ஏன் அவர் அப்படி பார்த்தார் என்று புரியவில்லை. அப்புறம்தான் மெதுவாக புரிந்தது, தலையில் குல்லா, இரெண்டு ஸ்வெட்டெர், கைகளுக்கு Glouse, கால்களுக்கு சாக்ஸ் இப்படி ரொம்ப உஷாரா இருந்தேன். அதற்கு மேல் Fan வேறே கேட்டதால் அந்த மேலாளர் என்னை ஒரு மாதிரிப் பார்த்திருக்காரு.


அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு. எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு. ஏனென்றால் ஒருவரும் எனக்கு சப்போர்ட்டா பேசவில்லை. அதான் அதுக்கு மேலே நான் வாயை திறக்கவே இல்லை.


எல்லாரும் படுத்துட்டாங்க. ஆனா எனக்குதான் தூக்கமே வரலை. மொத்தம் ஐந்து பெட், எல்லாம் டபுள் காட். எனக்கு என்று நான் பிடித்த இடம் கடைசி கட்டில். அதில் நானும் என் நெருங்கிய தோழியும் படுத்திருந்தோம். அவள்தான் நான் என்ன திட்டினாலும் கோவிச்சுக்க மாட்டா. என்னையை ரொம்ப பிடிக்கும் அவளுக்கு, நானும் எப்பவுமே அவளை கிண்டல் பண்ண மாட்டேன். மீதி எல்லாரையும் நல்லா ஓட்டுவேன். நான் எப்போதும் கதவுகிட்டே படுக்க மாட்டேன். கதவை திறந்து திருடன் யாரவது வந்துடுவாங்களோன்னு பயமா இருக்கும். அப்படி வந்தா மொதல்லே அடிபடரவ நான்தானே.


அதே போல் அன்றும் கடைசியா தான் நான் படுத்துக் கொண்டு இருந்தேன். இடம் மாற்றம் எனக்கு எப்பவும் தூக்கம் வராது. இது கூட ஒரு விதமான மனப்பிராந்தி. என்ன செய்ய?? எல்லோரும் தூங்கிவிட்டார்கள்.


நான் மட்டும் விழித்திருந்தேன். இப்போதுதான்விழித்திரு, தனித்திரு என்ற சொற்கள் எல்லாம் நினைவிற்கு வந்தது.
திடீரென்று ஏதோ சத்தம். என்னவென்று லைட் போட்டு பார்த்தேன். எல்லாரும் எழுந்து விட்டார்கள். இருவரில் ஒரு பையன் கீழே கிடந்தான். ஒருவன் மற்றொருவனை எட்டி உதைத்ததால் ஏற்பட்ட குழப்பம்.


ஆனால் உதைத்தவனோ ஒரு கேள்விக் குறியாக படுத்திருந்தான். கட்டிலில் இடமே இல்லை மற்றொருவனுக்கு. அவ்வளவு ஆக்கிரமிப்பு அவனை அடித்து எழுப்பி கீழே கிடந்தவனை கட்டிலில் படுக்க வைப்பதற்குள் ஒரு வழியாகி விட்டோம்.

ஒரு வழியாக பிரச்சனை முடிந்து விட்டது என்று அனைவரும் தூங்கி விட்டார்கள். மறுபடியும் எனக்குள் ஒரே போராட்டம். தூக்கம் வரலை.

ஜன்னல்கள் மூடி இருந்ததாலே காற்றோட்டமே இல்லாதது போலவும், மூச்சு முட்டுவது போல் ஒரு உணர்வு. அதனால் ஜன்னலை திறந்தேன் அவ்வளவுதான் ஐஸ் வந்து மேலே விழுந்தது போல் மூச்சு திணறி விட்டது. அவ்வளவு சில்! லேசாக திறந்து வைத்து விட்டு, கம்பளிப் போர்வைக்குள் புகுந்து விட்டேன். எனக்கு மட்டும் இரெண்டு கம்பளிப் போர்வை அதற்குள்ளும் ஒரே குளிர். உள்ளுக்குள் இருக்கும் எலும்புகள் கூட ஆடற மாதிரி தோன்றியது. ஐயோ! இந்த செப்டம்பரில் தெரியாமல் வந்திட்டோமே என்று என் மனதிற்குள்ளே புலம்பிக் கொண்டு இருந்தேன்.

இப்போது யாரோ குதித்து போல் ஒரு சத்தம், பிடி பிடி அவனை பிடிங்க என்று ஒரு அபயக் குரல். எனக்கு புரிந்துவிட்டது என்னவென்று, ஏனெனில் அந்த ஜன்னலில் கிரில் இல்லை. திறக்கும்போதே பயம்தான். ஆனாலும் கொழுப்பு கொஞ்சம் அதிகம்தான். அவ்வளவு தான் நான் பயந்து விட்டேன்; நாம் ஜன்னலை திறந்து வைத்தது தப்பா போச்சு எவனோ அது வழியா குதிச்சுட்டான்னு பயந்துட்டேன். இருட்டில் ஒன்றும் புரியவில்ல. அவன் எங்கு இருக்கிறான், யாரு பக்கமா நகருவான்னு கண்களை மிகவும் கூர்மையாக்கி கவனிக்க ஆரம்பித்தேன்.


இருந்தாலும் நாம safety ஆகிவிடலாம்னு முடிவெடுத்த அடுத்த கணத்தில் எதுக்கும் இருக்கட்டும்னு ஐயோ!! திருடன் திருடன் என்று என் பங்கிற்கு நானும் கத்திட்டு, ஒரே தாவு தான் அங்கே ஒரு சோபா இருந்தது அதற்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டு விட்டேன்.


எல்லாரும் எழுந்து விட்டார்கள், அக்கா எழுந்து லைட் போட்ட பிறகு யாரு யாருன்னு கேட்டாங்க. எல்லார் முகத்திலும் ஒரே பரபரப்பு! ஒரு பதிலும் இல்லை. அக்காவுக்கு கோவம் வந்துடுச்சு போல.


யாரு எங்கே ஒளிஞ்சி இருக்கீங்க மரியாதையா வெளியே வந்துடுங்கன்னு அக்கா சொன்னாங்க. ஆனால் யாரும் வரவில்லை. அதற்குள் என் தோழிகள் அக்காவிடம் ரம்யாவை காணவில்லை என்று கூறி விட்டார்கள். அக்கா பயந்து விட்டார்கள். ஐயோ! அவ ரொம்ப பயப் படுவாளே உன் கூடத்தானே படுத்திருந்தாள் இப்போ எங்கே போனா? அவளை மொதல்லே தேடுங்கன்னு சொல்லிட்டு, நாங்கள் படுத்திருந்த ரூம் பக்கத்திலே சிறிய ஒரு டிரெஸ்ஸிங் ரூம் இருந்தது. அங்கே திருடன் எங்கேயாவது ஒளிந்து கொண்டு இருப்பானோ?? என்று அக்கா உடனே ஹோட்டல் மேலாளருக்கு போன் செய்தார்கள். அந்த கதவையும் வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டார்கள்.


பிறகு ஒரு வழியாக எல்லாரும் நின்று கொண்டிருந்ததால் மெதுவாக நான் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தேன். அதுவரை எல்லாரும் என்னை எங்கே தேடுவது என்று விழித்துக் கொண்டிருந்தார்கள். நான் மெதுவா போய் என் தோழியின் தோள் மீது கை வைத்தேன். அவள் திருடன் திருடன் என்று அலறிக் கொண்டே கட்டிலை சுற்றி சுற்றி வர ஆரம்பித்தாள். நான் கூறுகின்றேன் நான்தான்பா உன் தோள் மீது கை வைத்தேன் என்று. அதை யாருமே காதில் போட்டு கொள்ளவில்லை. அப்புறம்தான் எங்க அக்காவிற்கு உறைத்தது போல. ஆமா நீ இவ்வளவு நேரம் எங்கே இருந்தேன்னு கேட்டாங்க. அவங்களோட எல்லாரும் என்னை அடிக்கற மாதிரி பார்த்தாங்க.


அதுக்குள்ளே விடுதி மேலாளர் வந்து விட்டார். எங்கேம்மா திருடன் என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாரு. வந்தவரு கேட்டது என்னான்னா, அப்படி எல்லாம் இங்கே யாரும் வர முடியாது அந்த அளவிற்கு செக்யூரிட்டி வச்சிருக்கோம். என்ன ஒரே ஆர்பாட்டம் பண்ணுறீங்கன்னு திட்டினாரு. அக்காவுக்கு கோவம் வந்திடிச்சு என்னாங்க இப்படி பேசறீங்க?? நானே சத்தம் கேட்டுத்தான் எழுந்தேன்னு சொன்னாங்க. அப்போ சரிம்மா வந்த திருடன் எங்கே அப்படின்னு மேலாளர் கேட்டாரு. இல்லைங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க, நாங்க பார்த்தோம் என்று என் தோழி ஒருவள் பீலா விட்டாள்.

மேலாளர் சரி எங்கே காட்டுங்கள் என்றார். அக்கா அடைத்து வைத்த ரூமை காட்டினார்கள். அங்கே மெதுவா கையில் குச்சியுடன் சென்றார். அவருடன் எங்க அக்காவும் போனாங்க.


நான் எதுக்கும் இருக்கட்டும்னு ரூமின் ஒரு கோடியில் போய் நின்று கொண்டேன். வெளியே ஓடலாம்னு பார்த்தா கும்மிருட்டு. எங்கே ஓடுவது என்று தெரியவில்லை,அதான் அங்கே போய் நின்னுட்டேன்.


அந்த ரூமுக்குள்ளே போனா யாரையும் காணோம். மேலாளருக்கு ஒரே கடுப்பு. ஏம்மா இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுறீங்கன்னு திட்டிட்டாரு. அதான் எனக்கும் ஒன்னும் புரியலை. இருங்க யோசிக்கலாம்னு எங்க அக்கா சொன்னாங்க. அப்புறம்தான் ஆராய்ந்தார்கள், ஏன் திருடன் என்று முடிவு செய்தோமுன்னு யோசிச்சாங்க. ஆனா ஏன்னு புரியலை போல.

எனக்கும் கொஞ்சம் தைரியம் வந்து எல்லோருடனும் சேர்ந்து பேச ஆரம்பித்தேன். அதுவரை சும்மா இருந்த தோழிகள் என்னை கண்ணகி பார்வை பார்த்தார்கள். மேலாளர் சரி எல்லாரும் எதை வச்சு திருடன்னு முடிவு பண்ணினீங்கன்னு கேட்டாரு?? அப்போதான் எல்லாருக்கும் அது உறைச்சுது.

நான் சொன்னேன் இல்லேங்க யாரோ பிடி பிடின்னு கத்தினாங்க அதான் பயந்துட்டோம்.நான் கூறியதை அந்த மேலாளர் நம்பாமல் என்னைய ஒரு மாதிரி பார்த்தார். ஏன்னா மொதல்லே நான் விட்ட உதாரிலே (Fan இல்லேன்னு சொன்னேனே)என் மீது அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை. அதான். போய்யா போன்னு மனசுக்குள்ளே சொல்லிகிட்டேன். வெளியே சிரிச்சேன்.

அப்போதான் எல்லாரும் கவனித்தோம் கட்டிலில் படுத்திருந்த ஒரு பையன் மறுபடியும் கீழே விழுந்து அப்படியே தூங்கி கொண்டிருந்தான். மற்றொருவன் கட்டிலிலேயே படுத்திருந்தான்.

பிறகுதான் என் தோழி மெதுவாக கூறினாள், இல்லேப்பா என் தம்பி கொஞ்சம் தூக்கத்திலே உளருவான் ஆனா இப்படி எல்லாம் கத்துவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை என்று மிகவும் சாதரணமாக கூறினாள். அவ்வளவுதான் எல்லாரும் அவள் மீது கொல வெறியோட பாய்ந்தோம்.

மவளே!! நாங்க உயிரை கையிலே பிடிச்சிகிட்டு எங்கே ஒளியரதுன்னு தெரியாம நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும். நொந்து நூலாயிட்டேன் என்று சொல்லி நான்தான் அதிகமா அடிச்சுட்டேன். அப்புறமா, தம்பிங்க இரண்டு பேரையும் அடிச்சு எழுப்பிட்டோம்.


மரியாதையா உன் தம்பியைக் கூட்டிகிட்டு காலையிலே மலையை விட்டு ஏறங்கிடனும் ஆமா. அப்படின்னு கண்டிஷனா சொல்லிட்டேன். அதுக்கு அந்த தம்பி அக்கா நான் இனிமேல் அதுமாதிரி எல்லாம் கத்த மாட்டேன் என்னை அனுப்பிடாதீங்க என்று கெஞ்ச ஆரம்பிச்சான.


பாத்தா பாவமா போச்சு. சரிடா தூங்கும் போது வாயில் துணியை கட்டிக்கிட்டு தான் தூங்கனும். உன்னாலே அந்த பையன் வேறே ரொம்ப கஷ்டப் பட்டான் தெரியுமா?? அப்படின்னு சொன்னேன். இப்படிதாங்க ஒரு நாள் முடிஞ்சிபோச்சு.


பிறகு எங்க அக்கா என்னை நீ ஏம்மா எல்லாரையும் விட்டுட்டு ஓடினே?? அடி விழுந்தா எல்லாருக்கும் விழட்டுமே அப்படி நினைச்சா நல்லா இருக்கும் இல்லையா என்றார்கள். அட போங்க அக்கா எனக்கு பயத்துலே ஒண்ணுமே புரியலை அதான்...........