Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Wednesday, September 30, 2009

சர்தார்ஜி ஜோக்ஸ்!!

சிரிக்கலாம் வாருங்கள்!!

சர்தார்ஜி: ராத்திரி பூரா நான் ரயில் பிரயாணத்தில் தூங்கவே இல்லே!
நண்பன்: ஏன்?
சர்தார்ஜி: எனக்கு அப்பர் பர்த்துதான் கிடைச்சுது.
நண்பன்: நீங்க ஏன் அப்பர் பர்த்தை மாத்திக்கலை?
சர்தார்ஜி: ஹேய்! எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கறதுக்கு லோயர் பர்த்ததிலே யாருமே இல்லையே!
*************


சர்தார்ஜி ஒருவர் S.B. A/C. ஓபன் பண்ணுவதற்காக வங்கி ஒன்றிற்கு சென்றார்.
வங்கியில் கொடுத்த பார்மைப் பார்த்தவுடன் டெல்லிக்குப் புறப்பட்டார்.
ஏன் தெரியுமா??

அந்த பார்மில் "Fill Up In Capital". என்று போட்டிருந்ததாம்...
*************

சர்தார்ஜி ட்யுப் லைட்டின் அடியில் திறந்த வாயுடன் நின்று கொண்டிருந்தார்.

ஏன் தெரியுமா ??
டாக்டர் சொன்னாராம் இன்னைக்கு சாப்பாடு லைட்டா இருக்கணும்னு.
*************


சர்தார்ஜி ப்ரொபஸர் ப்ளம்பரை கல்லூரிக்கு உடனே வருமாறு கட்டளையிட்டார்
ஏன் தெரியுமா??
வினாத்தாள் எப்படி எங்கே லீக் ஆகுதுன்னு கண்டு பிடிக்கத்தான்.....
*************


நண்பன்: சான்டா உன்னோட பொண்ணு இறந்துவிட்டாள்...
மனம் நொந்த சர்தார்ஜி சிறிதும் தாமதிக்காமல் நூறாவது மாடியில் இருந்து குதித்து விட்டார்!
ஐம்பதாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனுக்கு மகளே இல்லை என்பது!
இருபத்தைந்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையென்று!
பத்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனது பெயர் சான்டா இல்லே பான்டா என்று!

*************


காதலி: அன்பே! நமது நிச்சயதார்த்தன்று எனக்கு ரிங் கொடுப்பீங்களா?
சர்தார்ஜி : கண்டிப்பா! உன்னோட போன் நம்பர் என்ன?
*************


கடினமான கேள்வி ஒன்றிற்கு சர்தார்ஜி பதில் கண்டு பிடித்து விட்டார்.
நண்பன்: முதலில் என்ன வரும் கோழிகுஞ்சா இல்லே முட்டையா??
சர்தார்ஜி: அட! இது கூட தெரியாத என்ன? நீ என்ன ஆர்டர் பண்ணியோ அதுதான் மொதல்லே வரும்!
*************


டீச்சர் தனது வகுப்பு மாணவர்கள் அனைவரையும் கிரிகெட் நடந்து கொண்டிக்கும் நாளில் கட்டுரை ஒன்று எழுதச் சொன்னார்கள்.
அனைத்து மாணவர்களும் மும்முரமாக கட்டுரை எழுதத் துவங்கினர் ஒரு சர்தார்ஜி மாணவனைத் தவிர.
பிறகு அந்த சர்தார்ஜி மாணவன் அவசர அவசரமாக எழுதி டீச்சரிடம் கொடுத்தான்.
டீச்சர் பேப்பரை பிரித்துப் பார்த்தா "மழையின் காரணமாக கிரிக்கெட் மேட்ச் கான்செல் செய்யப்பட்டது" என்று எழுதி இருந்தான்.
*************


ஜெராக்ஸ் எடுத்த பிறகு சர்தார்ஜி என்ன செய்வார்??
அசலும் நகலும் எழுத்துப் பிழை இல்லாமல் சரியாக இருக்கிறதா என்று செக் செய்வார்
*************


ஏன் சர்தார்ஜியால் அவசர உதவிக்கு 911 அவரோட இருந்து போனிலே அழைக்க மாட்டார்??
ஏனெனில் தனது போனில் 11 என்ற நம்பர் இல்லாத காரணத்தினால்தான்....
*************


சர்தார்ஜியும் அவரது மனைவியும் காபி கடையில் காபி அருந்திக் கொண்டிருந்தனர்
சர்தார்ஜி: சீக்கிரம் குடி
மனைவி: ஏன்
சர்தார்ஜி: ஹாட் காபி ருபாய் 5 கோல்ட் காபி 10
*************


சர்தார் ஒரு ஆர்ட் கேலரியில்: என்ன இது கொடுமை இங்கே காண்பதை போய் மாடர்ன் ஆர்ட் என்று சொல்லுகிறீர்களே? இது நியாயமா?
ஆர்ட் டீலர்: தயவு செய்து என்னை மன்னிக்கணும் சார்! அது ஆர்ட் இல்லே கண்ணாடி!
*************


சர்தார் செய்தி: பஞ்சாபில் ரெண்டு சீட் வசதி உள்ள விமானம் சுடுகாட்டில் விபத்துக்குள்ளாகி விழுந்து கிடந்தது. உள்ளூரில் உள்ள சர்தார்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, இதுவரையில் 500க்கும் மேற்பட்ட உடல்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே உடல்கள் இருக்கலாம் என்று இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
*************


உயிருக்கு போராடிக் கொன்டிருக்கும் நண்பரைச் சந்திக்க சர்தார்ஜி ஒருவர் மருத்துவ மனைக்குச் சென்றார். அங்கே நண்பனையும் கண்டார். உணர்ச்சி பெருக்கில் அருகே வேகமாக சென்று நின்றார்.
"Chin Yu Yan" இந்த வார்த்தைகளை கூறி விட்டு இறந்து விட்டார் அந்த நண்பர்.
சர்தார்ஜி கடைசி வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உடனே சைனாவிற்கு விரைந்தார்.
அதற்கு அர்த்தம் "ஆக்சிஜன் டியுப் மீது நின்று கொண்டிருக்கின்றாய்"
*************

சர்தார்ஜி: கண்களை மூடிக் கொண்டு டியுப் லைட்டின் கீழே நின்று கொண்டிருந்தார்.
சர்தார்ஜியின் மனைவி: வியப்புடன் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று வினவினார்.
சர்தார்ஜி: நான் உறங்கும்போது எப்படி இருப்பேன் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார் சர்தார்ஜி.
*************

சர்தார்ஜி ஒருவர் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.
ரயிலில் உள்ள பாத்ரூம் செல்ல கதவை திறந்தார். அங்கே ஒருவர் நிற்பதைக் கண்டு எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார். சில நிமிடம் கழித்து சென்றால் அதே ஆசாமி நின்று கொண்டிருந்தார், இப்போதும் எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார்.

இப்படி பல முறை நடந்து ஓய்ந்து கடைசியாக டிக்கெட் பரிசோதகரிடம் "ஒரு ஆள் ரொம்ப நேரமா பாத்ரூமிலே நின்று கொண்டு வெளியே வரமாட்டேங்கிறான்"என்று முறையிட்டார்.

"அப்படியா? எங்கே வாருங்கள் பார்க்கலாம்!" பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார். அங்கே ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு "இங்கே யாருமே இல்லையே" என்று சர்தார்ஜியை பார்த்து.

"அப்படியா! எங்கே நகருங்கள் நான் பார்க்கிறேன். என்ன சார் அங்கே பாருங்க நிக்கறான்"

"அது வேறு யாரும் இல்லைங்க! கண்ணாடியில் உங்க உருவம்தான் தெரியுது!" என்று அலுப்புடன் தனது வேலையை தொடர நகர்ந்தார் T.T.R.
*************

பொறுப்பு அறிவித்தல்: பகிர்ந்தவை!! கேட்டவை!!

Monday, July 6, 2009

வைகைப்புயலும் பார்த்திபனும்!!


வைகைபுயலும் பார்த்திபனும் சந்திக்கும் வேளையில்...
[இவர்களைப் பற்றி எழுதி அதிக நாட்கள் ஆகிவிட்டது என்று எனது நட்புக்கள் அன்புக் கட்டளை இட்டதால் இதோ உங்கள் ரம்யா புறப்பட்டுவிட்டேன்]

வாருங்கள் அவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை என்று பார்ப்போம்.

"வேலு வேலு...." பார்த்திபனின் குரல் கணீரென்று வேலுவின் வீட்டிற்குள் ஊடுருவிச் சென்றது.

"யாரு இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கு. எதுக்கும் ஜன்னல் வழியா யாருன்னு பார்க்கலாம். வில்லங்கத்தை வீதியோட அனுப்பறதா இல்லே பாய் போட்டு உக்கார வக்கிரதான்னு. "ஐயோ இவனா காலையிலேயே வந்துட்டானா? மாட்டிக்ககூடாது. யோசிச்சு முடிவெடுக்கணும். அப்போ அக்கா கண்ணிலே பட..

"அக்கா வெளியே ஒருத்தன் என் பெயரைச் சொல்லி கூவிக்கிட்டு இருக்கான். நான் வீட்லே இல்லேன்னு சொல்லிடு. என்ன முழிக்கறே போ சீக்கிரம்... சீக்கிரம் போ...."

"ஏண்டா காலையிலே என்னை பொய் சொல்ல சொல்றே?

"அப்போ மத்தியானம் பொய் சொல்லுவியா? போக்கா போ நான் சொன்னதை மொதெல்ல செய்.இல்லேன்னா அவன் உள்ளே வந்திடுவான். ஐயோ! சீக்கிரம் போக்கா"

"வேணாம்டா அவன் மொகத்தை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு, வெளியே போய் என்னான்னு கேளு.."

என்ன உள்ளே இருந்து ஒரு சத்தத்தையும் காணோம் என்று யோசித்த பார்த்திபன், வேலு வீடும் நம்ப வீடு மாதிரிதானே என்று உரிமையுடன் உள்ளே நுழைய, அங்கே பார்த்திபன் கண்ட காட்சி...

"நீ என்னோட அக்காவா இல்லே அவனோட அக்காவா? நான் சொன்னதை செய்வியா.... "

"டேய் ரொம்ப ஓவரா பேசறே! மாமாகிட்டே சொல்லிடுவேன் ஜாக்கிரதை"

"ஐயோ அக்கா நான் இப்போ உன்னை என்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு கோவப்படறே. மாமா கிட்டே சொல்றதுக்கு பதிலா உன் கையாலே கொஞ்சம் விஷத்தை கொடுத்திடு உன் மடியிலேயே நான் செத்துப் போய்டறேன் " கண்ணீருடன் சொன்னவுடனே அக்கா பயந்து போட்டாங்க, இருந்தாலும் இந்த செண்டிமெண்ட் வேலை செய்யுமா? என்று வேலுவுக்கு சந்தேகம். ஓரக்கண்ணால் அக்காவை கவனிக்க, அக்கா முகம் பாவமா இருந்ததினால் மனதுக்குள்ளே ஒரே சந்தோசம்.

"சரிடா நீ அழுவாதே, நீ அழுதா எனக்கும் அழுவாச்சியா வரும். நானே போய் சொல்லித் தொலைக்கிறேன். ஆமா நீ எதுக்கு அவனை பார்த்து பயப்படறே? நான் சொன்னா அவன் நம்புவானா?"

"அவன் இருக்கானே அவன் ஒரு கிறுக்கன். ரொம்ப மோசமானவன். அதுமட்டுமில்லே ரொம்ப தப்பானவன்க்கா. திடீர்னு பிடிச்சி அடிச்சிடுவான். என்ன தோணுதோ அதை உடனே செய்திடுவான். கிறுக்குப்பய வந்து கூப்பிடுவான் உடனே நான் போகனுமா? இப்போ உன்னோட தம்பி நான் அவனைப் பார்க்க போகவா? வேணாமா? நீயே சொல்லுக்கா! நீ போசொன்னா நான் போறேன்"

"வேணாம்டா நானே போய் அவன்கிட்டே சொல்றேன். என்னைய ஒன்னும் செய்திடமாட்டானே?"

"ச்சே! ச்சே! உன்னை ஒன்னும் செய்யமாட்டான் அவனுக்கு டார்கெட் நான்தானே?" என்று வேலு முணு முணுக்க....

"என்னாடா முணுமுணுக்கரே?"

"ஒன்னும் இல்லேக்கா நீ போய் அவனை அனுப்பற வழியை பாரு?"

"இருடி, நீ வெளியே வராமலா போய்டுவே? என்னை பத்தி இந்தமாதிரி எல்லாம் சொல்லிக்கிட்டு திரியரியா? ஐயோ அக்கா வராங்களே! போய் வெளியே நின்னுக்குவோம்"

"தம்பி நீங்கதான் வேலுவைப் பார்க்க வந்தீங்களா?"

"ஆமாம்க்கா!"

"வேலு வீட்டிலே இல்லையே!"

"என்னாது வீட்டிலே இல்லையா! நான் அவன்கிட்டே ஆயிரம்ரூபா கடன் வாங்கியிருந்தேன். அதெ கொடுத்திட்டுப் போலாம்னு வந்தேன். இல்லேன்னா சரிக்கா நான் கிளம்பறேன். வேலு வந்தா நான் வந்திட்டுப் போனதா சொல்லிடுங்க. என்ன! கையிலே வச்சிருந்தா செலவு பண்ணிடுவேனோன்னு பயந்தேன்" என்று கூறியபடி வீட்டின் உள்ளே பார்க்கிறார் பார்த்திபன்.

"இவன் என்ன நாம ஏதோ பணம் கொடுத்ததா சொல்றான். எப்போ கொடுத்தேன். எனக்கு இவனுக்கு பணம் கொடுத்ததா ஞாபகமே இல்லையே? நானே அஞ்சுக்கும் பத்துக்கும் ஆலாப் பறக்கறேன். இதுலே ஆயிரம் ரூவாவா? இப்போ என்னா பண்ணலாம் இல்லேன்னு சொல்லி அனுப்பிட்டோமே. தப்பு பண்ணிட்டோமோ? பயபிள்ளே காலையிலே கையிலே பணத்தை வச்சிக்கிட்டு என்கிட்டே தான் குடுப்பேன்னு பிடிவாதம் பண்றானே!"

"சரி இப்போதைக்கு உள்ளிருப்புக்கு தடா சொல்லிட்டு வெளியே போவோம். என்று ஒரு முடிவிற்கு வந்தவுடன் மனதில் மிகவும் மகிழ்ச்சி தாண்டவமாடுது. ஏன்னா கையிலே பணம் வரப் போகுதே! இந்த பணத்திலே என்ன வாங்கலாம். இப்போ வெளியே போனா சரியா இருக்குமா?"என்று வேலு யோசித்துக் கொண்டிருக்கும்போதே..

"வேலு உள்ளே இல்லேப்பா நீ அந்த பணத்தை என் கிட்டே கொடு நான் வேலுகிட்டே கொடுத்திடறேன்"

"இல்லேக்கா அவன் யாருகிட்டேயும் கொடுக்காதேன்னு சொல்லி இருக்கான். குறிப்பா உங்ககிட்டே கொடுக்கக் கூடாதுன்னு கண்டிஷனா சொல்லியிருக்கான். அதான் என்னை தப்பா நினைக்காதீங்க அக்கா"

என்ன இவன் நிசமாலுமே பணத்தை திருப்பிக் கொடுக்கத்தான் வந்திருக்கான். நான் கூட இவனை தப்பா இல்லே நினைச்சுட்டேன். நம்ம பயதான் பொல்லாத பைய போல இருக்கே. என்று தனக்குள்ளே முணுமுணுத்த அக்காவுக்கு செம கோபம் வந்திடுச்சு.

"அப்படியா சொன்னான் வேலு?

"ஆஹா, சரியா கொளுத்திப் போட்டுட்டோம்னு நினைக்கிறேன். பத்த ஆரம்பிச்சிடுச்சு"

"டேய் வாட வெளியே! போனா போவுதுன்னு வீட்டுக்குள்ளே உக்காரவச்ச்சி தண்டச்சோறு போட்டா, நீ இந்த மாதிரியா என் பேரை கெடுக்கறே?"

"ஏன்க்கா கத்தறே என் காது கேக்குது. அட இங்கே பாருய்யா நீ எப்போ வந்தே? நேரே உள்ளே வராமே இங்கே என்ன பண்றே? என்னாக்கா வெளியவே நிக்க வச்சி பேசிகிட்டு இருக்கே. இவரு என் செட்டு" அப்பாவியா மொகத்தை வச்சிக்கிட்டு வேலு பேச ஆரம்பித்தவுடன்..

"என்னா உன் செட்டா? உள்ளே என்னாடா சொன்னே?"

"அதானே! நான் வந்தது உனக்கு தெரியாது? அக்காகிட்டே என்ன சொல்லி அனுப்பினே"?

"தம்பி கூட்டிகிட்டு போய் நல்லா நாலு சாத்து சாத்து அப்போதான் இதுக்கு அறிவு வரும்"

"இதா? மரியாதை போச்சா? ரொம்ப கேவலப்படுத்துராங்களே"

"அக்கா அந்த ஆயிரம் ரூவா நான் வேலுகிட்டே குடுத்திடறேன். உங்ககிட்டே கொடுக்கலைன்னு என்னை தப்பா நினைக்காதீங்க"

"அட நான் மறந்துட்டேனே தம்பி, டேய் உனக்கு ஏதுடா ஆயிரம் ரூபா?"

"என்னாது ஆயிரம் ரூபாவா? அது சாவித்திரி அம்மா நடிச்ச படம் இல்லே, நீ அதையா சொல்றே?"

"டேய் நான் பணத்தைப் பத்தி பேசிகிட்டு இருக்கேன் நீ படத்தைப் பத்தி பேசிகிட்டு இருக்கியா? ஏண்டா இப்படி கீதத்துக்கு மாத்தா பேசிகிட்டு இருக்கே?"

"என்னாக்கா சொல்றே நீ? "

"உனக்கு இந்த தம்பிக்கு கடன் குடுக்க பணம் ஏது? நீயோ ஒரு வேலையும் செய்யாம சுத்தி வர்றவன். உனக்கு ஏதுடா பணம்?"

அய்யய்யோ இவன் கொளுத்திப் போட்டது இப்போ கொழுந்துவிட்டு எரியுதே. ஏண்டா பாவி உனக்கு எங்கேடா நான் கடன் கொடுத்தேன்? முழியை பாரு ஆடு திருடின கள்ளனாட்டமா? இவனுகளை நம்பறாங்க! நம்பளை ஒருத்தரும் நம்பமாட்டேங்கிறாங்க! இன்னைக்கு விடிஞ்சவுடனே சனி வீட்டுக்கு வந்திடுச்சா. சமாளிக்கலாம்.

"அக்கா இவன் மனசுக்குள்ளே நம்ப ரெண்டு பேரையும் திட்டிகிட்டு இருக்கான். பாருங்க அவன் உதடு மட்டும் அசையுது"

"என்னாது திட்டுரானா டேய்!"

"ஐயோ அக்கா இவன் நம்பளுகுள்ளே சண்டை மூட்டி விடறான். எனக்கு பயத்துலே உதடு ரெண்டும் டைப் அடுக்குது. நான் யாரையும் திட்டலேக்கா"

"டேய் பொய் சொல்லாதே நானும் பார்த்தேன் அந்த தம்பி சொல்றது உண்மைதான். இரு மாமா வரட்டும் இன்னைக்கு உன்னை வீட்டை விட்டு விரட்டிடறேன்"

"போதுமா இப்போ உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே? பொருத்தி போட்டது சும்மா திகுதிகுன்னு எரியுது இல்லே! போ போய் நிம்மதியா இன்னைக்கி அடுத்த வேலையை பாரு. என்னைய மாதிரி ஒரு இளிச்சவாயன் உனக்கு கிடைக்காமலா போய்டுவான். போப்பா போ"

"அக்கா அப்போ அந்த ஆயிரம் ரூபா எனக்கு கடன் கொடுத்தது உங்களுக்கு தெரியாதா? "

"ஏண்டா! ஏண்டா! மறுபடியும் அதை பத்தியே பேசறே, வா நம்ம போகலாம்" என்று பார்த்திபனை இழுத்துக் கொண்டு நடக்க அவர்களை இடைமறித்த அக்கா..

"ஆமா அன்னைக்கி ஒரு நாளு மாமா சட்டை பாக்கெட்லே வச்சிருந்த பணத்தை காணோம்னு சத்தம் போட்டாரே அது நீதானா? என் கிட்டே கூட சொல்லவே இல்லை?"

"ஐயோ அக்கா அதுக்கு எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அந்த பணத்தை நான் எடுக்கலைக்கா. சத்தியமா நான் எடுக்கலை இப்போதாவாவது என்னை நம்புவியா?"

"ம்ம்ம் நான் உன்னை நம்ப மாட்டேன். அப்போ இந்த தம்பி பொய் சொல்லுதா? என்ன தம்பி எது பொய்? எது உண்மை?"

தூரத்துலே மாமா வருவதை வேலு கவனிக்க உஷாரு உஷாருன்னு மனது சொல்ல

"அக்கா மாமா வராரு சித்த சும்மா இரு. இவரு பணம் கொடுத்தா உங்கிட்டே கொண்டு வந்து கொடுத்திடறேன். பாரு மாமா என்னையே பாக்கறாரு. கொஞ்சம் சிரிச்சிகிட்டே பேசுக்கா. இல்லேன்னா என்னை தப்பா நினைப்பாரு. ப்ளீஸ்க்கா...."

"ம்ம் போயிட்டுவா அப்புறமா இருக்கு உனக்கு....."







Wednesday, June 17, 2009

பதினேழு சட்ட திட்டங்கள் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே!!

சட்ட திட்டங்கள் என்பது பல உள்ளன.

ஆனால் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே உள்ள சட்ட திட்டங்கள் சற்று வித்தியாசமான முறையில் இங்கே.....


1. எப்பொழுதும் சட்ட திட்டங்களை உருவாக்குவது பெண்ணே.


2. அச்சட்டதிட்டங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாறக் கூடியது.


3. எந்த ஒரு ஆணும் அச்சட்டத்திட்டங்கள் அனைத்தயும் அறிந்திருக்க இயலாது.


4.ஒருவேளை, ஆண் அச்சட்டதிட்டங்களை அறிந்திருப்பானோ என்று ஐயம் ஏற்பட்டால், பெண்ணானவள் அனைத்து அல்லது சில சட்ட திட்டங்களையாவது உடனடியாக மாற்றி விடுவாள்.


5. பெண் எப்போதும் தவறாக இருக்க மாட்டாள்.


6. அப்படி தவறாக இருக்கும் பட்சத்தில், அது அனேகமாக ஆண் அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது அவன் தவறு செய்து இருக்க வேண்டும்.


7. ஒருவேளை விதி #6 நடந்துவிட்டால், ஆண் உடனே நடந்து முடிந்த கருத்து வேறுபாட்டிற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும்.


8. பெண் எந்த நேரமும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளல்லாம்.


9.ஆண் எந்தவித முன்னறிவிப்புமின்றி தனது கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது. அப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு முன், வாய் மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ பெண்ணிடம் தெரிவித்தாக வேண்டும்.


10. பெண்ணிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் கோபம் கொள்ளவோ வருத்தப்பட வைக்கவோ உரிமை உண்டு.


11.ஆணானவன் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண்ணால் அனுமதிக்கப்படும் வரை எப்போதும் அமைதி காத்து புன்முறுவலுடன் இருக்க வேண்டும்.


12. எந்த நேரத்திலும் ஆண் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண் அனுமதிக்க மாட்டாள்.


13.பெண்ணின் மனதை புரிந்து கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கப் படுகிறான்.


14. எப்போதும் என்ன முக்கியம் என்று பெண் கருதுகின்றாள் என்றால், அவள் என்ன சொல்லுகின்றாள் என்பதைவிட என்ன நினைக்கின்றாள் என்பதுதான்.


15. ஆண் ஏன் இந்த சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை என்றால் .........


16.இந்த சட்டதிட்டங்களை எழுத்து வடிவில் கொடுக்க முயற்சித்தால் உடல் வதைதான் மிஞ்சும்.


17. ஒருவேளை ஆண் தான் செய்வது சரி என்று நம்பினால் #5வது விதியை நினைவு கூர்ந்து கொள்ளவேண்டும். (இது மிக மிக அவசியமான ஒன்று.......)




டிஸ்கி: இது யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதியவை அல்ல. எனக்கு ஒரு தோழி அனுப்பியதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.

சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான்..........


Thursday, April 23, 2009

பார்க்கத் துணியுங்கள் பாக்தாத் பேரழகியை!!

எல்லாருக்கும் வணக்கம்ங்க!

எனக்கு ஒரு மினஞ்சல் வந்தது. அதெ என்னோட நண்பர்கள் சிலருக்கு அனுப்பி வைத்தேன்.

வெளியே போயிட்டு வந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு செக் பண்ணினா 75 மின்னஞ்சல் வந்திருந்துச்சு. என்னான்னு பார்த்தா! நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பியதோடு அல்லாமால் அதிலே கும்மி கூட அடிக்க முடியும்ன்னு நம்ப நண்பர்கள் நிரூபித்து விட்டார்கள்.

சிலர் பயத்துடனும், தைரியத்துடனும் பதில் மின்னஞ்சல் அனுப்பினார்கள். அவர்கள் அனைவருக்கும் எனதன்பு நன்றிகள்!

கும்மியில் பங்கு பெற்றவர்கள் முறையே
*************************************************
வால்பையன்
உருப்புடாதது அணிமா
ஆளவந்தான்
ராகவன் நைஜீரியா

நம் நண்பர்கள் அடித்த கும்மியை உங்களுக்காக இங்கே அளிக்கிறேன். நான் படித்து சிரித்து சிரித்து எனக்கு வயறு வலிச்சி போச்சு. அதான் நீங்களும் சிரிங்கன்னு பதிவா போடறேன்.

எச்சரிக்கை
*************
கீழே காணப்படும் அழகியை பார்ப்பதற்கு பயப்படுகிறவர்கள் மிகவும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பார்க்கவும்.
மன வலிமை மிக்கவர்கள் மட்டும் பார்க்கவும்.
மனம் பலவீனமானவர்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும்.
தைரியசாலிகளுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.



நண்பர்களே கும்மி ஆரம்பம்!!
***********************************
ஐயோ, அந்த பயங்கர உருவம் நீங்கதானா???? :-)
/விஜய் (வெட்டிவம்பு)

Hi Vijay,
அடபாவிங்களா ஒரு கூட்டமே அலையுதா என்னை பேய்ன்னு சொல்ல :))
ஹா ஹா சூப்பர்!!
இருங்க இன்னைக்கு நைட் பேயா வந்து உங்களை பயமுறுத்துறேன் :))
ரம்யா

இப்படி ஒரு மெயில் அனுப்பி காலைல கதி கலங்க வெச்சதுக்கு
நன்றி ரம்யா அக்கா
ஹ ஹ ஹ ஹ !!!
வாழ்க வளமுடன் !!!
Thamil Selvi

வந்துட்டு போன அந்த அழகான பொண்ணோட அட்ரஸ் கொடுங்க ப்ளீஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அளவில்லா அதிர்ச்சியுடன்
வால்பையன்

ஆமா எதுக்கு இப்படி நேர்ல வந்து சந்தோஷத்த குடுக்குறீங்க??
உருப்புடாதது அணிமா

நல்ல மாப்பிளையா(உங்களை தான்) பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான்
வால்பையன்

அட மெய்யாலுமா??
உருப்புடாதது அணிமா

தாயிருந்தாலும் அவுங்க குடும்பத்துக்கிட்ட(ரம்யாகிட்ட) பேசிக்கோங்க!அளவில்லா குசும்புடன்
வால்பையன்

அதெல்லாம் முடியாது..
நீங்க தான் நேர்ல வந்து பேசோனும்...
ஒறவு மொறை நீங்கதானே..
அளவில்லா கொழுப்புடன்,
உருப்புடாதது அணிமா

ஏற்கனவே அவுங்க அக்காவை தான் கட்டிகிட்டு,
மரை கழண்டு போய் உட்காந்திருக்கேன் திரும்பவுமா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வால்பையன்

அப்போ நாம மச்சான் மொற ஆகுதா??
பெரிய மச்சான்...
அன்போடும் பன்போடும் உள்ள சின்ன மச்சான்( ஆக போகும்)
உருப்புடாதது அணிமா

விசாரிச்சு பாக்கையில அவுக வேற மாதிரி சொல்றாகளே... :)))
//உட்காந்திருக்கேன்// இப்படி தான் வூட்டுகாரவுகளுக்க்கு மரியாத குடுப்பீகளா? என்னாதிது சின்னபுள்ள தனமா இருக்கு
//திரும்பவுமா// எவ்வளவோ பண்ணிட்ட்...... (நீங்களும் ஒரு தடவை மன்சுக்குள்ளே சொல்லிக்குங்க :D )

இது ரம்யாவுக்கு
*******************
ய்மயா குட்டி..யிப்ப்டி யெய்யாம் பய்முருத கூடாது ( கண்ட நாள் முதல் - கிருஷ்ணா மாதிரி “சத்தம்” போட்டு படிக்கனும் :)))))) )
Alagar.P

அழகர் அண்ணேநீங்க சொல்றது
ஒண்ணுமே பிரியல எனக்கு
வால்பையன்

ஏதோ எனிக்கி மட்டும் பிரிஞ்சா மாரி பேசுரீங்க??
இங்கும் அதே அதே...
உருப்புடாதது அணிமா

நல்லவேளை தப்பிச்சேன்.. :) இந்த பதிலை ”பு.த.செ.வி” + பின்நவீனத்துவம் லிஸ்ட்ல சேத்துடுறேன். இதுவும் புரியலேன்னா ஒரு பதிவு போட வேண்டியிருக்கும் பரவாயில்ல்லியா :))))))) :D
Alagar.P

அதுக்கு அந்த மோகினியே தேவலாம்ன்னு நினைக்கிறேன்...
உருப்புடாதது அணிமா

அந்த பயம் இருக்கட்டும் :)
Alagar.P

ஆமாங்க அந்த பய இருக்கட்டும்!
மோகினிக்கு ரொம்ப பிடிச்சி போச்சாம்!
வால்பையன்

எனக்கு இந்த சிலடை பிடிச்சு போச்சு...
விசாரிச்சு விவரம் (விவரமா) சொன்னதுக்கு நன்றிங்கண்ணா :)
Alagar.P

என்னாப்பா இது லிஸ்டுல 50 மெயில் ஐடி இருக்கு
3 பேரு மட்டும் கும்மி அடிச்சிகிட்டு இருக்கோம்!
வால்பையன்

வேடிக்கை பாக்குற யாரையாவது களத்துல இறக்கி விடுங்க :)
Alagar.P

എന്നാഥു അമ്ബഥാ??
என்னாது அம்பதா??
3 பேர் மட்டும் கும்மியா??
ச்சே எ.கொ.சா.இ??
அளவில்லா அதிர்ச்சியுடன்,
உருப்புடாதது அணிமா

பேரழகிய பார்த்த அதிர்ச்சியில
இருந்து யாரும் மீண்டு வரல போல
அளவில்லா சந்தேகத்துடன்
வால்பையன்

மீண்டு வரலியா..இல்ல மிரண்டு வரலியா..
”அதே” அளவில்லா சந்தேகத்துடன்
Alagar.P

இங்க நாம மூணு பேரு தானே இருக்கோம்
வேற பேரழகிகள் இல்லையே!
அப்புறம் ஏன் மிரளனும்
அதே சந்தேகத்தோடு
வால்பையன்

ஒன்னுமே புரியல.
ஏதோ படம் வந்துச்சு அப்படின்னு விட்டுட்டேன்.
இதுல இவ்வளவு விசயம் இருக்கா?
இராகவன் நைஜீரியா

என்னாது படமா??
அதுல தான் என்னோட வருங்கால மனைவி படம் இருக்கு...
அதுக்கு தான் இவ்ளோ மேட்டர்...
ஆசை ஆசையாய்,
உருப்புடாதது அணிமா

தம்பி நேத்து பார்த்த போது சொல்லியிருக்க வேண்டியதுதானே.
அண்ணியும் பார்த்து இருப்பாங்க இல்ல.
இராகவன் நைஜீரியா

//அதுல தான் என்னோட வருங்கால மனைவி படம் இருக்கு...//
அதுகுள்ளயும் அவசரப்படக்கூடாது!

இப்போ தான் அவுங்க சொந்தகாரங்க
ரம்யா வெளியே போயிட்டு வந்துருக்காங்க
இனிமே வந்து பதில் சொல்லுவாங்க
வால்பையன்

இப்போ தான் அவங்க வீட்ல சம்மதம் சொன்னாங்க...
அதனால தான் நேத்து சொல்ல முடியல..
சுடுகாட்டில் இருந்து
உருப்புடாதது அணிமா

ஓ அப்படியா..
அடுத்த தடவை பார்க்கும் போது சொல்லிக்களாம்.
இராகவன் நைஜீரியா

சொல்லிட்டாங்களாஇப்போ எல்லா சுடுகாட்டிலியேயும் இருக்குற சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்புங்க!
வால்பையன்

யாருப்பா அங்க ...
வண்டிய எடுங்கப்பா...
எல்லா சுடுகாட்டுலையும் போய் சொல்லிட்டு வரலாம்.
இராகவன் நைஜீரியா

சில பேரழகி பேய்கள் நைட்டாகிருச்சுன்னு
வீட்டுக்கு திரும்பிட்டாங்களாம்!!
வால்பையன்

ஆமாம், என்னை வைச்சு காமெடி கீமெடி பன்னலயே???
அப்புறம் எல்லாரும் கல்யானத்துக்கு சுடுகாட்டுக்கு வந்துடுங்கோ.
அளவில்லா ஆனந்தத்தோடு
உருப்புடாதது அணிமா

ஆஹா...
உங்க வீட்டில் எப்படி?
இராகவன் நைஜீரியா

தம்பி யோக் என்னாது இது
இராகவன் நைஜீரியா

ஷூவை பார்க்க சொன்ன ரம்யா,
அங்க இருந்த பேரழகிய பார்க்க சொல்லாதது ஏன்??
கடுப்பான சந்தோசத்தில்
உருப்புடாதது அணிமா

அதானே...ஏன் பார்க்கச் சொல்லவில்லை..
ஒரே அழுகுணி ஆட்டமா இருக்கு...
இராகவன் நைஜீரியா

சுடுகாட்டுக்கு வந்துருவோம்!
எல்லோருக்கும் சூடா ரத்த பொறியல் கிடைக்குமுல்ல
அளவில்லா பசியோடு
வால்பையன்

ஆமாங்க வால் ரொம்ப பசியா இருக்காரு
நான் எல்லாம் சைவ பேய்ங்க
அதனால எனக்கு வெஜிடபுள் சூப் வேணும்
இராகவன் நைஜீரியா

//அதானே...
ஏன் பார்க்கச் சொல்லவில்லை..//

பார்த்து உங்களுக்கும் பிடிச்சி போயிருச்சுன்னா
இருக்குறதே ஒரே ஒரு பேயி
எத்தனை பேர்த்துக்கு கட்டி கொடுக்குறது
அழகருக்கு பேசி முடிச்சாச்சு
எல்லோரும் விருந்துக்கு மறக்காம வந்துருங்க
ஏன்னா நீங்க தான் விருந்தே!
அதே பசியோடு
வால்பையன்

அது மட்டும் இல்ல.. கல்யானத்துக்கு மெனு என்னான்னா??
தலக்கறி ( இது அந்த தல இல்ல),
தொடக்கறி ( இது ரம்பா இல்ல)
மூளக்கறி ( என்னோட மூளை இல்ல)
அப்புரமா அவிஞ்சு போன உடம்பு( உடும்பு இல்ல) வருவல்..
சாப்பிட அழைக்கும்
உருப்புடாதது அணிமா

///அழகருக்கு பேசி முடிச்சாச்சு எல்லோரும் விருந்துக்கு மறக்காம வந்துருங்க////

இது என்னாது???
அப்போ அவிங்க எனிக்கி இல்லியா?
நொந்த மனசுடன்,
உருப்புடாதது அணிமா

அழகருக்கு பேசி முடிச்சாச்சு
எல்லோரும் விருந்துக்கு
மறக்காம வந்துருங்க
வால்பையன்

//மூளக்கறி (என்னோட மூளை இல்ல)//
எனக்கு மூளை இல்லைன்னு சொன்னா மாதிரி இருந்துச்சு!

ஏகப்பட்ட மூளையுடன்
வால்பையன்

////எனக்கு மூளை இல்லைன்னு சொன்னா மாதிரி இருந்துச்சு! ஏகப்பட்ட மூளையுடன்////
எங்கே தப்பா படிச்சிடுவீங்களோன்ன்னு பயந்துட்டேன்...
இன்னும் அதே லொல்லுடன்,( அந்த லொள்ளு அல்ல )

உருப்புடாதது அணிமா

//இது என்னாது??? அப்போ அவிங்க எனிக்கி இல்லியா?//
போட்டிக்கு ரெண்டு பேரு இருக்கிங்களா!
சரி யாரு காட்டேரியோட சண்டை போட்டு
ஜெயிக்கிறிங்களோ அவுங்களுக்கு தான் இந்த பேரழகி
வால்தனத்துடன்

வால்பையன்

ஆமாம் யார் ஜெயிக்கிறார்களோ..
அவங்களுக்குதான்..
இராகவன் நைஜீரியா

மூளைன்னா அந்த பேரழகிக்கு ரொம்ப பிடிக்குமாம்
வறுக்க கூட வேண்டியதில்லையாம்
அப்படியே சாப்பிடுவாங்கலாம் யாரு ரெடி
வால்தனத்துடன்
வால்பையன்

சரி ராகவன் அண்ணே
அந்த காட்டேரிய அவுத்து விடுங்க!
சண்டை போடட்டும்!
வால்பையன்

ஆமாம் யார் ஜெயிக்கிறார்களோ..
அவங்களுக்குதான்..
இராகவன் நைஜீரியா

நமக்கு அந்த கவலை வேண்டாம்.
இருப்பவர்கள் தான் கவலைப் படவேண்டும் வாலு..
இராகவன் நைஜீரியா

///மூளைன்னா அந்த பேரழகிக்கு ரொம்ப பிடிக்குமாம்
வறுக்க கூட வேண்டியதில்லையாம் அப்படியே சாப்பிடுவாங்கலாம் யாரு ரெடி////

நான் ரெட்டி இல்லீங்கோ!!!
யாருப்ப இங்க ரெட்டி?
ஓ. இது ரெடியா??
எப்பவுமே தப்ப தப்பா பார்க்கும்,
உருப்புடாதது அணிமா

மூளைன்னா அந்த பேரழகிக்கு ரொம்ப பிடிக்குமாம்
வறுக்க கூட வேண்டியதில்லையாம்
அப்படியே சாப்பிடுவாங்கலாம் யாரு ரெடி
வால்பையன்

அது உங்ககிட்ட தானே இருக்கு...
இப்ப எங்ககிட்ட கேட்டா நான் எங்க போவேன்..
இராகவன் நைஜீரியா

அடி ஆத்தாடி,
நான் தான் இங்க அம்பது...
உருப்புடாதது அணிமா

தம்பி இப்பத்தான் மணி 6.00 ஆகுது...
அதுக்குள்ளே ...
இராகவன் நைஜீரியா

50 அடித்து ஆடிய அணிமா (மிஸ்டர். பேய்) க்கு வாழ்த்துககள்
இராகவன் நைஜீரியா

///தம்பி இப்பத்தான் மணி 6.00 ஆகுது...
அதுக்குள்ளே ... இராகவன், நை...///

என்ன பன்றது ? இன்னிக்கு 5 மணிக்கே ஆ(ரம்)பிச்சிட்டோம்ல...
உருப்புடாதது அணிமா

ஓ... 5 மணிக்கேவா பேய்க்கு வாக்கப்பட்டா இப்படித்தான்..
இராகவன் நைஜீரியா

//இப்ப எங்ககிட்ட கேட்டா நான் எங்க போவேன்..//
இங்க இருக்குறது குட்டிசாத்தான் அண்ணே

காட்டேரிகூட தான் சண்டை போடணும்!
பேய்களின் தலைவி சென்னையில டயர்டாகி தூங்க போயிட்டாங்க இல்லைன்னா அவுங்களையே ஐடியா கேட்கலாம்
அளவில்லா ஆர்வத்துடன்
வால்பையன்

வாலு... நீங்களே இப்படி சொன்னா என்னா செய்யறது.
வற்றாத நதியே....
இந்த வசனம் தான் ஞாபகத்து வருதுங்க
இராகவன் நைஜீரியா

ஆமாம்ணே! கஷ்டம் தான் அளவில்லாமல் நொந்து
வால்பையன்

அப்படியா?? கிளிக்கு ரெக்க மொளச்சிடிச்சு.. (இது நியாபகம் வரலியா)
இஃகி.. இஃகி
உருப்புடாதது அணிமா

அது உங்களைப் பார்த்தவுடன் ஞாபகம் வந்துடுச்சு
இராகவன் நைஜீரியா

மொளைக்குது பெருசா மே மாசம் மட்டும் தான் அந்த சுதந்திரம் அப்புறம் திரும்பவும்! வேதாளத்தோட முருங்கை மரத்துல குடும்பம் நடத்தணும்
அளவில்லா உயரத்தில்
வால்பையன்

சில விசயங்களை தவிர்க்க முடியாது வாலு...
இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை...
என்சாய்...
உருப்புடாதது அணிமா

///அழகருக்கு பேசி முடிச்சாச்சு எல்லோரும் விருந்துக்கு மறக்காம வந்துருங்க////

அடபாவி மக்கா.. லஞ்ச் முடிச்சு.. ஒரு மீட்டிங் போயிட்டு வர்றதுக்குள்ள எனக்கும் அந்த பேரழகிக்கும் (என்ன பண்றது இனி மேல் அப்படி தான் வெளியில சொல்லியாகணும்) கல்யாணமே பேசிமுடிச்சிட்டீங்களே.. உங்க ஆர்வக்கோளாறுக்கு அளவே இல்லியா.... இந்த கொடுமைய தட்டி கேக்க ஆளே இல்லியா????.. ச்சின்னப்பையன் நீங்க கேளுங்களேன்.. ரம்யா நீங்க கேளுங்களேன்.. குடுகுடுப்பை நீங்களாவது கேளுங்களேன் பா..அதீத பயத்துடன்.....பீதியுடன்.. மிரட்சியுடன்.. இன்னும் எல்லா ”உடன்”
Alagar P

///இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை...என்சாய்...////
பழய தத்துவம் 3986934063906834096. அதே குறும்போடு,

உருப்புடாதது அணிமா

என்னே ஒரு புள்ளிவிவரம். வாழ்க அழகர்...
இராகவன், நைஜீரியா


hi ramya,pair of shoes kandupuduchitaen.
aanaa enna oru akka vanthaanga..
vandhu pudinkittu poittaanga..
evvalavu alagaa irunthaanga theriyuma...
cute lady..i have enjoyed with thril.
with love,
Raji

டிஸ்கி: இது எனக்கு வந்த மின்னஞ்சல் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.