Tuesday, February 7, 2012

என் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு!!!

பொழுது போகாத நேரத்திலே!!!

என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு? மாதிரி இல்லே நிஜமாவே ப்ரீயாதான் இருக்கோம். ம்...ம்...ம்... யாராவது சிக்குராயிங்களா பார்க்கலாம்.

அது சரி கையிலே எதுக்கு போனை சும்மா வச்சிக்கிட்டு இருக்கணும். யாருக்காவது போன் போட்டு கலாயிக்கலாம்.

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்... (நீங்கள் டயல் செய்த எண் தற்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் சிறிது நேரத்திற்கு பிறகு முயற்சி செய்யவும்). யாருக்கு போன் செய்தாலும் இதே சொல்லுது. நிஜம்மாவே யாருமே இல்லையா? இல்லே போனை கூடையிலே போட்டு கவுத்து மூடிட்டாங்களா? ஒரு வேளை நாம போன் செய்யபோரோம்னு முனனமேயே அவங்களுக்கு தெரிஞ்சிப் போச்சோ?

அடுத்து யாருக்கு முயற்சி செய்யலாம்... ஓ நசரேயன், இவரு கண்டிப்பா தொடர்பு எல்லைக்குள்ளேதான் இருப்பார், இவரு இல்லேன்னாலும் அவங்க அம்மணிகிட்டே பேசலாம்.

ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்... மணி அடிக்கிறமாதிரிதான் இருக்கு, ஏன் யாருமே எடுக்கலை??? அட எடுத்துட்டாங்க, ஒரு ஆளு கிடைச்சாருப்பா. இது நசரேயன் குரல் மாத்ரி இல்லையே யாரோ பேசறாங்க.. ம்ம்ம்... என்ன பேசறாங்க, ஹலோ, ஹலோ.. நமக்கு பதில் சொல்லாம அவங்க தொடர்ந்து பேசிகிட்டு இருக்காங்களே. நாமதான் லூசாயிட்டோமா. அந்த குரல் என்ன சொல்லுது... உன்னிப்பா கவனிச்சு கேக்கலாம். "நீங்கள் தொடர்புகொண்ட வாடிக்கையாளர், அமெரிக்காவில் இருப்பதால், உங்கள் இணைப்பை துண்டிக்கிறோம்.. இந்த சந்தாதரிடம் பேசவேண்டிய கட்டாயம் இருந்தால் சில நாட்கள் கழித்து முயற்சிக்கவும்"

அது சரி இவ்வளவு வெவரமாவா பதில் சொல்லுது.. சந்தேகமா இருக்கே! ரெக்கார்டட் மெசேஜ் மாதிரி தெரியலையே! இந்த மாதிரி எல்லாம் கூட பேசி ரெக்கார்ட் பண்ணுவாங்களா?? சரி அப்படியே இல்லைன்னாலும் என்ன செய்ய முடியும். அந்த குரல் கிட்டே சண்டையா போட முடியும்??

ம்ம்ம்ம்... வேறே யாருக்காவது ட்ரை பண்ணுவோம்.. ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.... அப்பாடா இந்த நம்பர்லே மணி அடிக்குதே! ஒரு ஆளு சிக்கிட்டாங்கையா, எப்படியும் பொழுதை ஓட்டிடலாம். அட இதென்ன கூத்தா இருக்குது? போனை எடுக்க மாட்டேங்கிறாங்களே!

மூணு பேருக்கு போன் பண்ணி பார்த்தாச்சு மணியும் அடிக்குது. எடுத்து பேசலை. இதுக்கு என்ன அர்த்தமா இருக்கும். நம்ம கிட்ட சிக்க கூடாதுன்னு நினைக்கிறாங்களோ.. ஓ!! இப்போ நல்லாவே புரிஞ்சி போச்சு! எவ்வளவு தடவ போன் பண்ணாலும் காதுலே விழாத மாதிரியே இருக்காங்க! இதுக்கெல்லாம் எங்கே போய் கத்துகிட்டு வராங்களோ?? இருக்கட்டும் இருக்கட்டும், யாராவது ஒருத்தர் கிடைச்சா கூட போதும்.. இன்னைக்கு பொழுதை களிச்சுடலாம்.

ட்ரிங்... ட்ரிங்.. ட்ரிங்... ட்ரிங்.. அட நம்ம போன் மணி அடிக்குது, நிஜமாதானா?? (நிஜம்மா நல்லவன் அண்ணாவா இருக்குமோன்னு நினைக்காதீங்க.. அவரு சிங்கையிலே இருக்காரு). சரி யாருன்னு பார்த்துடலாம்,

"ஹல்லோ யாரு பேசறது.. "

ஏய் எவ்வளவு நேரமா ட்ரை பண்றேன் யூசர் பிஸி யூசர் பிஸின்னே வருது.. யாரு சிக்கினாங்க பாவம் அவங்க.

ஹல்லோ.. ஹல்லோ.. இது என்னோட போன் நான் யாருக்கும் பேசக்கூடாதா.. அது சரி யாரு நீங்க? யாருன்னே சொல்லாமே எடுத்தவுடனே காட்டமா பேசறீங்க?

என்ன என்னோட குரல் உனக்கு அதுக்குள்ளே மறந்து போச்சா? உனக்கு போய் நான் போன் பண்ணேன் பாரு என்னைய...

ஆத்தி யாரு இது? ஏன் இவ்வளவு கோவமா பேசறாங்க.. யாருங்க நீங்க யாருன்னு சொல்லாமலே கோவமா பேசறீங்க?

ஹேய் லூசு நான்தான் தமிழ் பேசறேன்..

என்னாது தமிழா?? அப்போ இங்கிலீஷ் பின்னாடியே பேசுமா? அப்புறம் கெமிஸ்ட்ரி எப்போ பேசும்??

ரொம்ப முக்கியம்!! கே. பி. சுந்தராம்பாள் அம்மா மாதிரி ஒரே கேள்வியா கேளு. நான் தமிழரசி பேசறேன்டா!! என் குரல் உனக்கு புரியலையா??

அட நம்ம தமிழு. சாரி தமிழ். ரொம்ப நாள் கழிச்சி பேசறேனா உங்க குரல் சட்டுன்னு எனக்கு புரியலை..

சரி விடு, நான் இப்போ உங்க வீட்டுக்குத்தான் வந்துகிட்டு இருக்கேன், பஸ் ஸ்டாண்ட்ல இருக்கேன் எப்படி வாரது?

என்னது எங்க வீட்டுக்கு வரீங்களா? ஒரே அதிசயமா இருக்கு சரி வாங்க வாங்க!! அப்படியே பின்னாடி திரும்பி ஒரு பத்தடி நடங்க, அப்புறம் அப்படியே வலது பக்கமா திரும்பி நேரா வாங்க, அங்கே ஒரு பெட்ரோல் பங்க் இருக்கும். அதுக்கு பின்னால தான் எங்க வீடு இருக்கு.

பெட்ரோல் பங்க் பின்னாடி மாமூலா பாத் ரூம்தானே இருக்கும், அங்கேயா இருக்கீங்க??

தமிழ் இது கொஞ்சம் ஓவர்! பெட்ரோல் பங்க் பில்டிங் பின்னாடின்னு அர்த்தம். மவளே! ஒழுங்கா வந்து சேருங்க. வர்றதுலே ஒன்னும் பிரிச்சனை இல்லையே??

அதெல்லாம் ஒண்ணும் இல்லே அதான் ரொம்ப விளக்கமா சொல்லிட்டியே! விடியறதுகுள்ளே வந்துடறேன். காபி போட்டு வை.

ம்ம்ம்... சீக்கிரமா வாங்க வழி தெரியாம எங்கேயாவது போய் நிக்காதீங்க.. உங்க வீட்டுக்கு நான் பதில் சொல்லுனும்.. புரியுதா???

அடச்சே!! போனை வை ரம்யா!! நான் கச்சிதமா வந்திடுவேன்!!

அலைபேசியிலே அறுக்கலாம்னு யோசிச்சா நேரா வந்துட்டாங்களே! ஐயோ! தமிழு கவிதை சொல்லியே நம்மளை இன்னைக்கு ராத்திரி கொண்ணுடுவாங்களோ?? சேச்சே! அது மாதிரி எல்லாம் செய்யமாட்டாங்க.. ம்ம்ம்.. இப்படியே சொல்லி சொல்லியே மனசை தேத்திக்க வேண்டியதுதான்.

ட்ரிங்.. ட்ரிங்.... ட்ரிங்.. ட்ரிங்....

மறுபடியும் போன் மணி அடிக்குதே யாரா இருக்கும்! நமக்குதான் பேச ஆளு ரெடியா வந்துகிட்டு இருக்காங்களே! சரி யாருன்னு பாப்போம். ஹல்லோ யாரு பேசறது??

என்ன ரம்யா எடுத்தவுடனே மிரட்டறீங்க?

இல்லேங்க சாதரனாமாதான் பேசினேன் ஆமா நீங்க யாரு??

ஆறும் இல்லே ஏழும் இல்லே நான் உங்க பிரண்டு!!

ஏங்க நீங்க யாருன்னே தெரியல, உங்க குரலும் புரியலையே! அப்புறம் எப்படி நீங்க என்னோட பிரண்டா இருக்க முடியும்??

ரம்யா!! எனக்கு ஜல்பு புடிச்சிருக்கு, அதான் என்னோட குரல் உங்களுக்கு புரியல"..


என்ன ஜல்பு புடிச்சிருக்கா அப்படின்னா??

நேத்து மழையிலே நனைஞ்சிட்டேன் அதான் ஜல்பு புடிச்சிடுச்சு...

ஏங்க ஜல்புன்னா என்னான்னு எனக்கு தெரியல.

அட என்னாங்க இது கூடவா தெரியாது, ஜலதோஷம் புடிச்சிருக்கு!

என்ன தோஷமா இருந்தா என்ன, நீங்க யாருன்னு கண்டு புடிக்க முடியலையே

அதுக்கு போய் ஏன் இவ்வளவு சலிப்போ!!! போங்க ரம்யா...

எங்கே போக, பேச ஆளு கெடைக்கலைன்னு வருத்தப்பட்டது என்னமோ உண்மைதான்.. அதுக்குன்னு இப்படியா..சரி சரி நீங்க யாருன்னு சொல்லிடுங்களேன்.

என்னமோ முணுமுணுத்த மாதிரி இருந்திச்சே, என்னைய திட்டரீங்கலோன்னு நினைச்சேன்

சேச்சேச்சே! அதெல்லாம் ஒன்னும் இல்லே நீங்க யாரு அதை மொதல்லே சொல்லுங்க, அப்புறமா என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..

"ரொம்ப கெஞ்சி கேக்கறீங்களே ரொம்ப பாவமா இருக்கு நான் யாருன்னு சொல்லிடலாம்னு இருக்கேன்"

அது சரி.. ரொம்ப பில்டப் எல்லாம் வேணாம் சீக்கிரம் சொல்லுங்க, இல்லேன்னா போனை வச்சிடுவேன்.

அட இங்கே பாரய்யா நம்ம ரம்யாவோட கோவத்த! ரம்யா டென்ஷன் வேணாம் நான் தான் தமிழ் அமுதன் பேசறேன்.

அமுதன் நீங்களா?? உங்க குரலே புரியலை சாரி அமுதன் ...

சரி சரி.. நான் இங்கேதான் பக்கத்துலே நிக்கறேன்.. உங்க வீட்டுக்கு எப்படி வாரது? குழப்பாம வழி சொல்லுங்க.

அட நீங்களுமா வாறீங்க அமுதன் ?

அப்படீன்னா வேறே யாரு வாராங்க ரம்யா?

நம்ம ஏழு தோசை தமிழு வந்துகிட்டு இருக்காங்க, அனேகமா நீங்க வர்ற வழியிலே அவங்களை பார்த்தாலும் பார்க்கலாம்.


அப்படியா? ஐயோ நான் உங்க வீட்டுக்கு வரலை.

ஏன் அமுதன் வரேன் சொல்லிட்டு அப்புறம் வரலின்னு சொல்றீங்க??

தமிழை நினைச்சாலே எனக்கு பயந்து வருது.. அதாவது அவங்க கவிதையை நினைச்சாலே பயந்து வருது... அதான் வரலைன்னு சொன்னேன். நான் இன்னொரு நாள் வரேன்.

ஐயோ அவங்கள பார்த்து பயப்படாதீங்க நீங்களும் வாங்க பேசிகிட்டு இருப்போம். நம்ம கந்ததாசனை கூட போன் பண்ணி வர சொல்லலாம்.

வேண்டாம் இந்த விஷப் பரீச்சை ரம்யா அவங்க கவிதை சொல்லியே கொன்னு போட்டுடுவாங்க. ஒரு விஷயம் உங்களுக்கு தெரியுமா?? வீட்டுக்கு திருட வந்தவங்களை பார்த்து கத்தாம, அவங்க கிட்டே தூக்க கலக்கத்திலே ஏதோ கவிதை சொல்ல; அவங்களுக்கு ஒன்னும் புரியாம பயந்து, அவங்க வேறே எடத்திலே இருந்து திருடி வச்சிருந்ததை அவங்க வீட்டுலேயே போட்டுட்டு ஓடிட்டாங்களாம். அவங்க போட்டுட்டு போன பொருளுங்களோட மதிப்பை இன்னும் இவங்களால கணக்கு பண்ண முடியலையாம். இந்த சூழ் நிலையிலே உங்க வீட்டுக்கு எதுக்கு வராங்க? ஒரு வேளை என்ன பண்ணலாம்னு உங்ககிட்டே ஐடியா கேக்க வராங்கன்னு நினைக்கிறேன்

ஐயோ!! இந்த கூத்து எப்போ? தமிழ் என் கிட்டே இந்த விஷயம் பத்தி சொல்லவே இல்லே!!

ரொம்ப முக்கியம் போங்க, அவங்களை பார்த்தாலே எனக்கு அலற தோணுது. இப்படி நான் சொன்னதா அவங்க கிட்டே சொல்லிடாதீங்க. அதுக்கும் திட்டி ஒரு கவிதை போட்டு மானத்தை வாங்கிடுவாங்க.

பேசறதுக்கு ஒரு ஆளு வீடு தேடி வருதுன்னு பார்த்தா கூடவே கைக்கு வளையமும் கோத்து விட்டுடுவாங்க போல இருக்கு.. இன்னைக்கு என்ன கூத்து நடக்க போகுதோ... ஆண்டவா என்னைய காப்பாத்துப்பா!!!