Wednesday, September 30, 2009

சர்தார்ஜி ஜோக்ஸ்!!

சிரிக்கலாம் வாருங்கள்!!

சர்தார்ஜி: ராத்திரி பூரா நான் ரயில் பிரயாணத்தில் தூங்கவே இல்லே!
நண்பன்: ஏன்?
சர்தார்ஜி: எனக்கு அப்பர் பர்த்துதான் கிடைச்சுது.
நண்பன்: நீங்க ஏன் அப்பர் பர்த்தை மாத்திக்கலை?
சர்தார்ஜி: ஹேய்! எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கறதுக்கு லோயர் பர்த்ததிலே யாருமே இல்லையே!
*************


சர்தார்ஜி ஒருவர் S.B. A/C. ஓபன் பண்ணுவதற்காக வங்கி ஒன்றிற்கு சென்றார்.
வங்கியில் கொடுத்த பார்மைப் பார்த்தவுடன் டெல்லிக்குப் புறப்பட்டார்.
ஏன் தெரியுமா??

அந்த பார்மில் "Fill Up In Capital". என்று போட்டிருந்ததாம்...
*************

சர்தார்ஜி ட்யுப் லைட்டின் அடியில் திறந்த வாயுடன் நின்று கொண்டிருந்தார்.

ஏன் தெரியுமா ??
டாக்டர் சொன்னாராம் இன்னைக்கு சாப்பாடு லைட்டா இருக்கணும்னு.
*************


சர்தார்ஜி ப்ரொபஸர் ப்ளம்பரை கல்லூரிக்கு உடனே வருமாறு கட்டளையிட்டார்
ஏன் தெரியுமா??
வினாத்தாள் எப்படி எங்கே லீக் ஆகுதுன்னு கண்டு பிடிக்கத்தான்.....
*************


நண்பன்: சான்டா உன்னோட பொண்ணு இறந்துவிட்டாள்...
மனம் நொந்த சர்தார்ஜி சிறிதும் தாமதிக்காமல் நூறாவது மாடியில் இருந்து குதித்து விட்டார்!
ஐம்பதாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனுக்கு மகளே இல்லை என்பது!
இருபத்தைந்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையென்று!
பத்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனது பெயர் சான்டா இல்லே பான்டா என்று!

*************


காதலி: அன்பே! நமது நிச்சயதார்த்தன்று எனக்கு ரிங் கொடுப்பீங்களா?
சர்தார்ஜி : கண்டிப்பா! உன்னோட போன் நம்பர் என்ன?
*************


கடினமான கேள்வி ஒன்றிற்கு சர்தார்ஜி பதில் கண்டு பிடித்து விட்டார்.
நண்பன்: முதலில் என்ன வரும் கோழிகுஞ்சா இல்லே முட்டையா??
சர்தார்ஜி: அட! இது கூட தெரியாத என்ன? நீ என்ன ஆர்டர் பண்ணியோ அதுதான் மொதல்லே வரும்!
*************


டீச்சர் தனது வகுப்பு மாணவர்கள் அனைவரையும் கிரிகெட் நடந்து கொண்டிக்கும் நாளில் கட்டுரை ஒன்று எழுதச் சொன்னார்கள்.
அனைத்து மாணவர்களும் மும்முரமாக கட்டுரை எழுதத் துவங்கினர் ஒரு சர்தார்ஜி மாணவனைத் தவிர.
பிறகு அந்த சர்தார்ஜி மாணவன் அவசர அவசரமாக எழுதி டீச்சரிடம் கொடுத்தான்.
டீச்சர் பேப்பரை பிரித்துப் பார்த்தா "மழையின் காரணமாக கிரிக்கெட் மேட்ச் கான்செல் செய்யப்பட்டது" என்று எழுதி இருந்தான்.
*************


ஜெராக்ஸ் எடுத்த பிறகு சர்தார்ஜி என்ன செய்வார்??
அசலும் நகலும் எழுத்துப் பிழை இல்லாமல் சரியாக இருக்கிறதா என்று செக் செய்வார்
*************


ஏன் சர்தார்ஜியால் அவசர உதவிக்கு 911 அவரோட இருந்து போனிலே அழைக்க மாட்டார்??
ஏனெனில் தனது போனில் 11 என்ற நம்பர் இல்லாத காரணத்தினால்தான்....
*************


சர்தார்ஜியும் அவரது மனைவியும் காபி கடையில் காபி அருந்திக் கொண்டிருந்தனர்
சர்தார்ஜி: சீக்கிரம் குடி
மனைவி: ஏன்
சர்தார்ஜி: ஹாட் காபி ருபாய் 5 கோல்ட் காபி 10
*************


சர்தார் ஒரு ஆர்ட் கேலரியில்: என்ன இது கொடுமை இங்கே காண்பதை போய் மாடர்ன் ஆர்ட் என்று சொல்லுகிறீர்களே? இது நியாயமா?
ஆர்ட் டீலர்: தயவு செய்து என்னை மன்னிக்கணும் சார்! அது ஆர்ட் இல்லே கண்ணாடி!
*************


சர்தார் செய்தி: பஞ்சாபில் ரெண்டு சீட் வசதி உள்ள விமானம் சுடுகாட்டில் விபத்துக்குள்ளாகி விழுந்து கிடந்தது. உள்ளூரில் உள்ள சர்தார்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, இதுவரையில் 500க்கும் மேற்பட்ட உடல்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே உடல்கள் இருக்கலாம் என்று இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
*************


உயிருக்கு போராடிக் கொன்டிருக்கும் நண்பரைச் சந்திக்க சர்தார்ஜி ஒருவர் மருத்துவ மனைக்குச் சென்றார். அங்கே நண்பனையும் கண்டார். உணர்ச்சி பெருக்கில் அருகே வேகமாக சென்று நின்றார்.
"Chin Yu Yan" இந்த வார்த்தைகளை கூறி விட்டு இறந்து விட்டார் அந்த நண்பர்.
சர்தார்ஜி கடைசி வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உடனே சைனாவிற்கு விரைந்தார்.
அதற்கு அர்த்தம் "ஆக்சிஜன் டியுப் மீது நின்று கொண்டிருக்கின்றாய்"
*************

சர்தார்ஜி: கண்களை மூடிக் கொண்டு டியுப் லைட்டின் கீழே நின்று கொண்டிருந்தார்.
சர்தார்ஜியின் மனைவி: வியப்புடன் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று வினவினார்.
சர்தார்ஜி: நான் உறங்கும்போது எப்படி இருப்பேன் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார் சர்தார்ஜி.
*************

சர்தார்ஜி ஒருவர் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.
ரயிலில் உள்ள பாத்ரூம் செல்ல கதவை திறந்தார். அங்கே ஒருவர் நிற்பதைக் கண்டு எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார். சில நிமிடம் கழித்து சென்றால் அதே ஆசாமி நின்று கொண்டிருந்தார், இப்போதும் எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார்.

இப்படி பல முறை நடந்து ஓய்ந்து கடைசியாக டிக்கெட் பரிசோதகரிடம் "ஒரு ஆள் ரொம்ப நேரமா பாத்ரூமிலே நின்று கொண்டு வெளியே வரமாட்டேங்கிறான்"என்று முறையிட்டார்.

"அப்படியா? எங்கே வாருங்கள் பார்க்கலாம்!" பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார். அங்கே ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு "இங்கே யாருமே இல்லையே" என்று சர்தார்ஜியை பார்த்து.

"அப்படியா! எங்கே நகருங்கள் நான் பார்க்கிறேன். என்ன சார் அங்கே பாருங்க நிக்கறான்"

"அது வேறு யாரும் இல்லைங்க! கண்ணாடியில் உங்க உருவம்தான் தெரியுது!" என்று அலுப்புடன் தனது வேலையை தொடர நகர்ந்தார் T.T.R.
*************

பொறுப்பு அறிவித்தல்: பகிர்ந்தவை!! கேட்டவை!!

Wednesday, September 23, 2009

பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாருங்கள் நண்பர்களே!!


நம் வலைத்தோழி தமிழரசிக்கு இன்று பிறந்தநாள் !!



பிறந்தநாள் காணும் எனதருமை தோழியே நீ வாழ்க வளமுடன்!

இந்த மலரின் மென்மை உன் மென்மையான மனதிற்கு போட்டியோ!




சிப்பிக்குள் முத்து அல்ல நீ சிரிக்கும் மலரல்லவோ!!


காவிய நாயகியே
இல்லை இல்லை
கவிதை நாயகியே
உன் கவிதைக்
கயிற்றால் எங்களை
கட்டியது ஏனோ?
நின்றால் கவிதை
நடந்தால் கவிதை
சிரித்தால் கவிதை
தென்றலுக்கு கவிதை
மின்னலுக்கு கவிதை
மழைக்கு கவிதை
கவிதை கவிதை
எங்கும் கவிதை
எதிலும் கவிதை

எழுத்து பூக்களாம்
உந்தன் சொற்பூக்கள்
நெஞ்சில் பதிந்து
மனதில் நிறைந்து
வரிகளில் லயித்து
கருத்தில் புதைந்து
சத்தமாக படிக்கும்போது
கிடைக்கும் ஓசைதான்
உன் எழுத்தோசையோ?
சொற்களாய் விழுந்து
கவிதைகளாய் எழுந்து
மகிழ்ச்சிப் பூக்களால்
எங்களை அரவணைக்கிறது
தமிழின் எழுத்தோசை!!

கவித்தோட்டமே நீ வாழியவே!!

அன்புத்தோழியாம் மற்றும் மனதிற்கினிய தோழியாம் தமிழரசிக்கு இன்று பிறந்தநாள்!!

வலையுலகம் கொடுத்த அருமை தோழி!

அன்பு காட்டுவதில் வள்ளல்!

அரவணைப்பில் அன்னையிவள்!

அறிவுரை சொல்வதில் ஆசான் இவள்!

அன்பு என்ற மந்திரக்கோலை மாயக்கோலாக சுழற்றும் வித்தைக்கு அரசி இவள்!

என்னுடன் சேர்ந்து அனைவரும் நம் சகோதரியை வாழ்த்த வாருங்க நண்பர்களே!

உனது அன்பு வளையத்தில் சிக்கி தவிக்கும் அனைத்து சகோதர, சகோதரிகள் சார்பில் எனது வாழ்த்தையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் நீ வாழிய பல்லாண்டு பலகோடி நூற்றாண்டுகள்!!

பிரியமுடன்
ரம்யா..........






Wednesday, September 16, 2009

செய்யாதீங்க! செய்யாதீங்க! செய்யாதீங்க! தயவுசெய்து இது போல் எப்போதும் செய்யாதீங்க!!

செல்போன் - மின்சாரம் - விளைவிக்கும் பரிதாபம்!!


சில தினங்களுக்கு முன் ஒரு இளைஞன் தன்னோட மொபைல் போனை தனது இல்லத்தில் சார்ஜ் செய்திருக்கின்றார். அதுசமயம் போனில் அழைப்பு வந்திருக்கிறது. சுவிட்ச்சை ஆப் செய்யாமல் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.



பேச ஆரம்பித்த சில வினாடிகளில் செல் போனில் செருகிவைத்திருக்கும் வொயர் வழியாக மின்சாரம் தாக்கி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அந்த இளைஞன் அதி வேகமாக தூக்கி எறியப்பட்டிருக்கிறான். சத்தம் கேட்டு இளைஞனின் பெற்றோர்கள் அறைக்கு ஓடி வந்திருக்கின்றார்கள். அப்போது கைகள் வெந்த நிலையில், ரொம்ப பலகீனமான இதயத்துடிப்புடன் அவர்களின் செல்ல மகன் மயக்க நிலையில் விழுந்து கிடப்பதை பார்த்தனர்.


மயக்க நிலையில் இருந்த இளைஞனை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.ஆனால் அந்த இளைஞனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதை உறுதி செய்தனர். நிலை குலைந்துபோன பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற யாரால் இயலும்?

எது எப்படியோ இப்போது நம்மால் கண்டிப்பாக உணரமுடிகிறது. மொபைல் போனால் உயிரே பறிக்கப் படுகின்றது என்றால், நாமும் கொஞ்சம் உஷாரா இருப்பதில் தவறு இல்லையே?



இந்த நவ நாகரிக உலகத்தில் செல் போன் இல்லாதவர்கள் என்று கணக்கெடுத்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம் அவர்களின் எண்ணிக்கையை.

அதன் அவசியமும் அத்தியாவசியாமான ஒன்றாகிவிட்டது. கையில் கடிகாரம் கட்டுவது எவ்வளவு அவசியம்? காலில் செருப்பு அணிவது எவ்வளவு அவசியம்? அது போல்தான் கைபேசி வைத்துக் கொள்வதும் அவ்வளவு அவசியம் என்று. அத்தியாவசியமான பொருட்களில் ஒன்றாக மொபைல் போனை அங்கீகாரம் அளித்து நாம் அதை கையிலே எடுத்துச் செல்கின்றோம்.

அதே சமயம் அதை எப்படி உபயோகப் படுத்துவது என்பதிலும் வகை தொகை உள்ளது. அதை நாம் கண்டிப்பாக கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பதற்கு மேலே கூறிய சம்பவம் ஒரு நல்ல உதாரணம். எனது நண்பர்கள் பலர் இது போல் செய்வார்கள். பார்க்கும்போதே எனக்கு கோவம் வரும். சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

நான் பெற்ற செய்தி, இதை படித்தவுடன் துடித்துவிட்டேன். ஏனெனில் எனது நண்பர்கள் பலர் இதுபோல் ப்ளக்கை சொருகி விட்டு பேசிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.

எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் இந்த இடுகையை வெளியிட்டுள்ளேன். இந்த விவரம் முன்பே தெரிந்தவர்கள் உஷாராக இருப்பீர்கள் என்பதில் சிறிதளவும்
ஐயமில்லை.

இந்த விவரம் தெரியாதவர்கள், மேலே உள்ள படத்தினை பார்த்துவிட்டு மிகவும் உஷாராக இருக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இது போல் செய்யாதவர்கள் தப்பித்தவர்கள் கணக்கில்.

இது போல் செய்பவர்ககள்............ தவிர்ப்பது நல்லது.

டிஸ்கி: அறிவுரை கூறுவதாக யாரும் என்னை தவறாக எண்ண வேண்டாம். எனது எண்ணங்களின் பரிமாற்றங்கள் அவ்வளவுதான்....




Wednesday, September 9, 2009

பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாங்க நண்பர்களே!!

பிறந்த நாள் காணும் சகோதரியை வாழ்த்தலாம் வாருங்கள்!!





மனதிற்கு இனிய தோழியாம் மயில் என்ற விஜி நம் வலைப்பதிவுலக அருமையான நண்பி!!

தோழியின் பிறந்த நாள் மிகவும் தாமதமாக தெரிந்ததால், மிகவும் எளிய முறையில் கொண்டாடும் இந்த தோழி ரம்யாவை மன்னித்து வாழ்த்தை ஏற்றுக் கொள்ளும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இன்று பிறந்த நாள் காணும் விஜியை அனைவரும் என்னுடன் சேர்ந்து வாழ்த்த வாருங்கள்! நண்பர்களே! !

இப்பூவுலகில் உள்ள அனைத்துச் செல்வங்களும் பெற்று பல்லாண்டு பல கோடி நூற்றாண்டுகள் வாழ்வாங்கு வாழ என்றென்றும் வாழ வாழ்த்தும் அன்பு வலையுலக உறவுகள்.....

முன் கூட்டியே தெரியாததால் ஒரு அவசர வாழ்த்து. தோழி மன்னிக்கவும்!


பிரியமுடன்
ரம்யா......





Tuesday, September 8, 2009

வழிகாட்டி யார் ???

உதவும் கரங்களா?????


சின்ன சின்ன கால்கள் எடுத்து
சிங்காரமாய் நடை பயின்று
அன்னை மடியில்
அலங்காரமாய் வீற்றிருந்து
பொங்கும் மழலையில்
ஆயிரமாயிரம் வினாயெழுப்பி
அன்னை அளித்த
விடைகளின் விபரமரியாமல்
காலத்தின் ஓட்டத்தில்
கற்று பல தேர்ந்து
கவிதையாய் வாழாமல்
ஆபத்து நிறைந்திட்ட
ஆயுதத்தை கையில் - ஏன்
எடுத்தாய் கண்ணே!!

எனக்கு கிடைத்த இந்த படத்தினை இங்கே உங்களுக்கும் பகிர்கின்றேன்.

இது வெறும் படமாக மட்டும் இருந்திட்டால் மிகவும் சந்தோஷமே!

விளம்பரத்திற்காக இருந்தால் கடுமையான கண்டனத்திற்குரியது!

ஆனால் விளையாட்டிற்கு கூட இது போல் படங்கள் எடுப்பதை தவிர்த்திருக்கலாம்!!

இந்த படம் சிரிக்க அல்ல சிந்திக்க.....

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்?????

டிஸ்கி : இது என்னோட சொந்த கருத்து!



Thursday, September 3, 2009

எனக்குக் கிடைத்த மற்றுமொரு விருது!!

எனதன்பு நெஞ்சங்களே!! விருது வாங்க வரவும்!!



வீட்டுபுறா ஷக்தி மூலம் இந்த விருது எனது வலைத்தளத்திற்குக் கிடைத்துள்ளது.

எனக்கு அளித்த விருதுக்கு நன்றி ஷக்தி !!

என்னை ஆச்சரியப் படுத்திய வலைகள் இவைகள்தான்..... இல்லை இல்லை அவைகள்தான் என்று குறிப்பிட்டு எதுவுமே சொல்ல முடியாது.

அனைத்து வலைகளிலுமே சிறப்பான பல அம்சங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கவை.

ஒவ்வொன்றும் ஒரு வகை அதுவும் பல ரகங்களைக் கொண்ட புது வகை !

இந்த விருதினை நண்பர்களுக்கு பிரித்துத் தரசொல்லி தோழி ஷக்தி கூறி இருக்கிறார்கள்.

யாரு வாங்க வில்லை என்றும் எனக்கு தெரியவில்லை.

ஏற்கனவே இந்த விருதினைப் பெற்றிருந்தாலும் பரவாயில்லை நானும் ஒரு முறை இவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.

இவ்விருதினை அளிக்க விரும்பும் நண்பர்கள் !!

இராகவன் நைஜீரியா

குடுகுடுப்பை

நசரேயன்

ஜீவன்

வால்பையன்

அமிர்தவர்ஷிணி அம்மா

தாரிணிப்பிரியா

மோனிபுவன் அம்மா

அப்பாவி முரு

R.Gopi

சுரேஷ்

கனகராஜ் பாண்டியன்

பட்டாம்பூச்சி

க. பாலாஜி

ராஜி

கதிர் ஈரோடு

இவர்கள் அனைவருக்கும் இந்த விருதினை தர ஆசைப் படுகிறேன்!!

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!!

Tuesday, September 1, 2009

பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாருங்கள் நண்பர்களே!!

நண்பர் ஜீவனின் குமார்த்தி அமிர்தவர்ஷினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!




நான்தான் சொல்றேன் இல்லே என்னை போட்டோ எடுக்கறவங்க சரியா எடுக்கணும் ஆமா சொல்ப்பிட்டேன்.

எனதருமை செல்லமே! இந்த கேக் உனக்கு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா!!

என் சின்ன கண்ணம்மா! உனது இந்த மாறு வேடம் எனது நினைவைத் தூண்டும் வ.உ.சி.சிதம்பரனார் பற்றிய நினைவுகள் சில உனக்காக இங்கே!!


அமிர்தவர்ஷிணி! நீ ஏற்றிருக்கும் மாறு வேடத்திற்கு நான் கொடுக்கும் மதிப்புரை!!

செக்கிழுத்தச் செம்மல் என்று புகழப்படும் வ.உ.சி எனும் சுருக்கப் பெயருக்குச் சொந்தக்காரர் வ.உ.சிதம்பரனார் உண்மையில் தமிழ் இலக்கியத்திலும் பெருஞ்செம்மல்.

"தமிழ் மறை" என்று புகழப்படும் திருக்குறளுக்கு பல உரைகள் இதுவரை சிறிதும், பெரிதுமாக வந்துள்ளன. ஆனால், தற்போது முற்றிலும் புதுப்புது கருத்துக்களைத் தாங்கிய புதிய உரையாக செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரை வெளிவந்துள்ளது.

கடந்த 1936ல் கண்ணனூர் சிறையிலிருந்து வ.உ.சி., எழுதிய உரை, 73 ஆண்டுகளுக்குப் பிறகு உயிர் பெற்று வந்துள்ளது. தமிழ் மக்கள் செய்த தவப்பயனே ஆகும்.

தொல்காப்பியத்துக்கு முதல் உரை எழுதிய இளம்பூரணர் மீதும், திருக்குறளுக்கு முதலுரை எழுதிய மணக்குடவர் மேலும் மிகுந்த ஈடுபாடு இவருக்கு உண்டு.

அறப்பால், பொருட்பால், இன்பப்பால் என்று இவர் முப்பாலை வழங்குகிறார். கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை மூன்று அதிகாரங்களையும் இடைச்செருகல் என்று நீக்கி 130 அதிகாரங்களை வெளியிட்டுள்ளார். இடைப்பாயிரம் என்று மூன்று அதிகாரம் 30 குறளைத் தனிமைப்படுத்தி விட்டார்.

மிக விளக்கமாக மணக்குடவர் உரையை பெரும்பாலும் தழுவி, பதவுரை, அகல விருத்தியுரை, உதாரணப்பாடல்களோடு குறளை விளக்கி, இலக்கணக் குறிப்புகளுடன் எழுதியுள்ளார்.

"ஆகுல நீர பிற" என்ற குறளில் ஆகுலம் என்பதற்கு புதுமையாக "துன்பம்" என்று விளக்கம் தந்துள்ளார்.

மகளிருக்கு நிறைகாப்பே, சிறை காப்பினும் தலையாயது என்பதை விளக்க வளையாபதி, பழமொழி பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார்.

"அழுக்காறாமை" என்று உள்ள அதிகாரத்தை "அழக்கறாமை" என்றும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும் என்பதை நினைக்கக் "கெடும்" என்றும் மாற்றி எழுதியுள்ளார்.

கம்ப ராமாயணம், நாலடியார் போன்ற பல மேற்கோள் பாடல்களால் தன் புதுக்கருத்திற்கு மெருகூட்டியுள்ளார்.

மிகப் பெரிய இந்த வ.உ.சி., குறள் உரை தமிழ் இலக்கியத் தோட்டத்தில் பூத்த குறிஞ்சிமலர்! வ.உ.சி.,யின் ஆழமான, அகலமான தமிழறிவுக்கு மணிமகுடம் திருக்குறள் பற்றி வந்துள்ள 20 உரைகளுக்குள் இணையற்ற புதிய இடம்!


உனக்காக ஒரு சிறிய குறிப்பு அமிர்தவர்ஷினி

இந்தியாவில் விடுதலைப் போர் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பொதுக்க்கூட்டங்கள் போட்டு தலைவர்கள் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.அப்பொழுது தூத்துக்குடியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. அதில் வ.உ.சிதம்பரனார் அவர்களும் கலந்து கொண்டார்.

முதலில் ஒரு தொண்டர் மிக ஆக்ரோசமாக பேசத் துவங்கினார். பேச்சின் இடையில் "வெள்ளைக்காரர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு உடனே இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்" என்றார்.

இதைக் கேட்டதும் மேடையில் அமர்ந்திருந்த வ.உ.சி எழுந்தார். மைக்கின் அருகில் வந்து "மூட்டை முடிச்சுகள் நம்முடையவை. வெள்ளையர்கள் வெறுங்கையுடன்தான் வெளியேற வேண்டும்" என்றார்.

கூட்டத்தினர் இதைக் கேட்டு பலத்த ஆரவாரத்துடன் கை தட்டினார்கள். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் ஒவ்வொரு பேச்சிலும் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்று அறிந்து வியக்க வேண்டியிருக்கிறது.

எப்போது வ.உ.சி.சிதம்பரனார் பற்றி நினைத்தாலும் எங்கேயோ படித்த மேற் கூறியவைகள் அனைத்தும் எனது மனதில் ஓடும் சிறு எண்ண ஓட்டங்கள். அதற்கு அமிர்தவர்ஷினிக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.



சகோதரியை ரசித்து பூரித்துச் சிரிக்கும் அழகான உன் சிரிப்பில் மயங்காதவர்ளும் உண்டோ!!

குவளை மலரையும்
குறிஞ்சி மலரையும்
குழைத்துச் செதுக்கிய
குலக் கொழுந்தே!
பிறந்த நாள் காணும்
எங்கள் செல்வமே
நீ நடக்கும் பாதையில்
நந்தவனம் அமையட்டும்
இறைந்து கிடக்கும்
நந்தவனத்தின் மலர்கள்
உன் மலர்பாதங்களுக்கு
பாதைகளை அமைக்கட்டும்!
உன் எண்ணங்கள் சிறக்கட்டும்
கல்வியில் சிறந்து விளங்கி
பாரதியின் கனவுப் பெண்ணாக
வளர்ந்திட வாழ்த்துகிறேன்!


அமிர்தவர்ஷினி என்ற இந்த குழந்தை நமது வலை நண்பர் ஜீவனின் குமாரத்தி. இன்று பிறந்த நாள் காணும் அமிர்தவர்ஷினியை அனைவரும் என்னுடன் சேர்ந்து வாழ்த்த வாருங்கள்! நண்பர்களே!

அமிர்தவர்ஷினி நீ பாரத பூமியில் பல வியப்பூட்டும் சரித்திரம் படைத்திட வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி நீ கல்வியில் பல மைல்கற்களை கடந்து சாதிக்க எங்கள் வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி நீ தாயக மண்ணில் பல சரித்திரம் படைத்திட வாழ்த்துக்கள்!!

அமிர்தவர்ஷினி நீ வரலாறு போற்றும் நல் வாழ்வுதனைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி நீ வாழ்வாங்கு வாழ என்றென்றும் வாழ்த்தும் அன்பு வலையுலக உறவுகள்.....

அமிர்தவர்ஷிணி! இந்த மதி மயக்கும் மலர்கள் அனைத்தும் உனக்கே உனக்கு!!





பிரியமுடன்
ரம்யா.....