Tuesday, December 30, 2008

வருக வருக 2009

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!








இந்த வலைப்பூ உலகம் மென்மேலும் வளர்ந்து
அதில் உறுப்பினர்களாக இருக்கும நாமும் வளர்ந்து
அறிய பல கருத்துக்களை பரஸ்பரம் பரிமாறி கொண்டு
என்றென்றும் மாறாத அன்புடனும் இதே நட்புடனும் நமது
தொண்டு தொடர இந்த புத்தாண்டில் நான் உளமார
எல்லாம்வல்ல அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
2008 விடுபட்ட அனைத்து செல்வங்களும் 2009 கிடைக்கும்
என்றென்றும் நெஞ்சார்ந்த அன்புடனும் நட்புடனும் உங்கள் ரம்யா

கண்ணீரில் கரைந்த காதல்



















உள்ளமெனும் மின்னஞ்சலில்
உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு
அன்பு என்ற மையை நிரப்பி
என் காதலை வடிக்கிறேன்

வானத்தை பார்த்தேன்
விண்மீன்கள் ஜொலித்தன
உன்னை பார்த்தேன்
விழிகள் ஜொலித்தன

உன் விழியில் நான் இருந்தேன்
என் வழியில் நீ வந்தாய்
உன் வரவு என் மனதில்
கடல் போல் ஆர்பரித்தன

அன்பே என் காதல் அழியாது
இதை நான் கூறவும் வேண்டுமோ
ஆனால் உன் அமைதியின் ஆழம்
நான் அறியவில்லையே பைங்கிளி


காதலை சொன்னாய் அதில்
உயிர் இல்லையே - என் உயிர் ஓவியமே
காதலுக்கு கட்டியம் கூற மாட்டாயா
என் பைங்கிளி என் காதல் பைங்கிளி


காத்திருத்தலில் சுகம் என்றேன்
அதை நீ சாதகமாக்கி
கழுத்தருத்தலில் இறங்கிவிட்டயே
என் காதல் பைங்கிளி


வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது


இப்பிறவியில் நீ இல்லையெனில்
எப்பிறவியிலும் நான் உனக்கில்லை
காதலுக்காக காத்திருந்தேன்
காணாமல் போகிறேன்......



Friday, December 26, 2008

மனதை மயக்கும் பட்டாம்பூச்சி

எனக்கு விருது கிடைச்சிருக்கு!!!!!




விருது தருபவர் : பூர்ணிமா சரண்

விருது பெறுபவர்: ரம்யா தேவி

பட்டாம்பூச்சி விருது கொடுத்த பூர்ணிமா சரணுக்கு ம்ம்ம்ம் எவ்வளவு நன்றி சொல்லறது கோடிக்கும் மேலே நன்றிகள். எனக்கு செவாலியே விருது கிடைத்த உணர்வு.

இந்த விருதை மூன்று பேருக்கு கொடுக்கலாம் என்று தேர்வு செய்திருக்கேன். புதிய பிளாகர்களை ஊக்குவிக்கும் வகையாக (நேரம், ம்ம் இல்லைன்னா நாங்க பாபுலர் பிகர் ஆகமாட்டோம் பாருங்க இதெல்லாம் நம்ம தலையழுத்து அப்படீன்னு நினைக்கிறீங்களா, ஹி ஹி பரவாஇல்லை)

இதோ நான் தேர்ந்தெடுத்திருக்கும் மூன்று பேர்:

அண்ணன் வணங்காமூடி: துள்ளும் இளமையுடனும், புதுமையான பல குறும்பு டிப்ஸ்களை அள்ளி விடுகிறார்.

தமிழ் தோழி: திகில் கதை சொல்லவதில் மிகவும் கைதேர்ந்த நிபுணி. பயமுறுத்துவாங்க அவ்வளவுதான்.

ராகவன்: பின்னுட்டம் மட்டும் எழுதி நம்மை அசத்தியவர். இப்போ என்னா பண்ண போறார்னு பாப்போம். (ஹையா மாட்டிவிட்டுட்டேன்).

இவங்க 3 பேரும் செய்ய வேண்டியது

*** இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போடணும்.

*** உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த பூர்ணிமாவை மறக்காதீங்க

*** முடிஞ்சா அப்பப்போ என் ப்லோக் படிச்சு நிறைய பின்னுட்டம் எழுதனும்

*** எனக்கு மட்டும் கள்ள ஒட்டு அதிகமா போடணும். பூர்ணிமாவுக்கு அல்ல (ஹி ஹி ஹி ஹி ஹி ஹி)

டிஸ்கி 1: பூர்ணிமா சரியா எழுதி இருக்கேனா.

டிஸ்கி 2: பூர்ணிமா பெரிய மனது பண்ணி எனக்கு இந்த விருதை கொடுத்திருக்காங்க. ரொம்ப நன்றி பூர்ணிமா.

ஒரு ஆளுயர மாலை கழுத்தில் விழுந்தமாதிரி ஒரே சந்தோசம் தான்......

வாங்க வாங்க எல்லாரும் வாங்க - விருது வாங்கிட்டேன் ....

Sunday, December 21, 2008

வைகை புயலும் - பார்த்திபனும்

மற்றொரு சந்திப்பு

வைகை: ராஜா... ராஜாதி ராஜா...., தூக்காதெ வேறு எங்கும் கூஜா..... கூஜா அட தூக்காதெ வேறு எங்கும் கூஜா...... எதிரே பார்த்திபன் கையில் தூக்கு கொண்டு வருவதை பார்த்ததும் பாட்டு சத்தம் குறைகிறது. ஐயோ இவன் இல்லே வாரான். சிக்கினோம்னா அவ்வளவு தான். சரி அப்படியே திரும்பிரலாம். வேலு வேணாண்டா இவன் சகவாசம் உனக்கு.

பார்த்திபன்: ஏய் நில்லு, சைக்கிளை எங்கே திருப்பரே? சைக்கிளை ஓரமா நிறுத்து

வைகை: இவன் நம்பளை பாத்தா ஒடனே டிராபிக் போலீஸ் மாதிரி நம்ப சைக்கிளை வேறே நிருத்தர்ரன்ப்பா. இவனோட பெரும் தொல்லையா போச்சு. எங்கிட்டு போனாலும் முன்னே இவன் மொகம் தான் தெரியுது.

பார்த்திபன்: டேய் என்னடா அண்ணனை கண்டுக்காம போறே? என்னா பாட்டு இது? நான் தூக்கு எடுத்து கிட்டு டீ வாங்க போறதெ பாத்ததும் உனக்கு பாட்டு பீறிட்டு வருதில்லே?

வைகை: ஆத்தி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லே. நாம்பாட்டுக்கு பாடிகிட்டு வாறேன். உனக்கு என்னா போச்சு, ஏன் என் சைக்கிளை நிறுத்தினே ? (மனுசுக்குள்ளே) இவனை ஒரு நாளு...

பார்த்திபன்: கேக்குறேன் இல்லே, மனசுக்குள்ளே என்னைய திட்டிட்டு என்னா யோசிக்கிற மாதிரி நடிக்கிறே?

வைகை: ஆத்தாடி உள்ளே நினைக்கறதை அப்படியே சொல்லறானே

பார்த்திபன்: ம்ம்ம்ம் என்ன விஷயம் சொல்லு...

வைகை: சரி இன்னைக்கு அவ்வளவுதான். நம்ப சந்தோஷத்திற்கு சங்குதான். என்ன திட்டபோறானோ. இவன் என்ன நம்பள சுத்தி சுத்தி வரானா இல்லை நம்பதான் இவன் போற வழியா போறோமா? இதை மொதல்லே கவனிக்கணும். பாக்கலாம் இன்னைக்கு நிலைமை என்னான்னு?

பார்த்திபன்: அறிவுகெட்ட முண்டம் எதிரிலே தெரிஞ்சவன் வரானே, அவனுக்கு வணக்கம் சொல்லுவோம், இல்லைனா சிரிச்சாவது வைப்போம்ன்னு யோசிக்கமாட்டே? சாதராண மரியாதை கூட தெரியாத ஜென்மமா நீ ?

வைகை: இந்தாப்பா நீ என்னைய ரொம்ப கேவெலமா பேசறே, அப்புறம் எனக்கு கோவம் வரும் ஆமா சொல்லிப்பிட்டேன்.. இவன் நம்பகிட்டே வம்பு பண்ணற மாதரிதான் தெரியுது. கையிலே தூக்கு, கண்ணுலே கூலிங்க்ளாஸ், பச்சை சட்டை, காக்கி பான்ட். வேஷம் போட்ட மாதிரி வந்துட்டு என்னய்யா திட்டறே. இருடி...

பார்த்திபன்: என்னாடா நான் பாட்டுக்க கேட்டுகிட்டே இருக்கேன், நீ என்னடான்னா என்னையே முறைச்சு பாக்கறே

வைகை: நீ வந்ததை, நா ஒன்னும் கவனிக்கலை, எம்பாட்டுக்க போய்கிட்டு இருக்கேன். சரி உனக்கு இப்போ என்னா வேணும்?

பார்த்திபன்: உனக்கு காது கேக்காதா, என்னா பாட்டுன்னு கேக்கறேன்

வைகை: ம்ம்ம்ம் அதுவா வந்து.....

பார்த்திபன்: என்னாடா வந்து போயி, சட்டுன்னு சொல்லு, எனக்கு வேலை நிறைய இருக்கு. நான் என்னா உன்னைய மாதிரி வெட்டி பயலா ?

வைகை: நம்பளை மறுபடியும் ரொம்ப கேவலமா பேசறனோ? வந்து.. வந்து .. கமல் பாட்டு பாடினேன், அதுக்கு என்னா இப்போ? அதெல்லாம் நான் பாடக்கூடாதா?

பார்த்திபன்: இல்லே மரியாதையை தெரியாதவனா இருக்கியே, உன்னே என்னா பண்ணலாம்னு யோசிக்கிறேன், என்னாடா என்னா வேணும்னா கேட்டே? நீ என்னா ஹோட்டல் வச்சிருக்கியா? நான் சாப்பிடவா வந்தேன்? சூடா ஒரு மசால் தோசை கேட்டா குடுப்பியா? மூஞ்சியை பாரு. என்னை பாத்து ஏண்டா இந்த பாட்டை பாடினே? நான் டீ வாங்கபோறது உனக்கு அவ்வளவு கேவலமா இருக்கு. ம்ம் உனக்கு எவ்வளவு அசட்டு தைரியம் இருந்தா நீ இந்த பாட்டை என்னை பாத்து பாடுவே? சொல்லுடா? அட சொல்லுடான்னா?

வைகை: முன்னே போன கடிக்கிறான், பின்னே வந்தா உதைக்கிறான். நாம்ப பாட்டுக்க பாடிக்கிட்டு தானே வந்தோம், இவனை பார்த்து நா ஏன் பாடனும்? இவன் டீ வாங்கினா எனக்கு என்னா? காப்பி தண்ணி வாங்கினாதான் எனக்கு என்னா? பொல்லாதவனா இருக்கானே.

பார்த்திபன்: என்னா நான் கேட்டுகிட்டு இருக்கேன், நீ பாட்டுக்க வானத்தை பார்த்து யோசிக்கிறே? பதில் சொல்ல மாட்டியா? என்னை பார்த்தா கழுதை மாதிரி தெரியுதா?

வைகை: அட இங்கே பாருய்யா நம்ப நினைச்சதை அப்படியே சொல்லறான். இவனை சமாளிக்கவே தனியா படிக்கணும் போல? சரி எப்படியோ சமாளிக்கலாம். சரி என்னாப்பா....

பார்த்திபன்: என்னா சரி என்னா என்னாப்பா... ஒழுங்கா பேச தெரியாதா உனக்கு. 8 கழுதை வயசு ஆவுதுல்லே. யோசிக்க வேண்டாம். ஏண்டா என்னைய பார்த்து அப்படி பாடினே?

வைகை: இல்லேப்பா, நானு முதல்லே இருந்தே அந்த பாட்டுதானே பாடிகிட்டு வந்தேன்.

பார்த்திபன்: எப்போ என் தலை பாத்த முதல்லே இருந்தா?

வைகை: என்னா வந்து சிக்கிட்டோமோ, அப்படித்தான் நினைக்கிறேன். சின்னா பின்னமாக்கி விடுவானோ? இருக்கட்டும், இருக்கட்டும். பேசி சமாளிக்காம்.

பார்த்திபன்: டேய் நான் இங்கே ஒருத்தன் நின்னு பேசிகிட்டு இருக்கேன், அப்பப்போ நீ பாட்டுக்கு திரும்பி நின்னு பேசிகிட்டு இருக்கே, நீ என்னாடா லூசா?

வைகை: ஏம்பா, இதுக்குபோய் லூசு அது இதுன்னு சொல்லிக்கிட்டு. நான் பாட்டுக்க, என் வாயிலே வந்ததை பாடிகிட்டு வந்தேன், அந்த நேரம் பார்த்து நீ வந்தியா, உனக்கு தப்பா படுது. அம்புட்டுதான்.

பார்த்திபன்: நான் என்னா சும்மாவா உன்னே லூசுன்னு சொன்னேன், நெஜமாவே நீ லூசுதாண்டா, இவ்வளவு ஒயரம் வளர்ந்திருக்கியே, ரோட்லே என்னடா பாட்டு உனக்கு? அதுவும் நான் வரும்போது. போன தடவையே பாடினதை கேட்டு நாயி தொரத்த, நீ ஓட கடைசியிலே நாயி ஜெய்ச்ச்டிச்சு இல்லே. உன் வேட்டி நாயி வாயிலே இருந்தது மறந்து போச்சா ?

வைகை: அதெல்லாம் ஏம்பா இப்போ போய் பேசிகிட்டு, சரி சரி விடு. பிரச்சனையை பண்ணாதே

பார்த்திபன்: நான் பிரச்சனையை பண்ணறேனா? இந்த மாதிரி சில்லாவளித்தனம் எதுவும் என்கிட்டே வச்சிகாதேன்னு சொன்னேனா இல்லையா? மொதல்லே அதெ சொல்லு.

வைகை: அதில்லே, வந்து, வந்து என்னா வார்த்தை கிடைக்க மாட்டேங்குது. பேச முடியலியே. ஆண்டவா இன்னைக்கு யாரு மூஞ்சியிலே முளிச்சொமோ? இப்பவே கண்ணு மங்கலாயிடுசே.. நானு என்னா செய்வேன். எப்படி இவன் கிட்டே இருந்து தப்பிக்க போறேனோ, ஒண்ணுமே புரியலையே.

பார்த்திபன்: ஏண்டா ஒண்ணுமே பேசாமே எருமை மாதிரி நிக்கிறே?

வைகை: ஏம்பா இப்படி எல்லாம் பேசறே. எனக்கு அப்பறம் கோவம் வந்துடும். உனக்கு இப்போ என்னா பிரச்சனை?

பார்த்திபன்: சரி எனக்கு வேண்டாதவன் ஒருத்தன் அந்த டீ கடையிலே உக்காந்து இருக்கான்.

வைகை: அதனாலே?

பார்த்திபன்: அதென்ன சொல்லி முடிக்கறதுக்குள்ளே, கேள்வி? பட் என்று

வைகை: ஏம்பா வாய் பேச்சு வாயில் இருக்கும்போதே கை நீட்ரே?

பார்த்திபன்: போ போய் நான் சொன்னதே மொதல்லே செய். டீ வாங்கிட்டு வா. என்னடா மொறைக்கிரே. ஒரு அறை போதாதா? அந்த கன்னத்திலேயும் கொடுக்குனுமா? போறியா? இல்லையா?

வைகை: இவனை ஒரு நாளைக்கு சரியா கவனிக்கணும். வரவன் போறவன் எல்லாரும் போட்டு மொத்தரான்களே. நானு என்னா "இரவல்லே தாலாட்டி வந்தவனா" ? இவனுகளை எல்லாம் யாருன்னே தெரியாமே போட்டு அடி பிண்ணிடனும். முதல்லே ஒரு கோணி ரெடி பண்ணனும். எங்காவது படுக்காமவா போயிடபோறான். அப்போ இவனோட தலையை கோணிக்குள்ளே போட்டு மூடி யாருன்னே தெரியாமே நொங்குன்னு நொங்குன்னு நொங்கிடனும் ஆமா. தொணைக்கு யாரானும் கூட்டிக்கணும். சுப்பிரமணியை கூப்பிடலாமா. யோசிச்ச்ச்சு கச்சிதமா காரியத்தை முடிக்கணும். இருடி உனக்கு இருக்கு. இப்போ டீ வாங்கி குடுத்து தப்பிசிக்குவோம்.

பார்த்திபன்: என்னாடா டீ வாங்கிவான்னா ஒரே யோசனையா இருக்கே. போக மாட்டியா? இந்தா தூக்கு, எடுத்துக்கிட்டு போடா.

வைகை: ஒரு வார்த்தை பேசரதுகுள்ளே ஒன்பது டா சொல்லறான். இருக்கட்டும் இருக்கட்டும். சரி தூக்கை கொடு. டீ வாங்கியாறேன். யாரை பாத்து பயப்படறான். அதே மொதல்லே கண்டு பிடிக்கணும். ஏம்ப்பா அங்கே யாரு உனக்கு வேண்டாதவ்ன்னு சொன்னே?

பார்த்திபன்: ஏண்டா கொடுத்தது போதாதா? தொங்கற நாக்கை தோள்லே போட்டுக்கிட்டு வம்புக்கு அலையறே. வந்தேன்னா..... நல்லா திட்டிடுவேன்.......... ஆமா!!

வைகை: ஆத்தாடி நமக்கு வாயி கொஞ்சம் நீளம்தான், நல்ல வேளை தள்ளி நின்னோம் தப்பிச்சோம், இல்லைன்னா பல்லை உடைச்சிருப்பானோ? சரி எதுக்கு இந்த ஆராயிச்சி. மொதல்லே இவனுக்கு டீ வாங்கி கொடுத்துடுவோம். ஆமா அங்கே என்னா இரெண்டு நாய் நிக்குது, ஒரு நாய்ன்னாவே எனக்கு பயமான பயம். இரெண்டு வேறேயா?

பார்த்திபன்: முண்டம் அங்கே நிக்கிறது ஒரு நாய்தான். ஏண்டா இப்படி தப்பு தப்பா யோசிக்கறே.

வைகை: நீ அடிச்சதில்லே காதுக்குள்ளே குயிய்ன்னு ஒரு சத்தம் கேட்டுது, காது கேக்கலை, கண்ணு முன்னாடி ஒரே வண்டா பறக்குது. அவ்வளவுதான்.

பார்த்திபன்: லூசு அது வண்டு இல்லே. வண்டா இருந்தா இந்நேரம் உன் முழியை நோண்டிருக்கும் . நீ இப்போ போகப்போறியா இல்லையா ?

பார்த்திபனின் தந்தையின் நண்பர்: என்னப்பா நல்லா இருக்கியா இங்கே என்ன பண்ணறே அதுவும் இவன் கூட ?

பார்த்திபன்: நல்ல இருக்கேன் சார், ஒன்னும் இல்லே சும்மா டீ வாங்க வந்தேன்.

பார்த்திபனின் தந்தையின் நண்பர்: வேலைக்கு போகபோறேன்னு சொன்னே, எப்போ போறே? போறதுக்கு முன்னாடி வந்து என்னைய பாத்திட்டு போ என்ன? அது சரி இந்த லூசு பயலோட உனக்கு என்ன பேச்சு வார்த்தை நடக்குது.

பார்த்திபன்: அது ஒன்னும் இல்லை சார் நான் டீ வாங்க வந்தேன் வந்த இடத்தில் என்னைய வம்புக்கு இழுக்கிறான்.

பார்த்திபனின் தந்தையின் நண்பர்: சரி சீக்கிரம் வீடு போய் சேரு, இவன மாதிரி காவாலி பயலோட சகவாசம் வச்சிக்காதே

வைகை: என்னாது காவாலி பயலா நானா, நல்லா இருங்கப்பு நல்லா இருங்க, ஏன் எல்லாரும் ஒரு மார்க்கமாகவே திரியறானுங்க. வயசுக்கு ஏத்த மாதிரியா பேசறானுங்க, இவங்களுக்குதான் மருவாதியே தெரியலை. ஆனா எனக்கு மருவாதி இல்லைன்னு இங்கே நிக்கறவன் கூட சொல்லறான். இதுக்கு மேலே இங்கே நின்னா அவ்வளவுதான்.
சீக்கிரம் இடத்தை காலி பண்ணனும். இவன் முகத்திலே இன்னமே முழிக்கவே கூடாது சாமி.

பார்த்திபன்: நின்னது போதும், போய் டீ வாங்கிட்டு வர வழியை பாரு

வைகை: இதா போறேன் இல்லே, அண்ணே 2 பார்சல் டீ போடுங்கண்ணே. இந்தாங்க தூக்கு.

மாடாசாமி: ஏலே வேலு இங்கே என்னா பண்ணறே?

வைகை: அண்ணே மாடசாமியண்ணே நல்லா இருக்கிறீங்களா? ஆமா போன மாசம் எங்கோ ஊருக்கு போனதா சொன்னாங்க. எப்பண்ணே வந்தீங்க?

மாடாசாமி: சரி இங்கே உக்காரு, எப்படி இருக்கே, எப்ப கல்யாணம் செய்துக்க போறே? இன்னும் அக்கா வீட்ட்லேதான் இருக்கியா?

வைகை: இல்லேண்ணே இப்படியே அக்கா வீட்டுலயே செட்டில் ஆக வேண்டியதுதான். எனக்கு அக்கான்னா அம்புட்டு உசுருண்ணே. அதை விட்டுட்டு நான் எங்கே போவேன் ? எனக்கு என்னா பொழைக்க தெரியும்? அக்கா வீட்டிலேயே இருப்பதா முடிவு பண்ணிட்டேண்ணே.

மாடசாமி: சரி டீ யாருக்கு உங்க அக்கா வீட்டுக்கா ? ஏன் அக்காவுக்கு உடம்பு சரியா இல்லையா?

வைகை: இல்லைண்ணே, என்னோட சிநேகிதன் ஒருத்தனுக்கு டீ வாங்க வந்தேன்.

மாடசாமி: ஏன் அவன் வந்து வாங்க மாட்டானாமா? நீ என்னாடா அவனுக்கு வேலைக்காரனா? அறிவு இருக்காடா உனக்கு? அன்னைக்கி நான் என்னா சொன்னேன்.

வைகை: என்னாண்ணே சொன்னீங்க ?

மாடசாமி: யாருக்கும் எடுபிடி வேலை செய்யாதே, அப்போதான் எல்லாரும் உன்னைய மதிப்பாங்கன்னு சொன்னேன் இல்லையா. ஏண்டா எதே சொன்னாலும் கேக்க மாட்டியா? அறிவு கெட்டவனே

வைகை: என்னா இவரும் ஆரம்பிச்சிட்டாரு. இம்புட்டு நேரம் நல்லா தானே பேசிகிட்டு இருந்தாரு. என்னா ஆச்சு இவருக்கு. அண்ணே மாடசாமி அண்ணே ஏண்ணே ஒரு மாதிரி பேசறீங்க? எனக்கு ஒண்ணுமே புரியலையே?

மாடசாமி: என்னடா முறைக்கிறே ?

வைகை: முறைக்கலேண்ணே, உங்க கிட்டே தான் பேசி கிட்டு இருக்கேன்.

மாடசாமி: என்ன சொன்னே நான் உனக்கு அண்ணனா? எட்டி ஒரு உதைச்சென்னா தெரியும் சேதி. என்னைய என்னான்னு நினைச்சுகிட்டு இருக்கே. கிறுக்கு பயலே.

வைகை: ஆத்தி இவரும் நம்பளை உதைப்பேன்னுட்டு சொல்லறாரே. இந்த கூலிங்கிளாஸ் போட்ட பய எதுனாச்சும் மாடசாமி கிட்டே சொல்லி இருப்பானோ? அதனால தான் தூக்கை என்கிட்டே கொடுத்து அனுப்பி இருக்கிறானா? இந்த வெவரம் எனக்கு இல்லாம போச்சே. எத்தினை பேருடா என்னை அடிப்பீங்க?

மாடாசாமி: டேய் நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் டீ வாங்கிடுவியா, அதையும், பாக்கறேன்.

வைகை: என்னாச்சு இவருக்கு. நான் ஒண்ணுமே சொல்லலையே, டீ கொண்டு போகலின்னா அவன் அடிப்பான், டீ வாங்கினாவே இவன் அடிப்பேன்கிறானே, அட ஒரு கூட்டமே கிளம்பிருச்சா. சரி இந்த மாடசாமி கிட்டே வம்பு கிம்பு ஒன்னும் வச்சுக்காமே சீக்கிரம் இங்கிருந்து தூக்குகோடா நழுவிடனும்.ஆத்தி ஒரு நாள் தள்ளறதே ஒரு யுகமா இருக்கேப்பா?

டீ கடைகாரர்: எலே வேலு இங்கே வா. கிட்டே வா காதுலே ஒரு விஷயம் சொல்லறேன். மாடசாமி சரி இல்லை. அதுக்குதான் போன மாதம் ஆஸ்பத்திரிக்கி கூட்டிகிட்டு போனாங்க. அவருக்கு புத்தி பிசகிடிச்சாம் இங்கே எல்லாரும் அப்படிதான் பேசிக்கிறாங்க. அதனாலே சத்தம் போடாமே இந்தா டீ வாங்கிகிட்டு போய் சேர்.

வைகை: என்னா மாடசாமி அண்ணனுக்கு புத்தி சரி இல்லையா? இவ்வளவு நேரம் என்கிட்டே நல்லா தானே பேசினாரு. நீ என்னா பொய் சொல்லறயா? அண்ணங்கிட்டே சொல்லட்டுமா? எனக்கு எம்புட்டு பழக்கம்? என்னா இது சின்னபிள்ளைதனமா இருக்கு?

டீ கடைகாரர்: டேய் வேலு ஒழுங்கா டீ எடுத்துகிட்டு போ. அலம்பல் பண்ணினா சுடுதண்ணி எடுத்து முஞ்சியிலே ஊத்திடுவேன். ஓடி போய்டு ஆமா சொல்லிட்டேன்.

வைகை: எனாது சுடுதண்ணி ஊத்துவியா என்னாங்கடா ஆச்சு எல்லாரும் தப்பு தப்பா பேசறிங்க? சரி இவ்வளவு சொல்லறே நானு நபறேன். சுடுதண்ணி எல்லாம் வேணாம் நானே கிளம்பறேன்.

டீ கடைகாரர்: போவியா வந்துட்டான். மாடசமியோ அமைதியா ஒக்காந்து இருக்கான். எந்த நேரம் அவன் என்னா பண்ணுவாநோன்னு நான் பயந்து கிட்டே டீ ஆத்தறேன். இதுலே இவன் வேறே மாடசாமி கிட்டே பேச்சு வார்த்தை நடத்தாரான். வந்துட்டானுக தூக்கை தூக்கிகிட்டு.

பார்த்திபன்: என்னடா சீக்கிரம் வந்துட்டே. மாடசாமி அண்ணனை பாக்கலை?

வைகை: இவன் எல்லாம தெரிஞ்சுகிட்டே கேக்கரானா? அப்போ இந்த செட்டப் கூட இவனோடதுதான். இந்த பய பிள்ளைக்கு இப்ப தானே புரியுது.

பார்த்திபன்: என்னா நடந்துச்சு அங்கே ? மாடசாமி கிட்டே பேசிகிட்டு இருந்தே

வைகை: சும்மா அவரு என்னைய நலம் விசாரிச்சாரு, நானும் அவரை விசாரிச்சேன் வேறே ஒன்னும் இல்லயே. அம்புட்டுதான்.

பார்த்திபன்: இல்லை அவரு உன்னைய பாத்து கையை ஆட்டி ஆட்டி பேசினாரு, காலை வேறே தூக்கி காட்டினாரு. இப்படித்தான் நலம் விசாரிப்பாங்களா ? மரியாதையா சொல்லு அங்கே என்னா நடந்தது?

வைகை: டி ஆறுதுப்பா, அவசரமா போனும் சொன்னியே, கிளம்புப்பா. நான் அப்புறமா வரேன், சாகவாசமா பேசுவோம் சரியா. கிளம்பு.... கிளம்பு....

பார்த்திபன்: எண்டா என்னைய விரட்டரே? எனக்கு ஒன்னும் அவசரமா போகவேண்டாம். இன்னும் ஒரு மணி நேரம் நான் ப்ரீ தான். அதுக்குள்ளே நாம்ப எல்லாத்தையும் முடிச்சிடலாம்.

வைகை: எல்லாத்தைன்னா, என்னாப்பா, அங்கே ஒண்ணுமே நடக்கல. டீ கடைக்காரர் கூட என்னை ஒன்னும் திட்டலை. ஐய்யயோ நாம்பளே எல்லாத்தையும் உளற ஆரம்பிசிட்டோமே. என்னா நடக்க போகுதோ?

பார்த்திபன்: சரி சொல்லு டீ கடைகாரர் என்ன திட்டினார். மாடசாமி என்னா சொன்னாரு?

வைகை: ஒன்னும் சொல்லலை. உனக்கு டீ வேலை முடிஞ்சுது. அப்போ நான் கிளம்பறேன்

பார்த்திபன்: அண்ணே மாடசாமி அண்ணே வேலு உங்களை கூப்பிடறான்

வைகை: அடபாவி நான் எங்கேடா!!!

மாடசாமி: அறிவு கெட்ட முண்டம் இப்பதானே உதைப்பேன்ன்னு சொன்னேன் அங்கே போய் நின்னுகிட்டு அலம்பலா பண்ணறே.

வைகை: ஆத்தி கல்லு எடுக்குறானே. ஏம்பா ஏம்பா உன்னைய கும்புட்டுகறேன்பா அவனை அங்கேயே ஆப் பண்ணுப்பா மாடசாமிக்கு மன நிலை சரி இல்லேப்பா, ப்ளீஸ் பா ...

பார்த்திபன்: நான் கேட்டபோதே இதை சொல்லி இருக்கலாம் இல்லே. என்னா சில்லாவளித்தனமா பண்ணறே? எனக்கு தெரிஞ்சு தானே உன்னைய டீ வாங்க அனுப்பினேன்.

வைகை: தெரிஞ்சுதானா? வெளங்கிடும். மத்தவனை அழவக்கிரதுலெ என்னா அம்ம்புட்டு சந்தோசம் இருப்பூ இரு......

பார்த்திபன்: உனக்கு மட்டும்தான் பாட தெரியுமா இப்ப்போ நான் பாடறேன் பாரு போடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு கணக்கு...

வைகை: இவனுமா??? சட்டி சுட்டதடா கை விட்டதடா நெஞ்சு சுட்டதடா.... நெஞ்சு சுட்டதடா....

பார்த்திபன்: எச்சுச்மி, எனி ஹெல்ப் ???

வைகை: ம்ம்ம் ஒன்னும் வேணாம் நாங்களே பாத்துக்குவோம்மில்லே.. .

பிடிக்கிதோ பிடிக்கலையோ ஒட்டு போடுங்கப்பா !!!!

Saturday, December 20, 2008

கனவுச் சிதறல்கள்

அந்தி மயங்கிய நேரத்தில்
அழகான ஓர் வனத்தில்
அருமையான ஓர் இசையில்
அசந்திட்டேன் மெல்ல

அறிவு தெளிந்து செல்ல - நேரம்
ஆகித்தான் போனதே - நீண்ட
நேரம் ஆகித்தான் போனதே
கனவும் கலைந்துதான் போனதே

தென்றலோடு கலந்து வந்த
உன் இன்னிசை என்னை தீண்டி
என் மதியை ஆட்கொண்டதே
நான் என் செய்வேன்

தெள்ளு தமிழ் துள்ள
இசைக்கும் உன் இசைக்கு
நான் என்றென்றும் அடிமை
என்னை மறந்தனையோ

அன்பின் அடிமையான என்னை
ஓடுகிற நீரிலே கரைத்து விட்டனையோ
உன் சித்தம் என்றோ என் பக்கம்
காத்திருக்கிறேன் காண குயிலே அருள் தாராயோ

இசைக்கு ஒரு அரசி
அது நீ என்பேன்
என் இதய
தோட்டத்திற்கும் ஓர் அரசி
அதுவும் நீ என்பேன்

காலம் நம் பிரிவை
ஏற்று கொண்டதோ
ஆனால் நான் ஏற்க
மறுத்தேன் அதை
நீ ஏற்க மறந்தாயே!!

Sunday, December 14, 2008

விஜய T.R.இன் தனிப்பாடல்


அண்ணன் T.R. அவர்கள் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது சிந்திய முத்துக்கள்




சொல்லுடா டேய் சொல்லுடா
நான் யாருன்னு சொல்லுடா...
வந்தாரு வந்தாரு அண்ணாரு
வந்தது யாருன்னு பார்த்தா டி.ஆரு

பாட வந்தாரு நல்லா பாட வந்தாரு
ஊரெல்லாம் கேட்டுப்பாரு
அங்கே நிக்கற நீ யாரு
இங்கே பாடறது டி.ஆரு

நானே அமைச்ச மெட்டு
தாளம் போடு அதை விட்டு
எங்கே போனா எதிர் வீட்டு சிட்டு
வந்து ஆடம்மா மெட்டை கேட்டு

பாடுவேன் பாடுவேன்
எல்லாத்துக்கும் பாடுவேன்
எதிர் பாட்டு பாட வந்தா
ஏணி வச்சி பல்லை உடைப்பேன்

டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா
டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா

எனக்கு இப்போ இங்கே ஜோலி
என்னான்னு கேட்டா நீ காலி
கொண்டு வாடா வாளி
வாளியிலே அள்ளுடா போளி

அத்தையம்மா கொடுத்த விருந்து
அதுக்கு வேணும் மருந்து
வெட்டியா தொடருது பருந்து
டேய் எங்கேடா பேருந்து

டிண்டுனக்கா ஹேய் டினக்குனக்கா
டிண்டுனக்கா ஹேய் டினக்குனக்கா

கும்பிட்டாரு கும்பிட்டாரு டி.ஆரு
எல்லாரயும் பாத்து கும்பிட்டாரு
என்னான்னு பாத்தா கிளம்பிட்டாரு
அண்ணன் கிளம்பிட்டாரு

பி.கு

இந்த முறை என்னை அடிக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்.
ராகவன் அண்ணாவும் தப்பிச்சாரு........


Thursday, December 11, 2008

காதலும் திருமணமும்


திருமணத்திற்கு முன்

காதலன்: ஆம், கடைசிவரை காத்திருப்பது என்பது மிகவும் கடின மான ஒன்று

காதலி: அப்போ என்னை மறந்து விடப்போகிறாயா?

காதலன்: சேச்சே, அதெல்லாம் நான் ஒருநாளும் நினைத்தது கூட கிடையாது

காதலி: நீ என்னை உண்மையாக காதலிக்கிறாயா

காதலன்: அதில் என்ன சந்தேகம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு

காதலி: என்னை ஒரு போதும் ஏமாற்ற மாட்டியே ?

காதலன்: மாட்டேன், ஏன் இவை எல்லாம் கேட்கிறாய்

காதலி: என்னை முத்தமிடுவாயா?

காதலன்: சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்

காதலி: என்னை அடிப்பாயா?

காதலன்: பைத்தியமா நீ, நான் ஒன்றும் அந்த மாதிரி ஆளு இல்லை

காதலி: நான் உன்னை நம்பலாமா?

காதலன்: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

காதலி: டார்லிங்

திருமணத்திற்கு பின்

மிகவும் சுலமான ஒரே வழி கீழிருந்து மேலாக படிக்கவும்

பின் குறிப்பு:

எல்லாரும் நல்லாத்தான் படிச்சீங்க. அப்பறமும் ஏன் முறைக்கிறீங்க?

ரம்யா: அண்ணா ராகவன் அண்ணா எல்லாரும் என்னை அடிக்க வராங்க, காப்பாத்துங்கண்ணா

ராகவன் : ஏம்மா, எல்லாரும் அப்படி ஒன்னை வெரட்டறாங்க, நீ என்ன தப்பு செய்தே?

ரம்யா: ஒண்ணுமே செய்யலை அண்ணா, கல்யாணத்துக்கப்புறம்ன்னு ஒரு வரி போட்டேன் அதுலே வந்த வம்புதான்.

ராகவன்: போங்கப்பா ரம்யா சின்ன பொண்ணுதானே, மன்னிச்சுடுங்கப்பா

ரம்யா: தேங்க்ஸ் அண்ணா

இது சும்மா எழுதியது யாரும் தவறாக எடுத்து கொள்ளக்கூடாது

அடிப்பதற்கு முன்பே ஒட்டு போடுங்களேன்

Wednesday, December 10, 2008

கனவே கலையாதே!!

நீ கன்னா பின்னாவென்று யாரையாவது காதலிக்கிறாயா?
ஆமாம் என்றால் இதெல்லாம் கேள்விகள் ?

ஹாய்
உறங்காத பல இரவுகள் கடந்தனவா?


யாரேனும் உன் ஏகாந்த இரவின் தனிமையை கெடுக்கிரார்களா?


யாரேனும் தினமும் மாலை பொழுதினில் உன்
காதோடுதான் நான் பாடுவேன் என்கிறார்களா ?


இந்த உணர்வுகள் நீ உணர்வதை யாரேனும் கவனிக்கிறார்களா?

இப்போது சந்தித்தவரை இதற்குமுன் அதிக இடத்தில் சந்தித்த
உணர்வை நீ உணர்கிறாயா?

யாரேனும் உனது கோபத்தை மதிக்கவில்லையா?

வேறு யாரும் இல்லைப்பா இவர்தான்







அவர் கொசுவார்


பி.கு:

ஏன் எல்லாரும் ஓடியாராங்க ?
என்னா என்னை அடிக்க வாராங்களா ?

ஓடு ரம்யா ஓடு : ஓடிட்டேன் இல்லே !!!

காதலித்தவர்கள், காதலிக்காதவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் எனக்கு ஒட்டு போடுவீங்கன்னு தெரியும் .


இது ரம்யா பஞ்ச்

Tuesday, December 9, 2008

தொலைந்த காதலனின் கனவுகள்!!!

தீபத்து ஒளியிலே
தென்பட்ட உன்முகம்
கோடி மின்னல்களை கொண்டிருக்க
ஒளி தாங்காமல் திகைத்த நான்

வெளியே வந்து மதியை நோக்க
அங்கே மதி தன் ஒளி மங்கி நிற்க
மதியின் ஒளி மங்கைக்கு இடம் பெயர
அதனால் மதியின் குளிர்ச்சி குறைந்து
இயற்கை திகைத்து நிற்க

மங்கையின் மதி வதனத்தில் மயங்கிய நான்
அப்படியே அந்த அழகு சிலையை
சித்திரமாக வடிக்க
வடித்த சித்திரத்தில் மயங்கி நின்ற நான்
என்னிலை மறந்தேன்

நாட்கள் பல ஓடின
மாதங்கள் சில ஓடின
என்னை மறந்த நிலையை
நான் விலக்கி விட்டு

ஓடோடி வந்தேன் உன்னை காண
விதியின் கொடுமை என்னவென்பேன்
கால சக்கர சுழற்சியில்
என் கை நழுவி போனாய் நீ

மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மலர்ந்து சிரிக்கின்றாய்
நீ சிரித்தால் தீபாவளி
நான் அழுதால் கண்வலி

உன் வழியில் நான் வந்து
முடிந்த என் ஒரு தலை காதலை
புதுப்பிக்க நியாயம் இல்லையே
மறக்க வேறு எதை நினைக்க
உன்னையே நினைக்க மனம் ஏங்குதே

மறக்க வருடங்கள் பல ஆகலாம்
தினம் தினம் வரும் உன் நினைவு
தரும் தொல்லைகளை
நான் என்ன செய்ய

உன்னை பார்த்த அந்த முதல் நாள்
மதி மயங்கிய அந்த ஒருநிமிடம்
மீண்டும் மீண்டும் வேண்டும்
என்கிறது என் மனம்

மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன்

நான் உணர்ந்த இந்த உண்மையை
உறதி செய்தேன் ஒரு நாள்
தாடியை வளர்க்கவில்லை ஆனால்
நான் ஒரு கலியுக தேவதாஸ்

உன்னையே நினைத்து உருகி உருகி
காதலால் மனம் கசிந்து
என்னை மறந்து,
என் நினைவுகள் துறந்து...

அடுத்து ஒரு தீப ஒளிக்காக காத்திருக்கிறேன் ......

மொக்கையானாலும் ஒட்டு போடுங்க

Saturday, December 6, 2008

வைகை புயலும் சுப்பிரமனியும்

வைகை: இன்னிக்கி ஒரு பய கிட்டே அடி வாங்காம வீடு திரும்பனும். ஆமா கிளம்பும்போது மாமா ஏதோ அக்காகிட்டே நம்மள பத்தி திட்டின மாதிரி இருந்ததே. ம்ம்ம்ம் இருக்கட்டும், இருக்கட்டும் நம்ப அருமை அவருக்கு தெரியலை. என்ன.. இன்னைக்கு ஒரு பய சிக்கலை. எதுக்கும் பாப்போம். அட அதோ போறானே.. அவன் பேரு என்னா? ஆ ஞாபகம் வந்திடிச்சு. சுப்பிரமணி இல்லே, ஆமா சுப்பிரமனியே தான். எங்கே போறான். இவன் கிட்டே வச்சுக்க கூடாது. அன்னைக்கே நம்பளை அவன்
நைனா கிட்டே மாட்டி விட்டானே. மறுபடியுமா? ஆனா இன்னைக்கு பொழுதே போகலையே, சரி சுப்பிரமணி கிட்டேயே பேசுவோம். அன்னைக்கே பய பிள்ளே நம்ப நட்புக்காக அவ்வளவு கெஞ்சினான். நம்ப நட்பு அவ்வளவு தேவையா அவனுக்கு..? சரி நமக்கும் ஒரு ஆளு தேவை, பார்க்கலாம். சுப்பிரமணி......ஏலே சுப்பிரமணி.. நில்லுடா, டேய் ஏண்டா ஓடறே? அண்ணனாலே ஓடி வர முடியலைடா, டேய் நில்லுடா, நில்லுடா, நில்லு.

சுப்பிரமணி: யாரு நம்பளை கூப்பிடறது, திரும்பி பார்த்து யாரு, ஒ வேலு அண்ணனா? எண்ணன்னே கூப்பிட்டிங்களா?

வைகை: டேய் அன்னைக்கி என்னடா என்னைய உங்க அப்பா கிட்டே மாட்டி விட்டுட்டே. கொஞ்சம் ஏமாந்திருந்தா என்னைய அடிச்சிருப்பாறேடா.

சுப்பிரமணி: மன்னிச்சுடுங்கண்ணே, எங்கப்பா ரொம்ப அடிப்பாரு, அதனாலே தான் அப்படி சொன்னேன். இருங்கண்ணே அன்னைக்கு நீங்க ஓடும்போது, ஒரு செருப்பை விட்டுட்டு ஓடிட்டிங்கண்ணே, எங்கப்பா போனப்பறம், அந்த ஒரு செருப்பை தோ தெரியுதே அந்த கல்லு இடுக்கிலே மறச்சி வச்சுருக்கேன். இருங்க போய் எடுத்தாறேன். இந்தாங்கண்ணே...

வைகை: சின்ன பயலா இருந்தாலும் நல்ல பயலாத்தான் இருக்கான். இவ சகவாசம் கூட நல்லாத்தான் இருக்கும் போல. பாக்கலாம்.

சுப்பிரமணி: சரிண்ணே நான் கிளம்பறேன். அப்புறம் பாக்கலாம்ண்ணே.

வைகை: எங்கேடா போறே, இரு கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருப்போம். உக்காருடா, உக்காரு.

சுப்பிரமணி: இல்லைண்ணே, நானு ஒரு வேலைக்கு போறேண்ணே, நேரம் கழிச்சு போனா அடிப்பாங்கண்ணே. சாயங்காலம் பார்க்கலாம்ண்ணே.

வைகை: என்னாது வேலைக்கு போறயா, சின்னபிள்ளைங்கறது சரியா போச்சு போ, ஏண்டா, படிக்கலையா, பள்ளிக்கூடம் போகலைன்னா உங்கப்பா அடிப்பாருன்னு சொல்லுவே.

சுப்பிரமணி: இல்லைண்ணே எங்கப்பாவிற்கு உடம்புக்கு சரி இல்லை, அதனாலே எங்கம்மா என்னைய வேலைக்கு போக சொல்லிடுச்சு.. சின்ன பையன்னு வேலையும் தரமாட்டேன்னுட்டாங்க. கால்லே விழுந்து இந்த வேலையிலே சேர்ந்தேன்.

வைகை: என்னா வேலைடா செய்யறே?

சுப்பிரமணி: கல்லே ஒடைக்கிற வேலைண்ணே

வைகை: என்ன கல்லே ஒடைக்கிரயா? அதே ஏண்டா இங்கே ஒடைக்கிறாங்க?

சுப்பிரமணி: ஆமாண்ணே, இங்கேதாண்ணே ஒடைக்கிறாங்க, ஒடைச்சு செக்க்குக்கு அனுப்புவாங்கண்ணே.

வைகை: என்னாடா, என்னாடா பேசறே ஒண்ணுமே புரியலே செக்க்குக்கு அனுப்புவாங்களா? என்ன சொல்லறான் இவன்.

சுப்பிரமணி: ஆமாண்ணே..

வைகை: என்னாது ஒரு மண்ணும் புரியலையே, கல்லு எல்லாம் ஜெயில்லே தானே ஒடைப்பாங்க. இங்கே ஏன் கல்லு ஒடைக்கிறாங்க. நம்பளும் இந்த வேலைலே சேருவோமா..

சின்ன பையனே ஒடைக்கும்போது நம்பளாலே முடியாதா என்னா ? எப்பவும் மாமா திட்டிகிட்டே இருக்குறாறு. வேலைக்கு போனால் திட்டமாட்டாரு இல்லே. ஆமா இதுவும் நல்லாதான் இருக்கு. சரி, டேய் சுப்பிரமணி, நானும் உன் கூட வேலைக்கு வரேண்டா, என்னையும் உன் கூட சேர்த்து விடுடா. நானு நல்லா கல்லு ஒடைப்பேண்டா..

சுப்பிரமணி: கல்லு இல்லேண்ணே, கல்லே

வைகை: இரண்டுக்கும் என்னடா வித்தியாசம், சரியான லூசுப்பயலா இருக்கானே.

சுப்பிரமணி: சரி வாங்கண்ணே, எங்க முதலாளி கிட்டே உங்களுக்கு வேலை கேக்கிறேன். ஆனா ஒரு மரக்கா ஒடைச்சா 2 ரூவா தருவாங்கண்ணே.

வைகை: என்னாது மரக்காவா? என்னடா பேசறே?

சுப்பிரமணி: ஆமாண்ணே. ஒரு மரக்கா கல்லே ஒடைச்சா 2 ரூவா. ஒரு நாளைக்கு நானு 10 மரக்கா ஒடைப்பேண்ணே..

வைகை: என்னது 10 மரக்காவா? என்னடா சொல்லறே? சரி உள்ளே போவோம். எங்கே உங்க முதலாளி? கூப்பிடுடா?

சுப்பிரமணி: அண்ணே அவரு முதலாளி, நம்பதாண்ணே அவரை போய் பாக்கணும். வாங்க அறிமுகப்படுத்தறேன்.

வைகை: என்னது வெவகாரமான இடமாக இருக்கு போல் இருக்கே. ம்ம்ம் எங்கேயும் மாட்ட கூடாது. சும்மா உள்ளே போய் வேலையை பாப்போம், முடிஞ்சா செய்வோம் இல்லேன்னா போய்டுவோம். நம்பள யாரும் ஒன்னும் செய்ய முடியாதுல்லே.

சுப்பிரமணி: ஐயா, இவரு வேலுஅண்ணே, எனக்கு ரொம்ப வேண்டியவரு. அவரும் இங்கே வேலைலே சேர்றேன்னு சொல்லறாரு. ஐயா ஒரு வேலை கொடுங்க.

முதலாளி: என்னடா, நீ பேசமாட்டியா, ஏண்டா திரு திருன்னு முழிக்கறே, பேசுடா. இதுக்கு முன்னாடி என்னா வேலை பார்த்தே? அனுபவம் இருக்கா?

வைகை: முஞ்சியையும், ஆளுங்களையும் பாரு, கல்லு ஒடைக்கிற வேலைக்கு முன் அனுபவம் வேறையா?

முதலாளி: என்னடா தானே பேசிக்கறே, நீ யாரு வீட்டு பையன் ?

சுப்பிரமணி: ஐயா இவரு மருது ஐயா வீட்டிலே இருக்காரு, வேலை எல்லாம் எதுவும் செய்யலை. இப்போதான் முதல்லே வேலைக்கு வராரு.

முதலாளி: ஏன் அவரு பேசமாட்டாருங்களா? மருது ரொம்ப நல்லவரு. அவங்க வீட்டிலே நீ என்னடா செய்யறே?

வைகை: எங்க அக்காவைதான் அவுரு கெட்டி இருக்காரு.

முதலாளி: அப்படியா சரி மருது மச்சான்கரதுனாலே வேலை தரேன். ஒழுங்கா இருக்கணும். போ போய் வேலையை பாரு. பையன் என்ன வேலைன்னு சொன்னானா?

வைகை: சொன்னான்... சொன்னான்.

முதலாளி:போ.. போ, போய் வேலையை பாரு.

சுப்பிரமணி: அண்ணே வாங்கண்ணே உள்ளே போகலாம்.

வைகை: என்னடா இது இங்கே ஒரே வேர்கடலையா கொட்டி கிடக்குது அய்யோ அய்யோ எங்க அக்கா மகளுக்கு வேர்கடலைன்னா ரொம்ப பிடிக்குமே, இங்கேயாடா நீ வேலை செய்யறே, இத ஒடைக்காமே, ஏன்டா கல்லெ ஒடைக்கறே?

சுப்பிரமணி: இதாண்ணே கல்லெ

வைகை: வேணாண்டா வீணா என்கிட்டே அடி திங்காதேடா, வாயை மூடுடா, கடலையைப்போய் கல்லே கல்லேன்னு, லூசுபயலே. இது கடலைடா. என்ன ரொம்ப திட்டிடோமோ, பையன் ரொம்ப கோவமா பாக்குறான். சரிடா, சரிடா, வா உள்ளே போகலாம்.

சுப்பிரமணி: அண்ணே இந்த வேலை பிடிச்சிடுச்சாண்ணே.

வைகை: அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது. அப்புறமா சொல்லறேன், அட என்னாடா பொண்ணுங்கல்லாம் இருக்காங்க?

சுப்பிரமணி: ஆமாண்ணே அந்த அக்கால்லாம் இங்கேதான் வேலை செய்யறாங்க, கங்காக்கா, கங்காக்கா இங்கே பாருங்க நான்தான்க்கா சுப்பிரமணி. அக்கா இவரு வேலண்ணே. இங்கே வேலைக்கு சேந்திருக்காரு.

வைகை: பேரு என்னா கங்காவா? ரொம்ப நல்லா இருக்கே

கங்கா: ஆமா, உள்ளே வாங்க

வைகை: அவ வீட்டுக்கு போனா கூப்பிடற மாதிரயே கூப்பிடறாளே. இவளை எப்படியும் கணக்கு பண்ணிடவேண்டியதுதான். ஆத்தி என்னா எம்புட்டு பொம்பள பிள்ளங்கோ இருக்காங்கோ, ஊரு, ஊரா சுத்தினியே வேலு இங்கிட்டு வேலைக்கு வந்திருக்க கூடாதா. இவ்வளவு நேரம் செட்டில் ஆகி இருக்கலாமே.

கங்கா இங்கே வா. இப்படி வந்து உக்காரு, கடலை உடைச்சு, உடைச்சு இரண்டு கையும் ஒரே காச்சு போய்டுச்சே. இந்த முதலாளி படுபாவி இப்படி வேலை வாங்கி இருக்கானே. மரக்காவாலே நடு மண்டைலே நச்ன்னு ஒரு போடு போடணும். சரி உங்கப்பா என்னா செய்யறாரு?

சுப்பிரமணி: அண்ணே முதலாளி வர்ற நேரம் வேலை செய்யுங்கண்ணே, பார்த்தா திட்டுவாருண்ணே

வைகை: போடா, போடா நீ ரொம்பா சின்ன பையன், எனக்கு எல்லாம் தெரியும்.

முதலாளி: என்னடா தெரியும் வேலைய பாருன்னா, பொம்பளை பிள்ளைங்க கிட்டே வம்பா பண்ணறே. இப்பத்தான் உன் மாமாவே பாத்துட்டு வரேன். அவரு சொன்னாரு அவனே கிட்டே சேக்காதிங்க, அங்கே வேலை செய்யறவங்களையும் கெடுத்து, உங்க தொழிலையும் ஊத்தி மூடிடுவான்ன்னு சொன்னாரு, இங்கே வந்து பாத்தால் தானே தெரியுது உன் வண்டவாளம். நீ வேலை பார்த்தது போதும் போ போ வெளியே. டேய் யாருடா அங்கே, முறைக்கிற இவனை கழுத்தை பிடிச்சு தள்ளுடா. ஏதோ பெரிய வீட்டு பிள்ளைன்னு வேலை கொடுத்தா, இது பண்ணற வேலைய பாரு.

வைகை: சுப்பிரமணி சொன்னானேன்னு வந்தேன், ரொம்ப பேசிட்டீங்க, வெளியே வாங்க.

முதலாளி: என்னடா பண்னுவே வெளியே வந்தா, டேய் அந்த நாயை அவுத்து விடுடா, பாரு எப்படி முறைக்கிறான், வேலைக்கு வந்தானாம் வேலைக்கு , வேலை செய்யற மூஞ்சியை பாரு அப்படியே திருடணாட்டம் முழிக்கிறான்.

வைகை: போறோமில்லே, இங்கே யாரு வேலை செய்வா, ஆத்தி நாயி வேறே ஓடி வருதே, இவனும் அது மாதிரியே முறைக்கிறானே......

முதலாளி: இன்னுமா நீ போகலே ?

வைகை: வரதெரிஞ்சவனுக்கு போகத்தெரியாதாக்கும், போவோமில்லே...


பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் ஒட்டு போடுங்கோ



Tuesday, December 2, 2008

முனிவரும் அவர்தம் சகாக்களும்...

முனிவர் ஒருவர் தம் சகாக்களுடன் ஒவ்வொரு இடமாக சுற்றி திரிந்து, அலைந்து, கடைசியில் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து இளைப்பாறி கொண்டிருந்தார். வாசலில் யாரோ சிலர் பேச்சு குரல் கேட்கிறதே என்று வீட்டு சொந்தகாரர் வந்து பார்த்தால், அங்கே சில முனிவர்கள் மிகவும் களைப்பாக அமர்ந்து இருதனர்.

நம்ப ஆளோ பெரிய சிவ பக்தர்.

அவர்களை கண்ட பக்தர் பதறி போய், சாமி ஏன் வெளியே அமர்ந்து விட்டீர்கள். உள்ளே வாங்க ஏதாவது தாக சாந்தி அடைய ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு. தம் மனைவியை அழைத்தார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சகல மரியாதையுடன் முனிவர்களை உள்ளே அழைத்து சென்றார்கள்.

மோர் அருந்தி சற்று ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். உங்களை பார்த்தால் மிகவும் களைத்து காணப்படுகிறீர்கள். சிறிது நேரத்தில் சமையல் முடிந்து விடும். இன்று எங்கள் இல்லத்திலேயே சாப்பிடுங்கள் என்றார் பக்தர். அதற்கு அந்த முனிவர் இல்லையப்பா, எனக்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது, நாங்கள் உடனே செல்லவேண்டும், நீ தக்க நேரத்தில் தாகத்திற்கு மோர் கொடுத்ததே போதும். அதற்கே நாங்கள் மிகவும் சந்தோசம் அடைகிறோம் என்றார். இல்லை இல்லை நீங்கள் அனைவரும் இன்று எங்கள் இல்லத்தில் சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும். சாப்பிட்ட பின் உங்கள் யாத்திரயை தொடரலாம் என்று பக்தன் வேண்டுகோள் விடுத்தார்.

வேறு வழி இல்லாமல் முனிவர்கள் சாப்பிட சம்மதித்தார்கள். சமையல் ரெடி ஆனது. சாப்பிட அனைவரும் அமர்ந்து விட்டனர். வடை, பாயாசத்துடன் சாப்பாடு பரிமாறப்பட்டது. நல்ல பசி என்று கூறவிட்டு தலைமை முனிவர் சாப்பிட ஆரம்பித்தார், சக முனிவர்களும் கடும் பசியுடன் இருந்ததால் வேகமாக சாப்பிட்டார்கள்.

எல்லாம் முடிந்தது, வெற்றிலை பாக்கு உபசாரம் நடந்தது. வேண்டாம் என்று சைகையில் முனிவர்கள் கூறி விட்டனர்.

பக்தனும் அவர் மனைவியும் பதறிபோய் விட்டனர். ஏ சாமி சாப்பாடு நல்லா இல்லையா? தவறு செய்துவிட்டூமா? மன்னித்து விடுங்கள் சாமி என்று கூறி கலங்க ஆரம்பித்துவிட்டனர்.

இதை பார்த்து அதிர்ந்த முனிவர் இல்லை என்று தலை அசைத்து விட்டு பேச ஆரம்பித்தார்.

" ரஜம் பாவஜம் பொகு ஜொகுஜு ஆனா கொந்ஜம் ஜூடு "

பக்தர் மற்றும் மனைவிக்கு ஒன்று புரியவில்லை.

நண்பர்களே உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.......

பின் குறிப்பு : "ரசம் பாயாசம் பொகு ஜோர், ஆனா கொஞ்சம் சூடு" இதைதான் அப்படி ஒரு மழலையில் கூறினார் நம் முனிவர். நல்ல பசி சாப்பாடு சூடாக இருந்தது கூட கவலைப்படாமல் சாப்பிட்டதால் நாக்கு மேல்லண்ணத்தில் ஒட்டி கொள்ள எங்கே பேச்சு வரும் அதுதான் அந்த மழலை.

Friday, November 28, 2008

பெற்றோர்கள் சிந்திக்க.....

இது ஒரு உண்மை சம்பவம். மிகவும் பரசித்தி பெற்ற ஒரு பள்ளி. அதில் 6 வயதே நிரம்பிய ஒரு சிறுவனின் கண்ணீர் சம்பவம் என் காதுகளுக்கு எட்டியது.

அந்த பள்ளியில் ஒரு சிறுவனன் 1 ஆம் வகுப்பில் படித்து வருகிறான். அவன் பெயர் ராஜா என்று வைத்துக்கொள்ளுவோம். ராஜா சுமாராக படிக்கும் மாணவன் என்று கூறினார்கள். படிப்பது முதல் வகுப்பு இதில் சுமார் என்ன, சுமார் இல்லாமல் என்ன? எப்போதும் சுமாராக மதிப்பெண்கள் வாங்கும் நம் ராஜா கடந்த மாதந்திர தேர்வில் எல்லா பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் நூற்றுக்கு தொன்னுத்தொன்பது மதிப்பெண்கள் வாங்கி
உள்ளான். இதை பாராட்டும் வகையில் ராஜாவின் வகுப்பூ ஆசிரியை அவர்கள், ராஜாவை ஊக்குவிக்கும் வகையில், V.Good and * * * இப்படி மூன்று ஸ்டார்கள் வழங்கி இருக்கிறார்கள். ராஜாவிற்கோ சந்தொஷம் மகிழ்ந்திருக்கிறான், தலை கால் புரியவில்லை. ஒவ்வொரு பாடம் கற்பிக்க வரும் ஆசிரிகைகளிடம் காண்பித்து, அவர்களும் ராஜாவை பாராட்டி கொஞ்சி அனுப்பி இருக்கிறார்கள். இவைகள் அனைத்தும் மதிய உணவு வேளை வரை தொடர்ந்து நடந்திருக்கிறது.

மதிய உணவு இடைவேளை முடிந்து, அடுத்து வந்த ஆசிரியையிடம் ராஜா, மிஸ் நான் 3 ஸ்டார்கள் வாங்கிஇருக்கிறேன் என்று காட்டி உள்ளான். அந்த ஆசிரியையும் அந்த மதிப்பெண் வாங்கிய தாளை வாங்கி பார்த்திருக்கிறார்கள். ஆனால் அந்த மதிப்பெண் தாளில் ராஜாவின் பெயர் மற்றும் அவன் வாங்கிய மதிப்பெண்கள் 66 என்று இருந்திருக்கிறது. அந்த ஆசிரியைக்கு ஒன்றும் புரியவில்லை. 66 மதிப்பெண்களுக்கு எல்லாம் ஸ்டார்ட்ஸ் போட மாட்டங்கப்பா. நீ அடுத்த முறை நல்லா படித்து, நல்ல மதிப்பெண் வாங்கினால் அப்போ உனக்கு நிறைய ஸ்டார்ஸ் எல்லாம் போடுவாங்க, இப்போ நீ போய் உன் இடத்தில் உட்கார் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் ராஜாவோ அய்யோ என் ஸ்டார்ஸ் எல்லாம் காணாம போய்டுச்சு. மிஸ் என் ஸ்டாட்ஸ் எல்லாம் வேணும், என் ஸ்டார்ட்ஸ் என்று விடாமல் அழுதிருக்கிறான். உடனே அந்த ஆசிரியை நல்ல புத்திமதிகள் கூறி
அவனை போய் இடத்தில் அமர சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ராஜா அதை கேட்காமல் ஸ்டார்ஸ் ஸ்டார்ஸ் என்று அழுததினால், ராஜாவின் வகுப்பாசிரியையை அழைத்து விபரம் கேட்டு இருக்கிறார்கள். வகுப்பு ஆசிரியையும் ஆமாம் மிஸ் அவன் 99 மதிப்பெண்கள் தான் ஒரு பாடத்தில் வாங்கி இருந்தான். நான்தான் அவனுக்கு 3 ஸ்டார்ஸ் போட்டேன், ஆனால் எப்படி ராஜாவின் மதிப்பெண்கள் 99 என்பது 66 ஆக மாறியது என்று ஒன்றும் புரியாமல் விளித்திருக்கிறார்கள். பிறகு மதிப்பெண் register ஐ சரிபார்த்திருக்கிறார்கள். அதில் ராஜாவின் மதிப்பெண் 99 ஆகத்தான் இருந்திருக்கிறது. எப்படி என்று மறுபடியும் வகுப்பிற்கு வந்திருக்கிறார்கள். ராஜாவின் முன்னால் ஒரு சிறு பெண் குழந்தை (அதே 6 வயது, பெயர் மாதவி என்று வைத்துகொள்ளுவோம்) அமர்ந்திருக்கிறாள். அவளின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆனால் மதிப்பெண் பட்டியலில் 66 என்று இருதிருக்கிறது. அனால் கையில் வைத்திருக்கும் மதிப்பெண் தாளில் மாதவியின் பெயருக்கு கீழ் 99 என்று இருந்துள்ளது. வகுப்பு ஆசிரியைக்கு ஒன்றும் புரியவில்லை. மாதவியை அருகே அழைத்து நீ வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு மாதவி எந்தவித தயக்கமும் இல்லாமல் 99 நான் தான் 99 வாங்கி இருக்குறேனே. என்று மதிப்பெண் தாளை கண்பித்துஇருக்கிறாள்.

இந்த வயதில் ஒரு பயம் இல்லாமல் இந்த பெண் இவ்வாறு கூறியது யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்த்திருக்கும் என்று கேள்வியுடன், மாதவியை முதல்வரிடம் அழைத்து சென்றிருக்கிறார்கள். முதல்வருக்கு செல்லும் முன்பே விபரம் அறிவிக்கப்பட்டது. அதனால் முதல்வர் மிகவும் அன்புடன் மாதவியை தன்னிடம் அழைத்து, என்னடா கண்ணா உன் மதிப்பெண் தாளை uncle க்கு காட்டும்மா, என்று கேட்டிருக்கிறார். அவளும் மதிப்பெண் தாளை மிகவும் மகிழ்ச்சியுடன் காட்டி இருக்கிறாள். அதில் எல்லா மதிப்பெண்கள் கூட்டுத்தொகை சரியாக 99 என்று இருதிருக்கிறது. நீ வாங்கினதா என்று அன்புடன் விசார்த்திதிருக்கிறார். மாதவி ஆமாம் uncle நான்தான் வாங்கி இருக்கிறேன் என்று கடுகளவு கூட தயங்காமல்
சொல்லி இருக்கிறாள். பிறகு முதல்வர் இனிப்பு, பரிசுகள் எல்லாம் கொடுத்து மதிப்பெண்களை பற்றி விசார்த்திருக்கிறார். எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு, நான் 99 வாங்கி இருக்கிறேன் என்று மறுபடியும் அதே தான் கூறி இருக்கிறாள். ஒன்றும் கூறாமல் மாதவியயை அனுப்பி விட்டு. தவறு எப்படி நடந்திருக்கு என்று கண்டுபிடிக்குமாறு வகுப்பாசிரியைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நடந்தது என்ன?

மதிய உணவு இடைவேளைக்கு அனைவரும் சென்றிருந்த நேரத்தில், மாதவி ராஜாவின் விடைத்தாளில் உள்ள ராஜாவின் பெயரை அழித்துவிட்டு, அதில் தன் பெயரை எழுதி, தன் விடைத்தாளில் தன் பெயரை அழித்துவிட்டு ராஜாவின் பெயரை எழுதி இருக்கிறாள் என்று கண்டுபிடித்து விட்டார்கள். மறுபடியும் மாதவியை கூப்பிட்டு விசாரித்தால், அப்போதும் அதே பதில்தான். இது என்னோட விடைத்தாள் நான் வாங்கிய மதிப்பெண்கள், நான் வாங்கிய 3 ஸ்டார்ஸ் என்று ஆணித்தரமாக கூறிஇருக்கிறாள். முதல்வர் எதுவும் பேசாமல் நாளைக்கு உன் அப்பா மற்றும் அம்மாவை அழைத்து வா என்றிருக்கிறார். பிறகு ஏன் இந்த பெண் இவ்வாறு செய்துள்ளது என்று தீர விசாரித்ததில், கிடைத்த உண்மை என்னவென்றால்? மாதவியின் பெற்றோர்கள் அவள் குறைந்த மதிபெண்கள் வாங்கும்போதெல்லாம் அவளுக்கு ஒரே திட்டு ஒரே அடியாம். அடி வாங்கி வாங்கி ஒரே ஒரு நண்பியிடம் சொல்லி
அழுவாளாம். அந்த நண்பி குழந்தையும் ஒன்றும் புரியாமல், அழாதே என்று கூறுவாளாம். இதை விசாரிக்குபோது அந்த சிறு குழந்தை கூறி இருக்கிறது. பிறகு அவர்கள் வீட்டு பக்கத்தில் குடித்தனம் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளார்கள். அவர்களும் அந்த குழந்தையை எப்போதும் அடிப்பார்கள். ஏன்னு கேட்டால் சரியா படிக்க
மாட்டேன்கிறாள் என்பார்களாம். இதை கேட்டு எனக்கு திக் என்று இருந்தது.

6 வயது என்பது ஒரு வயதே அல்ல. சில குழந்தைகள், சிறு குழந்தையாக இருக்கும்போதே நன்றாக படிக்கும் அறிவை பெறுகிறார்கள், சில குழந்தைகள் மெதுவாக நன்றாக படித்து விடுவார்கள். குழந்தைகள் ஏற்கனவே புத்தக மூட்டைகளை சுமந்து மிகவும் சொல்லவொண்ணா துயரத்தில் இருக்கிறாரகள் என்று தான் என் கண்ணோட்டத்தில் தெரிகிறது.
இது தவறாகவும் இருக்கலாம்.

6 வயதில் நல்ல மதிபெண் வாங்கவில்லை என்று அடித்ததில் அந்த சிறு குழந்தையின் போக்கு எவ்வளவு அபாயகரமாக மாறி இருக்கிறது பார்த்தீர்களா? குழந்தைகள் படிக்கவேண்டும் என்று கண்டிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். அதற்கு எவ்வளவோ வழி முறைகளை பெற்றோர்கள் கையாளலாம் அல்லவா ?

பெற்றோர்களின் இந்த செய்கை அந்த பிஞ்சு குழந்தையின் மனதை எவ்வளவு மோசமான முறையில் மாற்றி உள்ளது பார்த்தீர்களா? இது ஒரு கெட்ட செயலாகவும் இந்த சமுதாயத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது அல்லவா?

தயவு செய்து தாய்மார்களே, தந்தைமார்களே இது போன்ற நடவடிக்கைகளை குறைத்து கொள்ளவீர்கள் என்று நம்புகின்றேன்.

அந்த குழந்தைக்கு எந்த வித மன உளைச்சலும் ஆகாமல் பள்ளி நிர்வாகம் கவனித்து வந்துள்ளது என்பதை நான் மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

இது போல் பல மாதவிகள் வளராவண்ணம் பார்த்துகொள்வோமாக!!

ரம்யா

Wednesday, November 26, 2008

வைகைபுயலும் பார்த்திபனும்

வைகை: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளி வரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே, ஹேய் என்னதான் நடக்கும்ம்ம்ம், அடுத்த வரி என்னா, மறந்து போச்சே, என்னதான்....

பார்த்திபன்: டேய், டேய் வேலு இங்கே வாடா, வாடான்னா போய்கிட்டே இருக்கே?

வைகை: ஆத்தி இவரா, இங்க என்னா பண்னறாரு, மாட்டுனோம்னா கிண்டி கிழங்கு எடுத்து, நோன்டி நொங்குஎடுத்துருவாறே ம் என்னா செய்யலாம், கூப்பிடறாரே காதுலே விழாதமாதிரி போய்ட்டா என்னா ம்ம்ம், சரி இன்னொருதடவை கூப்பிடட்டும்.

பார்த்திபன்: கிட்ட வந்து தலையில் தட்ட,

வைகை: எனப்பா தலையிலே அடிக்கிறே ?

பார்த்திபன்: பின்னே என்னடா கூப்பிட்டா வரமாட்டியா, என்னா அப்படியே எருமை மாடு மாத்ரி நிக்கறே. உனக்கெல்லாம் அவளளவு ஏத்தம் ஆயிடுச்சு இல்லே?

வைகை: என்னாப்பா நானு எதோ யோசனையா போய்கிட்டு இருந்தேன். நீ கூப்பிட்டதை சத்தியமா கவனிக்கலைப்பா.

பார்த்திபன்: சரி எத்தனை அப்பா போடுவே ? என்னா பேச்சு இது? உனக்கு எவ்வளவு சொன்னாலும் ஒன்னும் புரியாத எருமையாட நீ?

வைகை: ஏப்பா எப்ப பார்த்தாலும் திட்டிகிட்டே இருக்கே. நான் என்னப்பா பண்ணினேன் உன்னைய?

பார்த்திபன்: மறுபடியும் அப்பாவா? சரி அதென்ன கண்ணுலே கருப்பு கண்ணாடி?

வைகை: கைதட்டிபடி, ஹையோ ஹையோ இது கூடவா உனக்கு தெரியாது? இதைதான் கூலிங்க்ளாஸ்ன்னு சொல்லுவாங்க.

பார்த்திபன்: யாரு சொல்லுவாங்க?

வைகை: எல்லாரும் அப்படித்தான்பா சொல்லுவாங்க.

பார்த்திபன்: எல்லரும்ன்னா யாரெல்லாம்?

வைகை: எல்லாரும்னா எல்லாரும் தான்

பார்த்திபன்: கேட்ட கேள்விக்கும் மட்டும் பதில் வரணும், தெரியுதா தேவை இல்லாமே கொக்கரிக்கக் கூடாது.

பார்த்திபன்: அதே எதுக்கு கண்ணிலே போட்டிருக்கே?

வைகை: வேணா மறுபடியும் சொல்லறேன், இத எல்லாரும் போடுவாங்க, நீ ஏதோ என்னைய வம்பிற்கு இழுக்கிற மாதிரி தெரியுது. இது சரி இல்லை.

பார்த்திபன்: நான் எங்கே இருக்கிறேன், உனக்கும் எனக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கு சொல்லுடா.

வைகை: ம்ம்ம் ஒரு 10 அடி இருக்கும்.

பார்த்திபன்: அப்புறம் நானு உன்னையே எப்படி இழுக்க முடியும்.

வைகை: என்ன இவன் என்னா பேசினாலும் ஒரு கொக்கி போடறானே, இவனை எப்படி சமாளிச்சு இடத்தை காலி பண்ணறது, வகையா சிக்கிட்டோமோ? கடவுளே காப்பாத்தப்பா, காலைலே கோவில் வாசல்லே கண்டெடுத்த 10 ரூவாயிலே ஒரு 2 ரூவா உன் உண்டியலில் போட்டுடறேன். என்னைய இவன் கிட்டே இருந்து காப்பாத்து.

பார்த்திபன்: என்னா நான் கேட்டுகிட்டே இருக்கேன், ஒன்னும் பதிலே இல்லே, தனியா பேசிக்கிறே, நீ என்னா லூசா?

வைகை: என்னாப்பா கேட்டே, எனக்கு ஒரே குழப்பமா போயிடுச்சு?

பார்த்திபன்: அதான் லூசான்னு கேட்டேன்.

வைகை: வேண்டாம்ப்பா ரெம்ப கேவலமா பேசறே, என் மாமன் பொண்ணுங்க வர நேரம், நான்தான் துணைக்கு வீடு வரை போகணும். என்னைய விட்டிரு.

பார்த்திபன்: நான் என்னா உன்னைய பிடிச்சா வச்சிருக்கேன்? உன்னைய கடத்திக்கொண்டா வந்திருக்கேன்? ஏண்டா இப்படி எல்லாம் உளர்றே.

வைகை: என்னது உளர்றறேனா? ஏம்ப்பா டார்ச்சர் பண்ணறே, சரி உன் கேள்வி என்னா?

பார்த்திபன்: நான் என்னா உனக்கு பரிச்சையா வைக்கிறேன். என்னா கேள்வின்னு கேக்கறே? அறிவுகெட்ட முண்டம். எதுக்கு கூலிங்க்ளாஸ் போட்டிருக்கே ?

வைகை : அதெல்லாம் ஒன்னும்மில்லேப்பா கண்ணுக்கு கொஞ்சம் குளிர்ச்சியா இருக்கட்டுமேன்னுதான் போட்டிருக்கிறேன்.

பாத்திபன்: குளிர்ச்சியா, அப்படீன்னா?

வைகை : அடிக்கிற வெயிலுக்கு அப்படியே குளுகுளுன்னு இருக்கும். அவ்வளவுதான்.

பார்த்திபன்: அதெப்பிடி குளுகுளுன்னு இருக்கும், கண்ணாடி உள் பக்கம் ஐஸ் ஓட்ட வச்சிருக்கியா? சொல்லுடா, சொல்லுடான்னா

வைகை: என்ன இவன் இப்படி கேள்வி கேட்டே அலம்பல் பன்னரானே எப்படி சமாளிக்கிறது, வசமா மாட்டிகிட்டோம்ன்னு மட்டும் தெரியுது, தப்பிக்க தான் தெரியலை.

பார்த்திபன்: கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் என்னடா திரு திருன்னு முழிக்கிறே.

வைகை: இல்லேப்பா உனக்கு இப்படி புரியவைக்கிறதுன்னு எனக்கு புரியலை.

பார்த்திபன்: நான் என்ன உன்னைய மாதிரி லூசா, சொல்லு எனக்கு எல்லாம் புரியும்.

வைகை: கூலிங்க்ளாஸ் போட்டா வெயில் தெரியாமே கண்ணுக்கு குளுமையா இருக்கும். அதான்பா போட்டிருக்கேன்.

பார்த்திபன்: அதென்னடா அதுலே A.C . பொருத்தி வச்சிருக்கே, குளுமையா இருக்கிறதுக்கு. நொள்ளைக்கண்ணு இருந்தாதான் இதை போடுவாங்க.

வைகை: அது சரி கேள்வி எலாம் பெரிசாத்தான் இருக்குது. நீ ஏம்ப்பா கூலிங்க்ளாஸ் போட்டிருக்கே ?

பார்த்திபன்: நான் நல்லா படிச்சவன், என் persanolity க்கு இது எடுப்பா இருக்குதுன்னு கூலிங்க்ளாஸ் போட்டிருக்கேன்.

வைகை : persanolity அதுவும் இவருக்கு, இருக்கட்டும் இருக்கட்டும், எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ உன்னைய பேசிக்கிறேன்.

பார்த்திபன்: என்னடா முறைக்கிறே. தானே முனுமுனுக்கிரே

வைகை: அதெல்லாம் சரி, கேள்வி எல்லாம் நல்லாத்தான் கேக்குறே, உனக்கு வேலே வெட்டி எதவும் கிடையாதா?

பார்த்திபன்: அதென்னடா வேலை - வெட்டி, சொல்லுடா

வைகை : வேலைன்னா வேலை வெட்டின்னா......

பார்த்திபன்: பேசத்தெரியாத லூசுதாண்டா நீ, கேள்விக்கும் பதில் சொல்ல தெரியாத பரதேசிதாடா நீ, போ போ எங்காவது போய் தொலை, என் முன்னாடி இதெல்லாம் போட்டுக்கிட்டு வந்து நிக்காதே. பயமா இருக்குது.

வைகை: லூஸ் அதுவும் நானு, நல்லா இருப்பா ரொம்ப நல்லா இரு, வந்துட்டானுங்க காலைலே வம்புக்கின்னே. அப்பா தப்பிச்சோம், சரி நம்ப பாட்டை தொடரலாம். அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே,.....

பார்த்திபன்: என்னா சத்தம் இன்னும் நீ போகலையா ?

வைகை: இல்லேப்பா போய்கிட்டு தானே இருக்கேன்......

ரம்யா


நல்லா இல்லைன்னாலும் ஓட்டு போடுவீங்க

Saturday, November 22, 2008

சிறுவனும் வைகைபுயலும்

வைகை: என்ன தான் சும்மா இருந்தாலும் எல்லா பயலுகளும் நம்பளை கேவலமா பார்க்கிற மாதிரியே தெரியுதே. இல்லே நம்மக்குதான் அப்படி தெரியுதோ? இல்லையே நம்ப கண்ணு நம்மளை ஏமாத்தாதே. இன்னைக்கு யாரு கிட்டேயும் சிக்காம நல்ல படியா வீ டு திரும்பனும். வெளியே கிளம்பும்போதே அக்கா திட்டிச்சு.

சிறுவன்: படிப்பு வராமல் சுற்றிக்கொண்டு இருக்கிறான். தினமும் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் ஒரே அடி உதைதான். மைதானத்தில் போயி தினமும் என்னா வெளையாட்டு தானாவே விளையாடறது. துணைக்கு ஒரு பயலுகளும் இல்லை. எல்லாரும் பள்ளிக்கூடத்திற்கு போயிடறாங்க. ம் என்ன செய்யறது? யோசித்து கொண்டே வருபோது நம் வைகை புயல் கண்ணுலே படறாரு. அவனுக்கு நம் வைகை புயலை பார்த்து ஒரு சந்தேகம் வந்து விட்டது. எப்ப பாரு இப்படி சுத்திகிட்டு அளும்பு பண்ணராரே. எப்படி அவராலே மட்டும் முடியுதுன்னு கேப்போம். கோவம் வந்து அடிச்சுப்புடுவாரோ? உகும், சேச்சே பார்க்க அப்படி எயல்லாம் ஒன்னும் தெரியலை. கொஞ்சம் நல்லவராத்தான் தெரியுது. கேட்டு பார்க்கலாம். இவரை பற்றி நம்ம அக்கா அம்மாவிடம் வெட்டியாவே திரியற ஒரு ஜென்மம்ன்னு சொல்லி சிரிச்சுது இல்லே. நம்பளோ சின்ன பையன், ஏதேனும் கேள்வி கேட்டா நம்மளை மதிச்சி பதில் சொல்லுவாரா? என்ன பண்ணலாம்? எதுக்கும் கேட்டு பார்க்கலாம்.

சிறுவன்: அண்ணே , அண்ணே, அண்ணே கொஞ்சம் நில்லுங்கண்ணே. என்று கூப்பிட்டான்.

வைகை: யாரோ நம்மளை அன்பா கூப்பிடற மாதிரி கேட்குதே. ம்கும் அதெல்லாம் ஒன்னும் இருக்காது. ஒரு பய நம்பளை மதிக்கமாட்டேன்கிறான். ஏன் நம்ம தெரு நாய் கூட காறி துப்புற மாதிரி
பாக்குது. முனகிக் கொண்டே நடக்க, மறுபடியும் குரல் கேக்டவே திரும்பி பார்த்த நம் வைகை புயல், அட இங்கே பாருய்யா, ஒரு பையன் நம்மளை நிஜமாகவே கூப்புடறான். என்ன ராஜா, எனையதான் கூபிட்டயா. சரி சீக்கிரம் சொல்லு. எனக்கு அவசரமா ஒரு வேலை இருக்கு.

சிறுவன்: அண்ணே இல்லைண்ணே

வைகை: என்னடா நோள்ளண்ணே சொல்லித்தொலை.

சிறுவன்: இல்லைண்ணே வந்து, வந்து

வைகை: என்னடா மறுபடியுமா? தாங்கமுடியலைடா சொல்லி தொலையேண்டா. சொல்லு, சொல்லு.

சிறுவன்: எண்ணே அவசரமா ஒரு வேலை இருக்குன்னு பொய் சொல்லறிங்க. எனக்கு எல்லாம் தெரியும்ண்ணே, ஊரிலேயே ரொம்ப சோம்பேறித்தனமா சுத்திக்கிட்டு திரியறளையாமே. அது உண்மையாண்ணே ?

வைகை: யோசனையுடன், இவன் நம்மளை பத்தி எல்லா வெவெரமும் தெரிஞ்சுகிட்டுதான் வம்பிற்கு இழுக்கிறான். என்ன இவன் என்னவோ குருகுருன்னே பாக்குறானே. நாம என்னோவ வெட்டிமுரிக்கிற மாதிரி. இருக்கட்டும், இருக்கட்டும் எதுக்கும் கேட்டு வைப்போம். ஏன்டா காலையிலே எந்த வேலையும் இல்லாமல் திரியறவனா நிய்? இன்னைக்கு நான் தான் உனக்கு கிடைச்சேனா. சரி, என்ன சந்தேகம்? சொல்லு சொல்லு சொல்லு.

சிறுவன்: நீங்க தண்ட சோறு தின்னுகிட்டு ஊர்ல வம்பு வளத்துக்கிட்டு இருக்கீங்களாம். அதனாலே உங்க கிட்டே எதுவும் பேச கூடாதுன்னு எங்க வீட்டலே சொல்லராங்கண்ணே. நீங்க அப்படியாண்ணே?

வைகை: இவன் இப்படி நம்மளை போட்டு டார்ச்செர் பான்னறானே. இவனை ஆரம்பத்திலேயே ஆப் பண்ணிடனும். இதே வேலையா திரியறாங்க போல இருக்கே. இந்த பேரு மாறனும்னா நாம ஏதாவது சென்ஜாகனுமே. என்ன செயலாம். ம்ம்ம்ம்ம்

சிறுவன்: அண்ணே நானு கேட்டதிற்கு ஒன்னும் பதிலே சொல்லலியேண்ணே. அண்ணே கோவிச்சுகாதிங்கண்ணே. எனக்கு படிப்பு வரலை. படி படின்னு எங்க வீட்டிலே என்னை ஒரே டார்ச்சர்
பண்ணறாங்க. நானும் உங்களோட சேர்ந்துட்டா நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல பொழுது போய்டும்ண்ணே, நானும் உங்களோட சேர்ந்திக்கிறேன்ண்ணே. அண்ணே அண்ணே.

வைகை: என்னடா ஏதோ கச்சியிலே சேரமாதிரி சொல்லறே. நான் இன்னும் அதெல்லாம் ஆரம்பிக்கலைடா. போட போ பள்ளிக்கூடம் போய் படிக்கிற வழியை பாரு. ஆளுங்களையும், முஞ்சிகளையும் பாரு. வந்துட்டானுங்க, கூட்டாளி வேணுமாம் கூட்டாளி. நானே ஏதோ அக்கா வீட்டில் குப்பை கொட்டிகிட்டு இருக்கேன். சரியான கேனப்பயலா இருப்பான் போல. பாக்குற எல்லாரும் நம்ப பேரை கெடுக்கனும்ன்னே பிறவி எடுத்து அலயரமாதிரி தெரியுது. இருக்கட்டும், இருக்கட்டும். இவனுகளுக்கு சரியான பாடம் சொலலித்தரனும்.

சிறுவன்: என்னண்ணே, நான் கேட்டதுக்கு ஒன்னும் பதிலே சொல்லலே. சொல்லுங்கண்ணே. நானும் உங்ககூட சேந்துக்கவா. நாம ரெண்டுபேரும் யாருக்கும் தெரியாம வேறே எங்காவது போய் எல்லா விளையாட்டும் விளையாடலம்ண்ணே. நீங்களும் யாரு கிட்டேயும் இதே சொல்லாதிங்க, நானும் யாருகிட்டேயும் சொல்லைண்ணே.

வைகை: யோசனையுடன் நிற்க

சிறுவன்: உங்களை பத்தி எங்க வீட்டிலே பேசிகிட்டு இருந்தாங்கண்ணே. அப்புறம்தான் உங்களை பத்தி எனக்கு தெரயும்ண்ணே. என்னைய உங்க நண்பனா செத்துககுங்கண்ணே.அண்ணே சொல்லுங்கண்ணே, அண்ணே சொல்லுங்கண்ணே

வைகை : நீ பெரிய K.P. சுந்தரம்பா அம்மா. உனக்கு டக்கு டக்குன்னு பதில் சொல்லானுமா. என்ன கேள்வி கேக்குறே. உங்க வீட்டிலே என்னை பத்தி எல்லாம் ஏன்டா பேசறாங்க?

சிறுவன்: இல்லேண்ணே, எங்க அக்காதான்.

வைகை: என்ன அக்காவா உனக்கு அக்காவெல்லாம் இருக்காங்களா. இத ஏன்டா மோதவே சொல்லை. கிறுக்கு பயபிள்ளே. சரி சரி நானு உன்னே எதுனாச்சும் திட்டுனேனா.

சிறுவன்: இல்லேண்ணே, சும்மாதானே பேசிகிட்டு இருக்கோம். நீங்க எப்பிடிண்ணே என்னைய திட்டமுடியும்? நானு அதை கேட்டு சும்மாவா விட்டுவிடுவேன், என்னை யாரவது கோவம் வரமாதிரி பேசினால், கட்ச்சிடுவேண்ணே, ஆனா உங்களை ஒன்னும் செய்யமாட்டேன், சும்மா வம்புக்குத்தான் பேச ஆரம்பிச்சேன், ஆனா உங்களை எனக்கு ரொம்ப பிடிசிடுச்ச்சுண்ணே. அதெல்லாம் சரிண்ணே, நானு கேட்டதிற்கு பதில் சொல்லுங்கண்ணே.

வைகை: என்னடா மிரட்டரமாதிறியே பேசறே. என்ன கேட்டாலும் பதில் சொல்லித்தான் ஆகணும். அக்கா இருக்காளே. எப்பிடியாவது இவனை சரிகட்டி, இவன் வழியாவே இவன் அக்காளையும் சரிகட்டிடனும். இவனே கொஞ்சம் சுமாராதான் இருக்கான் இவன் அக்கா எப்படி இருப்பாளோ. எப்படி இருந்தா என்ன, நமக்கும் ஒரு பொண்ணு அமைஞ்சா சரி. இவன் கிட்டே கொஞ்சம் பேசி நெப்பு தெரிஞ்சிக்கலாம். தம்பி உன் பேரு என்னா?

சிறுவன்: என் பேரு சுப்பிரமனிண்ணே, பேச்சை மாத்தாதிங்கண்ணே. இன்னைலே இருந்து நானும் உங்க செட் சரியா.

வைகை: இருடா நான் யோசிச்சு ஒரு முடிவை சொல்லறேன். பொருத்துகோடா, சரி உங்க அக்கா பேரு என்னா?

சிறுவன்: அது எதுக்குன்னே உங்களுக்கு?

வைகை: இவன் என்ன ரொம்ப வெவரமா இருப்பான் போல இருக்கே, என்று வைகை யோசிக்கும்போதே...

சிறுவன்: என்ன ரொம்ப யோசிக்கிரரே விடக்கூடாது இவரை, அண்ணே என்னண்ணே ரொம்ப யோசிக்கிறிங்க, நான் கேட்டதிருக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லை. காயா ? இல்லே பழமா?
சொல்லிபிடுங்கண்ணே.

வைகை: என்ன இவன் அக்காளை பத்தி பேச ஒன்னும் பிடி குடுக்கமாட்டேன்கிரனே என்ன செய்யலாம் .... யோசனையுடன் நிற்க
சிறுவன்: வெட்டியா திரியதுக்கு தானே சேர்த்துக்க சொன்னேன். அதுக்கு போய் இவ்வளவு யோசனயாண்ணே.

வைகை: என்னடா கேக்கறே? ஆள பார்த்தாதான் சின்ன பையன இருக்கே, ஆனா நீ ரெம்பா விவரமான பையனாத்தாண்டா இருக்கே.

சிறுவனின் தந்தை: டேய் சுப்பிரமணி எங்கே என்னடா நின்னு பேசிகிட்டு இருக்கே. பள்ளிகூடத்துக்கு போகலை. இவனே ஒரு போக்கெத்தவன். இவன் கூட ஒனக்கு என்னடா பேச்சு.
வைகை: இங்கே பாருங்க நீங்க உங்க மகனை திட்டுங்க, அடிங்க என்னவேன்னாலும் செய்யுங்க ஆனால் என்னைய பத்தி மட்டும் எதுவும் அனாவசியமாக பேசாதிங்க. அவன்தான் வந்து என்கிட்டே
வம்புக்கு இழுக்கிறான்.

சிறுவனின் தந்தை: என்னடா இதெல்லாம்.

சிறுவன்: அடிக்கதீங்கப்பா அவர்தான் என்னைய கூப்பிட்டு அக்கா பேரை கேட்டாரு.

சிறுவனின் தந்தை: சொன்னியாடா, சொன்னியாடா....

சிறுவன்: அடிக்கதீங்கப்பா, நான் சொல்லுவேனா, சொல்லமாட்டேன்னு சொன்னதும், சரி வாடா விளையாடலாம்னு கூப்பிட்டாருப்பா.

வைகை: சரியான வம்பு பிடிச்ச பையனா இருப்பான் போல இருக்கே, அநியாயத்திற்கு அவன் அப்பாவிடம் மாட்டி விட்டுட்டானே. இவன் நம்பளை என்ன சொல்லபோரானோ இன்னைக்கு யாரு முகத்திலே முழிச்சேனோ தெரியலையே. அக்கா வேற சொல்லிச்சு. இன்னக்கு எதனாச்சும் வம்பு இழுத்துகிட்டு வந்தே அவ்வளவுதான் அடுப்பு மேலே தூக்கி ஒக்கார வச்சிடுவேன். காட்டுக்கு போய் நாலு விறகு வெட்டினாலும் வெண்ணி தண்ணி போட உதவும். இப்படி எல்லாம் சொல்லி திட்டிச்சி. இது மட்டுமா இன்னும் எவ்வளவோ. என்னா ரெண்டு பெரும் நம்மையே பாக்கிறாங்களே, நாம யோசிச்ச நேரத்திலே இன்னும் என்னென்ன போட்டு கொடுத்தானோ, ஐயோ கடவுளே என்னையே காப்பாத்துப்பா. அவன் அப்பா முழிக்கிற முழியே சரி இல்லையே.

சிறுவனின் தந்தை: டேய் இங்கே வாடா

வைகை: என்னது டேயா, மருவாதி, மருவாதி.

சிறுவனின் தந்தை: மரியாதையா உனக்கா, டேய் வாடா இங்கேன்னா, அங்கேயே நின்னுகிட்டு திரு திருன்னு முளிக்கிறயா? என்னடா சொன்னே சுப்பிரமனிகிட்டே.

வைகை: என்ன சொல்லிப்புட்டேன்னு இவ்வளவு கோவமா பேசறீங்க?

சிறுவனின் தந்தை: கிட்டே வாடான்னா, அங்கேயே நின்னுகிட்டு அலம்பலா பண்ணறே? நானே அங்கிட்டு வரேன்.

வைகை: ஆத்தி இவன் என்னைய அடிக்க வரமாதிரி வரான். வடிவேலு ஓட்றா ஓட்றா, இப்படி மனசாச்சி கூறியபடி, பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடிக்கொண்டிருக்கும்போது, எதிரே வந்த தன் மாமா மேல் மோதி நிற்க. ஆத்தி, மாமா, மாமா அது வந்து நா இல்ல அவன்தான்.

மாமா: வீட்டுக்கு வா பேசிக்கிறேன்.

ரம்யா

மொக்கயா இருந்தாலும் ஓட்டு போடுங்களேன்





Sunday, November 16, 2008

சிந்திக்க ரம்யாவின் பங்கு

சிறு பையனும் மரமும்

மிகவும் சிறிய பையன் ஒருவன் ஒரு மரத்த்தடியில் பொம்மைகள் வைத்து விளையாடி கொண்டிருந்தான் .

ஒரு நாள் அந்த பையனுக்கு தான் விளையாடும் விளையாட்டு மிகவும் அலுப்பாக இருந்தது. அதனால் எனக்கு இந்த விளையாட்டு மிகவும் bore அடிக்குது. என்ன செய்யலாம் என்று அந்த மரத்திடம் கேட்டான்.

கேள்வயும் பதிலும் உங்களின் மேலான பார்வைக்கு

மரம் : சரி, என் மீது ஏறி எனது கிளைகளில் விளையாடு என்றது.
பையன்: மரத்தின் இந்த அறிவுரையினால் மிகவும் சந்தோஷம் அடைந்தான். மரத்தின் கிளைகளில் அமர்ந்து நிறைய விளையாட்டுக்கள் விளையாட அவனால் விளையாட முடிந்தது. வித விதமான விளையாட்டுக்களை விளையாடினான். அவன் மனதிற்கு மிகவும் உற்சாகமாகவும் இருந்தது.

நாட்கள் வேகமாக ஓடின. பையன் பள்ளிக்கு செல்லும் பருவம். அதனால் அதிக நேரம் படிப்பதில் செலவழித்தான். மரத்திடம் வந்து விளையாடுவது குறைந்தது. அப்படியும் ஒரு நாள் மரத்திடம் வந்தான். மரம் தனது பால்ய சிநேகிதனை பார்த்து ஒரே மகிழ்ச்சி அடைந்தது. உடனே வா நண்பா, என் மீது ஏறி எனது கிளைகளில் விளையாடு என்றது. அதற்கு அந்த பையன் அப்படி விளையாட மறுத்து விட்டான்.

பையன் : எனது உடைகள் அழுக்காகி விடும். அம்மா அடிப்பாங்க அதனால் என்னால் உன் மீது ஏறி விளையாட முடியாது என்றான்.

மரம் : சரி ஒரு நல்ல கயறு கொண்டுவா. அதை என் மீது கட்டி எனது கிளைகளை ஊஞ்சலாக்கி விளையடலமே என்றது.

இந்த மரத்தின் ஐடியா பையனுக்கு மிகவும் பிடித்தது. மரம் கூறியபடியே ஊஞ்சல் போல கயிற்றை கட்டி விளையாடி பார்த்தான். இந்த விளையாட்டு மிகவும் பிடித்தது.

தினமும் கொஞ்ச நேரம் வந்து மரத்தின் ஊஞ்சலில் ஏறி விளையாடி விட்டு போவதை வழக்கமாகி கொண்டான்.

அந்த சிறுவன் விளையாடும்போது வெட்பம் தாங்காமல் தவிக்கும் போது, மரம் மனது பொறுக்காமல் தன் நிழலை உபயோகப்படுத்தி கொள் என்றது. சிறுவனும் நிழலில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் விளையாடி களைத்து பின் செல்வான்.

சிறுவன் வளர்ந்து பெரியவனாகி கல்லூரி செல்ல ஆரம்பித்தான். அவனுக்கு சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓடி ஓடி நாட்கள் நகர்ந்தன. அந்த ஓட்டத்தின் நடுவில் ஒரு நாள் பால்ய நண்பனான மரத்திடம் வந்தான்.

மரமும் அவனை அடையாளம் கண்டு கொண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றது. வா நண்பா. எப்படி இருக்கிறாய் என்றது? அதற்கு அவன் நான் மிகவும் பசியுடன் இருக்கிறேன், எனது வயிறு பசியனால் மிகவும் துடிக்கிறது என்று மிகவும் வருத்தத்துடன் கூறினான்.

அதற்கு மரம் கூறியது எனது மரக்கிளையை இழுத்து வளைத்து பிடித்து அதில் இருக்கும் பழங்களை சாப்பிட்டு உன் வயிற்றை நிரப்பி கொள் என்றது.

அதற்கு அந்த வாலிபன் எந்த தயக்கமும் இல்லாமல் குதித்து கிளைகளை வளைத்து பிடித்து பழங்களை தின்றான். ஒரு வார காலத்தில் எல்லா கிளைகளில் உள்ள பழங்களும் காலியாகின.

எல்லா பழங்களும் காலியாகி மரம் பொலிவிழந்து விட்டது. அதன் பின் அந்த வாலிபன் அந்த மரத்தை திரும்பி கூட பார்க்கவில்லை.

அந்த வாலிபன் நடுத்தர வயதை அடைந்த போது ஒரு நாள் மரத்திடம் வந்தான். மரமும் இன்முகம் காட்டி வரவேற்றது. வா நண்பா சுகமாய் இருக்கிறாயா? என்றது.

வாலிபன் : நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நிறைய சம்பாதித்து விட்டேன். கை நிறைய பணம் இருக்கிறது. நான் வாழ்க்கையில் எல்லாவித சந்தோஷங்களையும் அடைந்து விட்டேன். நான் என் வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்று மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கிறேன். நல்ல மனைவி கிடைத்து இருக்கிறாள், நான் பெரிய வீடு வாங்கி இருக்கிறேன்.

ஆனால் நான் இப்போது உலகம் பூரா சுற்றி பார்க்க வேண்டும் இதுதான் இப்போதைய என் ஆசை என்றான்.

மரத்திற்கு மிகவும் வயதாகி விட்டது. ஆனாலும் பழைய நட்பு அல்லவா விட்டு கொடுக்க மனம் இல்லாமலும், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், சரி நண்பா, நீ ஒரு காரியம் செய். உடனே ஒரு அரிவாள் எடுத்து வந்து என்னிடம் என்ன தேவையோ அதை வெட்டி நல்ல போட் செய்து அதில் பிரயாணம் செய்து இந்த உலகத்தில் இருக்கும் அதிசயங்களை
உன் குடும்பத்துடன் கண்டு களிப்பாய் என்றது.

ஆனால் மறுபடியும் எந்த வித தயக்கமும் இல்லாமல் அந்த மனிதன் மரத்தை வெட்ட ஆரம்பித்தான், அந்த மரத்துடன் விளையாடி இருக்கிறன், அதன் நிழலில் களைப்பாறி இருக்கிறான், மரத்தின் பழங்களை சாப்பிட்டு பசியாறி இருக்கிறான். அந்த மரத்தை அறுத்து தனக்கு வேண்டிய படகு செய்தான். அந்த வேலை முடிந்ததும் செய்யப்பட்ட படகின் மீது சவாரி செய்து சென்று விட்டான். உறவினர்கள், படகு அளித்த மரம் அனைத்தையும் மறந்தான். மனசாட்சி என்ற ஒன்று அங்கு பஞ்சாகி போனது.

ஒரு நாள் வயதான ஒரு மனிதன் அந்த மரத்தை கடந்து சென்று கொண்டிருந்தான். கடக்கும்போது அந்த மரம் ஏதும் கூறவில்லை. அதனால் அந்த மரத்தை நிமிர்ந்து பார்த்தான்.

அந்த மரம் வெட்டியபின் எப்படி இருந்ததோ அப்படியே பொலிவிழந்து இருந்தது. அதன் கிளைகள் வளரவில்லை. சும்மா நானும் ஒரு மரம் என்று நின்று கொண்டிருந்தது. ஆனால் இந்த முறை மரம் மௌனம் சாதித்தது.

ஆனால் இப்போது அந்த வயதான மனிதன் அழுதான் மிகவும் சத்தமாக அழுதான். கண்ணிர் தாரை தாரையாக கண்களில் இருந்து வடிந்து கொண்டிருந்தது.

இப்போதுதான் அந்த மரம் மிகவும் நலிந்து போய் நடுங்கிய குரலில் பேச ஆரம்பித்தது உனக்கு கொடுக்க என்னிடம் என்ன இருக்கிறது. நீ எதற்கு அழுகிறாய் நண்பா ? என்னிடம் படகு செய்ய தண்டுகள் இல்லை, பசி தீர்க்க பழங்கள் இல்லை, நீ படுத்து களைப்பாற தேவையான நிழல் கொடுக்க கிளைகள் இல்லை, தற்போது என்னிடம் இருப்பது எல்லாம் எனது வேர் ஒன்று தான் என்றது.

அந்த மனிதன் யோசித்தான், இதுவும் ஒரு நல்ல ஐடியா தான். மரத்தின் வேர் அருமையான இடம் படுத்து உறங்குவதிற்கு. மரத்தின் வேர் அருமையான தூக்கத்தை கொடுக்கும் என்று முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். என்ற எண்ணம் தான் அவன் மனதில் ஓடியது.

மரம் நம் பெற்றோர்களையும் அந்த சிறுவன் நம்மையும் உணர்த்துகிறான்.

பி. கு.

இந்த கதையின் உட் கரு என்னவென்றால்? நான் யார் மனதையும் புண் படுத்த இதை எழுத வில்லை.

ஆனால் பலர் தன் பெற்றோர்களை கருவேப்பிலை போல் உபயோக படுத்தி விட்டு, வளர்ந்தவுடன் தூக்கி போட்டு விடுகிறார்கள்.

கைகள் விட்டு எண்ணி விடலாம் பெற்றோர்களை கடைசி வரை தன் கண்கள் போல பாது காத்து பார்த்து கொள்பவர்களை.

ஆனால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அந்த பெற்றோர்கள் நம்மை விட்டு பிரிவதை விரும்புவது இல்லை.

ஐயிரண்டு மாதங்கள் சுமந்து பெற்ற தாயின் - மறுபிறவி எடுத்த தாயின் - தியாகம் உணரப்படுவதில்லை.

குடும்ப பாரத்தை சுமக்க ஒரு தந்தை பட்ட கஷ்டங்கள் எல்லாம் காலாவதியாகி போய்விடுகின்றன.

மனிதன் வளர்ந்த பிறகு இவ்விருவரும் சுமையாக தெரிகிறார்கள்.

இந்த பதிவு நான் எழுதி இருப்பது யார் பெற்றோர்களை தனிமை படுத்துகிறார்களோ அவர்களுக்குத்தான். அவர்கள் மனம் திருந்தினால் முதியோர் இல்லங்கள் குறையும்.

பெற்றோர்களை நல்ல முறையில் கவனித்து கொள்பவர்களுக்கு சிரம் தாழ்த்தி என் நமஸ்காரங்களை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் .


ரம்யா