Sunday, May 23, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி மக்களே!!





எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு பதிவிட்டும் என்னை கவுரவித்த வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.



நன்றிகள் மட்டும் உங்களின் அன்பிற்கு முன்னால் போதாது. வேறு என்ன சொல்ல? உங்கள் அனைவரின் அன்பிற்கும் எனது சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் நண்பர்களே!



இந்த எனது வலையுலக நட்புகள் இதே நேசத்துடனும், இதே பாசத்துடனும் என்றென்றும் இருக்க வேண்டும் என்று அந்த இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றேன்.



பதிவிட்ட தோழிகள்
================


பதிவிட்ட நண்பர்கள்
==================
ஜீவன்
வால்பையன்


எனது பிறந்தநாளின் மிகவும் நெகிழ்வான சில தருணங்கள்!!


வால்பையன் பதிவு இட்டவுடன் அதை அலைபேசிமூலம் தெரிவித்தார். வாலிடம் நன்றி கூறவிட்டு அலைபேசியை அணைக்கும் முன், நண்பர் ஜீவனிடம் இருந்து அலைபேசியில் வாழ்த்துக்கள். இரவு பன்னிரண்டு வரை விழித்திருந்து வாழ்த்துகூரிய சகோ சஞ்சய், விடியலில் வாழ்த்துக் கூறிய அன்புச் சகோதரி இயற்கை மகள் ராஜி, விடிந்து சிறிது நேரத்தில் சகோ பொன்னியின் செல்வன் கார்த்திகைப் பாண்டியன், பணிகளுக்கு நடுவே அலைபேசியின் வழியாக வாழ்த்து சொன்ன சகோ மாதேஷ், சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது பிறந்த நாள் என்று தெரிய வர உடனே அங்கிருந்த படியே எனக்கு வாழ்த்து சொன்ன புது மனத் தம்பதியினர் கார்த்திக் மற்றும் திருமதி கார்த்திக், மாலையில் சகோ அன்பு மதி அலைபேசியில், அன்புடன் எப்போதும் நலம் விசாரிக்கும் சகோ நிஜமா நல்லவன், வாழ்த்து கூறுவதில் வள்ளல்கள். சகோ நிஜமா நல்லவன் மற்றும் சகோ ஜோதிபாரதி உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல கோடி.

மயிலு விஜி நான் உனக்கு எப்படி எனது உணர்வுகளை உணர்த்துவது என்றே தெரியவில்லையே!

குழந்தைகளை அலைபேசி வழியாக பிறந்தநாள் சங்கீதத்தை இசைக்க வைத்து, எனது கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டாயடி தோழி! அந்த பிஞ்சு உள்ளங்களின் சந்தோஷத் துள்ளலுடன் கூடிய இசையில் என்னையே நான் மறந்தேனே! உனக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் தோன்றுமா? நீ என்ன ஒரு நடமாடும் அறிவுப் பெட்டகமா? இல்லை இல்லை அன்புக் குவியலா? எப்படியடி இவ்வளவு உன்னால் முடிகிறது?

ஆனால் இவைகள் அனைத்திற்கும் முத்தாயிப்பு வைப்பது போல, எனது பிறந்த நாளை ஒட்டி வெகு விமரிசையாக சமைத்து, அதை தனியாக அமர்ந்து சாப்பிட்ட உன்னை.... :-) I TOO LOVE YOU VIJI DARLING

மிக்க நன்றி மயிலு, அக்காவின் பிறந்த நாள் 24 மே!!


இன்று முழுவதும் எனது அலைபேசிக்கு ஒய்வே இல்லாமல் எனது நட்புக்கள் வாழ்த்துக்களால் என்னை நனைய வைத்து விட்டார்கள். லண்டனில் இருந்து கபீஷ், டெல்லியில் இருந்து விக்னேஸ்வரி, சித்தூரில் இருந்து தோழி தமிழரசி, நைஜீரியாவில் இருந்து ராகவன் அண்ணா, கோவையில் இருந்து தாரிணிபிரியா, சிங்கையில் இருந்து கிட்டத்தட்ட அனைவருமே வாழ்த்து கூறி விட்டார்கள். மின்னஞ்சலில் வாழ்த்துக் கூறிய நண்பர் நசரேயன், சுஜாதா சந்திரசேகரன், உருப்படாதது அணிமா மற்றும் Twitter நண்பர்கள் Facebook நண்பர்கள், Orkut நண்பர்கள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

விடுபட்ட பெயர்கள் தயவு செய்து மன்னிக்கவும்.



இவைகள் அல்லாமல் அனைவரின் பதிவின் வாயிலாகவும் எனக்கு வாழ்த்துக் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.





முன்னறிவிப்பு இல்லாத ஈரோட்டில் திடீர் நண்பர்கள் சந்திப்பு ===============================================

ஒரு திருமண வைபவத்தில் கலந்து கொள்ள ரெண்டு நாட்கள் முன் ஈரோடு சென்றிருந்தேன். ரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துச் சென்ற சகோ ஷங்கர் மற்றும் சகோ பூபதி உங்கள் இருவருக்கும் இங்கே நன்றியை பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். முன் பின் பார்த்திராத ரெண்டு முகங்கள், என்ன ஒரு அக்கறையாக செய்த உதவிகள்? இந்த ஏற்பாட்டினை செய்தவர் மணமகன் சகோதரர் கார்த்திக். எல்லார் ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அன்பான விசாரிப்பில் நெகிழ்ந்து போனோம், எப்படி கார்த்திக் இப்படி முடியுது? அனைவரும் ஒரே மாதிரி அன்பாக இருக்கிறீர்கள்!

நண்பரின் திருமணம் முடிந்து அறைக்கு திரும்பிய பிறகு, ஒரு இன்ப அதிர்ச்சியாக கார்த்திக் தனது புதிய மனைவியுடன் எங்களை ஹோட்டல் ரூமில் பார்க்க வந்து ஆச்சர்யப்பட வைத்தார். சகோ மாதேஷ் தனது மனைவியுடன் ஹோட்டலுக்கு திடீர் விசிட் அடித்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் (அன்று சகோ மாதேஷின் பிறந்தநாளும் கூட).


அடுத்து ஹோட்டலுக்கு விசிட் செய்ததது இயற்கை மகள் ராஜி, சகோ கதிர், சகோ ஆரூரான். அனைவரின் வருகை தந்த மகிழ்ச்சியில் இது கனவா அல்லது நனவா என்று அடிக்கடி எனக்கு நானே கேட்டுக் கொண்டிருந்தேன். நமக்கு எத்துனை வட்டங்கள், அதுவும் பாசத்துடன் கூடிய, நேசக் கரம் நீட்டும் அன்பு வட்டங்கள். இதெற்கெல்லாம் பெரிய கொடுப்பினை இருக்கணும் இல்லையா மக்களே! அது எனக்கு பரிபூர்ணமாக இருக்கிறது. அன்பாக பேசிக் கொண்டிருந்து விட்டு சகோ கதிர் மற்றும் சகோ ஆரூரான் அவர்கள் இல்லத்திற்கு எங்களை அழைத்து, மறுபடியும் எங்களின் பால் அவர்களின் அக்கறை கலந்த அன்பை வெளிப்
படுத்திய விதம்
மனது மிகவும் நிகிழ்ந்து போனது. நன்றி சகோதரர்களே! நன்றி நன்றி!



ராஜி இந்த பெண்ணின் உருவம் அனைத்தும் அன்பால் செய்யப்படது என்றால் அது மிகையாகாது. ஒரு பத்து முறையாவது அலைபேசியில் பேசிவிட்டு, சந்திக்கும் நேரத்தையும் சரியாகக் கொடுத்து, அந்த சந்திப்பினையும் செம்மையாக நிறைவேற்றி, நான் என்ன சொல்வேனடி? உன் அன்பிற்கு முன்னாள் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன் ராஜி. அழகிய காலத்தைக் காட்டும் கண்ணாடி போல நேரத்தைக் காட்டும் கடிகாரத்தினை பரிசாகக் கொடுத்து என்னை உனது அன்பில் திக்குமுக்காட வைத்து விட்டாயே சகோதரி. உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு தெரியவில்லையடி. மகிழ்ச்சியில் விழியோரம் ஈரம் கசிவதை உணர்கிறேன் என்றால் அது எள்ளளவும் மிகையாக தோழி!

இவர்கள் வந்த மகிழ்ச்சியில் வானம் முழுவதுமாக பிளந்து நீரினை மழை என்ற பெயரில் கொட்டியதால் எனது நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து, மிகவும் சந்தோஷமாக மாலைப் பொழுதைக் களித்தோம். மிக்க நன்றி சகோ கதிர், சகோ ஆரூரான், ராஜி.

இரவு கார்த்திக் வீட்டில் விருந்தை முடித்துக் கொண்டு கனத்த இதயத்துடன் நண்பர்களைப் பிரிந்து ஊருக்குப் புறப்பட்டு வந்தோம். கார்த்திக்கின் இல்லத்தில் அவர்கள் காட்டிய அன்பிற்கு அளவுகோலே கிடையாது. அருமையான விருந்தளித்து அன்புடன் உபசரித்த விதம் எங்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது கார்த்திக். அப்பா ரயில் நிலையத்திற்கே வந்து எங்களை வழியனுப்பியது மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது கார்த்திக். உங்கள் இல்லத்தில் அமுது படைத்த அம்மாவிற்கும் மற்றவர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் கார்த்திக்.