Friday, June 12, 2009

கல்லூரி கலாட்டாக்களில் ஒரு பகுதி !!


கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது முக்கியமான சில தோழிகளுடன் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம். எல்லா தலைப்புகளும் வந்து போகும். அனைத்துமே சிரிப்பைத் தழுவி இருக்கும். அதனால் மழைமேகம் போல் வந்த வேகத்தில் மறைந்தும் போகும். எல்லாம் சிரிப்பான அனுபவங்கள்தான் அதிகமா பேசுவோம். எங்க செட்டுலே இல்லாதவங்களுக்கு நாங்க தனிப் பேரு வெப்போம். அதெ வெச்சிதான் எங்களுக்குள்ளே பேசிக்குவோம்.

நாங்க பட்டப்பெயர் வச்ச விஷயம் அவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான்! எங்களை குழி தோண்டி புதைச்சிடுவாங்க. பெரும்பாலும் எல்லாம் சிரிப்பா ரகசியமாத்தான் பேசிக்குவோம்.

அப்படிதான் ஒரு நாள் எங்க பேச்சு தடம் மாறிப் போய்டுச்சு. என்ன பயந்துட்டீங்களா?

வேறே ஒண்ணும் இல்லே! நான் ரொம்ப பயப்படறது பேய் பத்திதான். ஒரு தோழி நாங்கள் தங்கி இருந்த விடுதியில் நடந்ததாக கேள்விப்பட்ட ஒரு பேய்க் கதையை அவிழ்த்து விட்டாள். எனக்கு உள்ளூர பயம்தான். இருப்பினும் எல்லாரும் வட்டமாத்தான் உக்காந்திருந்தோம்.

கதை ஆரம்பிச்சவுடனே நான் நட்ட நடுவிலே எல்லாரையும் இடிச்சிட்டு
உக்காந்துட்டேன். ஏன்னா பயம்தான் காரணம்! அப்படியாவது கேக்கனுமான்னு ஒரு தோழி என்னை திட்டினாள். நான் அதெல்லாம் காதிலே வாங்கிக்கவே இல்லை.

சரி மேலே சொல்லு அப்படின்னு ஒரே சுவாரசியமா கேட்க ஆரம்பிச்சிட்டோம். இதை எழுதும் போதுகூட எனக்கு ஒரே பயம்தான். அக்காவை பக்கத்துலே உக்கார வச்சிக்கிட்டுதான் எழுதறேன். என்ன செய்ய! உடம்பு பூரா ஒரே கொழுப்பு அப்போ. இந்த மாதிரி கதை கேட்டு பல இரவுகள் தூங்காமே பினாத்தி இருக்கேன். பல நாட்கள் ஜுரம் வந்துவிடும். கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு தூங்குவேன்.

தோழிகளில் யாருக்காவது கொஞ்சம் பயப்படறமாதிரி ஏதாவது விஷயம் கிடைச்சால் என்கிட்டே தான் மொதல்லே சொல்லுவாங்க. ரொம்ப தைரியசாலிதான் போங்க. என்னோட பயம் எனது தோழிகள் முதல் எனது பேராசிரியர்கள் வரை மிகவும் பிரபலம்!

அப்படிதான் அன்னைக்கும் நட்ட நடுவிலே உக்காந்து உம் கொட்ட கூட பயந்து கதை கேட்டுக் கொண்டிருந்தேன். கதையைக் கேட்டு இரவின் லேசான குளிரிலும் எனக்கு ரொம்ப வியர்த்துப் போச்சு. நீங்களும் அந்த கதையை கேளுங்க கொஞ்சம். என்னை திட்டாதீங்க!

நாங்க தங்கி இருந்த விடுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும், எங்களுக்கு முன்னாடி படிச்ச வினிதா என்ற ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவங்க ஆவி இரவில் அட்டகாசம் செய்வதாகவும் சொன்னாங்க.

என்ன அட்டகாசம் செய்யறாங்கன்னு நான் கேட்டேன். ஒண்ணுமே இல்லே, நல்லா கவனிச்சு கேட்டா இரவு பன்னிரெண்டு மணிக்குமேல் சலங்கை சத்தம் கேட்கும், நாங்க எல்லாம் வினிதா நடமாடராங்கன்னு தெரிஞ்சிகிட்டு விளக்கெல்லாம் அணைச்சிடுவோம்ன்னு சொன்னாங்க. ரொம்ப பழக்கப் பட்ட மாதிரி பேசினாங்க. எனக்கு ஈரக்குலையே நடுங்கிப் போய்டுச்சு. ஏன்னா, அப்போ மணி பன்னிரெண்டரை. என்னோட ரூமிலே தங்கி இருந்த பொண்ணு ஊருக்குப் போய்ட்டாங்க. நான் தனியாதான் படுக்கணும். அதெல்லாம் நினைவிற்கு வந்தவுடன் ரொம்ப அழ ஆரம்பிச்சுட்டேன்.

ஒரு தோழி சத்தம் போடாதேன்னு எனது வாயை பொத்தினாள். அதையும் மீறி நான் அழ ஆரம்பிக்க! அப்போது பார்த்து அந்த நிசப்தத்தில் சலங்கை ஒலி கேட்க ஆரம்பித்தது. நாங்க முன் பக்கமா உக்காந்து இருந்தோம். சத்தம் டைனிங் ஹாலுக்கும், சமையல் கட்டுக்கும் இடையே கேட்டுச்சு.

அவ்வளவுதான்! எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போய்டுச்சு!! ஆனா உடனே அருகே இருந்த எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு? உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு "கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான்? போலீசுக்கு சொல்ல? வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்". இன்னொரு தோழி நாம் இங்கே இருக்கிறது நல்லது இல்லே, அவங்க அவங்க ரூமிற்கு போயிடலாம்ன்னு சொன்னாங்க.

ஆனால் நான் போகமாட்டேன்னு அழ ஆரம்பிச்சுட்டேன். தனியா ரூம்லே படுக்க பயம்.

சரி போய் உன்னோட தலைகாணி, போர்வை எல்லாம் எடுத்துகிட்டு வந்திடு. அதுவரை நாங்க எல்லாம் இங்கேயே நிக்கறோம்னு சொன்னாங்க.

நானும் சரின்னு மெதுவா ரொம்ப மெதுவா "இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க" ன்னு சொல்லுவாங்களே அதுமாதிரி அடிபிரதச்சனம் பண்ணி என்னோட ரூமை அடைந்தேன். விளக்கை போட பயம். மெதுவா தண்ணி பாட்டில் எடுத்து தண்ணீர் குடிச்சேன். தண்ணீரை குடிச்சிட்டு நேரா இருந்த ஜன்னலை பார்த்தேன். சரி அதையும் மூடி விடலாம்னு நினைச்சி ஜன்னல் கிட்டே போனேன். அவ்வளவுதான், அங்கே ஒரு உருவம் என்னைப் பார்த்து கையை அசைத்தது. நான் அவ்வளவுதான்!! கத்த கூட தெரியாமல் பே பேன்னு சத்தம் போட்டேன். அதுக்குள்ளே எங்க வார்டன் எழுந்திட்டாங்க. லைட் போட்டாங்க.

நான் பயத்திலே வெளியே ஓடி வந்திட்டேன். கத்திகிட்டே ஓடி வந்தேனா! வந்த வேகத்திலே கீழே விழுந்துட்டேன். அதுக்குள்ளே வார்டன் கதவைத் திறந்து நான் விழுந்த இடத்திற்கு வந்திட்டாங்க.

"என்னாடி இங்கே வந்து கிடக்கறே? எங்கே உன்னோட பரிவாரங்கள் எல்லாம்? படிக்காதீங்க! எப்போ பார்த்தாலும் கூட்டமா உக்காந்துகிட்டு ரந்து பண்ணுங்க. உங்களை எல்லாம் நிக்க வச்சி தோலை உரிக்கனும்னு" திட்டினாங்க. நான் அழுகையை நிறுத்தலை. அழுதுகிட்டே இருந்தேன்.

"சரி சொல்லித் தொலை ஏன் அழறே என்ன நடந்தது?"

அவங்களுக்கு எப்பவுமே என் மீது கொஞ்சம் அன்பு உண்டு. ஏன்னா பத்து தேதிகுள்ளே கணக்கு எல்லாம் கொஞ்சம் பார்க்கச் சொல்லுவாங்க. மெஸ் கூட அவங்கதான் பார்ப்பாங்க. அந்த கணக்கையும் நான் சரி பண்ணி கொடுப்பேன். அதனால் நான் பண்ற தப்பை கண்டிப்பாங்க, ரொம்ப திட்ட மாட்டாங்க. அப்புறமா நான் நடந்ததை சொன்னேன். சரின்னு அவங்களும் என்னோட அறைக்கு வந்து ஜன்னல் வழியா பார்த்தாங்க. ஒண்ணுமே அப்போது தெரியலை. நான் என்ன சொல்லியும் அவங்க என்னை நம்ப தயாரா இல்லே.

சலங்கை சத்தம் பற்றி கூட சொன்னேன். அதையும் அவங்க நம்பலை. ஆனா பாருங்க வார்டன் கிட்டே சொல்லும் போது சலங்கை சத்தமும் கேட்கலை, அங்கே அமர்ந்திருந்த என்னோட தோழிகள் ஒருவரையும் காணலை.

அதனால் வார்டன் "சரி என் ரூமிலே வந்து படுத்துக்கோ. மீதி எல்லாம் காலையிலே பேசிக்கலாம். இதுக்கெல்லாம் ஒரு முடிவு சீக்கிரமா கட்டறேன்னு" கருவிகிட்டாங்க. ஆனா ஒருத்தி கூட நான் என்ன ஆனேன்னு வெளியே வந்து பார்க்கலை. எனக்கும் எல்லார் மேலேயும் ஒரே கோவமா வந்தது.

வார்டன் ரூமிலேயே படுத்துக்கறதா முடிவெடுத்தப் பிறகு பயம் கொஞ்சம் தெளிஞ்ச மாதிரி இருந்தது. ஆனாலும் அந்த ஜன்னல் காட்சி மனதை நெருடிக் கொண்டிருந்தது. அதையே மறுபடியும் அசைப் போட்டுக் கொண்டே தூங்கப் போனேன்னு நினைக்கின்றேன். திடீர்ன்னு பேய் பேய்ன்னு தூக்கத்திலே கத்த.. வார்டன் என்னை அடிச்சு எழுப்ப... ஒரே அமர்க்களம் ஆகிவிட்டது. எழுந்து உக்காந்துகிட்டே இருந்தேன். வார்டன் மறுபடியும் தூங்கிட்டாங்க.

இப்படியே விடிஞ்சிடுச்சு. என்னோட அறைக்குப் போனவுடன் முதல் காரியம் என்னோட ஜன்னலைப் பார்த்தேன். யாருமே அங்கே இல்லே. காலையிலே ஆறு மணிக்கு பேய் போய்டும்னு நினைச்சிகிட்டு வரப் போகும் இருட்டிற்கு பயந்தவாறு கல்லூரிக்குப் போனேன். என்னோட தோழிகள் ஒருவருடனும் நான் பேசவில்லை. என்னை அநியாயத்திற்கு கழட்டி விட்டுட்டாங்கன்னு அவங்க மேலே கோவம்.

கல்லூரிக்கு போகுமுன் எல்லாரும் ஒரு இடத்திலே சேர்ந்து கொஞ்ச நேரம் இருப்போம். அப்புறமாதான் கல்லூரிக்குள்ளே போவோம். ஆனா அன்னைக்கி நான் அந்த இடத்துலே நிக்காமல் அவங்களை பார்த்த மாதிரி காட்டிக் கொள்ளாமல் அவங்களையும் தாண்டிப் கல்லூரிக்குள்ளே போயிட்டேன். என்னையும் தாண்டி வேகமாக ஓடி வந்தவர்கள் என்னை ஒரு மார்க்காமா அடிக்க வரமாதிரி பாத்தாங்க.

சாயங்காலம் வாடி ரூம் பக்கம், காலை உடைக்கறோம். வார்டன் கிட்டே எங்களைப் போட்டா கொடுக்கறேன்னு சொல்லிகிட்டே முறைச்சாங்க. அடி பாவிங்களா, நான் ஒண்ணுமே சொல்லலை, என்னை நம்புங்கடின்னு சொல்லியும் கேட்கலை.

எல்லாமே எங்க தோழிங்களோட செட்டப்புன்னு ஒரு தோழி எனக்கு உணமையானவளா உண்மையை ஒத்துகிட்டா. என்னோட பயம் அவங்களுக்கு தெரிந்ததாலே என்னை போட்டு பயமுறித்தி தாளிச்சிட்டாங்க.

அவங்களோட மறுபடியும் சகஜ நிலைமைக்கு வர கொஞ்ச நாட்கள் ஆனது. அப்புறம் என்ன? மறுபடியும் சேர்ந்து உக்காந்து பேச ஆரம்பிச்சிட்டோமில்லே!

டிஸ்கி: இது போல் பல நிகழ்வுகள் எங்களைச் சுற்றி நிகழ்ந்துள்ளது. இதைப் படிக்கும் எனது கல்லூரி தோழிகளே! என்னை திட்டாதீங்க. இன்னும் நிறைய சொல்லுவேன் நமது கலாட்டாக்களை.

டேக் இட் ஈசிம்மா!!86 comments :

ஜீவன் said...

me tha 1st?

ஸ்ரீ.... said...

அருமையான பதிவு ரம்யா.

ஸ்ரீ....

வால்பையன் said...

//எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு? உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு "கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான்? போலீசுக்கு சொல்ல? வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்".//உங்க அறிவு யாருக்கு வரும்!

வால்பையன் said...

முன்னாடியே தெரிஞ்சிருந்தா எனக்கு தெரிஞ்ச போய் கதையெல்லாம் நேர்ல பார்க்கும் போது சொல்லி பயமுறுத்தியிருப்பேனே!

Desperado said...

//உடனே அருகே இருந்த எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு? உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு "கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான்? போலீசுக்கு சொல்ல? வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்".//

LMAO :))))))))))

நசரேயன் said...

உள்ளேன் பூலான் தேவி

நசரேயன் said...

//கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது முக்கியமான சில தோழிகளுடன் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம். //

எப்படி இந்தியாவை விக்கலாமுணா?

பழமைபேசி said...

இடுகை இனிதான் படிக்கணும்...

sakthi said...

எல்லா தலைப்புகளும் வந்து போகும். அனைத்துமே சிரிப்பைத் தழுவி இருக்கும். அதனால் மழைமேகம் போல் வந்த வேகத்தில் மறைந்தும் போகும்.

நல்லா இருக்கே ஆரம்பமே....

sakthi said...

எங்க செட்டுலே இல்லாதவங்களுக்கு நாங்க தனிப் பேரு வெப்போம். அதெ வெச்சிதான் எங்களுக்குள்ளே பேசிக்குவோம். நாங்க பட்டப்பெயர் வச்ச விஷயம் அவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான்! எங்களை குழி தோண்டி புதைச்சிடுவாங்க.

பின்னே சும்மா விடுவாங்களா

sakthi said...

எனக்கு உள்ளூர பயம்தான். இருப்பினும் எல்லாரும் வட்டமாத்தான் உக்காந்திருந்தோம். கதை ஆரம்பிச்சவுடனே நான் நட்ட நடுவிலே எல்லாரையும் இடிச்சிட்டு
உக்காந்துட்டேன். ஏன்னா பயம்தான் காரணம்!

நம்பமுடியலை

MayVee said...

அட ......

நாங்க எல்லாம் ஹோச்டேல் வார்டேன் யை தான் டார்கெட் பண்ணுவோம்.......

sakthi said...

என்னையும் தாண்டி வேகமாக ஓடி வந்தவர்கள் என்னை ஒரு மார்க்காமா அடிக்க வரமாதிரி பாத்தாங்க. சாயங்காலம் வாடி ரூம் பக்கம், காலை உடைக்கறோம். வார்டன் கிட்டே எங்களைப் போட்டா கொடுக்கறேன்னு சொல்லிகிட்டே முறைச்சாங்க.

அடிச்சாங்களா இல்லையா கடைசிவரை

sakthi said...

எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு? உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு "கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான்? போலீசுக்கு சொல்ல? வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்".//

ஆஹா என்ன ஒரு புத்திசாலித்தனம்....

அப்பாவி முரு said...

ஏர் போர்ட்ல பின்னாடி வந்து ஒரு பேயி கூப்பிட்டதே மறந்துட்டீங்களா?

நட்புடன் ஜமால் said...

ஒரு பகுதி மட்டும் தானா!

இருங்க படிச்சிப்புட்டு வாறேன்

நட்புடன் ஜமால் said...

எல்லாம் சிரிப்பான அனுபவங்கள்தான் அதிகமா பேசுவோம். \\

அப்பைலேர்ந்தே இப்படித்தானா!

நட்புடன் ஜமால் said...

எங்க செட்டுலே இல்லாதவங்களுக்கு நாங்க தனிப் பேரு வெப்போம்.\\


உங்களுக்கு அவங்க எதுனா பேர் வச்சிருப்பாங்களே!

அது இன்னா சொல்லுங்களேன் ...

நட்புடன் ஜமால் said...

இதை எழுதும் போதுகூட எனக்கு ஒரே பயம்தான். அக்காவை பக்கத்துலே உக்கார வச்சிக்கிட்டுதான் எழுதறேன்.\\

ஹையோ ஹையோ

நட்புடன் ஜமால் said...

பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு "கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான்? போலீசுக்கு சொல்ல? வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்"

\\

ஹா ஹா ஹா

நல்ல இரசனை உங்களுக்கு மட்டும்தான்னு நினைச்சேன்

உங்க தோழிகளுக்குமா!அருமை

நட்புடன் ஜமால் said...

"இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க"\\

சங்க காலமா!

நட்புடன் ஜமால் said...

இது போல் பல நிகழ்வுகள் எங்களைச் சுற்றி நிகழ்ந்துள்ளது. \\


இன்னும் எழுதுங்க...

ஆ.ஞானசேகரன் said...

அட, ரம்யா பயப்படாம உங்க பட்டபேரையும் சொல்லுங்களேன்... நல்ல எழுத்து நடைங்க தொடருங்கள்

kanagu said...

/* ஆனா உடனே அருகே இருந்த எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு? உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு "கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான்? போலீசுக்கு சொல்ல? வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்". */

அடேங்கப்பா... உக்காந்து யோசிச்சு இருக்கீங்கனு நல்லா தெரியுது :)

இவ்வளவு பயம் கண்டிப்பா கூடாது... இன்னும் நெறய பேய் கதய கேட்டு அதெல்லாம் சும்மான்னு முடிவு கட்டுங்க :)

Joe said...

அழகா எழுதியிருக்கீங்க.
பல பேரை பயமுறுத்திட்டீங்க!

பேய்களைக் குறித்த பயம் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் கூட ஒரு கட்டுரை எழுதிருக்கார், கதாவிலாசம் புத்தகத்தில.

புதியவன் said...

//அப்படிதான் ஒரு நாள் எங்க பேச்சு தடம் மாறிப் போய்டுச்சு.//

தடம் எண் 1 லிருந்து தடம் எண் 2க்கா...?

புதியவன் said...

//இருப்பினும் எல்லாரும் வட்டமாத்தான் உக்காந்திருந்தோம்.//

பேய் கதைக்காக ஒரு வட்ட மேசை மாநாடா...?

புதியவன் said...

//என்னோட பயம் எனது தோழிகள் முதல் எனது பேராசிரியர்கள் வரை மிகவும் பிரபலம்!//

இப்போது வலையுலகம் முழுதும் பிரபலமாகிட்டீங்க ரம்யா...

புதியவன் said...

//"இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க"//

ஆஹா...பேய் கதையிலும் ஒரு கவிதை வரி...ரசித்தேன்...

புதியவன் said...

கல்லூரி கலாட்டாக்களை சுவாரசியமான நடையில்
எழுதியிருக்கீங்க ரம்யா படிக்கும் உங்க வீரத்தை
நெனைச்சா ரொம்ப பெருமையா இருக்கு...

பொடிப்பையன் said...

hi Ramya,

முடிந்தால் http://podipaiyan.blogspot.com/ சென்று படித்து பார்க்கவும்.

-பொடிப்பையன்

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... கும்மி அடிக்காம விட்டுட்டேனே?

இராகவன் நைஜிரியா said...

அய்யோ.. தான் பயந்தது இல்லாம மத்தவங்களையும் பயமுறுத்திய தங்கச்சி ரம்யா வாழ்க..

இராகவன் நைஜிரியா said...

// கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது முக்கியமான சில தோழிகளுடன் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம். //

ஆமாம் ... உலகப் பிரச்சனைகள் பற்றி பேசிட்டு இருப்பாங்க...

இராகவன் நைஜிரியா said...

// எல்லா தலைப்புகளும் வந்து போகும் //

அது சரி... தலைப்புகள் மட்டும் தான் வந்து போகும். மெயின் கண்டெண்ட் எதுவுமே பேசப் படுவதில்லை..

இராகவன் நைஜிரியா said...

// நாங்க பட்டப்பெயர் வச்ச விஷயம் அவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான்! //

அது சரி... தெரிஞ்சா டின் கட்டிட மாட்டாங்க..

இராகவன் நைஜிரியா said...

// நான் ரொம்ப பயப்படறது பேய் பத்திதான். //

அப்படீங்களா...

இராகவன் நைஜிரியா said...

// இந்த மாதிரி கதை கேட்டு பல இரவுகள் தூங்காமே பினாத்தி இருக்கேன். பல நாட்கள் ஜுரம் வந்துவிடும். கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு தூங்குவேன். //

கல்லூரிக்கு மட்டம் போடுவதற்கு ஒரு சாக்கு... ம்.... நடக்கட்டும்..

இராகவன் நைஜிரியா said...

// அப்படியாவது கேக்கனுமான்னு ஒரு தோழி என்னை திட்டினாள். நான் அதெல்லாம் காதிலே வாங்கிக்கவே இல்லை.//

யாராவது திட்டும் போது காது செவிடாகிவிடும் என்பது உங்க தோழிக்குத் தெரியாதா/

தமிழரசி said...

ரம்யாக்கு பேய்ன்னா பயமா?

மொத்தலில் நீ ஒரு அறுந்தவாலுத்தானா
அன்று முதல் இன்று வரை.......

கபிலன் said...

கல்லூரி நிகழ்வுகளை ரொம்ப சுவாரஸ்யமா பதிவு செஞ்சி இருக்கீங்க!
நல்ல இருக்கு!

லவ்டேல் மேடி said...

// கல்லூரி கலாட்டாக்களில் ஒரு பகுதி !! //
வந்துட்டேன்.....!!! வந்துட்டேன்.....!!! வந்துட்டேன்.....!!!

லவ்டேல் மேடி said...

// கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது .... //
இத நாங்க நம்பனும்..... !!! சரி.... மேல சொல்லுங்க.....

லவ்டேல் மேடி said...

// முக்கியமான சில தோழிகளுடன் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம். //
அப்போ இருந்தே மொக்க போட ஆரம்பிச்சுடீங்க.....!!! கலக்கரே அக்கா...!!!!!

லவ்டேல் மேடி said...

// அனைத்துமே சிரிப்பைத் தழுவி இருக்கும். ///
ஒரே காமிடி பீசு ன்னு சொல்லுங்க......!!!!!

லவ்டேல் மேடி said...

// அதனால் மழைமேகம் போல் வந்த வேகத்தில் மறைந்தும் போகும். //
வாம்மா மின்னலு......!!!!!!!

லவ்டேல் மேடி said...

// எல்லாம் சிரிப்பான அனுபவங்கள்தான் அதிகமா பேசுவோம். //

நம்பீட்டோம்.....!!!!

லவ்டேல் மேடி said...

// எங்க செட்டுலே இல்லாதவங்களுக்கு நாங்க தனிப் பேரு வெப்போம். அதெ வெச்சிதான் எங்களுக்குள்ளே பேசிக்குவோம். //

நல்ல நட்பு...... நல்லாருங்க.....!!!!!!

லவ்டேல் மேடி said...

// நாங்க பட்டப்பெயர் வச்ச விஷயம் அவங்களுக்கு தெரியாது. //

ஏனுங்கோவ்..... கூப்புட்டு சொல்லித்தான் பாருங்களேன்......!!!!!!

லவ்டேல் மேடி said...

// தெரிஞ்சா அவ்வளவுதான்! ///

உங்குளுக்கும் பேரு வெச்சுருவாங்க..... கரிகிட்டா.....????

லவ்டேல் மேடி said...

// எங்களை குழி தோண்டி புதைச்சிடுவாங்க. //

அப்புடி ஒரு சம்பவம் நடந்திருந்தா ..... நாங்க எல்லாம் இப்போ தப்பிச்சிருப்போம்...!!!!!

லவ்டேல் மேடி said...

// பெரும்பாலும் எல்லாம் சிரிப்பா ரகசியமாத்தான் பேசிக்குவோம். //
ஆமாம்.... ஆமாம்.... ராணுவ ரகசியமில்ல.....!!!!

லவ்டேல் மேடி said...

// அப்படிதான் ஒரு நாள் எங்க பேச்சு தடம் மாறிப் போய்டுச்சு. என்ன பயந்துட்டீங்களா? ///ச்ச... ச்ச.. எதுக்கு பயம்..... உங்க பதிவ புதுசா படிக்கிறவங்களுக்குத்தான் அதெல்லாம்.....!!! நாங்கதான் உங்க தீவிர விசிறியாச்சே......!!!!!

லவ்டேல் மேடி said...

// வேறே ஒண்ணும் இல்லே! நான் ரொம்ப பயப்படறது பேய் பத்திதான். //
அய்யய்யோ.... வால்பையன பாத்து நீங்க ஏன் பயப்படனும்.....????

லவ்டேல் மேடி said...

// ஒரு தோழி நாங்கள் தங்கி இருந்த விடுதியில் நடந்ததாக கேள்விப்பட்ட ஒரு பேய்க் கதையை அவிழ்த்து விட்டாள். //
அந்த அம்முனி இப்போ பெரிய பேய் பட தயாரிப்பாளராமே.....???

லவ்டேல் மேடி said...

// இருப்பினும் எல்லாரும் வட்டமாத்தான் உக்காந்திருந்தோம். //

ஏனுங்கோவ்..... சதுரமா உக்காந்தா பேய் புடுச்சுக்குமா....???

லவ்டேல் மேடி said...

// ஏன்னா பயம்தான் காரணம்! //
நம்பீட்டோம்..... !!!!!!! நீங்க ஒரு மொக்க கதைய சொன்னீங்கன்னா ... பேயாவது... பிசாசாவது.... எல்லாமும் பிச்சுக்கிட்டு ஓடிபோயிருமுங்கோவ் ........!!!!!!

லவ்டேல் மேடி said...

// இதை எழுதும் போதுகூட எனக்கு ஒரே பயம்தான். அக்காவை பக்கத்துலே உக்கார வச்சிக்கிட்டுதான் எழுதறேன். //நம்பீட்டோம்..... !!!!!!!

லவ்டேல் மேடி said...

// கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு தூங்குவேன். //

கல்லூரிக்கு போனாத்தான மட்டம் போடுறதுக்கு....!!!!!!!

லவ்டேல் மேடி said...

/// தோழிகளில் யாருக்காவது கொஞ்சம் பயப்படறமாதிரி ஏதாவது விஷயம் கிடைச்சால் என்கிட்டே தான் மொதல்லே சொல்லுவாங்க. //
அவ்வளவு பெரிய டெர்ரர் ' ஆ நீங்க ........???

லவ்டேல் மேடி said...

// நாங்க தங்கி இருந்த விடுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும், //
பொதுவா , காலேஜ் லேடீஸ் ஹாஸ்டலுக்கு அதுதான பேரு.........????

லவ்டேல் மேடி said...

// எங்களுக்கு முன்னாடி படிச்ச வினிதா என்ற ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், //


அட... எங்க பேச்சுலயும் ஒரு வினிதா.... ஆனா... செம பிகரு....!!!!!!

லவ்டேல் மேடி said...

// அவங்க ஆவி இரவில் அட்டகாசம் செய்வதாகவும் சொன்னாங்க. //

பொதுவா பொம்பள பேயி பாயிஸ் ஹாஸ்டல் பக்கமாதானே சுத்தும்....!!!!


வெவரம் தெரியாத பேயா இருக்குமோ....!!!!!!

லவ்டேல் மேடி said...

// நல்லா கவனிச்சு கேட்டா இரவு பன்னிரெண்டு மணிக்குமேல் சலங்கை சத்தம் கேட்கும் //

ஏன் .....? அந்த வினிதா நாட்டிய பேரொளியா....??? சலங்கை எல்லாம் கட்டியிருக்கு....!!! அந்த சுச்சுவேசன்ல்ல நீங்க ரா..ரா.. பாட்டு பாடீர்கோனும் ..... நெம்ப தப்பு பண்ணிபோட்டீங்கோ......!!!!!!!

லவ்டேல் மேடி said...

// நாங்க எல்லாம் வினிதா நடமாடராங்கன்னு தெரிஞ்சிகிட்டு விளக்கெல்லாம் அணைச்சிடுவோம்ன்னு //
ஏன் .....? அனந்த அம்முனிக்கு கண்ணு தெரிய கூடாதுன்னா....???

லவ்டேல் மேடி said...

///என்னோட ரூமிலே தங்கி இருந்த பொண்ணு ஊருக்குப் போய்ட்டாங்க. நான் தனியாதான் படுக்கணும். ///

அய்யய்யோ....!!! அப்போ பேய் பாவம்....!!! உங்க மொக்கைய தனியா கேக்க போகுது....!!!!!

லவ்டேல் மேடி said...

// அதெல்லாம் நினைவிற்கு வந்தவுடன் ரொம்ப அழ ஆரம்பிச்சுட்டேன். //

நோ..நோ..நோ ... நீங்க எதுக்கு பீல் பண்ணுறீங்க....!!! பேய்தான் பீல் பண்ணோனும்...!!!!!!

லவ்டேல் மேடி said...

// அப்போது பார்த்து அந்த நிசப்தத்தில் சலங்கை ஒலி கேட்க ஆரம்பித்தது. //
ரா... ரா......சரசுக்கு....... ரா....ரா....தாளமே நீவிரா...... ஏழுகோ சாசரா.......
ரா...... ரா...... ரம்யா... ரா.... ரா......அப்புடீன்னு பாட்டு பாடிகிட்டே வந்திருக்குமே.........????

லவ்டேல் மேடி said...

// நாங்க முன் பக்கமா உக்காந்து இருந்தோம். சத்தம் டைனிங் ஹாலுக்கும், சமையல் கட்டுக்கும் இடையே கேட்டுச்சு. //


அப்போ ... அது ... பாத்தரம் கழுவுற முனியம்மாவா இருக்கும்....!!!!!!!!

லவ்டேல் மேடி said...

/ உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. ///

சபாஷ்..... சரியான தீர்ப்பு......!!!!!!

லவ்டேல் மேடி said...

/// அங்கே ஒரு உருவம் என்னைப் பார்த்து கையை அசைத்தது. நான் அவ்வளவுதான்!! கத்த கூட தெரியாமல் பே பேன்னு சத்தம் போட்டேன். //

அய்யய்யோ....!!! நல்லா பாத்தீங்களா.... அது கண்ணாடியா இருந்திருக்கும்.....!!!!!!!!!!

லவ்டேல் மேடி said...

// அந்த கணக்கையும் நான் சரி பண்ணி கொடுப்பேன். //


இப்புடியெல்லாம் சொன்னா... நீங்க அறிவாளின்னு நாங்க ஒத்துக்க மாட்டோம்.......!!!!!!

லவ்டேல் மேடி said...

// அதனால் வார்டன் "சரி என் ரூமிலே வந்து படுத்துக்கோ. மீதி எல்லாம் காலையிலே பேசிக்கலாம். //

ஒருவேள அந்த சந்திரமுகி உங்க வார்டனா கோடா இருக்கலாமுங்கோவ்.......!!!!!!!!

லவ்டேல் மேடி said...

// இன்னும் நிறைய சொல்லுவேன் நமது கலாட்டாக்களை.//
மொக்கை தடரும்......
எதிர்பார்ப்புடன் ,

தம்பி மேடி.....

ச்சின்னப் பையன் said...

:-))))))))))))))))

me the 75...

Rajeswari said...

என்ஜாய் பண்ணி படிச்சேன்.நல்லா இருந்துச்சு.பேயினா பயமா..இருங்க பேய் டாட்டுவா அனுப்பி வைக்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு? உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு "கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான்? போலீசுக்கு சொல்ல? வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்".//

haiyoo haiyoo
என்னாதிது சின்னப்புள்ளத்தனமா.

சிரிப்பைத் தரும் நிகழ்வுகள்

நல்லா எழுதியிருக்கீங்க ரம்ஸ்

வால்பையன் said...

// வேறே ஒண்ணும் இல்லே! நான் ரொம்ப பயப்படறது பேய் பத்திதான். //

அய்யய்யோ.... வால்பையன பாத்து நீங்க ஏன் பயப்படனும்.....???? //

என்ன நக்கலா!

ஹாலிவுட், பாலிவுட்டெல்லாம் கியூவுல நிக்கிறாங்க என்ன வச்சு படம் எடுக்க!

நேசமித்ரன் said...

நல்ல பதிவுங்க..
சொன்ன விதமும் நல்லா இருந்துச்சு..
நல்லப் பேய் கதை

ஆதிமூலகிருஷ்ணன் said...

சும்மாவே படிக்க எழுத நேரமில்லை, இதுல இம்மாம் பெருசா எழுதுனா.. யாரு படிக்கிறது? பொறுங்க படிச்சிட்டு வர்றேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அப்பாடி படிச்சாச்சு.!

மிரர்ஸ்னு ஒரு படம் வந்திருக்குதாம். ஒங்குளுக்குன்னே பெசலா எடுத்திருக்காங்களாம். டிவிடி அனுப்பவா.?

சுரேஷ் குமார் said...

ஹய்யோ ஹய்யோ..
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை..

அட.. இங்கயும் கொலுசுசத்தம் கேக்குதுங்கோவ்..
மணிவேற 12 ஆச்சு..
அந்த பேய இங்க பார்வர்ட் பண்ணி விட்டுடின்களோ..

அ.மு.செய்யது said...

தாம‌த‌ வ‌ருகைக்கு ம‌ன்னிக்க‌வும்.

( இந்த‌ ப‌திவ நான் எப்ப‌டி மிஸ் ப‌ண்ணேன்.)

அ.மு.செய்யது said...

//வேறே ஒண்ணும் இல்லே! நான் ரொம்ப பயப்படறது பேய் பத்திதான்.//

அதெப்ப‌டி...??? (மீத‌ கேள்விய‌ நான் கேட்டே ஆக‌ணுமா ??)

அ.மு.செய்யது said...

//நல்லா எழுதியிருக்கீங்க ரம்ஸ்//

இந்த‌ க‌மெண்டை ர‌சித்தேன்.

//ஹாலிவுட், பாலிவுட்டெல்லாம் கியூவுல நிக்கிறாங்க என்ன வச்சு படம் எடுக்க!//

வால் அண்ணே...ஆனாலும் இது கொஞ்ச‌ம் ஓவ‌ரு

வால்பையன் said...

////ஹாலிவுட், பாலிவுட்டெல்லாம் கியூவுல நிக்கிறாங்க என்ன வச்சு படம் எடுக்க!//

வால் அண்ணே...ஆனாலும் இது கொஞ்ச‌ம் ஓவ‌ரு //

பேய் படத்துல தாங்க!
ஆனா ஹீரோவா!