Thursday, August 20, 2009

நாகராஜனுடன் ஒரு அரிய சந்திப்பு!!

நானும் நாகராஜனும்!!

ஒரு வருட காலம் சக்கரை ஆலை ஒன்றில் ப்ராஜெக்ட் பண்ணும் சூழ்நிலை எனக்கு அமைந்தது. வேலை அதிகமா இருந்த போதிலும் அரசாங்கத்துக்கு செய்யறோமேன்னு ஒரு திருப்தி மனதிற்கு கிடைத்ததனால் ப்ராஜெக்ட் செய்ய சம்மதித்தேன்.

அங்கேயே கெஸ்ட் ஹவுஸ். அதுலே எனக்கு சூப்பர் A.C. வசதியுடன் கூடிய ரூம் கொடுத்தாங்க. ரூமிலே கம்ப்யூட்டர். தெரிந்த மிக உயர்ந்த உறவு அப்போது அந்த கம்ப்யூட்டர்தான். அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் முன்னேதான் அமர்ந்திருப்பேன். அதுக்காக கேம்ஸ் விளையாடுவேன் என்று நினைக்காதீங்க. அப்படி வேலை செய்வேனாக்கும். இதுலே நாகராஜன் எங்கே இருந்து வந்தான் என்று யோசிக்கிறீங்களா? இருங்க விரிவா சொல்றேன்!

அந்த கெஸ்ட் ஹவுஸ்லே நிறைய பூக்கள் கிடைக்கும். பின்னால் அழகான நந்தவனம் இருக்கும். அந்த நந்தவனத்தில் பூக்கள் பூத்து குலுங்கும். செம்பருத்தி மரங்களின் கிளைகளை வளைத்து ஆர்ச் மாதிரி எல்லாம் நுழைவாயிலில் கட்டி இருப்பார்கள். அதில் செருகி வைத்தாற்போல் செம்பருத்தி பூக்கள் பூத்து குலுங்கும். நான் தினமும் அந்த பூக்களைப் பறித்து மாலையாக்கி எனது அறையில் உள்ள படங்களுக்கு போடுவேன்.

நந்தவனம் பக்கத்தில் IAS குவார்ட்டர்ஸ் இருக்கிறது. அங்கே பத்து பதினைந்து ரூம்கள் இருக்கிறது. வெளியே இருந்து வரும் கலெக்டர்கள் அங்கேதான் தங்குவார்கள்.

மாவட்டச் ஆட்சியாளர்கள் எந்தவித வித்தியாசம் இன்றி அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். அவங்களை எல்லாம் உணவு அருந்தும் சமயம் சந்திக்க நேரிடும். அதனால் அங்கே வரும் அனைவருக்கும் என்னை நன்றாகத் தெரியும். சரி, நம்ம கதைக்கு வருவோம்!!

ஒரு நாள் விடிந்தும் விடியாத காலை நேரம். நிறைய பூக்கள் பூத்திருந்தன வழக்கத்தைவிட மிக ஆர்வத்துடன் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தேன். மேலே எட்டிபிடித்தும் குதித்தும் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தேன். பூக்களை பிடித்து இழுக்கையில் ஆர்ச் மாதிரி வைத்திருந்த செம்பருத்தி மரம் அழகாக வளைந்து கொடுப்பது சுவாரசியமாக இருக்க அதி வேகத்துடன் குதித்து பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் எனது கழுத்தில் ஏதோ கணமாக விழுந்தது. எனக்கு ஒன்றும் புரியல. வினாடிக்கும் குறைந்த நேரத்தில் விழுந்தது நெளிய ஆரம்பித்தது. கழுத்தில் சத சத என்று ஈரம். கயறு என்று எடுத்துப் போட கையை வைத்தேன். வழ வழவென்று இருந்தது. அதனால் சந்தேகம் மனதில் ஒரு சிறு மின்னல் போல் தோன்றியது. இடது ஓரக்கண்ணால் என்னால் காண முடிந்தது! "நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார். எனது வலது புறம் அன்னாரின் வால் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறிய சத்தத்துடன் கதவை திறந்து கொண்டு ஒரு மாவட்ட ஆட்சியாளர் வெளியே வந்திருக்கிறார். கணப்பொழுதில் என் நிலை கண்டு பதறிப் போயிருக்கிறார். எனக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது. மனதில் எண்ணங்கள் வரிசையாக ஓட ஆரம்பித்தது. ஆஹா, நாளைக்கு நமக்கு பால் ஊத்துவது இப்பவே கண்களுக்கு தெரிய ஆரம்பிச்சிடுச்சே! இவ்வளவு சின்ன வயதிலேயா! இதுலே போயி வயது என்ன கணக்கு? இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் அது சர்வ நிச்சயம்!

பயத்திலே இயந்திரம் இல்லாமலே கை கால்கள் டைப் அடிக்க, எனது உதறல்கள் கழுத்திலே இருந்தவருக்கு புரியல போல. புரிந்திருந்தால் அன்னைக்கே போட்டு தள்ளி இருப்பாரு. இந்த பயந்த பொண்ணு நாட்டுக்கு தேவையே இல்லை என்று முடிவு பண்ணி இருப்பாரு. என்னா நான் சொல்றது சரிதானே நண்பர்களே!

இந்த விபரங்களை எழுதும்போதுதான் இவ்வளவு நேரம், களத்தில் நான் யோசித்து எடுத்த முடிவோ வினாடிக்கும் குறைவானதுதான். அப்போதுதான் நமது மூளை எவ்வளவு விரைவாக வேலை செய்கிறது என்பதை (பல முறை உணர்ந்ததுண்டு) மறுபடியும் உணரும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.

வாலைப் பிடித்து இழுக்கலாம்! என்ன நடக்கும்? கழுத்துலே போட்டுடுவார்! அதான் எனது இடதுபுறமாக அந்த நல்லவரை சடுதியில் இழுத்து தூக்கி எறிந்தேன். சுருண்டு போயி மணலில் விழுந்தார். விழுந்த வேகத்தில் படம் எடுத்து சிறிது நேரம் அப்படியே இருந்தார். அப்புறமா சர சரன்னு போய்ட்டார். அடுத்து அரை நொடியில் என்னைச் சுற்றி சிறு சல சலப்புடன் கூடிய கும்பல். அங்கே தங்கி இருந்தவர்கள் மற்றும் வேலையாட்கள் அனைவரும் என்னை சூழ்ந்து கொண்டனர்.

எனக்கு ஒன்றுமே விளங்கலை(விளங்காதது புதுசா என்ன - இது அடிக்கடி நிகழ்வதுதான்). அங்கே குவார்டர்ஸ்லே தங்கி இருந்த எனது நண்பிக்கு விஷயம் காற்றோடு செல்ல கணவர் சகிதமாக ஓடி வந்துவிட்டார். நானோ பேசும் நிலையில் இல்லை. வேறே என்ன நடந்ததை ஜீரணிக்க முடியாமல் பயத்துலே பேச்சு போச்சில்லே. உடல் முழுவதும் ஒரே நடுக்கம். கால்கள் பின்னி நடக்க முடியல! ஒரு வழியா எனது அறைக்கு வந்து செட்டில் ஆனேன்.

இந்த விஷயம் அதே காற்றோடு எனது அக்காவிற்கு செல்ல அடுத்த நாள் காலையில் அக்கா விஜயம்.

சில நாட்கள் ஆனது இந்த அனுபவத்தை மறக்க!!

94 comments :

நட்புடன் ஜமால் said...

"நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார். ]]

இன்னும் பயம் போகலை போல ...

நட்புடன் ஜமால் said...

விழுந்த வேகத்தில் படம் எடுத்து சிறிது நேரம் அப்படியே இருந்தார். அப்புறமா சர சரன்னு போய்ட்டார். ]]

ஆஹா! தப்பிச்சாரு நல்லவரு

SK said...

அது சரி .. எதோ பதிவர் சந்திப்பு நடந்த போல சொல்றீங்க :-)

RAMYA said...

ஆமாம் இப்போ நினைச்சாலும் நடுங்குதில்லே!

RAMYA said...

//
"நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார். ]]

இன்னும் பயம் போகலை போல
//

அமாம் பயம் போகலை

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
விழுந்த வேகத்தில் படம் எடுத்து சிறிது நேரம் அப்படியே இருந்தார். அப்புறமா சர சரன்னு போய்ட்டார். ]]

ஆஹா! தப்பிச்சாரு நல்லவரு
//

நான் தப்பிக்கலைன்னு வச்சுக்கோங்க ரம்யா இன்னைக்கு இல்லை :-)

நட்புடன் ஜமால் said...

நான் தப்பிக்கலைன்னு வச்சுக்கோங்க ரம்யா இன்னைக்கு இல்லை :-)]]

கூல் ...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
நான் தப்பிக்கலைன்னு வச்சுக்கோங்க ரம்யா இன்னைக்கு இல்லை :-)]]

கூல் ...

//

ஆஹா ஆஹா சரி சரி :-)

நட்புடன் ஜமால் said...

ஆஹா ஆஹா சரி சரி :-)]]

சிரி(ங்கோ) சிரி(ங்கோ)

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
ஆஹா ஆஹா சரி சரி :-)]]

சிரி(ங்கோ) சிரி(ங்கோ)
//

ச்ச்சே தனியா உக்காந்து சிரிச்சா லூசுன்னு நினைக்க மாட்டாங்க :)

நிஜமா நல்லவன் said...

அடடா...செம த்ரில்லிங்கா இருந்திருக்கும்...இப்படி எல்லாம் அனுபவிக்க கொடுத்து வச்சிருக்கணும்:)))))

RAMYA said...

//
நிஜமா நல்லவன் said...
அடடா...செம த்ரில்லிங்கா இருந்திருக்கும்...இப்படி எல்லாம் அனுபவிக்க கொடுத்து வச்சிருக்கணும்:)))))
//

இப்போ நினைச்சாலும் உள்ளூர நடுங்குது அண்ணே!

Vidhoosh said...

ஆஹா! கொடுத்து வைத்தவர் அல்லவா (பாம்புக்கே அல்வா) நீங்கள்.

பாம்பை கழுத்தில் போட்டு, நடனம் (கால் நடுங்கியபடி) ஆடிய பரமசிவாயினி வாழ்க வாழ்க.

-வித்யா

அ.மு.செய்யது said...

திகில் அனுபவம் தான்.நாங்கெல்லாம் அனகோண்டா கூடவே டேட்டிங் போறவங்க..எங்க கிட்டயேவா ??

( நலம் தானே ?? அறுவை சிகிச்சை முடிந்து தொலைபேச வேண்டும் என்று நினைத்து கொண்டேயிருந்தேன்.
அவுட் கோயிங் தற்காலிகமாக ( 2 நாள் ) நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.கேட்டால் பில் கட்டவில்லை என்று எகத்தாளம் செய்கிறார்கள் )

துபாய் ராஜா said...

நல்லா கெளப்பறீங்க பீதியை...!!!

'நாகராஜனுடன் ஒரு அரிய சந்திப்பு'
இல்லைன்னா
'நாகராஜனுடன் அறியாமல் ஒரு சந்திப்பு' என்று தலைப்பு வந்தால் சரியாக இருக்கும்னு நினைக்கிறேன்.

RAMYA said...

//
திகில் அனுபவம் தான்.நாங்கெல்லாம் அனகோண்டா கூடவே டேட்டிங் போறவங்க..எங்க கிட்டயேவா ??
//

அட இதை சொல்லவே இல்லையே சொல்லி இருந்தால் ஒரு பத்து நல்லவங்களை அனுப்பி இருப்போமே :)

//
( நலம் தானே ?? அறுவை சிகிச்சை முடிந்து தொலைபேச வேண்டும் என்று நினைத்து கொண்டேயிருந்தேன்.
அவுட் கோயிங் தற்காலிகமாக ( 2 நாள் ) நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.கேட்டால் பில் கட்டவில்லை என்று எகத்தாளம் செய்கிறார்கள் )
//

ஹாய் நான் நலம், பில்லு கட்டாத போன் எதுக்குன்னு சுரேஷ் கேக்குறாரு
அதை உடனே கூரியர்லே பண்ணி அனுப்புவீங்களாம்

RAMYA said...

//
Vidhoosh said...
ஆஹா! கொடுத்து வைத்தவர் அல்லவா (பாம்புக்கே அல்வா) நீங்கள்.

பாம்பை கழுத்தில் போட்டு, நடனம் (கால் நடுங்கியபடி) ஆடிய பரமசிவாயினி வாழ்க வாழ்க.

-வித்யா
//

வாங்க Vidhoosh வரவிற்கு நன்றிங்க!
பட்டபெயருக்கும் நன்றிங்க :))

RAMYA said...

//
துபாய் ராஜா said...
நல்லா கெளப்பறீங்க பீதியை...!!!

'நாகராஜனுடன் ஒரு அரிய சந்திப்பு'
இல்லைன்னா
'நாகராஜனுடன் அறியாமல் ஒரு சந்திப்பு' என்று தலைப்பு வந்தால் சரியாக இருக்கும்னு நினைக்கிறேன்.
//

வாங்க துபாய் ராஜா

வருகைக்கு நன்றி!

நீங்க சொல்றதும் சரியா இருக்கும்:)

SK said...

தம்பிக்கு பதில் சொல்லாத அக்காவை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் :-)

RAMYA said...

SK said...
அது சரி .. எதோ பதிவர் சந்திப்பு நடந்த போல சொல்றீங்க :-)

//
RAMYA said...
ஆமாம் இப்போ நினைச்சாலும் நடுங்குதில்லே
//

ஹையோ ஹையோ உங்க கமெண்ட் எடுத்து போடாமல் நான் கமெண்ட் எழுதிட்டேனா மன்னிக்க தம்பி :)

//
SK said...
தம்பிக்கு பதில் சொல்லாத அக்காவை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் :-)
//

வேணாம் வேணாம் வெளிநடப்பு அதற்கு பதிலா உள்ளிரிப்பு போராட்டம் நல்லா இருக்குமே தம்பி. சரியா எழுதாம போனதிக்கு மன்னிக்க தம்பி.

மேலே என்னோட கமெண்ட் படிக்கவும். உங்களுக்குத்தான் எழுதினேன்.

ஆனா உங்க கமெண்ட் எடுத்து போட தவறிட்டேன் தம்பி:)

இராகவன் நைஜிரியா said...

// "நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார். //

பெரிய பட்ஜெட் படமா எடுத்தாரா இல்ல சின்ன பட்ஜெட் படமா எடுத்தாராங்க..

இராகவன் நைஜிரியா said...

என்னா இது சின்னப்புள்ள மாதிரி பாம்பு கூட எல்லாம் விளையாடிகிட்டு..

இராகவன் நைஜிரியா said...

நீங்க டான்ஸ் ஆடிய மாதிரியே, பாம்பும் டான்ஸ் ஆடியதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

க. பாலாஜி said...

//எனக்கு ஒன்றுமே விளங்கலை(விளங்காதது புதுசா என்ன - இது அடிக்கடி நிகழ்வதுதான்).//

அதானே... நாமல்லாம் யாரு...

ரெட்மகி said...

நிஜமாலுமே

நீங்க

ஒரு

..
..
வீரத்(?) தமிழச்சி தான் ...

ஜானி வாக்கர் said...

//நிஜமாலுமே

நீங்க

ஒரு

..
..
வீரத்(?) தமிழச்சி தான் ...//

நீங்க வேற என்னவோ சொல்ல வந்த மாதிரி இருக்கு, இல்லய?

ரெட்மகி said...

//நிஜமாலுமே

நீங்க

ஒரு

..
..
வீரத்(?) தமிழச்சி தான் ...//

நீங்க வேற என்னவோ சொல்ல வந்த மாதிரி இருக்கு, இல்லய?

//
இல்லப்பா...

என்ன உலகமடா இது

ஒரு வாழ்த்து கூட சொல்ல முடியல

அண்ணன் வணங்காமுடி said...

நாகராஜனும்!!

You Mean Snake King...

அண்ணன் வணங்காமுடி said...

நான் தினமும் அந்த பூக்களைப் பறித்து மாலையாக்கி எனது அறையில் உள்ள படங்களுக்கு போடுவேன். //

ரம்யா அறைல என்ன படம் மாட்டி வெச்சிருந்தாங்க?

A. Shahrukh Khan
B. Salman Khan
C. Shana Khan
D. Amir Khan
E. All the Above
F. None

புள்ளி விவரம்...

ஜீவன் said...

இதே மேட்டர அந்த நாகராஜன் பார்வையில் இருந்து பார்த்தா ? ஒருவேள அந்த நாகராஜன் பதிவு போட்டா என்ன தலைப்பு வைப்பார் ?

''ரம்யாவிடமிருந்து நான் தப்பித்த கதை''

''ரம்யாவுடன் திக் திக் நிமிடங்கள்''

இப்படியெல்லாம் யோசிப்பாரோ ?

அண்ணன் வணங்காமுடி said...

விழுந்த வேகத்தில் படம் எடுத்து சிறிது நேரம் அப்படியே இருந்தார். அப்புறமா சர சரன்னு போய்ட்டார். //

Great Escape...

அண்ணன் வணங்காமுடி said...

Great Escape nu நான் பாம்ப சொன்னேன்...

வால்பையன் said...

அடப்பாவமே எதோ ஒரு இடம் சும்மா சொகுசா கிடைச்சதன்னு ஓய்வு எடுக்க வந்த அந்த நல்லவர இப்படியா தூக்கி எறியுறது!

RAD MADHAV said...

புல்லரிக்கும் அனுபவம்.
படித்துக்கொண்டிருந்த போது என் கழுத்தில் ஏதோ பொத் என்று விழுந்தது போல் இருந்தது :-)

RAD MADHAV said...

//RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
ஆஹா ஆஹா சரி சரி :-)]]

சிரி(ங்கோ) சிரி(ங்கோ)
//

ச்ச்சே தனியா உக்காந்து சிரிச்சா லூசுன்னு நினைக்க மாட்டாங்க :)//

ச்சே ச்சே... அப்படி எல்லாம் யாராவது நினைப்பார்களா....
ஒருவேளை 'பைத்தியம்' என்று யாராவது நினைக்கலாம் :-)

RAD MADHAV said...

//ஒரு வருட காலம் சக்கரை ஆலை ஒன்றில் ப்ராஜெக்ட் பண்ணும் சூழ்நிலை எனக்கு அமைந்தது. வேலை அதிகமா இருந்த போதிலும் அரசாங்கத்துக்கு செய்யறோமேன்னு ஒரு திருப்தி மனதிற்கு கிடைத்ததனால் ப்ராஜெக்ட் செய்ய சம்மதித்தேன். //

சம்பளம் வாங்குனீங்களா இல்லையா... அதச் சொல்லுங்க முதல்ல:-))

सुREஷ் कुMAர் said...

//
இடது ஓரக்கண்ணால் என்னால் காண முடிந்தது! "நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார்.
//
கலரா.. பிளாக் அண்ட் வொய்ட்டா.. படம் நல்லா வந்ததா..

सुREஷ் कुMAர் said...

கரும்புக்காடுனாலே இப்டித்தான்.. ரொம்ப டேன்ஜரானாது..

सुREஷ் कुMAர் said...

//
ஆஹா, நாளைக்கு நமக்கு பால் ஊத்துவது இப்பவே கண்களுக்கு தெரிய ஆரம்பிச்சிடுச்சே! இவ்வளவு சின்ன வயதிலேயா!
//
சைக்கிள் கேப்புல யூத்து யூத்துனு துண்ட போட்டுகிடுறது.. நடத்துங்க.. நடத்துங்க..

सुREஷ் कुMAர் said...

//
இந்த பயந்த பொண்ணு நாட்டுக்கு தேவையே இல்லை என்று முடிவு பண்ணி இருப்பாரு. என்னா நான் சொல்றது சரிதானே நண்பர்களே!
//
இல்லஅஅ.. ஆனா சரி மாதிரிதான் தெரியுது..

सुREஷ் कुMAர் said...

//
சில நாட்கள் ஆனது இந்த அனுபவத்தை மறக்க!!
//

மறந்துட்டிங்களா.. அப்புறம் எப்படி இப்போ எழுதிருக்கிங்க..

सुREஷ் कुMAர் said...

சூப்பர் அனுபவம்.. நாகராஜனுக்கு வாழ்த்துக்கள்..

தண்டோரா ...... said...

ஒரு சூடம் கொளுத்தி வச்சிருக்கலாமில்ல....

நேசமித்ரன் said...

:)

C said...

ரொம்ப மொக்கை போடறீங்க. கொஞ்சம் சுமாராவாவது எழுத கூடாதா ?

ஆ.ஞானசேகரன் said...

//"நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார். //

என்னங்க பீதிய கிளப்புறீங்க...

லவ்டேல் மேடி said...

// "நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார். //

அட ... லைவ் ஷூட்டிங்....!! அக்கோவ்..... யாரு ஹீரோ ... யாரு ஹீரோயின்.....? படம் பேரு நல்லவரா... இல்ல டையரக்டார் பேரு நல்லவரா....?

// ஒரு மாவட்ட ஆட்சியாளர் வெளியே வந்திருக்கிறார். //

ஒரு மாவட்டம் - அப்புடி ஏதும் மாவட்டம் இருக்குதா.....?

// எனக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது. //

ஏன்னா.... நீங்க ரொம்ப ஃபாஸ்ட்டு ..........

// மனதில் எண்ணங்கள் வரிசையாக ஓட ஆரம்பித்தது. //
அப்போ ரொம்ப பெரிய கியூ'வா இருந்திருக்குமே......?

// ஆஹா, நாளைக்கு நமக்கு பால் ஊத்துவது இப்பவே கண்களுக்கு தெரிய ஆரம்பிச்சிடுச்சே! //

எங்க வீடுல்கோடதான் பால்காரரு தெனமும் பால் ஊத்துராறு........

// இவ்வளவு சின்ன வயதிலேயா! //

ஹலோ...ஹலோ...... அத..... நாங்க சொல்லணும்.......

// இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் அது சர்வ நிச்சயம்! //

பொன்மொழி : 10,98768865,775546548484347209977544646456

// இந்த பயந்த பொண்ணு நாட்டுக்கு தேவையே இல்லை என்று முடிவு பண்ணி இருப்பாரு. //

அத நாங்க எப்பவோ முடிவு பன்நீட்டோம் ....!!

லவ்டேல் மேடி said...

// என்னா நான் சொல்றது சரிதானே நண்பர்களே! //

ம்ம்க்க்ம்ம் ...... இதுவேறையா .......??

// அப்போதுதான் நமது மூளை எவ்வளவு விரைவாக வேலை செய்கிறது என்பதை (பல முறை உணர்ந்ததுண்டு) மறுபடியும் உணரும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.//அட .... அப்புடியா ......?

// வாலைப் பிடித்து இழுக்கலாம்! என்ன நடக்கும்? //

அட..... ஏனுங்கோவ் ..... வால் பையன் என்ன பண்ணுனாரு ......!!
// விழுந்த வேகத்தில் படம் எடுத்து சிறிது நேரம் அப்படியே இருந்தார். //

பயங்கர ஆக்ஷன் கேமரா மேன்'ஆ இருப்பாரட்டோ......??// அப்புறமா சர சரன்னு போய்ட்டார். //

சவுண்டு வந்தத கேட்டீங்களா.........??/

// அடுத்து அரை நொடியில் என்னைச் சுற்றி சிறு சல சலப்புடன் கூடிய கும்பல். //ஹே......ஹே..... எல்லாரும் ஜோரா ஒரு தடவ கை தட்டுங்க......!!

லவ்டேல் மேடி said...

// நானோ பேசும் நிலையில் இல்லை. //

அப்போ மொழி ஜோதிகா மாதிரி ஆயிட்டீங்களா......?

// உடல் முழுவதும் ஒரே நடுக்கம். //

பில்டிங் ஸ்ட்ராங்கு ..... பேஷ் மட்டம் கொஞ்சம் வீக்கு........

// சில நாட்கள் ஆனது இந்த அனுபவத்தை மறக்க!! //வீர மங்கை .... ரம்யா அக்கா .... வாழ்க.....வாழ்க......

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது...

பரமசிவன்=ரம்யா

கோர்வையா இருக்கு.

எழுத்து மட்டும் அல்ல பாம்பும்தான்!

வால்பையன் said...

//பரமசிவன்=ரம்யா//

வரம் கொடுப்பாங்களா!?

அமிர்தவர்ஷினி அம்மா said...

SK said...
அது சரி .. எதோ பதிவர் சந்திப்பு நடந்த போல சொல்றீங்க :-)

haaahaaa

ரம்ஸ் சூப்பர் போஸ்ட்

நல்லா எஞ்சாய் பண்ணி எழுதியிருக்கீங்க போல.
உங்கள ஒரு நிமிசம் மனக்கண்ணுல பாம்போடு நிறுத்திப்பார்த்தேன்.

ஆத்தாடி...............

சூரியன் said...

நல்லவர ஏங்க தூக்கி போட்டிங்க ?

ஏதொ இலவச பட்ஜெட்ல எடுத்தவர இப்படி தூக்கி வீசிட்டிங்களே ..

ஒரு வேளை படத்துக்கு கதநாயகிய தேடி வந்துச்சோ ?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// "நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார். //

பெரிய பட்ஜெட் படமா எடுத்தாரா இல்ல சின்ன பட்ஜெட் படமா எடுத்தாராங்க..
//

பட்ஜெட்டா ஆஆஆஆஆ :))

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
என்னா இது சின்னப்புள்ள மாதிரி பாம்பு கூட எல்லாம் விளையாடிகிட்டு..
//

ஐயோ அண்ணா இப்போ நினைச்சாலும் அந்த நிகழ்ச்சியை கதி கலங்குது தப்பிச்சேன் போங்க!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
நீங்க டான்ஸ் ஆடிய மாதிரியே, பாம்பும் டான்ஸ் ஆடியதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
//

அவரு டான்ஸ் ஆடி இருந்தா எனக்கு சங்கு ஊதி இருப்பாங்களே:)

நான் ஏன் அசையறேன் ஆணி அடிச்சமாதிரி இல்லே நின்னேன்!

RAMYA said...

//
க. பாலாஜி said...
//எனக்கு ஒன்றுமே விளங்கலை(விளங்காதது புதுசா என்ன - இது அடிக்கடி நிகழ்வதுதான்).//

அதானே... நாமல்லாம் யாரு...
//

ஆமாம் பாலாஜி உண்மையை ஒத்துக்கணும் இல்லே!

அதான் ஒத்துக்கிட்டேன் :))

RAMYA said...

//
ரெட்மகி said...
நிஜமாலுமே

நீங்க

ஒரு

..
..
வீரத்(?) தமிழச்சி தான் ...

//

அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க ஆனா இல்லே :))

RAMYA said...

//
ஜானி வாக்கர் said...
//நிஜமாலுமே

நீங்க

ஒரு

..
..
வீரத்(?) தமிழச்சி தான் ...//

நீங்க வேற என்னவோ சொல்ல வந்த மாதிரி இருக்கு, இல்லய?
//

வாங்க வாங்க ஜானி வாக்கர்
அப்படியா! :))

RAMYA said...

//
ரெட்மகி said...
//நிஜமாலுமே

நீங்க

ஒரு

..
..
வீரத்(?) தமிழச்சி தான் ...//

நீங்க வேற என்னவோ சொல்ல வந்த மாதிரி இருக்கு, இல்லய?

//
இல்லப்பா...

என்ன உலகமடா இது

ஒரு வாழ்த்து கூட சொல்ல முடியல
//

சரி சரி உங்க வாழ்த்தை நான் ஏத்துகிட்டேன் நன்னி :))

RAMYA said...

//
அண்ணன் வணங்காமுடி said...
நாகராஜனும்!!

You Mean Snake King...
//

Ya Ya Ya Ya Ya Ya Ya Ya !!

RAMYA said...

//
அண்ணன் வணங்காமுடி said...
நான் தினமும் அந்த பூக்களைப் பறித்து மாலையாக்கி எனது அறையில் உள்ள படங்களுக்கு போடுவேன். //

ரம்யா அறைல என்ன படம் மாட்டி வெச்சிருந்தாங்க?

A. Shahrukh Khan
B. Salman Khan
C. Shana Khan
D. Amir Khan
E. All the Above
F. None

புள்ளி விவரம்...
//

ஹேய் மாலை இவங்களுக்கு இல்லேப்பா சாமி படத்துக்கு
நீங்க என்ன ஆசாமிங்க பெயரை எழுதி இருக்கீங்க!!

RAMYA said...

//
லவ்டேல் மேடி said...
// "நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார். //

அட ... லைவ் ஷூட்டிங்....!! அக்கோவ்..... யாரு ஹீரோ ... யாரு ஹீரோயின்.....? படம் பேரு நல்லவரா... இல்ல டையரக்டார் பேரு நல்லவரா....?
//

ஹேய் இருங்க கேட்டு சொல்றேன் :))

RAMYA said...

//
ஜீவன் said...
இதே மேட்டர அந்த நாகராஜன் பார்வையில் இருந்து பார்த்தா ? ஒருவேள அந்த நாகராஜன் பதிவு போட்டா என்ன தலைப்பு வைப்பார் ?

''ரம்யாவிடமிருந்து நான் தப்பித்த கதை''

''ரம்யாவுடன் திக் திக் நிமிடங்கள்''

இப்படியெல்லாம் யோசிப்பாரோ ?
//

ஆஹா ஜீவன் உங்க கமெண்ட் சும்மா சொல்லக் கூடாது அருமை!

நாகராஜா பதிவு எழுதினா நீஙகள்
கொடுத்துள்ள தலைப்புக்கள்
பொருந்தும்னு நினைக்கிறேன்.

எங்கேயாவது அவரை பார்த்தால் உங்க தலைப்புக்கள் பற்றி கூறி கருத்துகளை கேட்டு சொல்றேன்.

ஐயோ! நினைக்கும்போதே நடுங்குதே!

RAMYA said...

//
அண்ணன் வணங்காமுடி said...
விழுந்த வேகத்தில் படம் எடுத்து சிறிது நேரம் அப்படியே இருந்தார். அப்புறமா சர சரன்னு போய்ட்டார். //

Great Escape...
//

ஹேய்! நானா கிழே விழுந்தவரா??

RAMYA said...

//
வால்பையன் said...
அடப்பாவமே எதோ ஒரு இடம் சும்மா சொகுசா கிடைச்சதன்னு ஓய்வு எடுக்க வந்த அந்த நல்லவர இப்படியா தூக்கி எறியுறது!
//

ஆரம்பிச்சுட்டங்கையா ஆரம்பிச்சுட்டாங்க:))

இவரே சொல்லி கொடுப்பாரு போல இருக்கே:-)

RAMYA said...

//

பரமசிவன்=ரம்யா

கோர்வையா இருக்கு.

எழுத்து மட்டும் அல்ல பாம்பும்தான்!
//

ஒரு பெரிய பாட்டே எழுதிட்டீங்களே அண்ணா அருமையான பாட்டு,

இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.

RAMYA said...

//
RAD MADHAV said...
புல்லரிக்கும் அனுபவம்.
படித்துக்கொண்டிருந்த போது என் கழுத்தில் ஏதோ பொத் என்று விழுந்தது போல் இருந்தது :-)
//

இது நடந்து நாலு வருஷம் இருக்கும் இப்போ நினைச்சாலும் அவ்வ்வ்வ்வ்வ்..............

RAMYA said...

//
RAD MADHAV said...
//RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
ஆஹா ஆஹா சரி சரி :-)]]

சிரி(ங்கோ) சிரி(ங்கோ)
//

ச்ச்சே தனியா உக்காந்து சிரிச்சா லூசுன்னு நினைக்க மாட்டாங்க :)//

ச்சே ச்சே... அப்படி எல்லாம் யாராவது நினைப்பார்களா....
ஒருவேளை 'பைத்தியம்' என்று யாராவது நினைக்கலாம் :-)
//

அதுனாலே தான் ஜமால் சொல்லியயும் நான் சிரிக்கவே இல்லே:-)

RAMYA said...

//
RAD MADHAV said...
//ஒரு வருட காலம் சக்கரை ஆலை ஒன்றில் ப்ராஜெக்ட் பண்ணும் சூழ்நிலை எனக்கு அமைந்தது. வேலை அதிகமா இருந்த போதிலும் அரசாங்கத்துக்கு செய்யறோமேன்னு ஒரு திருப்தி மனதிற்கு கிடைத்ததனால் ப்ராஜெக்ட் செய்ய சம்மதித்தேன். //

சம்பளம் வாங்குனீங்களா இல்லையா... அதச் சொல்லுங்க முதல்ல:-))
//

அதெல்லாம் கொடுத்திட்டாங்க RAD MADHAV :)

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
இடது ஓரக்கண்ணால் என்னால் காண முடிந்தது! "நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார்.
//
கலரா.. பிளாக் அண்ட் வொய்ட்டா.. படம் நல்லா வந்ததா..
//

பயந்து போயி இருக்குற புள்ளே கிட்டே கேக்குற கேள்வியை பாரு கேள்விய:) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ..

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
இந்த பயந்த பொண்ணு நாட்டுக்கு தேவையே இல்லை என்று முடிவு பண்ணி இருப்பாரு. என்னா நான் சொல்றது சரிதானே நண்பர்களே!
//
இல்லஅஅ.. ஆனா சரி மாதிரிதான் தெரியுது..
//

ஹேய் என்ன சந்தேகம் பட்டுன்னு சொல்லிட வேண்டியதுதானே :)

RAMYA said...

//
தண்டோரா ...... said...
ஒரு சூடம் கொளுத்தி வச்சிருக்கலாமில்ல....
//

வாங்க தண்டோரா சூடமா எதுக்கு
முடிவே பண்ணிட்டீங்களா :))

RAMYA said...

//
நேசமித்ரன் said...
:)
//

வாங்க நேசமித்ரன் உங்க சிரிப்பிற்கு நன்றி!

RAMYA said...

//
C said...
ரொம்ப மொக்கை போடறீங்க. கொஞ்சம் சுமாராவாவது எழுத கூடாதா ?
//

Noted.........

RAMYA said...

//
C said...
ரொம்ப மொக்கை போடறீங்க. கொஞ்சம் சுமாராவாவது எழுத கூடாதா ?
//

Noted.........

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
//"நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார். //

என்னங்க பீதிய கிளப்புறீங்க...
//

நானே அன்னைக்கு பீதியிலே உறைந்து போயி அப்புறம் நிதானத்துக்கு வந்தேன்.

RAMYA said...

//
வால்பையன் said...
//பரமசிவன்=ரம்யா//

வரம் கொடுப்பாங்களா!?
//

என்ன வரம் வேணும் மகனே கேள்:))

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
SK said...
அது சரி .. எதோ பதிவர் சந்திப்பு நடந்த போல சொல்றீங்க :-)

haaahaaa

ரம்ஸ் சூப்பர் போஸ்ட்

நல்லா எஞ்சாய் பண்ணி எழுதியிருக்கீங்க போல.
உங்கள ஒரு நிமிசம் மனக்கண்ணுல பாம்போடு நிறுத்திப்பார்த்தேன்.

ஆத்தாடி...............
//

ஆமா அமித்து அம்மா இன்னமும் அந்த அதிர்வுகள் என்னிடம் உள்ளன
நினைத்த மாத்திரத்தில் பயந்த உணர்வுகள் என்னை சூழ்ந்து கொள்ளும்!

RAMYA said...

//
சூரியன் said...
நல்லவர ஏங்க தூக்கி போட்டிங்க ?

ஏதொ இலவச பட்ஜெட்ல எடுத்தவர இப்படி தூக்கி வீசிட்டிங்களே ..

ஒரு வேளை படத்துக்கு கதநாயகிய தேடி வந்துச்சோ ?
//

ஆஹா நீங்களே சொல்லி கொடுப்பீங்க போல இருக்கே:)

ஆமா எங்கே பையை தூக்கிகிட்டு கிளம்பிட்டீங்க?

போன இடுகையிலே இந்த கேள்வியை கேட்டேன் அதுக்கு இன்னமும் பதில் சொல்லவே இல்லே:))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

"நாகராஜனுடன் ஒரு அறிய சந்திப்பு!!"//

தலைப்பை பார்த்தவுடன் முன்னாள் உள்துறை செயலாளர் நாகராஜன்(ஐ.ஏ.எஸ்) அவர்களை ஜெயிலில் போய் சந்திச்சிங்களோன்னு நினைச்சேன்!
:) :P

R.Gopi said...

டைட்டில் பாத்த‌ உட‌னே, இவ‌ர் ப‌ற்றித்தான் எழுத‌ போகிறீர்க‌ள் என்று நினைத்தேன்...

//வாலைப் பிடித்து இழுக்கலாம்! என்ன நடக்கும்?//

வாலை பிடித்து இழுத்தால், எப்போதுமே பெரிய‌ டேஞ்ச‌ர்தான்...

//எனக்கு ஒன்றுமே விளங்கலை(விளங்காதது புதுசா என்ன - இது அடிக்கடி நிகழ்வதுதான்).//

இதை ஒப்புக்கொள்ள‌ உங்க‌ளை மாதிரி தைரிய‌ம் யாருக்கு வ‌ரும்?

//நானோ பேசும் நிலையில் இல்லை. வேறே என்ன நடந்ததை ஜீரணிக்க முடியாமல் பயத்துலே பேச்சு போச்சில்லே.//

நா... நா... பா...பா....பாம்....பாம்.....பாம்பூஊஊஊஊஊஊஉ..

//சில நாட்கள் ஆனது இந்த அனுபவத்தை மறக்க!! //

சில‌ நாளா.... எவ்ளோ நாள் ஆனாலும் இதை ம‌ற‌க்க‌ முடியாது....

நானும், நாகாவும்...இது ஒரு திகில் அனுபவம்.. ஒரு சிறிய‌ அறையில் மாட்டிக்கொண்ட‌ அவ‌ரும், அவ‌ரை தேடி அந்த‌ சிறிய‌ அறையில் உள்ளே சென்ற‌ நான், அவ‌ரிட‌ம் மாட்டிக்கொண்டதும் (அது நடந்து 10/15 வருஷம் இருக்கும்).... இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிற‌து...

குடந்தை அன்புமணி said...

செம ‘தில்’தான். அந்தக்
க(ன)ணத்தை நினைத்துப் பார்த்தால் ஒரு திகில் மனதில் பரவுவதைப் போல் உணர்கிறேன்.

ஜீவனின் பின்னூட்டத்தை ரசித்தேன்.

ஷ‌ஃபிக்ஸ் said...

தலைப்பையும் இன்ட்ரோவையும் பார்த்துட்டு நாகராஜன் ஒரு 'கலெக்ட்டரா' இருப்பாரோ பார்த்தா இவரு ஒரு 'பைட்டரு'!!

எம்.எம்.அப்துல்லா said...

//நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார். ]] //

டைரக்டர் போல :))

sakthi said...

ஏதோ பெரிய ஆபிஸருடன் நடந்த சந்திப்பு மாதிரி சொல்றீங்க

RAMYA said...

//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
"நாகராஜனுடன் ஒரு அறிய சந்திப்பு!!"//

தலைப்பை பார்த்தவுடன் முன்னாள் உள்துறை செயலாளர் நாகராஜன்(ஐ.ஏ.எஸ்) அவர்களை ஜெயிலில் போய் சந்திச்சிங்களோன்னு நினைச்சேன்!
:) :P
//

ஆஹா! ஆஹா! ஆரம்பிச்சிட்டங்கையா ஆரம்பிச்சிட்டங்க :-)

RAMYA said...

//
R.Gopi said...
//சில நாட்கள் ஆனது இந்த அனுபவத்தை மறக்க!! //

சில‌ நாளா.... எவ்ளோ நாள் ஆனாலும் இதை ம‌ற‌க்க‌ முடியாது....

நானும், நாகாவும்...இது ஒரு திகில் அனுபவம்.. ஒரு சிறிய‌ அறையில் மாட்டிக்கொண்ட‌ அவ‌ரும், அவ‌ரை தேடி அந்த‌ சிறிய‌ அறையில் உள்ளே சென்ற‌ நான், அவ‌ரிட‌ம் மாட்டிக்கொண்டதும் (அது நடந்து 10/15 வருஷம் இருக்கும்).... இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிற‌து...
//

ஆமா கோபி இதை மறக்க முடியாத அனுபவம் என் வாழ்க்கையில்.
இந்த சம்பவத்தை எப்பவோ எழுதி வைத்து விட்டேன்
வலையேற்றதான் கொஞ்சம் தாமதமாகி விட்டது
நன்றி கோபி!

அப்புறம் உங்களுக்கும் இப்படி ஒரு அனுபவம் நிகழ்ந்திருக்கிறது.
நினைக்கவே மனதிற்கு ரொம்ப பயமா இருக்கு. அப்போ கண்டிப்பா
உங்களக்கு எனது நிலைதான்னு சொல்லுங்க :))

RAMYA said...

//
குடந்தை அன்புமணி said...
செம ‘தில்’தான். அந்தக்
க(ன)ணத்தை நினைத்துப் பார்த்தால் ஒரு திகில் மனதில் பரவுவதைப் போல் உணர்கிறேன்.

ஜீவனின் பின்னூட்டத்தை ரசித்தேன்.
//

ஆமா அன்பு செம தில்லான தருணங்கள்தான்.

ஜீவனின் பின்னூட்டம் படித்த அனைவருமே ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க.

ரசனைக்கு நன்றி அன்புமணி!

RAMYA said...

//
ஷ‌ஃபிக்ஸ் said...
தலைப்பையும் இன்ட்ரோவையும் பார்த்துட்டு நாகராஜன் ஒரு 'கலெக்ட்டரா' இருப்பாரோ பார்த்தா இவரு ஒரு 'பைட்டரு'!!
//

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஷ‌ஃபிக்ஸ்!

RAMYA said...

//
எம்.எம்.அப்துல்லா said...
//நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார். ]] //

டைரக்டர் போல :))
//

வாங்க அப்துல்லா! வருகைக்கும்
கருத்திற்கும் நன்றி சகோதரா!!

RAMYA said...

//
sakthi said...
ஏதோ பெரிய ஆபிஸருடன் நடந்த சந்திப்பு மாதிரி சொல்றீங்க
//

அது ஒரு திகில் அனுபவம் சகோதரி!

இசக்கிமுத்து said...

ஐயோ படிக்கும் போதே திகிலா இருக்குதே,அப்போது ஏற்பட்ட உங்கள் நிலமையை நினைக்கையில்..ரொம்ப பயம் தான், பரவாயில்லை தைரியமா செயல்பட்டுருக்கீங்க!!!

குடுகுடுப்பை said...

வீரத்தமிழச்சி வாழ்வாங்கு வாழ்க