சங்கருக்கு தலை தட்டாமாலை சுற்ற ஒன்றும் விளங்காதவராக அடுத்து என்ன செய்வது என்று புரியாமலும், உதவிக்கு யார் வருவார்கள் என்று மனம் அலைபாய, வீட்டிற்கும் காவல் நிலையத்திற்குமாக அலைந்து கொண்டிருக்கும் போதே, அவரின் மனைவி மற்றும் மகளை (வயது பதினெட்டு) அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். பயந்து போன
சங்கர் ஐயோ! என்னோட மொத்த குடும்பமும் இப்படி ஆகிவிட்டதே என்று அங்கலாய்த்த வண்ணம் என்ன செய்யலாம் என்று சங்கருக்கு குழப்பம் மிகுதியால் விவரம் அறிய மகள் வேலை செய்த வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கே வெளியூரில் இருந்து வந்துவிட்ட கணவனும் மனைவியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிராகள். சங்கர் உள்ளே என்ட்ரி ஆனதும் மிகவும் சாதரணமாக பேசி அனுப்ப முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் சங்கரோ என்ன நடந்திச்சு எனக்கு எதுவுமே புரியல, உங்க வீட்டுலே நடந்த திருட்டுக்கும் எங்க வீட்டு மனுஷங்களுக்கும் என்ன தொடர்பு என்று அழமாட்டாத குறையா விசாரித்திருக்கிறார்.
Tuesday, November 3, 2009
நியாயங்கள் எங்கு கிடைக்கும்!!
நியாயங்களைத் கேட்டும், நீதியைத் தேடியும், நேர்மையை நாடியும் நாம் ஓடினோம், ஓடிக் கொண்டிருக்கிறோம், ஓடிக் கொண்டிருப்போம். இன்னும் இவைகளை அடைய முடியவில்லை என்ன செய்ய? அடையும் தூரம் அதிகமாக இருக்கிறது!!!
நான் எழுதுவது இந்த சமுதாயத்தில் சில மாதங்களுக்கு முன்னால் சத்தமில்லாமல் அரங்கேறிய ஒரு உறைய வைக்கும் உண்மைச் சம்பவம்.
ஒரு வீட்டில் கனகம்மா பல வருடங்களாக வீட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்(பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன). தனது மூத்த மகள் பிரசவத்திற்கு வந்திருப்பதால் தனக்குப் பதிலாக தனது பதினெட்டு வயதே ஆன இளைய மகளை அந்த வீட்டுக்கு வேலைக்கு அனுப்பி இருக்கிறார் கனகம்மா. வேலைக்கு சென்ற பெண்ணின் பெயர் இப்போதைக்கு வனஜா என்று வைத்துக் கொள்வோம். காலை மாலை இரெண்டு நேரமும் வேலைக்கு செல்வது வனஜாவிற்கு வழக்கம். அப்படி ஒரு நாள் வேலைக்கு சென்ற போது அந்த வீட்டு எஜமானியம்மா தனது வீட்டில் சில கார்பெண்டரி ரிப்பேர் வொர்க் வேலைகள் இருப்பதாகவும், யாராவது தெரிந்த ஆள் இருந்தால் கனகாகிட்டே (வனஜாவின் அம்மா) சொல்லி வரச்சொல்லு என்று கூறி இருக்கிறார். இந்த பெண்ணும் சரி என்று கூறிவிட்டு வந்திருக்கிறாள்.இதே விஷயத்தை அந்த எஜமானியம்மா அக்கம் பக்கம் வீட்டிலும் கூறி வைத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே கார்பெண்டரி ரிப்பேர் வொர்க் செய்ய கார்பென்டர் என்று கூறிக் கொண்டு ஒருவன் வந்திருக்கிறான். அந்த அம்மா யாரு அனுப்பி வந்திருக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார்கள். வெளியூரில் தங்கி இருக்கும் உங்கள் கணவர்தான் என்னை இங்கு வேலை இருப்பதாக போன் செய்து போகச் சொன்னார் என்று கூறி இருக்கிறான். இந்த அம்மாவும் அதற்குமேல் விவரம் கேட்காமல் வேலை என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி விட்டு சமையல் செய்ய சென்றிருக்கிறார்கள்.
அன்று வேலைக்கு வந்த வனஜாவோ திடுக்கிட்டுப் போனாள். ஐயோ! நம்மளிடம் யாரையாவது கார்பெண்டரி ரிப்பேர் வேலைக்கு வரச்சொல்லு என்றார்களே! அவர்களே ஆளை தேடிகிட்டாங்களே! ஒரு வேளை நம்மை திட்டுவாங்களோ! என்று பயந்தவாறு வேலைகளை முடித்து விட்டு மாடி வீட்டிற்கு வேலைக்கு சென்று விட்டாள்.
இதற்கிடையே வனஜாவின் வீட்டில் அனைவரும் வேண்டுதலை நிறைவேற்ற வெளியூரில் இருக்கும் கோவிலுக்கு போக முடிவு செய்தனர். வனஜாவின் தந்தை முடிவெடுத்த அடுத்த நாள் தனது மகளை வேலைக்கு செல்லும் போது அடுத்த ரெண்டு நாட்களுக்கு லீவு சொல்லிவிட்டு வா என்று கூறி இருக்கிறார். அதன்படி வனஜாவும் வேலைகளை முடித்துவிட்டு லீவு கேட்டிருக்கிறாள். அவர்களும் லீவு எடுக்க சம்மதித்து கையில் இருபது ரூபாவும் கொடுத்து அனுப்பி உள்ளார்கள். சந்தோஷமாக வீட்டிற்கு வந்த பெண் விவரத்தை பெற்றோர்களிடம் விவரிக்க, அனைவரும் கிளம்புவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அவர்கள் வீட்டின் முன்னே ரெண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். என்னவென்று விசாரிக்க தந்தை வெளியே வர, அவர்கள் மூத்த மாப்பிள்ளையின் பெயரை குறிப்பிட்டு விசாரித்துள்ளனர். எதற்கு என்று கேட்டதிற்கு விவரம் ஒன்றும் சொல்லாமல் அவர்களின் வீடு எங்கே என்று கேட்க; மூத்த மகளின் வீடும் எதிர் வீடுதான் என்று போலீசிடம் குழப்பத்துடன் கூறி இருக்கிறார் அந்த தந்தை.
அதற்குள் அங்கே கூட்டம் கூடிவிடவே யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த நேரத்தில் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த மூத்த மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளையின் சகோதரர் இருவரையும் கழுத்தைப் பிடித்து தள்ளிக் கொண்டு வந்த போலீஸ்காரர்கள், இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னே, விவரம் எதுவும் தெரியாத நிலையில் அழைத்துச் சென்று விட்டார்கள்.
கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்த அந்த ஏழை குடும்பத்தில் ஏற்பட்ட இந்த சலசலப்பு மிகப் பெரிய இடியாக இறங்கி விட்டது. குடும்பத்தலைவர் (சங்கர் என்று வைத்துக் கொள்வோம்) சங்கர் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் காவல் நிலையத்திற்கு ஓடி விவரம் கேட்டிருக்கிறார். காவல் நிலையத்தில் ஒரு அதிகாரி கூறி இருக்கிறார், என்னவென்று? வனஜா வேலை செய்த வீட்டில் "42" பவுன் தங்க நகைகள் காணமல் போய் விட்டதாம். உங்கள் மருமகன்தான் ஆள் வைத்து திருடி இருக்கிறான், அதற்கு நிறைய பேர் உங்கள் வீட்டில் உதவி ய்திருக்கிர்றார்கள் அதனால் ஒவ்வொருவராக கைது செய்வோம் என்று கூறி இருக்கிறார்கள்.
அதற்கு அந்த வீட்டு எஜமானி எங்களுக்கு ஒன்றுமே தெரியாது! ஆனால் எங்க வீட்டுலே திருட்டு போனது உண்மை. ஆனால் உங்க ஆளுங்களை நாங்க காட்டிக் கொடுக்கலை. போலிஸ் வந்து உங்க ஆளுங்களை அழைத்துச் சென்றால் நாங்க என்ன செய்ய முடியும் என்று கூறி இருக்கிறார்கள். அதற்கு சங்கர் மிகவும் தாழ்மையுடன் தயவு செய்து நீங்க காவல் நிலையம் வந்து எங்க வீட்டுலே கைது செய்த அனைவரையும் ரிலீஸ் செய்ய சொல்லுங்க என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்களும் நீங்க போங்க நான் உடனே காவல் நிலையம் வருகிறோம் என்று கூறி இருக்கிறார்கள். சங்கர் நம்பிக்கையுடன் காவல் நிலையத்துக்கு விரைந்து வந்து அங்கே எஜமானி அம்மாவிற்காக காத்திருந்தார்.
அவர்களும் வந்தார்கள், வந்தவர்கள் கையில் ஒரு மனு எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்கள். சங்கர் தன்னை வந்து மிரட்டியதாகவும் அவர்களின் குடும்பத்தார் மீதுதான் அதீதமான சந்தேகம் இருப்பதாகவும் தனக்கு நீதி அளிக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்து விட்டு சங்கரை திரும்பிக் கூட பார்க்காமல் சென்று விட்டார்கள்.
வளரும்.....
Lable:
உண்மை நிகழ்வு
Subscribe to:
Post Comments
(
Atom
)
33 comments :
அட கொடுமையே..
அடுத்த பதிவு எப்போது..??
சஸ்பென்ஸ் எதுக்கு..??
என்ன பிரச்சனை என்று யூகிக்க முடிகிறது..என்றாலும்.. சரியாக புரிய..அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்..!!
அடுத்த இடுகை எப்போது?
வாங்க சூர்யா அடுத்த இடுகை இன்னும் இரெண்டு தினங்களில் போடுவேன்!
//
ரங்கன் said...
என்ன பிரச்சனை என்று யூகிக்க முடிகிறது..என்றாலும்.. சரியாக புரிய..அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்..!!
//
வாங்க ரங்கா! அடுத்த இடுகை இன்னும் இரெண்டு தினங்களில் போடுவேன் அதுவரை சிரமம் பார்க்காமல் காத்திருக்கவும்.
//
butterfly Surya said...
அடுத்த பதிவு எப்போது..??
சஸ்பென்ஸ் எதுக்கு..??
//
சஸ்பென்ஸ் இல்லே ரொம்ப பெருசா இருக்கும்லே அதனாலேதான் இரேண்டாகப் பிரித்தேன்.
//
கபீஷ் said...
அடுத்த இடுகை எப்போது?
//
வாங்க கபீஷ் வருகைக்கு நன்றி!!
அடுத்த இடுகை இன்னும் இரெண்டு தினங்களில்
ஏமாற்றிபிழைப்பவர்கள்
துரோகம் புரிபவர்கள் நடுவேதான் வாழ்க்கை எனும் வண்டி ஓடிக்கொண்டிருக்கிற்து என்ன செய்ய?
ஏவல் துறையின் மற்றொரு சிறப்பான பணியாகத்தெரிகிறது.
//velji said...
ஏவல் துறையின் மற்றொரு சிறப்பான பணியாகத்தெரிகிறது.//
வேல்ஜி அண்ணே., ஏவல் துறைன்னா எதுங்க?
இந்த பில்லி, சூன்யம்க்கு அடுத்து வருமே அதுவா?
அடுத்த இடுகைக்கு வெயிட்டிங்....
பிரபாகர்.
என்ன நடந்துருக்கும் என்பதை இரண்டு விதமாக ஊகிக்கின்றேன். ஆனாலும் நிகழ்வின் தொடர்வைக் காண ஆவலுடன் உள்ளேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். சபாஷ் ரம்யா.
பரபரப்பான இடுகை..நியாயங்களைத்தேடி அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் !!!
( இந்த சீரியஸ் பதிவுக்கு ஏன் இந்த புகைப்படம் சம்பந்தமில்லாமல் ?? )
// எனக்கு கூட எப்படி ஒரு திகில் கதை எழுதனும்னு ஆசை பாதி எழுதி இருக்கேன் பார்க்கலாம் எப்போ முடிக்கிறேன்னு:( //
அய்யே ரம்யா உனக்கு ஏன் இந்த விபரித ஆசை. நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா? சரி சரி எழுதுங்க நாங்க கண்ணை மூடிக்கொண்டு படிக்கத் தயார்.
November 4, 2009 9:06 AM
இதுபோல முன்பின் ஆராயாமல் வேலையாட்கள் மேல் பழி சுமத்தி போலிஸ் வரை இழுத்து விடுவது அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கவனக்குறைவாக வீட்டில் பொருட்களை வைப்பது முதல் குற்றம். அப்படிக் கவனமாய் இருந்தும் சிலபேர் கைவரிசையைக் காட்டுவதும் நடக்கிறதுதான்.
எதுவாயினும் தீர விசாரிக்காமல் தீர்மானத்துக்கு வரக் கூடாது. இந்த நிகழ்வில் அப்பாவிகள் தண்டிக்கப் பட்டார்களா என்பது உங்கள் அடுத்த பதிவு வந்தால்தான் தெரியும். காத்திருக்கிறோம் ரம்யா.
ஹூம்..என்னத்த சொல்ல, அடுத்தது என்ன ஆகுமோ!!
என்ன சொல்றது பாவப்பட்ட ஜனங்கள். அடுத்த பதிவில் தொடருங்கள்
என்ன கொடுமைப்பா இது. ஏழைகள் என்றாலே இவர்களைப்போன்றவர்களுக்கு இளக்காரமாகத்தான் இருக்கிறது. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்
படிக்கறச்சவே பகீர்னு இருக்கே ரம்யா...
இந்த நீதி, நேர்மை, நியாயம், தர்மம், இரக்கம் இதெல்லாம் எங்கே போச்சு?? வெறும் ஏட்டளவில் தானா இனிமேல் பார்க்க முடியும்??
ரொம்ப கஷ்டமா இருக்கு படிச்சு முடிச்ச உடனே....
இனிமேல், நியாயத்தை தேடினா கூட கிடைக்காது போல இருக்கு... வழக்கொழிந்து போன பல விஷயங்களின் லிஸ்டில் இனி நியாயத்தையும் சேர்த்து விட வேண்டும் போலிருக்கிறது...
//
பிரியமுடன்...வசந்த் said...
ஏமாற்றிபிழைப்பவர்கள்
துரோகம் புரிபவர்கள் நடுவேதான் வாழ்க்கை எனும் வண்டி ஓடிக்கொண்டிருக்கிற்து என்ன செய்ய?
//
ஆமாம் வசந்த் நீங்க சொல்வதும் உண்மைதான் :(
என்ன கொடுமைங்க இது .. பணம் படைத்தவன் செய்யும் இந்த மாதிரி செயலால் பாவம் அந்த குடும்பம் என்ன பாடு படுகிறதோ ?? சட்ட உதவி ஏதும் கிடைக்கவில்லையா??
//
velji said...
ஏவல் துறையின் மற்றொரு சிறப்பான பணியாகத்தெரிகிறது.
//
ஆமாம் velji:(
//
அப்பாவி முரு said...
//velji said...
ஏவல் துறையின் மற்றொரு சிறப்பான பணியாகத்தெரிகிறது.//
வேல்ஜி அண்ணே., ஏவல் துறைன்னா எதுங்க?
இந்த பில்லி, சூன்யம்க்கு அடுத்து வருமே அதுவா?
//
ஏவல் இல்லே முரு அது காவல்.
//
பிரபாகர் said...
அடுத்த இடுகைக்கு வெயிட்டிங்....
பிரபாகர்.
//
வாங்க பிரபாகர் வருகைக்கு நன்றி அடுத்த பதிவை எதிர்பார்ப்புக்கும் நன்றி!
//
பித்தனின் வாக்கு said...
என்ன நடந்துருக்கும் என்பதை இரண்டு விதமாக ஊகிக்கின்றேன். ஆனாலும் நிகழ்வின் தொடர்வைக் காண ஆவலுடன் உள்ளேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். சபாஷ் ரம்யா.
//
வாங்க மிக்க நன்றிங்க தொடர்ந்து உங்களின் ஆதரவுக்கு நன்றிங்க!
//
அ.மு.செய்யது said...
பரபரப்பான இடுகை..நியாயங்களைத்தேடி அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் !!!
( இந்த சீரியஸ் பதிவுக்கு ஏன் இந்த புகைப்படம் சம்பந்தமில்லாமல் ?? )
//
அந்த பெண்ணின் அழுகை அதைத்தான் இந்த படத்தின் மூலமா உணர்த்தி இருக்கேன்.
வரவிற்கும் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் ஆதரவிற்கும் நன்றி சகோ!
//
பித்தனின் வாக்கு said...
// எனக்கு கூட எப்படி ஒரு திகில் கதை எழுதனும்னு ஆசை பாதி எழுதி இருக்கேன் பார்க்கலாம் எப்போ முடிக்கிறேன்னு:( //
அய்யே ரம்யா உனக்கு ஏன் இந்த விபரித ஆசை. நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா? சரி சரி எழுதுங்க நாங்க கண்ணை மூடிக்கொண்டு படிக்கத் தயார்.
//
ஆமா எழுதிகிட்டு இருக்கேன் ஒரு நாள் போடுவேன்.
அப்போ கண்ணை மூடிகிட்டு படிங்க
//
ராமலக்ஷ்மி said...
இதுபோல முன்பின் ஆராயாமல் வேலையாட்கள் மேல் பழி சுமத்தி போலிஸ் வரை இழுத்து விடுவது அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
//
இது ரொம்ப பயங்கரமான செயல் சகோதரி!
//
ராமலக்ஷ்மி said...
கவனக்குறைவாக வீட்டில் பொருட்களை வைப்பது முதல் குற்றம். அப்படிக் கவனமாய் இருந்தும் சிலபேர் கைவரிசையைக் காட்டுவதும் நடக்கிறதுதான்.
//
ஆமாம் கவனக் குறைவு சகஜம்தான் ஆனால் அதை மற்றவர்கள் மேல் போடுகிறார்களே அதுதான் கொடுமை. இதுலே பீரோ சாவி அதுலேயே தொங்கிகிட்டு இருந்திருக்கு. இது பெரிய கொடுமை அல்லவா சகோதரி. வந்தவன் ரொம்ப சுலபமா எடுத்திருக்கான்.
//
ராமலக்ஷ்மி said...
எதுவாயினும் தீர விசாரிக்காமல் தீர்மானத்துக்கு வரக் கூடாது. இந்த நிகழ்வில் அப்பாவிகள் தண்டிக்கப் பட்டார்களா என்பது உங்கள் அடுத்த பதிவு வந்தால்தான் தெரியும். காத்திருக்கிறோம் ரம்யா.
//
அதையும் போட்டுட்டேன் சகோதரி. அந்த அப்பாவிகள் கடுமையான முறையில் தண்டிக்கப்பட்டு விட்டார்கள்.
உங்களின் புரிதலுக்கு நன்றி சகோதரி!
நன்றி ஷஃபிக்ஸ்/Suffix
நன்றி மணி
நன்றி பட்டாம்பூச்சி
நன்றி S.A. நவாஸுதீன்
//
R.Gopi said...
படிக்கறச்சவே பகீர்னு இருக்கே ரம்யா...
இந்த நீதி, நேர்மை, நியாயம், தர்மம், இரக்கம் இதெல்லாம் எங்கே போச்சு?? வெறும் ஏட்டளவில் தானா இனிமேல் பார்க்க முடியும்??
ரொம்ப கஷ்டமா இருக்கு படிச்சு முடிச்ச உடனே....
இனிமேல், நியாயத்தை தேடினா கூட கிடைக்காது போல இருக்கு... வழக்கொழிந்து போன பல விஷயங்களின் லிஸ்டில் இனி நியாயத்தையும் சேர்த்து விட வேண்டும் போலிருக்கிறது...
//
ஆமாம் கோபி நீங்கள் சொல்லி இருப்பது நூறு சதவிகதம் உண்மை
வரவுக்கு நன்றி கோபி!
//
Romeoboy said...
என்ன கொடுமைங்க இது .. பணம் படைத்தவன் செய்யும் இந்த மாதிரி செயலால் பாவம் அந்த குடும்பம் என்ன பாடு படுகிறதோ ?? சட்ட உதவி ஏதும் கிடைக்கவில்லையா??
//
இரெண்டாம் பகுதயில் எழுதி இருக்கேன் படிங்க Romeoboy!
வரவிற்கு நன்றி Romeoboy!
இது பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது!
தான் செய்த தவறுக்கு மற்றவர்கள் மேல் பழி போடுவதே மனிதர்களீன் குணம்!
Post a Comment