Monday, March 1, 2010

ரம்யாவும் தோழிகளும்!!!

மகளிர் அணி!!

அப்பாடா ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு இடுகை பப்ளிஷ் பண்ணியாச்சு.. எவ்வளவு தடவை படிச்சாலும் அருமையா இருக்குதே!இதுக்கு பின்னூட்டங்கள் வந்து குவியும்ன்னு தோணுது. ரொம்பதான் எதிர் பாக்கிறோமோ??ஆமா!! ஆமா! ம்ம்ம்ம்.. எழுதினதையே படிச்சு படிச்சு எழுத்தெல்லாம் காணாமல் போயிடப் போகுது!!

நம்மளே சும்மா சும்மா படிச்சிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கு? இருந்தாலும் படிக்காமல் இருக்க முடியலையே?

இன்னொருமுறை படிச்சுடலாம். என்ன எழுத்தெல்லாம் காணமல் போய்டுச்சு. அட இதென்ன கூத்து? கண்ணை கசக்கிகிட்டு பார்த்தா எழுத்தெல்லாம் லேசா தெரியுது, அழிஞ்சி போகல! நமக்கு பசியும் தூக்கமும்தான் கண்ணை கெடுத்துடுச்சு. இருக்கும்... இருக்கும்... சரி... ஒரு வாய் சாப்பிடலாம்..

அட இந்த நேரம் பார்த்து கைபேசி சிணுங்குதே! யாரா இருக்கும்?? வணக்கம் யாருங்க??
நானு ஆறும் இல்லை ஏழும் இல்லை!

அதென்னா வணக்கம்? ஹலோ சொல்லக் கூடாதா ??

அது இருக்கட்டும் நீங்க யாருன்னு சொல்லவேயில்லே! நான் ஹலோ சொல்ல மாட்டேன்....

ஏன் சொல்லமாட்டீங்க?

சொல்லமாட்டேன்னா சொல்லமாட்டேன் விட்டுடுங்களேன், வேணும்னா அதுக்கு தனியா ஒரு இடுகை போடறேன்... ஆமா நீங்க யாரு.....

சனியனே! நான்தான் உன்னோட பிரண்டு லதா பேசறேன்.. மண்டு மண்டு என்னோட குரல் உனக்கு தெரியலையா? ஆமா உன்னோட ப்ளாக்லே புதுசா ஏதாவது எழுதி இருக்கியா?

அட அதுக்குள்ளே படிச்சிட்டியா! எப்படி இருந்துச்சு சொல்லு சொல்லு..

அட நீ வேறே இப்போதான் என்னோட குழந்தைங்க, ராஜ் எல்லாரும் தூங்க போனாங்க. கம்யுட்டரை ஆன் பண்ணலாம்னு யோசிக்கும்போது உன்னோட நினைவு வந்திச்சி. அதான் நீ ஏதாவது எழுதி அதை நான் படிக்காம போனா நாளைக்கு போன் பண்ணி திட்டுவியேன்னு பயம் வந்திச்சி. அதான் போன் பண்ணி கன்பார்ம் பண்ணிகிட்டேன்.

அடபாவி மவளே! என்னோட இடுகை படிச்சிட்டு பாராட்ட போன் பண்றேன்னு நினைச்சேன், கடைசியிலே இப்படி கவுத்திட்டியேடி

இல்லேப்பா! எனக்கு நேரமே இல்லே ரொம்ப பிஸி...

சரி சரி எனக்கு வேறே போன் வருது.. இரு உன்னை அப்புறமா வச்சுக்கிறேன்! போனை வைடி மொதல்லே!!

வணக்கம் யாருங்க பேசறீங்க??

ஹேய் ரம்யா! நான்தான் விஜி பேசறேன்..

என்னாப்பா எப்படி இருக்கே?? ராம் நல்லா இருக்காரா, வர்ஷா, பப்பு நல்லா இருக்காங்களா?

ரம்யா! எல்லோரும் நல்லா இருக்கோம். அதெல்லாம் இருக்கட்டும் என்ன பதிவு போட்டு இருக்கேப்பா?

ஹையோ! ஹையோ! படிச்சுட்டீங்களா மயிலு?

இல்லே படிக்க நேரமே இல்லே, இந்த புள்ளங்களோட சல்ல தாங்கல! இப்போ புதுசா பஸ் வேறே விட்டிருக்கோம் இல்லையா? அதுலே யாரு எங்கே ஏர்றாங்க, எங்கே இறங்குராங்கன்னு கவனிக்கவே நேரம் பத்தலை! இதுலே இதெல்லாம் வேறே செய்யனுமா?

நானும்தான் அந்த பஸ்சுலே காசு போட்டு இருக்கேன். மறந்து போச்சா மவளே மயிலு! ஆனா டிரைவர் கண்டக்டர் மேலே ஒரு கண்ணு இருக்கட்டும். வெள்ளிக் கிழமைன்னா கலெக்சன் அதிகமா இருக்கும்! உஷாரு...! உஷாரு....!!

அது சரி, என்னோட இத்தனை பிஸி செடியூல்லே உன்னோட இடுகையை படிக்கலைன்னு என்னை நீ தப்பா நினைப்பியா என்ன? அதான் கேட்டேன் ரொம்ப நாள் ஆயிடுச்சே.. எழுதுவியா இல்லே ப்ளாக் எழுதறதையே நிறுத்திடுவியா??

அடபாவி மக்கா! இப்படி எல்லாம் முடிவோட ஒரு கூட்டமே அலையுது போல! எம்மா தாயே விஜி இரு, நான் அப்புறமா உனக்கு போன் போடறேன். இப்போ யாரோ கூப்பிடறாங்க...

ஓ சரி சரி!! வந்தவங்களை கவனி...

அடபோப்பா போன்லே கூப்பிடறாங்க..

அப்பா நான் தப்பிச்சேன்!

என்னா சொன்னீங்க?

இல்லே சரின்னு சொன்னேன்..

ம்ம் அது.... வணக்கம் யாருங்க பேசறீங்க?

நான்தான் டெல்லியில் இருந்து பேசறேன்..

டெல்லியில் இருந்தா? பிரைம் மினிஸ்டர் ஆபிசிலே இருந்தா பேசறீங்க? என்னோட ப்ளாக் அவ்வளவு தூரம் பரவிடுச்சா? சரி யாரு பேசறீங்க ??

என்னை பேசவிட்டாதானே நான் யாருன்னு சொல்லுவேன்? அதுக்குள்ளே கற்பனையா? அது சரி..

சரி சொல்லுங்க... யாரு?

ஹேய் நான்தான்பா உன்னோட பிரண்டு விக்னேஸ்வரி!

விக்கியா? அட எப்படிப்பா இருக்கே? கண்டிப்பா நான் அடுத்த முறை வரும்போது உங்க வீட்டுக்கு வரேன்.

நாங்க வீடு மாத்தலாம்னு இருக்கோம்! ஆமா உங்க டெல்லி பயணம் எப்போ?

நீங்க வீடு மாத்தினா என்னா? நான் விசாரிச்சிக்கிட்டு வந்துடுவேன்லே!

இல்லேப்பா விசாரிச்சி வர முடியாது. ரொம்ப கஷ்டம் அதான் சொன்னேன்!!

அதெல்லாம் இருக்கட்டும் புதுசா ஒரு இடுகை போட்டு இருக்கேன் படிச்சு பாருங்க.. இடுகை எனக்கே ரொம்ப புடிச்சிருக்கு...

அட என்னாப்பா நீயே எழுதிட்டு உனக்கே புடிச்சிருக்குன்னு சொல்லறே? கேக்க நல்லவா இருக்கு?

அட என்னாப்பா ரொம்ப டேமேஜ் பண்றீங்க? படிச்சுதான் பாருங்களேன்!

ஹல்லோ! ஹலோ! ரம்யா எனக்கு காது கேக்கலை! சத்தமா பேசுங்க?

விக்கி நான் சத்தமாதான் பேசறேன். இதுக்கு மேலே கத்தினா பக்கத்து வீட்டுக்காறாங்க திட்டுவாங்க!! என்னோட ப்ளாக் பாருங்க. புதுசா எழுதி இருக்கேன் படிங்க...

ரம்யா நீங்க பேசறதே எனக்கு காதுலே விழல.. நாளைக்கு பஸ்சுலே மீட் பண்ணுவோம்.. சரியா?

இல்லே விக்கி.. அட போனை வச்சிட்டாங்களே!

வேணும்னே காது கேக்கலைன்னு சொல்லி இருப்பாங்களோ.. ச்சேச்சே! விக்கி அந்த மாதிரி எல்லாம் சொல்ல மாட்டாங்க. நிஜமாவே காதுலே விழல போல.. அட கடவுளே கடைசியிலே இப்படி ஆயிடுச்சே !! ம்ம்ம்ம்.... இப்போவாவது சாப்பிட போலாம்....

மறுபடியும் அலைபேசியின் செல்லச் சிணுங்கல்..

ம்ம்ம்... வணக்கம் யாருங்க பேசறது?

நான்தான் சித்தூரிலே இருந்து தமிழரசி பேசறேன்! நல்லா இருக்கியாடா?

ஐயோ! தமிழ் எப்படி இருக்கீங்க?

ஐயோ தமிழா! என்னாச்சு ரம்யா? ஏதாவது பிரச்சனையா??

இல்லேப்பா சந்தோஷத்துலே ஐயோன்னு கத்திட்டேன்!

பார்த்து அக்கா பயந்திடப் போறாங்க!

அக்கா தூங்கிட்டாங்க தமிழ்!

ஆமா எவ்வளவு நேரமா உனக்கு போன் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் தெரியுமா?? ஒரே பிஸி.. அலுத்து போயிட்டேன் போடா!!

இல்லே வரிசையா நிறைய பேரு பேசினாங்க தமிழ்..

நிறைய பேரு பேசினாங்களா? என்னாச்சு ரம்யா?

ஒண்ணும் ஆகலை! நீங்க ஏன் அப்பப்போ அதிர்ச்சியாறீங்க தமிழ்? நான் ஒரு இடுகை போட்டிருக்கேன் இல்லையா?

அப்படியா எனக்கு தெரியாதே! சொல்லவே இல்லே?

இப்பதான் சொல்றேனில்லே அப்புறம் என்ன? இடுகை போட்டிருக்கேன். படிங்க, படிச்சிட்டு சொல்லுங்க! ஏன்னு கேளுங்க? இந்த இடுகை எனக்கு ரொம்ப புடிச்சிது..

என்ன பேசறே ரம்யா?? நீ எழுதினதுதானே உனக்கு புடிக்காமலா பப்ளிஷ் பண்ணுவே!

என்ன தமிழ் படிங்க படிச்சிட்டு சொல்லுங்க....

ஹையோ சாரி ரம்யா எங்க வீட்டுலே நெட் புட்டுகிச்சி. நானே என்னோட இடுகையை பப்ளிஷ் பண்ண முடியலையேன்னு உக்காந்திருக்கேன். போர் அடிச்சிதுன்னு உனக்கு போன் பண்ணினேன்.

அடபாவி சொர்ணாக்கா!! இது பரவா இல்லையா? எங்கேயாவது சென்டர்லே போய் படிங்க!

அதெல்லாம் ரொம்ப தூரம்.. போக முடியாது!

மாமாவை ஆபிஸ் போகும் போது ட்ராப் பண்ணச் சொல்லுங்க

மாமா ஊரிலே இல்லையே!!

அட போங்கப்பா!! இப்ப என்ன பண்றது? பேசாம இங்கே கிளம்பி வந்திடுங்க.. எங்க வீட்டுலே படிக்கலாம்.

அதுசரி குழந்தைங்களுக்கு ஸ்கூல் இல்லையா?? உன்னோட பதிவு படிக்கறதுதான் ரொம்ப முக்கியமா? என்ன ரம்யா நீ ரொம்ப சின்னப் பிள்ளைத்தனமா பேசறே!

வரட்டும் அப்போ படிக்கறேன்.. எப்படியும் நீ அடுத்த இடுகை போட ஒரு மாதம் ஆகும். உன்னோட இடுகையை எப்போ படிச்சாலும் புரியும். சரி எனக்கு தூக்கம் வருது.. போனை கட் பண்ணட்டாப்பா??

இல்லைன்னா மட்டும் என்ன பண்ணபோறீங்க? ம்ம்ம் வைங்கோ!!

63 comments :

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

Really nice

அருமை

பழமைபேசி said...

வாங்க.... அடுத்த இன்னிங்சு? வாழ்த்துகள்!

நசரேயன் said...

//இதுக்கு பின்னூட்டங்கள் வந்து குவியும்ன்னு தோணுது//

ஆமா முதுகிலே

நசரேயன் said...

//நம்மளே சும்மா சும்மா படிச்சிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கு? இருந்தாலும் படிக்காமல் இருக்க முடியலையே?//

காலக்கொடுமை.. இதெல்லாம் கேட்க வேண்டிய இருக்கு

நசரேயன் said...

// கண்ணை கசக்கிகிட்டு பார்த்தா எழுத்தெல்லாம் லேசா தெரியுது, அழிஞ்சி போகல! //

மாலைக்கண் வியாதியா இருக்கும்..வயசு ஆகிபோச்சு

நசரேயன் said...

//நமக்கு பசியும் தூக்கமும்தான் கண்ணை கெடுத்துடுச்சு//

வீட்டிலே சமையல் செய்யாம கடையிலே வாங்கி சாப்பிடுங்க

நசரேயன் said...

//கம்யுட்டரை ஆன் பண்ணலாம்னு யோசிக்கும்போது உன்னோட நினைவு வந்திச்சி//

சனி பிடிச்சிருச்சின்னு சொல்லுங்க

Unknown said...

ஹலோ ரம்யா..மன்னிக்கவும் வணக்கம் ரம்யா..
அருமை..படித்து, சிரித்து , மகிழ்ந்தேன்..

Anonymous said...

லேடீஸ் பஸ் ஓட்டுன டிரைவர் கண்டக்டர் பத்தி சொல்லவே இல்லை. (திருப்பதில பெருமாள் இன்னும் அங்கதான இருக்கார். விஜியையும் உங்களையும் பாத்து எங்கியாச்சும் ஓடிடலையே :)))

அப்பாவி முரு said...

//நசரேயன் said...
//இதுக்கு பின்னூட்டங்கள் வந்து குவியும்ன்னு தோணுது//

ஆமா முதுகிலே//

அண்ணே, எனக்கு கொஞ்சம் இடம் விட்டு வைங்க...

*இயற்கை ராஜி* said...

kalakiteenga ponga.... inimel unga kitta phone pesarathu nna careful ah pesanum pola?:-)

*இயற்கை ராஜி* said...

//நம்மளே சும்மா சும்மா படிச்சிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கு? இருந்தாலும் படிக்காமல் இருக்க முடியலையே?////

ஓ... இதுதான் அந்த கடும் வேளைப் பளுவோட மர்மமா? உங்க பிளாக்கை நீங்க்கே படிச்சிட்டு இருக்கறது

*இயற்கை ராஜி* said...

//கம்யுட்டரை ஆன் பண்ணலாம்னு யோசிக்கும்போது உன்னோட நினைவு வந்திச்சி//

உடனே ஆன் பண்ற முடிவை மாத்திட்டாங்களா.. வெரி குட்.. ஐ லைக் இட்:-)

கார்க்கிபவா said...

முடியல... முடியல.. என்னால முடியல

நட்புடன் ஜமால் said...

ரொம்ப பிஸியா இருக்கீங்க போல

நல்ல(வங்க) கூட்டணி ...

பித்தனின் வாக்கு said...

அனாலும் ரொம்ப சாமார்த்தியம்தான் கடைசி வரைக்கும் என்ன இடுகைன்னு சொல்லவே இல்லை. ஆனாலும் நான் படிச்சிட்டேன், என்ன இரண்டு நாளா சரியா கண்ணு தெரியல்லையா, நாளைக்குத்தான் டாக்டர் கிட்ட போகனும். இடுகை நல்லாதான் இருக்கு, ஆனா என்ன லாங்க்வேஜ்தான் தெரியல்லை. ஹா ஹா ஹா. நீங்க மட்டுதான் கடிப்பீர்களா? நாங்களும் கடிகாலன் பரம்பரைதான்.

நல்ல இடுகை ரம்யா. சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி.

Anonymous said...

அதெப்படி ரம்யா எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரி...யப்பா...............இந்த திறமையை சொல்றேன் பேர்வழின்னு அதை ஒரு பதிவாப் போட்டுடாதா?

யம்மா..என்னம்மா லூட்டி அடிக்குது...என்னமோ ஏதோ வந்ததும் வந்தோம் கண்ணுல பட்டுடுச்சி பதிவு படிச்சிட்டு போலாமுன்னு பார்த்தா....தோழின்னு பேர் பண்ணிட்டு எங்களை நீ படுத்தறபாடு...இதோ எல்லாம் ஒரே பஸ்சை பிடிச்சி வந்துகிட்டு இருக்கோம்..ஓடிப்போயிடு மாட்டின மகளே அவ்வளவு தான்....

எல் கே said...

irunga muthalla oru auto anuparen unga veetuku

Rajeswari said...

எப்படித்தான் இப்படியெல்லாம் முடியுதோ...தாங்கல ரம்ஸ்....

நல்லா இருக்கு..

வால்பையன் said...

//நீ ஏதாவது எழுதி அதை நான் படிக்காம போனா நாளைக்கு போன் பண்ணி திட்டுவியேன்னு பயம் வந்திச்சி.//

அந்த பயம் இருக்கட்டும்!

வால்பையன் said...

”மச்சான் நீ கேளேன்” ரேஞ்சுக்கு இருக்கு!
நசரேயன் சொன்னாமாதிரி முதுகுல தான் பின்னூட்டமும், ஓட்டு குத்துகளும் விழப்போகுது!

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா சூப்பர் ரம்யா. ஒண்ணுமே இல்லாம இப்படி எழுத முடியுமா...
நடுவுல எங்களையும் கோர்த்து விட்டாச்சு. :)

தமிழ் அமுதன் said...

///அட என்னாப்பா நீயே எழுதிட்டு உனக்கே புடிச்சிருக்குன்னு சொல்லறே? கேக்க நல்லவா இருக்கு?/// ;;))

///ஐயோ! தமிழ் எப்படி இருக்கீங்க?

ஐயோ தமிழா! என்னாச்சு ரம்யா? ஏதாவது பிரச்சனையா??///

பிரச்னை ஏதும் இல்ல தமிழ் எங்க போன்ல கவிதை ஏதும் சொல்ல போறீங்கன்னு பயந்துதான் அந்த ''ஐயோ! தமிழ் ''

அண்ணாமலையான் said...

ரைட்டு

ராமலக்ஷ்மி said...

:))!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லா இருக்கு.:-)))))))))))))))))))

"உழவன்" "Uzhavan" said...

மிகுந்த நகைச்சுவை உணர்வோடு எழுதியிருக்கிறீர்கள்.
 
//
ஐயோ! தமிழ் எப்படி இருக்கீங்க?
ஐயோ தமிழா! என்னாச்சு ரம்யா? ஏதாவது பிரச்சனையா?? //
 
மிக ரசித்தேன். வாழ்த்துகள்

நேசமித்ரன் said...

ரசித்தேன். வாழ்த்துகள்

sury siva said...

ரசித்தேன். வாய் விட்டு
சிரித்தேன்.

சுப்பு ரத்தினம்.

பித்தனின் வாக்கு said...

...இதோ எல்லாம் ஒரே பஸ்சை பிடிச்சி வந்துகிட்டு இருக்கோம்..ஓடிப்போயிடு மாட்டின மகளே அவ்வளவு தான்....

ஆமாம்மா இரம்யா ஓடிப் போயிடுங்க, தமிழ் அக்காவிடம் மாட்டினால் அப்புறம் கவிதைத் தொகுப்பைக் கையில் கொடுத்துப் படிக்கச் சொல்லி விடுவாங்க. அதுனால ஓடிப் போயிடுங்க,,, ஒன்.. டூ... திரீயீயீயீய்..

Asiya Omar said...

ஹலோ ஆசியாக்கா பேசறேன்,போன் பேசி பேசி தொண்டை கட்டிகிச்சா?காது கேட்கலையா?நான் உங்க இடுகையை படிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.....
இப்படி கூட போட்டுத்தாக்கலாம் போல.

RAMYA said...

//
உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
Really nice

அருமை
//

வரவிற்கும், ரசனைக்கும் மிக்க நன்றி உலவு

RAMYA said...

//
பழமைபேசி said...
வாங்க.... அடுத்த இன்னிங்சு? வாழ்த்துகள்!
//

ஹா ஹா அப்படியா சொல்றீங்க :)
நன்றி அண்ணா!

RAMYA said...

//
நசரேயன் said...
//இதுக்கு பின்னூட்டங்கள் வந்து குவியும்ன்னு தோணுது//

ஆமா முதுகிலே
//

ஐயோ! ஐயோ! வேணாம் வேணாம்:)

இந்த இடுகைக்கு போயி இவ்வளவு பெரிய தண்டனையா:)

RAMYA said...

//
நசரேயன் said...
//நம்மளே சும்மா சும்மா படிச்சிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கு? இருந்தாலும் படிக்காமல் இருக்க முடியலையே?//

காலக்கொடுமை.. இதெல்லாம் கேட்க வேண்டிய இருக்கு
//

இதெல்லாம் படிக்க கொடுத்து வச்சிருக்கணும் ஆமா :)

RAMYA said...

//
நசரேயன் said...
// கண்ணை கசக்கிகிட்டு பார்த்தா எழுத்தெல்லாம் லேசா தெரியுது, அழிஞ்சி போகல! //

மாலைக்கண் வியாதியா இருக்கும்..வயசு ஆகிபோச்சு
//

அப்படியா சொல்றீங்க? அடபாவிங்களா எனக்கு கண்ணு தெரியாதுங்கறது உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா :-) ??

RAMYA said...

//
நசரேயன் said...
//நமக்கு பசியும் தூக்கமும்தான் கண்ணை கெடுத்துடுச்சு//

வீட்டிலே சமையல் செய்யாம கடையிலே வாங்கி சாப்பிடுங்க
//

கடையிலே வாங்கி சாப்பிடறோம்!

ஆனா அதுக்கு காசு அனுப்புங்க என் கூட இருக்கறவங்க எல்லாருக்கும் சேர்த்து:)

RAMYA said...

//
நசரேயன் said...
//கம்யுட்டரை ஆன் பண்ணலாம்னு யோசிக்கும்போது உன்னோட நினைவு வந்திச்சி//

சனி பிடிச்சிருச்சின்னு சொல்லுங்க
//

பிரண்டை இப்படி எல்லாம் சொல்லலாமா? :-)

RAMYA said...

// sujatha said...
ஹலோ ரம்யா..மன்னிக்கவும் வணக்கம் ரம்யா..
அருமை..படித்து, சிரித்து , மகிழ்ந்தேன்..
//

வாங்க சுஜாதா, வருகைக்கும், ரசனைக்கும் மிக்க நன்றி சுஜாதா!!

RAMYA said...

//
சின்ன அம்மிணி said...
லேடீஸ் பஸ் ஓட்டுன டிரைவர் கண்டக்டர் பத்தி சொல்லவே இல்லை. (திருப்பதில பெருமாள் இன்னும் அங்கதான இருக்கார். விஜியையும் உங்களையும் பாத்து எங்கியாச்சும் ஓடிடலையே :)))
//

ஹா ஹா சின்ன அம்மிணி, பஸ், கண்டக்டரைப் பத்தி சொல்ல வேணாம்னு விஜி என்னை மிரட்டிடாங்க:-)

அப்புறம் திருப்பதியிலே பெருமாள் அங்கேதான் இருக்கார். ஓட ட்ரை பண்ணினாரு, ஆனா அங்கேயே இருக்குமாறு விஜியும் நானும் கேட்டுகிடதாலே, திருப்பதியிலேயே தங்கிட்டாரு:)

RAMYA said...

//
இய‌ற்கை said...
kalakiteenga ponga.... inimel unga kitta phone pesarathu nna careful ah pesanum pola?:-)
//

ஹா ஹா ராஜி ரொம்ப பயப்படாதேப்பா :)

RAMYA said...

//
இய‌ற்கை said...
//நம்மளே சும்மா சும்மா படிச்சிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கு? இருந்தாலும் படிக்காமல் இருக்க முடியலையே?////

ஓ... இதுதான் அந்த கடும் வேளைப் பளுவோட மர்மமா? உங்க பிளாக்கை நீங்க்கே படிச்சிட்டு இருக்கறது
//

ராஜி கண்டுபுடிச்சிட்டியே குட், உன்னோட இந்த புத்திசாலித்தனம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு :)

RAMYA said...

//
இய‌ற்கை said...
//கம்யுட்டரை ஆன் பண்ணலாம்னு யோசிக்கும்போது உன்னோட நினைவு வந்திச்சி//

உடனே ஆன் பண்ற முடிவை மாத்திட்டாங்களா.. வெரி குட்.. ஐ லைக் இட்:-)
//

ஆமாம் ராஜி நீ அப்படி பண்ண மாட்டேதானே:(

RAMYA said...

//
கார்க்கி said...
முடியல... முடியல.. என்னால முடியல
//

கார்க்கி என்ன? ஆச்சுப்பா!! உடம்பு சரி இல்லையா? நான் வந்து டாக்டர் கிட்டே அழைச்சிகிட்டு போகவா? :)

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
ரொம்ப பிஸியா இருக்கீங்க போல

நல்ல(வங்க) கூட்டணி ...
//

ஆமாம் ஜமால், நல்லவங்கன்னு புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி ஜமால்!

RAMYA said...

//
பித்தனின் வாக்கு said...
அனாலும் ரொம்ப சாமார்த்தியம்தான் கடைசி வரைக்கும் என்ன இடுகைன்னு சொல்லவே இல்லை. ஆனாலும் நான் படிச்சிட்டேன், என்ன இரண்டு நாளா சரியா கண்ணு தெரியல்லையா, நாளைக்குத்தான் டாக்டர் கிட்ட போகனும். இடுகை நல்லாதான் இருக்கு, ஆனா என்ன லாங்க்வேஜ்தான் தெரியல்லை. ஹா ஹா ஹா. நீங்க மட்டுதான் கடிப்பீர்களா? நாங்களும் கடிகாலன் பரம்பரைதான்.

நல்ல இடுகை ரம்யா. சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி.
//

ம்ம்ம்.. ஒத்துகிட்டோம் நீங்க கடிகாலன் பரமபரைதான்:)

ரசனைக்கும் நன்றி பித்தனின்வாக்கு

RAMYA said...

//
தமிழரசி said...
அதெப்படி ரம்யா எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரி...யப்பா...............இந்த திறமையை சொல்றேன் பேர்வழின்னு அதை ஒரு பதிவாப் போட்டுடாதா?

யம்மா..என்னம்மா லூட்டி அடிக்குது...என்னமோ ஏதோ வந்ததும் வந்தோம் கண்ணுல பட்டுடுச்சி பதிவு படிச்சிட்டு போலாமுன்னு பார்த்தா....தோழின்னு பேர் பண்ணிட்டு எங்களை நீ படுத்தறபாடு...இதோ எல்லாம் ஒரே பஸ்சை பிடிச்சி வந்துகிட்டு இருக்கோம்..ஓடிப்போயிடு மாட்டின மகளே அவ்வளவு தான்....
//

ஹா ஹா தமிழ் வந்துட்டீங்களா? எங்கே ஓடறது:) வந்தது வந்துடறீங்க, பொட்டு நாலு சாத்து சாத்திட்டு, அப்படியே நான் எழுதின இடுகையை, இன்னொரு முறை என்னோட சேர்ந்து உக்காந்து படிச்சிட்டு, என்னை மறுபடியும் பாராட்டி நல்ல விதமா நாலு வார்த்தை சொல்லிட்டு,

நல்லா சமைக்கிறேன், கத்திரிக்காய் ரசம், தக்காளி சாம்பார், வாங்க எல்லாரும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து பிறகு கிளம்பலாம்:) ஆமா எப்போ வரீங்க ?:)

RAMYA said...

//
LK said...
irunga muthalla oru auto anuparen unga veetuku
//

வாங்க LK~ முதல் வருகையே ரணகளமா இருக்கு போல இருக்கு:)

உங்க முதல் வருகைக்கும், ரசனைக்கும் நன்றி, நன்றி!

ஆட்டோ எப்போ வருது? டைம் சொல்லிட்டா நான் எங்கேயாவது போயி ஒளிஞ்சிக்குவேன்:)

RAMYA said...

//
Rajeswari said...
எப்படித்தான் இப்படியெல்லாம் முடியுதோ...தாங்கல ரம்ஸ்....

நல்லா இருக்கு..
//

ஹையோ! ஹையோ! ராஜி, நானும் இருக்கேன்னு சொல்லிக்க இந்த இடுகை
உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி ராஜி:)

RAMYA said...

//
வால்பையன் said...
//நீ ஏதாவது எழுதி அதை நான் படிக்காம போனா நாளைக்கு போன் பண்ணி திட்டுவியேன்னு பயம் வந்திச்சி.//

அந்த பயம் இருக்கட்டும்!
//

இந்த சப்போர்ட் யாருக்கு வாலு:)

RAMYA said...

RAMYA said...
//
வால்பையன் said...
”மச்சான் நீ கேளேன்” ரேஞ்சுக்கு இருக்கு!
நசரேயன் சொன்னாமாதிரி முதுகுல தான் பின்னூட்டமும், ஓட்டு குத்துகளும் விழப்போகுது!
//

ஹையோ ஹையோ வாலு எப்படியே என்னை காப்பாத்திக்கிட்டேன்:)

யாராவது எனக்கு பதிலா முதுகிலே வாங்குனா சந்தோசம் :)

RAMYA said...

//
விக்னேஷ்வரி said...
ஹாஹாஹா சூப்பர் ரம்யா. ஒண்ணுமே இல்லாம இப்படி எழுத முடியுமா...
நடுவுல எங்களையும் கோர்த்து விட்டாச்சு. :)
//

எதோ முடிஞ்ச அளவுக்கு கோர்த்து விட்டுட்டேன். இன்னும் அதிகமா எழுத ஆசைதான்:)

இப்போ அடி விழும்னுதான் சொல்லி இருக்காங்க:) அப்புறம் நிஜமாவே அடிச்சிடுவாங்க:))

RAMYA said...

//
அப்பாவி முரு said...
//நசரேயன் said...
//இதுக்கு பின்னூட்டங்கள் வந்து குவியும்ன்னு தோணுது//

ஆமா முதுகிலே//

அண்ணே, எனக்கு கொஞ்சம் இடம் விட்டு வைங்க...
//

முரு இருக்கட்டும் இருக்கட்டும், கவனிக்க சொல்லி வீட்டுலே போன் போட்டு சொல்லிடுவோம்லே:)

RAMYA said...

//
ஜீவன்(தமிழ் அமுதன் ) said...
///அட என்னாப்பா நீயே எழுதிட்டு உனக்கே புடிச்சிருக்குன்னு சொல்லறே? கேக்க நல்லவா இருக்கு?/// ;;))

///ஐயோ! தமிழ் எப்படி இருக்கீங்க?

ஐயோ தமிழா! என்னாச்சு ரம்யா? ஏதாவது பிரச்சனையா??///

பிரச்னை ஏதும் இல்ல தமிழ் எங்க போன்ல கவிதை ஏதும் சொல்ல போறீங்கன்னு பயந்துதான் அந்த ''ஐயோ! தமிழ் ''
//

ஜீவன்! உஷாரா இருங்க, தமிழ் ஒரு கவிதை கட்டோட பஸ் ஏறினதா நம்பத்தகுந்த வட்டாரத்தில் பேச்சு அடிபடுது:)

உஷாரு! உஷாரு!

RAMYA said...

//
அண்ணாமலையான் said...
ரைட்டு
//

நன்றி அண்ணாமலையாரே :)

RAMYA said...

//
ராமலக்ஷ்மி said...
:))!
//

நன்றி சகோதரி!

RAMYA said...

//
ஸ்ரீ said...
நல்லா இருக்கு.:-)))))))))))))))))))
//

நன்றி ஸ்ரீ:)

RAMYA said...

//
"உழவன்" "Uzhavan" said...

மிகுந்த நகைச்சுவை உணர்வோடு எழுதியிருக்கிறீர்கள்.//

நன்றி நன்றி மிக்க நன்றி உழவன்:)

//
ஐயோ! தமிழ் எப்படி இருக்கீங்க?
ஐயோ தமிழா! என்னாச்சு ரம்யா? ஏதாவது பிரச்சனையா??
//

மிக ரசித்தேன். வாழ்த்துகள்
//

உங்களின் வருகைக்கும் உங்களின் ரசனைக்கும் மிக்க நன்றி உழவன்!

RAMYA said...

//
நேசமித்ரன் said...
ரசித்தேன். வாழ்த்துகள்
//

நன்றி நேசமித்ரன்! உங்கள் ரசனைக்கும் மிக்க நன்றி நேசமித்ரன்!

RAMYA said...

//
sury said...
ரசித்தேன். வாய் விட்டு
சிரித்தேன்.

சுப்பு ரத்தினம்.
//

நன்றிங்க சுப்பு! உங்களின் ரசனைக்கு மிக்க நன்றி சுப்பு!

RAMYA said...

//
பித்தனின் வாக்கு said...
...இதோ எல்லாம் ஒரே பஸ்சை பிடிச்சி வந்துகிட்டு இருக்கோம்..ஓடிப்போயிடு மாட்டின மகளே அவ்வளவு தான்....

ஆமாம்மா இரம்யா ஓடிப் போயிடுங்க, தமிழ் அக்காவிடம் மாட்டினால் அப்புறம் கவிதைத் தொகுப்பைக் கையில் கொடுத்துப் படிக்கச் சொல்லி விடுவாங்க. அதுனால ஓடிப் போயிடுங்க,,, ஒன்.. டூ... திரீயீயீயீய்..
//

ஆமாங்க ரொம்ப பயந்து வருது:)

நீங்க சொன்னா மாதிரியே ஓடிப் போயிட்டேனுங்க:)

RAMYA said...

//
asiya omar said...
ஹலோ ஆசியாக்கா பேசறேன்,போன் பேசி பேசி தொண்டை கட்டிகிச்சா?காது கேட்கலையா?நான் உங்க இடுகையை படிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.....
இப்படி கூட போட்டுத்தாக்கலாம் போல.
//

வாங்க ஆசியாக்கா, நல்ல இருக்கீங்களா, ரொம்ப தொண்டை வலிக்குதுக்கா :)

கண்ணு வேறே தெரியல:) நீங்க சொல்லி இருக்குற மாதிரியும் எழுதலாம்தான் ட்ரை பண்ணி பாருங்க. ஏற்கனவே எல்லாரும் என்னோட முதுகை தேடிகிட்டு இருக்காங்க

எதுக்கும் உஷாரா பக்கத்துலே ஆளுங்களை வச்சிக்கிட்டு இப்படி எழுத ட்ரை பண்ணுங்க

அப்புறம் உங்களின் முதல் வருகைக்கும், ரசனைக்கும் நன்றி:)

பனித்துளி சங்கர் said...

////////அப்பாடா ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு இடுகை பப்ளிஷ் பண்ணியாச்சு.. எவ்வளவு தடவை படிச்சாலும் அருமையா இருக்குதே!இதுக்கு பின்னூட்டங்கள் வந்து குவியும்ன்னு தோணுது. ரொம்பதான் எதிர் பாக்கிறோமோ??ஆமா!! ஆமா! ம்ம்ம்ம்.. எழுதினதையே படிச்சு படிச்சு எழுத்தெல்லாம் காணாமல் போயிடப் போகுது!!//////////

ஆஹா இது வேற இருக்கா !

கலக்கல் அருமையான பதிவு வாழ்த்துக்கள்