நல்ல வேலையில் அதுவும் இன்று வரை கணினித் துறையில் சிறந்த முறையில் பணி புரிந்து கொண்டிருக்கும் ஒரு ஆனழகனுக்கு மணமகள் தேவை!!
மணமகள் படிப்புத் தகுதி மற்றும் படித்த பல்கலைகழகம்:
கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் எந்த படிப்பு படித்திருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும். மணமகள் கண்டிப்பாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது விதிக்கப் படும் பல விதிகளில் இதுவும் ஒன்று. எந்தத் துறையானாலும் ஏற்றுக் கொள்ளப்படும். அதுவும் உயர் பதவியில் இருப்பது கூடுதல் தகுதியாக கண்டிப்பாகக் கருதப்படும்.
உயர் பதிவியில் இருப்பதினால், அலுவலகத்தில் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் காட்டும் கண்டிப்பும், கெடுபிடியும் என்னிடம் கண்டிப்பாக காட்டக் கூடாது. மீறி காட்டினால் மனித வதை சட்டத்தின் கீழ் யாரிடம் வத்தி வைக்கவேண்டுமோ அதை கச்சிதமாக செய்து முடித்து விடுவேன்.
மணமகள் என்னை விட அதிகம் சம்பளம் வாங்கவேண்டும். மனைவியின் இந்த தகுதியினால் எனக்கு எந்தவித குற்ற உணர்வோ அல்லது மன உளைச்சலோ கண்டிப்பா வராது என்று உறுதி அளிக்கிறேன்.
பின் தூங்கி முன் எழவேண்டும் என்றெல்லாம் கெடுபிடி கிடையாது. எப்பொழுது வேண்டுமானாலும் உறங்கலாம், எப்பொழுது வேண்டுமானாலும் எழலாம். எப்பொழுது எழுந்தாலும் அவங்கதான், காபியிலே ஆரம்பித்து தேவையான எல்லா உணவுகளும் அருமையான சுவையுடன் தயாரித்து விட்டு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். இது கட்டளைன்னு சொன்னா அதுக்கு நான் பொறுப்பு ஆகமாட்டேன்.
வீட்டில் இருந்தபடியே வேலை செய்து கிழிச்சா போதும்ன்னு என்னோட மேனேஜர் சொல்லிட்டார். அதனால் அலுவலகத்திற்கு செல்லும் கெடுபிடி எனக்கு இல்லை. அதுக்காக வீட்டு வேலை எல்லாம் செய்வேன் என்று எதிர் பார்க்கக் கூடாது.
அவங்க அலுவலகத்தில் எல்லாம் கொண்டு ட்ராப் பண்ண முடியாது. அவங்களேதான் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். ஏனெனில் அதே நேரத்தில் என்னோட நண்பர் ஒருவரை தினமும் அலுவலகத்தில் கொண்டு சேர்க்கவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. அதற்காக அவரிடம் கடன் வாங்கி இருப்பதாக எல்லாம் தப்பு தப்பாக எண்ணக் கூடாது. மேலும் என்னோட இந்த நடவடிக்கையிலே குற்றம் கண்டுபிடித்தால் அதுக்கும் நான் பொறுப்பு ஆகமாட்டேன். ஏன், எதுக்கு, என்ன, எப்பொழுது இது போன்ற கேள்விகள் எனக்கு அறவே பிடிக்காது என்பதையும் தைரியமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். மீறி கேட்டாலும் விடை எப்போதும் என்னிடம் கண்டிப்பாக கிடைக்காது. இதுக்கு திமுரு என்றெல்லாம் பட்டம் சூட்டக் கூடாது
நான் என் கணவரைவிட அதிகம் சம்பாதிக்கிறேன் என்ற எண்ணம் எந்த சந்தர்பத்திலும் கண்டிப்பாக வரக்கூடாது. எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்கணும். அடிக்கடி ஹோட்டல், சினிமா, பீச், பார்க் அழைத்துப் போகுமாறு தொந்தரவு பண்ணக் கூடாது. கண்டிப்பாக தோழிகளுடன் கூட எங்கும் செல்லக் கூடாது. ஏனெனில் மனைவியாக வரவிருப்பவள் எப்போதும் என்னை மட்டுமே சார்ந்து இருக்கணும். இதெல்லாம் கண்டிப்பு என முத்திரைக் குத்தக் கூடாது. மீறி எனக்கு தவறான முத்திரை குத்தி தன் தோழிகளிடமோ அல்லது பெற்றோர்களிடமோ போட்டு கொடுத்தால் அதற்கு என் சார்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வருடத்தில் ஒரு முறையாவது ஹோட்டல், சினிமா, பீச், பார்க் இந்த இடங்களுக்கெல்லாம் கண்டிப்பாக அழைத்துச் செல்வேன், என்பதை மிகவும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அடிக்கடி வீட்டுக்கு விருந்திற்கு அழைத்து வருவேன். அவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் ருசியான சாப்பாடு பரிமாறி உபசரிக்கணும். முகத்தில் எப்போதும் மலர்ச்சியையே முன் நிறுத்தி அனைவரிடமும் அன்பாகப் பேசி உபசரித்து வழி அனுப்பவேண்டும். நான் எங்கு வேண்டுமானாலும் எனது தோழிகளுடன் செல்வேன். அது என்னோட சொந்த விருப்பத்தின் கீழ் வருகிறது. அதற்காக் போட்டி மனப்பான்மையுடன் மனைவியாக வரவங்க நடந்துக் கொள்ளக் கூடாது.
மேலே கூறி இருக்கும் எல்லாவற்றையும் மிக கவனமாகவும், சிரத்தையாகவும் படிக்கவும். கூறப்பட்டுள்ள என்னோட விருப்பங்களுக்கு ஒத்துப் போகத் துடிக்கும் மணமகள் உடனே என்னை தொடர்பு கொள்ளலாம். அவசரப்பட்டு ஒத்துக் கொண்டுவிட்டு, திருமணம் முடிந்த பிறகு எனது கொள்கைகள் கேவலமாகத் தெரிந்தாலும் வெளியே யாரிடமும் குறை கூறக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.
நான் ஒரு தடவை சொன்னால் ஆயிரம் தடவை சொன்ன மாதிரி.
இப்படி எல்லாம் நிபந்தனைகளை அள்ளி வீசி மணமகள் தேடும் தனது ஆருயிர் நண்பருக்காக, தானும் களத்தில் இறங்கி மணமகள் தேடும் படலத்தில் ஈடுபட்டிருக்கும் எனது நண்பரின் முழுத் தகவல்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
இந்த அரிய சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன் படுத்திக்கொள்ளப் போகும் மணமகளுக்கு வாழ்த்துக்களை அட்வான்சாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது நண்பரின் அடையாளம் கையிலே துண்டு இருக்கும். அதைப் பார்த்து யாரும் அரசியல்வாதி என்று ஒரு முடிவான முடிவிற்கு வந்து விடாதீர்கள். துண்டு நண்பரின் வாழ்க்கையில் பின்னி பிணைந்த ஒரு அரும்பெரும் பொருள் என்று கூறினால் அது மிகையாகா.
மேலே கூறி இருக்கும் சிறிய கருத்துக்களை மலர்ந்த முகத்துடன் ஏற்றுக் கொள்ளும் மணமகள் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
தெளிவான முகவரி
=================
குண்டக்க மண்டக்க கும்மி அடிப்போர் சங்கம்
என் கனவில் தென்பட்டது (கடை பேரு)
கூகிள் ஆண்டவர் ரோடு
ப்ளாக்ஸ்பாட் குறுக்கு சந்து
தமிழ்மணம் போஸ்ட்
பொறுப்பு அறிவித்தல்: சும்மா படிச்சிட்டு மறந்திடுங்க, நண்பரை திட்டாதீங்க.
57 comments :
அதுவும் இன்று வரை]]
ஆஹா! வடை போச்சே
மணமகள் கண்டிப்பாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது விதிக்கப் படும் பல விதிகளில் இதுவும் ஒன்று. எந்தத் துறையானாலும் ஏற்றுக் கொள்ளப்படும். அதுவும் உயர் பதவியில் இருப்பது கூடுதல் தகுதியாக கண்டிப்பாகக் ]]
கண்டிப்பு ரொம்ப ஜாஸ்தியா இருக்கே
மனித வதை சட்டத்தின் கீழ் யாரிடம் வத்தி வைக்கவேண்டுமோ அதை கச்சிதமாக செய்து முடித்து விடுவேன்]]
ஓஹ்! அவங்களா
அவங்க ஆம்பிளைக்குமா உதவி செய்வாங்க #எக்கச்சக்க டவுட்
ஹா! ஹா! ஜமால் வாங்க வாங்க எவ்வளவு நாள் ஆச்சு வலையில் சந்திச்சு:(
//
நட்புடன் ஜமால் said...
மனித வதை சட்டத்தின் கீழ் யாரிடம் வத்தி வைக்கவேண்டுமோ அதை கச்சிதமாக செய்து முடித்து விடுவேன்]]
ஓஹ்! அவங்களா
அவங்க ஆம்பிளைக்குமா உதவி செய்வாங்க #எக்கச்சக்க டவுட்
//
செய்யறதா கேள்வி ஜமால்:)
பொறுப்பு அறிவித்தல்: சும்மா படிச்சிட்டு மறந்திடுங்க, நண்பரை திட்டாதீங்க.
]]
திட்டாம போய்டாதீங்கன்னு சொல்ற மாதிரி இருக்கே :P
மனைவியின் இந்த தகுதியினால் எனக்கு எந்தவித குற்ற உணர்வோ அல்லது மன உளைச்சலோ கண்டிப்பா வராது என்று உறுதி அளிக்கிறேன்.]]
ரொம்ப நல்லவரு போல ...
எப்பொழுது எழுந்தாலும் அவங்கதான், காபியிலே ஆரம்பித்து தேவையான எல்லா உணவுகளும் அருமையான சுவையுடன் தயாரித்து விட்டு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.]]
மேலே உள்ள கமெண்ட் இங்கே பொய்த்து விட்டது
//
நட்புடன் ஜமால் said...
பொறுப்பு அறிவித்தல்: சும்மா படிச்சிட்டு மறந்திடுங்க, நண்பரை திட்டாதீங்க.
]]
திட்டாம போய்டாதீங்கன்னு சொல்ற மாதிரி இருக்கே :P
//
ஹி! ஹி! இது போட்டு கொடுப்போர் சங்கம்:)
அதுக்காக வீட்டு வேலை எல்லாம் செய்வேன் என்று எதிர் பார்க்கக் கூடாது. ]]
சரிங்க எதிர்(ல) பார்க்கலை
சைட்ல பார்க்கலாமா
கொஞ்சம் லெஃப்ட்டுக்கா அல்லது ரைட்டுக்கா பார்க்கலாமா
//
நட்புடன் ஜமால் said...
மனைவியின் இந்த தகுதியினால் எனக்கு எந்தவித குற்ற உணர்வோ அல்லது மன உளைச்சலோ கண்டிப்பா வராது என்று உறுதி அளிக்கிறேன்.]]
ரொம்ப நல்லவரு போல ...
//
நம்பி ஏமாறுவோர் சங்கம், சென்னை கிளை!
அதற்காக அவரிடம் கடன் வாங்கி இருப்பதாக எல்லாம் தப்பு தப்பாக எண்ணக் கூடாது.]]
அவரு வாங்கிய கடனை இவங்க எப்படி எண்ணுவாங்க ...
//
நட்புடன் ஜமால் said...
எப்பொழுது எழுந்தாலும் அவங்கதான், காபியிலே ஆரம்பித்து தேவையான எல்லா உணவுகளும் அருமையான சுவையுடன் தயாரித்து விட்டு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.]]
மேலே உள்ள கமெண்ட் இங்கே பொய்த்து விட்டது
//
ஏமாந்து போனோர் சங்கம் அதிரை கிளை:)
ஏன், எதுக்கு, என்ன, எப்பொழுது இது போன்ற கேள்விகள் எனக்கு அற-வே பிடிக்காது]]
அற-way பிடிக்காட்டி வேறwayல கேட்போம்
எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்கணும்]]
செவ்வந்தி பூவா
சாமந்தி பூவா
//
நட்புடன் ஜமால் said...
அதற்காக அவரிடம் கடன் வாங்கி இருப்பதாக எல்லாம் தப்பு தப்பாக எண்ணக் கூடாது.]]
அவரு வாங்கிய கடனை இவங்க எப்படி எண்ணுவாங்க ...
//
அதெல்லாம் கண்டுக்கப்பிடாது, அது அப்படிதான்.
தாறு மாறாக மிரட்டுவோர் சங்கம்!
வருடத்தில் ஒரு முறையாவது]]
மற்ற நாட்களில் அவங்க செலவு செய்து கூட்டிகிட்டு போகனுமோ
//
நட்புடன் ஜமால் said...
ஏன், எதுக்கு, என்ன, எப்பொழுது இது போன்ற கேள்விகள் எனக்கு அற-வே பிடிக்காது]]
அற-way பிடிக்காட்டி வேறwayல கேட்போம்
//
படிப்போரின் விருப்பத்திற்கு விட்டோம்லே:)
எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அடிக்கடி வீட்டுக்கு விருந்திற்கு அழைத்து வருவேன்]]
இது நீங்களாச்சே ரம்யா ...
//
நட்புடன் ஜமால் said...
எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்கணும்]]
செவ்வந்தி பூவா
சாமந்தி பூவா
//
ரெண்டும் இல்லே சிரிப்பு!!!!
என்னோட விருப்பங்களுக்கு ஒத்துப் போகத் துடிக்கும் மணமகள் உடனே என்னை தொடர்பு கொள்ளலாம்.]]
ஆமாமாம் ஒத்து போனா துடிக்கத்தான் செய்யனும் :P
ரெண்டும் இல்லே சிரிப்பு!!!!]]
ப்ஃபூ இவ்வளவு தானா ...
நான் ஒரு தடவை சொன்னால் ஆயிரம் தடவை சொன்ன மாதிரி.]]
நூறு பாட்சாவா ...
இப்படி எல்லாம் நிபந்தனைகளை அள்ளி வீசி மணமகள் தேடும் தனது ஆருயிர் நண்பருக்காக]]
மணல்கயிறே தேவலாம் போலிருக்கே
//
நட்புடன் ஜமால் said...
எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அடிக்கடி வீட்டுக்கு விருந்திற்கு அழைத்து வருவேன்]]
இது நீங்களாச்சே ரம்யா ...
//
மாப்பிள்ளையும் அப்படிதான் என்னைய மாதிரியே தோழிகளை வீட்டுக்கு எல்லாம் அழைச்சிகிட்டு வருவாரு:)

படுத்திக் கொள்ளும் மணமகளுக்கு வாழ்த்துக்களை அட்வான்சாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.]]
எழுத்து பிழை இல்லையே, நசர் என்பதால் கேட்டேன்
எனது நண்பரின் அடையாளம் கையிலே துண்டு இருக்கும். ]]
வேகமா துண்டு போடவோ ...
ப்ளாக்ஸ்பாட் குறுக்கு சந்து
தமிழ்மணம் போஸ்ட்]]
செம சூப்பரு ரம்ஸ்
//
நட்புடன் ஜமால் said...
என்னோட விருப்பங்களுக்கு ஒத்துப் போகத் துடிக்கும் மணமகள் உடனே என்னை தொடர்பு கொள்ளலாம்.]]
ஆமாமாம் ஒத்து போனா துடிக்கத்தான் செய்யனும் :P
//
ஹையோ ஹையோ ஜமால்!
//
நட்புடன் ஜமால் said...
வருடத்தில் ஒரு முறையாவது]]
மற்ற நாட்களில் அவங்க செலவு செய்து கூட்டிகிட்டு போகனுமோ
//
மாமியார் வீட்டுலே செலவு செய்யனும் போல நண்பர் நசரேயன்தான் இதுக்கு பதில் சொல்லணும்:)
//
நட்புடன் ஜமால் said...
நான் ஒரு தடவை சொன்னால் ஆயிரம் தடவை சொன்ன மாதிரி.]]
//
ம்ம்ம்ம் அப்படித்தான் போல:)
//
நட்புடன் ஜமால் said...
இப்படி எல்லாம் நிபந்தனைகளை அள்ளி வீசி மணமகள் தேடும் தனது ஆருயிர் நண்பருக்காக]]
மணல்கயிறே தேவலாம் போலிருக்கே
//
எங்கே கயிறு? கயிறு? அதுவும் மணல் கயிறு:)
கயிறு தேடுவோர் சங்கம். அதிரை கிளை
//
நட்புடன் ஜமால் said...
படுத்திக் கொள்ளும் மணமகளுக்கு வாழ்த்துக்களை அட்வான்சாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.]]
எழுத்து பிழை இல்லையே, நசர் என்பதால் கேட்டேன்
//
சரி பண்ணியாச்சு ஜமால், நன்றி!
மணல்கயிறே தேவலாம் போலிருக்கே
//
எங்கே கயிறு? கயிறு? அதுவும் மணல் கயிறு:) ]]
மணல்கயிறு
//
நட்புடன் ஜமால் said...
எனது நண்பரின் அடையாளம் கையிலே துண்டு இருக்கும். ]]
வேகமா துண்டு போடவோ....
//
ஆமா ஆமா ஆமா......
எழுத்து பிழை இல்லையே, நசர் என்பதால் கேட்டேன்
//
சரி பண்ணியாச்சு ஜமால், நன்றி!]]
ஹையோ ஹையோ
அத சொல்லல ரம்ஸ்
கொள்ளும்ன்னு இருக்கே அதை
கொல்லும்ன்னு படிக்க சொன்னேன்
//
நட்புடன் ஜமால் said...
ப்ளாக்ஸ்பாட் குறுக்கு சந்து
தமிழ்மணம் போஸ்ட்]]
செம சூப்பரு ரம்ஸ்
//
நன்றி ஜமால், நானும் வலையில் இருக்கேன்னு சொல்லிக்கத்தான் இந்த கலாய்ச்சல்:)
//
நட்புடன் ஜமால் said...
எழுத்து பிழை இல்லையே, நசர் என்பதால் கேட்டேன்
//
சரி பண்ணியாச்சு ஜமால், நன்றி!]]
ஹையோ ஹையோ
அத சொல்லல ரம்ஸ்
கொள்ளும்ன்னு இருக்கே அதை
கொல்லும்ன்னு படிக்க சொன்னேன்
//
அப்போ நான் சரியாதான் எழுதி இருக்கேனா? ஹையோ ஹையோ ஜமால்:)
அப்போ நான் சரியாதான் எழுதி இருக்கேனா? ஹையோ ஹையோ ஜமால்:)]]
எழுத்து பிழை கண்டுபிடிக்க தெரிந்த அளவுக்கு எனக்கு ஞான்ஸ் இல்லை
தெரிந்தாலும் அதை ஒரு கமெண்ட்டா போட மாட்டேன் - தெரிந்தவர்களாயிருந்தால் மடலிட்டு சொல்வேன்
தள............. எங்க இருக்கீங்க........... உங்கள வச்சி இங்க ஒரு காமெடி ஓடிக்கிட்டு இதுக்கு.........
//
நானும் வலையில் இருக்கேன்னு சொல்லிக்கத்தான் இந்த கலாய்ச்சல்:
//
நல்லா கிளதப்புறங்கப்பா பீதிய.........

ஹையோ ஹையோ ஜமால் நல்லா சொன்னீங்க ஒரு வாசகம் சொன்னாலும் அது திருவாசம்தான் போங்க:)
//
வழிப்போக்கன் - யோகேஷ் said...
தள............. எங்க இருக்கீங்க........... உங்கள வச்சி இங்க ஒரு காமெடி ஓடிக்கிட்டு இதுக்கு.........
//
நானும் வலையில் இருக்கேன்னு சொல்லிக்கத்தான் இந்த கலாய்ச்சல்:
//
நல்லா கிளதப்புறங்கப்பா பீதிய.........
//
வாங்க வாங்க யோகேஷ் ஒன்னும் பயப்படாதீங்க:)
தங்கம் எல்லா தகுதியும் எனக்கு இருக்கு ஃபோடோ உனக்கு அனுப்பவா இல்லை மாப்பிள்ளைக்கு அனுப்பனுமா.... மத்த கண்டிஷன்ஸ் காலையில் வந்து சொல்றேன்....அக்கா கிட்ட போட்டு கொடுத்துடாத
கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் எந்த படிப்பு படித்திருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும். மணமகள் கண்டிப்பாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது விதிக்கப் படும் பல விதிகளில் இதுவும் ஒன்று.
கேம்பிரிட்ஜ் ம்ம்ம்ம்ம்
.சினிமா, பீச், பார்க் அழைத்துப் போகுமாறு தொந்தரவு பண்ணக் கூடாது. கண்டிப்பாக தோழிகளுடன் கூட எங்கும் செல்லக் கூடாது. ஏனெனில் மனைவியாக வரவிருப்பவள் எப்போதும் என்னை மட்டுமே சார்ந்து இருக்கணும்
நல்ல எண்ணம்
ஆயிரம் தடவை சொன்ன மாதிரி.இப்படி எல்லாம் நிபந்தனைகளை அள்ளி வீசி மணமகள் தேடும் தனது ஆருயிர் நண்பருக்காக, தானும் களத்தில் இறங்கி மணமகள் தேடும் படலத்தில் ஈடுபட்டிருக்கும் எனது நண்பரின் முழுத் தகவல்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
::))))
நட்புடன் ஜமால் said...
பொறுப்பு அறிவித்தல்: சும்மா படிச்சிட்டு மறந்திடுங்க, நண்பரை திட்டாதீங்க.
]]
திட்டாம போய்டாதீங்கன்னு சொல்ற மாதிரி இருக்கே :P
///
எனக்கும் அப்படித்தான் தோணுது
அதுசரி...
கடைசியில பிள்ளையையும் கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுறது மாதிரியில்ல இருக்கு...
நசரேயன் சார்... நீங்க நம்ம ரோட்டுலதான் இருக்கிங்க போல... (ஹி....ஹி....ஹி)
ஹையா...
பிப்டி (அரைசதம்) நாந்தான் அடிச்சேன்..!
நசரேயன்.. சரி.. அடுத்து யாருக்குக்கா பாக்கப் போறீங்க? (ஹி ஹி ஹி)
நிறைய புகைப்படங்கள் வந்து இருக்கு, மறு வாழ்வு கொடுத்த வள்ளல் ரம்யா வாழ்க .. என்னோட கடைக்கு தொடுப்பு கொடுங்க இன்னும் நிறைய புகைப்படங்கள் வர
//நசரேயன்.. சரி.. அடுத்து யாருக்குக்காபாக்கப் போறீங்க? //
வாத்தியாருக்கு ரெண்டு புகைப்படம் அனுப்பி வைக்கிறேன்
மறக்காம பந்திக்கு சாபுட போகும்போது கூப்புடுங்க வர்taaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
ஏங்க அவுரு செப்டம்பர் 2009ல் போட்ட பதிவுக்கு எதிர்பதிவாங்க இது... ஒரு வருஷம் கழிச்சா.....டூ மச்சுங்கோ....:))
பதிவு முழுதும் கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனா போட்டீங்க பாருங்க ஒரு வரி //முகத்தில் எப்போதும் மலர்ச்சியையே // சுத்தம்.!
பாவம் நசரேயன். இதுமாதிரி பொண்ணு கிடைச்சுதுன்னா மறக்காம சொல்லுங்க பாஸ்.! :-)))))
நசரேயன்,
இரயிலடியில பாக்குறது பத்தாதுன்னு இது வேறயா??
வீட்ல தெரியுமாலே சங்கதி?
Post a Comment