அனைத்து வலை நண்பர்களின் குட்டிச் செல்வங்களுடன் நான்!!
கட்டித் தங்கங்களான சொக்கத் தங்கங்களை ஒரு சிறிய சுற்றுலா அழைத்துச் செல்ல ஆசைப் பட்டேன்!
அந்த ஆசையின் விளைவு இந்த இடுகை....
பிஞ்சு விரல்களை செல்லமாக பிடித்து செல்கையில் நழுவி ஓடும் செல்லங்களை ஓடிப்பிடித்து ஒய்யாரமாக நடக்கும் பாதை இது...
வியக்க வைக்கும் இந்த வர்ணப்பாதையில் நடை பயில வாருங்கள் செல்லங்களே!!
வெள்ளைகோடுகளும் மஞ்சள் கோடுகளும் சீரான வழியை காட்டுகிறதோ!!
வானம், பூமி, மலைகளுக்கிடையே வழி நடத்திச் செல்லும் பாதையோ!!இந்த கண்கொள்ளா காட்சியாக தோற்றமளிக்கும் பாதைகளில் நடப்பது நாங்கள் தானே!!
வளைந்து நெளிந்து செல்கையில் மரங்களில் பூத்து குலுங்கும் மலர்கள் எங்களுக்கு மாலையணிவித்து அல்லவா வழி காட்டுகிறது!!
இரவின் ஒளியில் மிளிரும் நடை பாதையின் அழகு என்னுடன் நடை பயிலும் கட்டித் தங்கங்களுக்கு இயற்கை காணிக்கையாகியதோ!!
இந்தப் பாதைகளை என்ன வென்று சொல்ல! என்னுடன் நடக்கும் செல்லங்கள் கண்டு களிக்க மட்டும் அமைந்தவையோ!!
தெளிவான பாதை மட்டும் அல்ல நமது எண்ணங்களும் தெளிவாக்க இந்த பாதை அமைந்ததோ!!
கண்கொள்ளா காட்சியாக அமைந்திருக்கும் இந்த பாதையில் நடக்கும் போது செல்லங்கள் குதியாட்டம் போடுவார்கள் இல்லையா!!பார்க்கும் போதே மனம் துள்ளுகிறதே!!
நடந்து செல்லும் போது.........
குகை போல் அமைப்பு நிழல்கள் தரும் சுகம் தனித்தன்மை வாய்ந்ததோ!!
கண்களுக்கு மட்டும் அல்ல கருத்துக்கும் குளிர்ச்சிதான் இந்த வர்ண மலர்களுடன் கூடிய நடை பாதை!!
மலைகளுக்கு நடுவே தோன்றும் இந்த பாதைகளை பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறதே!! இந்த பாதையில் என்னுடன் வரும் அன்புச் செல்லங்களுடன் நடந்தால்....





