முனிவர் ஒருவர் தம் சகாக்களுடன் ஒவ்வொரு இடமாக சுற்றி திரிந்து, அலைந்து, கடைசியில் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து இளைப்பாறி கொண்டிருந்தார். வாசலில் யாரோ சிலர் பேச்சு குரல் கேட்கிறதே என்று வீட்டு சொந்தகாரர் வந்து பார்த்தால், அங்கே சில முனிவர்கள் மிகவும் களைப்பாக அமர்ந்து இருதனர்.
நம்ப ஆளோ பெரிய சிவ பக்தர்.
அவர்களை கண்ட பக்தர் பதறி போய், சாமி ஏன் வெளியே அமர்ந்து விட்டீர்கள். உள்ளே வாங்க ஏதாவது தாக சாந்தி அடைய ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு. தம் மனைவியை அழைத்தார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சகல மரியாதையுடன் முனிவர்களை உள்ளே அழைத்து சென்றார்கள்.
மோர் அருந்தி சற்று ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். உங்களை பார்த்தால் மிகவும் களைத்து காணப்படுகிறீர்கள். சிறிது நேரத்தில் சமையல் முடிந்து விடும். இன்று எங்கள் இல்லத்திலேயே சாப்பிடுங்கள் என்றார் பக்தர். அதற்கு அந்த முனிவர் இல்லையப்பா, எனக்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது, நாங்கள் உடனே செல்லவேண்டும், நீ தக்க நேரத்தில் தாகத்திற்கு மோர் கொடுத்ததே போதும். அதற்கே நாங்கள் மிகவும் சந்தோசம் அடைகிறோம் என்றார். இல்லை இல்லை நீங்கள் அனைவரும் இன்று எங்கள் இல்லத்தில் சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும். சாப்பிட்ட பின் உங்கள் யாத்திரயை தொடரலாம் என்று பக்தன் வேண்டுகோள் விடுத்தார்.
வேறு வழி இல்லாமல் முனிவர்கள் சாப்பிட சம்மதித்தார்கள். சமையல் ரெடி ஆனது. சாப்பிட அனைவரும் அமர்ந்து விட்டனர். வடை, பாயாசத்துடன் சாப்பாடு பரிமாறப்பட்டது. நல்ல பசி என்று கூறவிட்டு தலைமை முனிவர் சாப்பிட ஆரம்பித்தார், சக முனிவர்களும் கடும் பசியுடன் இருந்ததால் வேகமாக சாப்பிட்டார்கள்.
எல்லாம் முடிந்தது, வெற்றிலை பாக்கு உபசாரம் நடந்தது. வேண்டாம் என்று சைகையில் முனிவர்கள் கூறி விட்டனர்.
பக்தனும் அவர் மனைவியும் பதறிபோய் விட்டனர். ஏ சாமி சாப்பாடு நல்லா இல்லையா? தவறு செய்துவிட்டூமா? மன்னித்து விடுங்கள் சாமி என்று கூறி கலங்க ஆரம்பித்துவிட்டனர்.
இதை பார்த்து அதிர்ந்த முனிவர் இல்லை என்று தலை அசைத்து விட்டு பேச ஆரம்பித்தார்.
" ரஜம் பாவஜம் பொகு ஜொகுஜு ஆனா கொந்ஜம் ஜூடு "
பக்தர் மற்றும் மனைவிக்கு ஒன்று புரியவில்லை.
நண்பர்களே உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.......
பின் குறிப்பு : "ரசம் பாயாசம் பொகு ஜோர், ஆனா கொஞ்சம் சூடு" இதைதான் அப்படி ஒரு மழலையில் கூறினார் நம் முனிவர். நல்ல பசி சாப்பாடு சூடாக இருந்தது கூட கவலைப்படாமல் சாப்பிட்டதால் நாக்கு மேல்லண்ணத்தில் ஒட்டி கொள்ள எங்கே பேச்சு வரும் அதுதான் அந்த மழலை.


