மற்றொரு சந்திப்பு
வைகை: ராஜா... ராஜாதி ராஜா...., தூக்காதெ வேறு எங்கும் கூஜா..... கூஜா அட தூக்காதெ வேறு எங்கும் கூஜா...... எதிரே பார்த்திபன் கையில் தூக்கு கொண்டு வருவதை பார்த்ததும் பாட்டு சத்தம் குறைகிறது. ஐயோ இவன் இல்லே வாரான். சிக்கினோம்னா அவ்வளவு தான். சரி அப்படியே திரும்பிரலாம். வேலு வேணாண்டா இவன் சகவாசம் உனக்கு.
பார்த்திபன்: ஏய் நில்லு, சைக்கிளை எங்கே திருப்பரே? சைக்கிளை ஓரமா நிறுத்து
வைகை: இவன் நம்பளை பாத்தா ஒடனே டிராபிக் போலீஸ் மாதிரி நம்ப சைக்கிளை வேறே நிருத்தர்ரன்ப்பா. இவனோட பெரும் தொல்லையா போச்சு. எங்கிட்டு போனாலும் முன்னே இவன் மொகம் தான் தெரியுது.
பார்த்திபன்: டேய் என்னடா அண்ணனை கண்டுக்காம போறே? என்னா பாட்டு இது? நான் தூக்கு எடுத்து கிட்டு டீ வாங்க போறதெ பாத்ததும் உனக்கு பாட்டு பீறிட்டு வருதில்லே?
வைகை: ஆத்தி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லே. நாம்பாட்டுக்கு பாடிகிட்டு வாறேன். உனக்கு என்னா போச்சு, ஏன் என் சைக்கிளை நிறுத்தினே ? (மனுசுக்குள்ளே) இவனை ஒரு நாளு...
பார்த்திபன்: கேக்குறேன் இல்லே, மனசுக்குள்ளே என்னைய திட்டிட்டு என்னா யோசிக்கிற மாதிரி நடிக்கிறே?
வைகை: ஆத்தாடி உள்ளே நினைக்கறதை அப்படியே சொல்லறானே
பார்த்திபன்: ம்ம்ம்ம் என்ன விஷயம் சொல்லு...
வைகை: சரி இன்னைக்கு அவ்வளவுதான். நம்ப சந்தோஷத்திற்கு சங்குதான். என்ன திட்டபோறானோ. இவன் என்ன நம்பள சுத்தி சுத்தி வரானா இல்லை நம்பதான் இவன் போற வழியா போறோமா? இதை மொதல்லே கவனிக்கணும். பாக்கலாம் இன்னைக்கு நிலைமை என்னான்னு?
பார்த்திபன்: அறிவுகெட்ட முண்டம் எதிரிலே தெரிஞ்சவன் வரானே, அவனுக்கு வணக்கம் சொல்லுவோம், இல்லைனா சிரிச்சாவது வைப்போம்ன்னு யோசிக்கமாட்டே? சாதராண மரியாதை கூட தெரியாத ஜென்மமா நீ ?
வைகை: இந்தாப்பா நீ என்னைய ரொம்ப கேவெலமா பேசறே, அப்புறம் எனக்கு கோவம் வரும் ஆமா சொல்லிப்பிட்டேன்.. இவன் நம்பகிட்டே வம்பு பண்ணற மாதரிதான் தெரியுது. கையிலே தூக்கு, கண்ணுலே கூலிங்க்ளாஸ், பச்சை சட்டை, காக்கி பான்ட். வேஷம் போட்ட மாதிரி வந்துட்டு என்னய்யா திட்டறே. இருடி...
பார்த்திபன்: என்னாடா நான் பாட்டுக்க கேட்டுகிட்டே இருக்கேன், நீ என்னடான்னா என்னையே முறைச்சு பாக்கறே
வைகை: நீ வந்ததை, நா ஒன்னும் கவனிக்கலை, எம்பாட்டுக்க போய்கிட்டு இருக்கேன். சரி உனக்கு இப்போ என்னா வேணும்?
பார்த்திபன்: உனக்கு காது கேக்காதா, என்னா பாட்டுன்னு கேக்கறேன்
வைகை: ம்ம்ம்ம் அதுவா வந்து.....
பார்த்திபன்: என்னாடா வந்து போயி, சட்டுன்னு சொல்லு, எனக்கு வேலை நிறைய இருக்கு. நான் என்னா உன்னைய மாதிரி வெட்டி பயலா ?
வைகை: நம்பளை மறுபடியும் ரொம்ப கேவலமா பேசறனோ? வந்து.. வந்து .. கமல் பாட்டு பாடினேன், அதுக்கு என்னா இப்போ? அதெல்லாம் நான் பாடக்கூடாதா?
பார்த்திபன்: இல்லே மரியாதையை தெரியாதவனா இருக்கியே, உன்னே என்னா பண்ணலாம்னு யோசிக்கிறேன், என்னாடா என்னா வேணும்னா கேட்டே? நீ என்னா ஹோட்டல் வச்சிருக்கியா? நான் சாப்பிடவா வந்தேன்? சூடா ஒரு மசால் தோசை கேட்டா குடுப்பியா? மூஞ்சியை பாரு. என்னை பாத்து ஏண்டா இந்த பாட்டை பாடினே? நான் டீ வாங்கபோறது உனக்கு அவ்வளவு கேவலமா இருக்கு. ம்ம் உனக்கு எவ்வளவு அசட்டு தைரியம் இருந்தா நீ இந்த பாட்டை என்னை பாத்து பாடுவே? சொல்லுடா? அட சொல்லுடான்னா?
வைகை: முன்னே போன கடிக்கிறான், பின்னே வந்தா உதைக்கிறான். நாம்ப பாட்டுக்க பாடிக்கிட்டு தானே வந்தோம், இவனை பார்த்து நா ஏன் பாடனும்? இவன் டீ வாங்கினா எனக்கு என்னா? காப்பி தண்ணி வாங்கினாதான் எனக்கு என்னா? பொல்லாதவனா இருக்கானே.
பார்த்திபன்: என்னா நான் கேட்டுகிட்டு இருக்கேன், நீ பாட்டுக்க வானத்தை பார்த்து யோசிக்கிறே? பதில் சொல்ல மாட்டியா? என்னை பார்த்தா கழுதை மாதிரி தெரியுதா?
வைகை: அட இங்கே பாருய்யா நம்ப நினைச்சதை அப்படியே சொல்லறான். இவனை சமாளிக்கவே தனியா படிக்கணும் போல? சரி எப்படியோ சமாளிக்கலாம். சரி என்னாப்பா....
பார்த்திபன்: என்னா சரி என்னா என்னாப்பா... ஒழுங்கா பேச தெரியாதா உனக்கு. 8 கழுதை வயசு ஆவுதுல்லே. யோசிக்க வேண்டாம். ஏண்டா என்னைய பார்த்து அப்படி பாடினே?
வைகை: இல்லேப்பா, நானு முதல்லே இருந்தே அந்த பாட்டுதானே பாடிகிட்டு வந்தேன்.
பார்த்திபன்: எப்போ என் தலை பாத்த முதல்லே இருந்தா?
வைகை: என்னா வந்து சிக்கிட்டோமோ, அப்படித்தான் நினைக்கிறேன். சின்னா பின்னமாக்கி விடுவானோ? இருக்கட்டும், இருக்கட்டும். பேசி சமாளிக்காம்.
பார்த்திபன்: டேய் நான் இங்கே ஒருத்தன் நின்னு பேசிகிட்டு இருக்கேன், அப்பப்போ நீ பாட்டுக்கு திரும்பி நின்னு பேசிகிட்டு இருக்கே, நீ என்னாடா லூசா?
வைகை: ஏம்பா, இதுக்குபோய் லூசு அது இதுன்னு சொல்லிக்கிட்டு. நான் பாட்டுக்க, என் வாயிலே வந்ததை பாடிகிட்டு வந்தேன், அந்த நேரம் பார்த்து நீ வந்தியா, உனக்கு தப்பா படுது. அம்புட்டுதான்.
பார்த்திபன்: நான் என்னா சும்மாவா உன்னே லூசுன்னு சொன்னேன், நெஜமாவே நீ லூசுதாண்டா, இவ்வளவு ஒயரம் வளர்ந்திருக்கியே, ரோட்லே என்னடா பாட்டு உனக்கு? அதுவும் நான் வரும்போது. போன தடவையே பாடினதை கேட்டு நாயி தொரத்த, நீ ஓட கடைசியிலே நாயி ஜெய்ச்ச்டிச்சு இல்லே. உன் வேட்டி நாயி வாயிலே இருந்தது மறந்து போச்சா ?
வைகை: அதெல்லாம் ஏம்பா இப்போ போய் பேசிகிட்டு, சரி சரி விடு. பிரச்சனையை பண்ணாதே
பார்த்திபன்: நான் பிரச்சனையை பண்ணறேனா? இந்த மாதிரி சில்லாவளித்தனம் எதுவும் என்கிட்டே வச்சிகாதேன்னு சொன்னேனா இல்லையா? மொதல்லே அதெ சொல்லு.
வைகை: அதில்லே, வந்து, வந்து என்னா வார்த்தை கிடைக்க மாட்டேங்குது. பேச முடியலியே. ஆண்டவா இன்னைக்கு யாரு மூஞ்சியிலே முளிச்சொமோ? இப்பவே கண்ணு மங்கலாயிடுசே.. நானு என்னா செய்வேன். எப்படி இவன் கிட்டே இருந்து தப்பிக்க போறேனோ, ஒண்ணுமே புரியலையே.
பார்த்திபன்: ஏண்டா ஒண்ணுமே பேசாமே எருமை மாதிரி நிக்கிறே?
வைகை: ஏம்பா இப்படி எல்லாம் பேசறே. எனக்கு அப்பறம் கோவம் வந்துடும். உனக்கு இப்போ என்னா பிரச்சனை?
பார்த்திபன்: சரி எனக்கு வேண்டாதவன் ஒருத்தன் அந்த டீ கடையிலே உக்காந்து இருக்கான்.
வைகை: அதனாலே?
பார்த்திபன்: அதென்ன சொல்லி முடிக்கறதுக்குள்ளே, கேள்வி? பட் என்று
வைகை: ஏம்பா வாய் பேச்சு வாயில் இருக்கும்போதே கை நீட்ரே?
பார்த்திபன்: போ போய் நான் சொன்னதே மொதல்லே செய். டீ வாங்கிட்டு வா. என்னடா மொறைக்கிரே. ஒரு அறை போதாதா? அந்த கன்னத்திலேயும் கொடுக்குனுமா? போறியா? இல்லையா?
வைகை: இவனை ஒரு நாளைக்கு சரியா கவனிக்கணும். வரவன் போறவன் எல்லாரும் போட்டு மொத்தரான்களே. நானு என்னா "இரவல்லே தாலாட்டி வந்தவனா" ? இவனுகளை எல்லாம் யாருன்னே தெரியாமே போட்டு அடி பிண்ணிடனும். முதல்லே ஒரு கோணி ரெடி பண்ணனும். எங்காவது படுக்காமவா போயிடபோறான். அப்போ இவனோட தலையை கோணிக்குள்ளே போட்டு மூடி யாருன்னே தெரியாமே நொங்குன்னு நொங்குன்னு நொங்கிடனும் ஆமா. தொணைக்கு யாரானும் கூட்டிக்கணும். சுப்பிரமணியை கூப்பிடலாமா. யோசிச்ச்ச்சு கச்சிதமா காரியத்தை முடிக்கணும். இருடி உனக்கு இருக்கு. இப்போ டீ வாங்கி குடுத்து தப்பிசிக்குவோம்.
பார்த்திபன்: என்னாடா டீ வாங்கிவான்னா ஒரே யோசனையா இருக்கே. போக மாட்டியா? இந்தா தூக்கு, எடுத்துக்கிட்டு போடா.
வைகை: ஒரு வார்த்தை பேசரதுகுள்ளே ஒன்பது டா சொல்லறான். இருக்கட்டும் இருக்கட்டும். சரி தூக்கை கொடு. டீ வாங்கியாறேன். யாரை பாத்து பயப்படறான். அதே மொதல்லே கண்டு பிடிக்கணும். ஏம்ப்பா அங்கே யாரு உனக்கு வேண்டாதவ்ன்னு சொன்னே?
பார்த்திபன்: ஏண்டா கொடுத்தது போதாதா? தொங்கற நாக்கை தோள்லே போட்டுக்கிட்டு வம்புக்கு அலையறே. வந்தேன்னா..... நல்லா திட்டிடுவேன்.......... ஆமா!!
வைகை: ஆத்தாடி நமக்கு வாயி கொஞ்சம் நீளம்தான், நல்ல வேளை தள்ளி நின்னோம் தப்பிச்சோம், இல்லைன்னா பல்லை உடைச்சிருப்பானோ? சரி எதுக்கு இந்த ஆராயிச்சி. மொதல்லே இவனுக்கு டீ வாங்கி கொடுத்துடுவோம். ஆமா அங்கே என்னா இரெண்டு நாய் நிக்குது, ஒரு நாய்ன்னாவே எனக்கு பயமான பயம். இரெண்டு வேறேயா?
பார்த்திபன்: முண்டம் அங்கே நிக்கிறது ஒரு நாய்தான். ஏண்டா இப்படி தப்பு தப்பா யோசிக்கறே.
வைகை: நீ அடிச்சதில்லே காதுக்குள்ளே குயிய்ன்னு ஒரு சத்தம் கேட்டுது, காது கேக்கலை, கண்ணு முன்னாடி ஒரே வண்டா பறக்குது. அவ்வளவுதான்.
பார்த்திபன்: லூசு அது வண்டு இல்லே. வண்டா இருந்தா இந்நேரம் உன் முழியை நோண்டிருக்கும் . நீ இப்போ போகப்போறியா இல்லையா ?
பார்த்திபனின் தந்தையின் நண்பர்: என்னப்பா நல்லா இருக்கியா இங்கே என்ன பண்ணறே அதுவும் இவன் கூட ?
பார்த்திபன்: நல்ல இருக்கேன் சார், ஒன்னும் இல்லே சும்மா டீ வாங்க வந்தேன்.
பார்த்திபனின் தந்தையின் நண்பர்: வேலைக்கு போகபோறேன்னு சொன்னே, எப்போ போறே? போறதுக்கு முன்னாடி வந்து என்னைய பாத்திட்டு போ என்ன? அது சரி இந்த லூசு பயலோட உனக்கு என்ன பேச்சு வார்த்தை நடக்குது.
பார்த்திபன்: அது ஒன்னும் இல்லை சார் நான் டீ வாங்க வந்தேன் வந்த இடத்தில் என்னைய வம்புக்கு இழுக்கிறான்.
பார்த்திபனின் தந்தையின் நண்பர்: சரி சீக்கிரம் வீடு போய் சேரு, இவன மாதிரி காவாலி பயலோட சகவாசம் வச்சிக்காதே
வைகை: என்னாது காவாலி பயலா நானா, நல்லா இருங்கப்பு நல்லா இருங்க, ஏன் எல்லாரும் ஒரு மார்க்கமாகவே திரியறானுங்க. வயசுக்கு ஏத்த மாதிரியா பேசறானுங்க, இவங்களுக்குதான் மருவாதியே தெரியலை. ஆனா எனக்கு மருவாதி இல்லைன்னு இங்கே நிக்கறவன் கூட சொல்லறான். இதுக்கு மேலே இங்கே நின்னா அவ்வளவுதான்.
சீக்கிரம் இடத்தை காலி பண்ணனும். இவன் முகத்திலே இன்னமே முழிக்கவே கூடாது சாமி.
பார்த்திபன்: நின்னது போதும், போய் டீ வாங்கிட்டு வர வழியை பாரு
வைகை: இதா போறேன் இல்லே, அண்ணே 2 பார்சல் டீ போடுங்கண்ணே. இந்தாங்க தூக்கு.
மாடாசாமி: ஏலே வேலு இங்கே என்னா பண்ணறே?
வைகை: அண்ணே மாடசாமியண்ணே நல்லா இருக்கிறீங்களா? ஆமா போன மாசம் எங்கோ ஊருக்கு போனதா சொன்னாங்க. எப்பண்ணே வந்தீங்க?
மாடாசாமி: சரி இங்கே உக்காரு, எப்படி இருக்கே, எப்ப கல்யாணம் செய்துக்க போறே? இன்னும் அக்கா வீட்ட்லேதான் இருக்கியா?
வைகை: இல்லேண்ணே இப்படியே அக்கா வீட்டுலயே செட்டில் ஆக வேண்டியதுதான். எனக்கு அக்கான்னா அம்புட்டு உசுருண்ணே. அதை விட்டுட்டு நான் எங்கே போவேன் ? எனக்கு என்னா பொழைக்க தெரியும்? அக்கா வீட்டிலேயே இருப்பதா முடிவு பண்ணிட்டேண்ணே.
மாடசாமி: சரி டீ யாருக்கு உங்க அக்கா வீட்டுக்கா ? ஏன் அக்காவுக்கு உடம்பு சரியா இல்லையா?
வைகை: இல்லைண்ணே, என்னோட சிநேகிதன் ஒருத்தனுக்கு டீ வாங்க வந்தேன்.
மாடசாமி: ஏன் அவன் வந்து வாங்க மாட்டானாமா? நீ என்னாடா அவனுக்கு வேலைக்காரனா? அறிவு இருக்காடா உனக்கு? அன்னைக்கி நான் என்னா சொன்னேன்.
வைகை: என்னாண்ணே சொன்னீங்க ?
மாடசாமி: யாருக்கும் எடுபிடி வேலை செய்யாதே, அப்போதான் எல்லாரும் உன்னைய மதிப்பாங்கன்னு சொன்னேன் இல்லையா. ஏண்டா எதே சொன்னாலும் கேக்க மாட்டியா? அறிவு கெட்டவனே
வைகை: என்னா இவரும் ஆரம்பிச்சிட்டாரு. இம்புட்டு நேரம் நல்லா தானே பேசிகிட்டு இருந்தாரு. என்னா ஆச்சு இவருக்கு. அண்ணே மாடசாமி அண்ணே ஏண்ணே ஒரு மாதிரி பேசறீங்க? எனக்கு ஒண்ணுமே புரியலையே?
மாடசாமி: என்னடா முறைக்கிறே ?
வைகை: முறைக்கலேண்ணே, உங்க கிட்டே தான் பேசி கிட்டு இருக்கேன்.
மாடசாமி: என்ன சொன்னே நான் உனக்கு அண்ணனா? எட்டி ஒரு உதைச்சென்னா தெரியும் சேதி. என்னைய என்னான்னு நினைச்சுகிட்டு இருக்கே. கிறுக்கு பயலே.
வைகை: ஆத்தி இவரும் நம்பளை உதைப்பேன்னுட்டு சொல்லறாரே. இந்த கூலிங்கிளாஸ் போட்ட பய எதுனாச்சும் மாடசாமி கிட்டே சொல்லி இருப்பானோ? அதனால தான் தூக்கை என்கிட்டே கொடுத்து அனுப்பி இருக்கிறானா? இந்த வெவரம் எனக்கு இல்லாம போச்சே. எத்தினை பேருடா என்னை அடிப்பீங்க?
மாடாசாமி: டேய் நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் டீ வாங்கிடுவியா, அதையும், பாக்கறேன்.
வைகை: என்னாச்சு இவருக்கு. நான் ஒண்ணுமே சொல்லலையே, டீ கொண்டு போகலின்னா அவன் அடிப்பான், டீ வாங்கினாவே இவன் அடிப்பேன்கிறானே, அட ஒரு கூட்டமே கிளம்பிருச்சா. சரி இந்த மாடசாமி கிட்டே வம்பு கிம்பு ஒன்னும் வச்சுக்காமே சீக்கிரம் இங்கிருந்து தூக்குகோடா நழுவிடனும்.ஆத்தி ஒரு நாள் தள்ளறதே ஒரு யுகமா இருக்கேப்பா?
டீ கடைகாரர்: எலே வேலு இங்கே வா. கிட்டே வா காதுலே ஒரு விஷயம் சொல்லறேன். மாடசாமி சரி இல்லை. அதுக்குதான் போன மாதம் ஆஸ்பத்திரிக்கி கூட்டிகிட்டு போனாங்க. அவருக்கு புத்தி பிசகிடிச்சாம் இங்கே எல்லாரும் அப்படிதான் பேசிக்கிறாங்க. அதனாலே சத்தம் போடாமே இந்தா டீ வாங்கிகிட்டு போய் சேர்.
வைகை: என்னா மாடசாமி அண்ணனுக்கு புத்தி சரி இல்லையா? இவ்வளவு நேரம் என்கிட்டே நல்லா தானே பேசினாரு. நீ என்னா பொய் சொல்லறயா? அண்ணங்கிட்டே சொல்லட்டுமா? எனக்கு எம்புட்டு பழக்கம்? என்னா இது சின்னபிள்ளைதனமா இருக்கு?
டீ கடைகாரர்: டேய் வேலு ஒழுங்கா டீ எடுத்துகிட்டு போ. அலம்பல் பண்ணினா சுடுதண்ணி எடுத்து முஞ்சியிலே ஊத்திடுவேன். ஓடி போய்டு ஆமா சொல்லிட்டேன்.
வைகை: எனாது சுடுதண்ணி ஊத்துவியா என்னாங்கடா ஆச்சு எல்லாரும் தப்பு தப்பா பேசறிங்க? சரி இவ்வளவு சொல்லறே நானு நபறேன். சுடுதண்ணி எல்லாம் வேணாம் நானே கிளம்பறேன்.
டீ கடைகாரர்: போவியா வந்துட்டான். மாடசமியோ அமைதியா ஒக்காந்து இருக்கான். எந்த நேரம் அவன் என்னா பண்ணுவாநோன்னு நான் பயந்து கிட்டே டீ ஆத்தறேன். இதுலே இவன் வேறே மாடசாமி கிட்டே பேச்சு வார்த்தை நடத்தாரான். வந்துட்டானுக தூக்கை தூக்கிகிட்டு.
பார்த்திபன்: என்னடா சீக்கிரம் வந்துட்டே. மாடசாமி அண்ணனை பாக்கலை?
வைகை: இவன் எல்லாம தெரிஞ்சுகிட்டே கேக்கரானா? அப்போ இந்த செட்டப் கூட இவனோடதுதான். இந்த பய பிள்ளைக்கு இப்ப தானே புரியுது.
பார்த்திபன்: என்னா நடந்துச்சு அங்கே ? மாடசாமி கிட்டே பேசிகிட்டு இருந்தே
வைகை: சும்மா அவரு என்னைய நலம் விசாரிச்சாரு, நானும் அவரை விசாரிச்சேன் வேறே ஒன்னும் இல்லயே. அம்புட்டுதான்.
பார்த்திபன்: இல்லை அவரு உன்னைய பாத்து கையை ஆட்டி ஆட்டி பேசினாரு, காலை வேறே தூக்கி காட்டினாரு. இப்படித்தான் நலம் விசாரிப்பாங்களா ? மரியாதையா சொல்லு அங்கே என்னா நடந்தது?
வைகை: டி ஆறுதுப்பா, அவசரமா போனும் சொன்னியே, கிளம்புப்பா. நான் அப்புறமா வரேன், சாகவாசமா பேசுவோம் சரியா. கிளம்பு.... கிளம்பு....
பார்த்திபன்: எண்டா என்னைய விரட்டரே? எனக்கு ஒன்னும் அவசரமா போகவேண்டாம். இன்னும் ஒரு மணி நேரம் நான் ப்ரீ தான். அதுக்குள்ளே நாம்ப எல்லாத்தையும் முடிச்சிடலாம்.
வைகை: எல்லாத்தைன்னா, என்னாப்பா, அங்கே ஒண்ணுமே நடக்கல. டீ கடைக்காரர் கூட என்னை ஒன்னும் திட்டலை. ஐய்யயோ நாம்பளே எல்லாத்தையும் உளற ஆரம்பிசிட்டோமே. என்னா நடக்க போகுதோ?
பார்த்திபன்: சரி சொல்லு டீ கடைகாரர் என்ன திட்டினார். மாடசாமி என்னா சொன்னாரு?
வைகை: ஒன்னும் சொல்லலை. உனக்கு டீ வேலை முடிஞ்சுது. அப்போ நான் கிளம்பறேன்
பார்த்திபன்: அண்ணே மாடசாமி அண்ணே வேலு உங்களை கூப்பிடறான்
வைகை: அடபாவி நான் எங்கேடா!!!
மாடசாமி: அறிவு கெட்ட முண்டம் இப்பதானே உதைப்பேன்ன்னு சொன்னேன் அங்கே போய் நின்னுகிட்டு அலம்பலா பண்ணறே.
வைகை: ஆத்தி கல்லு எடுக்குறானே. ஏம்பா ஏம்பா உன்னைய கும்புட்டுகறேன்பா அவனை அங்கேயே ஆப் பண்ணுப்பா மாடசாமிக்கு மன நிலை சரி இல்லேப்பா, ப்ளீஸ் பா ...
பார்த்திபன்: நான் கேட்டபோதே இதை சொல்லி இருக்கலாம் இல்லே. என்னா சில்லாவளித்தனமா பண்ணறே? எனக்கு தெரிஞ்சு தானே உன்னைய டீ வாங்க அனுப்பினேன்.
வைகை: தெரிஞ்சுதானா? வெளங்கிடும். மத்தவனை அழவக்கிரதுலெ என்னா அம்ம்புட்டு சந்தோசம் இருப்பூ இரு......
பார்த்திபன்: உனக்கு மட்டும்தான் பாட தெரியுமா இப்ப்போ நான் பாடறேன் பாரு போடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு கணக்கு...
வைகை: இவனுமா??? சட்டி சுட்டதடா கை விட்டதடா நெஞ்சு சுட்டதடா.... நெஞ்சு சுட்டதடா....
பார்த்திபன்: எச்சுச்மி, எனி ஹெல்ப் ???
வைகை: ம்ம்ம் ஒன்னும் வேணாம் நாங்களே பாத்துக்குவோம்மில்லே.. .
பிடிக்கிதோ பிடிக்கலையோ ஒட்டு போடுங்கப்பா !!!!
78 comments :
me tha 1st
மீ த செகண்ட் :-)
மீ த தேர்டும் :-)
Thans MR.Jeevam
நன்றி சென்ஷி வாங்க வாங்க
மீ த ஃபோர்த்
தவறான எண்ணிக்கை தம்பி
me the 8th.
அப்புரமா வரேன்
கொஞ்சம் டீ வாங்கப்போகனும்
அண்ணணுக்கு சூடா ஒரு டீ....
me the 11th
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...
டீயை தூக்கல போட்டா டீ செத்துடாது... அப்புறம் ஏன் நிறைய பேர் டீயை தூக்ல வாங்கறாங்க...
ரொம்ப கன்பூயசன்ப்பா...
மீண்டும் மீண்டும் வைகைப் புயல் கலக்கல் ரம்யா கலக்கல்...
me the 14th
சும்மா இருக்கட்டுமே
சொல்ல கூடாதா என்ன?
அருமையான நகை-ச்-சுவை.
வைகையும் - டீ.ஆர்
முயற்சியுங்களேன்...
\\டீயை தூக்கல போட்டா டீ செத்துடாது... \\
செத்துடுமா
சாவாதா
கரீட்டா சொல்லங்கண்ணே ...
நமக்கு கன்பீயுசனாகீது ...
//என்னா சில்லாவளித்தனமா பண்ணறே?//
வட்டார மொழியில கலக்குறீங்களே??? அம்மிணிக்கு எந்த ஊரு???
//
அத்திரி said...
//என்னா சில்லாவளித்தனமா பண்ணறே?//
வட்டார மொழியில கலக்குறீங்களே??? அம்மிணிக்கு எந்த ஊரு???
//
ஹி ஹி ஹி எல்லாம் நம்ப ஊருதான்.....
நன்றி அத்திரி அவர்களே
டீ நல்லா ஆத்துனீங்க
20
கும்மி அடிக்க அப்புறமா வாரேன், அது வரைக்கும் டீ சூடா இருக்கட்டும்
கும்மியர்களே இத ரசிச்சிட்டு நம்ம கடைப்பக்கம் வாங்க ஒரு ஓவியப்பதிவும் அதற்கான ஆடியோ விளக்கமும் இருக்கு கேளுங்க
23
24
மீ த 25
அப்பாடா இன்னிக்கு டீ கடை ரொம்ப காத்து வாங்குனதால நாம இத போட முடிஞ்சுது
//அத்திரி said...
//என்னா சில்லாவளித்தனமா பண்ணறே?//
வட்டார மொழியில கலக்குறீங்களே??? அம்மிணிக்கு எந்த ஊ//
அது ஒரு பெரிய கதை சகா.. இல்லையா ரம்யா?
அப்புறம் பதிவு ஹிஹிஹிஹிஹிஹிஹிஹ்ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
ஐயோ..
எம்மாம் பெரிய பதிவு ...
வு
வு
வு
வு
வு
வு
வு
வு
வு
// இந்தாப்பா நீ என்னைய ரொம்ப கேவெலமா பேசறே, அப்புறம் எனக்கு கோவம் வரும் ஆமா சொல்லிப்பிட்டேன்.. //
Really Superb:)
ஹா ஹா படிச்சிட்டு நல்லா சிரிச்சேன்.. ( நல்ல வேளை தனியா சிரிக்கறத அம்மா பார்த்திட்டு என்னாச்சு உனக்கு நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்தே இன்னைக்கு அம்மாவாசை கூட இல்லையேனு சொன்னது யார் காதிலையும் விழலை என்னைத் தவிர)
me the 30
நான் உங்கள் பதிவை படிப்பது முதல் முறைன்னு நினைக்கிறேன்.. அனைத்து பதிவுகளும் அவ்ளோ நல்லா எழுதி இருக்கீங்க.. இவ்ளோ நாள் மிஸ் பண்ணினதிர்க்கு வருந்துகிறேன் ;((
//
வருங்கால முதல்வர் said...
அப்புரமா வரேன்
கொஞ்சம் டீ வாங்கப்போகனும்
//
என்னா வருங்கால முதல்வரே
இன்னும் டீ கிடைக்கலையா
மாடசாமி அண்ணன் கிட்டே
சொல்லி கவனிக்க சொல்லவா ???
//
ச்சின்னப் பையன் said...
அண்ணணுக்கு சூடா ஒரு டீ....
//
வாங்க சின்ன பையன்
என் பதிவிற்கு முதன்
முறையா வந்திருக்கீங்க
வந்ததிற்கு மிக்க நன்றிங்க
ஆமாங்க வெறும் டீ மட்டு போதுமா??
இடியாப்பம் பாயா கூட
மாடாசாமி அண்ணன்கிட்டே
நல்ல இருக்குமுங்கோ!!!!
நன்றி நவிலல் மிகவும்
தாமதம் ஆனதிற்கு மன்னிக்கணும்
உடல் நலம் சரியில்லாததால்
உடனே நன்றி சொல்ல முடியவில்ல
பிண்ணுட்டம் அளித்த
அனைவரும் என்னை மன்னின்க்கவும்
//
இராகவன், நைஜிரியா said...
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...
டீயை தூக்கல போட்டா டீ செத்துடாது... அப்புறம் ஏன் நிறைய பேர் டீயை தூக்ல வாங்கறாங்க...
ரொம்ப கன்பூயசன்ப்பா...
//
தூக்குன்னா அந்த தூக்கு இல்லெண்ணா
அது வந்து கழுத்திலே கயறு எல்லாம் போடுவாங்க
இது தூக்கு டப்பா சரியா
தப்பு தப்பா அர்த்தம் எடுத்துகிடிங்களே
ஹையோ ஹையோ
எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது
//
புதியவன் said...
மீண்டும் மீண்டும் வைகைப் புயல் கலக்கல் ரம்யா கலக்கல்...
//
நன்றி புதியவன்
மிக்க நன்றி
வந்ததிற்கும் வாழ்த்தியதிற்கும்
மிக்க நன்றி மிக்க நன்றி
//
அதிரை ஜமால் said...
me the 14th
சும்மா இருக்கட்டுமே
சொல்ல கூடாதா என்ன?
//
தாரளாமா இந்த மாதிரி
ஏராளமாய் சொல்லலாம்
அதிரை ஜமாலுக்கு
ஒரு ஒ போடுங்கப்பா ....
//
அதிரை ஜமால் said...
அருமையான நகை-ச்-சுவை.
வைகையும் - டீ.ஆர்
முயற்சியுங்களேன்...
//
முயர்ச்சிக்கேறேன் ஜமால்
கொஞ்சம் டைம் கொடுங்கோ
முச்சு வாங்குது
//
அதிரை ஜமால் said...
\\டீயை தூக்கல போட்டா டீ செத்துடாது... \\
செத்துடுமா
சாவாதா
கரீட்டா சொல்லங்கண்ணே ...
நமக்கு கன்பீயுசனாகீது ...
//
கான்பியுச் எல்லாம் ஆகக்குடாது
சரியா புரிஞ்சிக்கணும்
அது வேறே தூக்கு
இது வேறே தூக்கு
எங்கே சொல்லுங்கோ!!!!!
//
நசரேயன் said...
டீ நல்லா ஆத்துனீங்க
//
ஆ ஒரே சூடா இருக்குதுங்க
//
நசரேயன் said...
கும்மி அடிக்க அப்புறமா வாரேன், அது வரைக்கும் டீ சூடா இருக்கட்டும்
//
வாங்க வாங்க
அருமையான
பாட்டு ஒண்ணு
வச்சிருக்கேன்
//
இராகவன், நைஜிரியா said...
மீ த 25
அப்பாடா இன்னிக்கு டீ கடை ரொம்ப காத்து வாங்குனதால நாம இத போட முடிஞ்சுது
//
ஆமாண்ணா ஏனோ தெரியலை
டீ கடையிலே ஒரே ஈ மொச்சிதாம்
அதான் கடை காத்து வாங்குது
//
கார்க்கி said...
//அத்திரி said...
//என்னா சில்லாவளித்தனமா பண்ணறே?//
வட்டார மொழியில கலக்குறீங்களே??? அம்மிணிக்கு எந்த ஊ//
அது ஒரு பெரிய கதை சகா.. இல்லையா ரம்யா?
அப்புறம் பதிவு ஹிஹிஹிஹிஹிஹிஹிஹ்ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
கார்க்கி said...
//அத்திரி said...
//என்னா சில்லாவளித்தனமா பண்ணறே?//
வட்டார மொழியில கலக்குறீங்களே??? அம்மிணிக்கு எந்த ஊ//
அது ஒரு பெரிய கதை சகா.. இல்லையா ரம்யா?
அப்புறம் பதிவு ஹிஹிஹிஹிஹிஹிஹிஹ்ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
//
இதிலே ஏதோ உள்குத்து
இருக்கிறமாதிரி தெரியுது !!!!
//
உருப்புடாதது_அணிமா said...
ஐயோ..
எம்மாம் பெரிய பதிவு ...
வு
வு
வு
வு
வு
வு
வு
வு
வு
//
நீங்கதானா அது ?
படிக்கும் பொது
பெரிய பாடமெல்லாம்
படிக்கமட்டங்கனு
யாரோ சொன்னாங்கப்பா
இப்போ தான் தெரியுது
அது உருப்புடாதது அணிமான்னு
//
PoornimaSaran said...
// இந்தாப்பா நீ என்னைய ரொம்ப கேவெலமா பேசறே, அப்புறம் எனக்கு கோவம் வரும் ஆமா சொல்லிப்பிட்டேன்.. //
Really Superb:)
//
வாங்க என் பதிவிருக்கு
வந்ததிற்கு மிக்க மகிழ்ச்சி
வந்து ரசித்ததிற்கு
அதை விட மகிழ்ச்சி
நன்றி பூர்ணிமா
//
PoornimaSaran said...
ஹா ஹா படிச்சிட்டு நல்லா சிரிச்சேன்.. ( நல்ல வேளை தனியா சிரிக்கறத அம்மா பார்த்திட்டு என்னாச்சு உனக்கு நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்தே இன்னைக்கு அம்மாவாசை கூட இல்லையேனு சொன்னது யார் காதிலையும் விழலை என்னைத் தவிர)
//
அம்மாவிற்கு படித்து
காட்டலையா பூர்ணிமா
அடடா சரி அப்புறமா
படிச்சு காட்டுங்க சரியா
நன்றிபா சிரித்ததிற்கு
//
PoornimaSaran said...
நான் உங்கள் பதிவை படிப்பது முதல் முறைன்னு நினைக்கிறேன்.. அனைத்து பதிவுகளும் அவ்ளோ நல்லா எழுதி இருக்கீங்க.. இவ்ளோ நாள் மிஸ் பண்ணினதிர்க்கு வருந்துகிறேன் ;((
//
அப்பாடா எனக்கு
ஒரு நல்ல ரசிகை
கிடைச்சுட்டாங்கப்பா
இனிமே போட்டு
தாக்கி விட வேண்டியதுதான்
நன்றி பூர்ணிமா
நன்றி நன்றி நன்றி
RAMYA said...
//
அதிரை ஜமால் said...
\\டீயை தூக்கல போட்டா டீ செத்துடாது... \\
செத்துடுமா
சாவாதா
கரீட்டா சொல்லங்கண்ணே ...
நமக்கு கன்பீயுசனாகீது ...
//
கான்பியுச் எல்லாம் ஆகக்குடாது
சரியா புரிஞ்சிக்கணும்
அது வேறே தூக்கு
இது வேறே தூக்கு
எங்கே சொல்லுங்கோ!!!!!//
இது வேற தூக்கு...
சொல்லிட்டேன்.. அப்புறமா என்ன சொல்லணும் சொல்லுங்க...
RAMYA said...
//
அதிரை ஜமால் said...
அருமையான நகை-ச்-சுவை.
வைகையும் - டீ.ஆர்
முயற்சியுங்களேன்...
//
முயர்ச்சிக்கேறேன் ஜமால்
கொஞ்சம் டைம் கொடுங்கோ
முச்சு வாங்குது//
அப்படியா.. என்ன விலைக்கு வாங்குச்சு...
பேரம் பேசி வாங்கிச்சா..
Me the 50
ஐய்யா நான் தான் 25வது பின்னூட்டம், 50 பின்னூட்டம் இரண்டுமே..
// RAMYA said...
நன்றி நவிலல் மிகவும்
தாமதம் ஆனதிற்கு மன்னிக்கணும்
உடல் நலம் சரியில்லாததால்
உடனே நன்றி சொல்ல முடியவில்ல
பிண்ணுட்டம் அளித்த
அனைவரும் என்னை மன்னின்க்கவும் //
இப்போது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து இருக்கும் என நினைக்கின்றேன்.
எல்லாம் வல்ல இறைவன் நல்ல உடல் நிலையையும், ஆரோக்கியத்தையும் தங்கச்சிக்கு கொடுக்க பிராத்திக்கின்றேன்.
RAMYA said...
//
அதிரை ஜமால் said...
me the 14th
சும்மா இருக்கட்டுமே
சொல்ல கூடாதா என்ன?
//
தாரளாமா இந்த மாதிரி
ஏராளமாய் சொல்லலாம்
அதிரை ஜமாலுக்கு
ஒரு ஒ போடுங்கப்பா ....//
நண்பர் ஜமால் அவர்களுக்கு
ஒ...ஒ...ஒ...ஒ
தங்கச்சி கேட்டு கொண்டுதற்கு இணங்க ஒ போட்டாச்சு
// RAMYA said...
//
உருப்புடாதது_அணிமா said...
ஐயோ..
எம்மாம் பெரிய பதிவு ...
வு
வு
வு
வு
வு
வு
வு
வு
வு
//
நீங்கதானா அது ?
படிக்கும் பொது
பெரிய பாடமெல்லாம்
படிக்கமட்டங்கனு
யாரோ சொன்னாங்கப்பா
இப்போ தான் தெரியுது
அது உருப்புடாதது அணிமான்னு //
அணிமா படிக்கும் போதா... ச்சே.. அப்படியெல்லாம் கிடையாது.. பெரிய பாடம், சின்ன பாடம் அப்ப்டின்னு எல்லாம் பாகுபாடு பார்த்து கிடையாது.. எந்த பாடத்தையும் நாங்கல்லாம் படிக்க மாட்டோமே, அப்புறம் தானே பெரிய பாடம், சின்ன பாடம் பாகுபாடு எல்லாம் பார்ப்பதற்கு
// RAMYA said...
//
PoornimaSaran said...
நான் உங்கள் பதிவை படிப்பது முதல் முறைன்னு நினைக்கிறேன்.. அனைத்து பதிவுகளும் அவ்ளோ நல்லா எழுதி இருக்கீங்க.. இவ்ளோ நாள் மிஸ் பண்ணினதிர்க்கு வருந்துகிறேன் ;((
//
அப்பாடா எனக்கு
ஒரு நல்ல ரசிகை
கிடைச்சுட்டாங்கப்பா
இனிமே போட்டு
தாக்கி விட வேண்டியதுதான்
நன்றி பூர்ணிமா
நன்றி நன்றி நன்றி //
நல்ல ரசிகையா.. இல்ல நல்லவங்க ஒருத்தங்க மாட்டிக்கிட்டாங்க... எல்லோரும் சேர்ந்து கும்மி அடிக்கலாம் வாங்க அப்படின்னு சொல்றீங்களா... புரியலயே.. விவரமா சொல்லுங்க..
//
இராகவன், நைஜிரியா said...
RAMYA said...
//
அதிரை ஜமால் said...
\\டீயை தூக்கல போட்டா டீ செத்துடாது... \\
செத்துடுமா
சாவாதா
கரீட்டா சொல்லங்கண்ணே ...
நமக்கு கன்பீயுசனாகீது ...
//
கான்பியுச் எல்லாம் ஆகக்குடாது
சரியா புரிஞ்சிக்கணும்
அது வேறே தூக்கு
இது வேறே தூக்கு
எங்கே சொல்லுங்கோ!!!!!//
இது வேற தூக்கு...
சொல்லிட்டேன்.. அப்புறமா என்ன சொல்லணும் சொல்லுங்க...
//
என்னா தூக்குன்னு
புரிஞ்சிகிட்டத்தை
தான் சொல்லணும்
அந்த தூக்கு வேறே
இந்த தூக்கு வேறே
சரியாண்ணா !!!!!
//
இராகவன், நைஜிரியா said...
RAMYA said...
//
அதிரை ஜமால் said...
அருமையான நகை-ச்-சுவை.
வைகையும் - டீ.ஆர்
முயற்சியுங்களேன்...
//
முயர்ச்சிக்கேறேன் ஜமால்
கொஞ்சம் டைம் கொடுங்கோ
முச்சு வாங்குது//
அப்படியா.. என்ன விலைக்கு வாங்குச்சு...
பேரம் பேசி வாங்கிச்சா..
//
இல்லைங்கண்ணா
நீங்க தான் பேரம்
பேச துணைக்கு வரணும்
//
இராகவன், நைஜிரியா said...
Me the 50
ஐய்யா நான் தான் 25வது பின்னூட்டம், 50 பின்னூட்டம் இரண்டுமே
//
ஐம்பதாவது பின்னுட்டம்
ராகவன் அண்ணன்
கொன்னுட்டீங்கண்ணே
ஐம்பதாவது பின்னுட்டம்
அளித்த எங்கள் அண்ணன்
தங்க அண்ணன்
வாழ்க வாழ்க
//
இராகவன், நைஜிரியா said...
// RAMYA said...
நன்றி நவிலல் மிகவும்
தாமதம் ஆனதிற்கு மன்னிக்கணும்
உடல் நலம் சரியில்லாததால்
உடனே நன்றி சொல்ல முடியவில்ல
பிண்ணுட்டம் அளித்த
அனைவரும் என்னை மன்னின்க்கவும் //
இப்போது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து இருக்கும் என நினைக்கின்றேன்.
எல்லாம் வல்ல இறைவன் நல்ல உடல் நிலையையும், ஆரோக்கியத்தையும் தங்கச்சிக்கு கொடுக்க பிராத்திக்கின்றேன்.
//
இல்லைங்கண்ணா
Viral Fever
உங்கள் ஆசிர்வாதத்திற்கு
மிகவும் நன்றி அண்ணா
//
இராகவன், நைஜிரியா said...
// RAMYA said...
//
உருப்புடாதது_அணிமா said...
ஐயோ..
எம்மாம் பெரிய பதிவு ...
வு
வு
வு
வு
வு
வு
வு
வு
வு
//
நீங்கதானா அது ?
படிக்கும் பொது
பெரிய பாடமெல்லாம்
படிக்கமட்டங்கனு
யாரோ சொன்னாங்கப்பா
இப்போ தான் தெரியுது
அது உருப்புடாதது அணிமான்னு //
அணிமா படிக்கும் போதா... ச்சே.. அப்படியெல்லாம் கிடையாது.. பெரிய பாடம், சின்ன பாடம் அப்ப்டின்னு எல்லாம் பாகுபாடு பார்த்து கிடையாது.. எந்த பாடத்தையும் நாங்கல்லாம் படிக்க மாட்டோமே, அப்புறம் தானே பெரிய பாடம், சின்ன பாடம் பாகுபாடு எல்லாம் பார்ப்பதற்கு
//
இல்லே.. இல்லேண்ணா...
அது நம்ப அணிமாதான்
எனக்கு நல்லா தெரியும்
//
இராகவன், நைஜிரியா said...
// RAMYA said...
//
PoornimaSaran said...
நான் உங்கள் பதிவை படிப்பது முதல் முறைன்னு நினைக்கிறேன்.. அனைத்து பதிவுகளும் அவ்ளோ நல்லா எழுதி இருக்கீங்க.. இவ்ளோ நாள் மிஸ் பண்ணினதிர்க்கு வருந்துகிறேன் ;((
//
அப்பாடா எனக்கு
ஒரு நல்ல ரசிகை
கிடைச்சுட்டாங்கப்பா
இனிமே போட்டு
தாக்கி விட வேண்டியதுதான்
நன்றி பூர்ணிமா
நன்றி நன்றி நன்றி //
நல்ல ரசிகையா.. இல்ல நல்லவங்க ஒருத்தங்க மாட்டிக்கிட்டாங்க... எல்லோரும் சேர்ந்து கும்மி அடிக்கலாம் வாங்க அப்படின்னு சொல்றீங்களா... புரியலயே.. விவரமா சொல்லுங்க..
//
இந்த தங்கச்சிக்கு இந்த வெவரம் எல்லாம் தெரியலையே
நல்ல வேலை சொல்லி கொடுத்தீங்க
அதுதான் எங்க ராகவன் அண்ணா
நன்றி நன்றி நன்றிண்ணா
\\ இராகவன், நைஜிரியா said...
RAMYA said...
//
அதிரை ஜமால் said...
\\டீயை தூக்கல போட்டா டீ செத்துடாது... \\
செத்துடுமா
சாவாதா
கரீட்டா சொல்லங்கண்ணே ...
நமக்கு கன்பீயுசனாகீது ...
//
கான்பியுச் எல்லாம் ஆகக்குடாது
சரியா புரிஞ்சிக்கணும்
அது வேறே தூக்கு
இது வேறே தூக்கு
எங்கே சொல்லுங்கோ!!!!!//
இது வேற தூக்கு...
சொல்லிட்டேன்.. அப்புறமா என்ன சொல்லணும் சொல்லுங்க...\\
அப்புறமா “உங்கள” சொல்லனுமா
ஏன் இப்பவே சொல்லக்கூடாதா ?
ஓ போடச்சொன்னவங்களுக்கும்
ஓ போட்டவங்களுக்கும் நன்றிங்-O
\\ இராகவன், நைஜிரியா said...
RAMYA said...
//
அதிரை ஜமால் said...
அருமையான நகை-ச்-சுவை.
வைகையும் - டீ.ஆர்
முயற்சியுங்களேன்...
//
முயர்ச்சிக்கேறேன் ஜமால்
கொஞ்சம் டைம் கொடுங்கோ
முச்சு வாங்குது//
அப்படியா.. என்ன விலைக்கு வாங்குச்சு...
பேரம் பேசி வாங்கிச்சா..\\
கொடுத்தது யாரு ...
அதிரை ஜமால் said...
\\ இராகவன், நைஜிரியா said...
RAMYA said...
//
அதிரை ஜமால் said...
அருமையான நகை-ச்-சுவை.
வைகையும் - டீ.ஆர்
முயற்சியுங்களேன்...
//
முயர்ச்சிக்கேறேன் ஜமால்
கொஞ்சம் டைம் கொடுங்கோ
முச்சு வாங்குது//
அப்படியா.. என்ன விலைக்கு வாங்குச்சு...
பேரம் பேசி வாங்கிச்சா..\\
கொடுத்தது யாரு .//
பேரம் படிய மாட்டேங்குதுங்க..
என்ன பண்ணலாம் சொல்லுங்களேன்..
// RAMYA said...
//
இராகவன், நைஜிரியா said...
// RAMYA said...
//
PoornimaSaran said...
நான் உங்கள் பதிவை படிப்பது முதல் முறைன்னு நினைக்கிறேன்.. அனைத்து பதிவுகளும் அவ்ளோ நல்லா எழுதி இருக்கீங்க.. இவ்ளோ நாள் மிஸ் பண்ணினதிர்க்கு வருந்துகிறேன் ;((
//
அப்பாடா எனக்கு
ஒரு நல்ல ரசிகை
கிடைச்சுட்டாங்கப்பா
இனிமே போட்டு
தாக்கி விட வேண்டியதுதான்
நன்றி பூர்ணிமா
நன்றி நன்றி நன்றி //
நல்ல ரசிகையா.. இல்ல நல்லவங்க ஒருத்தங்க மாட்டிக்கிட்டாங்க... எல்லோரும் சேர்ந்து கும்மி அடிக்கலாம் வாங்க அப்படின்னு சொல்றீங்களா... புரியலயே.. விவரமா சொல்லுங்க..
//
இந்த தங்கச்சிக்கு இந்த வெவரம் எல்லாம் தெரியலையே
நல்ல வேலை சொல்லி கொடுத்தீங்க
அதுதான் எங்க ராகவன் அண்ணா
நன்றி நன்றி நன்றிண்ணா//
இதுக்குதானே நாங்க இருக்கோம்..
இதுகூட தங்கச்சிக்காக பண்ணலன்னா அப்புறம் அண்ணன் இருக்கறது எதுக்காக..
ரம்யா :தம்பி ஒரு டீ போடு
சேகர் :என்ன டீ
ரம்யா :சரி ஒரு காப்பியாவது போடு
சேகர் :என்ன காப்பி
ரம்யா : என்ன இது சரியான லூசா இருப்பான் போல.சரி குடிக்க என்ன வச்சிருக்க
சேகர் :என்ன குடிக்க வச்சிருக்கியா
ரம்யா :என்ன அண்ணன் இந்த ஆளு லூசு மாதிரி பேசுறான்
இராகவன் :அது ஒன்னும் இல்ல தங்கச்சி இந்த பதிவ படிச்சதில இருந்து லூசு ஆயிட்டான்
\\Blogger S.R.ராஜசேகரன் said...
ரம்யா :தம்பி ஒரு டீ போடு
சேகர் :என்ன டீ
ரம்யா :சரி ஒரு காப்பியாவது போடு
சேகர் :என்ன காப்பி
ரம்யா : என்ன இது சரியான லூசா இருப்பான் போல.சரி குடிக்க என்ன வச்சிருக்க
சேகர் :என்ன குடிக்க வச்சிருக்கியா
ரம்யா :என்ன அண்ணன் இந்த ஆளு லூசு மாதிரி பேசுறான்
இராகவன் :அது ஒன்னும் இல்ல தங்கச்சி இந்த பதிவ படிச்சதில இருந்து லூசு ஆயிட்டான்\\
பொய் சொல்லாதீங்க ...
முன்னாடியிலேர்ந்து தானே ...
எப்படி தான் யோசிப்பாங்களோ தெரியலயே!!!
அருமையான நகை-ச்-சுவை.
//
இசக்கிமுத்து said...
எப்படி தான் யோசிப்பாங்களோ தெரியலயே!!!
//
வாங்க இசக்கிமுத்து என் பதிவிற்கு
முதன் முதலா வந்திருக்கீங்க
மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி
//
gayathri said...
அருமையான நகை-ச்-சுவை.
//
வாங்க காயத்ரி
உங்கள் வருகைக்கும்
உங்கள் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நன்றி
நெசமாவே பார்த்திபன் வடிவேலு காம்பினேஷனில் ஒரு நீண்ட காமெடி சீன் பார்த்த எஃபக்ட்.
ரொம்பவுவம் ரசிச்சேன் :-)
//
விஜய் said...
நெசமாவே பார்த்திபன் வடிவேலு காம்பினேஷனில் ஒரு நீண்ட காமெடி சீன் பார்த்த எஃபக்ட்.
ரொம்பவுவம் ரசிச்சேன் :-)
//
ரொம்ப நன்றிங்க விஜய்
கும்மி முடிஞ்சுதா
எல்லாரும் இங்க வாங்க
//
வருங்கால முதல்வர் said...
கும்மி முடிஞ்சுதா
எல்லாரும் இங்க வாங்க
//
சரி வரோம்
அருமையான நகைச்சுவை.
//
DG said...
அருமையான நகைச்சுவை.
//
Thanks DG
Post a Comment