Monday, January 5, 2009

வைகை புயல் - சினிமா அனுபவம்



வைகை: காலையிலே இருந்து அக்கா ரொம்ப வேலை வாங்கிடிச்சு. இப்பத்தான் வெளியிலே வர முடிஞ்சுது. மணி என்னா ஆத்தி சாயாங்காலம் 5 1/2 மணி ஆகிடிச்சு. இன்னைக்கி வெளி பொழப்பே கெட்டு போச்சே! எவ்வளவு வேலை! சரி, கொஞ்ச நேரம் பொழுதை போக்கிட்டு வீடு போய் சேரலாம். இருக்கறதே கொஞ்ச நேரம் தான்.

மாமா வரதுக்குள்ளே வீடு போய் சேரனும். அதுக்குள்ளே இன்னைக்கி என்னா செய்யலாம்? எது பண்ணாலும் ப்ரிச்சனை வராமா பாத்துக்கணும். (கொஞ்ச தூரத்தில் சுப்பிரமணி சில பசங்களுடன் செல்வது தெரிகிறது) சுப்பிரமணி எங்கே போறான்? கேக்கலாம்.

வைகை: சுப்பிரமணி, ஏலே சுப்பிரமணி, ஏலே சுப்பிரமணி எங்கேடா போறே?

சுப்பிரமணி: ஏண்ணே போகும்போதே எங்கே போறேன்னு கேக்கறீங்க. போற காரியம் அவ்வளவுதான்!

வைகை: கோச்சுக்காதேடா, சொல்லுடா எங்கேடா போறே, நானும் உன் கூட வரேண்டா. டேய் ப்ளீஸ்டா.

சுப்பிரமணி: போங்கண்ணே அன்னிக்கே ஒரு வேலை வாங்கி கொடுத்தேன். அங்கே என்னோட பேரை கெடுத்துட்டீங்க. மறுபடியும் உங்களை என் செட்டுலே சேக்க பயமா இருக்குண்ணே.

வைகை: சேச்சே! அதே மாதிரி இன்னிமே நடக்காதுடா.

சுப்பிரமணி: சரி வாங்கன்னே நாங்க படத்துக்கு போரோம்ண்ணே. யாரு படம் தெரியுமாண்ணே? மக்கள் திலகம் படம் "எங்க வீட்டு பிள்ளை". வரீங்களாண்ணே?

வைகை: சரிடா. உங்க எல்லாத்துக்கும் சேத்து படத்துக்கு நானே சீட்டு வாங்கிடறேன். சரியாடா சுப்பரமணி, சந்தோசமா?

சுப்பிரிமணி: ரொம்ப சந்தோசம்ண்ணே, டேய் அண்ணே நம்ப எல்லாருக்கு சேந்தே சீட்டு வாங்கிடறாராம். வாங்கடா போகலாம். நம்ப படத்துக்கு கொண்டு வந்த காசுக்கு தீனி எதுனாச்சும் வாங்கி திங்க்லாம்டா.

வைகை: என்னா படம் முடிஞ்சி போச்சு, இந்த பயலுகளை ஒருத்தனை கூட காணலை. சரி நம்ப கிளம்பலாம். ரொம்ப நேரம் ஆச்சுன்னா அக்கா பேசும். ஒரே இருட்டா இருக்கே. வாத்தியார் படம் பாத்துருக்கோம், பயப்படக்கூடாது; தைரியமா வீடு போய் சேரனும். நினைப்பை மாத்திக்குவோம். நல்ல படம் பாத்த சந்தோசம் மனசிலே அப்படியே நச்சுன்னு உக்காந்திடுச்சி.

என்னதான் படம் பாத்தாலும் நம்ப தலைவரு படம் பாத்தாலே மனசுக்கு ஒரு தெகிரியம் கூடிப்போகுத்ல்லே. இனிமே ஒரு பய நம்ம கிட்டே வம்பு வச்சிக்க முடியாதபடி நடந்துக்கணும். நான்தான் மக்கள் திலகமா மாறிட்டேன் இல்லே

குரல் : வேலு, வேலு

வைகை: நான் ஆணை இட்டால் அது நடந்து விட்டால் இந்த ஏழைகள்... அப்புறம் என்னா? அட அதுக்குள்ளே மறந்து போச்சா???

குரல் : வேலு, வேலு

வைகை: யாரு யாரோ கூப்பிடறமாதிரி இருக்கு. சேச்சே அதெல்லாம் ஒன்னும் இல்லே. நமக்கு அநியாயத்துக்கு கற்பனை.

குரல் : ஏலே வேலு, என்னடா நான் கூப்பிடறேன் என்னான்னு கேக்காம போறே

வைகை: ஆமா நெசமாலுமே யாரோ கூப்பிடறாங்க. அடி ஆத்தி. (மனசாட்சி) வேலு பயப்படாதே. இப்போதானே தைரியசாலின்னு மெச்ச்கிட்டு வந்தே. MGR ஐ நினைவில் வச்சுக்க. தைரியம் தன்னாலே வந்திடும்.

குரல் : என்னா வேலு? அண்ணன் கூப்பிடறேன். பேசாமே போறே!

வைகை: என்னாது அண்ணனா, சரி கேட்டு வைப்போம். யாரு???

குரல் : நான்தான் வேலு, மாடசாமி அண்ணன்.

வைகை: என்னாது மாடசாமியா? அது பைத்தியம் இல்லே. இங்கே என்னா பண்ணுது. அந்த பைத்தியமும் நம்ப பின்னாடியே வந்திருக்குமோ? இருக்கும் இருக்கும். பைத்தியம் தானே. பாவம் அது மட்டும் எங்கே போகும்? அது இருக்கட்டும, இவனை எப்படி சமாளிக்கறது?

குரல்: என்னா வேலு கூப்பிட கூப்பிட பதில் சொல்ல மாட்டேங்கிறே.

வைகை: இல்லே நான் நெம்ப அவசரமா போய்கிட்டு இருக்கேன். இந்த ராத்திரிய்லே நீங்க ஏண்ணே இந்த பக்கம் வந்தீங்க? உங்க கிட்டே அப்புறமா பேசறேன். எதுக்கு வம்பு. அன்னைக்கே கல்லு எடுத்து அடிக்க வந்தான். வேகமா நடப்போம். எவனா இருந்தா நமக்கு என்னா. இந்த மாடசாமி எவ்வளவுதான் நல்லவனா பேசினாலும் லூசு லூசுதானே இல்லேன்னா ஆயிடும்? ஓடினா தொரத்துவானோ? என்ன ஒன்னும் கணிக்க முடியலையே, சரி வேகமா பாடிகிட்டே நடப்போம்.

குரல்: டேய் நில்லுடா எங்கேடா வேகமா ஓடறே? அதெல்லாம் இங்கே நடக்காது. திரும்பிப்பார்.

வைகை: என்னா மிரட்டறான்? கல்லால அடிச்சாலும் அடிப்பான். எதுக்கும் திரும்பிப்பாத்துடலாம். அக்கா அப்பவே சொல்லிச்சு நேரம் ஆயிடுச்சுடா எங்கேயும் போகாதேடான்னு. கேக்கலை நான் கேக்கலை.

குரல் : என்னா திரும்பமாட்டியா. நானே முன்னே வரேன். இப்போ பார் நான் யார் தெரியுதா?

வைகை: மாடசாமியண்ணே தானே! அதுக்கென்ன ஒரு பில்டப்!!

குரல் : நல்லா பாருடா, நான்தான் மாடசாமியோட அண்ணன் பெரியசாமிடா. என்னை தெரியலை? நல்லா பாரு தெரியும்.

வைகை: மாடசாமி அண்ணனா, இதே மொதல்லே சொல்லமாட்டீங்க. நான் மாடசாமியண்ணனோன்னு நினைச்சி பயந்துட்டேன். சரி நீங்க இங்கே என்னா பண்ணறீங்க?

குரல் : நானா? இந்த எடமே என்னோடத்துதானே? என்னாடா கேள்வி கேக்கறே? நான் இருக்கிற வழியா வந்திட்டு எங்கே இருக்கேன்னா கேக்கறே?

வைகை: என்னா இவனுமா ஆரம்பிச்சுட்டான். ஆமா இவன் இடமா இது, இது என்னா இடம் சரியா தெரியலையே. ஒரே இருட்டா இருக்கே. அண்ணே இது என்னா இடம்ன்னே. உங்க தோட்டமா இது. சாரின்னே, தெரியாம வந்துட்டேன். இதோ போய்டறேன். ஒரே திருட்டு பயமா, அதான் நம்பளையும் திருடன் நினைச்சிட்டார். சரிண்ணே நான் வரேன். என்னா பதிலே காணோம். அண்ணே அண்ணே எங்கேன்னே இருக்கீங்க? எங்கே காணோம். எங்கிட்டாச்சும் போய் இருப்பாரு.

வைகை: என்னா ஒரே மயான அமைதியா இருக்கு. வேலு பயப்படக்கூடாது. மக்கள் திலகம் படம் பாத்தொமில்லே. "நான் ஆணை இட்டால் அது நடந்து விட்டால் இங்கு வேதனை படமாட்டார். உயிர் உள்ள வரை அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்". பாட்டு தப்புன்னு தெரியுது என்னா செய்யறது?? ஓடணுமே கடவுளே நீ எங்கேப்பா இருக்கே? சரி மறுபடியும் கவனத்தை மாத்தலாம், அப்போதான் பயம் குறையும் .

வைகை: அப்பா என்னா மாதிரி பாட்டு அமைஞ்சிருக்கு வாத்தியாருக்கு. அது மாதிரி சாட்டையை எடுத்து சும்மா சொளட்டனும். எல்லா பயலும் ஓடிடுவானுகல்லே. எவ்வளவு பாடினாலும் இன்னும் நம் இடத்திற்கு போக ஒரு அரை மணியாவது ஆகும். எப்படி பயப்படாம போறது? நம்ப பாடற பாட்டே நம்ப பயப்படறதை காட்டி குடுக்குதே! என்னா செய்யலாம்? இந்த பக்கமா வந்திருக்க கூடாதோ? எப்பிடி போறதுன்னே வழி தெரியலியே. எங்கிட்டு பாத்தாலும் ஒரே பயமா வருதே. டேய் வேலு உனக்கு சினிமா தேவையாடா? கண்ணாடிகாரன் லூசுன்னு திட்டற மாதிரியே வந்து மாட்டிகிட்டேனே? இப்படி தனியா பொலம்ப ஆரம்பிச்சிட்டியே வேலு?

வைகை: இந்த மாடசாமியோட அண்ணன் எங்கே போனாரு? ஐயோ இப்போதானே யாவகத்துக்கு வருது. மாடசாமியோட அண்ணன் தூக்கு மாட்டிகிட்டு செத்துட்டாரு இல்லே!ஐயோ கடவுளே, மனுசங்க கிட்டே மாட்டி சின்னா பின்ன மாவது போதாமே பேயி கிட்டேயுமா? நானு இப்போ என்னா செய்வேன்? எங்கே இருக்கேன்னு தெரியலையே? பயமா இருக்கு. சத்தமா பாடிகிட்டே போவோம். எ எ எ ,, என்னா பாட்டு வரமாட்டேங்குது. ஐயோ ஐயோ நான் என்னா செய்வேன். இப்படி தனியா மாட்டிகிட்டேனே. சரி ஓடலாம்.

குரல் : டேய் வேலு எங்கேடா ஓடறே? நில்லுடா.

வைகை: போங்கடா நீங்களும் உங்க மிரட்டலும். நான் ஓடிட்டேன்னில்லே!!!




226 comments :

«Oldest   ‹Older   201 – 226 of 226
அத்திரி said...

200 அடிச்சாச்சி ஓகே எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

Vijay said...

வைகைப் புயலுக்கு நெசமாவே ஸ்க்ரிப்ட் எழுதறது நீங்க தானோ??

கலக்கியடிக்கறீங்க!!

RAMYA said...

நன்றி ஜமால்

RAMYA said...

நன்றி அத்திரி
200 பின்னுட்டம் அளித்து
பின்னுட்ட தளபதியும்
ஆகிட்டீங்க நன்றி நன்றி

RAMYA said...

//
விஜய் said...
வைகைப் புயலுக்கு நெசமாவே ஸ்க்ரிப்ட் எழுதறது நீங்க தானோ??

கலக்கியடிக்கறீங்க!!

//

வாங்க விஜய
அப்போ நீங்க
சொல்லறதை பார்த்தால்
முயற்சி பண்ணலாம்னு
நினைக்கிறேன்
வந்து வாழ்த்தியதிற்கு
நன்றி விஜய்!!!

RAMYA said...

//
நசரேயன் said...
நான் காலையிலே படிச்சுட்டேன், கருத்து சொல்ல முடியாத அளவுக்கு ஆணி, அதனாலே தாமதம், ரெம்ப நல்லா இருக்கு பூலான் தேவி

//

வாங்க நசரேயன்
வந்து வாழ்த்தியதிற்கு நன்றி

உங்க அலுவலகத்திலும் ஆணியா??

எங்க அலுவலகத்தில் டஜன் கணக்கில்
ஆணி அடிச்சுட்டாங்க நசரேயன்

மறுபடியும் காட்டுக்கே
போயிடலாமான்னு யோசிக்கிறேன்
அங்கே தான் கொஞ்சம் ப்ரீயா உலாத்தலாம் சரிதானே!!!
இப்படிக்கு பூலான் தேவி!!

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...
\\இராகவன் அண்ணேன் எங்கே
//

பிரச்சனை வரும்னு நழுவிட்டாரு
அணிமாவுக்கு பயந்துட்டாரு\\

அண்ணேன் அப்படியா ... //

யார் பயப்படறது... இங்க அணிமாவுக்கு பாதுகாப்பே நான் தான்.

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...
\\Blogger வித்யா said...

பேசாம நீங்க வடிவேலுக்கு டிராக் ரைட்டரா போய்டுங்க:)\\

பேசாம எப்படி போ முடியும் ...//

அதானே.. எப்படி முடியும்.

S.R.Rajasekaran said...

\\\எங்கப்பா அந்த புளி அல்லது buli ...\\\

கட்டம் கட்டியாச்சி ஜமால் உங்களுக்கு .எங்களுடைய அடுத்த குறி நீங்கதான். எங்க இயக்கத்தில ஒரு தடவ முடிவு பண்ணினா பண்ணுனதுதான்

S.R.Rajasekaran said...

\\\நசரேயன் said...
நான் காலையிலே படிச்சுட்டேன், கருத்து சொல்ல முடியாத அளவுக்கு ஆணி,\\\


\\\எங்க அலுவலகத்தில் டஜன் கணக்கில்
ஆணி\\\


அதிகமா இருந்த அப்படியே எனக்கும் 50 கிலோ ஆணி அனுப்புங்கள் நல்லா பெரிய ஆணியா

S.R.Rajasekaran said...

\\\விழியின் மணியாள்,
கொஞ்சு நகையாள்,
தத்தை மொழியாள்,
இனிமைச் சிரிப்பாள்
பொன்நகை மலராள்,
என்னிதயக் கமலாள்,
காணாமற்த் தவிப்பாளென‌
நெஞ்சு வாடுகையில்\\\


அண்ணாச்சி நான் பள்ளிகூடத்துல படிக்கும் போதெல்லாம் இந்த செய்யுள் இல்லியே

S.R.Rajasekaran said...

அய்யயோ பேஜ் மாரி போச்சா

இராகவன் நைஜிரியா said...

// S.R.ராஜசேகரன் said...
\\\விழியின் மணியாள்,
கொஞ்சு நகையாள்,
தத்தை மொழியாள்,
இனிமைச் சிரிப்பாள்
பொன்நகை மலராள்,
என்னிதயக் கமலாள்,
காணாமற்த் தவிப்பாளென‌
நெஞ்சு வாடுகையில்\\\


அண்ணாச்சி நான் பள்ளிகூடத்துல படிக்கும் போதெல்லாம் இந்த செய்யுள் இல்லியே//

என்னாது இது.. தூக்கமா...முழிக்குகோங்க..

இப்படித்தான் மொபைல் போன் சர்வீஸ் எல்லாம் நடக்குதா?

இராகவன் நைஜிரியா said...

// S.R.ராஜசேகரன் said...
அய்யயோ பேஜ் மாரி போச்சா //

மாரி - மாறி

இன்னும் தூக்கம் கலையலா..

பேஜ்மாறி போச்சு - பேஜாரிப் போச்சு..

ஹேமா said...

ரம்யா,நானும் வந்துட்டேன் 215 ஆவதா மொக்கை போட.இனி வருவேன்.பாருங்க ஜமால் ஜமாய்ச்சுட்டே இருக்கார்.

நட்புடன் ஜமால் said...

\\Blogger S.R.ராஜசேகரன் said...

அய்யயோ பேஜ் மாரி போச்சா\\

ஹா ஹா ஹா

என்னப்பு கலக்கமா.

மும்மாரி - தான் கேள்விப்பட்டிருப்போம் இங்கன ஒரு buli பேஜ் - ஹையோ ஹையோ ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger S.R.ராஜசேகரன் said...

\\\எங்கப்பா அந்த புளி அல்லது buli ...\\\

கட்டம் கட்டியாச்சி ஜமால் உங்களுக்கு .எங்களுடைய அடுத்த குறி நீங்கதான். எங்க இயக்கத்தில ஒரு தடவ முடிவு பண்ணினா பண்ணுனதுதான்\\

ஓஹ்! நீங்க ஆடு-buliஆ நான் காடு-buliன்னு நினைச்சேன் ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger RAMYA said...

நன்றி ஜமால்\\


என்ன

என்ன

இதெல்லாம் சின்ன புள்ள தனமா ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger RAMYA said...

நன்றி அத்திரி
200 பின்னுட்டம் அளித்து
பின்னுட்ட தளபதியும்
ஆகிட்டீங்க நன்றி நன்றி\\

ஹலோ ஹலோ 200 பின்னூட்டமா அல்லது 200வது பின்னூட்டமா ...

நட்புடன் ஜமால் said...

\\மறுபடியும் காட்டுக்கே
போயிடலாமான்னு யோசிக்கிறேன்\\

buli வரலாம் ...

நட்புடன் ஜமால் said...

\\யார் பயப்படறது... இங்க அணிமாவுக்கு பாதுகாப்பே நான் தான்.\\

ஆஹா நல்ல பாதுகாப்புதான்.

நட்புடன் ஜமால் said...

\\எங்க இயக்கத்தில ஒரு தடவ முடிவு பண்ணினா பண்ணுனதுதான்\\

நாங்கள்ளாம் புறாவுக்கே பெல் அடிச்சவங்க ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger ஹேமா said...

ரம்யா,நானும் வந்துட்டேன் 215 ஆவதா மொக்கை போட.இனி வருவேன்.பாருங்க ஜமால் ஜமாய்ச்சுட்டே இருக்கார்.\\

பேர்லையே உள்ளது தானே ஹேமா ...

நன்றி தங்கள் ஊக்கத்திற்கு ...

நட்புடன் ஜமால் said...

\\அப்போ நீங்க
சொல்லறதை பார்த்தால்
முயற்சி பண்ணலாம்னு \\

வாழ்த்துக்கள் ரம்யா ...

(சினிமாவுக்கு ஸ்கிரிப்டு எழத)

நட்புடன் ஜமால் said...

\\அதிகமா இருந்த அப்படியே எனக்கும் 50 கிலோ ஆணி அனுப்புங்கள் நல்லா பெரிய ஆணியா\\

buli-யாரே தாங்குவீங்களா

அமிர்தவர்ஷினி அம்மா said...

me the last

:))))))))))

«Oldest ‹Older   201 – 226 of 226   Newer› Newest»