Wednesday, June 10, 2009

வேலை கிடைக்கலையே வேலை!!


"அப்பா! கடவுளே! இன்னைக்காவது நமக்கு வேலை கிடைக்கணும். பிள்ளையாரப்பா நீதான் என் கூட வரணும். வந்து அந்த வேலையை கையோட வாங்கி குடுத்துடணும். என்ன அப்படி பாக்கறே? எனக்குன்னு யாரு இருக்கா? அதான் உங்கிட்டே மொத்தமா பொலம்பறேன். ஒன்னும் நினைச்சுக்கலையே?"

"சரி நான் முன்னாலே போறேன் நீ பின்னாலே வாரே!" என்னாதிது! சாமியைப் பார்த்தா இந்த பாட்டு வருது? நான் ரொம்ப மோசமோ? ச்சேச்சே அப்படி எல்லாம் இல்லே. ஏதோ யாரும் இல்லாத இந்த அனாதைப் பயலுக்கு இந்த பிள்ளையாருதானே துணை என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு சென்றான் நந்தா.

அப்பாடி ஒரு வழியா வந்தாச்சு. எப்போ மொதலாளி வருவாரோ தெரியலையே! இங்கே வந்து காவ காக்கணும் போல இருக்கே. இங்கே யாரையுமே காணோமே? சரி, இங்கே உக்கந்திருப்போம்.

"யார் நீ? என்ன வேணும்? ஏன் இங்கே வந்து உக்காந்திருக்கே?" இந்த கேள்வியின் நாயகன்தான் அந்த அலுவலகத்தின் காவலாளி.

"நான் மளிகைகடைக்கா வந்திருக்கேன்? இவன் ஏன் இப்படி நம்பகிட்டே கேள்வி கேக்கறான்? பார்வையே சரி இல்லையே! நம்பளை ஒரு பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு பாக்கறானே! என்ன சொல்லலாம்! இவனை எப்படி ஆப் பண்ணலாம்?

பதில் வராததால் காவலாளிக்கு கோபம் வந்திடிச்சு. "டேய் எழுந்திரிடா! இங்கே வந்து உக்காந்துகிட்டு பதில் பேசாம முழிக்கறே? ஆமா, நீ யாருன்னு கேக்கறேன் இல்லே?"

"இங்கே பாரு, நான் இங்கே வேலைக்கு வந்திருக்கேன். நீங்க என்ன மரியாதை இல்லாம என்னை பேசறீங்க? உங்க முதலாளிதான் வரசொன்னாரு" என்றான் நந்தா.

"என்னா மொதலாளி வரசொன்னாரா? ஏண்டா ரவுசுவுடறே? வரச்சொல்லி இருந்தா என்கிட்டே கண்டிப்பா சொல்லி இருப்பாரு" என்று கூறி முடிக்குமுன்னே மொதலாளி வருவதை பார்த்ததும் வணக்கம் கூறி விறைப்பாக நின்றான் காவலாளி கபாலி.

"ம்ம்ம், யாருகிட்டே பேசிகிட்டு இருக்கே?"

"ஐயா உங்களை பார்க்கனும்னு இவன் ரொம்ப நேரமா உக்காந்து இருக்கான். நீங்கதான் வரச்சொன்னிங்களாம்! ஆமாவா ஐயா?"

"என்ன ஆமாவா! இல்லையா? கேள்வி பதிலா நடத்துறே? சரி உள்ளே வரச்சொல்லு"

"டேய் உள்ளே போ ஐயா வரச்சொல்றாரு!"

"அட அதை கொஞ்சம் மெதுவா சொன்னா என்னவாம்? ஏன் இப்படி கத்தறீங்க?"

"கதவை தட்டிட்டு உள்ளே போ, அப்படியே உள்ளே ஓடாதே" இவனை போயி ஏன் இந்த முதலாளி வரச்சொல்லி இருக்காரு. சுத்த காட்டானாட்டமா இருக்கான். என்ன வெவரமோ ஒன்னும் புரியலையே?

"சார் வணக்கம், என்னை மொதல்லே மன்னிச்சுடுங்க! நீங்க உள்ளே வந்த போதே வணக்கம் போடலைன்னு தப்பா நினைக்காதீங்க. காவலாளி ரொம்ப கேவலமா திட்டிட்டாரு. அதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு"

"என்னா வந்தவுடனே வத்தியா? அதெல்லாம் எனக்கு பிடிக்காது."

"மன்னிச்சுக்குங்க சார்! இனிமே இந்த மாதிரி எதுவும் பேசமாட்டேன். வேலை விஷயமா வரச்சொன்னீங்க! அதான் வந்தேன்"

"என்னா வேலை தெரியும்?"

"என்னால் எல்லா வேலையும் பார்க்க முடியும் சார்"

"எல்லா வேலைன்னா? என்னா வேலை?"

"அதான் எல்லா வேலையும் பார்ப்பேன்!" ரொம்ப வெவரமா பேசறமாதிரி நினைச்சிகிட்டு உளறிட்டோமோ?

"அதெல்லாம் இருக்கட்டும் இப்போ நான் சொல்றதைக் நல்லா கேட்டுக்க! கோவில்லே ஐயிரு சொன்னாறேன்னுதான் உன்னை இங்கே வரச்சொன்னேன். அவரு பேரை காப்பாத்தனும் சரியா?

"சரிங்க சார்"

உன்னோட வேலை இங்கே தயாரிக்கற மெழுகுவத்தியை கடை கடையா ஏறி வித்துட்டு வரணும். கணக்கு சுத்தமா பைசல் பண்ணனும். தினம் காலையிலே எட்டு மணிக்கு வந்துடனும். அங்கே இங்கேன்னு பேசிகிட்டு நிக்கக்கூடாது. பேசறது எனக்கு பிடிக்காது. நீ ரொம்ப பேசுவேன்னு ஐயிரு சொன்னாரு. இருந்தாலும் அவரு உனக்கு வேலை கொடுக்கச் சொல்லி சிபாரிசு பண்ணியதாலே , பரிதாபப்பட்டு உனக்கு இந்த வேலையைப் போட்டு தரேன். தினமும் 300 ரூபாய்க்காவது வத்தியை விக்கணும்." என்றார் மொதலாளி வரதன்.

என்னா வத்தி விக்கணுமா? நான் ஏதோ டைப் அடிக்கற வேலைன்னு நினைச்சேன்" பெரிய பொல்லாத வேலை அதுக்கு இவ்வளவு அட்வைஸ்.

"உனக்கு டைப் அடிக்க தெரியுமா?"

"அட என்னாங்க சார் எங்கே இருக்கு மெசின்! காட்டுங்க, நான் நல்லா டைப் அடிப்பேனே?"

"நீ எவ்வளவு படிச்சிருக்கே?"

"சார் டைப் அடிக்க எதுக்கு சார் படிக்கணும்? நீங்க காட்டுங்க நான் நல்லா அடிப்பேன்"

"இங்கே பாரு நந்தா! நான் சொன்ன வேலையை பாரு, தெரியாத வேலையை எல்லாம் தெரிஞ்சமாதிரி பேசிகிட்டு நடிக்கக் கூடாது. போ போயி இன்னைக்கே வத்தியை விக்கப்பாரு"

"சரிங்க சார்", நல்லா வந்தோம் வேலைக்கு. வத்தி விக்கனுமாமில்லே வத்தி, ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லையே! வத்தியை தூக்கிகிட்டு தெரு தெருவா சுத்தனுமா? அதுக்கு பிள்ளையார் கோவில்லே பொங்கல் வாங்கி தின்னே காலத்தை கழிப்பேனே! சிதறு தேங்காய் வேறே கிடைக்குமே. இப்படி நம்பளா வந்து மாட்டிகிட்டோமே! இந்த கோவில் குருக்களுக்கு அநியாயத்துக்கு கெட்ட எண்ணம். தெரிஞ்சவரு கிட்டே சொல்லி வேலை வாங்கித்தரேன்னு சொல்லி இப்படி சிக்க வச்சுட்டாரே! இதெல்லாம் நமக்கு ஒத்து வருமா? வேண்டாம்னு சொல்லிடலாமா? என்று தனக்குத்தானே புலம்பியவாறு வெளியே வந்தான் நந்தா.

காவலாளிக்கு இப்போ நல்லா புரிந்தது! இவன் பைத்தியக்காரன்தான், தனக்குத்தானே பேசிகிட்டு வரான். "டேய் இங்கே வா? மொதலாளி என்ன சொல்லி அனுப்பினாரு?"

"ம்ம்ம், வேலை போட்டு கொடுத்திருக்காரு"

"என்னா வேலை?"

"ம்ம்ம் உன்னோட இடத்துலே இனிமேல் நாந்தான்னு சொன்னாரு"

"எடு செருப்பை நான் எவ்வளவு வருஷமா விசுவாசமா இங்கே இருக்கேன். இப்போ வந்த நீ இங்கே காவலாளியா? பார்த்தா களவாணிப் பய மாதிரி !இருக்கே"

"இங்கே பாருங்க தேவை இல்லாம என்னை பேசாதீங்க"

"சரி கோவப்படாதே! இங்கே உனக்கு அப்படி என்னதான் வேலை?"

"வத்தி விக்கனுமாம்! எனக்கு அந்த பொறுமை எல்லாம் கிடையாது. பேசுவேன் அவ்வளவுதான். வியாபாரமெல்லாம் பண்ணத் தெரியாது"

"அப்போ எதுக்கு வேலைக்கு வந்தே? வேல்லைக்குன்னு வந்திட்டா என்னா வேலைக் கொடுத்தாலும் செய்யனும், வத்தி விக்கறது அவ்வளவு கேவலமா? மொதல்லே அதே மெளுகுவத்தின்னு சொல்லு. அதுவே சொல்லத் தெரியலை. நீயெல்லாம் போய் என்னாத்தே வியாபாரம் பண்ணி பிழைக்கப் போறேயோ?"

"இங்கே யாரு நந்தா?"

"நான்தான் பா என்ன சொல்லு"

"இல்லே மொதலாளி இந்த பையை உங்கிட்டே கொடுக்கச் சொன்னாரு"

"என்னாது?"

"ம்ம்ம் பிரிச்சிப் பாரு, 5 கிலோ அல்வா அனுப்பி இருக்காரு! ஆளுங்களைப் பாரு வந்த வேலையைப் பார்க்காம கேள்வியா கேக்கறே கேள்வி?"

"சரி சரி ரொம்ப சிலும்பாதே, குடு அந்தப் பையை" ஐயோ! என்ன இவ்வளவு கனக்குது? அவ்வளவும் மெளுகுவத்தியா? சரி போகும்போது எடுத்துகிட்டு போகலாம். அதுவரை இந்த மேடை மீது இருக்கட்டும்.

"ஆமா அங்கே ஒரு வீடு இருக்கே அதுலே யாரு இருக்காங்க?"

"அதுலே ஐயா நிறைய பேரை வச்சிருக்காரு, மனநிலை சரி இல்லாதவங்க நிறைய பேரு இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் நம்ம ஐயாதான் வைத்தியம் பாக்குறாரு"

"ஐயோ அவங்க எல்லாம் இங்கே வருவாங்களா? எனக்கு பயந்து வருதே"

"எதுக்கு பயப்படறே? அவங்க யாரையும் ஒன்னும் செய்யமாட்டாங்க, உன்னோட வேலையை மட்டும் பாரு"

"ஆமா அவங்க கையிலே என்னா ஏதோ குச்சி மிட்டாயிமாதிரி வச்சிக்கிட்டு சப்பிக்கிட்டு இருக்காங்களே? அது என்னா?"

"அதானே அது என்னான்னு தெரியலையே! வா கிட்டே போய் பார்க்கலாம்."

"வேணாம் எனக்கு பயந்து வருது"

"அடச்ச்சே வா போய் பார்க்கலாம். உன்னைப் பார்த்துதான் அவங்க பயப்படுவாங்க"

"ஐயோ இது என்னாதிது கையிலே மெழுகுவத்தி, எங்கே இருந்து இவங்களுக்கு கிடைச்சுது? நிறைய வச்சிருக்காங்க. நிறைய உடைச்சி போட்டிருக்காங்க?"

"ஆமா இங்கே ஒரு பை வேறே கிடக்குதே, இந்த பை உங்கிட்டே மொதலாளி கொடுக்கச் சொல்லி அனுப்பின பைதானே? எங்கே வச்சே நீ? நல்லா மாட்டினியா?"

"ஐயோ அங்கனகுள்ளே இருந்த மேடை மேலேதானே வச்சிருந்தேன்" அதையா தூக்கிட்டு வந்திட்டாங்க? ஐயோ மொதலாளி கேட்டா நான் என்னா சொல்லுவேன்?"

"இருடி, இன்னைக்கு உனக்கு முதுகுக்கு டின்னுதான்! உரிச்சிடுவாரு! நான் போய் அவருகிட்டே சொல்றேன்"

"ஆத்தாடி வந்த அன்னைக்கேவா? அதுசரி போங்கடா நீங்களும் உங்க வத்திங்களும்" மொதல் நாளே இப்படி ஆகிப்போச்சே! ஐயிரு என்ன சொல்லுவாரோ! இப்போதைக்கு இங்கே இருந்து ஓடிடலாம். மீதியை அப்புறமா யோசிக்கலாம்.......



56 comments :

நட்புடன் ஜமால் said...

எனக்கும் அதான் நிலை

நட்புடன் ஜமால் said...

இந்த பாட்டு வருது? நான் ரொம்ப மோசமோ?\\

ஹா ஹா ஹா

குசும்பு துவங்கியாச்சு ...

நட்புடன் ஜமால் said...

இங்கே வந்து காவ காக்கணும் போல இருக்கே\\

ஓஹ்! இது தான் வேலையோ

நட்புடன் ஜமால் said...

ஆமாவா ஐயா?"
"என்ன ஆமாவா! இல்லையா? கேள்வி பதிலா நடத்துறே? \\

ஹா ஹா ஹா

குசும்பு குத்தாட்டம் போடுது ...

நட்புடன் ஜமால் said...

ரொம்ப வெவரமா பேசறமாதிரி நினைச்சிகிட்டு உளறிட்டோமோ? \\

நம்ம பயக்க வயக்கம் தானே!

இவன் said...

நல்ல வேலையா இருக்கே.......

நசரேயன் said...

௬ட்டம் குறைவா இருக்கு

நசரேயன் said...

//"யார் நீ? என்ன வேணும்? ஏன் இங்கே வந்து உக்காந்திருக்கே?" இந்த கேள்வியின் நாயகன்தான் அந்த அலுவலகத்தின் காவலாளி.//

கதையின் நாயகன் அந்த களவாணி யாரு ?

நசரேயன் said...

//
"ம்ம்ம் பிரிச்சிப் பாரு, 5 கிலோ அல்வா அனுப்பி இருக்காரு! ஆளுங்களைப் பாரு வந்த வேலையைப் பார்க்காம கேள்வியா கேக்கறே கேள்வி?"//

நீங்க செய்த அல்வாவா ??

நசரேயன் said...

//ஐயிரு என்ன சொல்லுவாரோ! இப்போதைக்கு இங்கே இருந்து ஓடிடலாம்//

அது யாரு தாயீ அந்த ஐயிரு?

Anbu said...

நன்றாக உள்ளது அக்கா

அக்னி பார்வை said...

நல்ல பதிவு

தமிழ் அமுதன் said...

ஆஹா .......... ரம்யாவின் சேட்டைகள் ஆரம்பமா?;;)

सुREஷ் कुMAர் said...

//
"இருடி, இன்னைக்கு உனக்கு முதுகுக்கு டின்னுதான்! உரிச்சிடுவாரு! நான் போய் அவருகிட்டே சொல்றேன்"
//
அது சரி..
வத்தி விக்க போரவனையே வத்திவெக்கிரானா அந்த காவலாளி..

सुREஷ் कुMAர் said...

//
என்னா வந்தவுடனே வத்தியா?
//
வத்தி விக்க சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டு வத்திவெக்கிற வேலையபாக்குரானோ..?

வால்பையன் said...

அவனுக்கு என்ன வாயா இல்ல காவாயா!

ஒழுங்க எதையும் செய்ய மாட்டானா!

அ.மு.செய்யது said...

உங்க‌ளுக்கு ந‌ல்லா காமெடி டிராக் எழுத‌ வ‌ருது.

விவேக்குக்கோ வைகைப் புய‌லையோ ட்ரை ப‌ண்ணுங்க‌..

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...
//"யார் நீ? என்ன வேணும்? ஏன் இங்கே வந்து உக்காந்திருக்கே?" இந்த கேள்வியின் நாயகன்தான் அந்த அலுவலகத்தின் காவலாளி.//

கதையின் நாயகன் அந்த களவாணி யாரு ?
//

ஒருவேள‌ உங்க‌ள‌ ம‌ன‌சுல‌ வ‌ச்சி தான் எழுதுனாங்க‌ளோ ??

ஆ.ஞானசேகரன் said...

நல்ல காமடியா, சுவையான பகிர்வு ரம்யா

இராகவன் நைஜிரியா said...

ஹி...ஹி...

நல்லா வேலை வாங்கி கொடுத்தாங்க..

இராகவன் நைஜிரியா said...

// பிள்ளையாரப்பா நீதான் என் கூட வரணும். வந்து அந்த வேலையை கையோட வாங்கி குடுத்துடணும் //

பிள்ளையாரப்பனுக்கு நல்ல வேலை கொடுத்தாரு...

ஜானி வாக்கர் said...

அடுத்த தொடர் கதை ஆரம்பமா?, நல்லா தான் இருக்கு ஆனா ஆனா ... முடியல சாமி

இராகவன் நைஜிரியா said...

// எனக்குன்னு யாரு இருக்கா? //

அதானே ஒருத்தர் மாட்டிகிட்டு இருக்காரே போதாதா?

இராகவன் நைஜிரியா said...

// அதான் உங்கிட்டே மொத்தமா பொலம்பறேன். ஒன்னும் நினைச்சுக்கலையே?" //

நினைச்சா மட்டும் என்ன.. விட்டுவிடப் போகின்றாயா?

இராகவன் நைஜிரியா said...

// நான் ரொம்ப மோசமோ? //

கேள்வி வேறயா?

இராகவன் நைஜிரியா said...

// "யார் நீ? என்ன வேணும்? ஏன் இங்கே வந்து உக்காந்திருக்கே?" இந்த கேள்வியின் நாயகன்தான் அந்த அலுவலகத்தின் காவலாளி.//

முதளாலியை விட பவர்புல்லான ஆளுங்க.....

புதியவன் said...

//"யார் நீ? என்ன வேணும்? ஏன் இங்கே வந்து உக்காந்திருக்கே?" இந்த கேள்வியின் நாயகன்தான் அந்த அலுவலகத்தின் காவலாளி.//

காவலாளி இப்படித்தான் இருக்கணும்...ஆனா, இவரு மொதலாளியையே கேள்வி கேட்ப்பார் போலிருக்கே...

புதியவன் said...

//"என்னால் எல்லா வேலையும் பார்க்க முடியும் சார்"//

சகலகலா வல்லவன் போல...

புதியவன் said...

//எனக்கு பயந்து வருதே//

இது எந்த ஊர் தமிழ்...?

புதியவன் said...

//ஐயிரு என்ன சொல்லுவாரோ!//

வேறென்ன மந்திரம் தான்...

Anonymous said...

இப்ப வேலையில் சேர்ந்தாரா இல்லையா.....வத்தி வாங்கலையோ வத்தி அட நான் கூட நல்லாத்தான் விக்கிறேன்....ரம்யா இது தொடர்கதையாடா?

gayathri said...

நட்புடன் ஜமால் said...
எனக்கும் அதான் நிலை

eankum than anna

gayathri said...

hey naan pathi kathai thanda padichi supara iurku methiya nalaiku padikiren ok vetuku time aidichi

அமிர்தவர்ஷினி அம்மா said...

"அதான் எல்லா வேலையும் பார்ப்பேன்!" ரொம்ப வெவரமா பேசறமாதிரி நினைச்சிகிட்டு உளறிட்டோமோ?

கதை நடுவுல அங்க அங்க உங்கள பத்தியும் சொல்லிடறீங்க பாருங்க ரம்ஸ், அதுதான் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு, :)-

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
ஆமாவா ஐயா?"
"என்ன ஆமாவா! இல்லையா? கேள்வி பதிலா நடத்துறே? \\

ஹா ஹா ஹா

குசும்பு குத்தாட்டம் போடுது ...
//

இது சூப்பர் நகைச்சுவை ஜமால் :)

நன்றி நட்புடன் ஜமால்

RAMYA said...

//
இவன் said...
நல்ல வேலையா இருக்கே.......
//

நன்றி இவன்.

RAMYA said...

//
நசரேயன் said...
//"யார் நீ? என்ன வேணும்? ஏன் இங்கே வந்து உக்காந்திருக்கே?" இந்த கேள்வியின் நாயகன்தான் அந்த அலுவலகத்தின் காவலாளி.//

கதையின் நாயகன் அந்த களவாணி யாரு ?
//

ஹா ஹா நல்ல நகைச்சுவை நெல்லை புயலுக்கு :))

RAMYA said...

//
நசரேயன் said...
௬ட்டம் குறைவா இருக்கு
//

இப்போ எல்லாம் கூட்டமே வரது இல்லே நசரேயன் :-)

RAMYA said...

//
நசரேயன் said...
//
"ம்ம்ம் பிரிச்சிப் பாரு, 5 கிலோ அல்வா அனுப்பி இருக்காரு! ஆளுங்களைப் பாரு வந்த வேலையைப் பார்க்காம கேள்வியா கேக்கறே கேள்வி?"//

நீங்க செய்த அல்வாவா ??
//

அது கடையிலே வாங்கினது :)

RAMYA said...

//
Anbu said...
நன்றாக உள்ளது அக்கா
//

நன்றி அன்பு!

RAMYA said...

//
அக்னி பார்வை said...
நல்ல பதிவு
//

நன்றி அக்னி பார்வை!!

RAMYA said...

//
ஜீவன் said...
ஆஹா .......... ரம்யாவின் சேட்டைகள் ஆரம்பமா?;;)
//

வாங்க ஜீவன் நீங்க எல்லாம் இருக்கிற தைரியம்தான்
யாராவது அடிக்க வந்தா நீங்க, ராகவன் அண்ணா எல்லாரும்
சேர்ந்து என்னை காப்பத்த மாட்டீங்க :)

நன்றி ஜீவன்!

RAMYA said...

//
சுரேஷ் குமார் said...
//
"இருடி, இன்னைக்கு உனக்கு முதுகுக்கு டின்னுதான்! உரிச்சிடுவாரு! நான் போய் அவருகிட்டே சொல்றேன்"
//
அது சரி..
வத்தி விக்க போரவனையே வத்திவெக்கிரானா அந்த காவலாளி..
//

அமாம் சுரேஷ், காவலாளி வத்தி வைக்கிறவன் பாத்தீங்களா?
நம்பாளு நல்லா மாட்டிகிட்டாறு :)

RAMYA said...

//
சுரேஷ் குமார் said...
//
என்னா வந்தவுடனே வத்தியா?
//
வத்தி விக்க சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டு வத்திவெக்கிற வேலையபாக்குரானோ..?
//

You are correct..........

RAMYA said...

//
வால்பையன் said...
அவனுக்கு என்ன வாயா இல்ல காவாயா!

ஒழுங்க எதையும் செய்ய மாட்டானா!
//

நன்றி வால்ஸ், அதானே :)

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
உங்க‌ளுக்கு ந‌ல்லா காமெடி டிராக் எழுத‌ வ‌ருது.

விவேக்குக்கோ வைகைப் புய‌லையோ ட்ரை ப‌ண்ணுங்க‌..
//

நன்றி அ.மு.செய்யது

முயற்சிக்கலாம் ஆனா அதுக்கு பின்பலம் இல்லையே :)

RAMYA said...

நன்றி அ.மு.செய்யது!

RAMYA said...

நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி இராகவன் நைஜிரியா

RAMYA said...

//
சின்னக்கவுண்டர் said...
அடுத்த தொடர் கதை ஆரம்பமா?, நல்லா தான் இருக்கு ஆனா ஆனா ... முடியல சாமி
//

வாங்க சின்னக்கவுண்டர்!

ரொம்ப நன்றிங்க, படிச்சு என்னாச்சுங்க :)

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// "யார் நீ? என்ன வேணும்? ஏன் இங்கே வந்து உக்காந்திருக்கே?" இந்த கேள்வியின் நாயகன்தான் அந்த அலுவலகத்தின் காவலாளி.//

முதளாலியை விட பவர்புல்லான ஆளுங்க.....

//

ஹா ஹா சரியாச் சொன்னீங்க அண்ணா :)

RAMYA said...

//
புதியவன் said...
//எனக்கு பயந்து வருதே//

இது எந்த ஊர் தமிழ்...?
//


தெரியலை எப்படியோ எனக்கு இந்த தமிழ் வந்திடுச்சு புதியவன் :-)

வருகைக்கு நன்றி புதியவன்.

RAMYA said...

//
தமிழரசி said...
இப்ப வேலையில் சேர்ந்தாரா இல்லையா.....வத்தி வாங்கலையோ வத்தி அட நான் கூட நல்லாத்தான் விக்கிறேன்....ரம்யா இது தொடர்கதையாடா?
//

வேலை கிடைக்கலை தமிழ்

அட ஆமா நீங்க கூட நல்லா வத்தி விக்கரீங்களே :)

இது தொடர்கதை இல்லை.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ......

RAMYA said...

//
gayathri said...
நட்புடன் ஜமால் said...
எனக்கும் அதான் நிலை

eankum than anna
//

இதைப் படிக்க கஷ்டமா இருக்குப்பா!

சீக்கிரம் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க பிரார்த்தனை செய்கின்றேன்!

RAMYA said...

//
gayathri said...
hey naan pathi kathai thanda padichi supara iurku methiya nalaiku padikiren ok vetuku time aidichi
//

மெதுவா படிங்க :)

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
"அதான் எல்லா வேலையும் பார்ப்பேன்!" ரொம்ப வெவரமா பேசறமாதிரி நினைச்சிகிட்டு உளறிட்டோமோ?

கதை நடுவுல அங்க அங்க உங்கள பத்தியும் சொல்லிடறீங்க பாருங்க ரம்ஸ்,

அதுதான் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு, :)-
//


வாங்க தோழி அமிர்தவர்ஷிணி அம்மா

சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே :))

ஹா ஹா ஹா நீங்க யாரு :-)

அன்புடன் அருணா said...

ஆஹா...இப்படி முதல்நாளே கலக்கலா வேலை பார்த்த அனுபவம் எங்களுக்கும் உண்டே!!!