Wednesday, June 17, 2009

பதினேழு சட்ட திட்டங்கள் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே!!

சட்ட திட்டங்கள் என்பது பல உள்ளன.

ஆனால் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே உள்ள சட்ட திட்டங்கள் சற்று வித்தியாசமான முறையில் இங்கே.....


1. எப்பொழுதும் சட்ட திட்டங்களை உருவாக்குவது பெண்ணே.


2. அச்சட்டதிட்டங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாறக் கூடியது.


3. எந்த ஒரு ஆணும் அச்சட்டத்திட்டங்கள் அனைத்தயும் அறிந்திருக்க இயலாது.


4.ஒருவேளை, ஆண் அச்சட்டதிட்டங்களை அறிந்திருப்பானோ என்று ஐயம் ஏற்பட்டால், பெண்ணானவள் அனைத்து அல்லது சில சட்ட திட்டங்களையாவது உடனடியாக மாற்றி விடுவாள்.


5. பெண் எப்போதும் தவறாக இருக்க மாட்டாள்.


6. அப்படி தவறாக இருக்கும் பட்சத்தில், அது அனேகமாக ஆண் அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது அவன் தவறு செய்து இருக்க வேண்டும்.


7. ஒருவேளை விதி #6 நடந்துவிட்டால், ஆண் உடனே நடந்து முடிந்த கருத்து வேறுபாட்டிற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும்.


8. பெண் எந்த நேரமும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளல்லாம்.


9.ஆண் எந்தவித முன்னறிவிப்புமின்றி தனது கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது. அப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு முன், வாய் மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ பெண்ணிடம் தெரிவித்தாக வேண்டும்.


10. பெண்ணிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் கோபம் கொள்ளவோ வருத்தப்பட வைக்கவோ உரிமை உண்டு.


11.ஆணானவன் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண்ணால் அனுமதிக்கப்படும் வரை எப்போதும் அமைதி காத்து புன்முறுவலுடன் இருக்க வேண்டும்.


12. எந்த நேரத்திலும் ஆண் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண் அனுமதிக்க மாட்டாள்.


13.பெண்ணின் மனதை புரிந்து கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கப் படுகிறான்.


14. எப்போதும் என்ன முக்கியம் என்று பெண் கருதுகின்றாள் என்றால், அவள் என்ன சொல்லுகின்றாள் என்பதைவிட என்ன நினைக்கின்றாள் என்பதுதான்.


15. ஆண் ஏன் இந்த சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை என்றால் .........


16.இந்த சட்டதிட்டங்களை எழுத்து வடிவில் கொடுக்க முயற்சித்தால் உடல் வதைதான் மிஞ்சும்.


17. ஒருவேளை ஆண் தான் செய்வது சரி என்று நம்பினால் #5வது விதியை நினைவு கூர்ந்து கொள்ளவேண்டும். (இது மிக மிக அவசியமான ஒன்று.......)




டிஸ்கி: இது யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதியவை அல்ல. எனக்கு ஒரு தோழி அனுப்பியதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.

சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான்..........


104 comments :

நசரேயன் said...

me the first

நசரேயன் said...

//எப்பொழுதும் சட்ட திட்டங்களை உருவாக்குவது பெண்ணே.//

ஆமா என் வீட்டிலே அப்படித்தான் நடக்குது

நசரேயன் said...

//2. அச்சட்டதிட்டங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாறக் கூடியது.//
அரசியல் அறிக்கை மாதிரியா ?

நசரேயன் said...

//3. எந்த ஒரு ஆணும் அச்சட்டத்திட்டங்கள் அனைத்தயும் அறிந்திருக்க இயலாது.//
ஏன்னா எல்லோரும் சட்டம் படிக்கலை

நசரேயன் said...

//4.ஒருவேளை, ஆண் அச்சட்டதிட்டங்களை அறிந்திருப்பானோ என்று ஐயம் ஏற்பட்டால், பெண்ணானவள் அனைத்து அல்லது சில சட்ட திட்டங்களையாவது உடனடியாக மாற்றி விடுவாள்.
//

சமையல் சட்டமா ?

நசரேயன் said...

//5. பெண் எப்போதும் தவறாக இருக்க மாட்டாள்.//

நேரா எப்படி இருப்பாங்க??

நசரேயன் said...

//6. அப்படி தவறாக இருக்கும் பட்சத்தில், அது அனேகமாக ஆண் அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது அவன் தவறு செய்து இருக்க வேண்டும்.//

ஏன் வீட்டிலே சண்டையா ?

நசரேயன் said...

//7. ஒருவேளை விதி #6 நடந்துவிட்டால், ஆண் உடனே நடந்து முடிந்த கருத்து வேறுபாட்டிற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும்.//

சரி மாப்பு

நசரேயன் said...

//8. பெண் எந்த நேரமும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளல்லாம்.//

ஏன் அவங்களும் தேர்தல நிக்காங்களோ?

நசரேயன் said...

//
9.ஆண் எந்தவித முன்னறிவிப்புமின்றி தனது கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது. அப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு முன், வாய் மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ பெண்ணிடம் தெரிவித்தாக வேண்டும்.//

படிவம் இருந்தா கொடுங்க

நசரேயன் said...

//10. பெண்ணிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் கோபம் கொள்ளவோ வருத்தப்பட வைக்கவோ உரிமை உண்டு. //
யாரை ?

நசரேயன் said...

//11.ஆணானவன் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண்ணால் அனுமதிக்கப்படும் வரை எப்போதும் அமைதி காத்து புன்முறுவலுடன் இருக்க வேண்டும்.//

ஏன் அவன் நெத்தியிலே ஏதும் எழுதி ஒட்டி இருக்கோ ?

நசரேயன் said...

//12. எந்த நேரத்திலும் ஆண் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண் அனுமதிக்க மாட்டாள். //
யாரு தாயீ அந்த அதிசய பெண் ?

நசரேயன் said...

//13.பெண்ணின் மனதை புரிந்து கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கப் படுகிறான்.//

ஆனா, அது முடியாது

நசரேயன் said...

//14. எப்போதும் என்ன முக்கியம் என்று பெண் கருதுகின்றாள் என்றால், அவள் என்ன சொல்லுகின்றாள் என்பதைவிட என்ன நினைக்கின்றாள் என்பதுதான். //
எப்படி கண்டு பிடிக்க ??

நசரேயன் said...

//15. ஆண் ஏன் இந்த சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை என்றால் .........//

படிக்கிற நாங்க இடத்தை நிரப்பனுமா ???
மன்னிக்கணும் எனக்கு பதில் சொல்ல தெரியாது

நசரேயன் said...

//16.இந்த சட்டதிட்டங்களை எழுத்து வடிவில் கொடுக்க முயற்சித்தால் உடல் வதைதான் மிஞ்சும். //
யாருக்கு உடல் வதை ?

நசரேயன் said...

//17. ஒருவேளை ஆண் தான் செய்வது சரி என்று நம்பினால் #5வது விதியை நினைவு கூர்ந்து கொள்ளவேண்டும். (இது மிக மிக அவசியமான ஒன்று.......)//

அப்படியா.. சொல்லவே இல்லை

நசரேயன் said...

//
டிஸ்கி: இது யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதியவை அல்ல. எனக்கு ஒரு தோழி அனுப்பியதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். //

ஆமா.. ஆமா

நசரேயன் said...

//
சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான்.......... //

நீங்க எழுதுற எல்லாமே சிரிப்பு தான்..சிரிப்பு தான்..சிரிப்பு தான்.. போதுமா ???

நசரேயன் said...

இந்த கும்மி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ??

இ.பி.கோ 498A said...
This comment has been removed by the author.
இ.பி.கோ 498A said...

இவைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:

* பெண் என்பவள் கொடுமையே செய்யமாட்டாள். அப்படி அவள் தன் கணவனைக் குத்திக் கொலை செய்தால், அவளை அவ்வாறு கோபப்படுத்தியது அவனுடைய குற்றம். அதற்காக அந்தக் கணவனின் பெற்றோரையும் உடன்பிறந்த சகோதரியையும் கைது செய்யவேண்டும் என்று புகார் கொடுப்பாள். உடனே அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

* மனைவிக்கு உரிமைகள்தான் உண்டு. கடமைகள் ஏதும் கிடையாது

* எந்தப் பெண்ணும் எந்த ஆண் மேலும் கற்பழிப்பு புகார் கொடுக்கலாம்.
(வேறு எந்த விரோதமோ, தகறாரோ, பிரச்னையோ எதுவாக இருந்தாலும் கற்பழிப்பு புகார் மூலம் பழி வாங்கிவிடுவாள்) அந்தப் பெண்ணின் புகார் உடனே ஏற்கப்பட்டு அந்த ஆணைக் கைது செய்து விடுவார்கள். தணடனையும் வழங்கிவிடுவார்கள். அந்தப் பெண்ணின் சொல் ஒன்றே போதும். வேறு எந்த நிரூபணமும் தேவையில்லை.

* இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் ஆண் சிசுக்கள் அனைத்தும் அழிக்கப்படும். பெண்களுக்கு 100 சதம் இட ஒதுக்கீடு விள்ளாமல் விரியாமல் கிடைக்கும்!

வால்பையன் said...

இதுக்கு ஒரு ஆம்பளைய உருட்டுகட்டையாலயே அடிச்சி கொன்னுபுடலாம்!

இம்புட்டு சித்ரவதை தேவையா!

http://urupudaathathu.blogspot.com/ said...

//சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான்.......... ///


சிரிச்சிட்டு போயிடுறேன்...

( என்னா கொலவெறி ??)

http://urupudaathathu.blogspot.com/ said...

இந்த கொடுமைக்கு தான் இந்த பக்கமெ வரதில்ல...

http://urupudaathathu.blogspot.com/ said...

//ஒருவேளை விதி #6 நடந்துவிட்டால், ஆண் உடனே நடந்து முடிந்த கருத்து வேறுபாட்டிற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும்.///

கால்ல வுழுந்தா போதுங்களா??

ஜானி வாக்கர் said...

எந்த ஊருல இந்த நியாயம்?

இந்த சட்ட திட்டங்களை அமல் ப்டுத்தினால் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு கண் காணாத ஊருக்கு புகை வண்டி ஏற வேண்டி இருக்கும். இந்த ஆண் வன் கொடுமை சட்டத்தை வன்மையாக எதிர்கிறேன்.

இப்படிக்கு அனைத்துலக அபலை ஆண்கள் சங்கம்

सुREஷ் कुMAர் said...

veru oru id'il login seithuvittathaal, meendum pinnoottugiren..

सुREஷ் कुMAர் said...

விதி எண் 18.2(அ)'ன் படி நான் இந்த இடுகைக்கு பின்னூட்டலாமா கூடாதா..?

सुREஷ் कुMAர் said...

//
14. எப்போதும் என்ன முக்கியம் என்று பெண் கருதுகின்றாள் என்றால், அவள் என்ன சொல்லுகின்றாள் என்பதைவிட என்ன நினைக்கின்றாள் என்பதுதான்.
//
என்னோட முதுகு எனக்கே தெரியுதுபா..
அவ்ளோ சுத்துது..

सुREஷ் कुMAர் said...

//
உள்ள சட்ட திட்டங்கள் சற்று வித்தியாசமான முறையில் இங்கே.....
//
கடேசி வரைக்கும் அந்த சட்ட திட்டங்கள் என்னான்னு சொல்லவே இல்லையே..
(ஓ.. அதுக்கு தான் விதி எண் 16 இருக்கோ..)

सुREஷ் कुMAர் said...

//
3. எந்த ஒரு ஆணும் அச்சட்டத்திட்டங்கள் அனைத்தயும் அறிந்திருக்க இயலாது.
//
இதென்னவோ வாசதவம் தான் போங்க..

सुREஷ் कुMAர் said...

//
இது யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதியவை அல்ல.
//
எங்களை குத்துற அளவு குத்திபுட்டு, இப்போ இப்புடி வேறையா..?

सुREஷ் कुMAர் said...

//
சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான்..........
//
வோட்டு போடுவதற்கு இல்லையோ..?
ஐயா ஜாலி..

குடுகுடுப்பை said...

அடிங்கடா கும்மிய சட்டதிட்டதிற்கு உட்பட்டு, அனுமது வாங்கிருங்க் முன்னாடியே

அ.மு.செய்யது said...

//பெண் எப்போதும் தவறாக இருக்க மாட்டாள்.//

முற்றிலும் உண்மை. அவர்கள் செய்யும் அனைத்து தவறுகளையும் ஜீசஸ் கிறைஸ்ட் மாதிரி தாங்கி கொள்ள ஆண்கள் இருக்கும் போது என்ன கவலை ??

அ.மு.செய்யது said...

இந்த பதிவு சிரிக்க மட்டுமே என்று சொல்லி விடமுடியாது.அதையும் தாண்டி புனிதமான நிறைய கருத்துகள்
அடங்கியிருக்கின்றன.

sakthi said...

1. எப்பொழுதும் சட்ட திட்டங்களை உருவாக்குவது பெண்ணே.


ஆஹா இப்படியா உண்மையை வெளியே சொல்றது...

sakthi said...

அ.மு.செய்யது said...

//பெண் எப்போதும் தவறாக இருக்க மாட்டாள்.//

முற்றிலும் உண்மை. அவர்கள் செய்யும் அனைத்து தவறுகளையும் ஜீசஸ் கிறைஸ்ட் மாதிரி தாங்கி கொள்ள ஆண்கள் இருக்கும் போது என்ன கவலை ??


என்ன ஒரு தத்துவம்

sakthi said...

நசரேயன் said...

//எப்பொழுதும் சட்ட திட்டங்களை உருவாக்குவது பெண்ணே.//

ஆமா என் வீட்டிலே அப்படித்தான் நடக்குது

நிறைய வீட்டிலே அது தான் நிலைமை

sakthi said...

ஆணானவன் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண்ணால் அனுமதிக்கப்படும் வரை எப்போதும் அமைதி காத்து புன்முறுவலுடன் இருக்க வேண்டும்.

ஹ ஹ ஹ ஹ

ரசித்தேன்

sakthi said...

இது யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதியவை அல்ல. எனக்கு ஒரு தோழி அனுப்பியதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.
சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான்..........

நல்லாவே சிரித்தேன்

Unknown said...

// 1. எப்பொழுதும் சட்ட திட்டங்களை உருவாக்குவது பெண்ணே. //


குத்தாலத்துல ரூம் போட்டு .... மனதையில முக்காடு போட்டுக்கிட்டுகோட சட்ட திட்டங்கள உருவாக்கலாமுங்கோவ்...........





// 2. அச்சட்டதிட்டங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாறக் கூடியது. //



ஆமாகோவ்..... மாத்துநீங்கன்னா பெட்ரமாஸ் லைட்டு தரமாடங்கோவ்.....

பந்தம்..... கிந்தம் தான் புடிக்கொனுமுங்கோவ்.........




// 3. எந்த ஒரு ஆணும் அச்சட்டத்திட்டங்கள் அனைத்தயும் அறிந்திருக்க இயலாது. ///


ஆமாங்கோவ்...... பூராவுமே எம்.பி.பி. எஸ் சட்டமுங்கோவ்.......



// 4.ஒருவேளை, ஆண் அச்சட்டதிட்டங்களை அறிந்திருப்பானோ என்று ஐயம் ஏற்பட்டால், பெண்ணானவள் அனைத்து அல்லது சில சட்ட திட்டங்களையாவது உடனடியாக மாற்றி விடுவாள். //



ஆமாங்கோவ்.... ஊறுகாய்க்கு சக்கர பத்துலீங்கோவ் .................




// 5. பெண் எப்போதும் தவறாக இருக்க மாட்டாள். //


ஆமாங்கோவ்.... நேத்து பி.பி.சி நியூஸ் ல சொன்னாங்கோவ்............




// 6. அப்படி தவறாக இருக்கும் பட்சத்தில், அது அனேகமாக ஆண் அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது அவன் தவறு செய்து இருக்க வேண்டும். //


ஆமாங்கோவ்... இந்த ஆங்காங் மண்டையனுங்க தானுங் தப்பு பன்னீர்கோனுமுங்கோவ் .......






// 7. ஒருவேளை விதி #6 நடந்துவிட்டால், ஆண் உடனே நடந்து முடிந்த கருத்து வேறுபாட்டிற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும். //



விதி படம் மோகனும் பூர்ணிமா பாக்யராஜ் நடுச்சதுங்கோவ் .... அதுல பார்ட் # 6
இன்னுமும் வருலீங்கோவ்.......



// 8. பெண் எந்த நேரமும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளல்லாம். //



ஆமாங்கோவ்... கோழி கூபப்பட 4 மணி , 5 மணிக்குகோட மாத்திக்கலாமுங்கோவ்.......






// 9.ஆண் எந்தவித முன்னறிவிப்புமின்றி தனது கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது. அப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு முன், வாய் மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ பெண்ணிடம் தெரிவித்தாக வேண்டும். //



ஆமாங்கோவ்.. காத்து .. , மூக்கு வழியாகோட தெரிவிக்க கூடாதுங்கோவ்.......




// 10. பெண்ணிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் கோபம் கொள்ளவோ வருத்தப்பட வைக்கவோ உரிமை உண்டு. //




முந்தாநாளு ஓட கோவம் வெச்சுக்கலாமுங்கோவ் ......





// 11.ஆணானவன் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண்ணால் அனுமதிக்கப்படும் வரை எப்போதும் அமைதி காத்து புன்முறுவலுடன் இருக்க வேண்டும். //



ஆமாங்கோவ் .... பெர்மிசன் லெட்டர் வேனுமுங்கோவ் ..... இல்லீனா குட்டிகரணம் போடனுமுங்கோவ்.........






// 12. எந்த நேரத்திலும் ஆண் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண் அனுமதிக்க மாட்டாள். //



ஆமாங்கோவ்.... அம்முநிங் நெம்ப ஸ்ட்ரிக்ட்ங்கோவ் .......






// 13.பெண்ணின் மனதை புரிந்து கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கப் படுகிறான். ////


ஆமாங்கோவ்... அதுக்காக கேவுருமேண்டு ஒரு சட்டத்த கொண்டு வரபோகுதுங்கோவ்....

கம்பல்சரி எல்லா ஆம்பளைங்களும் எல்லா டி.வி சீரியலையும் பாக்கோனுமுங்கோவ்......


அப்பாதேன் அம்முநிங்க மனச புருஞ்சுக்க முடியுமுங்கோவ்........



/// 14. எப்போதும் என்ன முக்கியம் என்று பெண் கருதுகின்றாள் என்றால், அவள் என்ன சொல்லுகின்றாள் என்பதைவிட என்ன நினைக்கின்றாள் என்பதுதான். ///


ஆமாங்கோவ்... இட்லியும் அதுக்கு தொட்டுக்க கெட்டி சட்டுனியும் நெனச்சாகோட ........





// 15. ஆண் ஏன் இந்த சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை என்றால் ......... //


தேன்னு கேட்டீங்கன்னா... ஆம்பளைங்களுக்கும் இட்லியும் அதுக்கு தொட்டுக்க கெட்டி சட்டுனியும் தேவை படுதுங்கோவ்.....






// 16.இந்த சட்டதிட்டங்களை எழுத்து வடிவில் கொடுக்க முயற்சித்தால் உடல் வதைதான் மிஞ்சும். //



ஆமாங்கோவ்.. இல்லீனா சீவகொட்டையில அடி உளுவுமுங்கோவ்.....





/// 17. ஒருவேளை ஆண் தான் செய்வது சரி என்று நம்பினால் #5வது விதியை நினைவு கூர்ந்து கொள்ளவேண்டும். (இது மிக மிக அவசியமான ஒன்று.......) //



ஆமாங்கோவ்........




டிஸ்கி: இது யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதியவை அல்ல.

சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான்..........





இங்ஙனம் ,


லவ்டேல் மேடி..........

ஆ.ஞானசேகரன் said...

நடப்பதெல்லாம் உண்மை.. உண்மைதவிற வேறொன்றும் இல்லை

kanagu said...

:) சூப்பர் அக்கா :)

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... எப்படிங்க இதெல்லாம்...

இராகவன் நைஜிரியா said...

//சட்ட திட்டங்கள் என்பது பல உள்ளன. //

ஆமாம் ஒத்துக் கொள்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// ஆனால் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே உள்ள சட்ட திட்டங்கள் சற்று வித்தியாசமான முறையில் இங்கே..... //

ஹி...ஹி...

இராகவன் நைஜிரியா said...

// 1. எப்பொழுதும் சட்ட திட்டங்களை உருவாக்குவது பெண்ணே.//

இதுல சந்தேகம் வேறயா?

இராகவன் நைஜிரியா said...

// 2. அச்சட்டதிட்டங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாறக் கூடியது. //

உண்மைத்தான்... சந்தேகமில்லாமல் மாறக்கூடியது

இராகவன் நைஜிரியா said...

//3. எந்த ஒரு ஆணும் அச்சட்டத்திட்டங்கள் அனைத்தயும் அறிந்திருக்க இயலாது. //

அதை உண்டாக்கியவங்களுக்கே தெரிஞ்சு இருக்குமான்னு தெரியலை

இராகவன் நைஜிரியா said...

/4.ஒருவேளை, ஆண் அச்சட்டதிட்டங்களை அறிந்திருப்பானோ என்று ஐயம் ஏற்பட்டால், பெண்ணானவள் அனைத்து அல்லது சில சட்ட திட்டங்களையாவது உடனடியாக மாற்றி விடுவாள். //

நிச்சயமாக மாற்றிவிடுவார்கள்..

இராகவன் நைஜிரியா said...

// 5. பெண் எப்போதும் தவறாக இருக்க மாட்டாள்.//

ஆமாம்...

இராகவன் நைஜிரியா said...

/ 6. அப்படி தவறாக இருக்கும் பட்சத்தில், அது அனேகமாக ஆண் அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது அவன் தவறு செய்து இருக்க வேண்டும். //

இப்படி வேற எல்லாம் இருக்கா????

இராகவன் நைஜிரியா said...

// 7. ஒருவேளை விதி #6 நடந்துவிட்டால், ஆண் உடனே நடந்து முடிந்த கருத்து வேறுபாட்டிற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும். //

இல்லாட்டி சோறு தண்ணி எதுவுமே கிடைக்காது

இராகவன் நைஜிரியா said...

//8. பெண் எந்த நேரமும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளல்லாம்.//

அது எங்களுக்கே தெரியுமே

இராகவன் நைஜிரியா said...

//9.ஆண் எந்தவித முன்னறிவிப்புமின்றி தனது கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது. அப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு முன், வாய் மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ பெண்ணிடம் தெரிவித்தாக வேண்டும்.//

மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுக் கூட கிடையாது. அப்புறம் எங்கேயிருந்து வாய் மொழி, எழுத்து மூலமாக தெரிவிப்பது.

இராகவன் நைஜிரியா said...

// 10. பெண்ணிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் கோபம் கொள்ளவோ வருத்தப்பட வைக்கவோ உரிமை உண்டு.//

நிச்சயமாக...

இராகவன் நைஜிரியா said...

// 11.ஆணானவன் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண்ணால் அனுமதிக்கப்படும் வரை எப்போதும் அமைதி காத்து புன்முறுவலுடன் இருக்க வேண்டும்.//

பர்மிஷன் வாங்கி கிட்டுத்தான் எதையும் செய்ய வேண்டும்

இராகவன் நைஜிரியா said...

// 12. எந்த நேரத்திலும் ஆண் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண் அனுமதிக்க மாட்டாள்.//

தெரிந்ததுதானே...

இராகவன் நைஜிரியா said...

//13.பெண்ணின் மனதை புரிந்து கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கப் படுகிறான்.//

புரிந்து கொண்டவன் இந்த உலகத்திலேயே கிடையாது...

இராகவன் நைஜிரியா said...

// 14. எப்போதும் என்ன முக்கியம் என்று பெண் கருதுகின்றாள் என்றால், அவள் என்ன சொல்லுகின்றாள் என்பதைவிட என்ன நினைக்கின்றாள் என்பதுதான்.//

முடியாத விசயத்தைப் பற்றி ... பின்னூட்டம் போட முடியாதுங்க...

இராகவன் நைஜிரியா said...

// 15. ஆண் ஏன் இந்த சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை என்றால் ......... //

கட்டுப்படுவதில்லையா... யார் சொன்னது?

இராகவன் நைஜிரியா said...

// 16.இந்த சட்டதிட்டங்களை எழுத்து வடிவில் கொடுக்க முயற்சித்தால் உடல் வதைதான் மிஞ்சும்.//

ஆமாம் ஆணுக்கு உடல் வதைத்தான் மிஞ்சும்

இராகவன் நைஜிரியா said...

// 17. ஒருவேளை ஆண் தான் செய்வது சரி என்று நம்பினால் #5வது விதியை நினைவு கூர்ந்து கொள்ளவேண்டும். (இது மிக மிக அவசியமான ஒன்று.......) //

ஆமாம் #5வது விதியின் பின்னூட்டத்தைப் படித்துக் கொள்ளவும்... (இதுவும் மிக மிக அவசியமான ஒன்று.....)

இராகவன் நைஜிரியா said...

//டிஸ்கி: இது யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதியவை அல்ல. எனக்கு ஒரு தோழி அனுப்பியதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.
சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான்.......... //

இந்த பின்னூட்டங்கள் யாரையும் புண்படுத்த அல்ல.. என் தங்கச்சி போட்ட இடுகைக்கு பின்னூட்டம். அவ்வளவுதான். சிரிக்க, சிரிக்க மட்டும்தான்...

அப்பாவி முரு said...

What is going on here???

நட்புடன் ஜமால் said...

பதினேழு சட்டங்கள்

மற்றும்

திட்ட-ங்கள்

இதுல கூட திட்ட தான்ப்பா நினைக்கிறாங்க

நட்புடன் ஜமால் said...

1. எப்பொழுதும் சட்ட திட்டங்களை உருவாக்குவது பெண்ணே.\\

உருவாக்குவது மட்டுமே!

நட்புடன் ஜமால் said...

2. அச்சட்டதிட்டங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாறக் கூடியது.\\

இதுவுமே அவர்கள் திட்டம் தான்

நட்புடன் ஜமால் said...

3. எந்த ஒரு ஆணும் அச்சட்டத்திட்டங்கள் அனைத்தயும் அறிந்திருக்க இயலாது.\\

அதெப்படி இயலும் ...

நட்புடன் ஜமால் said...

4.ஒருவேளை, ஆண் அச்சட்டதிட்டங்களை அறிந்திருப்பானோ என்று ஐயம் ஏற்பட்டால், பெண்ணானவள் அனைத்து அல்லது சில சட்ட திட்டங்களையாவது உடனடியாக மாற்றி விடுவாள்.\\

ஹி ஹி ஹி

இல்லை இல்லை

ஷி ஷி ஷி

நட்புடன் ஜமால் said...

5. பெண் எப்போதும் தவறாக இருக்க மாட்டாள்.\\

மிக(ப்)பெறும் உண்மை ...

நட்புடன் ஜமால் said...

6. அப்படி தவறாக இருக்கும் பட்சத்தில், அது அனேகமாக ஆண் அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது அவன் தவறு செய்து இருக்க வேண்டும். \\

இதுவும் மிக(ப்)பெறும் உண்மை.

நட்புடன் ஜமால் said...

7. ஒருவேளை விதி #6 நடந்துவிட்டால், ஆண் உடனே நடந்து முடிந்த கருத்து வேறுபாட்டிற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும்.\\

அட இதுவுமா!

சரி சரி சட்டம் போட்டது அவங்களாச்சே

செய்துட வேண்டியது தான்.

நட்புடன் ஜமால் said...

8. பெண் எந்த நேரமும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளல்லாம்.\\

இதுல மாற்று கருத்து ஏதும் இல்லை

நட்புடன் ஜமால் said...

9.ஆண் எந்தவித முன்னறிவிப்புமின்றி தனது கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது. அப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு முன், வாய் மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ பெண்ணிடம் தெரிவித்தாக வேண்டும்.\\

அந்த அளவுக்கு உரிமை இருக்கா!

நட்புடன் ஜமால் said...

10. பெண்ணிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் கோபம் கொள்ளவோ வருத்தப்பட வைக்கவோ உரிமை உண்டு. \\

உலகறிந்த உண்மை

இதுக்கு ஒரு சட்டம் தேவையா

நட்புடன் ஜமால் said...

11.ஆணானவன் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண்ணால் அனுமதிக்கப்படும் வரை எப்போதும் அமைதி காத்து புன்முறுவலுடன் இருக்க வேண்டும்.\\

புன்முறுவலுக்கு அனுமதி கிடைத்ததே பெரிது ...

நட்புடன் ஜமால் said...

12. எந்த நேரத்திலும் ஆண் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண் அனுமதிக்க மாட்டாள். \\

அடக்குமுறை தான்

குழந்தையை அடிப்பாங்க ஆனா அழக்கூடாது ...

நட்புடன் ஜமால் said...

13.பெண்ணின் மனதை புரிந்து கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கப் படுகிறான்.\\

தினிக்கப்படுகிறான் ...

நட்புடன் ஜமால் said...

14. எப்போதும் என்ன முக்கியம் என்று பெண் கருதுகின்றாள் என்றால், அவள் என்ன சொல்லுகின்றாள் என்பதைவிட என்ன நினைக்கின்றாள் என்பதுதான்.\\

அவுகளுக்காவது தெரியுமா அது இன்னான்னு ...

நட்புடன் ஜமால் said...

15. ஆண் ஏன் இந்த சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை என்றால் .........\\

அனுமதி இல்லை அதனால் தான்

நட்புடன் ஜமால் said...

16.இந்த சட்டதிட்டங்களை எழுத்து வடிவில் கொடுக்க முயற்சித்தால் உடல் வதைதான் மிஞ்சும். \\

பூரி கட்டையா!

நட்புடன் ஜமால் said...

17. ஒருவேளை ஆண் தான் செய்வது சரி என்று நம்பினால் #5வது விதியை நினைவு கூர்ந்து கொள்ளவேண்டும். (இது மிக மிக அவசியமான ஒன்று.......)\\

எந்த வேளைங்க அது

காலை, மதியம், மாலை, அந்தி, இரவு, நடுநிசி ...

நட்புடன் ஜமால் said...

டிஸ்கி: இது யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதியவை அல்ல.\\

இதுவும் ஒரு சட்டமோ!

\\எனக்கு ஒரு தோழி அனுப்பியதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.\\

நல்ல தோழி ... இது மாதிரி எட்டு வேண்டாம் வேண்டாம் இவங்க ஒருத்தரே ...

\\சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான்.......... \\

ஷி ஷி ஷி

புதியவன் said...

”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பாரதியார் சொன்னது தான் நினைவுக்கு
வருகிறது இந்த பதிவை படித்ததும்...

புதியவன் said...

//டிஸ்கி: இது யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதியவை அல்ல. எனக்கு ஒரு தோழி அனுப்பியதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.
சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான்.......... //

சிரித்தோம்...சிரித்தோம்...சிரித்தோம்...

நல்ல பகிர்வு ரம்யா...

Anbu said...

:-)))

உங்கள் ராட் மாதவ் said...

சூப்பருங்க. ஒரு ரெண்டு மாசம் முன்னால் இந்த பதிவை வெளியிட்டு இருந்தால்
பேசாமல் நானே உங்களை ஜனாதிபதி ஆக்கியிருப்பேன். :-))

உங்கள் ராட் மாதவ் said...

//
8. பெண் எந்த நேரமும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளல்லாம்.//

பெண்கள் என்றாலே பிரச்சனைகளை திசை திருப்ப மட்டுமே தெரிந்தவர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்ப நீங்க வேற உண்மைய சொல்லிட்டீங்க? :-)

உங்கள் ராட் மாதவ் said...

//
9.ஆண் எந்தவித முன்னறிவிப்புமின்றி தனது கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது. அப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு முன், வாய் மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ பெண்ணிடம் தெரிவித்தாக வேண்டும்.//

என்னங்க நீங்க. இப்ப எல்லா வீட்டிலேயும் இது நடக்காமலா இருக்கு?:-))

உங்கள் ராட் மாதவ் said...

//10. பெண்ணிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் கோபம் கொள்ளவோ வருத்தப்பட வைக்கவோ உரிமை உண்டு. //

டச்சிங் பாயிண்ட்.... :-))

உங்கள் ராட் மாதவ் said...

நீங்கள் முக்கியமான சில சட்டங்களை மறந்து விட்டீர்களே???

18. பெண்ணுக்கு கோபம் வந்தால் உருட்டு கட்டையால் ஆணை எந்த நேரமும் தாக்கலாம்.

உங்கள் ராட் மாதவ் said...

19. ஆண்கள் சமையல் சரியில்லை என்றால் பெண்கள் பட்டினி போடலாம்.

உங்கள் ராட் மாதவ் said...

////11.ஆணானவன் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண்ணால் அனுமதிக்கப்படும் வரை எப்போதும் அமைதி காத்து புன்முறுவலுடன் இருக்க வேண்டும்.////

மொத்தத்தில் ஆண்கள் புன்னகை மன்னன்கள் (அதாங்க 'இளிச்ச வாயன்') அப்படீன்னு சொல்றீங்க? :-)

உங்கள் ராட் மாதவ் said...

இப்பத்தான் முழுசா படிச்சேன்....

என்னன்னு தெரியல தல கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் னு சுத்துதுங்க ???? :-)

உங்கள் ராட் மாதவ் said...

ஆஹா நான்தான் நூறா..... :-)

Thamira said...

ஏற்கனவே நான் காண்டுல இருக்கேன். இந்த லட்சணத்துல நல்ல விதிகள்டா சாமி.. ஊரு உருப்புட்டுரும்.!

Venkatesh Kumaravel said...

ஓஹோ... பெண்ணியமா? பேசுங்க பேசுங்க...

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

RAMYA said...

நன்றி நசரேயன்
நன்றி இ.பி.கோ 498A
நன்றி வால்பையன்
நன்றி சென்ஷி
நன்றி உருப்புடாதது_அணிமா
நன்றி நீல மலை
நன்றி சுரேஷ் குமார்
நன்றி குடுகுடுப்பை
நன்றி அ.மு.செய்யது
நன்றி Shakthi
நன்றி லவ்டேல் மேடி
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி Kanagu
நன்றி இராகவன் நைஜிரியா
நன்றி அப்பாவி முரு
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி புதியவன்
நன்றி ANBU
நன்றி RAD MADHAV
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி வெங்கிராஜா
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

கண்ணகி said...

உங்களின் சட்டதிட்டங்கள் சிரிபென்றால் ......லவ்டேல் மேடியின் பின்னூட்டங்கள் சிரிப்போ சிரிப்பு........