Friday, June 19, 2009

ஏழு அதிசயங்களில் அடங்கிய ஒரு அதிசயம்!!

உலக அதிசியங்களில் ஒன்றான பிரேசில் நகரத்தின் எழில் கொஞ்சும் அழகை உங்களுக்காக இங்கே அளிக்கின்றேன். ஏற்கனவே நீங்கள் பார்த்திருக்கலாம் இருப்பினும் நான் போற்றி பாதுகாக்கும் பெட்டகங்களில் இந்த பொக்கிஷங்களும் அடங்கும்.

வாங்க அந்த அழகை ஆராதிக்க போகலாம்....


உலகின் ஏழு அதிசியங்களில் ஒன்றான அழகிய பிரேசில் நகரம்!!


அழகே உன்னை ஆராதிக்கின்றேன் என்று சொல்லலாமா!!






நகரத்தை ஆசிர்வதிப்பது போன்ற சிலையின் வடிவமைப்பு!!



பிரேசில் நகரின் கண்கொள்ளா காட்சிகள் அசத்துகின்றதே !!


Corcovada இந்த மலையை அடைய சிரமம் ஒன்றும் இல்லை. பேருந்திலோ அல்லது ரயிலின் உதவியாலோ காடுகளுக்கு நடுவே பிரயாணம் செய்து மலையுச்சியை அடையலாம்.



இந்த படத்தில் Corcovada மலையை அடைய போடப் பட்டிருக்கும் பாதையை தெளிவாகக் காணலாம்.



இந்த படம் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட நகரத்தின் கொள்ளை அழகு


வானத்துச் சந்திரனே ஜீசஸின் சிலை அழகை மேலேயிருந்து ரசிக்கின்றதோ ?




இந்த அழகை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை!!



இந்த ஜீசஸ் சிலையின் உயரம் 125 அடி (38 மீ) . மேலும் 2330 அடி (710 மீ) Corcovada மலையின் உச்சியில் அமைந்திருக்கின்றது.




இவர்களின் சந்தோஷங்கள் நமக்கும் தொற்றிக் கொள்கின்றதே !!


நமது கண்களுக்கு விருந்து வைக்க எடுத்த படமாக இருக்குமோ?

வானமெது! பூமியெது! கடலெது! மலையெது! இப்படி பல கேள்விகள் நம்மைச் சுற்றுகின்றனவே !! இதில் ஏசுவின் சிலை அழகே அழகு!!




இந்த அழகான இயேசுவின் சிலை அருகே நாம் செல்கின்றது போல் உணர்வு ஏற்படுத்துகின்றதே!!





ஆதவனின் அழகில் இவர் போடும் தூண்டிலில் என்ன சிக்கியது!


கடலும் கடலைச் சுற்றி வீடுகளையும் காப்பேன் என்று கூறுகிறாரோ!!

ஜீசஸ் சிலைதான் ஏழு அதிசயங்களில் ஒன்றானாலும், என் மனதில் அந்த நகரமே அதிசயமாகத்தான் தெரிகின்றது.





39 comments :

सुREஷ் कुMAர் said...

ஹையா.. மீ த ஃபஸ்ட்டேய்..

सुREஷ் कुMAர் said...

//
நான் போற்றி பாதுகாக்கும் பெட்டகங்களில்
//

அட.. எல்லாரும் பெட்டகத்துல தான் எதையாச்சும் வெச்சு பாதுகாப்பாங்க..
நீங்க பெட்டகத்தையே பாதுகாக்குரின்களே..

सुREஷ் कुMAர் said...

//
வாங்க அந்த அழகை ஆராதிக்க போகலாம்....
//
வர்றோம்.. வர்றோம்..

सुREஷ் कुMAர் said...

//
உலகின் ஏழு அதிசியங்களில் ஒன்றான அழகிய பிரேசில் நகரம்!!
//
என்னாது..?
பிரேசில் நகரமே ஏழு அதிசயங்கள்ள ஒண்ணா இருக்கா..?
என் கதைய படிக்கறதுக்கு முன்னமே இப்படி கொழப்பத்துல இருக்கிங்களே..

सुREஷ் कुMAர் said...

//
பேருந்திலோ அல்லது ரயிலின் உதவியாலோ காடுகளுக்கு நடுவே பிரயாணம் செய்து மலையுச்சியை அடையலாம்.
//
திரும்பி வர ரொம்ப நேரம் தேவை இல்லைன்னு நினைக்கிறேன்..
சிம்ப்ளா அங்க இருந்து குதிச்சாலே போதும்ல..?

सुREஷ் कुMAர் said...

//
இந்த படத்தில் Corcovada மலையை அடைய போடப் பட்டிருக்கும் பாதையை தெளிவாகக் காணலாம்.
//
ஏங்க.. மாலைநேர இருட்டுல ஒரு படத்த எடுத்து வெச்சுகிட்டு பாதைய தெளிவா கானலாம்னா எப்படிங்க..?

सुREஷ் कुMAர் said...

//
வானத்துச் சந்திரனே ஜீசஸின் சிலை அழகை மேலேயிருந்து ரசிக்கின்றதோ ?
//
இது உண்மையிலேயே இரசிக்கத்தக்கது..
போட்டோ கிராப்பர் வாழ்க..

ஆமா.. அது மெய்யாலு நிலாவா..?
இம்மாம்பெருசா இருக்கு..!

सुREஷ் कुMAர் said...

//
இந்த அழகை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை!!
//
நான் வேணும்னா கடன் கொடுக்கவா..?

सुREஷ் कुMAர் said...

//
ஆதவனின் அழகில் இவர் போடும் தூண்டிலில் என்ன சிக்கியது!
//
போட்டோகிராப்பர் எடுத்த இந்த படம் தான்..

सुREஷ் कुMAர் said...

//
கடலும் கடலைச் சுற்றி வீடுகளையும் காப்பேன் என்று கூறுகிறாரோ!!
//
அவரே டிராப்பிக் போலிஸ் மாதிரி லெப்ட் ரைட்னு கைகாட்டிட்டு நிக்கிறாரு..

அந்த ஊருக்காரங்களை எல்லாம் ரைட் சைட்ல கடல் இருக்கு.. பாத்து சூதானமா இருங்கன்னு சொல்ராருபோல..

வால்பையன் said...

எப்போ போலாம்!

இன்னோன்னு தெரியுமா?

இஸ்லாத்திலும், கிருஸ்த்துவத்திலும் உருவ வழிபாடு கிடையாது!

நசரேயன் said...

சொல்லவே இல்லை பிரேசில் போனதை

குடுகுடுப்பை said...

படங்கள் அருமை.

அ.மு.செய்யது said...

அந்த நகரின் பேரான "ரியோடிஜெனீரோ" வ ஏன் மிஸ் பண்ணீங்க..??

அ.மு.செய்யது said...

//இஸ்லாத்திலும், கிருஸ்த்துவத்திலும் உருவ வழிபாடு கிடையாது!//

வால் அண்ணே !!! அதுமட்டுமில்ல..இந்து இஸத்திலும் உருவ வழிபாடு கிடையாது.

இராகவன் நைஜிரியா said...

அருமையானப் படங்கள்...

பார்க்க பார்க்க அழகு

அதை இடுகையாக அளித்த உங்களுக்கு நன்றிகள் பல..

நட்புடன் ஜமால் said...

எப்போங்க போனீங்க - அப்படின்னு கேட்டா - அத பற்றி இன்னும் பதிவு எழுதிபுடு-வீங்க.


படங்கள் நல்லா எடுத்திருக்காங்க, அதை நல்லா பகிர்ந்து இருக்கீங்க

sakthi said...

அழகான படங்கள் அருமையான பகிர்தல்

நன்றி ரம்யா...

Unknown said...

சகோதரி... எல்லாமே அருமையான புகை படங்கள்.......!!!

"அதிலும் ஜீசஸ் பின்னாடி பெரிய வட்ட நிலவு... " அருமையோ .. அருமை.........!!


சகோதரி கலக்கல் ரம்யாவுக்கு வாழ்த்துக்கள்...!!!!!

Ungalranga said...

அம்புட்டு போட்டோவும் அம்புட்டு அழகு..!!

கலக்கிட்டீங்க போங்க...!!

மாதேவி said...

பார்க்க கொடுத்ததற்கு நன்றி்.Corcovada மலையும் ஜுசஸ்சும் அழகு.

அப்பாவி முரு said...

இதெல்லாம் நீங்க எடுத்த படங்களா????


ஜீசஸ் பின்னாடி முழு நிலா படம் ஒன்றே போதும்,

sury siva said...

ப்ரேசில் நாடு அதிசயம் மட்டுமல்ல.
அதிவேகமாக முன்னேறி வரும் நாடு.
ப்ரேசில், இ ந்தியாவுக்கும் சைனாவுக்கும் பொருளாதார‌ ரீதியில்
இன்னும் ஒரு 20 ஆண்டுக‌ளில் முன் சென்று விடும் என‌வும்
க‌ருத‌ப்ப‌டுகிற‌து. அத‌ன் இய‌ற்கை வ‌ள‌மும் சுற்றுலாத்துறை
ஈட்டும் வ‌ணிக‌மும் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்ற‌ன‌.

ப‌ட‌ங்க‌ள் ம‌ன‌தை வெகுவாக‌ ஈர்க்கின்ற‌ன‌.

அந்த‌ ம‌லையும் ம‌லைக்குச் செல்லும் பாதையும்
கொள்ளை அழ‌கு.


சுப்பு ர‌த்தின‌ம்.
http://arthamullavalaipathivugal.blogspot.com

Rajeswari said...

படங்கள் எல்லாமே சூப்பர்..நேரில் போய் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது..அதுவும் ஜீசஸின் முகம் சந்திரனின் முன் சான்ஸே இல்லை ரொம்ப அழகா இருக்கு..

பகிர்ந்தமைக்கு நன்றி ரம்யா

கபிலன் said...

சூப்பர் படம்...
அத்ற்கான உங்களின் கமெண்ட்களும் அருமை !

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் எடுத்த புகைப்படங்களை என் அனுமதி இன்றி எப்படி வெளியிடல்லம்??

நஷ்டஈடாக ஒரு 10000$ என்னோட அக்கவுண்ட்ல போடவும்..

http://urupudaathathu.blogspot.com/ said...

பிரேஸில்க்கு எப்படி போகனும்?? ஏர் ஃபிரான்ஸ்ல ஒரு டிக்கட் போட்டா போதுமா??

Anonymous said...

நமக்கு எல்லாம் செலவு பண்ணி போற வசதியில்லை நல்லவேளை நீங்க கூட்டிட்டு போய் வந்திடிங்க.. நல்ல கலெக்‌ஷன்ஸ்ப்பா....தேவனின் அந்த சாந்த சொரூபம் வணக்கத்துக்கும் வணங்குதலுக்கும் உரியது....nice closeup shot....

பட்டாம்பூச்சி said...

ரொம்ப அழகா இருக்கு.

Prabhu said...

திரும்பவும் படமெல்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க!

ஆ.ஞானசேகரன் said...

படங்கள் அதன் விளக்கம் அருமை.

வழிப்போக்கன் said...

படங்கள் சூப்பர்...

kanagu said...

நல்ல படங்கள் அக்கா :)

நேற்று தான் எனக்கு மின்னஞ்சலில் எனது நண்பன் அனுப்பி இருந்தான் :)

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

அருமையானப் படங்கள்...

பார்க்க பார்க்க அழகு
கலக்கிட்டீங்க போங்க...!!

iniyavan said...

நல்ல படங்கள்

வால்பையன் said...

//வால் அண்ணே !!! அதுமட்டுமில்ல..இந்து இஸத்திலும் உருவ வழிபாடு கிடையாது. //

இந்து மதத்தின் மூலத்தில் ஒரு பிரிவான அத்வைதத்தில் இருவ வழிபாடு கிடையாது!

த்வைதத்தில் உருவ வழிபாடு உண்டு!

விவேகானந்தர் முதலில் த்வைதத்தை கடைபிடித்த ராஜாராம்மோகன்ராயின்(உடன்கட்டையை ஒழித்தவர்) சீடராக தான் இருந்தார், பின்னாளில் தான் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சீடரானார்!

நாத்திகம் பேசுவது அவ்வளவு எளிதல்ல!
எல்லா மத வரலாறுகளும் படிக்கனும்!

Prabhu said...

நான் இதுக்கு முன்னயே பதிவுலகத்தில் இருந்தாலும் சிலகாலத்துக்கு, முன்பு என்னுடைய ப்ளாக் கூகுலால் விழுங்கப் பட்டதால் எனது பதிவுகள் புதிய முகவரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லா நண்பர்களுக்கும், அவர்கள் கூடும் இடங்களிலும் சொல்ல்னும்ல. அதான்
http://pappu-prabhu.blogspot.com/

இதுதான் என் ப்ளாக்கோட முகவரி.

Vijay said...

எல்லாம் சரி தான். இருந்தாலும், ஒரு நாலஞ்சு பிரேசிலியன் மாடல்கள் புகைப்படங்களும் போட்டிருக்கலாம் :-)

Thamira said...

மிக ரசித்தேன்..