நண்பர்கள் அடைந்த வெற்றிச்சின்னம்
கேப்டன் டோணி
பங்கேற்பவர்கள்
============
கேப்டன்: டோணி
துணை கேப்டன்: ஜீவன்
இந்திய வீரர்களின் நிலைப்பாடு
=========================
டோணி - Middle Order Batsman, Jeevan - Fast Bowler, வால்பையன் - Spinner, நசரேயன் - Opening Batsman, குடுகுடுப்பை - Fast Bowler , உருப்படாதது அணிமா - (ஆல் ரௌண்டர்), ஜமால் - Wicket Keeper, அப்பாவி முரு - (ஆல் ரௌண்டர்) , லவ்டேல் மேடி - (ஆல் ரௌண்டர்), அ.மு.செய்யது - Opening batsman, அண்ணன் வணங்காமுடி - (ஆல் ரௌண்டர்)
ஆஸ்திரேலிய கேப்டன்: Ricky Ponting
ஆஸ்திரேலிய துணை கேப்டன்: Michael
ஆஸ்திரேலியர்கள் 320/10
இப்போது அப்பாவி முருவும், அ.மு.செய்யதும் ஜோடி சேர்கின்றனர். ஆஸ்திரேலிய வீரர் Shane Watson முருவின் பந்தை எதிர் கொள்கின்றார்.
இருவரின் பந்து வீச்சில் அதிர்ந்த ஆஸ்திரேலியர்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினார்கள். பல சாகசங்கள் புரிந்து விளையாடினதால் சில ரன்கள்தான் எடுக்க முடிந்தது. இருவரும் தலா ரெண்டு விக்கெட்டை வீழ்த்தினார்கள். டோணியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. புதியவர்கள் எப்படி ஆடுவார்களோ என்று தவறுதலாக பயந்து விட்டோமே என்று வருத்தப் பட்டதாக விக்கெட் கீப்பர் மற்றும் சக வீரர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பௌலிங் அப்பாவி முருவும், அ.மு.செய்யதும் தலா ரெண்டு விக்கெட்டு எடுத்து தங்களது ஆறு ஓவர்களை முடித்துக் கொண்டார்கள்.
அனைத்து தரப்பிலும் இருந்து இந்தியர்களுக்கு சரமாரியான மகிழ்ச்சி ஆரவாரங்களும், உற்சாகங்களும் வந்த வண்ணம் இருந்தன.
உணவு இடைவேளை முடிந்து முதலில் மட்டை வீச வந்தவர்கள் நமது நண்பர் நசரேயன் மற்றும் அ.மு.செய்யது.
அதிரடி ஆட்டமாக அடித்து விளையாடினார்கள். பார்வையாளர்களும், சக வீரர்களும் ஏற்படுத்திய மகிழ்ச்சி அலைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. நண்பர் நசரேயன் அருமையான ஒரு கதை எழுதும் நோக்கத்துடன் வந்திருக்கிறார். ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதை உணவு இடைவேளையின் போது சக வீரர்களிடம் கூறி மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். என்ன செய்யறது விதி வலியது. சாதரணமாக அவரது கனவில் வருவதைத்தான் எழுதுவாராம். ஆனால் கிரிக்கெட் மைதானத்தில் எழுத வந்து ஏமாந்து போன கதை ஒரு சோக கதைதானே!
நண்பர் நசரேயன் எழுத நினைத்த கதையின் தலைப்பு மட்டும் வெளியே கசிந்து விட்டதாமாம். அதாவது, "துண்டு போட்டு துடித்துப் போன கதை" இது தான் அந்த கதையின் தலைப்பு. தலைப்பே விறுவிறுப்பாக இருக்கும் போல இருக்கே! எப்போ எழுதுவாரோ அப்போ படிக்க தயாராகலாம். இப்போ அவர் விளையாடுவதை கவனிக்க வேண்டுமே! அதுனாலே தான்...........
வால்பையன் மட்டும் எதிர் கவிதைகளும் பின்னூட்டங்களும் இட்டு தனது காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்டும், விளையாடியும் விட்டதாக சுற்று வட்டாரங்கள் தெரியப் படுத்தின. நண்பர் வால்பையனுக்கு எதிர் கவிதை எழுதினாலே போதும். எல்லாருக்கும் நல்லா பொழுது போகும். விளையாட்டிலும் அவர் கில்லாடி என்பதை நிரூபித்து விட்டார்.
ஆனால் அ.மு.செய்யது கதை, கட்டுரைகள் என்று எல்லா தரப்பிலும் வெளுத்து வாங்குவார். அதே போல விளையாட்டிலும்......... நசரேயன் அவர்களுக்கும் நம்ம சகோதரர் அ.மு.செய்யதுக்கும் நல்லா ஒத்துப் போகுதுன்னு சொல்லலாம். நல்ல புரிதல் இருக்கு. தவறுகள் செய்யாமல் அருமையா விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பதினைந்து ஓவர்களில் அவுட் ஆகாமல் இருவரும் சேர்ந்து எடுத்த ரன்கள் 110. நசரேயன் 60 ரன்கள். அ.மு.செய்யது 50 ரன்கள். ஆஸ்திரேலியர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் புது வியூகம் அமைத்து அதில் இருவரையும் சிங்காரமாக சிக்க வைத்து விட்டனர். (110/2)
தேநீர் இடைவேளையின் போது இந்திய வீரர்கள் இருவரும் அவுட் ஆனார்கள்.
இதை சற்றும் எதிர் பாராத டோணி மிகவும் கவலைக்குள்ளானார்.
இடைவேளைக்குப் பிறகு அடுத்து களம் இறங்கியவர்கள் லவ்டேல் மேடி, அண்ணன் வணங்காமுடி. வந்த வேகத்தில் இருவரும் சிக்சரும் பௌண்டரியுமாக அடித்துத் தள்ளினார்கள். அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் அரங்கத்தில் அனைவரும் மகிழ்ச்சி ஆராவாரம் செய்து கொண்டிருந்தனர்.
மள மளவென்று ரன்கள் குவிந்தன. அதே சமயத்தில் ஆர்வத்தில் ஓடிய அண்ணன் வணங்காமுடி ரன் அவுட் ஆனார். அண்ணன் வணங்காமுடி எடுத்த ரன்கள் 35. (145/3)
மேடியுடன் இப்போது ஜோடி சேர்பவர் வால்பையன்.
வந்த வேகத்தில் மூன்று சிக்ஸ்சர்கள். அவரும் ஆஸ்திரேலியர்களிடம் சிக்கி அவுட் ஆனார். வால்பையன் எடுத்த ரன்கள் 38. (183/4)
அடுத்து களம் இறங்கியவர் கேப்டன் டோணி. ஆஸ்திரேலியர்கள் மிகவும் நிதானாக யோசித்து பீல்டிங் டைட் செய்து விட்டனர். அதனால் சிங்கிள் ரன் எடுக்கவே இந்திய வீரர்கள் தடுமாறினார்கள். ஒவ்வொரு ரன்னாக இருபது எடுத்து இறுதியில் பரிதாபமாக டோணி அவுட் ஆனார். டோணி எடுத்த ரன்கள் 20. (203/5)
லவ்டேல் மேடி களத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார். இவருடன் ஜோடி சேர்ந்தவர் விக்கெட் கீப்பர் ஜமால். மூன்று சிக்ஸர் ஐந்து பௌண்டரி எடுத்தார். ரன் அவுட் ஆனது ஜமால். ஜமால் எடுத்த ரன்கள் 38. (241/6.)
லவ்டேல் மேடியுடன் ஜோடி சேர்ந்தவர் ஜீவன். இவர் ஏழாவது விக்கெட். தேவையான ரன்கள் பன்னிரண்டு. எதிர் பார்ப்பு மிகவும் அதிகமாகிவிட்டது. ஏனெனில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு ரன் கூட எடுக்க அனுமதிக்கவில்லை. இந்த சூழ்நிலையை நன்றாக உள்வாங்கிய மேடி சிக்சருக்கு தூக்கினார். அது அங்கேயே விழுந்தது. ரன் எடுக்க முடிய வில்லை. அவர் நல்ல நேரம் அவுட் ஆகவில்லை. அடுத்த பந்தை எதிர்பார்ப்புடன் எதிர்கொண்டவர் ஜீவன். வந்தது வரட்டும் கடைசிநேர விளையாட்டுதானே என்று எண்ணி விட்டார் போலும். மட்டையை சுழற்றி தூக்கி அடித்தார் பாருங்கள். பந்து பறந்து வந்து அரங்கத்தில் விழுந்தது. இந்தியர்கள் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தனர் என்று எல்லா தரப்பினருக்கும் நம்பிக்கை வந்து விட்டது. அதன் எதிரொலி கைதட்டல்கள்தான் . அவர்களின் மகிழ்ச்சிக்கு ஏது எல்லை!!
அடுத்த பந்திலும் அதே துணிச்சல் இதிலும் சிக்சருக்கு பந்து பறந்தது. ஜீவன் அடித்த ரன்கள் மூன்று சிக்சர்களும் ஒரு பௌண்டரியும். மொத்தமாக ஜீவன் எடுத்த ரன்கள் 22. தேவையான ரன்கள் 21.
இறுதியில் இந்தியா வெற்றியடைந்தது. அனைத்து நண்பர்களும் ஆடுகளத்தை நோக்கி ஓடினார்கள். இறுதிவரை விளையாடிக் கொண்டிருந்த மேடிக்கு சக வீரர்களிடம் இருந்து பயங்கர அப்ளாஸ் கிடைச்சுது. லவ்டேல் மேடி எடுத்த ரன்கள் 59. (322/6.)
விவேகம் நிறைந்த வேகமான விளையாட்டில் சிறந்து விளங்கிய நமது இந்திய வீரர்களை பாராட்டாதவர்களே கிடையாது. ஆஸ்திரேலிய வீரர்களும் மனதார இந்திய வீரர்களை பாராட்டினார்கள். இறுதியில் விளையாடிய அனைவரையும் கவுரவப் படுத்தும் வகையில் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொருவரையும் தனித் தனியாக பாராட்டினார்கள். அவருடைய சொந்த செலவில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கினார். டோணியை பாராட்டி வெற்றிக் கோப்பையை பிரதமர் வழங்கினார்.
கோப்பையை வாங்கிய டோணி இந்த பாராட்டுதல்களுக்கு காரணமானவர்கள் புதிதாக விளையாட வந்தவர்கள்தான். வழக்கமாக விளையாடுபவர்கள் விளையாட முடியாத சூழ்நிலையில் ரிஸ்க் எடுத்து இந்த புதியவர்களை களம் இறக்கினோம். அம்பயரில் இருந்து ஆடிய அனைத்து வீரர்களுக்குமே இந்த வெற்றி சொந்தமானது.
நான் இந்தக் கோப்பையை முழு மனதுடன் புதிய இந்திய வீரர்களாக களம் இறங்கி புது மாதிரி விளையாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பிரபல வலைப்பதிவர்களுக்குதான் சொந்தமாக்கப் போகிறேன், மைதானத்தில் விளையாட்டுடன் சேர்த்து குறும்புகள் பல செய்தாலும் இறுதியில் வெற்றிக் கனியை பெற்றுத் தந்து விட்டார்கள். அதனால் அனைத்து பெருமைகளும் புது வீரர்களுக்கே! என்று டோணி வாங்கிய கோப்பையை துணை கேப்டன் ஜீவன் அவர்களிடம் கொடுத்து இது உங்கள் அனைவருக்கும் சொந்தம். இது உங்கள் விளையாட்டின் நினைவாக வலையுலகை அலங்கரிக்கட்டும் என்றார்.
அரங்கத்தில் ஏற்பட்ட பலத்த கரகோஷத்துடன் நம் வலை நண்பர்கள் வெற்றிச் சிரிப்போடு பிரியாவிடை பெற்றனர்.
***சுபம்***
நன்றி
ரம்யா....
56 comments :
ஹையா! ஜெயித்தது நாம தானே!
ரன் அவுட் ஆனது ஜமால்.]]
பொங்கள் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டு விட்டார் போலும்.
அஆவ்வ்வ்.... !! நெம்ப நல்ல சேதிதானுங்கோவ்.....!!!
வெற்றி கோப்பையை வைத்திருக்கும் ஜீவன் அண்ணா, அதை வலையில் போட்டு வையுங்கள்.
மாதம் ஒருவருக்கு கொடுங்கள்.
//வந்த வேகத்தில் மூன்று சிக்ஸ்சர்கள். அவரும் ஆஸ்திரேலியர்களிடம் சிக்கி அவுட் ஆனார். வால்பையன் எடுத்த ரன்கள் 38. (183/4)//
என்ன செய்ய அங்க ஒருத்தன் சரக்கு பாட்டில ஆட்டிகிட்டே இருக்கேன்!
கீழ வையுடா வர்றேன்னு சொன்னா கேக்க மாட்டிங்கிறான்!
மற்ற நண்பர்கள் இருக்கும் தைரியத்தில் நான் பாட்டிலை ஓப்பன் பண்ணப்போறேன்!
//இறுதிவரை விளையாடிக் கொண்டிருந்த மேடிக்கு சக வீரர்களிடம் இருந்து பயங்கர அப்ளாஸ் கிடைச்சுது. லவ்டேல் மேடி எடுத்த ரன்கள் 59.//
கடைசி வரைக்கும் நின்னு விளையாடினாத்தான் சரக்குன்னு சொல்லிடோம்ல!
வாங்க மேடி 59 அடிச்சிருக்கிங்க அதுக்கு பார்ட்டி வையுங்க!
கோப்பை எங்கே?
ஹையா.. எப்டியோ கோப்பைய கொண்டாந்துட்டாங்க..
எங்கப்பா.. வாங்குன கோப்பைய காட்டவேஇல்லை..
தொடரை நல்லபடியாக வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்..
சுபம் போட்டாச்சு ..
//பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொருவரையும் தனித் தனியாக பாராட்டினார்கள். அவருடைய சொந்த செலவில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கினார். //
டீமுல உள்ள மக்கா அனைவரும் எங்களுக்கு பார்ட்டி கொடுக்கவும் ..
// லவ்டேல் மேடி எடுத்த ரன்கள் 59. //
அடங்கொன்னியா.... !! நம்பவே முடியல......
// லவ்டேல் மேடி களத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார். //
ஆமாங்கோவ்...... கம்முனாட்டி பசங்களோட... போராடி .. போராடி... நெம்ப டயர்ட் ஆயிருச்சு....!! யாருப்பா அங்க.... ஒரு ஆப்பிள் ஜூஸ் கொண்டாங்கப்பா....!!
// மேடியுடன் இப்போது ஜோடி சேர்பவர் வால்பையன். //
// லவ்டேல் மேடி களத்தில் ...இவருடன் ஜோடி சேர்ந்தவர் விக்கெட் கீப்பர் ஜமால்..//
// லவ்டேல் மேடியுடன் ஜோடி சேர்ந்தவர் ஜீவன்...//
அடங்கொன்னியா...... இத்தன பேருகோட நா ஸ்டாண்ட் பண்ணுன்னா....?? எனுங் அம்மிணி.... இதெல்லாம் நெம்ப டூ மச்சு.......!!!
//இந்த சூழ்நிலையை நன்றாக உள்வாங்கிய மேடி சிக்சருக்கு தூக்கினார். //
ம்ம்ம்க்க்ம்ம்..... நல்லா இழுத்து .. பீர் பாட்டலு மூடிய வேணுமின்னா தூக்குவேன்.... சிக்சறேல்லாம் நம்பநாள முடியாதுங் அம்முனி.....!!!!
// அனைத்து நண்பர்களும் ஆடுகளத்தை நோக்கி ஓடினார்கள். //
எனுங் அம்முனி.... ஆஸ்துரேலியா அணி சுண்டலும்.... பொங்கலும் தந்தாங்களா....????
// இறுதிவரை விளையாடிக் கொண்டிருந்த மேடிக்கு சக வீரர்களிடம் இருந்து பயங்கர அப்ளாஸ் கிடைச்சுது. //
என்னது.... அப்பளம் கெடச்சுதா........?? அடங்கொன்னியா.....!!!
// என்று டோணி வாங்கிய கோப்பையை துணை கேப்டன் ஜீவன் அவர்களிடம் கொடுத்து இது உங்கள் அனைவருக்கும் சொந்தம். //
அட.... புது விருது..... அப்போ இனி இது வலை உலகுக்குள்ள .. புதுசா எல்லாருக்கும் குடுப்பாங்க....!! இதுல எனக்கும் பங்கு இருக்கு.....!!
அதுனால ... இந்த விருதை... நான் எனது சகோதரி ரம்யா அக்காவுடன் பகிர்ந்துகொள்கிறேன்....!!! அக்கா போட்டோவ நீங்களே பிசின் பன்னி உங்க ப்ளாக்குல வெச்சுக்கோங்க....!!
//அரங்கத்தில் ஏற்பட்ட பலத்த கரகோஷத்துடன் நம் வலை நண்பர்கள் வெற்றிச் சிரிப்போடு பிரியாவிடை பெற்றனர்.//
ஆட்டம் முடிந்துவிட்டதா ரம்யா...
வாழ்த்துகள்...............
ஆஹா நான் பார்ம் இல்லாதபோதே மேச்சு முடிஞ்சு போச்சா?
தூள்!
மண்ணு பறக்குது...!
ஆட்டம் முடிஞ்சிடுச்சா?
//***சுபம்***//
அருமையான வரிகள்...
//பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் வந்திருந்தார்கள். //
இது எப்ப ???
அவரையும் விட்டு வைக்கலயா ??? அவ்வ்வ்வ்.......
//குடுகுடுப்பை said...
ஆஹா நான் பார்ம் இல்லாதபோதே மேச்சு முடிஞ்சு போச்சா?//
சீக்கிரமா பாரத்துக்கு வாங்க...கில்லி கோலி தாண்டுனு அடுத்த சீசன் அக்கா ஆரம்பிக்க
போறதா நம்பத்தகுந்த வட்டாரங்களிலிர்ந்து தகவல்.
//நசரேயன் அவர்களுக்கும் நம்ம சகோதரர் அ.மு.செய்யதுக்கும் நல்லா ஒத்துப் போகுதுன்னு சொல்லலாம்.//
சொல்லவேயில்ல..!!!!
//நான் இந்தக் கோப்பையை முழு மனதுடன் புதிய இந்திய வீரர்களாக களம் இறங்கி புது மாதிரி விளையாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பிரபல வலைப்பதிவர்களுக்குதான் சொந்தமாக்கப் போகிறேன்,//
கஷ்டப்பட்டு ஆடினது நாங்க...அது என்ன கோப்பையை நீங்க சொந்த மாக்குறது..??
உங்களுக்கு ஒரு வெஞ்ஜனக்கிண்ணம் கூட கிடையாது.
ரம்யா அவர்களுக்கு,
அறுவை சிகிச்சை முடிந்து முழுமையாக குணம் பெற்று பழைய படி சரவெடி
பதிவுகளை நீங்கள் மீண்டும் எழுத வேண்டும் என இறைவனை வேண்டி கொள்ளும்
அன்பு நெஞ்சங்கள் !!!!!!!
ரம்யா..... கலக்கி விட்டீர்கள்....
பசங்கள எப்படியோ கோப்பையையும் வாங்க வச்சாச்சு.....
பேஷ்....பேஷ்.....
*******************************
Get well soon Ramya... Our Prayers are always there for you....
Wish you a very speedy recovery...
//
நட்புடன் ஜமால் said...
ஹையா! ஜெயித்தது நாம தானே!
//
ஆமாம் ஜமால் என்றைக்குமே நமக்குத்தான் ஜெயம்!
//
லவ்டேல் மேடி said...
அஆவ்வ்வ்.... !! நெம்ப நல்ல சேதிதானுங்கோவ்.....!!!
//
ஆமாம் மேடி நெம்ப நல்ல சேதிதானுங்கோவ் !!
//
வால்பையன் said...
//வந்த வேகத்தில் மூன்று சிக்ஸ்சர்கள். அவரும் ஆஸ்திரேலியர்களிடம் சிக்கி அவுட் ஆனார். வால்பையன் எடுத்த ரன்கள் 38. (183/4)//
என்ன செய்ய அங்க ஒருத்தன் சரக்கு பாட்டில ஆட்டிகிட்டே இருக்கேன்!
கீழ வையுடா வர்றேன்னு சொன்னா கேக்க மாட்டிங்கிறான்!
மற்ற நண்பர்கள் இருக்கும் தைரியத்தில் நான் பாட்டிலை ஓப்பன் பண்ணப்போறேன்!
//
அப்பா எப்படியோ வாலுவுக்கு சரக்கு கிடைச்சிடுச்சு :))
//
வால்பையன் said...
//இறுதிவரை விளையாடிக் கொண்டிருந்த மேடிக்கு சக வீரர்களிடம் இருந்து பயங்கர அப்ளாஸ் கிடைச்சுது. லவ்டேல் மேடி எடுத்த ரன்கள் 59.//
கடைசி வரைக்கும் நின்னு விளையாடினாத்தான் சரக்குன்னு சொல்லிடோம்ல!
வாங்க மேடி 59 அடிச்சிருக்கிங்க அதுக்கு பார்ட்டி வையுங்க!
//
மேடியை விடாதீங்க, பார்ட்டி எங்கே? எப்போ?
கூட விளையாடினவங்க யாரையும் மிஸ் பண்ணிடாதீங்க :))
//
வால்பையன் said...
கோப்பை எங்கே?
//
கோப்பை வந்திடுச்சு, பயங்கர வெயிட் அதான் கொஞ்சம் லேட்:-)
//
நட்புடன் ஜமால் said...
ரன் அவுட் ஆனது ஜமால்.]]
பொங்கள் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டு விட்டார் போலும்.
//
பொங்கல் மட்டுமா? இல்லை வடையும் சேர்த்து சாப்பிட்டாராம் :-)
//
நட்புடன் ஜமால் said...
வெற்றி கோப்பையை வைத்திருக்கும் ஜீவன் அண்ணா, அதை வலையில் போட்டு வையுங்கள்.
மாதம் ஒருவருக்கு கொடுங்கள்.
//
இது சூப்பர் ஐடியா ஜமால்!
//
सुREஷ் कुMAர் said...
ஹையா.. எப்டியோ கோப்பைய கொண்டாந்துட்டாங்க..
எங்கப்பா.. வாங்குன கோப்பைய காட்டவேஇல்லை..
//
காட்டிடோம்லே :)
//
सुREஷ் कुMAர் said...
தொடரை நல்லபடியாக வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்..
//
நன்றி தம்பி!!
//
சூரியன் said...
சுபம் போட்டாச்சு ..
//
ஆமாம் சூரியன்! எங்கே பையும் கையுமா கிளம்பிட்டீங்க??
//
சூரியன் said...
//பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொருவரையும் தனித் தனியாக பாராட்டினார்கள். அவருடைய சொந்த செலவில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கினார். //
டீமுல உள்ள மக்கா அனைவரும் எங்களுக்கு பார்ட்டி கொடுக்கவும் ..
//
ஆமா ஆமா எல்லார் கிட்டேயும் பார்ட்டி கேளுங்க கேளுங்க :-)
//
லவ்டேல் மேடி said...
// லவ்டேல் மேடி எடுத்த ரன்கள் 59. //
அடங்கொன்னியா.... !! நம்பவே முடியல......
//
அட இப்படி சொன்னா எப்படி எங்களாலே கூட நம்ப முடியலே :-)
//
லவ்டேல் மேடி said...
// லவ்டேல் மேடி களத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார். //
ஆமாங்கோவ்...... கம்முனாட்டி பசங்களோட... போராடி .. போராடி... நெம்ப டயர்ட் ஆயிருச்சு....!! யாருப்பா அங்க.... ஒரு ஆப்பிள் ஜூஸ் கொண்டாங்கப்பா....!!
//
அதே அப்பவே குடிச்சிடீங்களே! அதுக்குள்ளே மறந்து போச்சா?
அது சரி
சும்மா சும்மா ஜூஸ் கேக்கப்பிடாது :)
//
லவ்டேல் மேடி said...
// மேடியுடன் இப்போது ஜோடி சேர்பவர் வால்பையன். //
// லவ்டேல் மேடி களத்தில் ...இவருடன் ஜோடி சேர்ந்தவர் விக்கெட் கீப்பர் ஜமால்..//
// லவ்டேல் மேடியுடன் ஜோடி சேர்ந்தவர் ஜீவன்...//
அடங்கொன்னியா...... இத்தன பேருகோட நா ஸ்டாண்ட் பண்ணுன்னா....?? எனுங் அம்மிணி.... இதெல்லாம் நெம்ப டூ மச்சு.......!!!
//
உங்க பலம உங்களுக்கே தெரியலை
டூ மச் இல்லே த்ரீ மச் :-)
//
லவ்டேல் மேடி said...
//இந்த சூழ்நிலையை நன்றாக உள்வாங்கிய மேடி சிக்சருக்கு தூக்கினார். //
ம்ம்ம்க்க்ம்ம்..... நல்லா இழுத்து .. பீர் பாட்டலு மூடிய வேணுமின்னா தூக்குவேன்.... சிக்சறேல்லாம் நம்பநாள முடியாதுங் அம்முனி.....!!!!
//
சிக்ஸ்சருக்கு தூக்கினது என்னமோ உண்மைதான் ஆனா அதுதான் சிக்ஸ்சருக்கு போகவே இல்லையே:-)
//
லவ்டேல் மேடி said...
// அனைத்து நண்பர்களும் ஆடுகளத்தை நோக்கி ஓடினார்கள். //
எனுங் அம்முனி.... ஆஸ்துரேலியா அணி சுண்டலும்.... பொங்கலும் தந்தாங்களா....????
//
இல்லே இல்லே தப்பு தப்பா பேசக் கூடாது :-)
உங்களை பாராட்டத்தான் ஓடி வாராங்க
//
லவ்டேல் மேடி said...
// இறுதிவரை விளையாடிக் கொண்டிருந்த மேடிக்கு சக வீரர்களிடம் இருந்து பயங்கர அப்ளாஸ் கிடைச்சுது. //
என்னது.... அப்பளம் கெடச்சுதா........?? அடங்கொன்னியா.....!!!
//
ஹேய் அது அப்பளம் இல்லே பாராட்டு!
//
லவ்டேல் மேடி said...
// என்று டோணி வாங்கிய கோப்பையை துணை கேப்டன் ஜீவன் அவர்களிடம் கொடுத்து இது உங்கள் அனைவருக்கும் சொந்தம். //
அட.... புது விருது..... அப்போ இனி இது வலை உலகுக்குள்ள .. புதுசா எல்லாருக்கும் குடுப்பாங்க....!! இதுல எனக்கும் பங்கு இருக்கு.....!!
அதுனால ... இந்த விருதை... நான் எனது சகோதரி ரம்யா அக்காவுடன் பகிர்ந்துகொள்கிறேன்....!!! அக்கா போட்டோவ நீங்களே பிசின் பன்னி உங்க ப்ளாக்குல வெச்சுக்கோங்க....!!
//
சரி நானே வச்சிக்குறேன் அப்புறமா உங்களுக்கு தரேன் :)
//
ஆ.ஞானசேகரன் said...
//அரங்கத்தில் ஏற்பட்ட பலத்த கரகோஷத்துடன் நம் வலை நண்பர்கள் வெற்றிச் சிரிப்போடு பிரியாவிடை பெற்றனர்.//
ஆட்டம் முடிந்துவிட்டதா ரம்யா...
வாழ்த்துகள்...............
//
ஆட்டம் முடிந்து விட்டது ஆ.ஞானசேகரன்!
வாழ்த்துக்கு நன்றி ஆ.ஞானசேகரன்!
//
குடுகுடுப்பை said...
ஆஹா நான் பார்ம் இல்லாதபோதே மேச்சு முடிஞ்சு போச்சா?
//
ஆமாம் முடிஞ்சிபோச்சு ஆட்டம்!
//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
தூள்!
மண்ணு பறக்குது...!
ஆட்டம் முடிஞ்சிடுச்சா?
//
ஆமாம் ஆட்டம் முடிஞ்சிபோச்சு சகோதரா :-)
//
அ.மு.செய்யது said...
//***சுபம்***//
அருமையான வரிகள்...
//
ரசனைக்கு நன்றி அ.மு.செய்யது!
//
அ.மு.செய்யது said...
//பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் வந்திருந்தார்கள். //
இது எப்ப ???
அவரையும் விட்டு வைக்கலயா ??? அவ்வ்வ்வ்.......
//
இல்லே உங்க பெயரை எல்லாம் படிச்சி எப்படியோ அவரும் வந்திட்டாரு!
//
அ.மு.செய்யது said...
//குடுகுடுப்பை said...
ஆஹா நான் பார்ம் இல்லாதபோதே மேச்சு முடிஞ்சு போச்சா?//
சீக்கிரமா பாரத்துக்கு வாங்க...கில்லி கோலி தாண்டுனு அடுத்த சீசன் அக்கா ஆரம்பிக்க
போறதா நம்பத்தகுந்த வட்டாரங்களிலிர்ந்து தகவல்.
//
அப்படியா எனக்கு தெரியாதே :))
//
அ.மு.செய்யது said...
//நசரேயன் அவர்களுக்கும் நம்ம சகோதரர் அ.மு.செய்யதுக்கும் நல்லா ஒத்துப் போகுதுன்னு சொல்லலாம்.//
சொல்லவேயில்ல..!!!!
//
இப்போதான் சொல்லிட்டோம்லே :-)
//
அ.மு.செய்யது said...
//நான் இந்தக் கோப்பையை முழு மனதுடன் புதிய இந்திய வீரர்களாக களம் இறங்கி புது மாதிரி விளையாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பிரபல வலைப்பதிவர்களுக்குதான் சொந்தமாக்கப் போகிறேன்,//
கஷ்டப்பட்டு ஆடினது நாங்க...அது என்ன கோப்பையை நீங்க சொந்த மாக்குறது..??
உங்களுக்கு ஒரு வெஞ்ஜனக்கிண்ணம் கூட கிடையாது.
//
சேச்சே அப்படி எல்லாம் சொல்லக் கூடாது :))
//
அ.மு.செய்யது said...
ரம்யா அவர்களுக்கு,
அறுவை சிகிச்சை முடிந்து முழுமையாக குணம் பெற்று பழைய படி சரவெடி
பதிவுகளை நீங்கள் மீண்டும் எழுத வேண்டும் என இறைவனை வேண்டி கொள்ளும்
அன்பு நெஞ்சங்கள் !!!!!!!
//
நன்றி அ.மு.செய்யது.
//
R.Gopi said...
ரம்யா..... கலக்கி விட்டீர்கள்....
பசங்கள எப்படியோ கோப்பையையும் வாங்க வச்சாச்சு.....
பேஷ்....பேஷ்.....
*******************************
Get well soon Ramya... Our Prayers are always there for you....
Wish you a very speedy recovery...
//
Thank you very much Mr.Gopi
Post a Comment