Monday, August 10, 2009

நான் பெற்ற வலையுலக விருதுகள்!!

நன்றிகள் பல கோடி மக்கா!!




''சுவாரஸ்ய வலைப்பதிவு விருதினை'' நண்பர் ஜீவன், அன்புத்தம்பி சுரேஷ், அன்புத்தம்பி கனகராஜ் பாண்டியன் மூவரும் எனக்கு இந்த விருதினை வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் மூவருக்கும் என் நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.

என் பதிவுகளையும் சுவாரஷ்யமாக்கியத்திற்கு...

மிக்க நன்றி ஜீவன்
மிக்க நன்றி சுரேஷ்
மிக்க நன்றி கனகராஜ் பாண்டியன்

ரூல்ஸ் படி நான் இந்த விருதினை ஆறு பேருக்கு வழங்க வேண்டும். ஆனா எல்லோரும் இந்த விருதினை வாங்கி விட்டார்கள். வாங்காதவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. அதனால்........

என் நண்பர்கள் அனைவருக்கும் இந்த விருதினை தர விரும்புகிறேன்! எனது நண்பர்கள் அனைவரும் இந்த விருதினை பெரிய மனது பண்ணி ஏற்றுக் கொள்ளுங்கள்!

தனிப்பட்ட முறையில் இந்த ரெண்டு அவார்டுகளையும் எனதன்பு சகோதரர்கள் அண்ணன் வணங்காமுடி மற்றும் S.குமார் இருவருக்கும் கொடுக்க ஆசைப் படுகிறேன். இது வரை இந்த அவார்டுகள் இந்த இருவருக்கும் சேரவில்லை என்று நம்பி கொடுக்கிறேன். இவர்கள் இருவருக்கும் கொடுக்கும் விருதுகளின் பெயர்கள் முறையே ! "Interesting Blog Award" AND "This Blogger Is My Best Friend"

இந்த இருவருக்கும் ஒரு வேண்டுகோள்!!

நீங்கள் எவ்வளவு பேருக்கு கொடுக்க ஆசைப் படுகிறீர்களோ அவ்வளவு பேருக்கும் கொடுக்க தடை ஏதும் இல்லை சகோதரர்களே!!
அதே போல் சிறந்த நட்புக்கான "This Blogger Is My Best Friend" விருது, எனது அன்புச் செல்லம் தோழி தாரிணிப்ரியா எனக்கு கொடுத்தது. விருதுக்கு நன்றி தாரிணி. மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதீத கனவுகளோடு தாரிணியுடன் கூட்டு சேர்ந்து எனது சமையல் கலையை உலகறிய பரப்ப வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த கனவுக்கு நல்ல ஆப்பு வச்சிட்டாங்க. ஏன்னா அலுவலகத்தில் ஆணி அதிகமாகிவிட்டது. அதனால் என்னோட சமையல் கலை திறமையை முழுவதுமாக வெளிப்படுத்த முடியவில்லை. அதுக்காக எனக்கு சமைக்கத் தெரியாது என்று சில எதிர் கட்சிகள் தவறுதலாக பிரச்சாரம் செய்வதாக அறிந்தேன். இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே :)

ஆனா மக்கா இவங்க சொல்றதை எல்லாம் நம்பாதீங்க. நான் ரொம்ப நல்லா சமைப்பேன். என்னோட சமையல் பாகம் நள மகராஜவோட கம்பேர் பண்ற அளவுக்கு பிரபலம். (என்ன செய்யறது யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க அதான் நானே சொல்லிக்கறேன்) அதுலே பாருங்க (இதெ V.K.ராமாசாமி ஸ்டைல்லே படிக்கவும்) நான் ஒரு தக்காளி சாம்பார் வைப்பேன், அதோட வாசனையை உணர்ந்தவர்கள் பனிரெண்டு இட்லி தின்பது உறுதிங்க.என்னோட சமயல் அருமை தெரிஞ்சிக்கோங்களேன் ப்ளீஸ்பா :))

சரி நம்ப மாட்டேங்கிராங்கப்பா! ம்ம் இதெல்லாம் கடந்து வந்து ஜெயிக்கணும் என்று ஒரு முடிவிற்கு வந்து விட்டேன். ஒரு நாள் நானே சமைச்சு எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொல்றவங்களை எல்லாம் வரிசையா உக்கார வச்சி சாப்பாடு போடபோறேன். :))


தாரிணி நன்றி, மறுபடியும் சமையல் அறையில் நான் ஒரு கலக்கு கலக்க விரைவில் வருகிறேன்!!!

அடுத்து ஏதாவது விருது கொடுத்தா அதோட சேர்த்து முடிப்பு ஏதாவது கொடுத்தீங்கன்னா எனக்கு உதவியா இருக்கும் :))

அதையும் போட்டோ எடுத்து ப்லாக்லே போட்டுக்கறேன் ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி...

விருது கொடுத்த அனைவருக்கும் நன்றிப்பா!!
உங்கள் ரம்யா........

19 comments :

அண்ணன் வணங்காமுடி said...

மீ தி பிரஸ்ட்

அண்ணன் வணங்காமுடி said...

ரெண்டு அவார்டுகள் வழங்கியதற்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

விருது பெற்ற தங்களுக்கும்


தங்களிடம் பெற்ற மற்றவர்களுக்கும்


வாழ்த்துகள்.

SK said...

யக்கோவ் நன்றி.. :-)

Raju said...

ரைட்டுங்கோவ்.

அ.மு.செய்யது said...

விருது பெற்றமைக்கும் உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் !!

வால்பையன் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

விருது பெற்ற அனைவருக்கும் நன்றி ரம்யா... என்னங்க ரொம்ப பிஸியா நம்ம கடை பக்கம் வரவில்லை...

குடந்தை அன்புமணி said...

வருது பெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்மு விருதை பெற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் விருது வழங்கப்பட்ட மற்றவருக்கும் என் வாழ்த்துக்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

விருது கொடுத்த அக்கா, மற்றும் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

வழிப்போக்கன் said...

வாழ்த்துகள் விருது பெற்றவர்களுக்கும் உங்களுக்கும்...

Thamira said...

அதுலே பாருங்க (இதெ V.K.ராமாசாமி ஸ்டைல்லே படிக்கவும்) நான் ஒரு தக்காளி சாம்பார் வைப்பேன், //

சிரிப்பை அடக்கமுடியவில்லை.. ஒரு நாள் சாம்பார் வெச்சுட்டு கூப்பிடுங்க, ஃபேமிலியோட ஒரு விஸிட் அடிச்சுடலாம்.

Unknown said...

ரம்யா அக்காவுக்கும்... தலைவர் வணங்காமுடி அவர்களுக்கும் , தோழர் குமாருக்கும் எம்பட வாழ்த்துக்கள்....!!

அப்துல்மாலிக் said...

ஒருபாடு விருது கிடைச்சிருக்கு

நல்லாயிருங்க மக்கா

வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரம்ஸ் விருது பெற்றமைக்கும் உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

//ஒரு நாள் நானே சமைச்சு எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொல்றவங்களை எல்லாம் வரிசையா உக்கார வச்சி சாப்பாடு போடபோறேன். :))//

அய்யோ சாமி.. நான் இல்லப்பா.

யாருப்பா சொன்னது, ரம்யா அக்காவுக்கு சமைக்க தெரியாதுன்னு. அப்பறம் என்ன நடக்கும்னு தெரியும்ல.

மந்திரன் said...

பாராட்டுகள்

kanagu said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள் அக்கா :))

/*ஒரு நாள் நானே சமைச்சு எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொல்றவங்களை எல்லாம் வரிசையா உக்கார வச்சி சாப்பாடு போடபோறேன். :))
*/

வலைப்பக்கம் வர்றது எல்லாம் ஒரு தப்பா!!!!!! :))))))

சுதந்திர தின வாழ்த்துக்கள் அக்கா :)