Monday, November 9, 2009

பிடித்தவர், ரொம்ப பிடித்தவர்..!

பிடித்தவர், ரொம்ப பிடித்தவர் என்ற தொடர் பதிவை தொடர அழைத்த வால்பையனுக்கு மிக்க ந‌ன்றி.

பிடித்தது பிடிக்காதது

பிடிக்காதது என்ற தெரிவில் எனது மனதில் இருப்பதைத்தான் எழுதினேன். எஸ்கேபிஸம் எல்லாம் உண்மையாகவே இல்லீங்க. இதுவரை எனக்கு பிடிக்காதது என்று எதுவுமே இருந்தது இல்லீங்க.

என்னைப் பிடிக்காதவங்களிடம் கூட நான் நட்போடுதான் பழகுவேன். (அவங்களுக்கு பிடிக்கலைன்னா நான் என்ன செய்ய எனக்கு பிடிக்குதே!) எல்லாவற்றையும் அதன் அதன் தனித்தன்மையோடு ரசிப்பேன். இதுவும் என்னோட பல குணங்களில் ஒன்றுதாங்க. என்னுடன் நெருங்கி பழகும் அனைவருக்கும் இந்த குணம் நன்கு தெரிந்த விஷயம்தான்.

நேர்மறையான அப்ரோச், இங்கே வாலின் தனித்தன்மை வெளிப்படுகிறது என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டுவிட்டார்கள். அது வால்பையனோட எண்ணங்கள். நான் பிடிக்காதது என்ற சொல்லை எப்படி மாற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வால்பையன் முந்திக் கொண்டு விட்டார்!

என்ன! ரம்யா ஓவரா புலம்புராளேன்னு பார்க்கறீங்களா? ச்சேச்சே! அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க என்னைப் பற்றி தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறேன் என்பதை மிகவும் அடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்.

நண்பர் வால்பையன் அழைத்த தலைப்பு மாற்றுக் கருத்துடைய தலைப்பு. அதனால்தான் இந்த தலைப்பை தனியாக எழுதுகிறேன்.


அரசியல் தலைவர்

பிடித்தவர்: C.N. அண்ணாதுரை
ரொம்ப பிடித்தவர்: கர்மவீரர் காமராஜ்

நடிகர்

பிடித்தவர்: ரஜனி, சூர்யா
ரொம்ப பிடித்தவர்: கமல்ஹாசன்

நடிகை

பிடித்தவர்: திரிஷா
ரொம்ப பிடித்தவர்: ஜோதிகா

பாடகர்
பிடித்தவர்: ஜேசுதாஸ்
ரொம்ப பிடித்தவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடகி

பிடித்தவர்: S.P.ஷைலஜா, சித்ரா, ஸ்வர்ணலதா
ரொம்ப பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா

இயக்குனர்

பிடித்தவர்: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்
ரொம்ப பிடித்தவர்: விசு, கிரேஸிமோகன்

போன முறை நண்பர் உள்குத்து, வெளிகுத்து மற்றும் கும்மாகுத்தா ஒரு கேள்வி கேட்டு இருந்தார் ("கிரேஸிமோகன் ஒரு இயக்குனரா சொல்லவே இல்லே") இந்த விளக்கம் அந்த நண்பருக்கு, அவர் யார் என்று படிக்கும்போது அவருக்கே தெரியும். கிரேஸிமோகனும் ஒரு இயக்குனர்தான். நாடகங்கள் எல்லாம் இவர் இயக்கவில்லையா நண்பரே! அந்த வழியில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாடக இயக்குனர், விளக்கம் எப்பூடி ?? நண்பரை மடக்கிட்டேனாமா இஃகிஃகி இஃகிஃகி)

கவிஞர்

பிடித்தவர்:கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும்.
ரொம்ப பிடித்தவர்: கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும்

இசைஅமைப்பாளர்

பிடித்தவர்: A.R. ரஹ்மான்
ரொம்ப பிடித்தவர்: இளையராஜா

எழுத்தாளர்

பிடித்தவர்: பாலகுமாரன்
ரொம்ப பிடித்தவர்: சுஜாதா

பேச்சாளர்

பிடித்தவர்: வை.கோபால்சாமி
ரொம்ப பிடித்தவர்: கலைஞர் கருணாநிதி அவர்கள்

டம்பிமேவி எழுதவில்லை என்பது இப்போதுதான் தெரியவந்தது.

அதனால் இத்தொடரை தொடர டம்பிமேவியை அழைக்கிறேன் மொத்தல்லேயே அழைக்காமல் விட்டுப் போனதிற்கு என்னை மன்னிக்க.

தொடரை விரைவில் எதிர் பார்க்கும் ரம்யா.....



33 comments :

கலகலப்ரியா said...

kalakkal ponga..!! pudichirukku... romba pudichirukkunga.. =)

பழமைபேசி said...

இஃகிஃகி இஃகிஃகி

Prabhu said...

அப்பா... எங்க பார்த்தாலும் இதே தானா :)

மணிநரேன் said...

;)

பித்தனின் வாக்கு said...

// பிடித்தவர்:கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும்.
ரொம்ப பிடித்தவர்: கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும் //
எனக்கும் கண்ணதாசன், யேசுதாஸ், பாலகுமாரன் பிடிக்கும் நன்றி ரம்யா.

Romeoboy said...

கிரேசி மோகன் இயக்குனர் விளக்கம் எல்லாம் சரி அது என்ன இஃகிஃகி இஃகிஃகி??? இதற்கு கண்டிப்பாக எனக்கு விளக்கம் தெரியனும் ..

ராமலக்ஷ்மி said...

இந்த அப்ரோச் பிடித்திருக்கு.
ரொம்பப் பிடித்திருக்கு:)!

பீர் | Peer said...

இது சூப்பர் :)

R.Gopi said...

ரம்யா...

உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு.... இல்ல இல்ல....ரெம்ப பிடிச்சுருக்கு...

பதிவில் இருக்கிற பெயர்கள் எல்லாம் "பெரிய தலைகள்"....

வாழ்த்துக்கள் ரம்யா....

அப்புறம் கடைசியா அந்த இஃகிஃகி..இஃகிஃகி மேட்டர் எங்கிட்ட மட்டும் சொல்லுங்க...

மேவி... said...

naan innum eluthavillai..

yaarachu tag pannuvanga nnu waiting

ஆ.ஞானசேகரன் said...

எல்லாமே புடிச்சிருக்கு... ரம்யாவின் தனிதன்மையுடன் இருப்பது சிறப்பு... பாராட்டுகள் ரம்யா

S.A. நவாஸுதீன் said...

தலைப்பையே மாத்தியாச்சா அதுசரி

S.A. நவாஸுதீன் said...

//(அவங்களுக்கு பிடிக்கலைன்னா நான் என்ன செய்ய எனக்கு பிடிக்குதே!)//

ஆகா சூப்பர்

S.A. நவாஸுதீன் said...

//பிடித்தவர்:கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும்.

ரொம்ப பிடித்தவர்: கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும்//

குட் ஆன்சர்

SUFFIX said...

இதுல பார்ட் 2 வேறு இருக்கா...

SUFFIX said...

//என்னைப் பிடிக்காதவங்களிடம் கூட நான் நட்போடுதான் பழகுவேன்.//

இது ரொம்ப பிடிச்சு இருக்குங்க‌.

Thamira said...

ஒரே தொடரை ரெண்டு தடவை எழுதி என் சாதனையை சமன்செய்த ரம்யாவை கண்டித்து..

அப்படியே பதிவு நல்லாயிருக்குதுன்னு சொல்லிக்கிறேன்.

Jaleela Kamal said...

ஆஹா இதுல இரண்டு பார்டா

ரொம்ப அருமையான பதில்கள்

இது சூப்பர்

அ.மு.செய்யது said...

அடுத்த ஹாட்ரிக் பதிவு எப்போ ???

Princess said...

wow.. nice selections..
Kamal fan! yay.. naanum than..

-Padhumai.

க.பாலாசி said...

பிடித்த ரொம்ப பிடித்த பட்டியல் நன்னாயிருக்கு போங்கோ...

வால்பையன் said...

அருமை!

//pudichirukku... romba pudichirukkunga.. =)//

இந்த பின்னூட்டமும் அருமை!

सुREஷ் कुMAர் said...

அடுத்ததும் போட்டாச்சா.. வாழ்த்துக்கள்..

सुREஷ் कुMAர் said...

//
என்னைப் பிடிக்காதவங்களிடம் கூட நான் நட்போடுதான் பழகுவேன். (அவங்களுக்கு பிடிக்கலைன்னா நான் என்ன செய்ய எனக்கு பிடிக்குதே!)
//
ஆனாலும் நீங்க நெம்ப நல்லவங்க ரம்யாக்கா..

सुREஷ் कुMAர் said...

//
இதுவரை எனக்கு பிடிக்காதது என்று எதுவுமே இருந்தது இல்லீங்க.
//
விரைவில் ஒன்னு இருக்கும்.. எதிர்பாருங்க..

Anonymous said...

என்ன! ரம்யா ஓவரா புலம்புராளேன்னு பார்க்கறீங்களா? ச்சேச்சே! அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க என்னைப் பற்றி தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறேன் என்பதை மிகவும் அடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்.


ஹிஹிஹி புரிஞ்சா சரி புலம்பறீங்கன்னு....

Anonymous said...

பிடித்தது பிடிக்காதது
பிடிக்காதது என்ற தெரிவில் எனது மனதில் இருப்பதைத்தான் எழுதினேன். எஸ்கேபிஸம் எல்லாம் உண்மையாகவே இல்லீங்க. இதுவரை எனக்கு பிடிக்காதது என்று எதுவுமே இருந்தது இல்லீங்க.


அட அப்ப என்னையும் பிடிக்குமா? செல்லம்..

Anonymous said...

அந்த வழியில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாடக இயக்குனர், விளக்கம் எப்பூடி ?? நண்பரை மடக்கிட்டேனாமா இஃகிஃகி இஃகிஃகி)


அதனா ரம்யாகிட்ட வம்பு பண்ணா இப்படி தான் மடக்கிபூடுவாங்க...

மணிஜி said...

நல்லா எழுதியிருக்கீங்க ரம்யா..

நசரேயன் said...

//போன முறை நண்பர் உள்குத்து, வெளிகுத்து மற்றும் கும்மாகுத்தா ஒரு கேள்வி கேட்டு இருந்தார் ("கிரேஸிமோகன் ஒரு இயக்குனரா சொல்லவே இல்லே") இந்த விளக்கம் அந்த நண்பருக்கு, அவர் யார் என்று படிக்கும்போது அவருக்கே தெரியும். கிரேஸிமோகனும் ஒரு இயக்குனர்தான். நாடகங்கள் எல்லாம் இவர் இயக்கவில்லையா நண்பரே! அந்த வழியில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாடக இயக்குனர், விளக்கம் எப்பூடி ?? நண்பரை மடக்கிட்டேனாமா//

யாரு "ரம்" யா அந்த கருப்பு ஆடு ?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இது நல்லாருக்கு .

kanagu said...

nalla irundhudu akka :) :)

RAMYA said...

கருத்துத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள் பல!

நன்றி கலகலப்ரியா
நன்றி பழமைபேசி
நன்றி pappu
நன்றி மணிநரேன் நன்றி
நன்றி பித்தனின் வாக்கு
நன்றி Romeoboy
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி பீர் | Peer said...
நன்றி R.Gopi
நன்றி டம்பி மேவீ
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி S.A. நவாஸுதீன் ...
நன்றி ஷ‌ஃபிக்ஸ்/Suffix
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி Jaleela
நன்றி அ.மு.செய்யது
நன்றி Princess
நன்றி வால்பையன்
நன்றி सुREஷ் कुMAர்
நன்றி தமிழரசி
நன்றி தண்டோரா
நன்றி SanjaiGandhi™
நன்றி நசரேயன்
நன்றி ஸ்ரீ
நன்றி Kanagu