ரொம்ப பிடித்தவர்: சுஜாதா
அதனால் இத்தொடரை தொடர டம்பிமேவியை அழைக்கிறேன் மொத்தல்லேயே அழைக்காமல் விட்டுப் போனதிற்கு என்னை மன்னிக்க.
தொடரை விரைவில் எதிர் பார்க்கும் ரம்யா.....
பிடித்தவர்:கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும்.
பிடிக்காதவர்: எல்லோர் கிட்டேயும் ஒரு தனித்திறமை இருக்குதுங்க. அதனால் பிடிக்காதுன்னு சொல்ல முடியாது.
இசைஅமைப்பாளர்
பிடித்தவர்: இளையராஜா
பிடிக்காதவர்: அப்படி யாரும் இல்லீங்க
எழுத்தாளர்
பிடித்தவர்: சுஜாதா
பிடிக்காதவர்: எல்லாரோடதும் படிப்பேன். அதனால் பிடிக்கலை என்பதிற்கு பேச்சே இல்லே
பேச்சாளர்
பிடித்தவர்: கலைஞர் கருணாநிதி அவர்கள்
பிடிக்காதவர்: எஸ்.எஸ்.சந்திரன் (மேடையில் பேச்சு தர்மம் மீறி ரொம்ப கேவலமா பேசுவாரு)
பதிவினை தொடர நான் அழைப்பது !
இருவரை அழைக்க விரும்புகிறேன். இவர்கள் இருவரும் எழுதி இருக்க மாட்டார்கள் என்று நம்பி அழைத்துள்ளேன். என் அழைப்பை ஏற்று எழுதுவீர்களா மக்கா?
சினிமா அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள என்னைய அழைத்ததிற்கு மிக்க நன்றி. இந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏற்கனவே என்னை அழைத்த அமிர்தவர்ஷிணி அம்மாவிற்கும், இப்போ அழைத்த குமார் அவர்களுக்கும் மிக்க நன்றி. என்னை நம்பி அழைத்து விட்டீர்கள் இதோ என் பதில்கள்
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரமபித்திர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்திர்கள்?
எங்கள் வீட்டில் சினிமாவிற்கு அழைத்து செல்வது என்பது மிகவும் அபூர்வம். யாரும் அழைத்து செல்லமாட்டார்கள். ஆனால் அடித்தது ஒரு பம்பர் பரிசு, எனது 11 வது வயதில் முதல் முதல் சினிமாவிற்கு அழைத்து செல்வதாக எனது அத்தை கூறினார்கள். அவ்வளவுதான், மனதிற்குள் மத்தாப்பு தான். நான் சினிமாவிற்கு போவதை சொல்லாத ஆளே இல்லை என்று தான் கூறவேண்டும். தாரே, தப்பட்டை எல்லாம் அடித்து விட்டு கிளம்பி விட்டேன். அங்கே போனால் தியட்டரில் கந்தன் கருணை. அடுத்த நாள் நண்பிகள் ஒரே கலாட்ட பண்ணி விட்டார்கள். அவர்கள் லிஸ்டில் இதெல்லாம் ஒரு படமே அல்ல. ஆனால் எனக்கு சினிமா பார்த்தது சந்தோஷமா இருந்தாலும், எல்லாரும் கிண்டல் செய்தது மனதிற்குள் வேதனையாக இருந்தது. இன்றும் அது பசுமையாக இருக்கிறது.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா ?
பொய் சொல்ல போறோம். எந்த வித ஆபாசம் இல்லாமல் ரசிக்க, சிந்திக்க வைத்த படம். நிலம் வாங்குவதில் எவ்வளவு சிக்கல் வரும் என்பதிற்கு நல்ல அறிவுரையாக மனதிற்கு பட்டது.
3. கடைசியாக அரங்கிலின்றி பார்த்த தமிழ் படம் எது? எங்கே, என்ன உணர்ந்திர்கள்?
வீட்டில் DVD இல் "காசேதான் கடவுளடா" இது போல் காமெடி கலந்த எந்த படமானாலும் நாங்க விடமாட்டோம். அருமையான நகைச்சுவை கலந்த படம் கண்களுக்கும், செவிக்கும் விருந்தான படம். எவ்வளவு தடவை பார்த்தாலும் திகட்டாது.
4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா
சொல்லவா அதை சொல்லவா, ஏகன். அந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாதுங்க. 6 பேர் சேர்ந்து அந்த படம் போனோம். வேலை அதிகமா இருந்ததாலே ஒரு மன மாற்றத்திற்காக போனோம். ஆஹா அஹகா மனமா மாறியது? சித்தம் கலங்கியது. அடுத்த நாள் நானே சென்று மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்ந்து விடுவேனோ என்று ஒரே பயமாக இருந்தது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மொத்தம் ஒரு ஐம்பது பேர் தான் படம் பார்த்து இருப்பார்கள். இரண்டாவது scene முடிந்தவுடன் எழுந்து வந்துவிடலாம் என்றால் உடன் வந்தவர்கள் என்னை எரித்து விடுவது போல் பார்த்ததால். படம் முழுவதும் பார்த்த அனுபவம் மறக்க முடியாது. தெய்வமே மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? ஏன் இந்த கொடுமை? நல்ல தரமான கதைகள் இல்லையா? ஒருவருக்குமே மதிப்பு இல்லை, உயரிருக்கு மதிப்பு இல்லை, முடிவா தெளிவா சொன்னால் எதற்குமே மதிப்பு இல்லாமல் நாம் எங்கோ பொய் கொண்டுள்ளோம்.
மற்றபடி என்னை பாதித்த சினிமா சிலநேரங்களில் சில மனிதர்கள், நாயகன், குணா.
6. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா - அரசியல் சம்பவம்
நம்ம சிரிப்பு நடிகர் வடிவேலுவின் அரசியல் பிரவேசம், தாக்குதல்கள். தடால் அறிக்கைகள். அவ்வளவேதான்.
7. தமிழ் சினிமா பற்றி வாசிப்பது உண்டா?
காலேஜ் படிக்கும்போது எல்லாம் சினிமா பற்றி படிக்க பிடிக்கும். கிசுகிசு எனக்கு தான் எப்போதும் முதல் இடம் அவ்வளவு GK உண்டு. வேலையில் சேர்ந்த பிறகு அதெல்லாம் இல்லை. சினிமா சம்பந்த பட்ட பத்திரிக்கைகள் கூட படிப்பது இல்லை.
8. தமிழ் சினிமா இசை
எனக்கு பாட்டு ரொம்ப இஷ்டம் எனது 9 வயதில் வீணை அரங்கேற்றம் எல்லாம் முடிந்தது, எனக்கு கர்நாடக சங்கீதம் என்றால் ரொம்ப பிடிக்கும். MLV, jesudoss இவர்கள் பாட்டு என்றால் உயிர்.
9. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பது உண்டா?அதிகம் தாக்கிய படங்கள்?
நான் தெலுங்கு படம் பார்ப்பேன். அதில் என்னை மிகவும் பாதித்த படம் மரோ சரித்ரா, நியாயம் காவாலி இந்த இரண்டும். ஆங்கில படம், ஹிந்தி படம் பார்ப்பேன். பாதிக்கிற அளவிற்கு கவனம் செலுத்தமாட்டேன். போவேன் வருவேன் அவ்வளவுதான்.
10. தமிழ் சினிமாவுடன் நேரடி தொடர்பு உண்டா ? என்ன செய்திர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்விர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?
ஆமாங்க நம் பத்மஸ்ரீ கமலகாசனுடன் அடுத்த பட பூஜைக்கு பேச்சு வார்த்தை நடந்து கொண்டு உள்ளது. அந்த படத்திற்கு கதை, திரைகதை, வசனம், மற்றும் என்னவல்லாம் தேவையோ அவை அனைத்தையும் கமல் பெரியமனது செய்து எனக்கு வாரி வழங்கிவிட்டார். நானும் சரியான முறையில் கேட்ச் பிடித்து பூஜைக்கு ரெடியாகி கொண்டிருக்கிறேன். இரண்டாவது ஜாக்க்பட் என்னவென்றால் நம்ம அஜித்திற்கு, வில்லன் படம் தொடர்ந்து சரியான charector அமையவில்லையாம். அதனால் கோலிவுட்டில் இருந்து இடைவிடாது தொலை பேசி தொல்லை பேசியாக மாறி உள்ளது. நான் ஓர் ஆள் என்ன செய்வது? அதனால் நம்ம குடுகுடுப்பையாரையும், ஜீவன் சாரையும், அமித்து அம்மாவையும் துணையாக அழைக்கலாமா என்று யோசிக்கிறேன். இது எப்படி இருக்கு?
11. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறிர்கள்?
ஏதோ அப்ப அப்ப ஒரு சில நல்ல படம் நமக்கு கிடைக்குதுங்கோ. தமிழ் நாட்டின் சாபக்கேடு என்னவென்றால் தரமான படம் அடிக்கடி நம்மை வந்து அடைவதில்லைங்கோ. அதனால் நம்ம வலை பூ நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம். என்ன என் யோசனை சரிதானே? குடுகுடுப்பையார் கதை வசனம், ஜீவன் திரைகதை வசனம், அம்மிது அம்மா music, ஒளிப்பதிவு நம்ம உருப்படாத அணிமா அவர்கள் மற்ற வேலைகள் யாருக்கு விருப்பமோ அவர்கள் பிரித்து எடுத்துகொள்வோம். சரியா? இவைகளை நான் கூறிய திட்டப்படி நடத்தினால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் நல்ல சிறப்பா மேலோங்கி ஒரு சொர்க்க பூமியாக மாற வாய்ப்பு கண்டிப்பாக உண்டு . அப்போதான் ஜவுளி வியாபாரம் பிச்சிகிட்டு போகும்.நமக்கும் சம்திங் தருவதாக துணிக்கடை முதலாளிங்க ERODE ( இரோட்டில்) இருந்து தொலைபேசியில் விடாது அழைப்பு விடுக்கிறார்கள், தைரியமும் அளிக்கிறார்கள். என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கோ.
பின் குறிப்பு: முக்கியமா நடிகர் மற்றும் நடிகைகளை தேர்ந்து எடுப்பதில் ஒரு கூட்டு முயற்சி இருந்தால் நாம் எடுக்கும் படம் தரமானதாக் இருக்கும் என்பது ஒரு சிறு பின் குறிப்பு.
12. அடுத்த ஓராண்டு தமிழ் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய செய்திகள் எதுவுமே பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட உஊடகங்களில் கிடையாது என்று வைத்து கொள்வோம் ? உங்களுக்கு எப்படி இருக்கும். தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறிர்கள்?
சினிமா வைத்து பெரிதாக திட்டம் போட்டவர்கள் எல்லாம் காலி. அவர்களின் சினிமா சார்ந்த அரசியல் வேலைகள் பாதிக்கப்படும். பத்திரிக்கைகள் வயலும் வாழ்வை பற்றி சிந்திக்கலாம். அதனால் அரசாங்கத்திடம் சென்று விளை நிலம், வீட்டு மனையாக ஆக மாறுவதை தடுக்க மக்கள் முயல வாய்ப்பு கண்டிப்பாக உண்டு என்று நினைக்கிறேன். விளைச்சல் பெருகினால் மத்தியதர மற்றும் எல்லா வித மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களின் விலை கட்டுப்படுத்த முடியும், நாட்டில் செழிப்பு ஓங்கும். மறுபடியும் பொற்காலம் மலர வாய்ப்பு கண்டிப்பாக உண்டு. ஏன் என்றால் மக்கள் தம்மை பற்றி சிந்திக்க அதிக நேரம் கிடைக்கும். இது வலிய வரும் ஒரு நாள் முதல்வர் போல் கிடைக்கும் வாய்ப்பு. என்ன தான் TV இருந்தாலும் நான் மேற் கூறியவைகள் கண்டிப்பாக நிகழ வாய்ப்பு உள்ளது. அதனால் இதை நடை முறை படுத்தினால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்கள். வசந்த காலம் மக்களை வந்து அடைய நிறைய வைப்புக்கள் உண்டு.
புலம்பல்கள்: ஏதோ எழுதி உள்ளேன். தவறாக இருந்தால் பெரிய மனது பண்ணி ஏற்றுகொள்ளுங்கள். (ஹி, ஹி, ஹி, ஹி)
நான் அழைப்பது யாரை? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ராப்
கயல்விழி