Wednesday, November 11, 2009

ரம்யாவின் நூறாவது இடுகை நிறைவு!!

நூறைத் தாண்டிய இடுகை நண்பர்களே!!





நண்பர்களே உங்களுக்கு கேக்கு வச்சிருக்கேன் எடுத்துக்கோங்க!





என் இதயப் பூக்களை உங்களுக்கு சமர்பிக்கிறேன் நண்பர்களே!!



மகிழ்ச்சியின் உச்சம் உங்களுக்கு நான் அளிக்கும் இந்த பூங்கொத்து!!


என்னுடன் சேர்ந்து அவங்களும் உங்களுக்கு நன்றி சொல்கிறார்கள்!!

எழுத ஆரம்பித்து நூறைத் தாண்டிவிட்டது "Will To Live". இது நிஜமா... இல்லே இது நிஜம்தானா... என்ற கேள்விக்கு பதில் கிடைக்க ஒரு வேள்வியையே நிகழ்த்தி விட்டேன் எந்தன் மனதிற்குள்ளே.

எழுதப்பட்ட இடுகைகள் எனக்கு மன நிறைவை கொடுத்ததா என்று பல முறை என்னையே கேட்டுக் கொள்கிறேன்! கேள்விக் குறியாகவே இன்னும் நிற்கின்றேன்.

நூறை தொடுவதற்கு உதவியது யாரு? எல்லாம் நீங்கள்தான். என்ன யோசிக்கறீங்க? நான் உண்மையைத்தான் சொல்கிறேன்!

எனக்கு பின்னூட்டம் என்ற ஊக்க மருந்தை ஊட்டி ஊட்டி வளர்த்தீர்களே! அதைத்தான் சொல்கிறேன்.

என்னை உங்களின் பாசம் என்ற நேசக் கயிற்றால் இழுத்து வந்து நூறைத் தொட வைத்தீர்களே அதைத்தான் கூறுகிறேன்!

எத்துனை நட்புகள் எத்துனை உறவுகள், எத்துனை பந்தங்கள், இவைகள் எல்லாம் எங்கே சாத்தியம்? எங்கேயும் கிடைக்காது!

நான் மேலே கூறிய பொக்கிஷங்கள் அனைத்தும் எனக்கு கிடைத்தது இந்த வலையுலகில்தான்.

வலைபூக்களின் வாடாமலர்களான் நீங்கள் அனைவரும் என்னுடன் இருக்கும் வரை எனது வலையும் வாடாமலராக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நினைக்கவே ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது. திரும்பி பார்ப்பதற்குள் நூறைத் தாண்டிவிட்டது "Will To Live" என்ற உண்மை.

பத்திரைமாத்து சொக்கத்தங்ககளான நீங்கள் கொடுத்த ஊக்கம்தான் என்னால் இது சாத்தியப் படுத்த முடிந்தது. சாதிக்கவில்லை ஆனால் நூறைத் தாண்டிவிட்டேன். அதை நினைக்கையில் மனதிற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த என் மகிழ்ச்சிக்கு காரணனமான உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி நண்பர்களே! மிக்க நன்றி!




103 comments :

Anonymous said...

ரம்யா.. வாழ்த்துக்கள்!! இப்படியே நூறு நூறுன்னு போய்ட்டே இருங்க :))

ஸ்ரீ.கிருஷ்ணா said...

all the best for ur century and advance wishes for double century..

தருமி said...

வாழ்த்துக்கள்

வளர்க .......

Prabhu said...

இன்னும் நூத்துக்கணக்குல எழுதுங்க. இவ்ளோ நாள் தாங்கிட்டோம். இனியும் தாங்குவோம்!

SK said...

yakka, Soper.

adichu aadunga :-)

kanagu said...

vaazthukkal akka :) migavum magizhchiyaaka irukku :) :)

innum niraya ezhuthavum :)

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள்

velji said...

congrats!

அப்பாவி முரு said...

//என் மகிழ்ச்சிக்கு காரணனமான உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி நண்பர்களே! மிக்க நன்றி!//

காரணம் என்ன காரணனமாகிக் கிடக்கு. எங்களை கிண்(ன)டல் பண்ணுறீங்களா?

:)

பித்தனின் வாக்கு said...

நூறாவது பதிவை இடும் என் தோழி ரம்யாவிற்கு வாழ்த்துக்கள். தங்களின் எழுத்துப் பயணம் தொடரவும், எல்லையற்ற ஸ்ந்தோசங்களும் நட்புகளும் தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். வாழ்க, வளர்க. நன்றி.

பித்தனின் வாக்கு said...

நூறு போட்டாச்சா, அது எப்பிடி எவ்வளவு கடிச்சாலும் வலிக்காம கடிக்கின்றீர்கள். இம்ம் நூறு தாங்கின எங்களுக்கு ஆயிரம் எல்லாம் பொருட்டா. ஆயிரம் ஆயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள். நன்றி ரம்யா.

சீமாச்சு.. said...

வாழ்த்துக்கள் ரம்யா அக்கா...
இன்னும் பல நூறைத் தொடுங்கள்ள்

அன்புடன்
சீமாச்சு

ராமலக்ஷ்மி said...

இன்னும் பல சதங்கள் காண என் அன்பான வாழ்த்துக்கள் ரம்யா!

பிரபாகர் said...

வாழ்த்துக்கள் ரம்யா! இன்னும் நிறைய எழுதுங்கள்... இருநூறில் விரைவில் பின்னூட்டமிட வேண்டும்.

பிரபாகர்.

Anonymous said...

நூறை தாண்டிய நூதனமே!!! வாழ்த்துக்கள் உன் பதிவுகள் மட்டுமல்ல நீயும் நூறு வளங்களை கண்டு வயது நூறு தாண்டி வாழ வாழ்த்துக்கள் ............

Anonymous said...

pappu said...
இன்னும் நூத்துக்கணக்குல எழுதுங்க. இவ்ளோ நாள் தாங்கிட்டோம். இனியும் தாங்குவோம்!

அதானா....தாங்குவோம்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

Anonymous said...

பித்தனின் வாக்கு said...
நூறு போட்டாச்சா, அது எப்பிடி எவ்வளவு கடிச்சாலும் வலிக்காம கடிக்கின்றீர்கள். இம்ம் நூறு தாங்கின எங்களுக்கு ஆயிரம் எல்லாம் பொருட்டா. ஆயிரம் ஆயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள். நன்றி ரம்யா.

அட நீங்க வேற வலிக்கலைன்னு யாரு சொன்ன? வலிக்குது ஆனால் சொல்லிகிறதில்லை..ஹிஹிஹி ஹைய்யோ ரம்யா அடிக்க வராங்க காப்பாத்துங்க......

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் அக்கா..!!!

R.Gopi said...

100

வாழ்த்துக்கள் ரம்யா...

நீங்கள் மேலும் இது போன்று பல சதங்கள் அடிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்... நாங்க அவ்ளோ நல்லவிய்ங்க....

மணிஜி said...

வாழ்த்துக்கள் ரம்யா..

Ungalranga said...

ரம்யாம்மா,

இப்போ அடிச்சிருக்க செஞ்சுரி,
நாளைக்கு உன்னை பத்தி பேசும் ஹிஸ்டரி,
நல்ல நட்புகள் கிடைக்கிறது பெரிய மிஸ்டரி,
வரும் காலம் முழுக்க நீ வாழணும்..
Happilly,,Happilly,,Hapilly..!!!

அண்ணன் வணங்காமுடி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் ரம்யா.

நூறு நூற்றின் மடங்குகளாக மாறட்டும்.

க.பாலாசி said...

//நூறை தொடுவதற்கு உதவியது யாரு? எல்லாம் நீங்கள்தான். என்ன யோசிக்கறீங்க? நான் உண்மையைத்தான் சொல்கிறேன்!

எனக்கு பின்னூட்டம் என்ற ஊக்க மருந்தை ஊட்டி ஊட்டி வளர்த்தீர்களே! அதைத்தான் சொல்கிறேன். //

ம்ம்ம்ம்........

வாழ்த்துக்கள்....தொடருங்கள்....

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் ரம்யா!! இன்னும் பல நூறு தொட வாழ்த்துகள் ! கேக் சூப்பர்! :))

சந்தனமுல்லை said...

எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது - தங்களை பற்றியும், எங்களை மிகவும் பாதித்த உங்களது ஒரு இடுகையையும் எங்கள் மதிய உணவு இடைவேளையில் பேசிக்கொண்டது!! :)) இன்னும் பலமைல் தூரங்களை கடக்க வாழ்த்துகிறேன் - ரம்யா!

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் ரம்யா.. இந்த நூறு பத்து நூறாகட்டும்..!

இப்படிக்கு
ஒரு சொக்கத் தங்கம்..!

பித்தன் said...

ரம்யா.. வாழ்த்துக்கள்!! இப்படியே நூறு நூறுன்னு போயிட்டே இருங்கள்.........................

Still Lot more to come

கலகலப்ரியா said...

vazhththukkal... ramya...!

SUFFIX said...

இன்னும் பல நூறு தந்து வரலாற்றில் இடம்பெற வாழ்த்துக்கள் ரம்யா:):)

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் தங்கச்சி ...

எல்லாம் வல்ல இறையருளால், மேன் மேலும் நிறைய இடுகைகள் தந்து, பல நூறு பின்னூட்டங்களும் பெற வாழ்த்துகிறேன்.

Princess said...

வாழ்த்துக்கள்
இன்னும் நிரைய எழுதுங்க

-பதுமை.

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள் ரம்யா, நூறு வயதில் நூறாவது இடுகை. மேலும் ஆயிரம் இடுகை இட விழைகிறேன்

pudugaithendral said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரம்யா

ரவி said...

voted. my wishes....

துபாய் ராஜா said...

நூறாவது பதிவிற்கும்,இன்னும் பதிவுகள் ஆயிரம் எழுதிடவும் வாழ்த்துக்கள்...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் ரம்யா!

இன்னும் பல இடுகைகளை விதைத்து(பதிவு செய்து) வலையுலகத்தை வனப்பாக்க வேண்டுகிறேன்!

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் :)

தமிழ் அமுதன் said...

சதம் கண்ட சாதனை நாயகிக்கு வாழ்த்துக்கள் ...!

இன்னும் ..இன்னும் ...! எழுதுங்க ...!

தமிழ் said...

வாழ்த்துகள்

blogpaandi said...

All the best

வால்பையன் said...

சதமடித்த இணைய சச்சின் ரம்யாவுக்கு வாழ்த்துக்கள்!

டவுசர் பாண்டி said...

யக்கா !! எப்பிடி கீரீங்கோ !! நல்லா கீரீங்களா ?

100 -வது பதிவ பாக்க சொல்லவே நீங்க நாளா தான் கீரீங்கோ இன்னு தெரியுது !!

வாழ்த்துக்கள் யக்கா !!

அதே மேரி நீங்க மொத மொதல்ல குடுத்த ஊக்கம் தான் என்னையும் 50 - பதிவு போட வெச்சிக் கீது !!

அதுக்கு ரொம்ப நன்றி யக்கா !!

முடிஞ்சா நம்ப ஏரியா பக்கம்
வாங்க !!

நீங்க உன்னும் நெரியோ பதிவு எழ்த் வாழ்த்துக்கள் !!

தினேஷ் said...

யக்கோவ் சபாசுக்கோ..

Anonymous said...

செஞ்ஜுரி அடிச்சாச்சு! வாழ்த்துகள்!!!!!!!!!

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் ரம்யா...

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் ரம்யா!!
இன்னும் பல நூறு தொட வாழ்த்துகள் !

வெண்ணிற இரவுகள்....! said...

சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள்

ராசு said...

All the best

Raju

http://surakovai.blogspot.com

வரதராஜலு .பூ said...

Congrats for 100. Keep it up & keep going on !!!.

லெமூரியன்... said...

சதமடித்த ரம்யாவுக்கு எங்கள் தொப்பிகளைத் தாழ்த்துகிறோம்....!

Hats Off 2 u'nu soldromga! :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

பிரியமுள்ள ரம்யா அக்காவிற்கு வாழ்த்துகள்.. :-)))))))))))))

கடைக்குட்டி said...

வாழ்த்துக்கள் :-)

Rajasurian said...

//மகிழ்ச்சியின் உச்சம் உங்களுக்கு நான் அளிக்கும் இந்த பூங்கொத்து!! //

இதுபோல் அடுத்தடுத்து உச்சம் அடையவும் இன்னும் பல பூங்கொத்து எங்களுக்கு அளித்து மகிழவும் என் வாழ்த்துக்கள்

vanila said...

வாழ்த்துக்கள் ரம்யா.

vanila said...

வாழ்த்துக்கள் ரம்யா ஜி..

நூறாவது பதிவிலிருந்து தொடங்குகிறேன்.. நாளைக்குள் எல்லாவற்றையும் படித்து முடித்திருப்பேன். Keep Going.

सुREஷ் कुMAர் said...

ஹை.. உங்களின் வயதை போலவே இடுகை எண்ணிக்கையிலும் 100' ஐக்கடந்தமைக்கு வாழ்த்துக்கள் அக்கா..

सुREஷ் कुMAர் said...

//
என் இதயப் பூக்களை உங்களுக்கு சமர்பிக்கிறேன்
//
"இதயப்பூக்கள்" இயற்கை விஜியோடது ஆச்சே.. நீங்கபாட்டுக்கும் எங்களுக்கு கொடுக்குறிங்க..

सुREஷ் कुMAர் said...

//
என்ற கேள்விக்கு பதில் கிடைக்க ஒரு வேள்வியையே நிகழ்த்தி விட்டேன் எந்தன் மனதிற்குள்ளே.
//
தீஞ்சவாடை வந்தப்போவே நெனச்சேன்.. இதுதான் காரணமா..

सुREஷ் कुMAர் said...

//
எனக்கு பின்னூட்டம் என்ற ஊக்க மருந்தை ஊட்டி ஊட்டி வளர்த்தீர்களே!
//
ஊக்கமருந்த தின்னு தின்னு பிராய்ளர் கோழி மாதிரி நிக்கக்கூட சத்து இல்லாம இருக்கிங்களா..

நாட்டுகோழி மாதிரி தெம்பா இருந்து உங்கள் எழுத்த படிக்கிறவங்களுக்கும் தெம்பு தர்ரிங்களா..

सुREஷ் कुMAர் said...

//
நினைக்கவே ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது. திரும்பி பார்ப்பதற்குள் நூறைத் தாண்டிவிட்டது "Will To Live" என்ற உண்மை.
//
அவ்ளோ ஸ்லோமோஷன்லையா திரும்பிபாத்திங்க..

सुREஷ் कुMAர் said...

உங்களின் அன்பிற்கு மீண்டுமொருமுறை நன்றிகளும் வாழ்த்துக்களும் அக்கா..

suvaiyaana suvai said...

வாழ்த்துக்கள் ரம்யா!!
இன்னும் பல நூறு தொட வாழ்த்துகள்

gayathri said...

நூறாவது பதிவை இடும் என் தோழி ரம்யாவிற்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள்

ஜெட்லி... said...

வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் ரம்யா....

அ.மு.செய்யது said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரம்யா !!!

இன்னும் நீங்க நிறைய எழுதணும்....அவ்ளோ தான

Rajalakshmi Pakkirisamy said...

வாழ்த்துகள் ரம்யா....

பெசொவி said...

(பதிவு)நூற்றுக்கு (மதிப்பெண்)நூறு
வாழ்த்துகள்!

பட்டாம்பூச்சி said...

வாழ்த்துக்கள்!!

Romeoboy said...

வாழ்த்துக்கள் .. இன்னும் நிறைய எழுதுங்க ..

ரோஸ்விக் said...

வாழ்த்துகள் ரம்யா...

RAMYA said...

வந்து வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்.

நன்றி mayil
நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா
நன்றி தருமி
நன்றி pappu
நன்றி SK
நன்றி kanagu
நன்றி பாலராஜன்கீதா
நன்றி velji
நன்றி அப்பாவி முரு நன்றி பித்தனின் வாக்கு
நன்றி Seemachu(அக்காவா
அவ்வ்வ்வவ்வ்வ் இருக்கட்டும் இருக்கட்டும் :)

நன்றி ராமலக்ஷ்மி
நன்றி பிரபாகர்
நன்றி தமிழரசி
நன்றி கார்க்கி
நன்றி R.Gopi
நன்றி தண்டோரா
நன்றி ரங்கன்
நன்றி அண்ணன் வணங்காமுடி
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி க.பாலாசி

RAMYA said...

//
சந்தனமுல்லை said...
வாழ்த்துகள் ரம்யா!! இன்னும் பல நூறு தொட வாழ்த்துகள் ! கேக் சூப்பர்! :))
//

நன்றி முல்லை, கேக்கு உங்களுக்குத்தான் சாப்பிட்டீங்களா நல்ல இருந்ததா :)

RAMYA said...

//
சந்தனமுல்லை said...
எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது -தங்களை பற்றியும், எங்களை மிகவும் பாதித்த உங்களது ஒரு இடுகையையும் எங்கள் மதிய உணவு இடைவேளையில் பேசிக்கொண்டது!! :)) இன்னும் பலமைல் தூரங்களை கடக்க வாழ்த்துகிறேன் - ரம்யா!
//

நன்றி முல்லை இதுபோல் என்னை வாழ்த்துபவர்கள் என்னை சுற்றி இருக்கும் வரை நான் மிகவும் நல்லா இருப்பேன்.

உங்கள் அனைவரின் அன்பில் நெகிழ்ந்து விட்டேன். நன்றி முல்லை மிக்க நன்றி!

RAMYA said...

//
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாழ்த்துக்கள் ரம்யா.. இந்த நூறு பத்து நூறாகட்டும்..!

இப்படிக்கு
ஒரு சொக்கத் தங்கம்..!
//


நன்றி உண்மைத் தமிழன்!

ஆஹா சொக்க தங்கம் அருமை! மிக்க நன்றிங்க!

RAMYA said...

//
பித்தன் said...
ரம்யா.. வாழ்த்துக்கள்!! இப்படியே நூறு நூறுன்னு போயிட்டே இருங்கள்.........................

Still Lot more to come
//

நன்றி பித்தன் வரவிற்கும் மனமார வாழ்த்தியதிற்கும் மிக்க நன்றி பித்தன்!

RAMYA said...

வந்து வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்.

நன்றி கலகலப்ரியா
நன்றி ஷ‌ஃபிக்ஸ்/Suffix
நன்றி இராகவன் நைஜிரியா
நன்றி Princess said...

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
வாழ்த்துக்கள் ரம்யா, நூறு வயதில் நூறாவது இடுகை. மேலும் ஆயிரம் இடுகை இட விழைகிறேன்
//

என்ன நூறு வயசா எனக்கா!

ஐயோ இந்த விஷயம் எனக்கே தெரியாதே என்னப்பா இது அக்குறும்பா இருக்கு :)

நன்றி! குடுகுடுப்பை கருத்துக்கும் நன்றி!

RAMYA said...

வந்து வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்.

நன்றி புதுகைத் தென்றல்
நன்றி செந்தழல் ரவி
நன்றி துபாய் ராஜா
நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி
நன்றி பீர் |
நன்றி ஜீவன்
நன்றி திகழ்
நன்றி blogpaandi
நன்றி வால்பையன் (சச்சின் நானு
அது சரி :)

நன்றி டவுசர் பாண்டி(எங்கே ரொம்ப நாலா பதிவு பக்கம் காணோம் . ஆணிகள் அடங்கியதும் உலா வருகிறேன்)

நன்றி சூரியன் (எங்கே ரொம்ப நாளா
பதிவு பக்கம் காணோம்)
நன்றி Thirumathi JayaSeelan
நன்றி கதிர் - ஈரோடு
நன்றி Mrs.Menagasathia
நன்றி வெண்ணிற இரவுகள்....!
நன்றி ஸ்ரீ
நன்றி ராசு
நன்றி வரதராஜலு .பூ
நன்றி லெமூரியன்(//சதமடித்த ரம்யாவுக்கு எங்கள் தொப்பிகளைத் தாழ்த்துகிறோம்....!// மிக்க நன்றிங்க)

நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி கடைக்குட்டி
நன்றி Rajasurian
நன்றி vanila )//வாழ்த்துக்கள் ரம்யா ஜி..

நூறாவது பதிவிலிருந்து தொடங்குகிறேன்.. நாளைக்குள் எல்லாவற்றையும் படித்து முடித்திருப்பேன். Keep Going.
// படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன் எப்பூடி:)


நன்றி सुREஷ் कुMAர் (You Too :-))
நன்றி Suvaiyaana Suvai
நன்றி நசரேயன்
நன்றி gayathri
நன்றி MAHA
நன்றி ஜெட்லி
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி அ.மு.செய்யது
நன்றி Rajalakshmi Pakkirisamy
நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி பட்டாம்பூச்சி
நன்றி Romeoboy
நன்றி ரோஸ்விக்

sathishsangkavi.blogspot.com said...

//எத்துனை நட்புகள் எத்துனை உறவுகள், எத்துனை பந்தங்கள், இவைகள் எல்லாம் எங்கே சாத்தியம்? எங்கேயும் கிடைக்காது!//


வாழ்த்துக்கள்!! ரம்யா..

உங்கள் ராட் மாதவ் said...

நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

தமிழ் உதயம் said...

வளர்ந்த பதிவாளருக்கு வளரும் பதிவாளரின் வாழ்த்துக்கள்.

இரவுப்பறவை said...

100 க்கு வாழ்த்துக்கள்!!
மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கின்றேன்..

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் ரம்யா!

☼ வெயிலான் said...

// வந்தது வந்துட்டீங்க எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா //

:)

வாழ்த்துக்கள்!!!!!!!

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...தொடருங்க.

ஊர்சுற்றி said...

வாழ்த்துக்கள்.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

நீங்க செஞ்சுரி போட்டபிறகுதான் உங்கள் ஆட்டத்தை காண வந்துள்ளேன்.

Rajeswari said...

வாழ்த்துக்கள் ரம்யா...சாரிங்க லேட்டா வாழ்த்து சொன்னதுக்கு...

1000 ஆக மாறவும் எதிர்பார்ப்புகளோடு வாழ்த்துகிறேன்

பித்தனின் வாக்கு said...

தங்களின் படைபுகளுக்காக விருது அளித்துள்ளேன். விருதினை ஏற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.

(அக்காவா
அவ்வ்வ்வவ்வ்வ் இருக்கட்டும் இருக்கட்டும் :)

அக்கா புடிக்கலையா சரி விடுங்க பாட்டி. கொஞ்சம் விருது மட்டும் எடுத்துங்க. பிளிஸ்.

சத்ரியன் said...

வாழ்த்துகள் ரம்யா.

(வாழ்த்துச் சொல்ல இவ்..............வளவு லேட்டாவா வாரது. இப்ப பாரு, முந்தி வந்தவங்க எல்லாருமா "கேக்" கொஞ்சம் கூட வெக்காம முடிச்சிட்டு போயிட்டாங்க.)

அன்புடன் அருணா said...

கொஞ்சம் லேட்தான்...100....1000 ஆக வாழ்த்துக்கள்!

புளியங்குடி said...

சும்மா பாத்திட்டு போலாம்னுதான் வந்தேன். சரி...கமென்ட் நூறத் தொடலையே எதையாவது எழுதிப் போடுவோம்னு போடறேன். இன்னிக்குத்தான் உங்க பதிவ முதல் முறையா பாக்கறேன். வந்திருக்கிற வாழ்த்துக்களை வெச்சு பாத்தா நீங்க பெரிய ஆளாத்தான இருக்கணும்... கருத்து சொல்ற அளவுக்கு எதையும் நான் படிக்கல.. இருந்தாலும் அந்த ஸ்டைலான R நச்...

RAMYA said...

நன்றி Sangkavi
நன்றி RAD MADHAV
நன்றி tamiluthayam
நன்றி இரவுப்பறவை
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி வெயிலான்
நன்றி சி. கருணாகரசு
நன்றி ஊர்சுற்றி
நன்றி கிறுக்கல் கிறுக்கன்
நன்றி Rajeswari

நன்றி பித்தனின் வாக்கு(விருதுக்கு நன்றிங்க)

RAMYA said...

//
சத்ரியன் said...
வாழ்த்துகள் ரம்யா.

(வாழ்த்துச் சொல்ல இவ்..............வளவு லேட்டாவா வாரது. இப்ப பாரு, முந்தி வந்தவங்க எல்லாருமா "கேக்" கொஞ்சம் கூட வெக்காம முடிச்சிட்டு போயிட்டாங்க.)
//

நன்றி சத்ரியன், லேட்ஆ வந்தாலும் நான் கேக்கு வாங்கிதரேன்:)

RAMYA said...

நன்றி அன்புடன் அருணா!

RAMYA said...

//
புளியங்குடி said...
சும்மா பாத்திட்டு போலாம்னுதான் வந்தேன். சரி...கமென்ட் நூறத் தொடலையே எதையாவது எழுதிப் போடுவோம்னு போடறேன். இன்னிக்குத்தான் உங்க பதிவ முதல் முறையா பாக்கறேன். வந்திருக்கிற வாழ்த்துக்களை வெச்சு பாத்தா நீங்க பெரிய ஆளாத்தான இருக்கணும்... கருத்து சொல்ற அளவுக்கு எதையும் நான் படிக்கல.. இருந்தாலும் அந்த ஸ்டைலான R நச்..//

வாங்க புளியங்குடி! நான்
பெரிய ஆளு எல்லாம் இல்லீங்க. ரொம்ப சின்ன ஆளுதான் :)

நன்றி உங்க முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் :)

என்னோட லோகோவை பாராட்டியதிற்கும் மிக்க நன்றி புளியங்குடி:)

மாதேவி said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

"தேவதை"யின் சாதனைப் பெண்மணிக்கும் பாராட்டுக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் ரம்யா

இன்னும் பல நூறுகள் காண நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் ரம்யா

தேவதியில் கட்டுரை பிரசுரம் ஆனதற்கு நல்வாழ்த்துகள் - அட்டையில் இருக்கும் படம் தங்களுடையதா

அட்டகாசம் போங்க

ஊர்சுற்றி said...

வாழ்த்துக்கள்.