Tuesday, February 16, 2010

அழகு - எத்தனை விதம்!!

அழகு இந்த தலைப்பில் என்னை எழுத அழைத்த தண்டோரா மணிஜிக்கு எனது அன்பு வணக்கங்களும் நன்றிகளும்!!


மணிஜி அவர்கள் அழகு என்ற இந்த தொடருக்கு அழைத்து பல நாட்கள் ஆகிவிட்டன. மிகவும் தாமதமாக இந்த இடுகை மன்னிக்க மணிஜி...

அழகு!! இது எதில் இல்லை என்பதை என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அழகை ஆராதிக்க மட்டுமே முடியும்.


அழகு!! இந்த வார்த்தைக்குள்தான் எத்தனை அழகு ஒளிந்து கொண்டிருக்கிறது. அழகு என்பது, ஒரு மனிதருக்கோ, ஒரு இடத்துக்கோ, ஒரு பொருளுக்கோ அல்லது ஒருவரின் எண்ணங்களுக்கோ இருக்கக்கூடிய இயல்பு. அது பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் நிறைவு போன்றவற்றை கொடுக்ககூடிய அனுபவத்தை வழங்கக்கூடியது.


சட்டென்று மனதை அள்ளக் கூடியது அழகு. அவரவர்கள் கண்களுக்கு எது அழகாய் தெரிகிறது என்பதை காண்போரின் எண்ணங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருக்கு அழகாய் தெரிவது மற்றவர்களுக்கு அழகாய் தெரியாமல் போகலாம். மனிதன் அது ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி! பேசும் விதம் அழகு! பேச்சின் வீச்சில் ஏற்படும் முக பாவம் அழகு! பாவத்திற்கேற்ப விழிகளின் அசைவுகள் அழகு! இவை எல்லாவற்றிற்கும் மேலாக வார்த்தைகளை பேசும் விதம் தேன் தடவியது போல் மனதிற்கு இதமாக தோன்ற வைப்பதும் ஒரு தனிவிதமான அழகுதான்.


ரசனைகள் மாறுபட்டு இருக்கலாம். ஆனால் அழகு என்ற சொல்லிற்கு பஞ்சம் இருந்ததே இல்லை.


மனிதர்களை அவரவர்களின் இயல்பைக் கொண்டு அழகு என்ற அடைமொழி வைத்து ரசிக்க முடியும். அதே போல் பொருட்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிலும் அழகை தேடிக் கண்டுபிடித்து ரசிக்க முடியும். எது அழகு எது அழகு இல்லை என்பது பிரித்து சொல்ல எனக்கு தெரிய வில்லை.


நான் மிகவும் ரசிக்கும் அழகான உணர்வுகள் சில இங்கே உங்களின் பார்வைக்காக!
பெருக்கெடுத்தோடும் காவிரியின் அழகைப் பாருங்கள். இந்தப் படம் திருவையாறு அருகே ஓடும் காவிரியின் அழகிய காட்சி....

காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால் போய் சேரும் இடம் கொள்ளிடம். கொள்ளிடம் நிரம்பி வழியும் காட்சியையும், எனது கற்பனையும் ஒரு சேர இணைத்து பார்த்த போது அந்த அழகு என் கண்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக தெரிந்தது.



மயில் பார்ப்பதற்கு சாதுவாக சுற்றி வந்தாலும் தோகை விரித்து ஆடும் அழகே கொள்ளை அழகாய் காட்சி அளிக்கின்றது பாருங்கள். தோகை விரித்து ஆடும் மயிலின் தோற்றம் மனதை கொள்ளை கொள்ளும் அழகு. மழை மேகம் சூழ்ந்தால் மயிலின் ஆட்டத்தை நம்மால் கண்கள் குளிர காண முடியும். முக்கியமான விஷயம் மயில்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் நாம் இருக்க வேண்டும். இந்த ஆட்டத்தை நான் பல முறை நேரில் பார்த்து ரசித்திருக்கின்றேன். இங்கே மயில் அழகு என்று நாம் விவரிக்கத் தேவையே இல்லை. அதன் அழகுதான் கண்களை கொள்ளை கொள்கிறதே!



கூட்டிற்குள் அன்னையின் வரவிற்காக காத்திருக்கும் அந்தக் குருவிக் குஞ்சுகளின் அழகு கண்களுக்கு ஒரு அருமையான விருந்து. பாருங்கள் உணவிற்காக அதன் செப்பு வாயை திறந்து வைத்துக் கொண்டு நால்வரும் காத்திருக்கிறார்கள்.





அதே போல் கிராமங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உழவர்களை கூர்ந்து கவனித்துப் பார்த்திருக்கிறேன். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி ஏர் உழுது, தனது அடுத்த வேளை உணவைப் பற்றி சிந்திக்காமல் நமக்கு உண்ண உணவைக் கொடுக்கும் உழவனின் செயலில் இருக்கும் அக்கறையும் கொள்ளை அழகுதான்!! உழவனின் உழைப்பிற்கு கிடைத்த பரிசுதான் இந்த விளைச்சல் மிக்க வயல் என்றால் அது மிகையாகா...


பாருங்கள் விவசாயின் வியர்வைத் துளிகள் நெல் மணிகளாக காட்சி அளிக்கின்றது.


நான் ரசிக்கும் அழகை ஓரளவிற்கு புரிய வைத்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

என்னை நம்பி அழகைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பினை கொடுத்த மணிஜிக்கு மிக்க நன்றி.

டிஸ்கி: ம்ம்ம்...... மிகவும் தாமதமாக உங்கள் அனைவரையும் சந்திக்க வந்துள்ளேன். வழக்கம் போல் என் மீது கோவம் கொள்ளாமல் என்னை உங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளையாய் ஏற்றுக் கொள்ளுவீர்கள் என்ற அசாத்திய நம்பிக்கையுடன் இந்த இடுகையை முடிக்கிறேன்.

28 comments :

அகநாழிகை said...

நல்லா எழுதியிக்கீங்க.

மணிஜி said...

லேட்...பட் லேட்டஸ்ட் & கியூட் ரம்யா !!

நட்புடன் ஜமால் said...

அழகு - உண்மையில் இந்த வார்த்தையிலேயே நிறைய இருக்கு அழகு.

---------

அழகு உள்ளே இருக்கு வெளியே இல்லை.

நல்ல போட்டோஸ் - இடுக்கையும்.

Ashok D said...

எழுத்தும் படங்களும் அழகு :)

Thamira said...

ஆஃபீஸ் என்பதால் படங்கள் தெரியவில்லை. இருப்பினும் உங்கள்குறிப்புகளே கொள்ளை அழகாகத்தான் இருக்கின்றன.

வால்பையன் said...

நல்ல ரசனை உங்களுக்கு!

"உழவன்" "Uzhavan" said...

//
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி ஏர் உழுது, தனது அடுத்த வேளை உணவைப் பற்றி சிந்திக்காமல் நமக்கு உண்ண உணவைக் கொடுக்கும் உழவனின் செயலில் இருக்கும் அக்கறையும் கொள்ளை அழகுதான்!! உழவனின் உழைப்பிற்கு கிடைத்த பரிசுதான் இந்த விளைச்சல் மிக்க வயல் என்றால் அது மிகையாகா...//
 
இந்த வரிகள் ரொம்ப ரொம்ப அழகு :-)
 
அன்புடன்
உழவன்

தமிழ் அமுதன் said...

விவரிப்பும் படங்களும் நல்லா இருக்கு ...!
கடைசி படம் ரொம்ப நெல்லா இருக்கு...!

butterfly Surya said...

அழகுக்கு அழகு இந்த பதிவு.

வாழ்த்துகள்.

வண்ணத்துபூச்சியும் அழகு.

க.பாலாசி said...

படங்களும் ரசிக்கவைக்கின்றன....

-தோழன் மபா, தமிழன் வீதி said...

என்ன எழுத்து... என்ன எழுத்து... அருமை.

Anonymous said...

அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் தானே இருக்கிறது. சரிதானே

ஆரூரன் விசுவநாதன் said...

அனைத்தும் மிக அழகு....

மாதேவி said...

அனைத்தும் கண்களை கொள்ளை கொள்கிறது.

Menaga Sathia said...

சூப்பரா எஉதிருக்கிங்க.படங்கள் கொள்ளை அழகு அக்கா!!

பழமைபேசி said...

அருமை.... குளிர்ச்சியா இருந்ததுங்க!!

*இயற்கை ராஜி* said...

vanga..vanga..nalla alaga irukku

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அனைத்தும் மிக அழகு...நல்ல தேர்வுகள்,விவரிப்பும் நல்லா இருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லோரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற நல்ல மனசுதான் அக்கா அழகு..:-))))))))

kanagu said...

Vaanga.. vaanga...

romba azhaga irudhadhu indha padhivu :) :)

Anonymous said...

அழகுக்கே அழகு சேர்த்ததடி பெண்ணே உன் அழகு எத்தனை விதம் பதிவு...படங்கள் கண்களுக்கு குளிர்ச்சியூட்டியது பதிவு எண்ணங்களை தெளிவாக்கியது..ஆம் அழகு என எடுத்துக் கொண்டு ரசிக்க எத்தனை அழகை இறைவன் வரமாய் நமக்கு தந்துள்ளான்..இவற்றை அழிக்காமல் பேணிக்காக்கும் கடமையும் ந்மக்குண்டு..ரசனை கொண்ட கண்களுக்கும் கருணை கொண்ட உள்ளத்துக்கும் எல்லாம் அழகு தான் உங்கள் பதிவுகளுக்கு இது மேலும் அழகு சேர்க்கும் பதிவு ரம்யா......

உயிரோடை said...

ரொம்ப‌ அழ‌கா எழுதி இருக்கீங்க‌ ர‌ம்யா. ப‌ட‌ங்க‌ளும் அருமை

R.Gopi said...

அருமையா எழுதி இருக்கீங்க ரம்யா..

மழலையின் பொக்கை வாய் சிரிப்பு அழகு...

நீர் நிலைகளில் துள்ளி விளையாடும் சிறுவர்களின் ஆனந்தம் அழகு...

அதிகாலை பனியில் அந்த நந்தியாவட்டை பூக்கள் அழகு...

மார்கழி பனியில் நனைந்திருக்கும் புற்கள் அழகோ அழகு...

இவ்வுலகில் நாம் காணும் காட்சிகள் அனைத்துமே அழகுதான்... அதை ரசித்து ருசிக்கும் சூழலில் நாமிருப்பின் நாம் காணும் யாவுமே நம் கண்களுக்கு அழகாக தெரியும்...

ஆர்வா said...

என்னைப்பொறுத்தவரைக்கும் நட்பு ரொம்ப அழகு..

அப்புறம், கஜோல் ஷாலினி ரொம்ப அழகு ஹி.. ஹி.

ராமலக்ஷ்மி said...

அழகுக்கு அழகு சேர்க்கும் அழகான பதிவு ரம்யா.

அன்புடன் நான் said...

மிக அழகா சொல்லியிருக்கிங்க.... அந்தபடம்...அதிலும்... கூட்டில் குஞ்சுகள்... மிக அழகு.

RAMYA said...

இந்த இடுகையை ரசித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!

நன்றி அகநாழிகை
நன்றி தண்டோரா
நன்றி D.R.Ashok
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி வால்பையன்
நன்றி "உழவன்" "Uzhavan"
நன்றி ஜீவன்
நன்றி butterfly Surya
நன்றி க.பாலாசி
நன்றி தமிழன் வீதி
நன்றி nanrasitha
நன்றி ஆரூரன் விசுவநாதன்
நன்றி மாதேவி
நன்றி Mrs.Menagasathia
நன்றி இய‌ற்கை
நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி kanagu
நன்றி தமிழரசி
நன்றி உயிரோடை
நன்றி R.Gopi
நன்றி கவிதை காதலன்
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி சி. கருணாகரசு

Tech Shankar said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos