தோழி ஒருத்தியை வேண்டினேன்!
தேவதை ஒருத்தி வந்தாள்!
தேன் துளிகளையேந்தி...!!
தொய்வென சொன்ன வேளைகளில்
தோள்களை கொண்டு சுமந்திடுவாள்!
பாசத்தின் பராமரிப்பு செலவை
பண்பை தந்து போற்றிடுவாள்...!!
அன்பின் முகவரி ஏந்தி
அண்டைவீட்டை அணுகினேன்!
அவளின் முகவரி தந்து
அனுப்பி வைத்தனர் இங்கு!
நலமா என்று கேட்டிடுவாள்
நலம் என சொல்லும் முன்
நா வறண்டிடுவாள்
நலம் பல நான் எய்திடவே....!!
எங்கள் நட்பை சொல்ல
நாட்குறிப்பெடுக்க
நிரம்பி வழிந்தது
நல்ல செய்திகளே..!!
துயரங்கள் துடைக்கும்
தூயவள் அவள்!
சிறு துரும்புக்கு
தீங்கிழைக்காத தாயவள்!!
உதவி கேட்டு வருவோர்க்கு
உள்ளத்தை இல்லமாய் தந்திடுவாள்!
அமைதி தேடி வருவோரின்
ஆற்றாமை அறிந்து அன்பை தந்திடுவாள்!!
கூர்வாளும் கூர்மையையுமாய்
எங்கள் நட்பு
போர்வாள் கொண்டு
பயணித்த போதும்
காயங்கள் ஏற்படுத்தாத களமானோம்!!
வாழ்க்கை என்னும் வட்டத்தை
வழக்காடு மன்றமாய் கொண்டாலும்
தீர்ப்பு என வரும் போது
நீதி வழுவா நெறிமுறையில்
நன்மை பயப்பாள் நல்குவோர்க்கு!!
அம்மையும் அப்பனும் ஆனவள்!
ஐம்புலன் அடக்க பயின்றிட்டாள்!
அச்சமென்பதை துச்சமாக்கிய
கரப்பான்பூச்சிக்கு பயந்த தைரியசாலி!!
நட்பை கொள்முதல் செய்திட்டு
பரிவை பறிமுதல் செய்கின்றாள்!
கரிசனமே இவள் அரியாசனம்!
அரசியின் கவிதை இவளுக்கு சரியாசனம்!!
தோழி தமிழரசி அலங்காரமான வார்த்தைகளின் கோர்வைகளினால் கவிதை ஒன்றை எழுதிக் கொடுக்க, அதை என் பதிவில் அரங்கேற்றம் செய்துள்ளேன்.
எழுதி வடிவமைத்துக் கொடுத்த தோழி தமிழரசிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!!
நமக்குள் இருக்கும் நட்பை உயர்ந்த முறையில் வெளிப்படுத்திய உனது பெருந்தன்மைக்கு நான் என்ன கொடுக்க தமிழ்?
என்றென்றும் இதே அன்புடன இருக்க ஆசைப் படுகிறேன் தமிழ். உன் அன்பிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
23 comments :
தோழி ஒருத்தியை வேண்டினேன்!
தேவதை ஒருத்தி வந்தாள்!
தேன் துளிகளையேந்தி...!! ]]
அழகான துவக்கம் ...
அன்பின் முகவரி ஏந்தி
அண்டைவீட்டை அணுகினேன்!
அவளின் முகவரி தந்து
அனுப்பி வைத்தனர் இங்கு! ]]
இந்த பத்தி மட்டுமே போதும் உங்கள பற்றி சொல்ல
உதவி கேட்டு வருவோர்க்கு
உள்ளத்தை இல்லமாய் தந்திடுவாள்! ]]
இல்லத்தையும் உள்ளத்தோடு தாறவங்க
:)
கரப்பான்பூச்சிக்கு பயந்த தைரியசாலி!! ]]
ஹா ஹா ஹா
கரிசனமே இவள் அரியாசனம்!
அரசியின் கவிதை இவளுக்கு சரியாசனம்!! ]]
நல்ல சனம், மனம்
இரண்டு பேரும் பிரகாசிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
அழகாய் எழுத்துகள் கோர்த்து நட்பை சொல்லியிருக்காங்க தமிழ், உங்க சார்பாகவும் நன்றி.
//கூர்வாளும் கூர்மையையுமாய்
எங்கள் நட்பு
போர்வாள் கொண்டு
பயணித்த போதும்
காயங்கள் ஏற்படுத்தாத களமானோம்!!//
வாவ்!! என்னமா எழுதுறாங்கப்பா, சூப்பர்
//கரப்பான்பூச்சிக்கு பயந்த தைரியசாலி//
ஹா..ஹா அப்படியா?
ம்ம் ....அருமை.. உங்கள் நட்புக்கு தலை வணங்குகிறேன்
முடியல :))))
கலை அக்காவுக்கு நீங்க எழுதின கவிதைன்னு நினைச்சு படிச்சேன்...!
அப்புறம்தான் தெரிஞ்சது உங்களுக்கு தமிழ் எழுதுனதுன்னு
கண்டிப்பா பொருத்தமான கவிதைதான்...!
//கூர்வாளும் கூர்மையையுமாய்
எங்கள் நட்பு
போர்வாள் கொண்டு
பயணித்த போதும்
காயங்கள் ஏற்படுத்தாத களமானோம்!!
வாழ்க்கை என்னும் வட்டத்தை
வழக்காடு மன்றமாய் கொண்டாலும்
தீர்ப்பு என வரும் போது
நீதி வழுவா நெறிமுறையில்
நன்மை பயப்பாள் நல்குவோர்க்கு!!///
இந்த வரிகளுக்காக தமிழுக்கு ஒரு சிம்மாசனம் தயார் பண்ணி வைங்க...!
கவிதை அழகு...
உங்கள் நட்பு அதைவிட அழகு..
//
தோழி ஒருத்தியை வேண்டினேன்!
தேவதை ஒருத்தி வந்தாள்!
தேன் துளிகளையேந்தி...!!
//
வீட்டிலே சோறு இல்லைன்னு சொல்லி இருப்பீங்க, அதான் சாப்பிட தேன் எடுத்திட்டு வந்து இருப்பாங்க
//
தொய்வென சொன்ன வேளைகளில்
தோள்களை கொண்டு சுமந்திடுவாள்!
பாசத்தின் பராமரிப்பு செலவை
பண்பை தந்து போற்றிடுவாள்...!!//
மிச்சம் இருந்தா என் அக்கௌன்ட்க்கு அனுப்பி வையுங்க
//அன்பின் முகவரி ஏந்தி
அண்டைவீட்டை அணுகினேன்!
அவளின் முகவரி தந்து
அனுப்பி வைத்தனர் இங்கு!//
ஆட்டோவுலையா
//
நலமா என்று கேட்டிடுவாள்
நலம் என சொல்லும் முன்
நா வறண்டிடுவாள்
நலம் பல நான் எய்திடவே....!!//
ஏன் வீட்டுக்கு சாபிட
//
எங்கள் நட்பை சொல்ல
நாட்குறிப்பெடுக்க
நிரம்பி வழிந்தது
நல்ல செய்திகளே..!!//
நீ எனக்கு பின்னூட்டம் போடலை, அதனாலே நான் உனக்கு பின்னூட்டம் போடலை அப்படின்னா
//
துயரங்கள் துடைக்கும்
தூயவள் அவள்!
சிறு துரும்புக்கு
தீங்கிழைக்காத தாயவள்!!
//
நல்லாவே சொம்பு அடிக்குறீங்க, எதாவது வேணுமுனா கேளு தாயீ..
//
உள்ளத்தை இல்லமாய் தந்திடுவாள்!
அமைதி தேடி வருவோரின்
ஆற்றாமை அறிந்து அன்பை தந்திடுவாள்!!
//
ஆட்டோ எடுத்திட்டு வந்தா என்ன பண்ணுவீங்க
//
கூர்வாளும் கூர்மையையுமாய்
எங்கள் நட்பு
போர்வாள் கொண்டு
பயணித்த போதும்
காயங்கள் ஏற்படுத்தாத களமானோம்!!
//
ஆமா கும்மி அடிச்சா எப்படி காயம் வரும்
//
வாழ்க்கை என்னும் வட்டத்தை
வழக்காடு மன்றமாய் கொண்டாலும்
தீர்ப்பு என வரும் போது
நீதி வழுவா நெறிமுறையில்
நன்மை பயப்பாள் நல்குவோர்க்கு!!
//
காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைக்கு எல்லாம் தீர்ப்பு கிடைக்குமா?
//
அம்மையும் அப்பனும் ஆனவள்!
ஐம்புலன் அடக்க பயின்றிட்டாள்!
அச்சமென்பதை துச்சமாக்கிய
கரப்பான்பூச்சிக்கு பயந்த தைரியசாலி!!
//
இதை கண்டிப்பா நம்புறேன்
//
நட்பை கொள்முதல் செய்திட்டு
பரிவை பறிமுதல் செய்கின்றாள்!
//
பறிமுதல் செய்து சேட்டு கடையிலையா இருக்கு
//
கரிசனமே இவள் அரியாசனம்!
அரசியின் கவிதை இவளுக்கு சரியாசனம்!!
//
எங்களுக்கு கும்மியாசனம்
//
தோழி தமிழரசி அலங்காரமான வார்த்தைகளின் கோர்வைகளினால் கவிதை ஒன்றை எழுதிக் கொடுக்க, அதை என் பதிவில் அரங்கேற்றம் செய்துள்ளேன்.
//
இப்ப என்ன நீங்க உலகமஹா ஆணி பிடுங்குறீங்க, அத நாங்க நம்பனும் அவ்வளவு தானே
//
நமக்குள் இருக்கும் நட்பை உயர்ந்த முறையில் வெளிப்படுத்திய உனது பெருந்தன்மைக்கு நான் என்ன கொடுக்க தமிழ்?
//
காக்கா பிரியாணியும், வான்கோழி சூப்பும் கடையிலே வாங்கி கொடுங்க,தயவு செய்து உங்க வீட்டிலே ௬ப்பிட்டு சாப்பாடு போடவேண்டாம்
//
என்றென்றும் இதே அன்புடன இருக்க ஆசைப் படுகிறேன் தமிழ். உன் அன்பிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
//
அப்ப எங்களுக்கு ?
இந்த தலைப்பில ரெண்டு ரவடிகள் எழுதி இருக்காங்க,அவங்க கிட்ட அனுமதி கேட்டீங்களா ?
அருமை!
//கூர்வாளும் கூர்மையையுமாய்
எங்கள் நட்பு
போர்வாள் கொண்டு
பயணித்த போதும்
காயங்கள் ஏற்படுத்தாத களமானோம்!!
//
அருமை கவிஞர் தமிழரசி அவர்களே அருமை...
அதைவிட தங்கள் நட்பு அழகு...
எப்பவும் இதே போல் அன்போடயும் நட்போடயும் இருக்கவேண்டும் என்று வாழ்த்த வயதில்லை என்றாலும் பிரார்த்திக்கிறேன்...
யக்கா ஏப்ரல்ல சென்னையா? சிங்கையா?
ramya akka pls collect ur award from my blog
http://sashiga.blogspot.com/2010/03/blog-post_24.html
தொடரட்டும் உங்கள் நட்பு, இது வரலாற்றில் ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்க என் வாழ்த்துக்கள்
very nice poem... long live ur friendship.. Best wishes!!
//கூர்வாளும் கூர்மையையுமாய்
எங்கள் நட்பு
போர்வாள் கொண்டு
பயணித்த போதும்
காயங்கள் ஏற்படுத்தாத களமானோம்!! //
natpukku ilakkanamana nalla kavithai.
vazhththukkal ungalukkum ungal thozhi thamizukkum.
:)
neengal solli iruppadhu pola... azhagaana vaarththaigalin korvai... oru kavidhaiyaaga!!!
:)
நல்ல கவிதை, அழகாய் இருக்கின்றது. உங்களின் நட்பைப் போல. நன்றி.
Post a Comment