Tuesday, August 10, 2010

வைகைப் புயலின் அட்டகாசம்!!


அண்ணன் வடிவேலுவை வம்பிற்கு இழுத்து ரொம்ப நாள் ஆச்சா அதான்....!!



தம்பியும் அக்காவும் பாக்குற ஸ்டைலை பார்த்தீங்களா? வாங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன பிரச்சனைன்னு பார்க்கலாம்!!

"அப்பாடா என்ன வெயிலு என்ன வெயிலு தாங்க முடியலைடா சாமி"

"என்னாடா திண்ணையிலே உக்காந்துகிட்டு பொலம்பறே"

"என்னக்கா என்னைய பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?"

"என்னடா நான் கேள்வி கேட்டா நீ என்னைய கேள்வி கேக்கறே? வர வர உனக்கு பதில் சொல்ற பழக்கமே இல்லாம போச்சு!"

"ஆமா நான் தெரியாமத்தான் கேக்கறேன் வெயில்லே அலஞ்சி, திரிஞ்சி இப்படி கருத்து போயி வந்திருக்கேனே! தம்பியை உள்ளே கூட்டிகிட்டு போயி கொஞ்சம் மோரோ இல்லே இளநீரோ கொடுக்கப்பிடாது, திண்ணையிலே குத்த வச்சு கேள்வியா கேக்கறே?"

"ஏண்டா கறுத்து போயிட்டியா? எங்கே என்னைய பார்த்து சொல்லு"

"சரி சரி விடு இதை போய் பெரிசு படித்திகிட்டு.. போக்கா போ உள்ளே ஏதாவது வேலை இருந்தா பாரு"

"நாங்க எல்லாம் வேலை பார்த்திகிட்டுதான் இருக்கோம் அதை நீ சொல்ல வேண்டாம்..."

"சரி சரி எங்களுக்கும் வேலை வந்திடுச்சில்லே!"

"என்னாடா அதிசயமா இருக்கு உனக்கு வேலை வந்திடுச்சா? எங்கேயிருந்து வந்திச்சிடா? ரயில் ஏறி வந்துச்சா? இல்லே லாரி ஏறி வந்துச்சா? மூஞ்சியையும் மொகரகட்டையும் பாரு"

"இங்க பாரு நீயே இவ்வளவு கேவலமா உன் தம்பியை பேசலாமா? உக்காந்து யோசிக்கா யோசி"

"ஆமாண்டா எனக்கு வேறே வேலை இல்லை பாரு உன்னைய பத்தி யோசிக்கத்தான் பொறந்திருக்கிறேனாக்கும், சோம்பேறி! போ போய் கஞ்சி வச்சிருக்கேன் ஊத்தி குடி"

"என்னாது கஞ்சியா? சோறு இல்லையா? கஞ்சி எவனுக்கு வேணும்? பசி வயத்தை கிள்ளுதே.."

"டேய் ராத்திரிக்குத்தான் சோறாக்குவேன், இப்போ கஞ்சிதான்"

"என்னக்கா இப்படி செஞ்சிட்டே, கூட்டாளி வாசு சாப்பிட்டு போன்னு சொன்னான்.. நான் தான் எங்க அக்கா சமைச்சி வச்சிக்கிட்டு காத்திருக்கும்னு சொல்லிட்டு வந்தேன்! நீ என்னாடான்னா கஞ்சியை தூக்கி என் தலையிலே ஊத்தி சீக்காளி ஆக்கிடுவே போல இருக்கே?"

"உனக்காக எதுக்குடா நான் காத்திருக்கணும்? உங்க மாமா ஊரிலே இல்லே தெரியுமில்லே! இப்போ வார நேரம்தான்! மணி என்ன ஆகுது? இந்நேரத்துக்கு போய் சோத்துக்கு சண்டை போடறே? போ அந்த கஞ்சியை குடிச்சிட்டு, மாட்டு தொழுவத்தை கொஞ்சம் கழுவி விடு, எனக்கு இடுப்பு வலி தாங்கலை, ஒருத்தியாவே எம்புட்டு வேலைதான் செய்வேன்! அக்காவுக்கு ஏதாவது ஒத்தாசையா இருக்கணும்னு உனக்கு தோணுதா? போடா போ மொறைக்காதே"

"என்னாது ஒத்தாசையாவா? அதுவும் மாட்டுத் தொழுவத்தை நான் கழுவனும் அது சரி? மொத்தத்துலே நான் வீட்டு வேலை செய்யணும்னே முடிவு பண்ணிட்டியா? மாமா கிட்டே சொல்லி ஏதாவது வேலை போட்டு கொடுக்கச் சொல்லாம இந்த மாதிரி பேச்சை பேச எங்கே கத்துகிட்டே? ஏதோ அக்காவா இருக்கியேன்னு என்னோட கோவத்தை காட்டலை! எனக்குன்னு ஒரு நாதியும் இல்லே! உங்க ஊட்டோட இருக்கேன்னு உங்க எல்லாருக்கும் என்னைய பார்த்தா கேவலமாத்தான் இருக்கு!"

"சரிடா ஏதோ தெரியாம சொல்லிட்டேன், அதுக்கு போயி இவ்வளவு பீல் பண்றே! சரி போ போய் கஞ்சியை குடி மாமா வந்தா உனக்கு வேலைக்கு சொல்றேன்"

"அதெல்லாம் வேணாம்... வேலை நானே தேடிகிட்டேன், நாளைக்கு காலையிலே அஞ்சு மணிக்கி எழுப்பி விட்டா அது போதும், இனிமே சம்பாதிச்சுதான் இந்த வீட்டுலே கையை நனைப்பேன். இன்னைக்கு மட்டும் கொஞ்சமா சாப்பிட்டுக்கிறேன்"

"சரிடா இப்படியே ஒரு ஆயிரம் தடவையாவது சொல்லி இருப்பே! வேலையையும் காணோம் ஒண்ணையும் காணோம். வெட்டிப் பேச்சு பொழைப்புக்கு ஆகாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க"

"எப்பவும் சொல்ற மாதிரி இந்த தடவ சொல்லலை நீ வேண்ணா பாரு! திடீர்ன்னு ஒரு நாள் நான் நெம்ப பெரிய ஆளா வளர்ந்துடுவேன்"

"இப்ப மட்டும் உன்னோட வளர்த்திக்கு என்ன கொறைச்சல்? உன் தலை எங்க வீட்டு நிலைப்படியை முட்டுது. "
"ஏங்க! வாங்க! நேரம் ஆகும்னு சொன்னீங்க, பரவா இல்லையே சீக்கிரம் வந்துட்டீங்க"

"போன வேலை வெள்ளனே முடிஞ்சிடுச்சும்மா அதான் வந்துட்டேன். நான் என்ன சில பேரு மாதிரி வெட்டியாவ ஊரை சுத்த முடியும்? எனக்குன்னு குடும்பம், புள்ள குட்டிங்க இருக்கே"

"இவரு சைட்லே நம்மள தாக்குறாரு?" வேலு இங்கே நிக்காதேடா ஓடிப் போய்டு இல்லேன்னா அந்த கஞ்சிக்கும் ஆபத்து வந்திடும். மனசாட்சி கதற அந்த இடத்தை விட்டு நைசா வேலு நழுவ முயல..

"டேய் எங்கேடா நழுவரே நில்லு இன்னைக்கு பூரா எங்கே சுத்துனே? காட்டுக்கு போனியா? பம்ப்செட் ரிப்பேர்ன்னு சொன்னானே குப்பன், என்ன பண்ணான்னு போய் பார்த்தியா? ஏம்மா நான் காலையிலே உன் கிட்டே சொல்லிட்டு போனேனே! வேலுவை காட்டுக்கு அனுப்புன்னு, வேலுகிட்டே நீ சொல்லலையா? இவன் ஏன் ஒரு மார்க்கமாவே முழிச்சிகிட்டு நிக்கறான்!"

"இல்லைங்க நான்தான் வேலுகிட்டே நீங்க சொன்னதை சொல்ல மறந்துட்டேன், சரி விடுங்க அதை குப்பனே சரி பண்ணிடுவான்"

"ஏங்க நம்ம வேலு நாளையிலே இருந்து வேலைக்கு போகப் போறானாம்"

"அதென்ன நாளையிலே இருந்து? இவ்வளவு நாள் இந்த அறிவு எங்கே போச்சாம்? பாத்துகிட்டே இரு இவனை பார்த்து நம்ம பய கெட்டு குட்டிச் சுவராகபோறான், நீ இவனக்கு ரொம்ப இடம் கொடுத்திட்டே"

"ஏங்க அவனை திட்டனும்னா நேரா திட்டுங்க ஏன் என்னையும் நம்ம புள்ளையையும் சேர்த்து திட்றீங்க?"

"ஆமாண்டி உன் தம்பிதானே! சொன்னவுடனே ரோஷம் பொத்துகிட்டு வந்திடுச்சோ? மொகறையை பாரு அப்படியே ஆடு திருடின கள்ளனாட்டமா முழிக்கிறான்"

"ஏன் மாமா எப்போ பார்த்தாலும் திட்டிகிட்டே இருக்கீங்க? நீங்க வேணா பாருங்க நான் ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் பெரிய ஆளா ஆகப்போறேன் என்ன பண்றதுன்னு தெரியாம திக்கி திணறி திண்டாடப் போறீங்க"

"டேய் இந்த லூசுத்தனமா பேசறதை மொதல்லே நிறுத்து? ஏண்டி உங்கள் குடும்பமே இப்படிதானோ?"

"ஏங்க தம்பியை திட்டனும்னா நல்லா திட்டுங்க! அது இல்லாம ஏன் எங்க குடும்பத்தையே இழுக்குறீங்க? பாருடா உன்னாலே நம்ம குடும்பமே கேவலப்பட்டு நிக்குது? இதெல்லாம் ஒரு பொழப்பான்னு நல்ல யோசிடா!"

"சரி சரி விடு உணர்ச்சி வசப்படாதே இப்ப உங்க குடும்பத்தை பத்தி நான் இல்லாததையும் பொல்லாததையுமா சொல்லிட்டேன்"

"வேணாங்க இதோட இந்த பேச்சை விட்டுடுங்க, என்ன வேலை செஞ்சு முடிக்கனுமோ அதை தம்பிகிட்டே நீங்களே நேரா சொல்லிடுங்க"

"ஏய்! அவங்கிட்டே சொல்ல எனக்கென்ன பயமா? ஒரு வேலை சொல்றேன் அதை நாளைக்கு கச்சிதாமா முடிச்சுகிட்டுவா பார்க்கலாம்"

"அதெல்லாம் முடியாது நாளைக்கு நான் வேலையிலே சேரப்போறேன்"

"அடங்கொன்னியா வீட்டுக்கு உதவியா ஒரு வேலை செய்ய சொன்னா வீம்பா பேசிகிட்டு நிக்கறே? என்னடி இதெல்லாம்? நீயே என்ன வேலைன்னு எடுத்து சொல்லு உன்னோட அருமை தம்பியாண்டான்கிட்டே!"

"ஏங்க நீங்களே அவன்கிட்டே என்ன பண்ணனும்னு சொல்லிடுங்க, அப்பறம் நான் சரியா சொல்லலைன்னு என்னை திட்டுவீங்க"

"சரிடா நாளைக்கு கொஞ்சம் கடைவீதிக்கு போய் உங்கக்காவுக்கு ஏதோ சாமான் வேணுமாம் அதெ வாங்கிகிட்டு, அப்படியே சந்தைக்கு போய் வளர்ந்ததை வித்துட்டு வளர்றதை வாங்கிகிட்டு வா! பணமெல்லாம் சுத்தமா கொண்டு வந்து கொடுத்திடனும் புரிஞ்சுதா?

"என்ன என்ன சொல்றீங்க? ஒண்ணுமே புரியலையே! வித்துட்டு அந்த வார்த்தை மட்டும் புரியுது வேறே எதுவும் புரியல"

"ஆமாண்டா உனக்கு ஒன்னும் புரியாது சாப்பிட மட்டும் வெவரமா புரியும், இந்த கருமத்துக்குதாண்டி உன்னையே விளக்கச் சொன்னேன். அவனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. சரியான கல்லுளி மங்கண்டி உன் தம்பி. புரியாத மாதிரியே உன்னாலே மட்டும் எப்படிடா நடிக்க முடியுது?"

"ஏங்க தம்பிய திட்டிகிட்டே இருக்கீங்க? எனக்கே வெவரம் புரியலையே.. கொஞ்சம் புரியுமபடியா சொன்னாதான் என்னவாம்? தம்பி புரியலன்னா நிதானமா கேட்டுக்கடா"

"வேணாம்க்கா நான் வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டேன் என்னை விட்டுடு அம்புட்டுதான் இப்போதைக்கு என்னால சொல்ல முடியும்"

"நான் சொன்ன வேலையை செய்யலைன்னா இந்த வீட்டுக்குள்ளே இருக்கக் கூடாது மீறி இருந்தா காலை உடைச்சிடுவேன்"

"என்னாது காலை உடைப்பீங்களா, சரிக்கா ரொம்ப சரி உன்னைய நம்பி ஆத்தாளும், அப்பனும் அனுப்பி வச்சாங்க பாரு அவங்களை சொல்லணும்.



வளரும் ரம்யா.....

26 comments :

நசரேயன் said...

உள்ளேன் பூலான் தேவி

நசரேயன் said...

//வீட்டுக்குள்ளே இருக்கக் கூடாது மீறி
இருந்தா காலை உடைச்சிடுவேன்//

படிக்காம பின்னூட்டம் போட்ட என்ன செய்வீங்க?

RAMYA said...

//

நசரேயன் said...
உள்ளேன் பூலான் தேவி
//

வாங்க வாங்க நெல்லைப் புயலே:)

RAMYA said...

//
நசரேயன் said...
//வீட்டுக்குள்ளே இருக்கக் கூடாது மீறி
இருந்தா காலை உடைச்சிடுவேன்//

படிக்காம பின்னூட்டம் போட்ட என்ன செய்வீங்க?
//

போட்டுதான் பாருங்களேன் என்ன நடக்குதுன்னு:)

வீட்டுக்கு போன் போகும்:)

தமிழ் அமுதன் said...

ரைட்டு...! ரம்யா ஃபார்முக்கு வந்துட்டாங்க...!

படிச்சுட்டு வரேன்..!

நட்புடன் ஜமால் said...

ஆஹா! வந்துட்டான்யா வந்துட்டான்யா

நட்புடன் ஜமால் said...

"இங்க பாரு நீயே இவ்வளவு கேவலமா உன் தம்பியை பேசலாமா? உக்காந்து யோசிக்கா யோசி"]]


சரியான சொ.செ.சூ வா இருப்பாரோ

ஏற்கனவே உக்காந்து யோசிச்சி தான் இம்பூட்டு பெரிய பதிவு போட்டு இருக்காங்க ...

நட்புடன் ஜமால் said...

"சரி சரி எங்களுக்கும் வேலை வந்திடுச்சில்லே!"]]

வந்துடுச்சா வந்துடுச்சா வந்துடுச்சா வேலை சந்தோஷம்

நட்புடன் ஜமால் said...

வளரும் ரம்யா..... ]]]

வாழ்த்துகள் :P

கார்த்திகைப் பாண்டியன் said...

யாத்தாடி யாத்தே.. ரைட்டு.. யக்கா.. நீ நடத்துக்கா..:-))))

sakthi said...

அருமை ரம்ஸ்

கலக்கல்

sakthi said...

தொடரட்டும் புயலின் சிரிப்பலை

Unknown said...

arumai ponga...kalakiteenga..awwwwwwww

குடுகுடுப்பை said...

ரம்ஸ் ரம்ஸ்ன்னு சொல்றாங்களா ஒல்ட் மாங்கா, ஓல்ட் காஸ்க்கா

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... ரம்யா வந்துட்டாங்க...!
வந்துட்டாங்க...!!

வால்பையன் said...

//ஏண்டா கறுத்து போயிட்டியா? எங்கே என்னைய பார்த்து சொல்லு//

முன்னாடி யானை சிகப்பா இருந்தாரு, இப்போ கருத்து போயிட்டாரு! :)

வால்பையன் said...

//என்னாது கஞ்சியா? சோறு இல்லையா? கஞ்சி எவனுக்கு வேணும்? பசி வயத்தை கிள்ளுதே.."//

எனகெல்லாம் கஞ்சி ஊத்தினா சாப்பிட மாட்டேன், ஒன்லி பிரியாணி தான்!

வால்பையன் said...

//அக்காவுக்கு ஏதாவது ஒத்தாசையா இருக்கணும்னு உனக்கு தோணுதா//


ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக, அமெரிக்காவுல ஜார்ஜ்புஷ்ஷு கூப்பிடாக, அதையெல்லாம் விட்டுட்டு இங்கே வந்தா ஒத்தாசை பண்ணனுமாம்ல!

Thamira said...

இது தொடரா ரம்யா?

குடந்தை அன்புமணி said...

வளரும் ரம்யா....
உண்மைதான்...

அன்புடன் நான் said...

வம்புகள் வளரட்டும்...

அன்புடன் நான் said...

வளரும் ரம்யா....//
வளரட்டும் ரம்யா.

KUTTI said...

NICE POST

MANO

Anonymous said...

நசரேயன் said...

//வீட்டுக்குள்ளே இருக்கக் கூடாது மீறி
இருந்தா காலை உடைச்சிடுவேன்//

படிக்காம பின்னூட்டம் போட்ட என்ன செய்வீங்க?

ஆமாம் அப்படித்தான் போடுவோம் என்ன செய்வீங்க நானும் அண்ணா பக்கம்...

Anonymous said...

RAMYA said...

//

நசரேயன் said...
உள்ளேன் பூலான் தேவி
//

வாங்க வாங்க நெல்லைப் புயலே:)

என்னது பூலான் தேவியா? இடம் தெரியாமல் வந்துட்டேனா?

Anonymous said...

ஆத்தாடி இம்புட்டு எழுதுவேளா நீங்க....