தாள லயத்தோடு இசைப்பதிலா
ஜதிக்கேற்ப நடனம் அமைப்பதிலா
ஜதிக்கேற்ப ஆடும் நாட்டியத்திலா
மழையில் நனைந்து மகிழ்வதிலா
மழலையின் மந்தகாஸ சிரிப்பிலா
மழலையின் குதலைப் பேச்சிலா
மகளின் மணக்கோலத்திலா
மதியை விழுங்கும் மலையின் வீரத்திலா
மலைக்கு போர்வையான பனியை ரசித்த தருணத்திலா
மரத்தில் ரீங்காரமிடும் பறவைகளின் சப்த்தத்திலா
தோகை விரித்து ஆடும் மயிலின் ஆட்டத்திலா
அன்னைக்கு அகம் அமைப்பதிலா
பிறர்க்கு தானம் தர்மம் செய்வதிலா
எண்ணங்களை எழுத்தாய் வடிவமைப்பதிலா
வர்ணங்கள் பல நம்மைச் சுற்றி வருவதிலா
இல்லத்தை செல்வத்தால் நிரப்புவதிலா
இயந்திர வாழ்க்கையை இனிமையாக்குவதிலா
இந்திரன் சந்திரன் என்ற புகழ் வார்த்தைகளாலா
இல்லாததை திடீரென்று அடையும் தருணத்திலா
தங்கத்திடம் தஞ்சம் புகுவதிலா
தான தர்மங்கள் செய்வதிலா
தத்துவம் சொல்வதினாலா
தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் தருணத்திலா
நாணயம் நம்மைத் தேடி வருவதிலா
நன்றி மறவா தன்மையினாலா
நடப்பை உச்சத்தில் உணரும் சமயத்திலா
நஞ்சை கண்டு நகரும் தருணத்திலா
வீடு நிறைந்து உலா வரும் விருந்தினர்களாலா
வீடு நிறைய பணத்தை சேர்த்த மகிழ்ச்சியிலா
பிறரிடம் நீ காட்டும் அன்பிலா
எதிரி உன்னிடம் காட்டும் அன்பிலா
வானவில்லின் வண்ணத்தில் மயங்கும் தருணத்திலா
கண்சிமிட்டும் விண் மீன்களை ரசிக்கும் தருணத்திலா
விண்ணைத் தொட்டு பறக்கும் விமானத்தை ரசிக்கும் தருணத்திலா
மாற்றாந்தாயின் மாறா அன்பிலா
ஆடம்பரச் செலவுகளின் உச்சத்திலா
டிஸ்கி: எங்கே?? எங்கே?? எங்கே கிடைக்கும் தெரிந்தவர்கள் கூறுங்கள். இது கவிதை அல்ல எனது மனதில் ஓடிய சந்தேகங்களின் தொகுப்பு. எதில் சொர்க்கம் என்பதை எனக்கு உணர்த்துங்கள் நண்பர்களே!!
என் தேடுதலுக்கு பதில் கிடைக்கும் என்று ஏங்கும் உங்கள் (கேப்டன் ஸ்டைலில்)ரம்யா... ம்யா... யா.. யா
28 comments :
:)
me tha first First
நல்ல தேடல் ...! நீங்கள் சொன்ன எல்லா இடங்களிலும் சொர்க்கம் உண்டு...! நீங்கள் சொல்லாத இடத்திலும் உண்டு...! அதை நாம் கண்டுகொள்வது நம் மன நிலையில்தான் உள்ளது...!
அந்த ஸ்டைல நெனச்சா தான் பயந்து வருது
என்ன ஆச்சு இன்னிக்கு நம்ம நண்பர்களுக்கு...! அங்கே ஜமால் ஒரு அசத்து அசத்தி இருக்கார்...!
இங்கே ரம்யா கலக்கி இருகாங்க...!
இத எல்லாம் பார்த்துகிட்டு நம்ப எழுத்தோசை தமிழ் எப்ப்டி சும்மா இருகாங்க..!
தாயின் காலடியில் சொர்க்கம்
இதுதான் எனக்கு தெரிஞ்ச பதில்
சுக துக்கம் அனைத்தையும் சேர்த்தனைத்து சொல்லிவிட்டு எதில் இருக்கு என்று கேட்டால் எதை தான் சொல்வேன் பெண்ணே...
பொய்யில்லா உன் கண்களில் கண்டேன் சொர்கம்
தொய்வில்லா உன் செயலில் கண்டேன் சொர்கம்
ஆணவம் இல்லா உன் அகத்தில் கண்டேன் சொர்க்கம்
அன்பை மட்டுமே காட்டும் உன் கண்களில் கண்டேன் சொர்கம்
நடமாடும் மனிதமே நீ தானாடி என் சொர்கம்....என் அழகிய செல்லத்துக்கு இன்னும் சொல்ல ஆசை,,, உன் கவிதைக்கு சொல்ல கருத்தில்லை என்னிடம் ரம்யா
// தமிழ் அமுதன் said...
நல்ல தேடல் ...! நீங்கள் சொன்ன எல்லா இடங்களிலும் சொர்க்கம் உண்டு...! நீங்கள் சொல்லாத இடத்திலும் உண்டு...! அதை நாம் கண்டுகொள்வது நம் மன நிலையில்தான் உள்ளது...!
//
அமுதன் உங்களை பார்த்து எவ்வளவு நாளாச்சு, ஜமாலுமா போஸ்ட் போட்டு இருக்காரு சொல்லவே இல்லே:)
நீங்க சொன்னது போல் எல்லா இடத்திலும் சொர்க்கம் இருக்கு அமுதன். தேடலில் சிலதான் இங்கே இருக்கு :)
//
தமிழ் அமுதன் said...
என்ன ஆச்சு இன்னிக்கு நம்ம நண்பர்களுக்கு...! அங்கே ஜமால் ஒரு அசத்து அசத்தி இருக்கார்...!
இங்கே ரம்யா கலக்கி இருகாங்க...!
இத எல்லாம் பார்த்துகிட்டு நம்ப எழுத்தோசை தமிழ் எப்ப்டி சும்மா இருகாங்க..!
//
நன்றி அமுதன், என்ன கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டு அசத்திகிட்டு இருக்கீங்க போட்டாலே:)
//
நட்புடன் ஜமால் said...
அந்த ஸ்டைல நெனச்சா தான் பயந்து வருது
//
பயப்படாதீங்க எப்படியோ வந்துட்டீங்க என்ன செய்ய தைரியமா இருங்க ஜமாலு:)
///என்ன கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டு அசத்திகிட்டு இருக்கீங்க போட்டாலே:) //
அது வெய்யிலுக்கு போட்டது இல்ல.!
சும்மா ஸ்டைலுக்கு போட்டது..!
தமிழ் அமுதன் said...
///என்ன கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டு அசத்திகிட்டு இருக்கீங்க போட்டாலே:) //
அது வெய்யிலுக்கு போட்டது இல்ல.!
சும்மா ஸ்டைலுக்கு போட்டது..!
ஆமா ரம்யா அவருக்கு வீட்டில் பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க...அதான் இப்படி மாறிட்டார்
// தமிழ் அமுதன் said...
///என்ன கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டு அசத்திகிட்டு இருக்கீங்க போட்டாலே:) //
அது வெய்யிலுக்கு போட்டது இல்ல.!
சும்மா ஸ்டைலுக்கு போட்டது..!
//
ஸ்டைலா தான் இருக்கு அமுதன்:) ஒரு நாள் கடன் கொடுங்க நாங்க எல்லாம் போட்டு பாக்கறோம்:)
RAMYA said...

ரம்யா கடன் அன்பை முறிக்கும் அதனால அவர் எல்லாருக்கு தனித்தனியா புதுசே வாங்கி தருவார்..
///ஆமா ரம்யா அவருக்கு வீட்டில் பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க...அதான் இப்படி மாறிட்டார்///
ரைட்டு...!;;) கேக்கவே சந்தோசமா இருக்கு..!
ஸ்டைலா தான் இருக்கு அமுதன்:) ஒரு நாள் கடன் கொடுங்க நாங்க எல்லாம் போட்டு பாக்கறோம்:)//
;;))
//
தமிழரசி said...
தமிழ் அமுதன் said...
///என்ன கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டு அசத்திகிட்டு இருக்கீங்க போட்டாலே:) //
அது வெய்யிலுக்கு போட்டது இல்ல.!
சும்மா ஸ்டைலுக்கு போட்டது..!
ஆமா ரம்யா அவருக்கு வீட்டில் பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க...அதான் இப்படி மாறிட்டார்
//
ஐயோ! அப்படியா இருங்க நான் அவங்க வீட்டுக்கு போறேன் தங்கமணியை பார்த்துட்டு தக்காளி சாம்பார் கொடுத்திட்டு வரேன்:)
//
தமிழரசி said...
RAMYA said...
// தமிழ் அமுதன் said...
///என்ன கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டு அசத்திகிட்டு இருக்கீங்க போட்டாலே:) //
அது வெய்யிலுக்கு போட்டது இல்ல.!
சும்மா ஸ்டைலுக்கு போட்டது..!
//
ஸ்டைலா தான் இருக்கு அமுதன்:) ஒரு நாள் கடன் கொடுங்க நாங்க எல்லாம் போட்டு பாக்கறோம்:)
ரம்யா கடன் அன்பை முறிக்கும் அதனால அவர் எல்லாருக்கு தனித்தனியா புதுசே வாங்கி தருவார்..
//
ஹேய் தமிழு அமுதன் ரொம்ப நல்லவரு நமக்கு கடன் கொடுப்பாரு, அதை போய் ஏதாவது சொல்லி கெடுத்துடாதீங்க:)
//ரம்யா கடன் அன்பை முறிக்கும் அதனால அவர் எல்லாருக்கு தனித்தனியா புதுசே வாங்கி தருவார்..//
தமிழ்... கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு கவிதை எழுத போரீங்களா..?
// தமிழ் அமுதன் said...
//ரம்யா கடன் அன்பை முறிக்கும் அதனால அவர் எல்லாருக்கு தனித்தனியா புதுசே வாங்கி தருவார்..//
தமிழ்... கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு கவிதை எழுத போரீங்களா..?
//
அய்யய்யோ தமிழு வேண்டாம் அப்புறம் கண்ணு தெரியாது, ஏன் இந்த விபரீத ஆசை:)
//
நட்புடன் ஜமால் said...
தாயின் காலடியில் சொர்க்கம்
இதுதான் எனக்கு தெரிஞ்ச பதில்
//
நல்ல சொல்லி இருக்கீங்க ஜமால் அருமை!!!
//
mythees said...
me tha first First
//
வாங்க mythees நீங்க மொதல்லே
வரவிற்கு நன்றி..
RAMYA said...
//
தமிழரசி said...
தமிழ் அமுதன் said...
///என்ன கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டு அசத்திகிட்டு இருக்கீங்க போட்டாலே:) //
அது வெய்யிலுக்கு போட்டது இல்ல.!
சும்மா ஸ்டைலுக்கு போட்டது..!
ஆமா ரம்யா அவருக்கு வீட்டில் பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க...அதான் இப்படி மாறிட்டார்
//
ஐயோ! அப்படியா இருங்க நான் அவங்க வீட்டுக்கு போறேன் தங்கமணியை பார்த்துட்டு தக்காளி சாம்பார் கொடுத்திட்டு வரேன்:)
ரம்யா உன் சாம்பாருக்கு அவருக்கு இன்னொரு கல்யாணம் அந்த தண்டனை மேல்
மழலையின் மந்தகாஸ சிரிப்பிலா
en karuththu என் கருத்து இது
unmai kadhalil.. adhu tharum parisil..
அருமை ரம்யா.
சொர்க்கம் என நாம் நினைப்பது அப்படி இல்லாதும் போகும் சில காலம் கழித்து. சில அருமைகளை உணராமலே கடந்த பின் காலம் உணர்த்தும் பிறிதொரு சமயத்தில் அவையே சொர்க்கம் என்று.
சரியா சொல்லியிருக்கேனா:)?
சொர்க்கம் எங்கன்னு தெரிஞ்சதுங்ளா? தெரிஞ்சதும் சொல்லி அனுப்புங்க சரியா??
நல்ல தேடல் ...!
sorry pa konjuuundu late aayuduchu inga vanthu etti paakurathukku
sorgam :(
appudeenu onnu irrukkuuuuuuuuuuu?
Post a Comment