Saturday, November 22, 2008

சிறுவனும் வைகைபுயலும்

வைகை: என்ன தான் சும்மா இருந்தாலும் எல்லா பயலுகளும் நம்பளை கேவலமா பார்க்கிற மாதிரியே தெரியுதே. இல்லே நம்மக்குதான் அப்படி தெரியுதோ? இல்லையே நம்ப கண்ணு நம்மளை ஏமாத்தாதே. இன்னைக்கு யாரு கிட்டேயும் சிக்காம நல்ல படியா வீ டு திரும்பனும். வெளியே கிளம்பும்போதே அக்கா திட்டிச்சு.

சிறுவன்: படிப்பு வராமல் சுற்றிக்கொண்டு இருக்கிறான். தினமும் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் ஒரே அடி உதைதான். மைதானத்தில் போயி தினமும் என்னா வெளையாட்டு தானாவே விளையாடறது. துணைக்கு ஒரு பயலுகளும் இல்லை. எல்லாரும் பள்ளிக்கூடத்திற்கு போயிடறாங்க. ம் என்ன செய்யறது? யோசித்து கொண்டே வருபோது நம் வைகை புயல் கண்ணுலே படறாரு. அவனுக்கு நம் வைகை புயலை பார்த்து ஒரு சந்தேகம் வந்து விட்டது. எப்ப பாரு இப்படி சுத்திகிட்டு அளும்பு பண்ணராரே. எப்படி அவராலே மட்டும் முடியுதுன்னு கேப்போம். கோவம் வந்து அடிச்சுப்புடுவாரோ? உகும், சேச்சே பார்க்க அப்படி எயல்லாம் ஒன்னும் தெரியலை. கொஞ்சம் நல்லவராத்தான் தெரியுது. கேட்டு பார்க்கலாம். இவரை பற்றி நம்ம அக்கா அம்மாவிடம் வெட்டியாவே திரியற ஒரு ஜென்மம்ன்னு சொல்லி சிரிச்சுது இல்லே. நம்பளோ சின்ன பையன், ஏதேனும் கேள்வி கேட்டா நம்மளை மதிச்சி பதில் சொல்லுவாரா? என்ன பண்ணலாம்? எதுக்கும் கேட்டு பார்க்கலாம்.

சிறுவன்: அண்ணே , அண்ணே, அண்ணே கொஞ்சம் நில்லுங்கண்ணே. என்று கூப்பிட்டான்.

வைகை: யாரோ நம்மளை அன்பா கூப்பிடற மாதிரி கேட்குதே. ம்கும் அதெல்லாம் ஒன்னும் இருக்காது. ஒரு பய நம்பளை மதிக்கமாட்டேன்கிறான். ஏன் நம்ம தெரு நாய் கூட காறி துப்புற மாதிரி
பாக்குது. முனகிக் கொண்டே நடக்க, மறுபடியும் குரல் கேக்டவே திரும்பி பார்த்த நம் வைகை புயல், அட இங்கே பாருய்யா, ஒரு பையன் நம்மளை நிஜமாகவே கூப்புடறான். என்ன ராஜா, எனையதான் கூபிட்டயா. சரி சீக்கிரம் சொல்லு. எனக்கு அவசரமா ஒரு வேலை இருக்கு.

சிறுவன்: அண்ணே இல்லைண்ணே

வைகை: என்னடா நோள்ளண்ணே சொல்லித்தொலை.

சிறுவன்: இல்லைண்ணே வந்து, வந்து

வைகை: என்னடா மறுபடியுமா? தாங்கமுடியலைடா சொல்லி தொலையேண்டா. சொல்லு, சொல்லு.

சிறுவன்: எண்ணே அவசரமா ஒரு வேலை இருக்குன்னு பொய் சொல்லறிங்க. எனக்கு எல்லாம் தெரியும்ண்ணே, ஊரிலேயே ரொம்ப சோம்பேறித்தனமா சுத்திக்கிட்டு திரியறளையாமே. அது உண்மையாண்ணே ?

வைகை: யோசனையுடன், இவன் நம்மளை பத்தி எல்லா வெவெரமும் தெரிஞ்சுகிட்டுதான் வம்பிற்கு இழுக்கிறான். என்ன இவன் என்னவோ குருகுருன்னே பாக்குறானே. நாம என்னோவ வெட்டிமுரிக்கிற மாதிரி. இருக்கட்டும், இருக்கட்டும் எதுக்கும் கேட்டு வைப்போம். ஏன்டா காலையிலே எந்த வேலையும் இல்லாமல் திரியறவனா நிய்? இன்னைக்கு நான் தான் உனக்கு கிடைச்சேனா. சரி, என்ன சந்தேகம்? சொல்லு சொல்லு சொல்லு.

சிறுவன்: நீங்க தண்ட சோறு தின்னுகிட்டு ஊர்ல வம்பு வளத்துக்கிட்டு இருக்கீங்களாம். அதனாலே உங்க கிட்டே எதுவும் பேச கூடாதுன்னு எங்க வீட்டலே சொல்லராங்கண்ணே. நீங்க அப்படியாண்ணே?

வைகை: இவன் இப்படி நம்மளை போட்டு டார்ச்செர் பான்னறானே. இவனை ஆரம்பத்திலேயே ஆப் பண்ணிடனும். இதே வேலையா திரியறாங்க போல இருக்கே. இந்த பேரு மாறனும்னா நாம ஏதாவது சென்ஜாகனுமே. என்ன செயலாம். ம்ம்ம்ம்ம்

சிறுவன்: அண்ணே நானு கேட்டதிற்கு ஒன்னும் பதிலே சொல்லலியேண்ணே. அண்ணே கோவிச்சுகாதிங்கண்ணே. எனக்கு படிப்பு வரலை. படி படின்னு எங்க வீட்டிலே என்னை ஒரே டார்ச்சர்
பண்ணறாங்க. நானும் உங்களோட சேர்ந்துட்டா நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல பொழுது போய்டும்ண்ணே, நானும் உங்களோட சேர்ந்திக்கிறேன்ண்ணே. அண்ணே அண்ணே.

வைகை: என்னடா ஏதோ கச்சியிலே சேரமாதிரி சொல்லறே. நான் இன்னும் அதெல்லாம் ஆரம்பிக்கலைடா. போட போ பள்ளிக்கூடம் போய் படிக்கிற வழியை பாரு. ஆளுங்களையும், முஞ்சிகளையும் பாரு. வந்துட்டானுங்க, கூட்டாளி வேணுமாம் கூட்டாளி. நானே ஏதோ அக்கா வீட்டில் குப்பை கொட்டிகிட்டு இருக்கேன். சரியான கேனப்பயலா இருப்பான் போல. பாக்குற எல்லாரும் நம்ப பேரை கெடுக்கனும்ன்னே பிறவி எடுத்து அலயரமாதிரி தெரியுது. இருக்கட்டும், இருக்கட்டும். இவனுகளுக்கு சரியான பாடம் சொலலித்தரனும்.

சிறுவன்: என்னண்ணே, நான் கேட்டதுக்கு ஒன்னும் பதிலே சொல்லலே. சொல்லுங்கண்ணே. நானும் உங்ககூட சேந்துக்கவா. நாம ரெண்டுபேரும் யாருக்கும் தெரியாம வேறே எங்காவது போய் எல்லா விளையாட்டும் விளையாடலம்ண்ணே. நீங்களும் யாரு கிட்டேயும் இதே சொல்லாதிங்க, நானும் யாருகிட்டேயும் சொல்லைண்ணே.

வைகை: யோசனையுடன் நிற்க

சிறுவன்: உங்களை பத்தி எங்க வீட்டிலே பேசிகிட்டு இருந்தாங்கண்ணே. அப்புறம்தான் உங்களை பத்தி எனக்கு தெரயும்ண்ணே. என்னைய உங்க நண்பனா செத்துககுங்கண்ணே.அண்ணே சொல்லுங்கண்ணே, அண்ணே சொல்லுங்கண்ணே

வைகை : நீ பெரிய K.P. சுந்தரம்பா அம்மா. உனக்கு டக்கு டக்குன்னு பதில் சொல்லானுமா. என்ன கேள்வி கேக்குறே. உங்க வீட்டிலே என்னை பத்தி எல்லாம் ஏன்டா பேசறாங்க?

சிறுவன்: இல்லேண்ணே, எங்க அக்காதான்.

வைகை: என்ன அக்காவா உனக்கு அக்காவெல்லாம் இருக்காங்களா. இத ஏன்டா மோதவே சொல்லை. கிறுக்கு பயபிள்ளே. சரி சரி நானு உன்னே எதுனாச்சும் திட்டுனேனா.

சிறுவன்: இல்லேண்ணே, சும்மாதானே பேசிகிட்டு இருக்கோம். நீங்க எப்பிடிண்ணே என்னைய திட்டமுடியும்? நானு அதை கேட்டு சும்மாவா விட்டுவிடுவேன், என்னை யாரவது கோவம் வரமாதிரி பேசினால், கட்ச்சிடுவேண்ணே, ஆனா உங்களை ஒன்னும் செய்யமாட்டேன், சும்மா வம்புக்குத்தான் பேச ஆரம்பிச்சேன், ஆனா உங்களை எனக்கு ரொம்ப பிடிசிடுச்ச்சுண்ணே. அதெல்லாம் சரிண்ணே, நானு கேட்டதிற்கு பதில் சொல்லுங்கண்ணே.

வைகை: என்னடா மிரட்டரமாதிறியே பேசறே. என்ன கேட்டாலும் பதில் சொல்லித்தான் ஆகணும். அக்கா இருக்காளே. எப்பிடியாவது இவனை சரிகட்டி, இவன் வழியாவே இவன் அக்காளையும் சரிகட்டிடனும். இவனே கொஞ்சம் சுமாராதான் இருக்கான் இவன் அக்கா எப்படி இருப்பாளோ. எப்படி இருந்தா என்ன, நமக்கும் ஒரு பொண்ணு அமைஞ்சா சரி. இவன் கிட்டே கொஞ்சம் பேசி நெப்பு தெரிஞ்சிக்கலாம். தம்பி உன் பேரு என்னா?

சிறுவன்: என் பேரு சுப்பிரமனிண்ணே, பேச்சை மாத்தாதிங்கண்ணே. இன்னைலே இருந்து நானும் உங்க செட் சரியா.

வைகை: இருடா நான் யோசிச்சு ஒரு முடிவை சொல்லறேன். பொருத்துகோடா, சரி உங்க அக்கா பேரு என்னா?

சிறுவன்: அது எதுக்குன்னே உங்களுக்கு?

வைகை: இவன் என்ன ரொம்ப வெவரமா இருப்பான் போல இருக்கே, என்று வைகை யோசிக்கும்போதே...

சிறுவன்: என்ன ரொம்ப யோசிக்கிரரே விடக்கூடாது இவரை, அண்ணே என்னண்ணே ரொம்ப யோசிக்கிறிங்க, நான் கேட்டதிருக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லை. காயா ? இல்லே பழமா?
சொல்லிபிடுங்கண்ணே.

வைகை: என்ன இவன் அக்காளை பத்தி பேச ஒன்னும் பிடி குடுக்கமாட்டேன்கிரனே என்ன செய்யலாம் .... யோசனையுடன் நிற்க
சிறுவன்: வெட்டியா திரியதுக்கு தானே சேர்த்துக்க சொன்னேன். அதுக்கு போய் இவ்வளவு யோசனயாண்ணே.

வைகை: என்னடா கேக்கறே? ஆள பார்த்தாதான் சின்ன பையன இருக்கே, ஆனா நீ ரெம்பா விவரமான பையனாத்தாண்டா இருக்கே.

சிறுவனின் தந்தை: டேய் சுப்பிரமணி எங்கே என்னடா நின்னு பேசிகிட்டு இருக்கே. பள்ளிகூடத்துக்கு போகலை. இவனே ஒரு போக்கெத்தவன். இவன் கூட ஒனக்கு என்னடா பேச்சு.
வைகை: இங்கே பாருங்க நீங்க உங்க மகனை திட்டுங்க, அடிங்க என்னவேன்னாலும் செய்யுங்க ஆனால் என்னைய பத்தி மட்டும் எதுவும் அனாவசியமாக பேசாதிங்க. அவன்தான் வந்து என்கிட்டே
வம்புக்கு இழுக்கிறான்.

சிறுவனின் தந்தை: என்னடா இதெல்லாம்.

சிறுவன்: அடிக்கதீங்கப்பா அவர்தான் என்னைய கூப்பிட்டு அக்கா பேரை கேட்டாரு.

சிறுவனின் தந்தை: சொன்னியாடா, சொன்னியாடா....

சிறுவன்: அடிக்கதீங்கப்பா, நான் சொல்லுவேனா, சொல்லமாட்டேன்னு சொன்னதும், சரி வாடா விளையாடலாம்னு கூப்பிட்டாருப்பா.

வைகை: சரியான வம்பு பிடிச்ச பையனா இருப்பான் போல இருக்கே, அநியாயத்திற்கு அவன் அப்பாவிடம் மாட்டி விட்டுட்டானே. இவன் நம்பளை என்ன சொல்லபோரானோ இன்னைக்கு யாரு முகத்திலே முழிச்சேனோ தெரியலையே. அக்கா வேற சொல்லிச்சு. இன்னக்கு எதனாச்சும் வம்பு இழுத்துகிட்டு வந்தே அவ்வளவுதான் அடுப்பு மேலே தூக்கி ஒக்கார வச்சிடுவேன். காட்டுக்கு போய் நாலு விறகு வெட்டினாலும் வெண்ணி தண்ணி போட உதவும். இப்படி எல்லாம் சொல்லி திட்டிச்சி. இது மட்டுமா இன்னும் எவ்வளவோ. என்னா ரெண்டு பெரும் நம்மையே பாக்கிறாங்களே, நாம யோசிச்ச நேரத்திலே இன்னும் என்னென்ன போட்டு கொடுத்தானோ, ஐயோ கடவுளே என்னையே காப்பாத்துப்பா. அவன் அப்பா முழிக்கிற முழியே சரி இல்லையே.

சிறுவனின் தந்தை: டேய் இங்கே வாடா

வைகை: என்னது டேயா, மருவாதி, மருவாதி.

சிறுவனின் தந்தை: மரியாதையா உனக்கா, டேய் வாடா இங்கேன்னா, அங்கேயே நின்னுகிட்டு திரு திருன்னு முளிக்கிறயா? என்னடா சொன்னே சுப்பிரமனிகிட்டே.

வைகை: என்ன சொல்லிப்புட்டேன்னு இவ்வளவு கோவமா பேசறீங்க?

சிறுவனின் தந்தை: கிட்டே வாடான்னா, அங்கேயே நின்னுகிட்டு அலம்பலா பண்ணறே? நானே அங்கிட்டு வரேன்.

வைகை: ஆத்தி இவன் என்னைய அடிக்க வரமாதிரி வரான். வடிவேலு ஓட்றா ஓட்றா, இப்படி மனசாச்சி கூறியபடி, பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடிக்கொண்டிருக்கும்போது, எதிரே வந்த தன் மாமா மேல் மோதி நிற்க. ஆத்தி, மாமா, மாமா அது வந்து நா இல்ல அவன்தான்.

மாமா: வீட்டுக்கு வா பேசிக்கிறேன்.

ரம்யா

மொக்கயா இருந்தாலும் ஓட்டு போடுங்களேன்

41 comments :

தமிழ் அமுதன் said...

நான்தான் முதல்ல!
படிச்சுட்டு அப்புறம் கருத்து சொல்லுறேன் !

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் ரெண்டாவது..
நானும் இப்போ படிச்சிட்டு, திங்கட்கிழமை வந்து பதில் சொல்றேன்,,

தமிழ் அமுதன் said...

யம்மா! யம்மா!
ரம்யாம்மா! பெரிய
சேட்டை கார புள்ளயா இருப்பீங்க போல இருக்கே?
கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க!

நீங்க கும்மி அடிக்க நல்ல ஜாலியான பதிவு!

எப்படியோ நீங்க இப்படியெல்லாம் எழுதுறது
என் மனசுக்கு ஒரு சந்தோசத்தையும்,நிறைவையும்
கொடுக்குது.வாழ்த்துக்கள்!

நசரேயன் said...

உள்ளேன் போட்டு விட்டு அப்புறமா வந்து படிக்கலாமுன்னு நினைச்சேன்,ஆனா முடியலை நிப்பாட்ட முடியலை படிக்கிறதை, ரெம்ப நல்லா இருக்கு உங்க கும்மி

விஜய் ஆனந்த் said...

:-)))...

Anonymous said...

வந்தாச்சு.. ஒட்டும் போட்டாச்சு.. முதல் பின்னூட்டமும் போட்டாச்சு..இராகவன், நைஜிரியா

Anonymous said...

//மொக்கயா இருந்தாலும் ஓட்டு போடுங்களேன் //

இதைத்தான் நாங்க எதிர்பார்த்துகிட்டு இருக்கோம்.. ஆல் கும்மிஸ்.. ப்லீஸ் கம் ஃபார் கும்மி... இராகவன், நைஜிரியா

Anonymous said...

// என்ன தான் சும்மா இருந்தாலும் எல்லா பயலுகளும் நம்பளை கேவலமா பார்க்கிற மாதிரியே தெரியுதே. இல்லே நம்மக்குதான் அப்படி தெரியுதோ? இல்லையே நம்ப கண்ணு நம்மளை ஏமாத்தாதே. //

அணிமா உன்னை பார்த்து எழுதின மாதிரி தெரியுதே... இராகவன், நைஜிரியா

RAMYA said...

//
நான்தான் முதல்ல!
படிச்சுட்டு அப்புறம் கருத்து சொல்லுறேன் !
//

ஜீவன் முந்திகிட்டீங்க, உங்கள் முதல் பிண்ணுட்டத்திற்கு மிக்க நன்றி நண்பா..

ரம்யா

RAMYA said...

//
நான் தான் ரெண்டாவது..
நானும் இப்போ படிச்சிட்டு, திங்கட்கிழமை வந்து பதில் சொல்றேன்,,

//

எப்போ திங்கட்கிழமை வரும்? அன்னைக்கு என்ன நல்ல நாளா? எந்த கிளமைன்னாலும் வாங்க, வாங்க. நாங்க காத்திருப்போம்

ரம்யா

RAMYA said...

//
யம்மா! யம்மா!
ரம்யாம்மா! பெரிய
சேட்டை கார புள்ளயா இருப்பீங்க போல இருக்கே?
கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க!

நீங்க கும்மி அடிக்க நல்ல ஜாலியான பதிவு!

எப்படியோ நீங்க இப்படியெல்லாம் எழுதுறது
என் மனசுக்கு ஒரு சந்தோசத்தையும்,நிறைவையும்
கொடுக்குது.வாழ்த்துக்கள்!
//

ஜீவன் நீங்கள்ளாம் இருக்கிற நம்பிக்கைதான். கற்பனை அப்படியே பிச்சிகிட்டு வருதில்லே. ஹிஹிஹிஹி ஹி

ரம்யா

RAMYA said...

//
உள்ளேன் போட்டு விட்டு அப்புறமா வந்து படிக்கலாமுன்னு நினைச்சேன்,ஆனா முடியலை நிப்பாட்ட முடியலை படிக்கிறதை, ரெம்ப நல்லா இருக்கு உங்க கும்மி
//

வாங்க நசரேயன் சார் முதன் முறையா வந்து என் ஜோதியிலே ஐயக்கியமானத்திற்கு மிக்க நன்றி. அருமையான பிண்ணுட்டம் அளித்தமைக்கு மிகவும் நன்றி நண்பா.

வாங்க வந்து நிறைய எழுதுங்க.

ரம்யா

RAMYA said...

//
வந்தாச்சு.. ஒட்டும் போட்டாச்சு.. முதல் பின்னூட்டமும் போட்டாச்சு..இராகவன், நைஜிரியா
//

RAMYA said...

//
வந்தாச்சு.. ஒட்டும் போட்டாச்சு.. முதல் பின்னூட்டமும் போட்டாச்சு..இராகவன், நைஜிரியா

//

வாங்க ராகவன் வந்து பிண்ணுட்டத்திற்கு மிக்க நன்றி

ரம்யா

RAMYA said...

//மொக்கயா இருந்தாலும் ஓட்டு போடுங்களேன் //

இதைத்தான் நாங்க எதிர்பார்த்துகிட்டு இருக்கோம்.. ஆல் கும்மிஸ்.. ப்லீஸ் கம் ஃபார் கும்மி... இராகவன், நைஜிரியா//

கும்மிக்கு என் சார்பா எல்லாரையும் அழைத்ததிற்கு மிக்க நன்றி. பாப்போம் எவ்வளவும் பேரு வராங்களோ ம்ம்ம்ம்ம்.

ரம்யா

RAMYA said...

அணிமா உன்னை பார்த்து எழுதின மாதிரி தெரியுதே... இராகவன், நைஜிரியா said...
// என்ன தான் சும்மா இருந்தாலும் எல்லா பயலுகளும் நம்பளை கேவலமா பார்க்கிற மாதிரியே தெரியுதே. இல்லே நம்மக்குதான் அப்படி தெரியுதோ? இல்லையே நம்ப கண்ணு நம்மளை ஏமாத்தாதே. //

அணிமா உன்னை பார்த்து எழுதின மாதிரி தெரியுதே... இராகவன், நைஜிரியா
//

ஏன் இந்த கொலை வெறி நண்பா, உருப்படாதது அணிமவாவும் நானும் நல்ல சரித்திரம் படைத்த நண்பர்களாக இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா? ஐயய்யோ இப்படி சிண்டு முடிந்து விட்டாச்சு. இனிமேல் நல்லா தூக்கம் வருமா? எனக்கு தெரியும், எனக்கு தெரியும் என்னைக்காவது ஒரு நாள் ராகவன் ஏதாவது சிண்டு முடிவார் என்று. ஐயய்யோ நம்ப S.K. தம்பி மாதிரி பொலம்ப வச்ச்சிடீகளே!! ஒன்னும் இல்லை நான் அன்று செய்ததை நீங்க இன்னைக்கு செய்திட்டிங்க. பழிக்கு பழி. நல்லா இருந்தா சரி. ம்ம்ம்ம்ம், ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், கண்ணை கட்டுதே....

ரம்யா

RAMYA said...

//
விஜய் ஆனந்த் said...
:-)))...
''

வாங்க விஜயானந்த், எனது பதிவிற்கு முதன் முறையாக வந்திருக்கீங்க. மிக்க நன்றி நண்பா, சிரித்தால் மட்டும் போதாது அப்பு..... ஏதாவது எழுதனும். இதுதான் நாங்க வைத்திருக்கும் எழுத படாத சட்டம். நன்றி நண்பா.

அப்படியே கொஞ்சம் ஓட்டும் போடுங்கோ !!

ரம்யா

ரம்யா

நட்புடன் ஜமால் said...

ஓட்டுதான போட்றுவோம்.

நல்லா தான போய்கிட்டு இருக்கு.

மொக்கைய போட நம்ம கைப்புள்ளைய கூப்டுக்கிட்டீக...

நல்லாத்தான் இருக்கு உங்க idea.

RAMYA said...

//
ஓட்டுதான போட்றுவோம்.

நல்லா தான போய்கிட்டு இருக்கு.

மொக்கைய போட நம்ம கைப்புள்ளைய கூப்டுக்கிட்டீக...

நல்லாத்தான் இருக்கு உங்க idea.
//

வாங்க அதிரை ஜமால் அவர்களே, முதல் வருகைக்கு நன்றிங்கோ!!, ஒட்டு போட்டதிற்கும் நன்றிங்கோ, கைபிள்ளையை கூப்பிடறேங்க, உஷாருங்கோ வந்து அலம்பல் பண்ணிடபோராறு.

உங்களாலே சமாளிக்க முடியுமா?

ரம்யா

VIKNESHWARAN ADAKKALAM said...

சூப்பரா இருக்குங்க...

Anonymous said...

//கைபிள்ளையை கூப்பிடறேங்க, உஷாருங்கோ வந்து அலம்பல் பண்ணிடபோராறு.//

கைபுள்ள அணிமா திங்கட்கிழமை வருவார்.. வருவார்.. எப்படி என்று கேட்டால் கீழே உள்ளதைப் படிக்கவும்.
//உருப்புடாதது அணிமா said
நான் தான் ரெண்டாவது..
நானும் இப்போ படிச்சிட்டு, திங்கட்கிழமை வந்து பதில் சொல்றேன்,,//

இராகவன், நைஜிரியா

குடுகுடுப்பை said...

இது என்ன சின்னப்புள்ளதனமா இருக்கு,யாரு அந்த சிறுவன்.? யாரு அந்த அக்கா?.

குடுகுடுப்பை said...

சிறுவனுக்கு அக்கா ஹிஹீஈஈ

நட்புடன் ஜமால் said...

\\RAMYA said...
//
ஓட்டுதான போட்றுவோம்.

நல்லா தான போய்கிட்டு இருக்கு.

மொக்கைய போட நம்ம கைப்புள்ளைய கூப்டுக்கிட்டீக...

நல்லாத்தான் இருக்கு உங்க idea.
//

வாங்க அதிரை ஜமால் அவர்களே, முதல் வருகைக்கு நன்றிங்கோ!!, ஒட்டு போட்டதிற்கும் நன்றிங்கோ, கைபிள்ளையை கூப்பிடறேங்க, உஷாருங்கோ வந்து அலம்பல் பண்ணிடபோராறு.

உங்களாலே சமாளிக்க முடியுமா?

ரம்யா\\

ஏங்க ரம்யா இந்த கொல வெறி.

நான் நம்ம வைப்புயலச்சொன்னேங்க

புதியவன் said...

உங்களுக்குக் காமெடி நல்லா வருதுங்க
வைகைபுயலுக்கு நீங்க எழுதுன ஸ்கிரிப்ட்டு அப்படியே பொருந்துதுங்க ரம்யா.

ராகவன் நீங்க ஒரு முடிவோட இருப்பது தெரியுது. இருக்க்கட்டும், இருக்கட்டும். எனக்கும் ஒரு நாள், எந்த நாள் அந்த நாள். நானு என்ன யோசிக்கிறேன்? தெரியலையே அய்யய்யோ, ராகவன் நீங்க ஜெய்ச்ச்சுட்டீங்க. அணிமா அவர்களே ராகவனிடம் இருந்து என்னைய காப்பாத்துங்கள்.

ரம்யா

RAMYA said...

//
இது என்ன சின்னப்புள்ளதனமா இருக்கு,யாரு அந்த சிறுவன்.? யாரு அந்த அக்கா?.
//

வாங்க குடுகுடுப்பையரே! அந்த சின்னபையன் பறவை முனியம்மாவின் தம்பி.

ரம்யா

Anonymous said...

//ராகவன் நீங்க ஒரு முடிவோட இருப்பது தெரியுது. இருக்க்கட்டும், இருக்கட்டும். எனக்கும் ஒரு நாள், எந்த நாள் அந்த நாள். நானு என்ன யோசிக்கிறேன்? தெரியலையே அய்யய்யோ, ராகவன் நீங்க ஜெய்ச்ச்சுட்டீங்க. அணிமா அவர்களே ராகவனிடம் இருந்து என்னைய காப்பாத்துங்கள்.

ரம்யா//

கவலை வேண்ட்டாம் சகோதரி.. எல்லா சும்மா விளையாட்டு.. உங்களிடம் நான் மாட்டாமலா போய் விடுவேன்.. அப்ப கவனிச்சுக்கலாம்.. கும்மியில இதெல்லாம் சகஜமப்பா!!
இராகவன், நைஜிரியா

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
சிறுவனுக்கு அக்கா ஹிஹீஈஈ
//

தங்கமணி இங்கே வந்து பாருங்கோ!! உங்களுக்கு தெரியாமல் ஏதோ எல்லாம் குடுகுடுப்பையார் விசாரிக்கிராறு. கொஞ்சம் கவனிங்க, என்னா கையிலே சப்பாத்தி கட்டையா ? உங்க வீட்டிலே இன்னைக்கி சப்பாத்தியா. சரி சரி..... குடுகுடுப்பையாரே நல்லா மாட்டுனீங்களா?

ஹ ஹ ஹ ஹ ஹ

ரம்யா

RAMYA said...

\\RAMYA said...
//
ஓட்டுதான போட்றுவோம்.

நல்லா தான போய்கிட்டு இருக்கு.

மொக்கைய போட நம்ம கைப்புள்ளைய கூப்டுக்கிட்டீக...

நல்லாத்தான் இருக்கு உங்க idea.
//

வாங்க அதிரை ஜமால் அவர்களே, முதல் வருகைக்கு நன்றிங்கோ!!, ஒட்டு போட்டதிற்கும் நன்றிங்கோ, கைபிள்ளையை கூப்பிடறேங்க, உஷாருங்கோ வந்து அலம்பல் பண்ணிடபோராறு.

உங்களாலே சமாளிக்க முடியுமா?

ரம்யா\\

ஏங்க ரம்யா இந்த கொல வெறி.

நான் நம்ம வைப்புயலச்சொன்னேங்க

//

அதிரை ஜமால் அவர்களே நல்லா மாட்டுனீங்களா? எங்களை மாதிரி சில பேரு அப்படித்தான் கொலை வெறியோட அலையறோம். உஷாரு, உஷாரு, உஷாரு. என்னா பயந்திட்டீங்களா எல்லாமே ஒரு தமாஷு தான்..

ஹ ஹ ஹ ஹ ஹ

ரம்யா

RAMYA said...

//
உங்களுக்குக் காமெடி நல்லா வருதுங்க
வைகைபுயலுக்கு நீங்க எழுதுன ஸ்கிரிப்ட்டு அப்படியே பொருந்துதுங்க ரம்யா.

//

நானு கொஞ்சம் காமெடி கார பிள்ளைங்கோ அப்படின்னு சொல்லலாம், ஆனா தன்னடக்கம் தடுக்குதுங்கோ,.

நன்றி மிக்க நன்றி புதியவன் அவர்களே !!

ஹ ஹ ஹ ஹ ஹ

ரம்யா

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
//ராகவன் நீங்க ஒரு முடிவோட இருப்பது தெரியுது. இருக்க்கட்டும், இருக்கட்டும். எனக்கும் ஒரு நாள், எந்த நாள் அந்த நாள். நானு என்ன யோசிக்கிறேன்? தெரியலையே அய்யய்யோ, ராகவன் நீங்க ஜெய்ச்ச்சுட்டீங்க. அணிமா அவர்களே ராகவனிடம் இருந்து என்னைய காப்பாத்துங்கள்.

ரம்யா//

கவலை வேண்ட்டாம் சகோதரி.. எல்லா சும்மா விளையாட்டு.. உங்களிடம் நான் மாட்டாமலா போய் விடுவேன்.. அப்ப கவனிச்சுக்கலாம்.. கும்மியில இதெல்லாம் சகஜமப்பா!!
இராகவன், நைஜிரியா

//

ஆமா நானும் விளையாட்டுக்குத்தான் சொன்னேன். ஊக்கபடித்தியத்திற்கு நன்றி சகோதரா.

ரம்யா

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
சிறுவனுக்கு அக்கா ஹிஹீஈஈ
//

தங்கமணி இங்கே வந்து பாருங்கோ!! உங்களுக்கு தெரியாமல் ஏதோ எல்லாம் குடுகுடுப்பையார் விசாரிக்கிராறு. கொஞ்சம் கவனிங்க, என்னா கையிலே சப்பாத்தி கட்டையா ? உங்க வீட்டிலே இன்னைக்கி சப்பாத்தியா. சரி சரி..... குடுகுடுப்பையாரே நல்லா மாட்டுனீங்களா?

ஹ ஹ ஹ ஹ ஹ

ரம்யா

ஏன் இந்த கொலவெறி.

நட்புடன் ஜமால் said...

\\ RAMYA said...
\\RAMYA said...
//
ஓட்டுதான போட்றுவோம்.

நல்லா தான போய்கிட்டு இருக்கு.

மொக்கைய போட நம்ம கைப்புள்ளைய கூப்டுக்கிட்டீக...

நல்லாத்தான் இருக்கு உங்க idea.
//

வாங்க அதிரை ஜமால் அவர்களே, முதல் வருகைக்கு நன்றிங்கோ!!, ஒட்டு போட்டதிற்கும் நன்றிங்கோ, கைபிள்ளையை கூப்பிடறேங்க, உஷாருங்கோ வந்து அலம்பல் பண்ணிடபோராறு.

உங்களாலே சமாளிக்க முடியுமா?

ரம்யா\\

ஏங்க ரம்யா இந்த கொல வெறி.

நான் நம்ம வைப்புயலச்சொன்னேங்க

//

அதிரை ஜமால் அவர்களே நல்லா மாட்டுனீங்களா? எங்களை மாதிரி சில பேரு அப்படித்தான் கொலை வெறியோட அலையறோம். உஷாரு, உஷாரு, உஷாரு. என்னா பயந்திட்டீங்களா எல்லாமே ஒரு தமாஷு தான்..

ஹ ஹ ஹ ஹ ஹ

ரம்யா\\

பேந்துட்டேன் ...

ஆமா உங்க பேர ஏங்க போட்ரீக

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா

ரம்யா

அப்படியே வைகைப்புயலை கொண்டாந்து பேச வச்சிருக்கீங்களே.

கலக்கறீங்க.

வாழ்த்துக்கள்.

RAMYA said...

//
அதிரை ஜமால் அவர்களே நல்லா மாட்டுனீங்களா? எங்களை மாதிரி சில பேரு அப்படித்தான் கொலை வெறியோட அலையறோம். உஷாரு, உஷாரு, உஷாரு. என்னா பயந்திட்டீங்களா எல்லாமே ஒரு தமாஷு தான்..

ஹ ஹ ஹ ஹ ஹ

ரம்யா\\

பேந்துட்டேன் ...

ஆமா உங்க பேர ஏங்க போட்ரீக
//

படித்து முடித்து வரும்போது என் பெயர் மறந்து விடுவாங்கன்னுதான்.

நட்புடன் ஜமால் said...

\\RAMYA said...
//
அதிரை ஜமால் அவர்களே நல்லா மாட்டுனீங்களா? எங்களை மாதிரி சில பேரு அப்படித்தான் கொலை வெறியோட அலையறோம். உஷாரு, உஷாரு, உஷாரு. என்னா பயந்திட்டீங்களா எல்லாமே ஒரு தமாஷு தான்..

ஹ ஹ ஹ ஹ ஹ

ரம்யா\\

பேந்துட்டேன் ...

ஆமா உங்க பேர ஏங்க போட்ரீக
//

படித்து முடித்து வரும்போது என் பெயர் மறந்து விடுவாங்கன்னுதான்\\

நிஜாமாவே நீங்க நல்லா காமெடிதான் போங்க - ஹய்யோ ஹய்யோ

நன்றி நன்றி நன்றி

மங்களூர் சிவா said...

சூப்பர்!

மங்களூர் சிவா said...

சிறுவன் ரொம்ப வெவெரமா இருக்கானே அக்கா பேரு ரம்யாவோ?????

சொம்மா ஒரு டவுட் அம்புட்டுதான்

:))))))))))))))))))))

RAMYA said...

//
மங்களூர் சிவா said...
சிறுவன் ரொம்ப வெவெரமா இருக்கானே அக்கா பேரு ரம்யாவோ?????

சொம்மா ஒரு டவுட் அம்புட்டுதான்

:))))))))))))))))))))
//

இல்லை இல்லை -- இல்லைங்கோ,
நன்றி சிவா............