இது ஒரு உண்மை சம்பவம். மிகவும் பரசித்தி பெற்ற ஒரு பள்ளி. அதில் 6 வயதே நிரம்பிய ஒரு சிறுவனின் கண்ணீர் சம்பவம் என் காதுகளுக்கு எட்டியது.
அந்த பள்ளியில் ஒரு சிறுவனன் 1 ஆம் வகுப்பில் படித்து வருகிறான். அவன் பெயர் ராஜா என்று வைத்துக்கொள்ளுவோம். ராஜா சுமாராக படிக்கும் மாணவன் என்று கூறினார்கள். படிப்பது முதல் வகுப்பு இதில் சுமார் என்ன, சுமார் இல்லாமல் என்ன? எப்போதும் சுமாராக மதிப்பெண்கள் வாங்கும் நம் ராஜா கடந்த மாதந்திர தேர்வில் எல்லா பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் நூற்றுக்கு தொன்னுத்தொன்பது மதிப்பெண்கள் வாங்கி
உள்ளான். இதை பாராட்டும் வகையில் ராஜாவின் வகுப்பூ ஆசிரியை அவர்கள், ராஜாவை ஊக்குவிக்கும் வகையில், V.Good and * * * இப்படி மூன்று ஸ்டார்கள் வழங்கி இருக்கிறார்கள். ராஜாவிற்கோ சந்தொஷம் மகிழ்ந்திருக்கிறான், தலை கால் புரியவில்லை. ஒவ்வொரு பாடம் கற்பிக்க வரும் ஆசிரிகைகளிடம் காண்பித்து, அவர்களும் ராஜாவை பாராட்டி கொஞ்சி அனுப்பி இருக்கிறார்கள். இவைகள் அனைத்தும் மதிய உணவு வேளை வரை தொடர்ந்து நடந்திருக்கிறது.
மதிய உணவு இடைவேளை முடிந்து, அடுத்து வந்த ஆசிரியையிடம் ராஜா, மிஸ் நான் 3 ஸ்டார்கள் வாங்கிஇருக்கிறேன் என்று காட்டி உள்ளான். அந்த ஆசிரியையும் அந்த மதிப்பெண் வாங்கிய தாளை வாங்கி பார்த்திருக்கிறார்கள். ஆனால் அந்த மதிப்பெண் தாளில் ராஜாவின் பெயர் மற்றும் அவன் வாங்கிய மதிப்பெண்கள் 66 என்று இருந்திருக்கிறது. அந்த ஆசிரியைக்கு ஒன்றும் புரியவில்லை. 66 மதிப்பெண்களுக்கு எல்லாம் ஸ்டார்ட்ஸ் போட மாட்டங்கப்பா. நீ அடுத்த முறை நல்லா படித்து, நல்ல மதிப்பெண் வாங்கினால் அப்போ உனக்கு நிறைய ஸ்டார்ஸ் எல்லாம் போடுவாங்க, இப்போ நீ போய் உன் இடத்தில் உட்கார் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் ராஜாவோ அய்யோ என் ஸ்டார்ஸ் எல்லாம் காணாம போய்டுச்சு. மிஸ் என் ஸ்டாட்ஸ் எல்லாம் வேணும், என் ஸ்டார்ட்ஸ் என்று விடாமல் அழுதிருக்கிறான். உடனே அந்த ஆசிரியை நல்ல புத்திமதிகள் கூறி
அவனை போய் இடத்தில் அமர சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ராஜா அதை கேட்காமல் ஸ்டார்ஸ் ஸ்டார்ஸ் என்று அழுததினால், ராஜாவின் வகுப்பாசிரியையை அழைத்து விபரம் கேட்டு இருக்கிறார்கள். வகுப்பு ஆசிரியையும் ஆமாம் மிஸ் அவன் 99 மதிப்பெண்கள் தான் ஒரு பாடத்தில் வாங்கி இருந்தான். நான்தான் அவனுக்கு 3 ஸ்டார்ஸ் போட்டேன், ஆனால் எப்படி ராஜாவின் மதிப்பெண்கள் 99 என்பது 66 ஆக மாறியது என்று ஒன்றும் புரியாமல் விளித்திருக்கிறார்கள். பிறகு மதிப்பெண் register ஐ சரிபார்த்திருக்கிறார்கள். அதில் ராஜாவின் மதிப்பெண் 99 ஆகத்தான் இருந்திருக்கிறது. எப்படி என்று மறுபடியும் வகுப்பிற்கு வந்திருக்கிறார்கள். ராஜாவின் முன்னால் ஒரு சிறு பெண் குழந்தை (அதே 6 வயது, பெயர் மாதவி என்று வைத்துகொள்ளுவோம்) அமர்ந்திருக்கிறாள். அவளின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆனால் மதிப்பெண் பட்டியலில் 66 என்று இருதிருக்கிறது. அனால் கையில் வைத்திருக்கும் மதிப்பெண் தாளில் மாதவியின் பெயருக்கு கீழ் 99 என்று இருந்துள்ளது. வகுப்பு ஆசிரியைக்கு ஒன்றும் புரியவில்லை. மாதவியை அருகே அழைத்து நீ வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு மாதவி எந்தவித தயக்கமும் இல்லாமல் 99 நான் தான் 99 வாங்கி இருக்குறேனே. என்று மதிப்பெண் தாளை கண்பித்துஇருக்கிறாள்.
இந்த வயதில் ஒரு பயம் இல்லாமல் இந்த பெண் இவ்வாறு கூறியது யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்த்திருக்கும் என்று கேள்வியுடன், மாதவியை முதல்வரிடம் அழைத்து சென்றிருக்கிறார்கள். முதல்வருக்கு செல்லும் முன்பே விபரம் அறிவிக்கப்பட்டது. அதனால் முதல்வர் மிகவும் அன்புடன் மாதவியை தன்னிடம் அழைத்து, என்னடா கண்ணா உன் மதிப்பெண் தாளை uncle க்கு காட்டும்மா, என்று கேட்டிருக்கிறார். அவளும் மதிப்பெண் தாளை மிகவும் மகிழ்ச்சியுடன் காட்டி இருக்கிறாள். அதில் எல்லா மதிப்பெண்கள் கூட்டுத்தொகை சரியாக 99 என்று இருதிருக்கிறது. நீ வாங்கினதா என்று அன்புடன் விசார்த்திதிருக்கிறார். மாதவி ஆமாம் uncle நான்தான் வாங்கி இருக்கிறேன் என்று கடுகளவு கூட தயங்காமல்
சொல்லி இருக்கிறாள். பிறகு முதல்வர் இனிப்பு, பரிசுகள் எல்லாம் கொடுத்து மதிப்பெண்களை பற்றி விசார்த்திருக்கிறார். எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு, நான் 99 வாங்கி இருக்கிறேன் என்று மறுபடியும் அதே தான் கூறி இருக்கிறாள். ஒன்றும் கூறாமல் மாதவியயை அனுப்பி விட்டு. தவறு எப்படி நடந்திருக்கு என்று கண்டுபிடிக்குமாறு வகுப்பாசிரியைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நடந்தது என்ன?
மதிய உணவு இடைவேளைக்கு அனைவரும் சென்றிருந்த நேரத்தில், மாதவி ராஜாவின் விடைத்தாளில் உள்ள ராஜாவின் பெயரை அழித்துவிட்டு, அதில் தன் பெயரை எழுதி, தன் விடைத்தாளில் தன் பெயரை அழித்துவிட்டு ராஜாவின் பெயரை எழுதி இருக்கிறாள் என்று கண்டுபிடித்து விட்டார்கள். மறுபடியும் மாதவியை கூப்பிட்டு விசாரித்தால், அப்போதும் அதே பதில்தான். இது என்னோட விடைத்தாள் நான் வாங்கிய மதிப்பெண்கள், நான் வாங்கிய 3 ஸ்டார்ஸ் என்று ஆணித்தரமாக கூறிஇருக்கிறாள். முதல்வர் எதுவும் பேசாமல் நாளைக்கு உன் அப்பா மற்றும் அம்மாவை அழைத்து வா என்றிருக்கிறார். பிறகு ஏன் இந்த பெண் இவ்வாறு செய்துள்ளது என்று தீர விசாரித்ததில், கிடைத்த உண்மை என்னவென்றால்? மாதவியின் பெற்றோர்கள் அவள் குறைந்த மதிபெண்கள் வாங்கும்போதெல்லாம் அவளுக்கு ஒரே திட்டு ஒரே அடியாம். அடி வாங்கி வாங்கி ஒரே ஒரு நண்பியிடம் சொல்லி
அழுவாளாம். அந்த நண்பி குழந்தையும் ஒன்றும் புரியாமல், அழாதே என்று கூறுவாளாம். இதை விசாரிக்குபோது அந்த சிறு குழந்தை கூறி இருக்கிறது. பிறகு அவர்கள் வீட்டு பக்கத்தில் குடித்தனம் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளார்கள். அவர்களும் அந்த குழந்தையை எப்போதும் அடிப்பார்கள். ஏன்னு கேட்டால் சரியா படிக்க
மாட்டேன்கிறாள் என்பார்களாம். இதை கேட்டு எனக்கு திக் என்று இருந்தது.
6 வயது என்பது ஒரு வயதே அல்ல. சில குழந்தைகள், சிறு குழந்தையாக இருக்கும்போதே நன்றாக படிக்கும் அறிவை பெறுகிறார்கள், சில குழந்தைகள் மெதுவாக நன்றாக படித்து விடுவார்கள். குழந்தைகள் ஏற்கனவே புத்தக மூட்டைகளை சுமந்து மிகவும் சொல்லவொண்ணா துயரத்தில் இருக்கிறாரகள் என்று தான் என் கண்ணோட்டத்தில் தெரிகிறது.
இது தவறாகவும் இருக்கலாம்.
6 வயதில் நல்ல மதிபெண் வாங்கவில்லை என்று அடித்ததில் அந்த சிறு குழந்தையின் போக்கு எவ்வளவு அபாயகரமாக மாறி இருக்கிறது பார்த்தீர்களா? குழந்தைகள் படிக்கவேண்டும் என்று கண்டிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். அதற்கு எவ்வளவோ வழி முறைகளை பெற்றோர்கள் கையாளலாம் அல்லவா ?
பெற்றோர்களின் இந்த செய்கை அந்த பிஞ்சு குழந்தையின் மனதை எவ்வளவு மோசமான முறையில் மாற்றி உள்ளது பார்த்தீர்களா? இது ஒரு கெட்ட செயலாகவும் இந்த சமுதாயத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது அல்லவா?
தயவு செய்து தாய்மார்களே, தந்தைமார்களே இது போன்ற நடவடிக்கைகளை குறைத்து கொள்ளவீர்கள் என்று நம்புகின்றேன்.
அந்த குழந்தைக்கு எந்த வித மன உளைச்சலும் ஆகாமல் பள்ளி நிர்வாகம் கவனித்து வந்துள்ளது என்பதை நான் மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.
இது போல் பல மாதவிகள் வளராவண்ணம் பார்த்துகொள்வோமாக!!
ரம்யா
50 comments :
சொந்த கதை மாதிரி இருக்கு, ஆனாலும் நல்ல கருத்து
மார்க் வங்கரதுன சும்மாதான... குமுறுகிறார் கும்மா குத்து வாங்கும் மாதவி...
//அந்த குழந்தைக்கு எந்த வித மன உளைச்சலும் ஆகாமல் பள்ளி நிர்வாகம் கவனித்து வந்துள்ளது என்பதை நான் மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்//
அப்பாடா....கொஞ்சம் நிம்மதியாக இருந்தது...
அன்புடன் அருணா
//
நசரேயன் said...
சொந்த கதை மாதிரி இருக்கு, ஆனாலும் நல்ல கருத்து
//
ஐயோ இது சொந்த கதை இல்லேங்கோ, காதால் கேட்டதுதான்.
//
மார்க் வங்கரதுன சும்மாதான... குமுறுகிறார் கும்மா குத்து வாங்கும் மாதவி...
//
வாங்க அண்ணன் வணங்காமுடி
கும்மா குத்தா சும்மா சொல்லக்கூடாது, அண்ணன் வணங்காமுடிக்கும் இது போல் சொந்த அனுபவம் உண்டோ ?
//
அன்புடன் அருணா said...
//அந்த குழந்தைக்கு எந்த வித மன உளைச்சலும் ஆகாமல் பள்ளி நிர்வாகம் கவனித்து வந்துள்ளது என்பதை நான் மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்//
அப்பாடா....கொஞ்சம் நிம்மதியாக இருந்தது...
அன்புடன் அருணா
//
வாங்க அருணா, என் வலைப்பதிவிற்கு முதன் முறையாக வந்ததிற்கு மிக்க மகிழ்ச்சி. ஆமா அருணா அதுதான் அந்த நிர்வாகத்தின் அணுகுமுறை எனக்கும் மிகவும் பிடித்தது.
மிக அருமையான பதிவு, சிறு குழந்தையிடம் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியவேண்டாமா?.
//
மிக அருமையான பதிவு, சிறு குழந்தையிடம் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியவேண்டாமா?.
//
வாங்க குடுகுடுப்பையாரே, நீங்கள் கூறி இருப்பது 100 க்கு 100 உண்மை. இந்த சம்பவம் கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். எங்கே போய் கொண்டுஇருக்கிறோம் நாம் ?
aakaa அருமை அருமை - நல்லாவே இருக்கு - நான் கூட ஏதோ 66 / 99 வச்சி மிக்க போடப் போறிங்கண்னு நினைச்சேன் - நல்லாவே முடிச்சிருக்கீங்க
aakaa அருமை அருமை - நல்லாவே இருக்கு - நான் கூட ஏதோ 66 / 99 வச்சி மிக்க போடப் போறிங்கண்னு நினைச்சேன் - நல்லாவே முடிச்சிருக்கீங்க
இது நம் கல்வி முறையில் உள்ள மிகப்பெரிய குறைபாடு ஆகும். நம் கல்வி முறையில் எல்லாமே மார்க் எவ்வளவு எடுத்துள்ளனர் என்பதையே அடிப்படையாக கொள்கின்றனர். சரியான வார்த்தைகளில் சொல்வதானால் படித்ததை யார் ஒழுங்காக வாந்தி எடுக்கின்றார்களோ அவர்கள் நிறைய மார்க் எடுக்க முடியும் என்பதே இன்றைய நிலைமை.
படிப்பு, படிப்பு என்று சிறு பிள்ளைகளை துன்புறுத்தி, அவர்களுடைய இன்பங்களை தொலைத்து விடுகின்றனர்.
கல்வி முறையில் (இப்போது உள்ள மெகாலே முறையில் இருந்து) எப்போது மாற்றம் வருகின்றதோ அன்றுதான் குழைந்தைகள் துன்பப்படுவது குறையும்.
முதல் வகுப்பிற்கே இந்த பாடு படுத்தும் அந்த பெற்றோர்கள் அந்த குழைந்தை பத்தாம் வகுப்பு வரும் போது என்ன பாடுபடுத்துவார்கள் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
அந்த குழைந்தை எவ்விதமான மன உளைச்சைளுக்கும் ஆளாகாமல் பார்த்துக் கொள்ளும் நிர்வாகத்தினருக்கு பாரட்டுக்கள். இராகவன், நைஜிரியா
//
aakaa அருமை அருமை - நல்லாவே இருக்கு - நான் கூட ஏதோ 66 / 99 வச்சி மிக்க போடப் போறிங்கண்னு நினைச்சேன் - நல்லாவே முடிச்சிருக்கீங்க
//
வாங்க தம்பி சீனா, என் பதிவிற்கு முதன் முதலில் வந்திருக்கு மிக்க நன்றி.
வந்து பிண்ணுட்டம் இட்டதிற்கு மிக்க நன்றி.
//
இராகவன், நைஜிரியா said...
இது நம் கல்வி முறையில் உள்ள மிகப்பெரிய குறைபாடு ஆகும். நம் கல்வி முறையில் எல்லாமே மார்க் எவ்வளவு எடுத்துள்ளனர் என்பதையே அடிப்படையாக கொள்கின்றனர். சரியான வார்த்தைகளில் சொல்வதானால் படித்ததை யார் ஒழுங்காக வாந்தி எடுக்கின்றார்களோ அவர்கள் நிறைய மார்க் எடுக்க முடியும் என்பதே இன்றைய நிலைமை.
படிப்பு, படிப்பு என்று சிறு பிள்ளைகளை துன்புறுத்தி, அவர்களுடைய இன்பங்களை தொலைத்து விடுகின்றனர்.
கல்வி முறையில் (இப்போது உள்ள மெகாலே முறையில் இருந்து) எப்போது மாற்றம் வருகின்றதோ அன்றுதான் குழைந்தைகள் துன்பப்படுவது குறையும்.
முதல் வகுப்பிற்கே இந்த பாடு படுத்தும் அந்த பெற்றோர்கள் அந்த குழைந்தை பத்தாம் வகுப்பு வரும் போது என்ன பாடுபடுத்துவார்கள் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
அந்த குழைந்தை எவ்விதமான மன உளைச்சைளுக்கும் ஆளாகாமல் பார்த்துக் கொள்ளும் நிர்வாகத்தினருக்கு பாரட்டுக்கள். இராகவன், நைஜிரியா
//
வாங்க ராகவன் சார். வந்து பிண்ணுட்டம் மற்றும் ஒட்டு போட்டதிற்கும் மிக்க நன்றி. முதல் வகுப்பிற்கே இந்த பாடு படுத்தும் அந்த பெற்றோர்கள் அந்த குழைந்தை பத்தம் வகுப்பு வரும் போது என்ன பாடுபடுத்துவார்கள் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதை நின்த்துதான் எனக்கும் மிகவும் வருத்தமாக இருக்கின்றது ராகவன் சார்.
முதல் வகுப்பு தான், இதெல்லாம் குழந்தைகளுக்கு ஒரு பெரிய வகுப்பே அல்ல.
படிக்க இன்னும் காலம் அதிகம் இருக்கின்றது அவர்கள் படிக்க. இதை குழந்தைகளிடம் அதிகம் எதிர்பார்க்கும் பெற்றோர்கள் உணர்ந்து திருந்தினால் பரவா இல்லை.
நானும் அந்த நிர்வாகத்தின் அணுகுமுறை பார்த்து மிகவும் வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கின்றது. இது போல் எல்லாரும் இருந்தால், குழந்தகள் ஏதோ ஒரு இடத்தில் சந்தோஷமாக இருப்பார்கள். மனோ ரீதியாக இதை அணுகினால் குழந்தைகளை திருத்தி விடலாம்.
எல்லோருக்கும் தேவையான அருமையான பதிவு. நல்ல எழுத்து நடையில் சொல்லியிருக்கீங்க ரம்யா...
வணக்கம் (இ)ரம்யா
-- இ - வருமா வராதா என தெரியவில்லை -- தவறிருந்தால் மண்ணிக்கவும்
சரியான விஷயம்தான்
ஆனா இப்பொழுது கல்வி என்பது மதிப்பெண்களின் அடிப்படையிலேயே அவதானிக்கப்படுகிறது --
எந்த அளவுக்கு பாடங்களை புரிந்து கொள்கிறார்கள் என பார்பதே சரியான கல்வியாக இருக்கும் என நிணைக்கின்றேன்
நன்றி
//
எல்லோருக்கும் தேவையான அருமையான பதிவு. நல்ல எழுத்து நடையில் சொல்லியிருக்கீங்க ரம்யா...
//
வாங்க புதியவன், மிக்க நன்றி.
//
வணக்கம் (இ)ரம்யா
-- இ - வருமா வராதா என தெரியவில்லை -- தவறிருந்தால் மண்ணிக்கவும்
சரியான விஷயம்தான்
ஆனா இப்பொழுது கல்வி என்பது மதிப்பெண்களின் அடிப்படையிலேயே அவதானிக்கப்படுகிறது --
எந்த அளவுக்கு பாடங்களை புரிந்து கொள்கிறார்கள் என பார்பதே சரியான கல்வியாக இருக்கும் என நிணைக்கின்றேன்
நன்றி
//
வாங்க இராஜராஜன் சார், ரம்யா தான் சார், இரம்யா இல்லை. நீங்க எப்படி எழுதினாலும் பரவாஇல்லை. முதன் முறையாக என் பதிவுக்கு வந்து பிண்ணுட்டம் அளித்தமைக்கு மிகவும் நன்றி.
புரிந்து கொண்டால் மாணவன் படிக்கவே வேண்டாமே சார். எந்த கல்வி முறையும் புரிதலில் தான் வெற்றிபெறுகிறது.
மிக்க நன்றி.
அக்கா ரம்யா,
என்னத் தம்பின்னு அழைச்ச மொத ஆளு நீங்க தான் அக்கா
ரொம்பப் பாசமா அழச்சிருக்கீங்க - புல்லரிக்குது
ம்ம்ம்ம்ம் - நல்லா இருக்கா !!!
//
அக்கா ரம்யா,
என்னத் தம்பின்னு அழைச்ச மொத ஆளு நீங்க தான் அக்கா
ரொம்பப் பாசமா அழச்சிருக்கீங்க - புல்லரிக்குது
ம்ம்ம்ம்ம் - நல்லா இருக்கா !!!
//
ரொம்ப நல்ல இருக்கு தம்பீ.
தம்பி சீனா நான் உண்மையாகவே அன்பாத்தான் தம்பீன்னு அழைத்தேன் தம்பி. தம்பியை தம்பின்னு தானே அழைக்கமுடியும். பாசத்துடன் தான் தம்பீ, உங்களை தம்பீன்னு அழைத்தேன் தம்பீ.
இது எப்படி இருக்குது ?
ஆமா ஏதோ புல்லரிக்குதுன்னு சொல்லி இருக்கீங்களே, பத்திரம் தம்பி வெளியே போனா மாடு மேஞ்சிடும். சரியா தம்பீ.
உடம்பை பத்திரமா பாத்துக்குங்க தம்பீ
அக்கா
நல்லா இரு அக்கா ன்னு சொன்னேன் - நல்லா இருக்கா ? ன்னு கேக்கலே
மாடு மேயுமா - மேயட்டுமே
ஞாபகம் வைச்சுக்க அக்கா
//
அக்கா
நல்லா இரு அக்கா ன்னு சொன்னேன் - நல்லா இருக்கா ? ன்னு கேக்கலே
மாடு மேயுமா - மேயட்டுமே
ஞாபகம் வைச்சுக்க அக்கா
//
சும்மாதான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன் தம்பி. தப்பா எடுத்துக்க வேண்டாம்.
ரம்யா
நல்ல கருத்து, உண்மை சம்பவம் மூலம் உணர்த்திவிட்டீர்கள்.
ம், நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
நமது கல்விமுறையும் சரியல்ல
ஆபிஸையே கட்டிக்கொண்டு அழும் பெற்றோர்களும் சரியல்ல
பாவம் குழந்தைகள் என்ன செய்யும்.
ட்யூசனுக்கு கொட்டி கொடுத்தேனே என்பார்கள்.
கொஞ்சம் அன்பை கொட்டிக்கொடுங்கள்
எங்கேயோ போய்விடுவார்கள்.
அய்யோ பாவம் மாதவி,
நல்ல பள்ளியாய் இருக்கவே குழந்தையை பக்குவமாய் விசாரித்திருக்கிறார்கள்.
இதுவே வேறு மாதிரி ஆகியிருந்தால்
அய்யோ நினைக்கவே பயமாயிருக்கிறது.
//
ரம்யா
நல்ல கருத்து, உண்மை சம்பவம் மூலம் உணர்த்திவிட்டீர்கள்.
ம், நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
//
வாங்க அமிது அம்மா, என்ன ரொம்ப நாளா காணோம்? அமித்து என்ன சொல்லராங்க? வந்து வாழ்த்தியதற்கு நன்றி
//
நமது கல்விமுறையும் சரியல்ல
ஆபிஸையே கட்டிக்கொண்டு அழும் பெற்றோர்களும் சரியல்ல
பாவம் குழந்தைகள் என்ன செய்யும்.
ட்யூசனுக்கு கொட்டி கொடுத்தேனே என்பார்கள்.
கொஞ்சம் அன்பை கொட்டிக்கொடுங்கள்
எங்கேயோ போய்விடுவார்கள்.
அய்யோ பாவம் மாதவி,
நல்ல பள்ளியாய் இருக்கவே குழந்தையை பக்குவமாய் விசாரித்திருக்கிறார்கள்.
இதுவே வேறு மாதிரி ஆகியிருந்தால்
அய்யோ நினைக்கவே பயமாயிருக்கிறது.
//
ஆமாங்க அமித்து அம்மா, எனக்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. நாம் யார் மீது குறை சொள்ளமுடியும்? இது போல் உள்ளவர்கள் தன் போக்கை தன் மனத்தால் உணர்ந்து தானே மாறினால்தான் இது போல் சம்பவங்கள் நிகழாமல் இருக்கும்.
மிக அவசியமான நல்ல பதிவு ரம்யா!
வாழ்த்துக்கள்!
(மழை வெள்ளத்தில் நாலுநாளா ''பவர் கட்''
அதான் தாமதம்)
மிக அவசியமான நல்ல பதிவு ரம்யா!
வாழ்த்துக்கள்!
நல்ல பதிவு. நல்ல சொல்லி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
//
மிக அவசியமான நல்ல பதிவு ரம்யா!
வாழ்த்துக்கள்!
(மழை வெள்ளத்தில் நாலுநாளா ''பவர் கட்''
அதான் தாமதம்)
//
வாங்க ஜீவன், எங்கேடா நம்ப ஜீவன் சாரை காணோமேன்னு பார்த்தேன். மலைக்கு போய்ட்டீங்கன்னு நினைச்சேன். வந்து பிண்ணுட்டம் அளித்தமைக்கு நன்றி ஜீவன்.
//
சென்ஷி said...
மிக அவசியமான நல்ல பதிவு ரம்யா!
வாழ்த்துக்கள்!
//
வாங்க சென்ஷி சார், முதல் பிண்ணுட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.
//
நல்ல பதிவு. நல்ல சொல்லி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
//
வாங்க S.K., மிக்க நன்றி வந்து பிண்ணுட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.
நல்ல பதிவு.
/*அந்த குழந்தைக்கு எந்த வித மன உளைச்சலும் ஆகாமல் பள்ளி நிர்வாகம் கவனித்து வந்துள்ளது என்பதை நான் மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.*/
மிக சந்தோஷமாக உள்ளது, பள்ளி நிர்வாகம் பக்குவமாகக் கையாண்டுள்ளதைக் கண்டால். பெற்றோரும் பக்க்குவமாக நடப்பது மிக அவசியம்.
\\அந்த குழந்தைக்கு எந்த வித மன உளைச்சலும் ஆகாமல் பள்ளி நிர்வாகம் கவனித்து வந்துள்ளது என்பதை நான் மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.\\
நல்ல விஷயம் தான்.
அட்லீஸ்ட் ...
//
\\அந்த குழந்தைக்கு எந்த வித மன உளைச்சலும் ஆகாமல் பள்ளி நிர்வாகம் கவனித்து வந்துள்ளது என்பதை நான் மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.\\
நல்ல விஷயம் தான்.
அட்லீஸ்ட் ...
//
ஆமாங்க....
மனது நெகிழ்ந்து, கண்களில் நீர் வந்ததென்னவோ உண்மை.. :(( குழந்தைகளை ஏனோ குழந்தைகளாகவே பாவிக்கும் மனப்பான்மை இப்பொழுதெல்லாம் பெற்றவர்களிடம் குறைந்து வருகிறது... :((
//
மனது நெகிழ்ந்து, கண்களில் நீர் வந்ததென்னவோ உண்மை.. :(( குழந்தைகளை ஏனோ குழந்தைகளாகவே பாவிக்கும் மனப்பான்மை இப்பொழுதெல்லாம் பெற்றவர்களிடம் குறைந்து வருகிறது... :((
//
ஆமாம் ஸ்ரீமதி. முதல் வருகைக்கு நன்றி ஸ்ரீமதி
அடடா, நான் இதை ஏற்கனவே படிச்சேனே, ஏன் கமென்ட் போடாம போனேன்:(:(:( ரொம்ப சாரி ரம்யா. கரெக்டா சொல்லிருக்கீங்க:):):) நல்ல விஷயம்
//
அடடா, நான் இதை ஏற்கனவே படிச்சேனே, ஏன் கமென்ட் போடாம போனேன்:(:(:( ரொம்ப சாரி ரம்யா. கரெக்டா சொல்லிருக்கீங்க:):):) நல்ல விஷயம்
//
ரொம்ப நன்றிங்க ராப்
மாதவிதான் ரம்யாவா???
//
Annan Vanangamudi said...
மார்க் வங்கரதுன சும்மாதான... குமுறுகிறார் கும்மா குத்து வாங்கும் மாதவி...
//
ROTFL
:))))))))))
ஆகா அருமை அருமை - நல்லாவே இருக்கு - நான் கூட ஏதோ 66 / 99 வச்சி மொக்கை போடப் போறிங்கண்னு நினைச்சேன் - நல்லாவே முடிச்சிருக்கீங்க
//rapp said...
அடடா, நான் இதை ஏற்கனவே படிச்சேனே, ஏன் கமென்ட் போடாம போனேன்:(:(:( ரொம்ப சாரி ரம்யா. கரெக்டா சொல்லிருக்கீங்க:):):) நல்ல விஷய//
தலைவி வழியே நானும்..
//
மாதவிதான் ரம்யாவா???
//
இல்லீங்கோ.........
//ஆகா அருமை அருமை - நல்லாவே இருக்கு - நான் கூட ஏதோ 66 / 99 வச்சி மொக்கை போடப் போறிங்கண்னு நினைச்சேன் - நல்லாவே முடிச்சிருக்கீங்க
//
நன்றி சிவா............
pullaingala pathu valakanumpa!
தயவு செய்து பெற்றோர்களே குழந்தைகளை குழந்தைகளை இருக்க விடுங்கள். மதிபெண்கள் எல்லாம் அந்த வயதில் விஷயமே இல்லை. குழந்தைகளை இயந்திரத்தை போல் இயகாதிர்கள். school, tution, abacus, music class etc etc., ஏலவற்றையும் எதற்கு அவர்கள் தலை மேல்..
யோசிக்கவும்..அவர்கள் வெறும் குழந்தைகள் இயந்திரங்கள் அல்ல ..
நல்ல பதிவு..
//
Raji said...
pullaingala pathu valakanumpa!
//
வாங்க ராஜி, முதன் முறையாக வந்திருக்கிறீர்கள்
நன்றிங்க, அடிக்கடி வாங்க
//
vinoth said...
தயவு செய்து பெற்றோர்களே குழந்தைகளை குழந்தைகளை இருக்க விடுங்கள். மதிபெண்கள் எல்லாம் அந்த வயதில் விஷயமே இல்லை. குழந்தைகளை இயந்திரத்தை போல் இயகாதிர்கள். school, tution, abacus, music class etc etc., ஏலவற்றையும் எதற்கு அவர்கள் தலை மேல்..
யோசிக்கவும்..அவர்கள் வெறும் குழந்தைகள் இயந்திரங்கள் அல்ல ..
நல்ல பதிவு..
//
வாங்க வினோத், முதன் முறையாக வந்திருக்கிறீர்கள்
வால்த்தியதிருக்கு ரொம்ப நன்றிங்க,
அடிக்கடி வாங்க
very good. I'm new to the Tamil blogs and I'm very happy to see many blogs. starting from dondu i moved to all other blogs. In the present situation, kids are suffering a lot because parents want them to learn a lot. The competition is too much.
I don't know what kind of world we are creating for our children with much difficulties.
This is Much needed one for our life.
Post a Comment