Tuesday, December 2, 2008

முனிவரும் அவர்தம் சகாக்களும்...

முனிவர் ஒருவர் தம் சகாக்களுடன் ஒவ்வொரு இடமாக சுற்றி திரிந்து, அலைந்து, கடைசியில் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து இளைப்பாறி கொண்டிருந்தார். வாசலில் யாரோ சிலர் பேச்சு குரல் கேட்கிறதே என்று வீட்டு சொந்தகாரர் வந்து பார்த்தால், அங்கே சில முனிவர்கள் மிகவும் களைப்பாக அமர்ந்து இருதனர்.

நம்ப ஆளோ பெரிய சிவ பக்தர்.

அவர்களை கண்ட பக்தர் பதறி போய், சாமி ஏன் வெளியே அமர்ந்து விட்டீர்கள். உள்ளே வாங்க ஏதாவது தாக சாந்தி அடைய ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு. தம் மனைவியை அழைத்தார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சகல மரியாதையுடன் முனிவர்களை உள்ளே அழைத்து சென்றார்கள்.

மோர் அருந்தி சற்று ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். உங்களை பார்த்தால் மிகவும் களைத்து காணப்படுகிறீர்கள். சிறிது நேரத்தில் சமையல் முடிந்து விடும். இன்று எங்கள் இல்லத்திலேயே சாப்பிடுங்கள் என்றார் பக்தர். அதற்கு அந்த முனிவர் இல்லையப்பா, எனக்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது, நாங்கள் உடனே செல்லவேண்டும், நீ தக்க நேரத்தில் தாகத்திற்கு மோர் கொடுத்ததே போதும். அதற்கே நாங்கள் மிகவும் சந்தோசம் அடைகிறோம் என்றார். இல்லை இல்லை நீங்கள் அனைவரும் இன்று எங்கள் இல்லத்தில் சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும். சாப்பிட்ட பின் உங்கள் யாத்திரயை தொடரலாம் என்று பக்தன் வேண்டுகோள் விடுத்தார்.

வேறு வழி இல்லாமல் முனிவர்கள் சாப்பிட சம்மதித்தார்கள். சமையல் ரெடி ஆனது. சாப்பிட அனைவரும் அமர்ந்து விட்டனர். வடை, பாயாசத்துடன் சாப்பாடு பரிமாறப்பட்டது. நல்ல பசி என்று கூறவிட்டு தலைமை முனிவர் சாப்பிட ஆரம்பித்தார், சக முனிவர்களும் கடும் பசியுடன் இருந்ததால் வேகமாக சாப்பிட்டார்கள்.

எல்லாம் முடிந்தது, வெற்றிலை பாக்கு உபசாரம் நடந்தது. வேண்டாம் என்று சைகையில் முனிவர்கள் கூறி விட்டனர்.

பக்தனும் அவர் மனைவியும் பதறிபோய் விட்டனர். ஏ சாமி சாப்பாடு நல்லா இல்லையா? தவறு செய்துவிட்டூமா? மன்னித்து விடுங்கள் சாமி என்று கூறி கலங்க ஆரம்பித்துவிட்டனர்.

இதை பார்த்து அதிர்ந்த முனிவர் இல்லை என்று தலை அசைத்து விட்டு பேச ஆரம்பித்தார்.

" ரஜம் பாவஜம் பொகு ஜொகுஜு ஆனா கொந்ஜம் ஜூடு "

பக்தர் மற்றும் மனைவிக்கு ஒன்று புரியவில்லை.

நண்பர்களே உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.......

பின் குறிப்பு : "ரசம் பாயாசம் பொகு ஜோர், ஆனா கொஞ்சம் சூடு" இதைதான் அப்படி ஒரு மழலையில் கூறினார் நம் முனிவர். நல்ல பசி சாப்பாடு சூடாக இருந்தது கூட கவலைப்படாமல் சாப்பிட்டதால் நாக்கு மேல்லண்ணத்தில் ஒட்டி கொள்ள எங்கே பேச்சு வரும் அதுதான் அந்த மழலை.

53 comments :

Anonymous said...

ஒரு படத்தில் ஆச்சி மனேரமா நாகேஷ் அவர்களிடம் இது மாதிரிதான் பேசுவார்கள்..

அது மாதிரிதான் இதுவும் போல் இருக்கின்றது.

இது மொக்கை என நீங்கள் (அதுவும் கொ.ப.செ) சொல்லிவிட்டதால், இது மொக்கைதான், மொக்கைதான்.. (நானும் ரவுடிதான் ஸ்டைலில் படிக்கவும்).

அப்பாடா.. முதல் பின்னூட்டம், முதல் ஓட்டு எல்லாம் நம்பதான்.. யாரும் அடிச்சிக்க முடியாது..

RAMYA said...

//

me the first ragavan?

அமுதா said...

:-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

டைசியில் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து இளைப்பாறி கொண்டிருந்தார்.

கடவுளே........ கடவுளே...........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சகல மரியாதையுடன் முனிவர்களை உள்ளே அழைத்து சென்றார்கள்.

தைரியம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

" ரஜம் பாவஜம் பொகு ஜொகுஜு ஆனா கொந்ஜம் ஜூடு "

புரிஞ்ச மாதிரி............

சென்ஷி said...

:))

நாந்தான் அப்பவே சொன்னேன்ல.. நீங்க மொக்கைன்னு லேபிள் இல்லாம எழுதுறதில்லைன்னு

தமிழ் அமுதன் said...

''லொள்ளு'' ''லொள்ளு'' அப்படின்னு கேள்வி பட்டு இருக்கேன்

ஆனா இந்த மாதிரி ''லொள்ள'' பார்த்தது இல்ல மலைக்கு போய்ட்டு

வந்து வைச்சுக்கிறேன்! தாங்க முடியல ரம்யா!

RAMYA said...

//
:-)
//

simle போதுமா அமுதா?

RAMYA said...

//
டைசியில் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து இளைப்பாறி கொண்டிருந்தார்.

கடவுளே........ கடவுளே...........
//

வாங்க சுரேஷ் என் பதிவிற்கு முதலில் வந்ததிற்கு நன்றி , பிண்ணுட்டம் போட்டதிற்கும் நன்றி.

கடவுளை கூப்பிடறீங்க ரஜனியா நீங்க சொல்லவே இல்லே

தேவன் மாயம் said...

அந்த சாமியார்கள் நம்ம
ரம்யா வீட்டுக்கு
சாப்பிட வந்திருந்தா?
நல்ல வேளை தப்பிச்சாங்க‌
சாமியார்ங்க!
நாங்க தெரியாம உள்ள‌
வந்து மாட்டிக்கிட்டோம்!!!!!

RAMYA said...

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சகல மரியாதையுடன் முனிவர்களை உள்ளே அழைத்து சென்றார்கள்.

தைரியம்
//

அவர்களின் தைரியம் கொடுத்ததே நீங்கள்தானாம், ஆமாம் பேசிகிட்டாங்க

RAMYA said...

//
SUREஷ் said...
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சகல மரியாதையுடன் முனிவர்களை உள்ளே அழைத்து சென்றார்கள்.

தைரியம்
//

அவர்களுக்கு தைரியம் கொடுத்ததே நீங்கள்தானாம், ஆமாம் பேசிகிட்டாங்க

RAMYA said...

//
SUREஷ் said...
" ரஜம் பாவஜம் பொகு ஜொகுஜு ஆனா கொந்ஜம் ஜூடு "

புரிஞ்ச மாதிரி............
//

எனக்கு தெரியும் நீங்க ரொம்ப அறிவாளின்னு

RAMYA said...

//
ஜீவன் said...
''லொள்ளு'' ''லொள்ளு'' அப்படின்னு கேள்வி பட்டு இருக்கேன்

ஆனா இந்த மாதிரி ''லொள்ள'' பார்த்தது இல்ல மலைக்கு போய்ட்டு

வந்து வைச்சுக்கிறேன்! தாங்க முடியல ரம்யா!

//

வாங்க ஜீவன், ரொம்ப நன்றி, மலைக்கு சென்று வாருங்கள். சிந்திப்போம் இந்த வலைப்பூவில்

RAMYA said...

// thevanmayam said...
அந்த சாமியார்கள் நம்ம
ரம்யா வீட்டுக்கு
சாப்பிட வந்திருந்தா?
நல்ல வேளை தப்பிச்சாங்க‌
சாமியார்ங்க!
நாங்க தெரியாம உள்ள‌
வந்து மாட்டிக்கிட்டோம்!!!!!

//

வாங்க thevanmayam , முதல் வருகைக்கும், பிண்ணுட்டத்திற்கும் நன்றி, சாமியார் எங்க வீட்டுக்கு வந்தால், நான் nice ஆ உங்க வீட்டு அட்ரஸ் கொடுத்துவிடுவேனாக்கும்.

RAMYA said...

//சென்ஷி said...
நாந்தான் அப்பவே சொன்னேன்ல.. நீங்க மொக்கைன்னு லேபிள் இல்லாம எழுதுறதில்லைன்னு
//

சொன்னீங்க புரியாதோன்னு ............ எல்லாம் ஒரு விளம்பரம்தான் ........

விஜய் ஆனந்த் said...

:-)))...

RAMYA said...

// விஜய் ஆனந்த் said...
:-)))...

//

smile போட்ட போதுமா ஏதாவது எழுதனும் ஆமா

RAMYA said...

//
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
//

நெசமாலுமா??

நசரேயன் said...

நல்ல வேளை, உங்க வீட்டுக்கு அவங்க சாப்பிட வரலை, வந்தா சாப்பிட்டு வாயே திறக்க முடியாது :)

RAMYA said...

//
நல்ல வேளை, உங்க வீட்டுக்கு அவங்க சாப்பிட வரலை, வந்தா சாப்பிட்டு வாயே திறக்க முடியாது :)
//

அதெப்பிடி வந்து சாப்பிடாமலேயே சொல்லிட்டீங்க? நீங்க ஒரு தீர்க்கதரிசி நசரேயன்

குடுகுடுப்பை said...

உங்க வீட்டுக்கு வந்தா முனிவர் குகு ரெண்டு மணி நேரம் காத்திருந்து சாப்பாட்டை காலி பண்ணுவார். கவலை வேண்டாம்.

RAMYA said...

//
உங்க வீட்டுக்கு வந்தா முனிவர் குகு ரெண்டு மணி நேரம் காத்திருந்து சாப்பாட்டை காலி பண்ணுவார். கவலை வேண்டாம்.
//

அப்படியா என் சாப்பாட்டை யாரு சாப்பிடுவாங்கன்னு ரொம்ப கவலயா இருந்துச்சி, ரம்யா சரியா ஒரு ஆளு சிக்கி இருக்காங்கப்பா, வேற யாரு?

அட இங்க பாருப்பா அது நம்ப குடுகுடுப்பையார்

Natty said...

பஜவு ஜொம்ப நஜ்ஜா இஜுக்கு.... வாஜூக்கள்...

மேவி... said...

enna koduma da sami....

super mokkai...

anyways that was a good try

RAMYA said...

//
Natty said...
பஜவு ஜொம்ப நஜ்ஜா இஜுக்கு.... வாஜூக்கள்...
//

வாங்க நாட்டி என் பதிவிற்கு முதலில் வந்ததிற்கு நன்றி , பிண்ணுட்டம் போட்டதிற்கும் நன்றி.

RAMYA said...

//
MayVee said...
enna koduma da sami....

super mokkai...

anyways that was a good try

//

வாங்க மாவீ என் பதிவிற்கு முதலில் வந்ததிற்கு நன்றி, பிண்ணுட்டம் போட்டதிற்கும் நன்றி.

SK said...

ஒரு முடிவுல தான் இருக்கீங்க..

யக்கோவ்.. நல்லா இருங்க

துளசி கோபால் said...

:-))))))))))))

காலம் கெட்டுக்கிடக்கு. யாரும் முனிவர்களையும் முக்கியமா சகாக்களையும் வீட்டுக்குள் கூப்பிடவேணாம்!!!

RAMYA said...

//
ஒரு முடிவுல தான் இருக்கீங்க..

யக்கோவ்.. நல்லா இருங்க

//

வாங்க S.K. வந்து வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி தம்பி

RAMYA said...

//
:-))))))))))))

காலம் கெட்டுக்கிடக்கு. யாரும் முனிவர்களையும் முக்கியமா சகாக்களையும் வீட்டுக்குள் கூப்பிடவேணாம்!!!
//

வாங்க துளசி கோபால் அவர்களே. என் பதிவிற்கு வந்ததிற்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க. வந்து எழுதுங்கோ.

rapp said...

//ஒரு படத்தில் ஆச்சி மனேரமா நாகேஷ் அவர்களிடம் இது மாதிரிதான் பேசுவார்கள்//

சரஸ்வதி சபதம். ஆனா, படம் ரிலீசானப்போ நாகேஷ் சாரிடம் ஒரு மிகப்பெரிய மனிதர் அந்தப் படத்தில் அவர் மனோரமா காரெக்டரை நக்கலடிப்பதில் எவ்ளோ மனம்நொந்தார் என்று விளக்க, அதிலிருந்து நாகேஷ் முடிந்தவரை அதைத்தவிர்த்தாரம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))))))))

ரொம்ப நன்றிங்க ராப்,
இந்த நகைச்சுவை நான் கல்லூரியில் படித்த பொது செய்து காட்டியது, அது நினைவுக்கு வரவே இந்த பதிவில் போட்டேன்.

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
:))))))))
//

இந்த சிரிப்புக்கு ரொம்ப நன்றிங்க அமிர்தவர்ஷிணி அம்மா

SK said...

// காலம் கெட்டுக்கிடக்கு. யாரும் முனிவர்களையும் முக்கியமா சகாக்களையும் வீட்டுக்குள் கூப்பிடவேணாம்!!! //

நீங்க சகான்னு சொன்னது நம்ப கார்க்கிய இல்லையே :-)

ஆட்காட்டி said...

1!

கார்க்கிபவா said...

/நீங்க சகான்னு சொன்னது நம்ப கார்க்கிய இல்லையே :‍//

சந்தோஷமா எஸ்.கே? அவங்க ஏதோ சொல்றாங்க.. விடுவீங்களா?

RAMYA said...

//
SK said...
// காலம் கெட்டுக்கிடக்கு. யாரும் முனிவர்களையும் முக்கியமா சகாக்களையும் வீட்டுக்குள் கூப்பிடவேணாம்!!! //

நீங்க சகான்னு சொன்னது நம்ப கார்க்கிய இல்லையே :-)
//

S.K. வந்த காரியத்தை கச்சிதமா முடித்துவிட்டீர்கள், சந்தோஷமா துங்குவீங்கன்னு நினைக்கிறேன். சிரிப்பு, சிரிங்க, சந்தோஷமா சிரிங்க எப்படியோ கார்கிகியை மாட்டி விட்டுடீங்க

RAMYA said...

//
ஆட்காட்டி said...
1!
//

வாங்க ஆட்காட்டி அவர்களே, என் பதிவிற்கு வந்ததிற்கு மிக்க நன்றி, அதென்னெங்க
1! . புரிய வைக்கவும்.

RAMYA said...

//
/நீங்க சகான்னு சொன்னது நம்ப கார்க்கிய இல்லையே :‍//

சந்தோஷமா எஸ்.கே? அவங்க ஏதோ சொல்றாங்க.. விடுவீங்களா?

//

வாங்க கார்க்கி சார், என் பதிவிற்கு வந்ததிற்கு மிக்க நன்றி. S.K. சும்மா விளாட்டுக்கு சொன்னாரு. ஆமா..........

கார்க்கிபவா said...

கார்க்கி சாரா???????? ஆவ்வ்வ்வ்.. நான் வந்த வழியே பார்த்து ஓடிடுவேன்..

SK said...

// S.K. வந்த காரியத்தை கச்சிதமா முடித்துவிட்டீர்கள், சந்தோஷமா துங்குவீங்கன்னு நினைக்கிறேன். சிரிப்பு, சிரிங்க, சந்தோஷமா சிரிங்க எப்படியோ கார்கிகியை மாட்டி விட்டுடீங்க //

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

/// கார்க்கி சாரா???????? ஆவ்வ்வ்வ்.. நான் வந்த வழியே பார்த்து ஓடிடுவேன்.. ///

ஹி ஹி ஹி

RAMYA said...

//
கார்க்கி சாரா???????? ஆவ்வ்வ்வ்.. நான் வந்த வழியே பார்த்து ஓடிடுவேன்..

//

எல்லாம் ஒரு மரியாதைதான்.......................... ஒடுங்க எங்கே ஓடுவீங்க, நாங்க பிடிச்சிடுவோம் இல்லே

RAMYA said...

//
// S.K. வந்த காரியத்தை கச்சிதமா முடித்துவிட்டீர்கள், சந்தோஷமா துங்குவீங்கன்னு நினைக்கிறேன். சிரிப்பு, சிரிங்க, சந்தோஷமா சிரிங்க எப்படியோ கார்கிகியை மாட்டி விட்டுடீங்க //

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

/// கார்க்கி சாரா???????? ஆவ்வ்வ்வ்.. நான் வந்த வழியே பார்த்து ஓடிடுவேன்.. ///

ஹி ஹி ஹி

//

அன்பு தம்பியின் அழகான சிரிப்பு.............. இப்படித்தான் சிரிக்கணும்............

அண்ணன் வணங்காமுடி said...

தொம்பா துபெர்

உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

பின் குறிப்பு: ரொம்ப சூப்பர்.

மங்களூர் சிவா said...

//
" ரஜம் பாவஜம் பொகு ஜொகுஜு ஆனா கொந்ஜம் ஜூடு "
//

நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதிய
:))))))))))

மங்களூர் சிவா said...

50

RAMYA said...

//
//
" ரஜம் பாவஜம் பொகு ஜொகுஜு ஆனா கொந்ஜம் ஜூடு "
//

நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதிய
:))))))))))

//

பயந்துட்டீங்களா?

Poornima Saravana kumar said...

மொக்கை மொக்கை ( கவிதை கவிதை னு சொல்வது போல்)

RAMYA said...

//
PoornimaSaran said...
மொக்கை மொக்கை ( கவிதை கவிதை னு சொல்வது போல்)
//

வாங்க பூர்ணிமாசரன் , நன்றிங்க...

arul said...

superb