Monday, May 18, 2009

ஜில் என்று ஒரு காதல் / ஐந்தாம் பகுதி

காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!


ராஜாவின் குடும்பம்
=============
ராஜாவின் அம்மா: மானசா
ராஜாவின் அப்பா: ஸ்ரீநிவாசன்

"ஹாய் அம்மா, அப்பா எல்லாரும் எப்படி இருக்கீங்க?"

"டேய் என்னாடா திடீர்ன்னு வந்திருக்கே? வரேன்னு ஒரு தகவல் கூட இல்லாமல் வந்திருக்கே ?"

"இல்லைங்கம்மா என்னவோ உங்களை எல்லாம் பாக்கணும் போல இருந்ததா உடனே கிளம்பி வந்துட்டேன்."

"ஏண்டாப்பா மகனே? நான் ஒருத்தன் குத்துக்கல்லு மாதிரி உக்காந்திருக்கேன்! நீ என்னாடான்னா உங்க அம்மா கிட்டேயே கொஞ்சிகிட்டு இருக்கியே ?"ஆற்றாமையுடன் அப்பா.

"அப்பா இருங்க மொதல்லே அம்மாகிட்டே பேசிட்டு அப்புறமா உங்க கிட்டே வரேன். ஆமா நீங்க என்ன குண்டாகிகிட்டே போறீங்க? அம்மா பலமா சாப்பாடு தராங்களா? கொஞ்சமா சாப்பிடுங்கப்பா! "

"அடி செருப்பாலே, நானே உடம்பு சரி இல்லாமல் இருக்கேன், இதுலே கிண்டல் வேறேயா? "

"என்ன உடம்பு சரி இல்லையா? ஏன்ப்பா என் கிட்டே சொல்லவே இல்லே? சரி என்னாச்சு? அதெ மொதல்லே சொல்லுங்க"

"இல்லேப்பா மழை ஒரு நாள் அடிச்சுதா அதுலே கொஞ்சமா நனைஞ்சிட்டேன் அதுதான் லேசா காய்ச்சல் அடிக்குது"

"என்னங்கப்பா இது? டாக்டர் கிட்டே போனீங்களா இல்லையா? நீங்களே ஏதாவது மாத்திரை எல்லாம் எடுக்கக் கூடாது! நான் டாக்டர் கிட்டே அழைச்சிகிட்டு போறேன், அம்மா எப்பம்மா நம்ம டாக்டர் வருவாரு?"

"டாக்டர் வர சரியா பத்துமணியாகும், அதுக்குள்ளே நீ குளிச்சிட்டு வா டிபன் சாப்பிட்டபிறகு போகலாம்"

"சீக்கிரம் டிபன் எடுத்து வைங்கம்மா இதோ வந்துடறேன் "

"வா வா ரொம்ப ஆர்பாட்டம் பண்ணாதே, லேசான ஜுரம்தான்! கஷாயம் போட்டு சாப்பிட்டா சரியாயிடும். இதுக்கு போயி எதுக்கு டாக்டர் எல்லாம். என்ன மானசா உன் பையன் ரொம்ப அக்கறை காட்டரானே! என்ன விஷயம்னு கேட்டு சொல்லு "

"ஏங்க! இது உங்களுக்கே நியாயமா இருக்கா? பையன் எவ்வளவு அக்கறையா அன்பா கேட்கறான் அதை போயி நம்பாம சந்தேகப் படறீங்களே ?"

"ஏய் இவனுகளை எப்பவுமே நம்பக் கூடாது, உனக்கு ஒன்னும் தெரியலை பைத்தியம். இப்படியே இவ்வளவு வருஷம் குப்பை கொட்டிட்டே!"

"சரி சரி பையன் வரான் கொஞ்சம் நேரம் சும்மா இருங்க "

"என்னம்மா அப்பா எதோ என்னைப் பத்தி பேசறமாதிரி இருக்கு "

"ஆமாண்டா உன்னைப் பத்திதான் எனக்கு சந்தேகமா இருக்கு ஒன்னு வந்தா சனிக்கிழமை காலையிலே வருவே இன்னைக்கு பார்த்தா ஞாயிறு வந்திருக்கே இது உன்னோட அகராதியிலே அதிசயமாப் படலே? "

"இல்லேப்பா நேற்று கூட அவசரமா வேலை இருந்தது அதான் நேற்றே வரலை " பொண்ணு பார்க்கப் போனோம்னு சொன்னா சும்மா விட்டுடுவாரா என்னா? "

"சரி டிபன் சாப்பிட்டவுடன் நேரா விஷயத்துக்கு வரணும். MBA படிப்பு என்னாச்சு? எக்ஸாம் எழுதினே ரிசல்ட் பத்தி ஒண்ணுமே சொல்லலை, ரொம்ப சகஜமா சிரிச்சு பேசறே? "

"அப்பா இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்திருக்கேன் அதுவும் பஸ்லே அதெ பத்தி விசாரிகாமே எப்பவுமே என் மீது சந்தேகம் தான் உங்களுக்கு. சரி சாப்பிடுங்க இன்னொரு இட்லி வைங்கம்மா அப்பாவுக்கு"

"ஐஸ் வச்சது போதும்! ஏண்டி அவனை கேட்டியா! இதெல்லாம் கேக்காதே சும்மா அவன் அம்மா லொம்மான்னா உடனே உணர்ச்சி வசப்பட்டு அவன் சொல்லறதை எல்லாம் அப்படியே நம்பு. இப்படி அவன் சொல்லறதை நம்பி நம்பித்தான் ..."

"அப்பா நான் சொல்லவே மறந்துட்டேன் பாருங்க, அதெல்லாம் நான் பாஸ் பண்ணிட்டேன். அம்மாவை ஏன் இதுக்கு போயி திட்டறீங்கப்பா?"

"பாத்தீங்களா அவன் என் பையன் புத்திசாலி எதுலே கால் வச்சாலும் அதில் அவனுக்கு வெற்றிதான். சும்மா பையனை திட்டாதீங்க"

"டேய் வாழ்த்துக்கள்டா மை சன். படிப்புலே மட்டும் நீ என்னை கொண்டிருக்கே! சரி உங்க அலுவலகத்திலே ஏதாவது ஸ்பெஷல் இருக்கா?" இவன் எதுக்கு வந்திருக்கான், ஏதோ சொல்ல வரான் மட்டும் தெரியுது, ஒருவேளை வேலையை விட்டுடானா ?

"அப்பா, அம்மா நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் வந்திருக்கேன். நீங்க ரெண்டு பெரும் கொஞ்சம் பொறுமையா நான் சொல்ல வர்றதை கேக்கணும். சரியா ?"

"ரொம்ப பீடிகை போடாதே என்ன விஷயம்னு சொல்லு மொதல்லே"

"ஏங்க கை கழுவிகிட்டு அப்படியே போய் சோபாவில் உக்காந்து பேசிகிட்டு இருங்க, நான் உங்களுக்கு கஷாயம் செய்து எடுத்து வரேன்! அப்புறம் உங்களோட கலந்துக்கறேன் சரியாடா கண்ணா?"

"சரிம்மா, முக்கியமா நீங்கதான் இருக்கணும்"

"என்னடா பொடி வச்சி பேசறமாதிரி இருக்கு"

"இல்லேப்பா அம்மாவும் வந்திடட்டும் அப்புறமா சொல்லறேன்"

"இந்தாங்க இதெ மொதேல்லே குடிங்க, சரி சொல்லுப்பா என்ன விஷயம் ?"

"இல்லே அம்மா வந்து, நீங்க ரெண்டு பேரும் என் கிட்டே ,வந்திடுங்க இங்கே தனியா இருந்து ஏன் கஷ்டப்படறீங்க? நான் பெரிய வீடு பார்க்கறேன்"

"சரி! அப்பாவோட வேலை என்னாடா பன்னறது? நீ பேசறது உனக்கே நியாயமா இருக்கா? அவருக்கு இன்னும் ஏழு வருஷம் வேலை இருக்கே! அவரோட சம்பாத்தியத்தை விட்டுட்டு உன் கூட வந்து என்ன செய்யறது சொல்லு பார்க்கலாம், என்னாங்க நான் சொல்லறது சரிதானே?"

"அதுசரி அவன் என்னவோ சொல்ல வரான்; உண்மை இது இல்லே அதெ மொதல்லே அவரு சொல்லட்டும், சொல்லு ராசா சொல்லு"
"இல்லேப்பா அம்மா ரொம்ப இளைச்சு போய்ட்டாங்க, அவங்களே தனியா எவ்வளவு வேலை செய்வாங்க, நீங்களே சொல்லுங்க அதான் நான் இந்த யோசனைக்கு வந்தேன் "

"டேய் என்னாடா எனக்கு என்ன ஆச்சு இப்போ? ஏதோ ரொம்ப வயசானமாதிரி பேசறே. நான் நல்லாத்தான் இருக்கேன். உன் பிரச்சனைதான் என்ன ?"

"அது இல்லை மானசா உண்மை வேறே! ஏதோ சொல்ல வரான். என்னான்னு கேட்போம் கொஞ்ச நேரம் சும்மா இரு அவன் பேசட்டும்"

"அப்பா, அம்மா நான் நேரடியாவே சொல்லிடறேன், நான் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே ஒரு பெண்ணை காதலித்தேன்" என்று இருவரையும் ஒரு பார்வை பார்த்தான் ராஜா.

"சரிடா அதுக்கு என்னா இப்போ ?"

"இல்லேப்பா அந்த பொண்ணையே எனக்கு கல்யாணம் பேசி முடிச்சுடுங்கப்பா பாவம் அந்த பொண்ணுக்கு வேறே இடத்திலே மாப்பிள்ளை பார்க்கறாங்களாம், அழுதுகிட்டே இருக்காம்மா " என்று இவன் அழாக் குறையாக சொன்னான்.

"என்னப்பா என்னவெல்லாமோ சொல்லறே! நான் என்னோட அண்ணன் பொண்ணை உனக்கு கேட்கலாம் என்று அப்பாகிட்டே பேசிகிட்டு இருந்தேன். உன்னோட பேச்சை கேட்டவுடன் எனக்கு ஒண்ணுமே புரியலையே?"

"அட இதெல்லாம் வேறே கற்பனையா? அதுசரி அதான் அவனே அவனுக்கு பொண்ணு பாத்துகிட்டு வந்து நிக்கறான்"

"அந்தப் பொண்ணோட பெத்தவங்களுக்கு இந்த வெவரம் தெரியுமா? "

"தெரியும் அப்பா! நேற்று அவங்க வீட்டுக்கு போனேன்."

"என்ன! அவங்க வீட்டுக்கு போனியா? நீ ஏண்டா போனே பெரியவங்க வந்து எதுவும் பேசவேணாம்? அவங்க யாரு என்னன்னு விஷயம் எல்லாம் தெரிய வேண்டாம்? எல்லாம் நீயே பேசிட்டு இப்போ எதுக்கு எங்க கிட்டே வந்து சொல்லறே?"

"சும்மா இருங்க, அவன் என்ன உங்க எதிரியா? நிதானமா பேசுங்க, சரிடா அங்கே போய் என்ன பேசினே, அதுக்கு அவங்க அம்மா அப்பா என்ன சொன்னாங்க? "

"இல்லேம்மா அவங்க உங்களை வந்து முறைப்படி பொண்ணு கேக்கச் சொன்னாங்க"

"சரி அவங்க வெவரம் எல்லாம் இந்த டைரிலே எழுதி வச்சிடு, நம்ப மாவை அழைச்சிகிட்டு போய் பேசிட்டு வரோம் "

"வேணாம்மா அவரை அழைச்சிகிட்டு போகாதீங்க. அவரு வந்தா காரியமே விளங்காது. சரி எப்போ போறீங்க? அவ கேட்டா நான் சொல்லணும் இல்லே அதான் கேக்கறேன்? "

"என்னடா அவசரம் நாள் கிழமையெல்லாம் பார்க்கவேணாமா? "

"சரி ரொம்ப தாமதிக்காமல் சீக்கிரம் புறப்பட தயாராகுங்க, ஸ்டேஷனுக்கு வந்து நான் அழைத்துச் செல்றேன் "

"சரி நானே போன் பண்ணி எப்போ வரோம்னு சொல்லறேன், என்னாங்க நான் சொல்லறது சரிதானே?"
என்ற கூறிக்கொண்டே தலையில் கையை வைத்துக் கொண்டார்.

அவரின் செய்கை வித்தியாசமாகப் படவே "அய்யோ! என்னாங்க என்னா ஆச்சு? டேய் ராஜா டாக்டர்க்கு போன் பண்ணுடா? அப்பாவுக்கு என்னமோ" என்று முடிக்குமுன்னே அழ ஆரம்பித்தாள்.

டாக்டர் கிடைக்காததால் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.தொடரும்...
ரமயா

22 comments :

அ.மு.செய்யது said...

Me the first ???

அ.மு.செய்யது said...

ஐந்தாம் பாகம் வரைக்கு வந்தாச்சா ?

ஒரு பெரிய நாவல் ரேஞ்சுக்கு போவுது போல...

அ.மு.செய்யது said...

//"டேய் என்னாடா திடீர்ன்னு வந்திருக்கே? வரேன்னு ஒரு தகவல் கூட இல்லாமல் வந்திருக்கே ?"//

அட்லீஸ்ட்..ஒரு எஸ்.எம்.எஸ்....ஒரு கண்சாட காட்டிருக்க கூடாதா ??

அ.மு.செய்யது said...

கடைசியில எல்லாம் கூடிவர்ற நேரத்துல இப்படி ஆயிடுச்சே !!!

ஆமா எந்த ஆஸ்பத்திரினு உங்களுக்கு தெரியுமா ?

அ.மு.செய்யது said...

இந்த பாகம் கொஞ்சம் யதார்த்தமாக வந்திருக்கிறது.

தொடருங்கள்.

இராகவன் நைஜிரியா said...

// "இல்லேப்பா மழை ஒரு நாள் அடிச்சுதா அதுலே கொஞ்சமா நனைஞ்சிட்டேன் அதுதான் லேசா காய்ச்சல் அடிக்குது" //

ஐய்யோ பாவம். முதலில் மழை அடிச்சது, இப்ப ஜுரம் அடிக்குது. அவர் என்ன பண்ணுவார். ஒருத்தர் அடிச்சாலே தாங்க முடியாது.

இராகவன் நைஜிரியா said...

// "தெரியும் அப்பா! நேற்று அவங்க வீட்டுக்கு போனேன்."//

கையோட கூட்டிட்டு வரலாம் என்றுதான் போனாப்ல. ஆனா அங்க சின்னுவப் பார்த்து பயந்து ஓடு வந்துட்டாரு..

pappu said...

வீட்டக் கூட்டிட்டு வரச் சொன்னாங்களா? செருப்பால அடிக்காத குறையால துரத்தினானுங்க!

புதியவன் said...

//காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!//

காத்திருந்தோம் கதைக்காக வந்துவிட்டது விரைவில்...

புதியவன் said...

//"இல்லைங்கம்மா என்னவோ உங்களை எல்லாம் பாக்கணும் போல இருந்ததா உடனே கிளம்பி வந்துட்டேன்."//

காதல் இப்படித்தான் நல்ல பையனையும் பொய் சொல்ல வச்சுடும்...

புதியவன் said...

//"அடி செருப்பாலே, நானே உடம்பு சரி இல்லாமல் இருக்கேன், இதுலே கிண்டல் வேறேயா? "
//

ஒருவேளை இது உடல் குண்டாகும் நோயா இருக்குமோ...?

புதியவன் said...

//"என்னம்மா அப்பா எதோ என்னைப் பத்தி பேசறமாதிரி இருக்கு "//

வா...ராஜா உன்னப் பத்தி தான் பெருமையா பேசிக்கிட்டு இருக்காங்க...

புதியவன் said...

//"டேய் என்னாடா எனக்கு என்ன ஆச்சு இப்போ? ஏதோ ரொம்ப வயசானமாதிரி பேசறே. //

பையனுக்கு கல்யாணமாகிற வயசு வந்தால் அப்பாக்கு வயசாகத்தானே செய்யும்...

புதியவன் said...

//"சரி அவங்க வெவரம் எல்லாம் இந்த டைரிலே எழுதி வச்சிடு, நம்ப மாவை அழைச்சிகிட்டு போய் பேசிட்டு வரோம் " //

ஆஹா...ராஜாவோட அம்மாவும் ரொம்ப நல்லாவங்க போல...

கதையின் இந்தப் பகுதியும் நல்லா வந்திருக்கு ரம்யா...தொடருங்கள் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்...

thevanmayam said...

/"இல்லைங்கம்மா என்னவோ உங்களை எல்லாம் பாக்கணும் போல இருந்ததா உடனே கிளம்பி வந்துட்டேன்."//

காதலே ஒரு அழகான பொய்தானே!!

நட்புடன் ஜமால் said...

இந்த முறை கொஞ்சம் சீரியஸ் போல் முடித்துள்ளீர்கள்

thevanmayam said...

ரம்யாவுக்குள் இப்படி ஒரு நாவலாசிரியையா?

Rajeswari said...

தொடர்கதை ஆசிரியர் ரம்யாவுக்கு ஜே....

ஆ.ஞானசேகரன் said...

மீள்பதிவாக இருந்தாலும் எதார்த்தமான நடை படிக்க தூண்டுகின்றது

Nagendra Bharathi said...

nalla nadai

நசரேயன் said...

டாக்டர் வரட்டும்

Elango said...

Excellent !! awaiting for next session.