Tuesday, May 5, 2009

ஜில் என்று ஒரு காதல் / இரெண்டாம் பகுதி

காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்.


பங்கேற்பவர்கள்
================
கதாநாயகன் : ராஜா
கதாநாயகி : காஜோல்
கதாநாயகியின் தங்கை: சாரா
கதாநாயகியின் அப்பா : மனோ
கதாநாயகியின் அம்மா : கல்யாணி
வீட்டுச் செல்லம் : சின்னு


காதலியின் வீட்டு நுழைவாயில்

ராஜா: வந்தேன்! வந்தேன்! ஆஹா என்ன அழகான வீடு எனது காதலியின் வீடு. நுழைவாயிலே கண்ணை அசத்துதே. நம்ப ஆளு ரொம்ப பெரிய ஆளுப்பா. பிடிச்சாலும் பிடிச்சோம் புளியம்கொம்பா பிடிச்சி இருக்கோமோ??

சேச்சே நம்ப மட்டும் என்ன குறைச்சலாவா இருக்கோம், நமக்கும் எல்லா வசதியும் இருக்கே! நம்ம வீடு கூடத்தான் அழகோ அழகு. ஆமா இதெல்லாம் யாரு நம்மகிட்டே கேட்டாங்க?மொதல்லே காஜோல் அப்பா கிட்டே நல்ல விதமா பேசுவோம். என்ன நடக்கப் போகுதோ?


அட நம்ப வரோம்னு நம்ப ஆளு நுழைவாயிலை கூட திறந்து வைத்திருக்காங்களே!இனிமேல் இப்படித்தான் மரியாதை கொடுத்து கூப்பிட வேண்டி இருக்கும்! அதுக்கு இப்பவே ஒத்திகை பாத்துக்குவோம். சரி தொறந்து இருக்கும்போது அழைப்பு மணியை எல்லாம் அழுத்த வேண்டியது இல்லே. சும்மா உள்ளே போக வேண்டியதுதான்.

ஆண்டவா எல்லாம் நல்லபடியா நடக்கணும். நல்ல படியா எல்லாம் முடிஞ்சா என் மாமனார் கையாலே 108 தேங்காய் உடைக்கச் சொல்லறேன். ஐயோ இதென்ன ஏதோ ஒண்ணு பாஞ்சு வருது, அட நாய் வளக்கிறாங்களா?? இதை சொல்லவே இல்லையே!!

இது ஓடி வர வேகத்தைப் பார்த்தா நம்ம சதையை 3 கிலோவுக்கு மிச்சமா எடுத்துடுமே! நம்ப கதி இப்படி ஆகிவிட்டதே! என்ன செய்ய! வேகமாக கேட்டின் மீது ஏறினான். அப்பா கேட் மீது ஏறி உட்கார்ந்து விட்டோம். அடுத்து என்ன செய்வது? உள்ளே இருந்து யாரு வருவாங்க நம்மளை காப்பத்த. ஒண்ணுமே புரியலையே? கள்ளி!என்னை இப்படி மாட்டி விட்டுடியே! சீக்கிரமா வந்து தொலை.

இந்த பக்கம் குதிக்கலாம்ன்னு பார்த்தா இங்கே ஒரு நாய். உள்ளே கத்திகிட்டு இருக்கறாங்களே அவங்களோட நண்பரா நீங்க? ஐயோ அப்படி முறைக்காதீங்க! நான் திருடன் இல்லே. இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்கோமே, யாராவது நம்மை வந்து காப்பாத்த மாட்டாங்களா? என்று ஒரு ஆதங்கத்தோடு உள்ளே பார்த்தான்.

உள்ளே இருந்து ஒரு புயல் வேகத்தில் ஒரு பொண்ணு வந்தது. ராஜாவுக்கு கொஞ்சமா உயிர் வந்தது போல் இருந்தது.

சாரா:ஹேய் யாருப்பா நீ எங்க வீட்டு கேட் மேலே ஏறி உக்காந்து இருக்கே?

ராஜா: ஏய் என்ன? உன் வயசு என்ன? என்னை பார்த்து யாருப்பான்னு கேக்குறே?? மொதல்லே இந்த நாயை இழுத்து கட்டு. அப்புறமா நான் யார் என்று சொல்லறேன்.

சாரா:ஹேய் என்னாடா நாய்ன்னு சொல்லறே அவனுக்கு பேரு இருக்கு, உனக்கு அவ்வளவு திமிரா அங்கே இரு எங்க அப்பாவை கூப்பிடறேன்.
ஆமா நீ யாரு

ராஜா: நான் காஜோலை பார்க்க வந்தேன்.

சாரா:என்ன காஜோலா அவங்க என்னோட அக்கா. மரியாதையா இறங்கி ஓடிப் போய்டு, இல்லே இந்த சின்னு உன்னை கடிச்சிடும். பாத்தியா சின்னுக்கு கோபம் வந்திடுச்சு. கத்துது பாரு. சின்னு கேட் மேலே கூட ஏறும் தெரியுமா?

ராஜா: அடப்பாவி சாரா மொதல்லே சின்னுவை கட்டு, உங்க அப்பாவைத்தான் நான் பார்க்க வந்திருக்கேன்.

சாரா: அது!!!!!

ராஜா:என்ன அது?வயசுக்கு தகுந்தா மாதிரியா பேசறே, சரி என்ன படிக்கறே நீ?

சாரா:அதெல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயம்.மொதல்லே அக்காவை பாக்கனும்னு சொன்னே இப்போ அப்பாவை பாக்கனும்னு சொல்லறே என்ன சங்கதி? நீ இங்கே இருந்து ஒழுங்கா போக மாட்டே போல இருக்கே! சரி இரு நான் சின்னுவை பிடிச்சுக்கறேன், இப்போ நீ உள்ளே போகலாம்!

ராஜா: கொஞ்சம் மரியாதையா பேசக் கூடாதா! மாமான்னு கூப்பிட்டா என்னா கொறைஞ்சா போய்டுவே?

சாரா: சின்னுவை கையிலே இருந்து விட்டுடவா?? இல்லே உள்ளே ஒழுங்கா போறியா?

ராஜா: இல்லே அப்படி எல்லாம் செய்திடாதே நான் ஒழுங்கா உள்ளே போறேன். என்ன ஆரம்பமே சரியா இல்லையே, அப்புறமா மச்சினிச்சியை கவனிச்சுக்கலாம். மொதல்லே வந்த வேலையை பாக்கலாம்.

சாரா: அப்பா அப்பா யாரோ உங்களை பார்க்க வந்திருக்காங்க. வாங்க சீக்கிரமா!

ராஜா:அட நம்ப மச்சினிச்சி கொஞ்சம் சிடு சிடுன்னாலும் ரொம்ப பொறுப்பா அப்பாவை கூப்பிடறாளே. சரி இருக்கட்டும் அப்புறமா நன்றி சொல்லிக்கலாம்.

மனோ: யாரு தம்பி நீங்க? புதுசா இருக்கே சரி சரி ஏன் நிக்கறீங்க உக்காருங்க. என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க? எனக்கு வெளியே அவசரமா போகணும் சீக்கிரமா சொல்லுங்க.

ராஜா:அட சனிக்கிழமை எங்கேயும் போகமாட்டாருன்னு சொன்னா, சரி எங்கேயாவது போகட்டும் நமக்கு என்ன இப்போ வந்த விஷயத்தை கச்சிதமா முடிக்கணும். இவரு மொகத்தை நேரா பார்க்கவே முடியலையே, இவருகிட்டே போய் நான் எப்படி பொண்ணு கேக்கப் போறேன். கடவுளே என்னை காப்பாத்து. தட்டி தடுமாறி பேச ஆரம்பித்தான் ராஜா. "சார் இல்லே சார் வந்து கேட் இல்லே நாய் இல்லே சின்னு கடிக்க வந்திச்சா சாரா என்னை காப்பாத்தி இங்கே கூட்டிகிட்டு வந்திச்சி"..

மனோ: என்ன சாரா உன்னை இங்கே வரச்சொன்னாளா?? ஏய் சாரா! ஏன் இவனை இங்கே வரச்சொன்னே?யாரு இவன்?

சாரா:ஐயோ அப்பா எனக்கு ஒன்னும் தெரியாது. நம்ப சின்னு கத்திச்சு போய் என்னான்னு பார்த்தா இவரு நம்ப கேட் இல்லே கேட்டு அதுமேலே உக்காந்து இருந்தாரு, உங்களைப் பார்க்கணும்தான் சொன்னாரு.

மனோ: நீ ஏன்பா அது மேலே உக்காந்து இருந்தே! என்னை பார்க்கனும்ன்னா உள்ளே வரவேண்டியது தானே! சரி உக்காரு.

ராஜா:என்னடா இவர் பயமுறுத்தற மாதிரி அதட்டராறு!சரி மொதல்ல உட்காரலாம். அப்புறம் மீதி பேசலாம். எப்படி பேச்சை ஆரம்பிக்கறது? சார் வந்து.. யாரு மாடியிலே ஓ... நம்ம ஆளு!! அப்பா! இப்போ தான் கொஞ்சம் தைரியம் வருது.இனிமேல் நாம் ஏன் பயப்படனும்? நன்றாக சாய்ந்து நாற்காலியில் அமர்ந்தான்.

மனோ:தன பெண்ணை மாடியில் அந்த பையன் பார்த்ததை கவனித்ததை கண்டவர் கடுப்பானார், ஏய் தம்பி இங்கே என்னைப் பார்த்து சொல்லு. வந்த வேலையை மட்டும் பார்க்கணும் அங்கே இங்கே கண்ணு அலை பாயக்கூடாது.

ராஜா:மறுபடியும் மேலே பார்த்தான், காதலி நம்பிக்கையுடன் நிற்பதை பார்த்தவுடன் மனதில் புது வெள்ளம் பாய்ந்தோடியது. சார் நான் உங்க பெண்ணை திருமணம் செய்ய விரும்பறேன். அப்பா!! எப்படியோ சொல்லிட்டோம். இப்போ எதுக்கும் தயாரா இருக்கணும். இவரு அடிப்பாரோ இல்லே அந்த நாயை அவிழ்த்து விடுவாரோ, ஒரே திகிலாதான் இருக்கு. காதல்ன்னா சும்மாவா? பார்ப்போம் என்ன சொல்லுவாருன்னு!

மனோ:யாரை சாராவையா அவ பத்தாவதுதான் படிக்கறா, அவளை எல்லாம் கட்டி கொடுக்க முடியாது. சரி நீ இப்போ கிளம்பலாம்.

ராஜா:சார் நான் சொல்லவந்தது காஜோலை பற்றி சாராவை பற்றி இல்லே, நீங்க என்னை தப்பா புரிஞ்சிகிட்டீங்க.

மனோ:என்ன காஜோலுக்கு நீதான் பேரு வச்ச மாதிரி சொல்லறே. அவளுக்கு நிச்சயம் ஆகிப்போச்சுது, நீ கிளம்பலாம்.

ராஜா:இல்லே நாங்க இரெண்டு பேரும் காதலிக்கறோம். நீங்க வேணா உங்க பெண்ணை கூப்பிட்டு கேளுங்க. எப்படியோ தைரியமா சொல்லிட்டோம்பா!

மனோ:யாரு எம்பொண்ணையா அவ என்கிட்டே சொல்லவே இல்லையே! திருமணத்துக்கு ஒத்துகிட்டாளே! ஏய் இங்கே வா, இவன் என்னவோ சொல்லறான் அதெல்லாம் உண்மையா? எங்கே உங்க அம்மா? கூப்பிடு சாரா..

கல்யாணி: என்னாங்க கூப்பிட்டீங்களா? யாரு இந்த தம்பி, இருங்க தம்பி நான் காப்பி கொண்டு வரேன். பிறகு எல்லாம் பேசலாம்.

மனோ:என்னாடி நான் ஒருத்தன் இங்கே மலைச்சு போய் உக்காந்து இருக்கேன், உன் பொண்ணு பண்ணிய காரியத்துக்கு உன்னை விசாரிக்க கூப்பிட்டா நீ விருந்தோம்பலா பண்ணறே. நில்லு அவளை என்னான்னு கேட்டு சொல்லு. இவன் என்னவெல்லாமோ சொல்லறான். அவளும் திருடி மாதிரி முழிச்சிகிட்டு நிக்கறா. விஷயம் என்னான்னு கேளு. விஷயம் எனக்கு எதிரா இருந்தா நீங்க ரெண்டு பேரும் என்ன செய்யறதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

கல்யாணி: சும்மா இருங்க, ஏற்கனவே உங்களுக்கு ரத்தக் கொதிப்பு, சுகர் எல்லாம் இருக்கு, இப்படி ஏன் சகட்டு மேனிக்கு கத்தறீங்க?

மனோ: ஆமாண்டி இன்னும் என்னென்ன வியாதி இருக்கோ எல்லாத்தையும் எல்லாரு முன்னாடியும் சொல்லிக்கிட்டு இரு, உன்னை போய் துரத்தி துரத்தி காதலிச்சு கட்டிகிட்டேனே என்னை ஏதாவது எடுத்து அடிச்சுக்கணும்.

ராஜா: ஆஹா! ஆஹகா!! என்ன அருமையான சந்தர்ப்பம், இந்த விஷயத்தை நம்பளிடம் நம்ப ஆளு சொல்லவே இல்லை. இருக்கட்டும் அப்புறம் கவனிச்சுக்கலாம். சரி நம்ம கதை முடிய ரொம்ப கஷ்டம் இல்லை. சுபமாகவே முடிச்சுடலாம். ஆனா ஆளுதான் சரி இல்லை அதிகமா சவுண்ட் விடறாரு. மனசாட்சி கூறுகிறது "ராஜா முழிச்சுக்கோ. கப்புன்னு பேசி குப்புன்னு காரியத்தை கச்சிதமா முடிக்கணும்".
தொடரும்.....
ரம்யா

70 comments :

நசரேயன் said...

உள்ளேன் தமிழ் தாயே

நசரேயன் said...

//என்ன ஆரம்பமே சரியா இல்லையே, அப்புறமா மச்சினிச்சியை கவனிச்சுக்கலாம்//

என்னை மாதிரியே யோசிக்கிறீங்க

நசரேயன் said...

ஜில்லுன்னு போகுது காதல்

இராகவன் நைஜிரியா said...

மீ த 4 வது

இராகவன் நைஜிரியா said...

ஓட்டு போட்டாச்சுங்க.. (தமிழுஷ், தமிழ்மணம் இரண்டிலும்)

இராகவன் நைஜிரியா said...

// தொடரும்..... //

ம்.. இன்னும் இருக்கா... வெரி குட்

இராகவன் நைஜிரியா said...

// என் மாமனார் கையாலே 108 தேங்காய் உடைக்கச் சொல்லறேன். //

விட்டா மாமனாரையே சூரத்தேங்காய் ஆக்கிடுவார் போலிருக்கு

இராகவன் நைஜிரியா said...

// உள்ளே இருந்து ஒரு புயல் வேகத்தில் ஒரு பொண்ணு வந்தது.//

அம்மா மின்னல் மாதிரி இது புயல்...

இராகவன் நைஜிரியா said...

// மாமான்னு கூப்பிட்டா என்னா கொறைஞ்சா போய்டுவே? //

அதானே.. கூப்பிட்டா என்ன கொறைஞ்சா போயிடுவாங்க...

அப்பாவி தமிழன் said...

நெஜமாவே ஜில்லுனு இருக்கு

புதியவன் said...

//காதலியின் வீட்டு நுழைவாயில்//

ரொம்ப பசுமையா இருக்கு ரம்யா...
ம்...ஜில்லுன்னு இருக்குன்னு கூட சொல்லலாம்...

புதியவன் said...

//பிடிச்சாலும் பிடிச்சோம் புளியம்கொம்பா பிடிச்சி இருக்கோமோ??//

பார்த்தா புளிய மரம் மாதிரி தெரியலையே...ஏதோ செடி கொடிகள் தான் தெரியுது...

புதியவன் said...

//இதென்ன ஏதோ ஒண்ணு பாஞ்சு வருது, அட நாய் வளக்கிறாங்களா?? இதை சொல்லவே இல்லையே!!//

ஹா...மெயின் கேரக்ட்டர் வந்தாச்சா...

புதியவன் said...

//"சார் இல்லே சார் வந்து கேட் இல்லே நாய் இல்லே சின்னு கடிக்க வந்திச்சா சாரா என்னை காப்பாத்தி இங்கே கூட்டிகிட்டு வந்திச்சி"..//

சார் ரொம்பத் தெளிவாத்தான் இருக்கிறார் போல...

புதியவன் said...

//கல்யாணி: என்னாங்க கூப்பிட்டீங்களா? யாரு இந்த தம்பி, இருங்க தம்பி நான் காப்பி கொண்டு வரேன். பிறகு எல்லாம் பேசலாம்.//

ஆஹா...என்ன ஒரு பண்பாடான விருந்தோம்பல்...

புதியவன் said...

ஜில் என்று ஒரு காதல் இரண்டாம் பகுதியும் ஜில்லுன்னு தான் இருக்கு அடுத்த பகுதிய தொடருங்க ரம்யா...

கோடம்பாக்கத்தில இந்த மாதிரி காமெடி கலந்த காதல் கதையைத் தான் தேடிக்கிட்டு இருக்கிறதா கேள்வி...

Thamizhmaangani said...

கதை கலகலப்பா போகுது.. அடுத்த பகுதி?

ஜீவா said...

எப்படி இர்ருக்கிங்க ரம்யா . திரும்பி வந்துவிட்டேன் என் தேவதையுடனும் , கனவுகளுடனும். உங்களின் வார்த்தைகளுக்கும், மனதுக்கும் நன்றிகள்

கார்க்கி said...

காதலிலே காமெடியா... ம்ம்

விஜய் said...

இவ்வளவு ஸ்பீடா ஒரு காதல் கதை நகர்வதை இப்போ தான் பார்க்கறேன், படிக்கறேன். அசத்தறீங்க!!!

விஜய் said...

காதல் கதையில் காமெடி. சூப்பர்.

ராஜா பொண்ணு கேட்டதும், சாரா பத்தாம் கிளாஸ் தான் படிக்கறா, அவளையெல்லாம் கல்யாணம் கட்டிக் கொடுக்க முடியாது’ன்னு அவங்க அப்பா சொன்னப்போ, சத்தம் போட்டு சிரிச்சுட்டேன்.

லவ்டேல் மேடி said...

// ஜில் என்று ஒரு காதல் / இரெண்டாம் பகுதி //


வந்துட்டேன் ........ வந்துட்டேன் ........ வந்துட்டேன் ........// காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும். ////
ஓஓஒவ்வ்வ்......!! இது வேறயா......!!!!!!!!
// கதாநாயகியின் தங்கை: சாரா //அட்ரா சக்க....... அட்ரா சக்க........// கதாநாயகியின் அப்பா : மனோ //அவன் கெடக்கறான் ப்ளீச்சிங் பவுடர் மண்டையன்.....!!!!

// கதாநாயகியின் அம்மா : கல்யாணி //அடங்கொன்னியா.... !! மாமியா பேருலயே ஒரு கிக்கு இருக்குது.....!!!


அடுச்சு உடு பழனிச்சாமி .........!!!!// வீட்டுச் செல்லம் : சின்னு //பன்னு வெச்சிருந்தாகோடா காப்பியில தொட்டு திங்கலாம் .........
// காதலியின் வீட்டு நுழைவாயில்

ராஜா: வந்தேன்! வந்தேன்! ஆஹா என்ன அழகான வீடு எனது காதலியின் வீடு. நுழைவாயிலே கண்ணை அசத்துதே. நம்ப ஆளு ரொம்ப பெரிய ஆளுப்பா. பிடிச்சாலும் பிடிச்சோம் புளியம்கொம்பா பிடிச்சி இருக்கோமோ?? //


அடேய் தம்பி..... !! தொறந்த ஊத்துக்குல்லார ஏதோ நொலையிர மாதிரி கேட்டு தொரந்திருந்தா ஒடனே உள்ளார போயிறதா.....!!

உம்பட பேருலயே அந்தாளு ஊட்டுக்குல்லார ஒரு ஜீவராசிக்கு சோறு போட்டு வளத்தீட்டு இருக்கானாம்....!! அத அவுதுட்டான்னா போதும்... அல்ல கட்டி கடுச்சு வெச்சுபோடுமாக்கும்........!!! சாக்க்ரத ......!!!!!// சேச்சே நம்ப மட்டும் என்ன குறைச்சலாவா இருக்கோம், நமக்கும் எல்லா வசதியும் இருக்கே! நம்ம வீடு கூடத்தான் அழகோ அழகு. //
ம்ம்ம்க்க்க்ம்ம்ம்.......!! நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்....!!! போடி மவனே.......!!!!
// ஆமா இதெல்லாம் யாரு நம்மகிட்டே கேட்டாங்க? //வடக்குபட்டி ராமசாமி கேட்டாபுடிங்கோ தம்பி.....!!!!

// மொதல்லே காஜோல் அப்பா கிட்டே நல்ல விதமா பேசுவோம். //


அதுக்கு முன்னாடி அந்தம்முனி புருசன்கிட்ட பர்மிசன் வாங்கு தம்பி......!!!// என்ன நடக்கப் போகுதோ? //நீயி , அவ அப்பன்.... , டின்னு... து..... சின்னு..... எல்லாரும்தேன் நடப்பீங்கோ......!!!
// அட நம்ப வரோம்னு நம்ப ஆளு நுழைவாயிலை கூட திறந்து வைத்திருக்காங்களே! //விதி valiyathu .......!!!// இனிமேல் இப்படித்தான் மரியாதை கொடுத்து கூப்பிட வேண்டி இருக்கும்! அதுக்கு இப்பவே ஒத்திகை பாத்துக்குவோம். //
ஆமா... ஆமா...!! இல்லீனா கண்ணாலத்துக்கு அப்புறம் அரிசி மாவு கிரைண்டர்ல ஆட்டமாட்ட.... செக்குலதான் ஆட்டுவ......!!!!


// சரி தொறந்து இருக்கும்போது அழைப்பு மணியை எல்லாம் அழுத்த வேண்டியது இல்லே. சும்மா உள்ளே போக வேண்டியதுதான். //பரவால்ல ரொம்ப நாகரீகம் தெருஞ்ச புள்ளதான் நீயி.......!!! நல்லாரு.... நல்லாரு.....!!
// ஆண்டவா எல்லாம் நல்லபடியா நடக்கணும். நல்ல படியா எல்லாம் முடிஞ்சா என் மாமனார் கையாலே 108 தேங்காய் உடைக்கச் சொல்லறேன். //
நல்லபடியா முடியிலனாலும் 108 தான்....!!! ஆம்புலன்சுக்கும் 108 தானுங்கோ தம்பி..... !!
// இதென்ன ஏதோ ஒண்ணு பாஞ்சு வருது, அட நாய் வளக்கிறாங்களா?? இதை சொல்லவே இல்லையே!! //


சொன்னாதான் ... நீ செவுரு ஏறி குதுச்சு வந்துருவியே.....!!!!// இது ஓடி வர வேகத்தைப் பார்த்தா நம்ம சதையை 3 கிலோவுக்கு மிச்சமா எடுத்துடுமே! //


உன்றகிட்ட இருக்குரதே அவ்ளோதான.......!!!!// நம்ப கதி இப்படி ஆகிவிட்டதே! என்ன செய்ய! //
ம்ம்ம்ம்ம்...!! நல்ல ஐடியா ....!! நீ அத புடுச்சு கடுச்சு வெச்சுபோடு.....!!! அப்பறம் அவிங்கப்பன் உன்ர பாக்கம் தல வெச்சுகோட படுக்கமாட்டான்.....!!!

// வேகமாக கேட்டின் மீது ஏறினான். அப்பா கேட் மீது ஏறி உட்கார்ந்து விட்டோம். அடுத்து என்ன செய்வது? //அட்ரா சக்க ......!! நெம்ப சரியான யடுத்துலதான் ஒக்காந்திருக்குற .....!!!!
// உள்ளே இருந்து யாரு வருவாங்க நம்மளை காப்பத்த. //ம்ம்ம்க்க்ம்ம்....!! இருடி மவனே ...... !! அவிங்கப்பன் உன்ன காப்பாத்துறதுக்கு ராணுவத்த அனுப்புவான்.....!!!!// ஒண்ணுமே புரியலையே? கள்ளி!என்னை இப்படி மாட்டி விட்டுடியே! சீக்கிரமா வந்து தொலை. //


அவ என்ன கச்ட்டத்துல இருக்குறாலோ.....????
// இந்த பக்கம் குதிக்கலாம்ன்னு பார்த்தா இங்கே ஒரு நாய். உள்ளே கத்திகிட்டு இருக்கறாங்களே அவங்களோட நண்பரா நீங்க? ஐயோ அப்படி முறைக்காதீங்க! நான் திருடன் இல்லே. இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்கோமே, யாராவது நம்மை வந்து காப்பாத்த மாட்டாங்களா? என்று ஒரு ஆதங்கத்தோடு உள்ளே பார்த்தான். //இப்புடியே அதுங்ககிட்ட சித்த நேரம் பேசிகிட்டே இருடி மவனே ....... கீழ்ப்பாக்கத்துல இருந்து வேன் வரும் உன்ன பிக்-அப் பண்ணீட்டு போறதுக்கு......!!!!

// உள்ளே இருந்து ஒரு புயல் வேகத்தில் ஒரு பொண்ணு வந்தது. ராஜாவுக்கு கொஞ்சமா உயிர் வந்தது போல் இருந்தது. //நம்தன ...... நம்தன ...... நம்தன ...... நம்தன ...... !!

ஆஆஅ........ ஆஆஅ........ ஆஆஅ........ ஆஆஅ........ !!!// சாரா:ஹேய் யாருப்பா நீ எங்க வீட்டு கேட் மேலே ஏறி உக்காந்து இருக்கே? //


// சாரா .... ///


ஐயோ.... ஐயோ ....!! பேருலயே ஒரு பீரா இருக்குராலே.....!!
//ஹேய் யாருப்பா நீ எங்க வீட்டு கேட் மேலே ஏறி உக்காந்து இருக்கே?//அட லூசு ... யாருப்பா இல்லடி.... யாரு மாமா......!!!!
// ராஜா: ஏய் என்ன? உன் வயசு என்ன? என்னை பார்த்து யாருப்பான்னு கேக்குறே?? மொதல்லே இந்த நாயை இழுத்து கட்டு. அப்புறமா நான் யார் என்று சொல்லறேன். //

//ஏய் என்ன? உன் வயசு என்ன?//

அதுக்கு 20 ...!! உனக்கு 60 ...!!!


எடுக்குறது பிச்சைனாலும் .... லொள்ளுக்கு ஒன்னும் கொரச்ச்சல் இல்ல உனக்கு.......!!!
// சாரா:ஹேய் என்னாடா நாய்ன்னு சொல்லறே அவனுக்கு பேரு இருக்கு, //ஆமாங்கோவ்....!! அத நாயின்னு சொல்லாதீங்கோவ்....!! ஒரு சேஞ்சுக்கு கழுதைன்னு சொல்லுங்கோவ்......!!!


அது தெனோ .... தெனோ .... பல்லு வெலக்குதுங்கோவ்..... !! ஏனுங்கோ தம்பி நீங்க வெலக்குரீங்களா...????// உனக்கு அவ்வளவு திமிரா அங்கே இரு எங்க அப்பாவை கூப்பிடறேன்.
ஆமா நீ யாரு //எப்புடியோ... பாக்க வந்தவிங்க வந்தா சேரி....!! கூப்புடுங்கோ அம்முனி...!!!// ராஜா: நான் காஜோலை பார்க்க வந்தேன். //


அவிங்கப்பனதான பாக்க வந்த நீயி....!! கஞ்சா ... கிஞ்சா... போட்டுட்டு ஒலர்ரியா.......????
// சாரா:என்ன காஜோலா அவங்க என்னோட அக்கா. மரியாதையா இறங்கி ஓடிப் போய்டு, இல்லே இந்த சின்னு உன்னை கடிச்சிடும். //ஆம்மங்கோவ்...!! ஜான்சி ராணி சொல்லிபோட்டாங்கோ....!! டேய் தம்பி.... அப்புடியே திருமபி பாக்காம ஓடிபோயிறு ......!!!!!// பாத்தியா சின்னுக்கு கோபம் வந்திடுச்சு. கத்துது பாரு. //


பின்ன .... கத்தாம ... !! " மன்மதராசா...." பட்டா பாடும்....!!!!!// சின்னு கேட் மேலே கூட ஏறும் தெரியுமா? //


தேனுங் அம்முனி....... இதுக்கு முன்னாடி உங்க சின்னு சர்கசுல வேல பாத்துதுங்களா....???// ராஜா: அடப்பாவி சாரா மொதல்லே சின்னுவை கட்டு, உங்க அப்பாவைத்தான் நான் பார்க்க வந்திருக்கேன். //
அக்காவ பாக்க வந்த எடத்துல தங்கச்சி பிக்-அப் பண்ற...!!! ம்ம்....ம்ம்...!! அடுச்சோட்டு....அடுச்சோட்டு....!!!
// சாரா: அது!!!!! //என்ன......!! அம்முனி பேக் அடிக்குது ......!!
// ராஜா:என்ன அது?வயசுக்கு தகுந்தா மாதிரியா பேசறே, //நாயே... நாயே.....!! இப்போ வயசுக்கு தகுந்த மாதிரியா நீ நடந்துகிட்டு இருக்குற.....????

// சரி என்ன படிக்கறே நீ? //


வேல வாங்கித் தரப் போறியா நீ......??? நீயே ஒரு டப்பா கம்பனியில அல்ல கையா... வேல பாக்குற......??? உனக்கு எதுக்கு இந்த விளம்பரம்.......??// சாரா:அதெல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயம். //தென்னுங்கோ அம்முனி இப்புடி சொல்லிபோட்டிங்கோ....!!! இதுதாங் நெம்ப முக்கியம்....!!!// மொதல்லே அக்காவை பாக்கனும்னு சொன்னே இப்போ அப்பாவை பாக்கனும்னு சொல்லறே என்ன சங்கதி? //தேனுங் அம்முனி...... நீங்களே தந்தி அடிக்கிறீங்களா.....??// நீ இங்கே இருந்து ஒழுங்கா போக மாட்டே போல இருக்கே! சரி இரு நான் சின்னுவை பிடிச்சுக்கறேன், இப்போ நீ உள்ளே போகலாம்! //ஓஓ....... மைசூர் மகாராணி சொல்லிபோட்டாங்க போ ராசா....!!!


சேரி...சேரி.. நீ அந்த கன்னுகுட்டிய ...... து.... சின்னுகுட்டிய புடுச்சு கட்டிபோடுங்க அம்முனி....!!!
// ராஜா: கொஞ்சம் மரியாதையா பேசக் கூடாதா! மாமான்னு கூப்பிட்டா என்னா கொறைஞ்சா போய்டுவே? //


அடேய் இன்டியன் எக்ஸ்ப்ரெஸ் மண்டையா ....!! இந்த மரியாதையே உனக்கு அதிகமுடா...!!!! படுவா ராஸ்கோலு....!!!// சாரா: சின்னுவை கையிலே இருந்து விட்டுடவா?? இல்லே உள்ளே ஒழுங்கா போறியா? //


அப்புடி போடுங்க அம்முனி.....!!!!// ராஜா: இல்லே அப்படி எல்லாம் செய்திடாதே நான் ஒழுங்கா உள்ளே போறேன். //அப்புடி வா வழிக்கு.....!! யாருகிட்ட காட்டுற உன் டகால்டி வேலையெல்லாம்.....!!!!// என்ன ஆரம்பமே சரியா இல்லையே, //தம்பி அர்னால்டு ..... கடைசியுமும் இப்பிடிதானுங்க ராசா இருக்கும்.....!!!
// அப்புறமா மச்சினிச்சியை கவனிச்சுக்கலாம். மொதல்லே வந்த வேலையை பாக்கலாம். ///


நீ மண்ணுகிட்ட .... து.... சின்னுகிட்ட கடி வாங்காம போக மாட்டைன்னு நெனைக்கிறேன்....!!! அப்பறம் உம்பட சாய்ஸ்...!!!!
// சாரா: அப்பா அப்பா யாரோ உங்களை பார்க்க வந்திருக்காங்க. வாங்க சீக்கிரமா! //
ஆமாங்கோவ் சார்...!! ஊட்டுக்குல்லார இருந்து 10 ரூவா எடுத்திட்டு வாங்க....!! பஞ்சு முட்டாய்காரன் வந்திருக்குரான் ...!!!!
// ராஜா:அட நம்ப மச்சினிச்சி கொஞ்சம் சிடு சிடுன்னாலும் ரொம்ப பொறுப்பா அப்பாவை கூப்பிடறாளே. சரி இருக்கட்டும் அப்புறமா நன்றி சொல்லிக்கலாம். //தம்பி வேண்டாம்...!! நெம்ப நெருங்கி போகாத.....!! அப்பறம் சின்னுக்கு பதிலா... அந்த புள்ளையே உன்னைய அல்லகட்டி கடுச்சு வெச்சுபோடும்.....!!! சாக்க்ரத ....!!!!
// மனோ: யாரு தம்பி நீங்க? //


ம்ம்ம்ம்....!!! ஜாக்கிசான் பைய்யன் ஜிங்கிஜான்.......!!!! கேக்குறான் பாரு கேள்வி.... அப்பிரிக்காவுல பொரிகடல வித்த பய.......!!!// புதுசா இருக்கே சரி சரி ஏன் நிக்கறீங்க உக்காருங்க. //என்னது ஒக்காறதா ....??? விசயத்த சொன்னா பழைய செருப்புலையே அடிப்பீங்க...!!!// என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க? //ம்ம்ம்ம்.....!!! உலக சமாதானம் உடன்படிக்கையில கையெழுத்து போடறதுக்கு வதிருக்குரன்.....!!!!
// எனக்கு வெளியே அவசரமா போகணும் சீக்கிரமா சொல்லுங்க. //பரவால சார்.... நீங்க போயிட்டு வாங்க....!! தம்பி அதுவரிக்கும் சின்ன பாப்பாகிட்ட பேசிகிட்டு இருகுட்டும்.....!!!!!
/// ராஜா:அட சனிக்கிழமை எங்கேயும் போகமாட்டாருன்னு சொன்னா, சரி எங்கேயாவது போகட்டும் நமக்கு என்ன இப்போ வந்த விஷயத்தை கச்சிதமா முடிக்கணும். //பயபுள்ள ... பொய் சொல்லிபுட்டா போல.....!!
// இவரு மொகத்தை நேரா பார்க்கவே முடியலையே, இவருகிட்டே போய் நான் எப்படி பொண்ணு கேக்கப் போறேன். //மொகத்த என்னோ..... மண்டையவே பாக்கமுடியில....!! மண்டைய பாரு.... நல்லா பள..பளன்னு... ப்ளீச்சிங் பவுடர் போட்டு கலுவுன வாஷ்பேசின் மாதிரி......!!!
// கடவுளே என்னை காப்பாத்து. //உன்கிட்ட இருந்துதான் அவர காப்பாத்தோனும் மொதல்ல ......!!!

// தட்டி தடுமாறி பேச ஆரம்பித்தான் ராஜா. //தேனுக் தம்பி.... காலையிலையே கஞ்சா போட்டுட்டீங்களா......????
// "சார் இல்லே சார் வந்து கேட் இல்லே நாய் இல்லே சின்னு கடிக்க வந்திச்சா சாரா என்னை காப்பாத்தி இங்கே கூட்டிகிட்டு வந்திச்சி".. ///ஓஓஒ.....!! கன்பாம்......!!!!!// மனோ: என்ன சாரா உன்னை இங்கே வரச்சொன்னாளா?? ஏய் சாரா! ஏன் இவனை இங்கே வரச்சொன்னே?யாரு இவன்? //ஆமாங்கோ சொட்ட மாமா....!! ஊடு சுத்தம் பன்றதுக்கு.... இந்த அம்முநிதானுங்கோ வர சொல்லுச்சு.....!!!!
// கேட் இல்லே கேட்டு //


கேட் இருக்குதா... இல்லியா......????// துமேலே உக்காந்து இருந்தாரு, உங்களைப் பார்க்கணும்தான் சொன்னாரு. //சரியான .... கொரங்கு பையனா இருப்பனாட்ட.....????

// மனோ: நீ ஏன்பா அது மேலே உக்காந்து இருந்தே! என்னை பார்க்கனும்ன்னா உள்ளே வரவேண்டியது தானே! சரி உக்காரு. //பிச்சை எடுக்குறவன்..... அங்கத்தானுங்கோ நிக்குனும் சொட்ட மாமா....!!!!!
// ராஜா:என்னடா இவர் பயமுறுத்தற மாதிரி அதட்டராறு!சரி மொதல்ல உட்காரலாம். அப்புறம் மீதி பேசலாம். எப்படி பேச்சை ஆரம்பிக்கறது? சார் வந்து.. யாரு மாடியிலே ஓ... நம்ம ஆளு!! அப்பா! இப்போ தான் கொஞ்சம் தைரியம் வருது.இனிமேல் நாம் ஏன் பயப்படனும்? நன்றாக சாய்ந்து நாற்காலியில் அமர்ந்தான். //இருடி மவனே..... !! இப்போ அவ வந்து " நீ யாருன்னு கேக்கப் போரா..." ...!!!
// மனோ:தன பெண்ணை மாடியில் அந்த பையன் பார்த்ததை கவனித்ததை கண்டவர் கடுப்பானார், ஏய் தம்பி இங்கே என்னைப் பார்த்து சொல்லு. வந்த வேலையை மட்டும் பார்க்கணும் அங்கே இங்கே கண்ணு அலை பாயக்கூடாது. //அடேய் பப்பாளி மண்டையா....!! ரெண்டு பிகர பெத்து வெச்சிருந்தா... ஊட்டுக்கு வர்றவன் ... அட்டேன்சன்லையா இருப்பான்....???// ராஜா:மறுபடியும் மேலே பார்த்தான், காதலி நம்பிக்கையுடன் நிற்பதை பார்த்தவுடன் மனதில் புது வெள்ளம் பாய்ந்தோடியது. சார் நான் உங்க பெண்ணை திருமணம் செய்ய விரும்பறேன். அப்பா!! எப்படியோ சொல்லிட்டோம். இப்போ எதுக்கும் தயாரா இருக்கணும். இவரு அடிப்பாரோ இல்லே அந்த நாயை அவிழ்த்து விடுவாரோ, ஒரே திகிலாதான் இருக்கு. காதல்ன்னா சும்மாவா? பார்ப்போம் என்ன சொல்லுவாருன்னு! //அட ... நெம்பத் தெவுரியம்தான் உனக்கு....!!!! அடுச்சுடு... அடுச்சுடு....!!!!// மனோ:யாரை சாராவையா அவ பத்தாவதுதான் படிக்கறா, அவளை எல்லாம் கட்டி கொடுக்க முடியாது. சரி நீ இப்போ கிளம்பலாம். //அடேய் பீங்கான் மண்டையா ....!!! மொக்க காமிடி பண்றதா நெனப்பு....!!!!!
// ராஜா:சார் நான் சொல்லவந்தது காஜோலை பற்றி சாராவை பற்றி இல்லே, நீங்க என்னை தப்பா புரிஞ்சிகிட்டீங்க. //


அடி ..... கன்பாம்....!!!!// மனோ:என்ன காஜோலுக்கு நீதான் பேரு வச்ச மாதிரி சொல்லறே. அவளுக்கு நிச்சயம் ஆகிப்போச்சுது, நீ கிளம்பலாம். //


அடப்பாவமே......!!!!!!!// ராஜா:இல்லே நாங்க இரெண்டு பேரும் காதலிக்கறோம். நீங்க வேணா உங்க பெண்ணை கூப்பிட்டு கேளுங்க. எப்படியோ தைரியமா சொல்லிட்டோம்பா! //சப்ப பிகரையும் உடமாட்டையாட்ட இருக்குது.....!!!!// மனோ:யாரு எம்பொண்ணையா அவ என்கிட்டே சொல்லவே இல்லையே! திருமணத்துக்கு ஒத்துகிட்டாளே! ஏய் இங்கே வா, இவன் என்னவோ சொல்லறான் அதெல்லாம் உண்மையா? எங்கே உங்க அம்மா? கூப்பிடு சாரா.. //


இதுக்காக ... கோர்ட் மாதிரி சத்தியமா பண்ண முடியும்......???// கல்யாணி: என்னாங்க கூப்பிட்டீங்களா? யாரு இந்த தம்பி //


அய்யோ.....!!! அய்யோ...!! வாங்க அத்த....!! வாங்க அத்த...!!!//இருங்க தம்பி நான் காப்பி கொண்டு வரேன். பிறகு எல்லாம் பேசலாம். //இல்ல .... பீரு , வோட்கா , ரம் , ன்னு ஏதாவது இருந்தா கொண்டு வாங்க.....!!!!!
// மனோ:என்னாடி நான் ஒருத்தன் இங்கே மலைச்சு போய் உக்காந்து இருக்கேன், உன் பொண்ணு பண்ணிய காரியத்துக்கு உன்னை விசாரிக்க கூப்பிட்டா நீ விருந்தோம்பலா பண்ணறே. நில்லு அவளை என்னான்னு கேட்டு சொல்லு. இவன் என்னவெல்லாமோ சொல்லறான். அவளும் திருடி மாதிரி முழிச்சிகிட்டு நிக்கறா. விஷயம் என்னான்னு கேளு. விஷயம் எனக்கு எதிரா இருந்தா நீங்க ரெண்டு பேரும் என்ன செய்யறதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. //அட... நீங்க ஒன்னும் கவலை படாதீங்க தம்பி....!! இந்த ஆளு ஒரு காமிடி பீசுதான்...!!
இத கல்யாணி மாமியார் ... இனிசியல் ப்ராபுலத்துக்காக.... சோறு போட்டு வெச்சிருக்க்து.....!!!!//கல்யாணி: சும்மா இருங்க, ஏற்கனவே உங்களுக்கு ரத்தக் கொதிப்பு, சுகர் எல்லாம் இருக்கு, இப்படி ஏன் சகட்டு மேனிக்கு கத்தறீங்க? //அட உடுங்கோ மாமியார்..... போனா போயிட்டு போறாரு...!! நம்ப தம்பியே டோட்டல் குடும்பத்த பத்தரமா பாத்துக்கும்.....!!!!


// மனோ: ஆமாண்டி இன்னும் என்னென்ன வியாதி இருக்கோ எல்லாத்தையும் எல்லாரு முன்னாடியும் சொல்லிக்கிட்டு இரு, உன்னை போய் துரத்தி துரத்தி காதலிச்சு கட்டிகிட்டேனே என்னை ஏதாவது எடுத்து அடிச்சுக்கணும். //அட தம்பி பழனிச்சாமி .... இதுதான் சான்சு... உடாத... பக்கத்துல ஏதாவது காஞ்ச கட்ட இருந்துதுனா.... எடுத்து அடுச்சுபோடு....!!!
// ராஜா: ஆஹா! ஆஹகா!! என்ன அருமையான சந்தர்ப்பம், இந்த விஷயத்தை நம்பளிடம் நம்ப ஆளு சொல்லவே இல்லை. இருக்கட்டும் அப்புறம் கவனிச்சுக்கலாம். சரி நம்ம கதை முடிய ரொம்ப கஷ்டம் இல்லை. சுபமாகவே முடிச்சுடலாம். ஆனா ஆளுதான் சரி இல்லை அதிகமா சவுண்ட் விடறாரு. //
எப்புடியோ...... வந்த வேல முடுஞ்சா சேரி....!!!!

// மனசாட்சி கூறுகிறது "ராஜா முழிச்சுக்கோ. கப்புன்னு பேசி குப்புன்னு காரியத்தை கச்சிதமா முடிக்கணும்". //


இன்னாவரைக்கும் கண்ண மூடிகிட்டா இருந்தான்.....??// தொடரும்.....
ரம்யா //தொடரும்.....
லவ்டேல் மேடி

சுரேஷ் குமார் said...

உண்மையில் நான் எதிர் பார்த்த மாதிரி இல்லாமல், கதை நல்லா காமெடியா இருந்துச்சு..
சூப்பர்.. ரசித்தேன்..

சுரேஷ் குமார் said...

முதல் நான்கு ஐந்து பேராக்களில் உங்களின் வழக்கமான எழுத்து நடை இல்லாமல் சற்று வித்தியாசமாக இருப்பதாய் உணர்கிறேன்.. அப்டியா..?

சுரேஷ் குமார் said...

ஹைய்யா.. மீ தி 25th..

sakthi said...

கல்யாணி: என்னாங்க கூப்பிட்டீங்களா? யாரு இந்த தம்பி, இருங்க தம்பி நான் காப்பி கொண்டு வரேன். பிறகு எல்லாம் பேசலாம்.//

nalla mam nu sollunga

sakthi said...

லவ்டேல் மேடி said...

// ஜில் என்று ஒரு காதல் / இரெண்டாம் பகுதி //


வந்துட்டேன் ........ வந்துட்டேன் ........ வந்துட்டேன் ........

maddy yen intha kolai veri

லவ்டேல் மேடி said...

////// sakthi said...

லவ்டேல் மேடி said...

// ஜில் என்று ஒரு காதல் / இரெண்டாம் பகுதி //


வந்துட்டேன் ........ வந்துட்டேன் ........ வந்துட்டேன் ........ //maddy yen intha kolai வெறி /////எண்ணுங்கோ பண்றது.... சர்ச்சையில சிக்கியே பழகிப்போச்சு....!!! ரம்யா அக்காகிட்ட இருந்து இன்னும் எந்த எதிர்ப்பும் காணோம்....!! என்ன சொல்ல போறாங்கன்னு வெயிட்டு பண்ணிக்கிட்டு இருக்கேன்....!! உங்க பங்குக்கு ஏதாவது திட்டிட்டு போங்க..... ப்ளீஸ்......!!!

வால்பையன் said...

உண்மை சம்பவம் மாதிரி வாசலோட படமெல்லாம் போட்டுருக்கிங்களே!

உருப்புடாதது_அணிமா said...

உள்ள தான் இருக்கோம்

உருப்புடாதது_அணிமா said...

இரண்டாம் பகுதியும்...,
ஜில்லுன்னு இருக்கு

உருப்புடாதது_அணிமா said...

///காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!///


யார சொல்ல வறீங்கன்னு புரியலயே??

உருப்புடாதது_அணிமா said...

//வீட்டுச் செல்லம் : சின்னு //

நாய்க்கு வீட்டு செல்லமா??

உருப்புடாதது_அணிமா said...

///காதலியின் வீட்டு நுழைவாயில் //


அப்போ அடுத்த வாரம் என்ன காதலியின் வீட்டு சமையலறை படம் போடுவீங்களா?

RAMYA said...

//
நசரேயன் said...
உள்ளேன் தமிழ் தாயே
//

வாங்க நெல்லை புயலே நலமா??

அப்போ இங்கிலீஷ் தாய் யாருங்கோ??

RAMYA said...

//
நசரேயன் said...
//என்ன ஆரம்பமே சரியா இல்லையே, அப்புறமா மச்சினிச்சியை கவனிச்சுக்கலாம்//

என்னை மாதிரியே யோசிக்கிறீங்க
//

அப்படியா?? உண்மை ஆப்படியே பீரிட்டுகிட்டு வருதுங்கோ!!

RAMYA said...

//
நசரேயன் said...
ஜில்லுன்னு போகுது காதல்
//

நன்றிங்க நன்றிங்க மிக்க நன்றி!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
மீ த 4 வது
//

வாங்க அண்ணா வணக்கம் !!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
ஓட்டு போட்டாச்சுங்க.. (தமிழுஷ், தமிழ்மணம் இரண்டிலும்)
//

நன்றிங்க அண்ணா !!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// தொடரும்..... //

ம்.. இன்னும் இருக்கா... வெரி குட்
//

இருக்கு!! இருக்கு!! படிங்க படிங்க படிச்சுகிட்டே இருங்க.

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// என் மாமனார் கையாலே 108 தேங்காய் உடைக்கச் சொல்லறேன். //

விட்டா மாமனாரையே சூரத்தேங்காய் ஆக்கிடுவார் போலிருக்கு
//

ஹா ஹா ஹா ஹா ஹா!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// உள்ளே இருந்து ஒரு புயல் வேகத்தில் ஒரு பொண்ணு வந்தது.//

அம்மா மின்னல் மாதிரி இது புயல்...
//


ஆமா ஆமா இது மின்னல்தான் !!

RAMYA said...

//
அப்பாவி தமிழன் said...
நெஜமாவே ஜில்லுனு இருக்கு
//

நன்றி அப்பாவி தமிழன்!!

RAMYA said...

//
புதியவன் said...
//காதலியின் வீட்டு நுழைவாயில்//

ரொம்ப பசுமையா இருக்கு ரம்யா...
ம்...ஜில்லுன்னு இருக்குன்னு கூட சொல்லலாம்...
//

ஹா ஹா நன்றி புதியவன்!

RAMYA said...

//
புதியவன் said...
//பிடிச்சாலும் பிடிச்சோம் புளியம்கொம்பா பிடிச்சி இருக்கோமோ??//

பார்த்தா புளிய மரம் மாதிரி தெரியலையே...ஏதோ செடி கொடிகள் தான் தெரியுது...
//

இது அசத்தற காமெடியா இருக்கே!!

RAMYA said...

//
புதியவன் said...
//"சார் இல்லே சார் வந்து கேட் இல்லே நாய் இல்லே சின்னு கடிக்க வந்திச்சா சாரா என்னை காப்பாத்தி இங்கே கூட்டிகிட்டு வந்திச்சி"..//

சார் ரொம்பத் தெளிவாத்தான் இருக்கிறார் போல...
//

ஆமா ரொம்பத் தெளிவா இருக்காரு!!

RAMYA said...

//
புதியவன் said...
//கல்யாணி: என்னாங்க கூப்பிட்டீங்களா? யாரு இந்த தம்பி, இருங்க தம்பி நான் காப்பி கொண்டு வரேன். பிறகு எல்லாம் பேசலாம்.//

ஆஹா...என்ன ஒரு பண்பாடான விருந்தோம்பல்...
//

அம்மா ரொம்ப நல்லவங்களா தெரியறாங்களோ ??

RAMYA said...

//
புதியவன் said...
ஜில் என்று ஒரு காதல் இரண்டாம் பகுதியும் ஜில்லுன்னு தான் இருக்கு அடுத்த பகுதிய தொடருங்க ரம்யா...

கோடம்பாக்கத்தில இந்த மாதிரி காமெடி கலந்த காதல் கதையைத் தான் தேடிக்கிட்டு இருக்கிறதா கேள்வி...
//


நன்றி நன்றி புதியவன்!!

RAMYA said...

//
Thamizhmaangani said...
கதை கலகலப்பா போகுது.. அடுத்த பகுதி?
//

வெகு விரைவில் Thamizhmaangani!!

RAMYA said...

//
ஜீவா said...
எப்படி இர்ருக்கிங்க ரம்யா . திரும்பி வந்துவிட்டேன் என் தேவதையுடனும் , கனவுகளுடனும். உங்களின் வார்த்தைகளுக்கும், மனதுக்கும் நன்றிகள்
//

ஜீவா எவ்வளவு நாள் ஆகிப்போச்சு
நலமா??

உங்க பின்னூட்டத்தில் இருந்தே உங்களின் மகிழ்ச்சி தெரிகின்றது.

உங்கள் மகிழ்ச்சி எனக்கும் தொற்றிக் கொண்டு விட்டது.

வாழ்க வளமுடன் சகோதரர் ஜீவா!!

RAMYA said...

//
கார்க்கி said...
காதலிலே காமெடியா... ம்ம்
//

நீங்கதான் கதாநயகன் ஆச்சே!

நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் :-)

RAMYA said...

//
விஜய் said...
இவ்வளவு ஸ்பீடா ஒரு காதல் கதை நகர்வதை இப்போ தான் பார்க்கறேன், படிக்கறேன். அசத்தறீங்க!!!
//

நன்றி நன்றி நன்றி விஜய்!!

RAMYA said...

//
விஜய் said...
காதல் கதையில் காமெடி. சூப்பர்.

ராஜா பொண்ணு கேட்டதும், சாரா பத்தாம் கிளாஸ் தான் படிக்கறா, அவளையெல்லாம் கல்யாணம் கட்டிக் கொடுக்க முடியாது’ன்னு அவங்க அப்பா சொன்னப்போ, சத்தம் போட்டு சிரிச்சுட்டேன்.
//


நானே எழுதிட்டு மறுபடியும் சரிபார்த்துக் கொண்டு இருக்கும்போது
சில வரிகள் என்னையும் சிரிக்க வைத்தன விஜய் :-)

RAMYA said...

Hi லவ்டேல் மேடி,

வாங்க! வாங்க! லவ்டேல் மேடி
எனது அருமையான அன்புச் சகோதரா!!

என்ன ஒரு நகைச்சுவை உங்களுக்குள்
உங்கள் எழுத்து நடை, பதில்கள் என்னை அப்படியே அசத்தி விட்டன போங்க.

ரொம்ப அருமையா இருந்தது உங்களின் பதில்கள் படிக்கும்போது சத்தம் போட்டு சிரித்துக் கொண்டே
படிச்சேன்.

உங்க ஸ்லாங் ரொம்ப நல்ல இருக்கு.
கூர்ந்து கவனித்துப் படிச்சாதான் வார்த்தைகளின் அர்த்தம் புரியுது.

எப்படி நீங்க எவ்வளவு அழகா, அறிவா எழுதறீங்க??

எனக்கு கொஞ்சம் உடல் நலம் சரி இல்லை மருத்துவ மனைக்கு சென்றிருந்தேன். அதான் உங்கள் பின்னூட்டத்திற்கு உடனே பதில் எழுத முடியவில்லை. தவறாக எண்ண வேண்டாம்.

உங்களின் விமரிசனத்துக்கு நான் விசிறி.

மிக்க நன்றி சகோதரா!!

RAMYA said...

//
லவ்டேல் மேடி said...
////// sakthi said...

லவ்டேல் மேடி said...

// ஜில் என்று ஒரு காதல் / இரெண்டாம் பகுதி //


வந்துட்டேன் ........ வந்துட்டேன் ........ வந்துட்டேன் ........ //

maddy yen intha kolai வெறி /////

எண்ணுங்கோ பண்றது.... சர்ச்சையில சிக்கியே பழகிப்போச்சு....!!! ரம்யா அக்காகிட்ட இருந்து இன்னும் எந்த எதிர்ப்பும் காணோம்....!! என்ன சொல்ல போறாங்கன்னு வெயிட்டு பண்ணிக்கிட்டு இருக்கேன்....!! உங்க பங்குக்கு ஏதாவது திட்டிட்டு போங்க..... ப்ளீஸ்......!!!
//


சகோதரா நான் ஏன் உங்களை திட்டப் போறேன்??

நகைச்சுவை கலந்த விமரிசனம் உங்களோட விமரிசனம்.

எழுதுங்க என்னுடன் சேர்ந்து நம் நண்பர்கள் எல்லாரும் படிச்சு சிரிக்கட்டும்.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் இல்லையா??

அதற்கு நீங்களும் ஒரு காரணம் என்றால் அதுவும் சந்தோஷம்தானே :))

எழுதுங்க எழுதுங்க நல்லா எழுதுங்க :))

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

Please change the paragraph alignment to left ( normal) instead of Justify. Its looks like a research article.. not like a story.

வழிப்போக்கன் said...

படித்தேன் ...ரசித்தேன்...
நல்லா எழுதுறீங்க...
:)))

அ.மு.செய்யது said...

//புதியவன் said...
//இதென்ன ஏதோ ஒண்ணு பாஞ்சு வருது, அட நாய் வளக்கிறாங்களா?? இதை சொல்லவே இல்லையே!!//

ஹா...மெயின் கேரக்ட்டர் வந்தாச்சா...
//

ஹா ஹா...

செம்ம கலாட்டா பண்ணி வச்சிருக்கீங்க..

இந்த தொடரும் பாத்த அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளல...


( சும்மானாங்காட்டியும் ..லெஸ் டென்சன்..மோர் வொர்க் )

லவ்டேல் மேடி said...

// வாங்க! வாங்க! லவ்டேல் மேடி
எனது அருமையான அன்புச் சகோதரா!! //ஆஹா...!!! ஆட்டுக்கு மாலைய போட்டு தண்ணி தெளிக்கிற மாதிரி ஒரு எபக்ட்டு வருதே......???!!!!?????// என்ன ஒரு நகைச்சுவை உங்களுக்குள்
உங்கள் எழுத்து நடை, பதில்கள் என்னை அப்படியே அசத்தி விட்டன போங்க. ///நெஜமாவா.....???? ம்ம்ம்ம்ம்ம்....!!! அக்கா.... !!! என்ன வெச்சு காமிடி.... கீமிடி..... ஒன்னும் பண்ணலையே.........// ரொம்ப அருமையா இருந்தது உங்களின் பதில்கள் படிக்கும்போது சத்தம் போட்டு சிரித்துக் கொண்டே படிச்சேன். ///pathila நெனச்சா....??? இல்ல....... என்ன nenacchaa........????// உங்க ஸ்லாங் ரொம்ப நல்ல இருக்கு.
கூர்ந்து கவனித்துப் படிச்சாதான் வார்த்தைகளின் அர்த்தம் புரியுது. //


எங்க கொங்கு நாட்டு ஸ்டைலே தனிதானுங்கோவ்.......!!!// எப்படி நீங்க எவ்வளவு அழகா, அறிவா எழுதறீங்க?? //


இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே......!!!!! பட் குட் கொஸ்டீன்....!! ஆன்சர் அப்பறமா சொல்லுறேன்.....!!!!


//எனக்கு கொஞ்சம் உடல் நலம் சரி இல்லை மருத்துவ மனைக்கு சென்றிருந்தேன். //


அச்சச்ச்சோ ......!! காய்ச்சலா...??? மூலிக ரசம் குடீங்க சரியா போயிரும்....!!!!


// அதான் உங்கள் பின்னூட்டத்திற்கு உடனே பதில் எழுத முடியவில்லை. தவறாக எண்ண வேண்டாம். //


ச்ச ... ச்ச....!!

இதுக்கு நீங்க என்ன திட்டீருக்கலாம்....!! ஒரு பப்ளிசிடியாவது கெடச்சிருக்கும்.....!! போங்க அக்கா...!!!// உங்களின் விமரிசனத்துக்கு நான் விசிறி. //


ஆஹா....!! ஓஹோ...!!!

பேஷ்...!!! பேஷ்....!!!


ஆஆவ்வ்வ்வ்....!!!!!!!// மிக்க நன்றி சகோதரா!! //


மிக்க நன்றிங்க சகோதரி....


----------------------------------------------------------------------------------------------------


// சகோதரா நான் ஏன் உங்களை திட்டப் போறேன்??

நகைச்சுவை கலந்த விமரிசனம் உங்களோட விமரிசனம்.

எழுதுங்க என்னுடன் சேர்ந்து நம் நண்பர்கள் எல்லாரும் படிச்சு சிரிக்கட்டும்.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் இல்லையா??

அதற்கு நீங்களும் ஒரு காரணம் என்றால் அதுவும் சந்தோஷம்தானே :))

எழுதுங்க எழுதுங்க நல்லா எழுதுங்க :)) //
ஆஹா...!! பர்மிசன் கிரேண்டேடு ....!! மிக்க நன்றிங்கோ சகோதரி....!!!!!!

Rajeswari said...

ஹய்யோ...சஸ்பென்ஸ் தாங்கமுடியல..சூப்பரா இருக்கு ரம்யா

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
உள்ள தான் இருக்கோம்
//

சரி சரி எந்த உள்ளே அணிமா??

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
இரண்டாம் பகுதியும்...,
ஜில்லுன்னு இருக்கு
//

நன்றி அணிமா!!

RAMYA said...

// உருப்புடாதது_அணிமா said...
///காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!
///
யார சொல்ல வறீங்கன்னு புரியலயே??
//

ஹல்லோ, யாரையும் இல்லே அது கதை.

ஹா ஹா ஏமாந்தீங்களா??

இந்த கதையிலே இதுக்கு மேலே ஏதாவது சந்தேகம் இருந்தால் சகோதரர் லவ்டேல் மேடியை கேட்டுக் கொள்ளவும் :-)

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//வீட்டுச் செல்லம் : சின்னு //

நாய்க்கு வீட்டு செல்லமா??
//

ஆமா செல்லமே செல்லம்தான் :))

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///காதலியின் வீட்டு நுழைவாயில் //
அப்போ அடுத்த வாரம் என்ன காதலியின் வீட்டு சமையலறை படம் போடுவீங்களா?
//

அதான் யோசிக்கறேன்!!

லொள்ளு இல்லே லொள்ளு அது கொஞ்சம் அதிகமா தெரியலை :-)

RAMYA said...

//
Rajeswari said...
ஹய்யோ...சஸ்பென்ஸ் தாங்கமுடியல..சூப்பரா இருக்கு ரம்யா
//

நன்றி ராஜி, அடுத்த பகுதியையும் படிங்க!!

இது நம்ம ஆளு said...

அக்கா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

gayathri said...

hai pa ramya unga kathai padichen super pa

nalla comedya iruku

pavam anthan paiyanuku evalavu payama iurnthuirukum antha ponnu vettuku porathuthu

next part sekaram poduga

அதிஷா said...

அடடா!

குடந்தைஅன்புமணி said...

நல்லாத்தான் இருக்கு... இந்தப்பகுதியும்! அடுத்து எப்போ?