Sunday, May 31, 2009

ஜில் என்று ஒரு காதல் / நிறைவுப் பகுதி!!

காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!

அனைவரும் ஒருவழியாக மகனுடன் பெங்களூருக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். ராஜா அங்குதானே வேலை பார்க்கின்றான்.

"வாங்கப்பா! என்னோட ரூம் கொஞ்சம் அசிங்கமா இருக்கும். நான் இருந்தாதான் சுத்தமா வச்சிருப்பேன். எனது நண்பர்கள் கொஞ்சம் சோம்பேறிங்க. பாருங்க, எப்படி எல்லாம் புத்தகங்களும் துணிகளும் இறைந்து கிடக்கின்றன". இதில் பாதி நம்பளோடதுன்னு இவங்களுக்கு தெரியவா போகுது?

"டேய் என்னாடா இவ்வளவு கேவலமா ரூம் வச்சிருக்கீங்க? நாங்க ஹோட்டல்லே தங்கிக்கறோம். அப்பாவும் இதைதான் விரும்புவாங்க"

"சும்மா இருங்கம்மா இதெல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க. ரெண்டு நாளுக்காக ஹோட்டல்லே போய் தங்குவாங்க? என்கூட தங்கி இருக்கிற நண்பர்கள் எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க. ஒருத்தன்தான் இருக்கான். அவனும் அலுவலகம் போய் இருக்கான். ராத்திரிதான் வருவான். ரொம்ப நல்ல பையன். அவனைத்தான் நாம பொண்ணு பார்க்க அழைத்துச் செல்லப் போகிறோம். நீங்க ரெண்டு பேரும் குளிங்க. நான் டிபன் வாங்கி வருகிறேன். அப்புறம் எல்லா பேசிக்கலாம்"

"சரிப்பா நீயும் குளி, சாமி கும்பிட்டப்புறம் சாப்பிடலாம்"

"என்ன சாமி கும்பிட போறீங்களா? அம்மா இது பேச்சிலர்ஸ் தங்கற ரூம். இங்கே அப்படி எல்லாம் வசதி இல்லை"

"சரி சரி நீ போய் குளிக்கவாவது செய்யலாம் இல்லையா? பேச்சிலர்ஸ் ரூம்ன்னா என்ன ஒரு பிள்ளையார் படம் கூடவா வச்சுக்க மாட்டீங்க? நல்ல பிள்ளைங்க போங்க!"

"இருங்க நான் ஒரு போன் பேசிட்டு வரேன் அதுக்குள்ளே நீங்களும் அப்பாவும் குளிச்சிட்டு வந்திடுங்க போங்கம்மா"

"ஏண்டா இப்படி வெரட்டரே? அவகிட்டே பேசனுமா? அதெ நேரா சொல்லிட வேண்டியதுதானே?"

"ஐயோ அம்மா இப்பவே மாமியார் மருமகள் சண்டை ஆரம்பமா? நாம்ப வந்ததை அவளுக்கு சொல்ல வேண்டாமா? சொன்னால் தானே அவளோட அப்பனை ஒரு இடத்துலே இருக்கச் சொல்ல முடியும்"

"ஏண்டா அவங்க அப்பா அவ்வளவு கோபக்காரரா? அப்பா இப்போதான் உடம்பு தேறி வந்திருக்காரு. எனக்கு பயமா இருக்குடா. இதுக்குதான் எங்க அண்ணன் மகளைக் உனக்கு கட்டலாம்ன்னு இருந்தேன். உங்க அப்பாவும் கேக்கலை, நீயும் உன் இஷ்டத்துக்கு ஆடறே! என்னமோ போங்க எனக்கு ஒன்னும் புரியலை"

"என்னா வந்தவுடனே ஆரம்பிச்சிட்டியா? எப்படியாவது உங்க அண்ணன் மகளை கொண்டு வந்திடம்னு முடிவோட இருந்தே. அது வாயிலே மண்ணு! சரி, போய் குளிக்கிற வேலையைப் பாரு. அவனை வம்பிழுக்காதே"

"ஆமாங்க நான் வம்பிழுக்கத்தான் வந்திருக்கேன் பாருங்க! ஏதோ என்னோட ஆற்றாமையை சொன்னேன் அவ்வளவுதான்"

"சரி இப்படியே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருங்க, இதோ நான் வந்திடறேன்" என்று அலைபேசியை எடுத்துக் கொண்டு தனிமையை நோக்கி ஓடினான் ராஜா.

"ஹேய் நான்தான்! எங்கே இருக்கே? வீட்டிலேயா இல்லே வெளியேவா? உங்கப்பன் முன்னாடியா?"

"இங்கே பாருங்க போன் பண்ணினா என்ன விஷயம்ன்னு மட்டும் சொல்லணும். தேவை இல்லாம எங்கப்பாவை திட்டக்கூடாது, இங்கே வந்திட்டீங்களா? இல்லே ஊரிலேயே இருக்கீங்களா?"

"ஏய் அதை சொல்லதாண்டி போன் பண்ணினேன், அதுக்குள்ளே ரொம்ப அலட்டிகிறியே! ரொம்ப அலட்டாதே உடம்புக்கு நல்லதில்லை"

"என்னது டீயா? உடம்பு இப்படி இருக்கு? சரி அவங்க எல்லாம் வந்திட்டாங்களா?"

"அவங்களா? எவங்க? உங்க வீட்டு வேலைக்காரங்களா? உன்னோட மாமியாரு! மாமனாரு! அந்த மரியாதையோட பேசணும். சரியா?"

"ரொம்ப கொக்கரிக்காதீங்க! உங்க அம்மாவும் அப்பாவும் நல்லபடியா எங்க அப்பா கிட்டே சம்மதம் கேக்கட்டும். மீதி எல்லாம் அப்புறம் வச்சிக்கலாம்"

"இங்கே பாரு நல்லவிதமா நாலு வார்த்தை பேசலாம்னு வந்தா ரொம்ப அதிகாரமா பேசுறியே! கல்யாணம் ஆனா உனக்கு ரொம்ப எகத்தாளமா போய்டும் போல இருக்கே?"

"என்ன எகத்தாளமா? யாருக்கு எனக்கா? இங்கே பாருங்க ரொம்ப ஓவரா பேசறீங்க. இப்போ எனக்கே பயமா இருக்கு, உங்களுக்கே இவ்வளவு வாய்ன்னா உங்க அம்மாவுக்கு எவ்வளவு வாய் இருக்குமோன்னு. நான் எப்படி அவங்களை சமாளிப்பேன்னு தெரியலை"

"சரி சரி அடங்கு, உங்க வீட்டு குட்டி பிசாசை வெளியே அனுப்பிடு. அதே வச்சிக்கிட்டு எல்லாம் நல்ல காரியம் பேசமுடியாது, உங்கவீட்டு பன்னு அட தப்பா சொல்லிட்டேனோ? அதான் சின்னு அதையும் பிசாசோட வெளியே விரட்டி விட்டுடனும். சரியா?"

"இங்கே பாருங்க இப்பவும் ரொம்ப அதிகமா பேசரமாதிரிதான் இருக்கு! உங்க அம்மா அப்பா மட்டும் வந்தா போதும்ன்னு நினைக்கின்றேன். நீங்க வந்து மறுபடியும் எங்க அப்பாவை வெறுப்பேத்தாதீங்க"

"சரி வை வேறே போன் வருது"

"ராஜா என்னப்பா எங்கே இருக்கே? நாங்க ரெண்டு பெரும் குளிச்சி தயாராகிவிட்டோம். எப்போ கிளம்பப்போறோம்? உன்னோட நண்பன் எப்போ வரான்? கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டி இருக்கு. நீ வாங்கி வந்திடறயா?"

"அம்மா நான் வேண்டிய பொருட்கள் அனைத்தும் வாங்கிதறேன். ஆனா ஒரு சின்ன விஷயம் நீங்க ரெண்டு பெரும் அவங்க வீட்டுக்கு மொதல்ல போய்டுங்க. நான் என் நண்பனை அழைத்துக் கொண்டு நேரா வந்திடறேன்"
"என்னடா கடைசியிலே இப்படி சொல்றே நான் எப்படி தனியா போறது?"

"ஏம்மா உங்க கூடத்தான் அப்பா வராரு இல்லே எப்படி அது தனியாகும்?"

"என்ன பிரச்சனை? ரெண்டு பேரும் இங்கே இருந்து பேசிகிட்டு இருக்கீங்க?"

"இதுதான் விஷயமா? ராஜா நீ உன்னோட நண்பனை அழைத்துக் கொண்டு நேரா அவங்க வீட்டுக்கு வந்திடு.நீ கொடுத்த முகவரிக்கு நாங்க போயிடறோம். உங்க அம்மா சொல்லறதை கேட்டு நீ ஒண்ணும் கவலைப் படாதே"

"சரிப்பா தேவையான பொருட்கள் வாங்கி வருகின்றேன் அதுக்குள்ளே அங்கே டிபன் வாங்கி வச்சிரிக்கேன். சாப்பிட்டவுடன் நீங்க கிளம்ப தயாராகுங்க"

"சரிப்பா போயிட்டு வா"

"அப்பா கால்டாக்ஸி அழைத்து வந்திருக்கேன் தயாரா இருக்கீங்களா?"

"இதோ வந்திட்டோம், சரி நீ உனது நண்பனை அழைத்துக் கொண்டு உடனே வந்திடு பத்திரமா வந்து சேரு".
"கடவுளே சின்னு, குட்டிபிசாசு இவங்களாலே எந்தப் பிரச்சனை வரக்கூடாது" என்று மனதுக்குள்ளே வேண்டிக் கொண்டு நண்பனை பார்க்க புறப்பட்டான் ராஜா.
ஒரு வழியா சரியான முகவரிக்கு வந்து சேர்ந்தார்கள். "வீடு பெருசாதான் இருக்கு. நம்ம பைய இதெ பார்த்துதான் மயங்கிட்டானோ? ச்சேசே அப்படி எல்லாம் இருக்காது"என்று மனதிற்குள்ளே பேசிக்கொண்டு கணவனின் முகபாவத்தை பார்த்தாள் மானசா.

"என்ன மானசா நம்ம பையன் நல்ல பெரிய இடமாத்தான் பிடிச்சிருக்கான் போல"

"இங்கே பாருங்க, நம்மளும் நல்லாதான் இருக்கோம். வீட்டை எல்லாம் பார்த்து வழியக் கூடாது. உள்ளே போய் மனுஷாளை பார்த்து அப்புறமா பெருமையா சிரிங்க"

சரி சரி என்று மனைவியை ஆசுவாசப் படுத்துவதற்குள் சின்னு ஆவேசமா பாய்ந்து வந்தது.

சின்னு கத்தியதை கேட்டு காஜோல் வெளியே ஓடி வந்தாள். அங்கே இருவரையும் பார்த்து புரிந்து கொண்டாள். வாங்க அம்மா! வாங்க அப்பா!" என்று வரவேற்பு கொடுத்திட்டு "அம்மா!" என்று கத்திக் கொண்டே உள்ளே ஓடினாள். ஓடும் வேகத்தில் சின்னுவை அழைத்து செல்லாததால் அவர்கள் வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.

சத்தம் கேட்டு காஜோலின் அப்பா வெளியே வேகமாக வந்தார். வந்த வேகத்தில் சின்னுவை அதட்டினார். சின்னு அமைதியானது. பிறகுதான் நிற்பவர்களை நிமிர்ந்து பார்வை இட்டார்.

"உள்ளே வரலாமா நாங்க ராஜாவோட அம்மா, அப்பா வந்திருக்கோம்" என்றார்.

"வாங்க வாங்க தைரியமா வாங்க சின்னு ஒன்னும் பண்ண மாட்டான்"

"ரொம்ப நல்லாவராதான் தெரியுது" கணவனின் காதோரம் மானசா கிசுகிசுத்தாள்.

"ம்ம்ம் பேசாம வா! அவசரப்பட்டு எந்த முடிவிற்கும் வந்திடாதே"

"கல்யாணி! யார் வந்திருக்கான்னு பாரு"

"இதோ வந்திட்டேங்க!"

"வரும்போது குடிக்க தண்ணி எடுத்துகிட்டு வா"

"சரிங்க....."

"இந்தாங்க தண்ணி குடிங்க! என்றவள் வந்திருப்பவரைப் பார்த்து உறைந்து போனாள்" கல்யாணி.

பார்த்த ராஜாவின் அப்பாவும் திகைப்பின் உச்சத்தில் "நீயா?" என்றார்

"அண்ணா என்னை மன்னிச்சுடுங்க. இவரும் நானும் கல்லூரியில் படிச்சப்பவே காதலிச்சோம். அதை அம்மாகிட்டேயும் சொன்னேன். அவங்களும் ஒத்துக்கலை அப்பாவும் ஒத்துக்கலை. ஆனா நீயோ எனக்காக ஒண்ணுமே பரிந்து பேசலை. பிறகுதான் நானே முடிவெடுத்து இவருடன் வந்துட்டேன். பிறகு இவரோட நண்பர்களின் உதவியால் திருமணம் செய்து கொண்டோம். எனது கணவர் நம் பிரிவினர் இல்லை என்றாலும், என்னை இன்று வரை எந்த குறையும் இல்லாமல் அன்பா பாத்துக்கறாரு எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. பெரியவதான் இதோ இங்கே நிக்கறா. சின்னவ உள்ளே இருக்கா. இதோ கூப்பிடறேன், "காஜோல், சாராவை கூப்பிடு". அவங்க வீட்டுலே எங்களை ஏத்துகிட்டாங்க. நம்ம வீட்டுலேதான் யாருமே என்னை தேடி வரலை. அம்மா மற்றும் அப்பா நல்லா இருக்காங்களா அண்ணா?"


"இதென்னா வந்த இடத்திலே இப்படி ஒரு கூத்து. என்னாங்க இதுதான் ஓடிப்போன உங்க தங்கச்சியா"?

"ஏய் அநாகரீகமா பேசாதே! அவங்க காதுலே விழுந்திடப் போவுது"

"நீ வீட்டை விட்டு போனவுடன் அம்மா அப்பா எல்லாரும் ரொம்ப மனசு விட்டுடாங்க, யாருகிட்டேயும் பேசாம சரியா சாப்பிடாம இருந்தாங்க. மாமாதான் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு. இதோ இவதான் என்னோட மனைவி. இவ வந்தப்புறம்தான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமா துக்கத்திலே இருந்து வெளியே வந்தாங்க. ராஜா பிறந்தவுடன் ரொம்பவும் சந்தோஷமா இருந்தாங்க. அவர்கள் உலகமே ராஜாவாகிப் போனது. உன் நினைவு அவர்களுக்குள் இருந்து கொண்டேதான் இருந்தது. உன் வயது ஒத்தவர்களைப் பார்த்தால் அம்மாவின் கண்கள் கலங்கும். எனக்குப் புரிந்தாலும் நான் எதுவுமே கண்டுக்கமாட்டேன். சந்தோஷாமாத்தான் இருந்தாங்க. அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்து ரொம்ப கஷ்டபட்டு போராடியும் அவரை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அந்த வேதனையிலேயே மனதிற்குள்ளேயே அழுதழுது அம்மாவும் ஆறு மாதத்தில் அப்பாவுடன் ஐக்கியமாகி விட்டார்கள். நீ ஒரு முறை குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர்களை வந்து பார்த்திருக்கலாம். காலம் அவர்களின் வெறுப்பை மாற்றி இருக்கலாம் இல்லையா?இறக்கும் போது அம்மா ஒரு பெட்டியைக் கொடுத்து உன்ன்னிடம் சேர்க்கும்படி கூறினார்கள்.அடுத்த முறை வரும்போது கொண்டு வருகின்றேன்" என்று கூறி முடிக்கும் போது கண்கள் கலங்கியதை நாசுக்காக மறைத்துக் கொண்டார் ராஜாவின் தந்தை"

"என் மனைவின்னு ஏண்ணா சொல்றீங்க? என்னோட அண்ணின்னு சொல்லுங்க"

"அண்ணா இவருதான் என்னோட அவரு"

"இவ்வளவு வயசானப்புரமும் அவருதானா? ஏம்மா அப்பா பேரை சொல்ல மாட்டீங்களா?" இது சாரா...

"அம்மா இவங்க எல்லாம் யாரு? நமக்கு தெரிஞ்சவங்களா? இதுவரை இங்கே வந்ததே இல்லை" என்றாள் சாரா

"இவங்க உங்க மாமாவும் அத்தையும், வெளியூரிலே இருந்தாங்க அதான்... " என்று கல்யாணிக்கு அதுக்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இதுக்கு மேல் சாராவை பேச விட்டால் சரியா வராதென்பதை கல்யாணி புரிந்து கொண்டு தனது கணவனுக்கு கண்களால் ஜாடை காட்டி அவர்கள் அருகே போய் அமரச் செய்தாள்.

இவ்வளவு கலாட்டாவிற்கு நடுவே என்னவாகி இருக்குமோ என்று பயந்து கொண்டே உள்ளே வந்தான் ராஜா. நண்பன் வரமுடியாதலால் தனியா வந்துட்டோமே என்று பயம் வேறு. மெதுவா ஒவ்வொருவரின் முகத்தையும் பார்வையிட்டான். என்ன, காஜோல் அப்பா ரொம்ப சாதுவா உக்காந்து இருக்காரு! அதுவும் நம்ப அப்பா பக்கத்துலே! என்ன நடக்குது இங்கே? ஒண்ணுமே புரியலை.காஜோலுக்கு கண்களால் ஜாடை காட்டி என்னாச்சு என்று கேட்டான், அவள் சட்டையே பண்ணலைன்னு ஆத்திரமா வந்தது . யாரு கிட்டே இருந்தும் பதில் வரதாதால் அவனே பேச ஆரம்பித்தான்.

"என்னப்பா இங்கே ஒரே மயான அமைதியா இருக்கு? இஷ்டம் இருந்தா அவங்க பொண்ணை கொடுக்கட்டும்,இல்லைன்னா வாங்க நாம கிளம்பாலாம்" என்றான் மிகவும் கோபத்துடன். ஒரே அமைதியா இருக்காங்க. இந்தாளு சண்டை போட்டிருப்பாரோ நம்ப அப்பாகிட்டே. முழிக்கரதைப் பாரு திரு திருன்னு!

"என்னடா அபசகுனமா பேசறே? இவங்க யாரு தெரியுமா? இவங்க உங்க அப்பாவோட தங்கச்சியாம்"என்று மானசா மகனுக்கு புரிய வச்சிட்டாங்க.

"என்னப்பா இதெல்லாம்? இது வரை இப்படி ஒரு அத்தை இருந்ததா சொல்லவே இல்லை?"

"அதெல்லாம் ஒரு கதைப்பா, சரி எல்லாம் மறந்திடுவோம். இப்போ நீங்க என்ன முடிவெடுக்கப் போறீங்க.ரெண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் முறையாகி விட்டனர்.உங்களுக்கு சம்மதம் என்றால் எங்களுக்கும் சம்மதம்தான். என்ன மானசா நான் சொல்றது சரிதானே?"

"ஆமாங்க நீங்க சொல்றது சரிதான், உங்க தங்கச்சி பொண்ணை எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்குங்க. குத்து விளக்கு மாதிரி இருக்கா"

"அம்மா குத்து விளக்கா? அப்போ கோவில்லே கொண்டு ஏத்தி வைங்க"

"வாயை மூடுடா உனக்கு எப்பவுமே கொழுப்பு கொஞ்சம் அதிகம்தான்"

"என்ன சார்? நாங்க எல்லாரும் பேசிகிட்டே இருக்கோம். நீங்க வாயையே திறக்க மாட்டேங்கிறீங்க?"

"அட நீங்க என்னாங்க எனக்கு ஒண்ணுமே புரியலை. எனக்கு என்னோட மகள் சந்தோசம் தான் ரொம்ப முக்கியம். உங்க மகன் அன்னைக்கு இங்கே வந்தாரு இல்லையா? அப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. நேரா வந்து என்கிட்டே பொண்ணு கேட்டார். அந்த நேர்மை எனக்கு பிடிச்சுபோச்சு. பெரியவர்களைப் பார்க்கனும்ன்னு சொன்னதே என்னோட பொண்ணு நல்ல சந்தோஷமா இருக்கணும்.அப்புறம் முறைன்னு ஒண்ணு இருக்கு இல்லையா? அதான் அழைத்து வரச்சொன்னேன். கடைசிலே நம்பளே ஒருவருக்கொருவர் முறையாகிப் போனோம். என்ன கொஞ்சம் குறும்பு அதிகம். நீங்க உங்க தங்கச்சி மகளைத்தானே சம்பந்தம் பேச வந்திருக்கீங்க? அவ எங்க வீட்டு மகாராணிதான் அழைச்சிகிட்டு போங்க" என்று கடைசியாக பேசி முடித்தார் காஜோலின் தந்தை.

அப்புறம் என்ன.... அறுசுவை விருந்துதான்......

சில மாதங்களில் திருமணம்தான்........

சுபம்


ரம்யா...
26 comments :

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்டூ,,,,,,,,,,

இராகவன் நைஜிரியா said...

இன்னும் படிக்கவில்லை

படிச்சுட்டு வந்துடறேன்

RAMYA said...

வாங்க மெதுவா வாங்க அண்ணா!!

இராகவன் நைஜிரியா said...

1947 - 65 வரை வந்த திரைப்படங்களின் ஒட்டு மொத்த கதை மாதிரி முடிச்சு இருக்கீங்க..!

நத்திங் பட் சொதப்பல்

இராகவன் நைஜிரியா said...

இதை ஒரு 500 தொடர் எழுதி, இன்னும் 6 (அ) 7 காரக்டெர்களை இணைத்து, இரண்டு வில்லன், வில்லி கேரக்டர்களைச் சேருங்க. ஒரு சூப்பர் மெகா தொடர் ரெடி.

இராகவன் நைஜிரியா said...

இது மாதிரி ஒரு இடுகையை உங்களிடம் இருந்து வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

நட்புடன் ஜமால் said...

உண்மையிலேயே ஜில் தாங்க‌


ரொம்ப நிறைவாக இருந்தது நிறைவு பகுதி

விஜய் said...

என்னங்க இது? டாப் கியரில் போயிக்கிட்டிருந்தது சப்புனு ஆயிடுச்சு.
எப்படியோ, எல்லாம் சுபமா முடிஞ்சாச் சரி தான்.

சின்னக்கவுண்டர் said...

மிகவும் அருமையான கதை !!! வாழ்த்துகள்

புதியவன் said...

//"ஹேய் நான்தான்! எங்கே இருக்கே? வீட்டிலேயா இல்லே வெளியேவா? உங்கப்பன் முன்னாடியா?"//

மாமனாருக்கு மரியாதை

//"என்னது டீயா? உடம்பு இப்படி இருக்கு? சரி அவங்க எல்லாம் வந்திட்டாங்களா?"//

பதில் மரியாதை...

புதியவன் said...

//"சரி சரி அடங்கு, உங்க வீட்டு குட்டி பிசாசை வெளியே அனுப்பிடு. அதே வச்சிக்கிட்டு எல்லாம் நல்ல காரியம் பேசமுடியாது, உங்கவீட்டு பன்னு அட தப்பா சொல்லிட்டேனோ? அதான் சின்னு அதையும் பிசாசோட வெளியே விரட்டி விட்டுடனும். சரியா?"//

படிக்கும் போது குறுநகை வர வைக்கும் வரிகள்..

புதியவன் said...

கதை ஜில்லுன்னு சுபமாய் முடித்ததற்கு வாழ்த்துக்கள் ரம்யா...

நமக்கு சோகமெல்லாம் சொல்ல வராது...

Suresh said...

முடிஞ்சு போச்சா :-( இன்னும் ஒரு 10 பாகம் வரும்னு நினைத்தேன் ;)

நல்ல காதலை அருமையா முடிச்சிடிங்க அதான் வருத்தம்...

Suresh said...

புதியவன் said...

//"ஹேய் நான்தான்! எங்கே இருக்கே? வீட்டிலேயா இல்லே வெளியேவா? உங்கப்பன் முன்னாடியா?"//

மாமனாருக்கு மரியாதை

//"என்னது டீயா? உடம்பு இப்படி இருக்கு? சரி அவங்க எல்லாம் வந்திட்டாங்களா?"//

பதில் மரியாதை...


:-)))))))))

வழிப்போக்கன் said...

தொடர் நிறைவாக இருந்தது...
அடுத்து எப்ப???
:)))

அ.மு.செய்யது said...

நிறைவுப் பகுதியா...ஒரு புதினம் அல்லவா எழுதி கொண்டிருக்கிறீர்கள் என நினைத்தேன்.

ஏனிந்த தீடீர் முடிவு..ஐயகோ...

அ.மு.செய்யது said...

//அப்புறம் என்ன.... அறுசுவை விருந்துதான்...... //

இந்த‌ க‌தையிலே இதான் என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருந்த‌து.

நான் வேணும்னா எங்க வீட்டு ஆஸ்தான‌ ச‌மைய‌ற்கார‌ர் கிட்ட‌ சொல்லி பிரியாணி ப‌ண்ண
சொல்ல‌ட்டுமா ??

அ.மு.செய்யது said...

ஜில் என்று ஒரு காதல்..

பிரிட்ஜூக்குள் ஆப்பிள் ( சன் டிவி டாப்டென் ஸ்டைலில் படிக்கவும் )

நசரேயன் said...

என்னது முடிஞ்சு போச்சா ?

நசரேயன் said...

//ப்புறம் என்ன.... அறுசுவை விருந்துதான்......
சில மாதங்களில் திருமணம்தான்........ //

அழைப்பிதல் கொடுக்கவும், கோழி பிராணியும் ரம் மும் வேண்டும்

sakthi said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் எப்படி மிஸ் செய்தேன் ரம்யா டீச்சர்

இரண்டு நாள் வலைக்கு காய்ச்சல் வந்ததில் கவனிக்காமல் உங்கள் பதிவை விட்டுவிட்டேன்

மன்னியுங்கள்

sakthi said...

இனி பதிவிடும் முன் மடலிடுங்கள்

வந்துவிடுகின்றேன்

sakthi said...

நட்புடன் ஜமால் said...

உண்மையிலேயே ஜில் தாங்க‌


ரொம்ப நிறைவாக இருந்தது நிறைவு பகுதி

ரீப்பீட்ட்டு

sakthi said...

அருமையான கவிதை

அழகான நிறைவு

அற்புதம்

வால்பையன் said...

ஒருவழியா முடிஞ்சதா!

சரி மொதல்லருந்து ஒருக்கா படிச்சா தான் ஒழுங்கா புரியும்!