Thursday, June 4, 2009

பெண் மனம்... !!!!


பாலையில் மழை பொழியுமா
நெருப்பினிலே முகை மலருமா
கயமை மனதில் அகலுமா
இரவில் ஆதவன் உதிப்பானா
பகலில் மதியின் ஒளி தெரியுமா
விண்மீன்கள் தோரணமாகுமா
ஆழமில்லா கடல் உருவாகுமா
இவை எல்லாம் நிகழ்ந்தால்

தையலின் மன ஆழம்...... ????






72 comments :

கபிலன் said...

ரம்யா மேடம்...கவிதை, இந்த மரமண்டைக்கு சரியா புரில மா....

கபிலன் said...
This comment has been removed by the author.
நசரேயன் said...

உள்ளேன் பூலான் தேவி

நசரேயன் said...

//பாலையில் மழை பொழியுமா//

சகரா போனாத்தான் தெரியும். ஒரு டூர் போயிட்டு வந்து சொல்லுங்க

நசரேயன் said...

//நெருப்பினிலே முகை மலருமா //

இல்லை புகை மலரும்

இராகவன் நைஜிரியா said...

ஆழம் அது ஆழமில்ல, பொம்பிளை மனசுதானய்யா...

இந்த பாட்டுத்தான் ஞாபகத்துக்கு வந்துதுங்க..

இராகவன் நைஜிரியா said...

// கயமை மனதில் அகலுமா //

இது அற்ற மனிதர் எங்காவது உண்டா?

நசரேயன் said...

//கயமை மனதில் அகலுமா //
ரப்பர் வச்சி தேய்ச்சா அழியும்

நசரேயன் said...

//இரவில் ஆதவன் உதிப்பானா//

சரக்கு அடிச்சா நல்ல உதித்து ஆடுவான்

நசரேயன் said...

//பகலில் மதியின் ஒளி தெரியுமா//

ஏன் சூரிய ஒளி பத்தலையா ?

நசரேயன் said...

//விண்மீன்கள் தோரணமாகுமா//

ஏன் கண் மீன்களை வலை வீசவா ?

எப்படி என் கவுஜை

நசரேயன் said...

//ஆழமில்லா கடல் உருவாகுமா//
ஆழமில்லா மனசு உருவாகுமா ?

அடுத்த வரியிலே சேர்த்து இருக்கலாம்

இராகவன் நைஜிரியா said...

// ஆழமில்லா கடல் உருவாகுமா //

எப்படிங்க இதெல்லாம்...?

நசரேயன் said...

//இவை எல்லாம் நிகழ்ந்தால்//

"ரம்" யா வாகிய நான் பதிவு எழுத மாட்டேன்

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

//கயமை மனதில் அகலுமா //
ரப்பர் வச்சி தேய்ச்சா அழியும் //

இஃகி... இஃகி..

தல சூப்பர்...

நசரேயன் said...

//தையலின் மன ஆழம்...... ????//

நாலு கிலோ மீட்டர்

இராகவன் நைஜிரியா said...

\\ நசரேயன் said...

//இவை எல்லாம் நிகழ்ந்தால்//

"ரம்" யா வாகிய நான் பதிவு எழுத மாட்டேன் \\

சான்ஸே இல்லை..

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், ரம்யா பதிவெழுவது நிகழத்தான் செய்யும்.

இராகவன் நைஜிரியா said...

\\ நசரேயன் said...

//தையலின் மன ஆழம்...... ????//

நாலு கிலோ மீட்டர் \\

மீதி என்னாச்சு தல...

நசரேயன் said...

ஆமா ஆழம் தெரிஞ்சி என்ன பண்ணப் போறீங்க, மீன் பிடிக்கவா?

நசரேயன் said...

//\\ நசரேயன் said...

//தையலின் மன ஆழம்...... ????//

நாலு கிலோ மீட்டர் \\

மீதி என்னாச்சு தல...//

ஒரு குத்து மதிப்பு கணக்கு அண்ணே

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

//\\ நசரேயன் said...

//தையலின் மன ஆழம்...... ????//

நாலு கிலோ மீட்டர் \\

மீதி என்னாச்சு தல...//

ஒரு குத்து மதிப்பு கணக்கு அண்ணே //

குத்துக்கெல்லாம் கூட மதிப்பு இருக்குங்களா தல...

நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்...

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

ஆமா ஆழம் தெரிஞ்சி என்ன பண்ணப் போறீங்க, மீன் பிடிக்கவா? //

இருக்கலாம்...

யார் கண்டா...

இராகவன் நைஜிரியா said...

இதுதாண்டா கவிதை... இல்ல இல்ல கவுஜ... இல்ல... இல்ல...

எனக்குத் தெரியலீங்க...

யாராவது சொல்லுங்க.. இதுக்கு பேர் என்னான்னு?

இராகவன் நைஜிரியா said...

தல... 25 வெயிட்டிங்...

போடப் போறீங்களா?

இராகவன் நைஜிரியா said...

மீ த 25

இராகவன் நைஜிரியா said...

அப்பாடா.. ரொம்ப நாள் கழிச்சு 25 வது பின்னூட்டம்..

sakthi said...

முதல் முதலாய் உங்கள் கவிதையை வாசிக்கின்றேன்

அருமை ரம்யா...

sakthi said...

பாலையில் மழை பொழியுமா
நெருப்பினிலே முகை மலருமா
கயமை மனதில் அகலுமா

வார்ததையில் நல்ல வளம்
வாழ்த்துக்கள்

sakthi said...

இரவில் ஆதவன் உதிப்பானா
பகலில் மதியின் ஒளி தெரியுமா
விண்மீன்கள் தோரணமாகுமா

ரசித்தேன்

sakthi said...

ஆழமில்லா கடல் உருவாகுமா
இவை எல்லாம் நிகழ்ந்தால்

தையலின் மன ஆழம்...... ????

பெண் மனதின் ஆழம் யாராலும் கண்டுபிடிக்க இயலாத ஒன்று

sakthi said...

பெண் மனது ஆழமின்னு ஆம்பளைக்கும் தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்
அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்கு தான் தெரியும் ???

அதில் முத்திருக்க்கா முள்ளுகொத்திருக்கா

அது யாருக்கு தான் தெரியும்...

இந்த பாடல் தான் ஞாபகம் வந்தது

ஆ.ஞானசேகரன் said...

எல்லாம் சரிங்க அந்த தையல் யாரு?

*இயற்கை ராஜி* said...

:-)

புதியவன் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு காமெடி கலக்காத
அருமையான கவிதை ரம்யாவிடமிருந்து

சிறிய கவிதை என்றாலும் அழகிய கவிதை...
வாழ்த்துக்கள் ரம்யா...

நட்புடன் ஜமால் said...

நானும் காமெடி ஏதேனும் இருக்கான்னு தேடிகிட்டு இருந்தேன்

நட்புடன் ஜமால் said...

இராகவன் அண்ணா சொன்ன பாடல் தான் எனக்கும் நினைவுக்கு வந்தது.


தையல் ‍- வார்த்தை அழகு

Anbu said...

:-))

வால்பையன் said...

//பாலையில் மழை பொழியுமா//

பொழியும்

//நெருப்பினிலே முகை மலருமா //

முகைன்னா என்ன?

//கயமை மனதில் அகலுமா //

கடைசி நொடிகளில்

//இரவில் ஆதவன் உதிப்பானா//

வட,தென் துருவங்களில் சாத்தியம்!

//பகலில் மதியின் ஒளி தெரியுமா//

பார்த்ததில்லையா?

//விண்மீன்கள் தோரணமாகுமா//

அவ்வளவு பெரிய கயிறு இருக்கா?

//ஆழமில்லா கடல் உருவாகுமா//

இருக்கே! செங்கடல்!

//தையலின் மன ஆழம்...... ????//

இதெல்லாம் கஷ்டம்னு யார் சொன்னா?
எந்த கூமுட்டை கவிஞனோ எழுதிட்டு போயிட்டான்னு இன்னும் இதையே புடிச்சி தொங்குறிங்களா?

சரி விடுங்க ஒரு ஆணின் மன ஆழத்தை சொல்லுங்க, நான் பெண்ணின் மன ஆழத்தை சொல்றேன்!

Anonymous said...

விடையறிந்த கேள்வியை வேள்விக்கு வைத்திருக்கிறாய் ரம்யா......

அவள் அறியாமையில் இருக்கும் வரை ஆழம் அறிந்தும் பயனில்லை...

உண்மையாச் சொல்லப் போனால் தற்போது நம் பெண் இனம் இதையெல்லாம் கடந்து விட்டோம்...அப்படியே இருப்பது நம்மில் அரைச் சதவீதம் ஆம் 50% கரையேறியாயிற்று...

இன்னும் 50% சதவீதத்துக்கு பொருந்தும் இந்த...............


தையலின் மன ஆழம்...... ????

सुREஷ் कुMAர் said...

//
இவை எல்லாம் நிகழ்ந்தால்

தையலின் (மன) ஆழம்...... ????
//

அது டைலர் வெச்சிருக்கற ஊசிய பொருத்ததுங்க..

அ.மு.செய்யது said...

வெகு நாட்களுக்கு பிறகு..ஜில்லுனு ஒரு காதல் வேலியைத் தாண்டி ஒரு ஆக்கம்.

கவிதையின் அனைத்து வரிகளும் புரிகின்றன.

கடைசி வரியில என்ன சொல்ல வர்றீங்க...புரியல..

அப்புறம் முகைன்னா என்ன ???

அ.மு.செய்யது said...

ஆறு அது ஆழமில்ல..

அது சேரும் கடலும் ஆழமில்ல..

ஆழமெது ஐயா..அந்த பொம்பள மனசு தான்யா ..

( இதான் கவிதையின் சாராம்சமா ?? புதசெவி !! )

gayathri said...

nalla iruku pa kavithai

வழிப்போக்கன் said...

அக்கா...
நெசமாலுமே கவுஜ கலக்கலா ஈக்குதுக்கா...
:)))

kanagu said...

onnum periya allavil puriyavillai akka :(

athuku title um oru karanamo???

kanagu said...

ipa than 'Jillunu Oru Kaadhal' padichu mudichen.... super ah irundhudu :) sila part... kurippa 2nd and 3rd part la.... ROFL ka :)

ithu maari innum sila thodarkalai ungalidam ethir paarkiren :)

sankarkumar said...

nalla eluthiringa

நேசமித்ரன். said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

இது நம்ம ஆளு said...

"அருமையான கவிதை"

RAMYA said...

//
கபிலன் said...
ரம்யா மேடம்...கவிதை, இந்த மரமண்டைக்கு சரியா புரில மா....
//

வாங்க கபிலன் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

RAMYA said...

//
நசரேயன் said...
//பாலையில் மழை பொழியுமா//

சகரா போனாத்தான் தெரியும். ஒரு டூர் போயிட்டு வந்து சொல்லுங்க
//

வாங்க நெல்லை புயலே உங்கள் வரவு நல்வரவு ஆகுக. வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் மிகக் நன்றி நசரேயன்.

RAMYA said...

இராகவன் நைஜிரியா said...
// கயமை மனதில் அகலுமா //



வாங்க அண்ணா உங்கள் வரவிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி அண்ணா!

RAMYA said...

//
sakthi said...
பாலையில் மழை பொழியுமா
நெருப்பினிலே முகை மலருமா
கயமை மனதில் அகலுமா

வார்ததையில் நல்ல வளம்
வாழ்த்துக்கள்
//

வாங்க சக்தி, ஒரு கவிதையே கவிதையை ரசிக்கின்றதோ?
மிக்க நன்றி சக்தி,

உங்கள் ரசனைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி சக்தி!

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
எல்லாம் சரிங்க அந்த தையல் யாரு?
//

ஹா ஹா வாங்க ஆ.ஞானசேகரன்!

அந்த தையல்! உங்களுக்கு மறந்து விட்டதோ :-)

RAMYA said...

//
இய‌ற்கை said...
:-)
//

நன்றி இய‌ற்கை!!

RAMYA said...

//
புதியவன் said...
நீண்ட நாட்களுக்குப் பிறகு காமெடி கலக்காத
அருமையான கவிதை ரம்யாவிடமிருந்து

சிறிய கவிதை என்றாலும் அழகிய கவிதை...
வாழ்த்துக்கள் ரம்யா...
//

வாங்க புதியவன், உங்க ரசனைக்கு மிக்க நன்றி!

நிறைய எழுதனும்னு ஆசைதான்.......... பார்க்கலாம்!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
நானும் காமெடி ஏதேனும் இருக்கான்னு தேடிகிட்டு இருந்தேன்
//

வாங்க ஜமால், காமெடி ஹா ஹா நல்ல ஏமாற்றமோ?

RAMYA said...

//
Anbu said...
:-))
//

நன்றி அன்பு!!

RAMYA said...

வாங்க வால்பையன்! வருகைக்கு மிக்க நன்றி!

"முகை" என்றால் "அரும்பு" என்று பொருள்.

RAMYA said...

வாங்க தமிழ்
===========

நன்றிங்க, கவிதாயினியே வருக வருக
நன்றி வருகைக்கும், ரசனைக்கும் தமிழ்!

RAMYA said...

//
சுரேஷ் குமார் said...
//
இவை எல்லாம் நிகழ்ந்தால்

தையலின் (மன) ஆழம்...... ????
//

அது டைலர் வெச்சிருக்கற ஊசிய பொருத்ததுங்க..
//

வாங்க தம்பி சுரேஷ், குறும்பு குறும்பு :-)

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
வெகு நாட்களுக்கு பிறகு..ஜில்லுனு ஒரு காதல் வேலியைத் தாண்டி ஒரு ஆக்கம்.

கவிதையின் அனைத்து வரிகளும் புரிகின்றன.

கடைசி வரியில என்ன சொல்ல வர்றீங்க...புரியல..

அப்புறம் முகைன்னா என்ன ???
//

வாங்க அ.மு.செய்யது
நான் ஒண்ணுமே சொல்லலை, கேள்விதான் கேட்டு இருக்கேன்.

"முகை" என்றால் "அரும்பு" என்று பொருள் அ.மு.செய்யது.

RAMYA said...

//
gayathri said...
nalla iruku pa kavithai
//

நன்றி காயத்ரி!!

RAMYA said...

//
வழிப்போக்கன் said...
அக்கா...
நெசமாலுமே கவுஜ கலக்கலா ஈக்குதுக்கா...
:)))
//

மிகக் நன்றி வழிப்போக்கன்!

RAMYA said...

//
kanagu said...
ipa than 'Jillunu Oru Kaadhal' padichu mudichen.... super ah irundhudu :) sila part... kurippa 2nd and 3rd part la.... ROFL ka :)

ithu maari innum sila thodarkalai ungalidam ethir paarkiren :)
//

வாங்க கங்கு நன்றி, உங்களுக்கு எனது கதை பிடித்ததிற்கு மிக்க மகிழ்ச்சி.

மீண்டும் ஜில்லுன்னு எழுத முயற்சி செய்கின்றேன். நன்றி!

RAMYA said...

//
sankarfilms said...
nalla eluthiringa
//

வாங்க sankarfilms
முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.
ரசனைக்கும் மிக்க நன்றி!

RAMYA said...

//
Kavingan said...
மனமார்ந்த வாழ்த்துக்கள்
//

வாங்க Kavingan மிக்க நன்றி!

RAMYA said...

//
இது நம்ம ஆளு said...
"அருமையான கவிதை"
//

நன்றிங்க இது நம்ம ஆளு!!

SUFFIX said...

நீங்க சொன்ன அத்தனையும் சாத்தியம் ஆகலாம்..ஆனால் தையலின் மன ஆழம்...உஹூம்.

Poornima Saravana kumar said...

நசரேயன் said...
//பாலையில் மழை பொழியுமா//

சகரா போனாத்தான் தெரியும். ஒரு டூர் போயிட்டு வந்து சொல்லுங்க

//

lol

Poornima Saravana kumar said...

அக்கா கவிதை நல்லா இருக்கு:))
வாழ்த்துகள்:)

Poornima Saravana kumar said...

பேசி நிறைய நாட்கள் ஆகிறதுனு நினைக்கறேன் நான்... நீங்க என்ன சொல்லறீங்க??