Tuesday, October 27, 2009

நகரங்களும் நம்மளும்!!


நான் இப்போது சில நகரத்தில் நடக்கும் சிறிய நிகழ்வுகளை கூறுகிறேன். நான் கூறும் நிகழ்வுகள் எந்த நகரத்தில் என்று நீங்கள்தான் கூற வேண்டும்!!

நகரம் 1
நான்கு நண்பர்கள் சேர்ந்து பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டிருக்கும்போதே இருவருக்குள் சண்டை வந்துவிட்டது. மூன்றாம் நண்பரும் நான்காம் நண்பரும் அவர்களுடன் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த இருவரின் சண்டை இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஆனால் சண்டை போடும் இருவரில் யாரு கரெக்ட் என்பதில் சண்டை போடாத இருவரும் விவாதம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 2
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். அவர்களுடன் இருந்த மூன்றாவது நண்பர் கண்டுக்காமல் தனியே நடக்க ஆரம்பித்தார்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 3
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். மூன்றாவது நண்பர் அவர்களுக்குள் சமாதானம் செய்ய பல முயற்சிகள் செய்தார். தோல்வியுற்றாலும் முயற்சியை கை விடவில்லை. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்து சண்டை போட்டு கொண்டிருந்த இரெண்டு நண்பர்களும் கூட்டு சேர்ந்து மூன்றாம் நண்பரை அடி பின்னி விட்டார்கள்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 4
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். பெரிய கூட்டம் நின்று அவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. உடன் வந்த மூன்றாவது நண்பர் சத்தம் போடாமல் ஒரு டீ கடையை திறந்து விட்டார். வியாபாரம் கொடிகட்டி பறக்க மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 5
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். உடன் வந்த மூன்றாவது நண்பர் அவர்களின் சண்டையை நிறுத்த உடனே ஒரு சாப்ட்வேர் தயாரிக்கிறார். அவர் தயாரித்த சாப்ட்வேரில் பக் இருந்ததினால் அவர்களின் சண்டையை நிறுத்த முடியாமல் போனது.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 6
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். அவர்கள் போட்டுக் கொள்ளும் சண்டையை மக்கள் கூட்டம் கூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது நண்பர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியில் பொறுமை இழந்து "அம்மா" இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார், தயவு செய்து அமைதி காக்கவும் என்று கெஞ்ச ஆரம்பித்தார்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 7
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். மூன்றாவது நண்பர் ஒரு பெட்டி நிறைய பீர் எடுத்து வருகிறார். அனைவரும் அமர்ந்து பீரை தேவையான அளவு அருந்துகிறார்கள். ஒருவொருக்கொருவர் திட்டிக் கொள்கிறார்கள். முடிவில் நண்பர்களாக அவரவர்கள் வீட்டிற்கு செல்கிறார்கள்....

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 8
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். முடிவில் அவரவர்கள் மொபைல் போனை எடுத்து அவரவர்கள் நண்பர்களை அவர்கள் இருப்பிடத்திற்கு உடனே வருமாறு அழைக்கிறார்கள். இப்பொழுது அங்கே ஐம்பது ஆட்கள் குழுமி விட்டார்கள். முடிவில் அனைவரும் சண்டை போட்டு கொள்கிறார்கள்.

கேள்வி: இது எந்த நகரம்??


டிஸ்கி: இது எனது தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவுக்கு ஒருவர் கேட்டுக் கொள்வது. அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் வெளி இட்டிருக்கிறேன். இது யார் மனதையும் புண் படுத்த அல்ல தமாஷாகப் பேசிக் கொள்வது தமாஷாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.



34 comments :

Romeoboy said...

சண்டை போட்டு கொள்வதற்கு கூட ஒரு நகரம் இருக்கிறாரா ?? என்னமோ போங்க கேள்வி எல்லாம் படா பேஜாரா தான் இருக்கு.

Rajalakshmi Pakkirisamy said...

aiyayo... ennanga ithu

இராகவன் நைஜிரியா said...

ஏன் இப்படி எல்லாம்... தாங்க முடியலீங்க...

என்னமோ சொல்ல வர்றீங்க ஆனா என்ன சொல்ல வர்றீங்கன்னுதான் புரியலை.

எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்களே?

இராகவன் நைஜிரியா said...

ஏன் இந்த கொலை வெறி?

இராகவன் நைஜிரியா said...

// நான் இப்போது சில நகரத்தில் நடக்கும் சிறிய நிகழ்வுகளை கூறுகிறேன். //

சிறிய நிகழ்வுகளே ஒரு மனுஷனை இப்படி குழப்பினா.. பெரிய நிகழ்வுகள் என்ன பாடு படுத்தும்...

இராகவன் நைஜிரியா said...

// நான் கூறும் நிகழ்வுகள் எந்த நகரத்தில் என்று நீங்கள்தான் கூற வேண்டும்!! //

ஏங்க எழுதுவது நீங்க பதில் சொல்வது நாங்களா... அதையும் நீங்களே சொல்லிட்டா வசதியா இருக்குமில்ல.

இராகவன் நைஜிரியா said...

எல்லா சண்டைக்கும் பொதுவான காரணம் .. “இது எந்த நகரம் “ என்பதுங்களா?

இராகவன் நைஜிரியா said...

// Rajalakshmi Pakkirisamy said...
aiyayo... ennanga ithu //

அய்ய இது கூடத் தெரியலை... இடுகை... இடுகை..

இராகவன் நைஜிரியா said...

உங்க கேள்விக்கான சரியான விடை ஒரே ஒரு நரகம் ச்சே இந்த இடுகையைப் படித்து குழம்பிட்டேன் நகரம்..... வேண்டாம் சொல்லிட்டு என்னால அடிவாங்க முடியாது.. அதனால வேற யாராவது சொல்லிடுங்க...

இராகவன் நைஜிரியா said...

மீ த 10

கலகலப்ரியா said...

yabbe... appaalikka varen..

அப்பாவி முரு said...

மேலே சொன்ன ச்மபவங்களைக் கூட்டி கழித்து பார்த்தால்,

அது மதுரையாகத் தானிருக்கும்ன்னு தோணுது...

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் தெரியலிங்கோ.....

velji said...

எட்டிப் பாக்கலாம்னு வந்தா..கேள்வில்லாம் கேக்றாங்களே...

சரி..நீங்க சொல்லுங்க.

இரு நண்பர்கள் வந்தார்கள்.ஒருவன் ஒரு கேள்வி கேட்டான்.இன்னொருவனும் கேள்வியே கேட்டான்.இது எந்த நகரம்?

R.Gopi said...

ரம்யா

இம்புட்டு எழுதிட்டு இந்த நகரம் எது, அந்த நகரம் எதுன்னு கேக்கறீயளே... இது உங்களுக்கே நியாயமா?

இது அம்புட்டும் நம்ப ஊருதேன்...

மதுரை, சென்னை, கேரளா கூட இருக்கு...

மிச்சத்த நீங்களே சொல்லிடுங்க...

யப்பா... இதுவரைக்கும் வந்தவிய்ங்க யாருமே சொல்லலியா??

அ.மு.செய்யது said...

ஒரு வேள அப்படியிருக்குமோ ?!?! ஒரு வேள இப்படியிருக்குமோ ??

ஆமா யார் அந்த ரெண்டு பேரு..அவங்க போன் நம்பர கொடுங்க..நான் கால் பண்ணி கேட்டுக்கறேன்.

வால்பையன் said...

விடை தெரியாது!

ஆனா அந்த பீர் அடிக்கிற நகரத்துல மட்டும் என்னை கொண்டு போய் விட்டுடுங்க!

SUFFIX said...

இந்த சண்டையெல்லாம் நீங்க அந்த நகரங்களுக்கு போனவுடன் தானே நடந்தது??

S.A. நவாஸுதீன் said...

1. தெரியாது
2. இதுவும் தெரியாது
3. அட இது கூட தெரியலைப்பா
4. அனேகமா இது சென்னையா இருக்கனும். (கடை போட்டது மலையாளியா)
5. இது பெங்களுராத்தான் இருக்கனும்
6. இது அம்மா ஆட்சில இருக்கும்போது மொத்த தமிழ்நாடுன்னு சொல்லலாம்
7. பாண்டிச்சேரியா மக்கா
8. சீனப்பார்த்தா தெலுங்கு படமாட்டமிருக்கு. சோ இது ஹைதராபாத்தாத்தான் இருக்கனும்.

பித்தனின் வாக்கு said...

1.லண்டன்,
2.நியுயார்க்,
3.காபூல்,
4.திருவனந்தபுரம்,
5.பெங்களூர்,
6.பாண்டி,
7.சிங்கப்பூர்,
8.சென்னை.
எனக்கு தெரிந்தவரை சொல்லிருக்கேன், ஆனா இது அத்தனையும் சென்னைக்கு பெருந்தும். நன்றி.

ஈரோடு கதிர் said...

தெரியல நீங்களே சொல்லுங்க

Rajeswari said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா ....எங்கிட்டு இருந்துதான் இம்புட்டு கேள்வி வருதோ தெரியலியே

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏன் இந்த கொலை வெறி? ஒண்ணுமே புரியலையே அக்கா..

கலை அக்கா said...

வால் பையனின் புரிதலுக்கு மனமார்ந்த நன்றி!

வால்பையன் said...

//கலை அக்கா said...
வால் பையனின் புரிதலுக்கு மனமார்ந்த நன்றி!//

கடமைகெல்லாம் யாராவது நன்றி சொல்வார்களா!?

கலை அக்கா said...

//
வால்பையன் said...
//கலை அக்கா said...
வால் பையனின் புரிதலுக்கு மனமார்ந்த நன்றி!//

கடமைகெல்லாம் யாராவது நன்றி சொல்வார்களா!?
//

தம்பி! இந்த உங்களின் கடமையும் ஆதரவுகளும் ரம்யாவிற்கு என்றுமே இருக்க வேண்டும்!

நசரேயன் said...

நீங்க எந்த நரகத்திலே இருக்கீங்க ?

thiyaa said...

என்னங்க நீங்க இப்பிடியெல்லாம் சொல்லுரிங்கோ தாங்க முடியலை

Thamira said...

எத்தினி வாட்டி வந்து பார்க்குறது? இன்னும் பதில் சொல்லலையா? அட போங்க..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

படித்திருக்கிறேன்.:-))))))

Princess said...

எனக்கு தெரியாதுப்பா...

-பதுமை

Rajalakshmi Pakkirisamy said...

//எத்தினி வாட்டி வந்து பார்க்குறது? இன்னும் பதில் சொல்லலையா? அட போங்க..//

Repeatttt

கபீஷ் said...

பதில் எழுதலயா இன்னும் :-):-)

பெசொவி said...

A ஒன்னு சொல்றார்,B அவரைத் திட்டறார், A பதில் சொல்றார், அதுக்குள்ளே C வந்து Aவுக்கு வக்காலத்து வாங்கறார், B மன்னிப்பு கேக்கறார். இதையெல்லாம் கவனித்து D பின்னூட்டம் போடறார், எங்க சொல்லுங்க?
..
..
..
..
..
..
..
..
..
..
..
இந்த வலைப்பூவுலதான். - A - ரம்யா, B-கார்மேக ராஜா, C-வால் பையன், D - ஹிஹி. நான்தான்.