Thursday, October 22, 2009

நான் தேடும் அவன்!!

இன்னைக்கு எப்படியும் இவனை.......... இருடி இன்னைக்கி நீ அவ்வளவுதான்!!

எப்படி அவன் இருக்கும் இடத்தை அடைவது? பலத்த பாதுகாப்போடு அல்லவா இருக்கின்றான். இருந்தா என்ன! நமக்கு குறுக்கு வழியா தெரியாது? தொடர்ந்து ரெண்டு வருடங்களாக எவ்வளவு முயற்சி செய்தும் ஒவ்வொரு வருடமும் தோல்விதான் மிஞ்சியது.

சரியான நேரம் நமக்கு அமையவில்லையே! இன்று எப்படியும் நமது வேலையை கச்சிதமாக முடித்து விடவேண்டும். நமது முயற்சிகள் தொடர்ந்து ரெண்டு வருடங்களாக தோற்றுக் கொண்டே வருகின்றது. இந்த முறை தோல்வியே எனக்கு இல்லை என்று மனதிற்குள் ஒரு முடிவு செய்தான் சந்துரு. தேவையான உபகரணங்கள் அனைத்தும் மறைத்து வைத்துக் கொண்டான். எப்படி உள்ளே போறது? போலீஸ் வழியிலே நிக்குது. மனம் தளரக்கூடாது. எப்படியாவது உள்ளே நுழைந்து விடவேண்டும்.

மெதுவாக மிக மெதுவாக சுவற்றின் மீது ஏற முயன்று கீழே விழுந்து விட்டான் சந்துரு. விழுந்த வேகத்தில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். சத்தம் கேட்டு ஒரு காவலாளி ஓடி வந்து பார்த்தான். யாரும் கண்களுக்கு தென்படாததால் சற்று நேரம் நின்று விட்டு தன இடத்திற்கே திரும்பினான்.

மறுபடியும் என்ன முயற்சி செய்யலாம்னு யோசித்துக் கொண்டு இருக்கையில், ஒரு மரம் கண்களுக்குப் பட்டது. அந்த மரத்தின் வளர்ச்சியும் சந்துருவிற்கு சாதகமாக வளர்ந்திருப்பது போல் தெரிந்தது. ஆமாம் அந்த மரம் சற்றே சாய்வாக வளர்ந்திருந்தது. அதில் ஏறினால் மாடி வரை செல்ல முடியும். அப்படியே சென்றாலும் அவனை கண்டு பிடிக்க முடியுமா? அவன் எந்த அறையில் இருப்பானோ? என்று சற்றே யோசித்தான். இருட்டில் எதையும் சரியாக கணிக்க முடியவில்லை.

"முயற்சி திருவினையாக்கும்" என்ற சொல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மனம் தளராமல் மரத்தின் மீது கால்களை வைத்து ஏற ஆரம்பித்தான். கால்களை மாற்றி வைக்கும்போது மடியில் வைத்திருந்த ஒரு பொருள் கீழே விழுந்தது. அந்த சத்தத்தில் மறுபடியும் எல்லாரும் விரைப்பானார்கள். காவலுக்கு கட்டி இருந்த செல்லப் பிராணியும் தனது வேலையை கச்சிதமாக செய்தது. மறுபடியும் காவலாளி கோபத்தின் உச்சத்துக்கே போனான்.

"யாரு! யாரு! யாரா இருந்தாலும் மரியாதையா வெளியே வந்திடுங்க, நான் கண்டுபிடிச்சா நாளைக்கு பால்தான்!" என்று குரல் கொடுத்தான்.

கீழே விழுந்த பொருளை எடுத்து மறுபடியும் மடியில் கட்டிக் கொண்டு மறைந்து கொண்டான் சந்துரு. எந்த சத்தமும் இல்லாததால் காவலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

விளக்கைப் போட்டு "என்னாச்சு கோபால்" என்று குரல் கொடுத்தார். (அந்த வீட்டு முதலாளி சாரங்கன்! இவர் உளவுத்துறை அமைச்சர்! அதனால் அவர்கள் வீட்டில் எந்த நேரமும் காவலுக்கு குறைச்சல் இருக்காது)

"ஒன்றும் இல்லை எசமான்! மரத்திலுள்ள கிளைகள் அசைந்த சத்தம்னு நினைக்கின்றேன். ஏதோ சத்தம் கேட்டுது அப்புறம் யாரும் இல்லை"

"போலீஸ் என்ன செய்யுது?"

"இப்போதான் டீ குடிக்கப் போனாங்க எசமான்"

"சரி உஷாரா இரு. ஏன் பிங்கி கத்திகிட்டு இருக்கு?"

"தெரியலை எசமான்! பசியா இருக்கும்னு நினைக்கிறேன்"

"உள்ளே வா பிஸ்கட் தரேன் பிங்கிக்கு கொடு நீ சாப்பிட்டுடாதே"

"இல்லைங்க எசமான்! நான் அப்படி எல்லாம் சாப்பிடமாட்டேன்!"

என்ன செய்யலாம்னு யோசித்த சந்துரு எப்படியும் இந்த முறை தவறு செய்யாமல் மரம் ஏறி மாடியை அடைந்து விட வேண்டும். அவங்க அப்பாவின் ரூம் தெரிந்து விட்டது. அவனின் அறையும் பக்கத்துலே தான் இருக்கணும் என்று ஒரு முடிவிற்கு வந்தவன் மெதுவாக மரத்தை தொட்டு கும்பிட்டான்.

"மரம் மாமா! மரம் மாமா! நான் உன்னை ஒரு மரமா நினைக்கலை. இக்கரையில் இருந்து அக்கரைக்கு கொண்டு செல்லும் படகு போல் நினைத்துக் கொள்கின்றேன். தயவுசெய்து எந்த தடங்கலும் வராமல் என்னை அக்கரைக்கு கொண்டு சேர்த்து விடு மரம் மாமா" என்று மரத்திடம் கெஞ்சிக் கேட்டு கொண்டபிறகு மெதுவாக ஏற ஆரம்பித்தான்.


பிஸ்கட் போட்ட பிறகும் பிங்கி கத்துவதை நிறுத்தவில்லை. பிங்கியின் சத்தம் சற்றே வேகமாக வந்துகொண்டிருந்தது. குறிப்பா அண்ணாந்து பார்த்து குறைத்துக் கொண்டிருந்தது. டீ குடிக்கச் சென்ற போலீஸ் இருவரும் காவலாளி அருகே வந்தனர். அவர்களுக்கும் ஒன்றும் புரியலை.

"ஏன் கத்துது?" என்று ஒரு போலீஸ் காவலாளியிடம் கேட்டார்.

"அதான் சார் எனக்கும் புரியலை. இது ரொம்ப நேரமா கத்திகிட்டே இருக்கு. இது கத்த ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஏதோ ஒரு சத்தம் கேட்டது. ஓடிப்போய் பார்த்தேன். யாரும் அங்கே இல்லை. அதுலே இருந்து பிங்கி கத்திகிட்டே இருக்கு. மொதலாளி பிஸ்கட் கூட கொடுக்க சொன்னாரு. பிங்கி அதை தொடவே இல்லை. கத்திகிட்டே இருக்கு" என்று மூச்சு விடாமல் விளக்கினார் காவலாளி.

"சரி, என் கூட வா! எங்கே சத்தம் கேட்டது? வரதா! அந்த டார்ச் எடுத்து வா" என்று இரெண்டாவது போலீசுக்கு கட்டளை போட்ட முதல் போலீசு இருட்டில் நடக்க ஆரம்பித்தார்.

"இந்த இடத்துலேதான் சார் சத்தம் கேட்டிச்சு"

"இங்கே ஒண்ணுமே இல்லையே?" நிமிர்ந்து மரத்தைப் பார்த்தார். "இங்கே யாரும் இல்லையே? ஏன் பிங்கி விடாமல் கத்துது?"

"மருது, பிங்கி கத்தறதை பார்த்தா, யாரோ திருடன் உள்ளே புகுந்த மாதிரி சந்தேகமா இருக்கு. நீ எங்கேடா போனே? நாங்க டீ குடிச்சிட்டு வர்றவரை ஒழுங்கா இங்கேயே நிக்கனம்னுதானே சொல்லிட்டுப் போனோம். அறிவு இருக்கா உனக்கு? நாங்க அந்த பக்கம் போன உடனே நீ இந்த பக்கமா நழுவிட்டியா?"

"இல்லே சார் நான் இங்கேதான் இருக்கேன், நீங்க வேணா மொதலாளிகிட்டே கேட்டுப் பாருங்க" என்று அழமாட்ட குறையா சொன்னான் காவலாளி.

மறுபடியும் சத்தம் கேட்டு வெளியே வந்த அமைச்சர். "பிங்கி, சட் அப்! என்ன சத்தம் அங்கே?" என்று உரத்த குரலில் கேட்டாரு. பிங்கி மறுபடியும் கத்த ஆரம்பித்தது.

"என்னாங்கடா காவல் காக்கறீங்க! எவனோ உள்ளே பூந்திருக்கான். இல்லேன்னா பிங்கி இப்படி கத்தாது. மொதல்லே பூந்தவன் யாருன்னு தேடுங்க" என்று உரத்த குரலில் கூறினார் அமைச்சர்.

மரம் ஏறி ஒளிந்து கொண்டிருந்த சந்துருவிற்கு சப்த நாடியும் ஓடிங்கிப் போய்டிச்சு. அய்யய்யோ இப்படி வந்து சிக்கிட்டோமே. மாட்டிக்குவோம் போல இருக்கே!எப்படி அவனைப் பார்ப்பது! எனது இந்த எண்ணம் சாத்தியமா? என்று மனதிற்குள்ளே புலம்பிக் கொண்டிருக்கும்போதே சந்துருவின் மனதில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.

"பிங்கியை அவுத்து விடுங்க, உங்களாலே என்ன செய்ய முடியும்? நேரத்துக்கு நல்லா சாப்பிடனும்! காவல் காக்காம டீ ரொம்ப முக்கியமா போச்சு இல்லே? விடியட்டும், உங்க ரெண்டுபேரையும் வேலையை விட்டே தூக்குறேன்." கோவத்தில் வார்த்தைகள் தடுமாற இறங்கி வந்த அமைச்சர் தானே பிங்கியை அவிழ்த்து விட்டார்.

பிங்கி வேகமாக மாடியை நோக்கிப் பாய்ந்தது. மாடி ஏறிய வேகத்தில் ஒளிந்து கொண்டிருந்த சந்துருவின் சட்டையை பிடித்து இழுத்தது. பின்னாடியே ஓடி வந்த போலீஸ், காவலாளி மற்றும் அமைச்சர் அனைவரும் அதிர்ந்து விட்டனர். அங்கே ஒரு பதினோரு வயது ஒத்த பையன் பயந்த முகத்துடன் விழித்துக் கொண்டு நின்றிருந்தான்.

அமைச்சருக்கு கோபம் வந்துவிட்டது, "யார்ரா நீ" என்று கேட்க ஆரம்பிப்பதற்குள் ஒரு போலீஸ்காரர் ஓங்கி அந்த பையனின் கன்னத்தில் அறைந்தார். அறைந்த வேகத்தில் அந்த பையன் கொஞ்ச தூரத்தில் போய் சுருண்டு கீழே விழுந்தான்.

"எழுந்திரிடா எங்கே வந்தே" யார் நீ" என்று அமைச்சர் முடிப்பதற்குள் போலீசின் அடுத்த அடி அச்சிறுவனின் மீது விழுந்தது.

"இந்தாப்பா வெவரம் கேளு சும்மா அடிக்காதே. அடிச்சின்னா சரியாப் போயிடுமா?" என்றார் அமைச்சர்.

அடிச்ச அடியில் சந்துரு மடியில் கட்டிக் கொண்டு வந்த அனைத்து பொருள்களும் கீழே சிதறிப் போயின.

"என்னடா அது?" என்று போலீஸ் மறுபடியும் மிரட்டியது.

சத்தம் கேட்டு கல்யாண் வெளியே வந்தான். "என்ன டாடி, இங்கே ஒரே சத்தமா இருக்கு? யாரு வந்திருக்காங்க? அம்மா எங்கேப்பா? எனக்கு ஒரே பயமா இருக்கு! இது யாரு? "என்று கூறியபடி அந்த சிறுவனின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.

"ஹேய்! சந்துரு நீ எங்கேடா இங்கே? உன்னை ஏன் போட்டு அடிக்கறாங்க!" என்று ஆச்சர்யம் கலந்த குரலில் கேட்டான் கல்யாண்.

"என்ன உனக்கு இவனை ஏற்கனவே தெரியுமா?"

"தெரியும் டாடி, இவன் எங்க பள்ளியில்தான் படிக்கறான். என்னோட கிளாஸ்தான் ரொம்ப நல்ல பையன். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள். அவனுக்கு என்னை மாதிரி டாடி இல்லேப்பா! பாவம் சந்துரு, அவனை அடிக்காதீங்கப்பா. சந்துரு ஒரு தப்பும் கண்டிப்பா பண்ண மாட்டான். ரொம்ப நல்லவன்பா" என்று கெஞ்சிய கல்யாண் தந்தையின் முகத்தை ஆர்வமாகப் பார்த்தான்.

"சரி அவனை அழைத்துக் கொண்டு உள்ளே வா" என்று உள்ளே போனார் அமைச்சர்

"டேய் வாடா உள்ளே " என்று அழைத்த கல்யாண் அதிர்ந்து போனான். "என்ன சந்துரு கையிலே? எங்கே காட்டு" அதற்குள் அப்பாவின் குரல் வந்தவுடன் உள்ளே வேகமாக நண்பனின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே ஓடினான் கல்யாண்.

"என்ன சத்தம் எல்லாரும் தூங்காமல் இங்கே என்ன செய்யறீங்க?" என்று கேட்ட கல்யாணோட அம்மா, ஒரு பையன் நிற்பதை அப்போதுதான் கவனித்தார்கள். "யாரு இந்த பையன்"

"என்னோட நண்பன் மம்மி"

"அது இருக்கட்டும் இந்த நேரத்தில் அவனுக்கு இங்கே என்ன வேலை? அவங்க வீட்டிலே தேடமாட்டாங்களா?"

"இல்லீங்கம்மா, எங்க அம்மாகிட்டே சொல்லிட்டுதான் வந்தேன்" இப்போதுதான் சந்துரு திருவாய் மலர்ந்தான்.

"என்ன சொல்லிட்டு வந்தியா? எதுக்கு இந்த இருட்டிலே மரம் ஏறி வந்தே?"

"இல்லே சார் இன்னைக்கு கல்யாணுக்கு பிறந்தநாள் இல்லையா? அதனால் முதல் கேக்கும், முதல் வாழ்த்தும் என்னோடதா இருக்கனும்னுதான் வந்தேன். ரெண்டு வருடமாக எப்படியாவது மொதல் ஆளா சொல்லனும்னு முயற்சி செய்தேன். என்னால் முடியவில்லை. கல்யாண் ரொம்ப பாதுகாப்பா இருக்கறதுனாலே என்னால் அவனுக்கு முதல் கேக் கொடுக்க முடிய வில்லை. நாங்க எல்லாம் ரொம்ப ஏழைங்க. உங்க வீட்டுலே எல்லாம் சேர்க்க மாட்டீங்கன்னு நினைச்சிதான், இப்படி தப்பிதமா முயற்சி பண்ணி உங்க வீட்டுக்குள்ளே வந்துட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சார். போலீஸ் கிட்டே பிடிச்சி கொடுத்துடாதீங்க. நான் எங்க அம்மாவுக்கு ஒரே பையன், ஒரு தங்கச்சிதான் இருக்கு. எங்க அம்மாவுக்கு யாருமே இல்லைங்க சார்" என்று அழ ஆரம்பித்தான் சந்துரு.

"மனம் நெகிழ்ந்த அந்த தாய், அவனை அருகே அழைத்து கன்னத்தில் தட்டி கொடுத்து, சரி உன் நண்பனுக்கு இப்பவே பிறந்த நாள் கொண்டாடுவோமா?" என்று அன்புடன் கேட்டார்கள்.

ஆர்வத்துடன் தன் தந்தையின் முகத்தைப் பார்த்தான் கல்யாண்.

"சரி இப்போ அதெல்லாம் கொண்டாட முடியாது, ஆனா சந்துரு கொண்டு வந்துள்ள கேக்கை வெட்டுவோம். மீதி ஆரவாரம் எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம். இப்போ மணி பன்னிரண்டு தாண்டிடுச்சு. பரவா இல்லே, சந்தோஷமா சந்துரு?" என்று அன்பாக சந்துருவைப் பார்த்தார்.

"ரமா நீ போய் கல்யாண் போடாத டிரஸ் இருந்தால் ரெண்டு எடுத்து வா! சந்துரு நீ போய் கை கால்கள் கழுவிக் கொண்டுவா"

இருவரையும் புது டிரஸ் போட வைத்தார்கள். சந்துரு வாங்கி வந்த கேக் வெட்டப்பட்டது. முதல் கேக் துண்டை எடுத்து தனது நண்பனுக்கு ஊட்டி விட்டான் சந்துரு. நீண்டநாள் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், கண்களில் நீர் வழிய கல்யாணின் தாய், தந்தைக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தான்.

சிறிது நேரத்தில் அங்கே ஒரு சிறிய விழா ஆரம்பித்து முடிந்தும் விட்டது. அவனிடம் மிகவும் பரிவாக நடந்து கொண்ட கல்யாணின் பெற்றோர்களை மிகவும் வியப்புடனும் பெருமையுடனும் பார்த்தான் சந்துரு. நாம் எவ்வளவு தவறாக இவர்களை நினைத்து விட்டோம். மறுபடியும் இருவருடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

"ஏண்டா கேக் மட்டும் எடுத்து வரக்கூடாதா? கத்தி கூடவா எடுத்து வருவே? எங்கேயாவது குத்தி இருந்தா என்னடா செய்வே? இதுபோல் என்றுமே செய்யாதே. இனிமேல் என்னோட பிறந்த நாளுக்கு முன் தினமே எங்க வீட்டுக்கு வந்திடு" என்று மிகவும் முதிர்ச்சியான தனது எண்ணங்களை வெளிப்படுத்தினான் கல்யாண்.

இப்படி ஒரு குழந்தையை ஈன்று எடுத்ததிற்கு மிகவும் பெருமை அடைந்த அந்த பெற்றோர்கள் அதே சமயத்தில் சந்துருவின் நட்பையும் அன்பையும் சரிவிகத்தில் புரிந்து கொண்டனர்.

காவலாளியை அனுப்பி சந்துருவை அவங்க வீட்டில் விடச் சொன்னதோடு அல்லாமல், அடுத்த நாள் நடக்கப் போகும் கல்யாணின் பிறந்தநாள் விருந்திலும் சந்துருவின் வீட்டில் அனைவரையும் கலந்து கொள்ளச் சொல்லி அன்பு வேண்டுகோள் விடுத்து அச்சிறுவனை அனுப்பி வைத்தார்கள்.

40 comments :

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை ரம்யா.

Mrs.Menagasathia said...

நெகிழ்வான நல்ல கதை ரம்யா!!

அ.மு.செய்யது said...

ஆர்ப்பட்டமில்லாமல் ஒரு அழகான ,இயல்பான கதையை தந்ததற்கு பாராட்டுகள் ரம்யா !!!!

தொடர்ந்து எழுதுங்கள் !!!

pappu said...

அட!

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

Good :)

velji said...

ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி நெகிழ்வாய் முடித்திருக்கிறீர்கள்.
நல்ல கதை!

அப்பாவி முரு said...

ரெண்டு இடத்துல எனக்கு புரியலை.

1) //அவனுக்கு என்னை மாதிரி டாடி இல்லேப்பா!//

அப்பாகிட்டவே எப்பிடி, என்னை மாதிரி அப்பா இல்லாதவன்னு சொல்ல முடியும்?

2) //"சரி இப்போ அதெல்லாம் கொண்டாட முடியாது, ஆனா சந்துரு கொண்டு வந்துள்ள கேக்கை வெட்டுவோம். மீதி ஆரவாரம் எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம்//

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முந்தைய நள்ளிரவில் தானே நடக்கும்?

அப்பாவி முரு said...

//வந்தது வந்துட்டீங்க எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா//

வாழ்த்துகள்...

போதுமா???

ரங்கன் said...

என்னால் வார்த்தைகளால்சொல்ல முடியாத ஒரு உணர்வு இருக்கமுடியுமானால் அது நட்பு மட்டுமே..!!

எவ்வளவு அழகான கதை..!

மனம் நெகிழ்ந்தேன்..

நன்றி ரம்யாம்மா

பித்தனின் வாக்கு said...

நல்லா கதைவுடறிங்க, ஆத்தாடி கிரைம் நாவல் மாதிரி கொண்டுபோய் கடைசில உருக்கமா வைச்சுட்டிங்க. ஆனா நடுராத்திரில இப்படி அவங்க நடந்துக்கறது கதையில தான் நடக்கும். நன்றி. நல்ல கதை வாழ்த்துக்கள்(வாத்துக்கள்) ரம்யாஆஆ

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு ரம்யா.....

கதிர் - ஈரோடு said...

நெ(ம)கிழ்ச்சி

வால்பையன் said...

இந்த ரம்யா குழந்தைக்கு யாராவது பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுங்கப்பா!

RAMYA said...

//
ராமலக்ஷ்மி said...
நல்ல கதை ரம்யா
//

உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி சகோதரி!

RAMYA said...

//
Mrs.Menagasathia said...
நெகிழ்வான நல்ல கதை ரம்யா!!
//

மிக்க நன்றி சகோதரி!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
ஆர்ப்பட்டமில்லாமல் ஒரு அழகான ,இயல்பான கதையை தந்ததற்கு பாராட்டுகள் ரம்யா !!!!

தொடர்ந்து எழுதுங்கள் !!!
//

ரசனைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ!

RAMYA said...

//
pappu said...
அட!
//

முற்றுப் பெறாத வாக்கியம் :))
இருந்தாலும் நன்றி பப்பு!

RAMYA said...

//
velji said...
ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி நெகிழ்வாய் முடித்திருக்கிறீர்கள்.
நல்ல கதை!
//

வாங்க velji,

உங்கள் வரவிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி velji

க.பாலாசி said...

//நீண்டநாள் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், கண்களில் நீர் வழிய கல்யாணின் தாய், தந்தைக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தான். //

ஆனந்த கண்ணீர்....

கதை நன்றாயிருக்கிறது...சிந்தனையுடன்...

RAMYA said...

//
அப்பாவி முரு said...
ரெண்டு இடத்துல எனக்கு புரியலை.

1) //அவனுக்கு என்னை மாதிரி டாடி இல்லேப்பா!//

அப்பாகிட்டவே எப்பிடி, என்னை மாதிரி அப்பா இல்லாதவன்னு சொல்ல முடியும்?
//

நீங்க கண்டுபிடிச்ச தவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

எனக்கு இருக்கிற மாதிரி அப்பா இல்லைன்னு சொல்லி இருக்கணும் இல்லையா??

RAMYA said...

//
2) //"சரி இப்போ அதெல்லாம் கொண்டாட முடியாது, ஆனா சந்துரு கொண்டு வந்துள்ள கேக்கை வெட்டுவோம். மீதி ஆரவாரம் எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம்//

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முந்தைய நள்ளிரவில் தானே நடக்கும்?
//

நண்பர்கள் மற்றும் உறவினர்களை நள்ளிரவில் அழைப்பார்கள் என்பது எனக்கு தெரியாத ஒன்று.

அதையும் இப்போது தெரிந்து கொண்டேன்!

RAMYA said...

//
அப்பாவி முரு said...
//வந்தது வந்துட்டீங்க எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா//

வாழ்த்துகள்...

போதுமா???
//

ஐயோ! போதும்பா இன்னுமா :))

RAMYA said...

//
ரங்கன் said...
என்னால் வார்த்தைகளால்சொல்ல முடியாத ஒரு உணர்வு இருக்கமுடியுமானால் அது நட்பு மட்டுமே..!!

எவ்வளவு அழகான கதை..!

மனம் நெகிழ்ந்தேன்..

நன்றி ரம்யாம்மா
//

ரசிச்சு படிச்சு அதை வார்த்தைகளால் வெளிப்படுத்திய உங்கள் உணர்வுக்கு நான் நன்றி சொல்கிறேன் ரங்கா!!

RAMYA said...

//
பித்தனின் வாக்கு said...
நல்லா கதைவுடறிங்க, ஆத்தாடி கிரைம் நாவல் மாதிரி கொண்டுபோய் கடைசில உருக்கமா வைச்சுட்டிங்க. ஆனா நடுராத்திரில இப்படி அவங்க நடந்துக்கறது கதையில தான் நடக்கும். நன்றி. நல்ல கதை வாழ்த்துக்கள்(வாத்துக்கள்) ரம்யாஆஆ
//

இல்லைங்க பித்தனின் வாக்கு!

இது நடந்த கதைங்க!

வாழ்த்திற்கு மிக்க நன்றிங்க!

RAMYA said...

//
புலவன் புலிகேசி said...
நல்லா இருக்கு ரம்யா.....
//

நன்றி புலவன் புலிகேசி!

RAMYA said...

//
கதிர் - ஈரோடு said...
நெ(ம)கிழ்ச்சி
//

நன்றி கதிர் - ஈரோடு!

RAMYA said...

//
வால்பையன் said...
இந்த ரம்யா குழந்தைக்கு யாராவது பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுங்கப்பா!
//


நன்றி வால்பையன்!

இன்னும் பிஸ்கட் வந்து சேரலை:)

அளவில்லா எதிர்பார்ப்புடன்
ரம்யா....

RAMYA said...

//
க.பாலாசி said...
//நீண்டநாள் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், கண்களில் நீர் வழிய கல்யாணின் தாய், தந்தைக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தான். //

ஆனந்த கண்ணீர்....

கதை நன்றாயிருக்கிறது...சிந்தனையுடன்...

//

ஆமாம் க.பாலாசி!
நன்றி க.பாலாசி!

ஆ.ஞானசேகரன் said...

அருமையா கதை சொல்லுரிங்க

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
அருமையா கதை சொல்லுரிங்க
//

நன்றி ஆ.ஞானசேகரன்!

தண்டோரா ...... said...

ரொம்ப நல்லாயிருக்கு சகோதரி

அப்பாதுரை said...

சுவையான சிறுகதை

ஸ்ரீ said...

:-))))))))

நசரேயன் said...

//"சரி இப்போ அதெல்லாம் கொண்டாட முடியாது, ஆனா சந்துரு கொண்டு வந்துள்ள கேக்கை வெட்டுவோம். மீதி ஆரவாரம் எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம்.//

என்ன சரக்கு "ரம்" யா

நசரேயன் said...

//இருவரையும் புது டிரஸ் போட வைத்தார்கள். சந்துரு வாங்கி வந்த கேக் வெட்டப்பட்டது. முதல் கேக் துண்டை எடுத்து தனது நண்பனுக்கு ஊட்டி விட்டான் சந்துரு.//

ஏன் துண்டு போட பக்கத்திலே ஆள் இல்லையா

S.A. நவாஸுதீன் said...

நல்ல கதை ரம்யா. நெகிழ்ச்சியான திருப்பம். பாராட்டுக்கள் ரம்யா

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

உங்களுக்கு கதையும் சொல்லத் தெரியுமா, நல்லா இருக்குங்க!!

நட்புடன் ஜமால் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு

ரம்யா - அருமை.

மாதம் ஒன்றாவது கொடுங்கள் விருந்து

அன்புடன் அருணா said...

அட நல்லாருக்கே!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அம்புலிமாமா கதை எழுதினதுக்கு ரம்யாவுக்கு வாழ்த்துகள்.!

(விவரணையில்தான் பிசகு. நாலு வாட்டி கொட்டாவி வந்திருச்சு.. ஹிஹி)