Tuesday, October 6, 2009

தேவதையின் வரங்கள்!!

தனக்குத்தானே சட்டம் வகித்துக் கொள்ளுதல், என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த "தேவதையின் வரங்கள்" என்ற இடுகையை வெளியிட துணிந்து விட்டேன்.

சமீப காலமாக வலையுலகில் தொடர் பதிவுகள் அனைவரையும் கலக்க வைத்தது - கேள்வி பதில்கள், தேவதையின் வருகை.. இதில் "தேவதையின் வரங்கள்" என்ற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஆனால், அந்த தலைப்பில் நானே என்னை எழுத அழைத்து இதோ எழுதவும் ஆரம்பித்து விட்டேன். கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் உங்களுக்கு புரியும் (இப்படி குழப்பினா எப்படி புரியும், புரியாம எழுதறது அப்புறம் இப்படி ஒரு பிட்டை போடறது). நான் விளக்க தேவை இல்லை (அட இங்கே பாருய்யா! இந்த மாதிரி தொல்லைகள் வேறே! இப்படி நீங்க சொல்றது என் காதுலே விழுகிறது. என்ன செய்ய? கொஞ்சம் பொறுத்துக்கோங்க) .

சரி என்ன நடக்குதுன்னு இப்போ பார்க்கலாம்!

தேவதை என் முன்னே வந்தாச்சு! என்னுடைய அழைப்பை ஏற்று ரெண்டு தேவதைகள் வந்து விட்டார்கள். ஒரு தேவதை அமைதி, ஒரு தேவதை கொஞ்சம் லேசா குறும்பு அதிகம்.

தேவதையிடம் எவ்வளவு வரம் என்றெல்லாம் விதி முறைகள் வகுத்துக் கொள்ளவில்லை. மனதில் ஏற்படும் தேவைகள் நிறைவடையும் வரை கேக்கலாமே! நீங்க என்ன சொல்லவரீங்க? சரிதானே நண்பர்களே!

பாருங்க ரெண்டு தேவதையும் எப்படி ஜொலிக்கராங்கன்னு!!

இவங்கதான் சாதுவான தேவதை

இவங்கதான் குறும்பான தேவதை

வரம் நம்பர் ஒன்று
சிக்கன் குனியா, தக்காளி குனியா, பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் ஒருவரையும் தாக்கக் கூடாது. மேலும் குழந்தைகளை டச் பண்ணவே கூடாது. மீறி இந்த நோய் பரவ வேண்டும் என்று விதி இருந்தால், அதை நீயே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

வரம் நம்பெர் இரெண்டு
பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் விடைகளை மறந்து விட்டால்(நம்ம தம்பி பப்பு மாதிரி ஸ்டூடெண்ட்ஸ்), நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும்.

வரம் நம்பர் மூன்று
சினிமாவில் வக்கிரமான மற்றும் வைலன்ட் காட்சிகளை திரையிடும் போது நீதான் அவற்றை நைசாக அந்த படத்தில் இருந்து நீக்க வேண்டும். ப்ரிவியுவில் காட்சியை பார்க்கும் போது தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் காணமல் போன காட்சிகள் தேடினாலும் கிடைக்கக் கூடாது.

வரம் நம்பர் நான்கு
அப்புறம் முக்கியமான் ஒன்று, நானும் எனது தோழிகளும் (வலைத் தோழிகள் உட்பட) சந்திரமண்டலத்திற்கு ஒரு மாதம் சுற்றுலா சென்று வர வேண்டும். இதை தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.

வரம் நம்பர் ஐந்து
எனது நண்பர்கள்(நண்பிகள் அல்ல) அனைவரையும் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக அவர்கள் இருப்பிடம் சேர்க்க வேண்டும். இந்த வரத்தையும் தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.

வரம் நம்பர் ஆறு
நண்பர் குடுகுடுப்பையார் என்னை அவரது ஸ்பெஷல் வலைப்பதிவான "வருங்கால முதல்வர்" என்ற வலைப்பதிவில் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொன்னார். அந்த தலைப்பை எழுதும் போது இந்த ஆசை எனது மனதினுள்ளே தோன்றியது,

என்னுடை வலை நண்பர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் "ஒரு நாள் முதல்வராக" பதவி ஏற்று செயல்பட வேண்டும் என்று மனதார விரும்பி வேண்டிக் கொள்கிறேன்.

வரம் நம்பர் ஏழு
சுனாமி, நிலநடுக்கம் இது போல் பேரழிவைத் தரும் இயற்கை சீற்றங்கள் அறவே இருக்கக் கூடாது.

வரம் நம்பர் எட்டு
நான் தெருவில் நடந்து போகும் போது என் மீது மட்டும் மழை பொழிய வேண்டும். தொடர்ந்து இல்லைன்னாலும் வாரத்தில் ஒரு முறையாவது இது போல் நிகழ வேண்டும்.

வரம் நம்பர் ஒன்பது
அப்புறம், தேவதைகளே!! நீங்கள் இருவரும் என் மீது கோபம் கொள்ளக் கூடாது. நான் நினைக்கும் போதெல்லாம் நான் தேவதையாக மாறி கேட்பவர்களுக்கு கேட்கும் வரம் தர வேண்டும்.

வரம் நம்பர் பத்து
நானும் எனது தோழிகள் ஐந்து பேரும் நினைக்கும் போதெல்லாம் இன்விசிபிள் ஆகவேண்டும். அப்படி ஆகி எல்லா சினிமா தியேட்டரிலும் நைசா போயி சினிமா பார்க்கணும். பிடித்த காட்ச்சிகளில் தோழிகளுடன் சேர்ந்து விசில் அடித்து மகிழ வேண்டும். யாருமே சிரிக்காத போது சத்தம் போட்டு சிரிக்க வேண்டும். ஹோட்டல்லே போயி வேண்டியதை எடுத்து சாப்பிடனும். அதான் நாங்க யாருக்கும் தெரிய மாட்டோமே!

வரம் நம்பர் பதினொன்று
பேய்ன்னு ஒன்னு இருந்திச்சுன்னா அது என்னைய பார்த்து பயப்படனும்

வரம் நம்பர் பனிரெண்டு
இமய மலை மேலே இருந்து கீழே குதிக்கணும், ஆனால் எனக்கு எதுவும் ஆகக்கூடாது

வரம் நம்பர் பதிமூன்று
கடலுக்கு அடியில் போயி எல்லாவற்றையும் ஒரு ஓரமா உக்காந்து வேடிக்கை பார்க்கணும். ஆனா மூச்சு முட்டக் கூடாது. பவளப் பாறை மேலே எல்லாம் ஏறி ஒக்காந்துக்கணும்.

வரம் நம்பர் பதினான்கு
வானத்தில் உள்ள நட்ச்சத்திரங்களை லேசா தொட்டு பார்த்து முடிந்தால் கையோட எடுத்திகிட்டு வந்துடனும்.

வரம் நம்பர் பதினைந்து
ஆர்பரிக்கும் கடல் அலைகளின் மீது நான் என் தோழிகளுடன் உல்லாசமாக நடந்து செல்ல வேண்டும்.

எனது கோரிக்கைகளை கேட்டு தேவதைகள் ஓடி போயிடப் போறாங்க!

அதனாலே இப்போதைக்கு இவ்வளவு போதும்........

113 comments :

குடுகுடுப்பை said...

கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க

கலை அக்கா said...

//
வரம் நம்பர் ஒன்று
சிக்கன் குனியா, தக்காளி குனியா, பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் ஒருவரையும் தாக்கக் கூடாது. மேலும் குழந்தைகளை டச் பண்ணவே கூடாது. மீறி இந்த நோய் பரவ வேண்டும் என்று விதி இருந்தால், அதை நீயே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
//

மழலையர் மீதான பரிவு....

கலை அக்கா said...

//
வரம் நம்பெர் இரெண்டு
பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் விடைகளை மறந்து விட்டால்(நம்ம தம்பி பப்பு மாதிரி ஸ்டூடெண்ட்ஸ்), நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும்.
//

மாணாக்கர்களையும் மறக்கவில்லை.

கலை அக்கா said...

//

வரம் நம்பர் மூன்று
சினிமாவில் வக்கிரமான மற்றும் வைலன்ட் காட்சிகளை திரையிடும் போது நீதான் அவற்றை நைசாக அந்த படத்தில் இருந்து நீக்க வேண்டும். ப்ரிவியுவில் காட்சியை பார்க்கும் போது தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் காணமல் போன காட்சிகள் தேடினாலும் கிடைக்கக் கூடாது.
//

சமூக அக்கறை....

கலை அக்கா said...

//

வரம் நம்பர் நான்கு
அப்புறம் முக்கியமான் ஒன்று, நானும் எனது தோழிகளும் (வலைத் தோழிகள் உட்பட) சந்திரமண்டலத்திற்கு ஒரு மாதம் சுற்றுலா சென்று வர வேண்டும். இதை தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.
//

அதீத ஆசை.....

கலை அக்கா said...

//

வரம் நம்பர் ஐந்து
எனது நண்பர்கள்(நண்பிகள் அல்ல) அனைவரையும் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக அவர்கள் இருப்பிடம் சேர்க்க வேண்டும். இந்த வரத்தையும் தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.

//

ஆண் நண்பர்கள்மீது ஏன் இந்த பாரபட்சம்....

கலை அக்கா said...

//
வரம் நம்பர் ஆறு
நண்பர் குடுகுடுப்பையார் என்னை அவரது ஸ்பெஷல் வலைப்பதிவான "வருங்கால முதல்வர்" என்ற வலைப்பதிவில் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொன்னார். அந்த தலைப்பை எழுதும் போது இந்த ஆசை எனது மனதினுள்ளே தோன்றியது,

என்னுடை வலை நண்பர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் "ஒரு நாள் முதல்வராக" பதவி ஏற்று செயல்பட வேண்டும் என்று மனதார விரும்பி வேண்டிக் கொள்கிறேன்.

வரம் நம்பர் ஏழு
சுனாமி, நிலநடுக்கம் இது போல் பேரழிவைத் தரும் இயற்கை சீற்றங்கள் அறவே இருக்கக் கூடாது.
//

இவை கொஞ்சம் 'ஓவர்'.....

கலை அக்கா said...

//
வரம் நம்பர் எட்டு

நான் தெருவில் நடந்து போகும் போது என் மீது மட்டும் மழை பொழிய வேண்டும். தொடர்ந்து இல்லைன்னாலும் வாரத்தில் ஒரு முறையாவது இது போல் நிகழ வேண்டும்.
//

அப்பட்டமான சுயநலம்.....!

ஜீவன் said...

///வரம் நம்பர் ஐந்து
எனது நண்பர்கள்(நண்பிகள் அல்ல) அனைவரையும் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக அவர்கள் இருப்பிடம் சேர்க்க வேண்டும். இந்த வரத்தையும் தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.///

கூடவே அங்கே டாஸ் மார்க் கடையும் இருக்கணும்னு சொல்லுறதுக்கு என்னவாம் ?

கலை அக்கா said...

//
வரம் நம்பர் ஒன்பது
அப்புறம், தேவதைகளே!! நீங்கள் இருவரும் என் மீது கோபம் கொள்ளக் கூடாது. நான் நினைக்கும் போதெல்லாம் நான் தேவதையாக மாறி கேட்பவர்களுக்கு கேட்கும் வரம் தர வேண்டும்
//

இது ரம்யாவின் 'பஞ்ச்'.....!!

கலை அக்கா said...

//
வரம் நம்பர் பத்து
நானும் எனது தோழிகள் ஐந்து பேரும் நினைக்கும் போதெல்லாம் இன்விசிபிள் ஆகவேண்டும். அப்படி ஆகி எல்லா சினிமா தியேட்டரிலும் நைசா போயி சினிமா பார்க்கணும். பிடித்த காட்ச்சிகளில் தோழிகளுடன் சேர்ந்து விசில் அடித்து மகிழ வேண்டும். யாருமே சிரிக்காத போது சத்தம் போட்டு சிரிக்க வேண்டும். ஹோட்டல்லே போயி வேண்டியதை எடுத்து சாப்பிடனும். அதான் நாங்க யாருக்கும் தெரிய மாட்டோமே!
//

ரம்யாவின் குறும்பு...!!

கலை அக்கா said...

//
வரம் நம்பர் பதினொன்று
பேய்ன்னு ஒன்னு இருந்திச்சுன்னா அது என்னைய பார்த்து பயப்படனும்
//

இப்பவே அதானே நடக்குது...!!!

கலை அக்கா said...

//
வரம் நம்பர் பனிரெண்டு
இமய மலை மேலே இருந்து கீழே குதிக்கணும், ஆனால் எனக்கு எதுவும் ஆகக்கூடாது
//

ஆசை...!!

kanagu said...

/*வரம் நம்பர் நான்கு
அப்புறம் முக்கியமான் ஒன்று, நானும் எனது தோழிகளும் (வலைத் தோழிகள் உட்பட) சந்திரமண்டலத்திற்கு ஒரு மாதம் சுற்றுலா சென்று வர வேண்டும். இதை தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.

வரம் நம்பர் ஐந்து
எனது நண்பர்கள்(நண்பிகள் அல்ல) அனைவரையும் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக அவர்கள் இருப்பிடம் சேர்க்க வேண்டும். இந்த வரத்தையும் தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.
*/

yaarayum uyiroda vida maateenga pola irukke ka ;)

/*கலை அக்கா said...
//
வரம் நம்பர் பதினொன்று
பேய்ன்னு ஒன்னு இருந்திச்சுன்னா அது என்னைய பார்த்து பயப்படனும்
//

இப்பவே அதானே நடக்குது...!!!
*/

repeate... :)

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் ஆரம்பம் அருமை... தொடரட்டும்

கலை அக்கா said...

//
வரம் நம்பர் பதிமூன்று
கடலுக்கு அடியில் போயி எல்லாவற்றையும் ஒரு ஓரமா உக்காந்து வேடிக்கை பார்க்கணும். ஆனா மூச்சு முட்டக் கூடாது. பவளப் பாறை மேலே எல்லாம் ஏறி ஒக்காந்துக்கணும்.
//

நல்ல கற்பனைகளுடனான ஆசை...!!!

सुREஷ் कुMAர் said...
This comment has been removed by the author.
கலை அக்கா said...

//
வரம் நம்பர் பதினான்கு
வானத்தில் உள்ள நட்ச்சத்திரங்களை லேசா தொட்டு பார்த்து முடிந்தால் கையோட எடுத்திகிட்டு வந்துடனும்.

வரம் நம்பர் பதினைந்து
ஆர்பரிக்கும் கடல் அலைகளின் மீது நான் என் தோழிகளுடன் உல்லாசமாக நடந்து செல்ல வேண்டும்.
//

ஹும்ம்.. ஆசை..ஆசை..பேராசை...!!!

सुREஷ் कुMAர் said...

ஹை.. தேவதை உங்ககிட்டையும் வந்தாச்சா..

யாராச்சும் அனுப்பி வெச்சாங்களா.. இல்லை நீங்களே கடத்தி கொண்டாந்துட்டிங்களா..

सुREஷ் कुMAர் said...

//
அந்த தலைப்பில் நானே என்னை எழுத அழைத்து இதோ எழுதவும் ஆரம்பித்து விட்டேன்.
//
சரிதான்.. நீங்களாவே கடத்திகொண்டாந்துட்டிங்களா..

सुREஷ் कुMAர் said...

//
வரம் நம்பெர் இரெண்டு

நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும்.
//
கேக்குறதுதான் கேக்குறிங்க..
எங்களமாதிரி ஆளுங்களுக்கு எழுதியே கொடுக்கசொல்லி கேக்கலாம்ல..

सुREஷ் कुMAர் said...

//
சினிமாவில் வக்கிரமான மற்றும் வைலன்ட் காட்சிகளை திரையிடும் போது நீதான் அவற்றை நைசாக அந்த படத்தில் இருந்து நீக்க வேண்டும்.
//
அவங்க என்ன சென்சார் போர்டுலையா வேலைபாக்குறாங்க..

सुREஷ் कुMAர் said...

//
சந்திரமண்டலத்திற்கு ஒரு மாதம் சுற்றுலா சென்று வர வேண்டும்.
//
அங்க போய் என்னத்த பாக்கபோறிங்களோ.. இங்கயே பாக்க எவ்ளோ நல்ல இடங்கள் எல்லாம் இருக்கு..

सुREஷ் कुMAர் said...

//
செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக அவர்கள் இருப்பிடம் சேர்க்க வேண்டும்.
//
பரவால.. நான் வேற மாதிரி நெனச்சுட்டேன்..

सुREஷ் कुMAர் said...

//
என்னுடை வலை நண்பர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் "ஒரு நாள் முதல்வராக" பதவி ஏற்று செயல்பட வேண்டும் என்று மனதார விரும்பி வேண்டிக் கொள்கிறேன்.
//
வெளங்கிடும்..

அண்ணன் வணங்காமுடி said...

பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் விடைகளை மறந்து விட்டால்(நம்ம தம்பி பப்பு மாதிரி ஸ்டூடெண்ட்ஸ்), நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும்.
//

அதுக்கு பேசாம புத்தகத்தை எடுத்து கொடுதுவிடாலாம்...

सुREஷ் कुMAர் said...

//
வரம் நம்பர் எட்டு
நான் தெருவில் நடந்து போகும் போது என் மீது மட்டும் மழை பொழிய வேண்டும்.
//
கூடவே இடியும் விழும்.. பரவாலையா..

அண்ணன் வணங்காமுடி said...

சினிமாவில் வக்கிரமான மற்றும் வைலன்ட் காட்சிகளை திரையிடும் போது நீதான் அவற்றை நைசாக அந்த படத்தில் இருந்து நீக்க வேண்டும். ப்ரிவியுவில் காட்சியை பார்க்கும் போது தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் காணமல் போன காட்சிகள் தேடினாலும் கிடைக்கக் கூடாது. //

நீங்க சென்சார் போர்டு தலைவியா ஆயிடுங்க

सुREஷ் कुMAர் said...

//
வரம் நம்பர் ஒன்பது
அப்புறம், தேவதைகளே!! நீங்கள் இருவரும் என் மீது கோபம் கொள்ளக் கூடாது. நான் நினைக்கும் போதெல்லாம் நான் தேவதையாக மாறி கேட்பவர்களுக்கு கேட்கும் வரம் தர வேண்டும்.
//
இந்த ஒருவரமே போதுமே.. இதவேச்சே மத்தத நீங்களே செயல்படுத்திக்கலாமே..

வீணா ஏன் அவங்கள போட்டு நச்சிட்டு இருக்கீங்க..

सुREஷ் कुMAர் said...

//
வரம் நம்பர் பத்து
//
நெம்ப சின்ன புள்ளத்தனமால இருக்கு..

அண்ணன் வணங்காமுடி said...

ஜனத்தொகை குறைக்க ஒரு வரம் கேட்டிருக்கலாம்

सुREஷ் कुMAர் said...

//
வரம் நம்பர் பதினொன்று
பேய்ன்னு ஒன்னு இருந்திச்சுன்னா அது என்னைய பார்த்து பயப்படனும்
//
இப்போவே அப்டிதானே பயப்படுதுங்க..
இதுக்கு தனியா வரம் எல்லாம் தேவையே இல்லை..

सुREஷ் कुMAர் said...

//
வரம் நம்பர் பனிரெண்டு
இமய மலை மேலே இருந்து கீழே குதிக்கணும், ஆனால் எனக்கு எதுவும் ஆகக்கூடாது
//
ஆமா.. குதிக்கிறவர் உங்க மேல குதிக்கலைனா உங்களுக்கு எதுவும் ஆகாது..

அண்ணன் வணங்காமுடி said...

பேய்ன்னு ஒன்னு இருந்திச்சுன்னா அது என்னைய பார்த்து பயப்படனும் //

பேய்களுக்கு எல்லாம் தலைவியா இருக்கனும்ன்னு கேட்டிருக்கலாம்.

सुREஷ் कुMAர் said...

//
வரம் நம்பர் பதிமூன்று
//
ஏங்க.. உங்களுக்கு டைட் வெக்க ஸ்பேனர் கீனர் தேவைப்படுதா..

அண்ணன் வணங்காமுடி said...

இமய மலை மேலே இருந்து கீழே குதிக்கணும், ஆனால் எனக்கு எதுவும் ஆகக்கூடாது //

யாரையாவது அழைத்து செத்து செத்து விளையாடவா.

सुREஷ் कुMAர் said...

//
எனது கோரிக்கைகளை கேட்டு தேவதைகள் ஓடி போயிடப் போறாங்க!
//
கடேசி நாலு வரத்த கேட்டா, அவங்க ஓடிப்போக மாட்டாங்க.. காலாவதி ஆகிடுவாங்க..

கொஞ்சம் பாத்து பதவிசா கேளுங்கதாயே..

ரங்கன் said...

//இமய மலை மேலே இருந்து கீழே குதிக்கணும், ஆனால் எனக்கு எதுவும் ஆகக்கூடாது//

உங்களுக்கு எதுவும் கண்டிப்பா ஆகாது..ஆனா இமயமலையை நினைச்சாத்தான் பாவமா இருக்கு..!!

ரங்கன் said...

//பேய்ன்னு ஒன்னு இருந்திச்சுன்னா அது என்னைய பார்த்து பயப்படனும்//

இதென்ன காமெடியா இருக்கு..உங்களை பார்த்து நீங்களே பயப்படணும்னு கண்டிஷன் போடுறது நல்லா இல்லை சொல்லிட்டேன்..

cheena (சீனா) said...

அன்பின் ரம்யா

அருமை அருமை - வரங்கள் அனைத்தும் கிடைத்து மனம் மகிழ நல்வாழ்த்துகள்

pappu said...

ஏன் இப்படி?

இருந்தாலும் என் பரிட்சைய பத்தியெல்லாம் பேசி ஒரே ஃபீலிங்ஸ் ஆக்கிட்டீங்க!

வால்பையன் said...

அந்த ரெண்டாவது தேவதை என்னை பார்த்து கண்ணடிச்சிகிட்டே இருக்கு!

யாராவது நான் ரொம்ப அழகுங்கிற ”உண்மைய” அந்த தேவதைகிட்ட சொல்லிட்டிங்களா!?

வால்பையன் said...

//கலை அக்கா said...

//

வரம் நம்பர் ஐந்து
எனது நண்பர்கள்(நண்பிகள் அல்ல) அனைவரையும் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக அவர்கள் இருப்பிடம் சேர்க்க வேண்டும். இந்த வரத்தையும் தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.

//

ஆண் நண்பர்கள்மீது ஏன் இந்த பாரபட்சம்....//

அதானே நாங்கெளெல்லாம் சூரியனில் கேம்ப் ஃப்யர் போட்டு தர்ணா செய்வோம்!

ஆண் பதிவர்களே ஓடியாங்க!

வால்பையன் said...

//
வரம் நம்பர் எட்டு

நான் தெருவில் நடந்து போகும் போது என் மீது மட்டும் மழை பொழிய வேண்டும். தொடர்ந்து இல்லைன்னாலும் வாரத்தில் ஒரு முறையாவது இது போல் நிகழ வேண்டும்.
//

தலைக்கு மேல ஒரு ஷவர் செட் பண்ணி, முதுகில் ஒரு வாட்டர் டேங்க் மட்டி விட்றலாம்!

எப்பூடி!

வால்பையன் said...

//
கூடவே அங்கே டாஸ் மார்க் கடையும் இருக்கணும்னு சொல்லுறதுக்கு என்னவாம் ?//

அது மட்டும் இல்லைனா நாம செவ்வாயை ”வெறும்வாயா” மாத்திர மாட்டோமா ஜீவன்!

வால்பையன் said...

//सुREஷ் कुMAர் said...

ஹை.. தேவதை உங்ககிட்டையும் வந்தாச்சா..

யாராச்சும் அனுப்பி வெச்சாங்களா.. இல்லை நீங்களே கடத்தி கொண்டாந்துட்டிங்களா..//

அந்த மாதிரி வேலையெல்லாம் நீங்க செய்விங்க சுரேஷ் அண்ணே!
ரம்யா வீட்ல நாலஞ்சு தேவதை குடியே இருக்காங்க!

வால்பையன் said...

//அண்ணன் வணங்காமுடி said...

ஜனத்தொகை குறைக்க ஒரு வரம் கேட்டிருக்கலாம்//

உங்களுக்கு கல்யானமே ஆவாது பரவாயில்லையா!?

வேணும்னா இப்படி வரம் கேட்கலாம்!
சோம்பேறி ஆட்கலெல்லாம் டஸ்ஸுன்னு மறைஞ்சிரனும் ஒகேவா!?

வால்பையன் said...

///பேய்ன்னு ஒன்னு இருந்திச்சுன்னா அது என்னைய பார்த்து பயப்படனும் //

அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு!
பேய் வரும் போது கதவுக்கு பின்னாடி நின்னுகிட்டு “பே”ன்னு கத்துங்க!
பேய் பயந்துரும்!

அதைவிட பெட்டர் ஐடியா, உங்களுக்கு வால்பையன் ஃப்ரெண்டுன்னு சொன்னா பேய் உங்க பக்கமே வராது!

butterfly Surya said...

பதிவு அருமை.

வாலின் பின்னூட்டங்கள் சூப்பர்.

இராகவன் நைஜிரியா said...

மீ த 50

இராகவன் நைஜிரியா said...

என்ன கொடுமையடா சாமி இது...

50 பின்னூட்டம் வந்திருக்கு... ஆனா தமிழிஷில் 3 வோட்டுத்தான் விழுந்திருக்கு...

முதல்ல அந்த தேவதைகளிடம் சொல்லி பின்னூட்டம் போடறவங்களை ஓட்டும் போட வைக்கணும்

இராகவன் நைஜிரியா said...

அன்பு, பரிவு, பாசம், குறும்பு, ஆசை எல்லாவற்றையும் சேர்த்து வரமாக கேட்டுஇருக்கீன்றீர்கள்.

வெரிகுட்

இராகவன் நைஜிரியா said...

// வரம் நம்பர் ஐந்துஎனது நண்பர்கள்(நண்பிகள் அல்ல) அனைவரையும் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக அவர்கள் இருப்பிடம் சேர்க்க வேண்டும். //

அது ஏன் செவ்வாயோட நிறுத்திட்டீங்க...அப்படியே நெப்ட்யூன், யூரேனஸ் வரைக்கும் கிடைச்சா இன்னும் சந்தோஷமா இருக்குமில்ல... அதையும் அந்த தேவதைகளிடம் சொல்லி ஏற்பாடு பண்ணுங்க

இராகவன் நைஜிரியா said...

// ஜீவன் said...

கூடவே அங்கே டாஸ் மார்க் கடையும் இருக்கணும்னு சொல்லுறதுக்கு என்னவாம் ? //

விலை அதிகம் கேட்காத டாஸ்மார்க் கடை வேண்டும் என்று கேட்கச் சொல்லுங்க

நசரேயன் said...

//ஆர்பரிக்கும் கடல் அலைகளின் மீது நான் என் தோழிகளுடன் உல்லாசமாக நடந்து செல்ல வேண்டும். //

ஆவியாவா ?

அப்பாவி முரு said...

//பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் விடைகளை மறந்து விட்டால்(நம்ம தம்பி பப்பு மாதிரி ஸ்டூடெண்ட்ஸ்), நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும். //

ஸ்டாடிங் டிரபிள் உள்ள வண்டியானால், முதல்வரியை எடுத்துக் கொடுக்கலாம்.,

ஆனா.,

பெட்ரோலே இல்லாத வண்டியா இருந்தா என்ன செய்யுரதும்மா... என்ன செய்யுறது?

லவ்டேல் மேடி said...

// "தேவதையின் வரங்கள்" என்ற இடுகையை வெளியிட துணிந்து விட்டேன். //

அடேங்கப்பா... ரொம்ப துனுச்ச்சல் உங்களுக்கு....!!
// தேவதை என் முன்னே வந்தாச்சு! //

ஐ... தேவதையா... யாரு மாதிரி இருந்தாங்க...?? தமனா மாதிரியா...? நயன்தாரா மாதிரியா...??

// ஒரு தேவதை அமைதி, ஒரு தேவதை கொஞ்சம் லேசா குறும்பு அதிகம். //

ஓஒ... ரெண்டு பேருமேவா.....!!

// பாருங்க ரெண்டு தேவதையும் எப்படி ஜொலிக்கராங்கன்னு!! //

தேவதைங்க ரெண்டு பெரும் சீரியல் செட்டு கடையில வேல பாக்குறாங்களா...?? ஒரே.. சீரியல் பல்ப்பா மின்னுது...!!

// வரம் நம்பர் ஒன்று //

நீங்க ஒரு டாக்டரா இருந்தா இப்படியெல்லாம் பேசமாட்டீங்க......!! ஏன்னா ஒரு வில்லத்தனம் .....

// வரம் நம்பெர் இரெண்டு
நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும். //

அதுக்கு .. அந்த ரெண்டு ஆக்காங்களுமே ... பருச்சுயை எழுதீட்டு வந்துருட்டுமே....

// வரம் நம்பர் மூன்று
சினிமாவில் வக்கிரமான மற்றும் வைலன்ட் காட்சிகளை திரையிடும் போது நீதான் அவற்றை நைசாக அந்த படத்தில் இருந்து நீக்க வேண்டும். //நோஓஒ.... ஏன் இந்த கொலை வெறி.....!!

கடும் கண்டனங்களுடன்,

லவ்டேல் மேடி,
செயலாளர்,
தா.ஷா.கி.மு.பே ( தலைவி.ஷகிலா.கில்மா.முன்னேற்ற.பேரவை)
ஈரோடு கிளை.

லவ்டேல் மேடி said...

// வரம் நம்பர் நான்கு
அப்புறம் முக்கியமான் ஒன்று, நானும் எனது தோழிகளும் (வலைத் தோழிகள் உட்பட) //

அப்போ நாங்க.... !! " கடவுளே ....!! இவிங்க போற ராக்யட்டு பாதி வழியிலே பஞ்சரா போகணும்..." !!

// வரம் நம்பர் ஐந்து
எனது நண்பர்கள்(நண்பிகள் அல்ல) அனைவரையும் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக அவர்கள் இருப்பிடம் சேர்க்க வேண்டும். //

ஐ...ஐ....!! கடவுளே ... இவிங்க போற ரக்யட்டு நல்ல ஏ.சி கோச் ராக்யட்டா இருக்கணும்...!!// வரம் நம்பர் ஆறு
என்னுடை வலை நண்பர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் "ஒரு நாள் முதல்வராக" பதவி ஏற்று செயல்பட வேண்டும் என்று மனதார விரும்பி வேண்டிக் கொள்கிறேன். //

என்ன கொடும சரவணன் இது.....!!

// வரம் நம்பர் ஏழு
சுனாமி, நிலநடுக்கம் இது போல் பேரழிவைத் தரும் இயற்கை சீற்றங்கள் அறவே இருக்கக் கூடாது. //

முடியல....// வரம் நம்பர் எட்டு
நான் தெருவில் நடந்து போகும் போது என் மீது மட்டும் மழை பொழிய வேண்டும். தொடர்ந்து இல்லைன்னாலும் வாரத்தில் ஒரு முறையாவது இது போல் நிகழ வேண்டும். //

இப்புடியாச்சும் குளிக்கலான்னு நினைக்குறீங்க ....!! அதுலையும் வாரம் ஒரு தடவையாது குளிக்கலான்னு நினைக்குரீங்களே....!! உங்க நேர்மை எனக்கு புடுச்சிருக்கு...!!!

// வரம் நம்பர் ஒன்பது
நான் நினைக்கும் போதெல்லாம் நான் தேவதையாக மாறி கேட்பவர்களுக்கு கேட்கும் வரம் தர வேண்டும் ///அக்கா... அக்கா... என்ன சீக்கிரம் எங்க பேரவை தலைவரா மாத்தீருங்க...!!

லவ்டேல் மேடி said...

// வரம் நம்பர் பத்து //

// நானும் எனது தோழிகள் ஐந்து பேரும் நினைக்கும் போதெல்லாம் இன்விசிபிள் ஆகவேண்டும். //

உங்க மேல ரைட் கிளிக் பன்னி... ஹிடன் செலைக்ட் பன்னி... ஊக்கி குடுங்க..
// ஹோட்டல்லே போயி வேண்டியதை எடுத்து சாப்பிடனும். //

அக்கா .. அக்கா.. ப்ளீஸ்... என்னையும் அந்த மாதிரி மாத்தீருங்க.... நானும் நெறையா பார்' எ பதம் பாக்க வேண்டியது இருக்கு.....

// வரம் நம்பர் பனிரெண்டு
இமய மலை மேலே இருந்து கீழே குதிக்கணும், ஆனால் எனக்கு எதுவும் ஆகக்கூடாது //

அப்போ இமையமலை போட்டோவ எடுத்து... அதுமேல குதிங்க... போட்டோதான் உடையும்.. உங்குளுக்கு எதுவும் ஆகாது...!!

// யாருமே சிரிக்காத போது சத்தம் போட்டு சிரிக்க வேண்டும். //

இப்பவும் அப்புடித்தான இருக்கீங்க.....

// வரம் நம்பர் பதிமூன்று
கடலுக்கு அடியில் போயி எல்லாவற்றையும் ஒரு ஓரமா உக்காந்து வேடிக்கை பார்க்கணும். //

ரொம்ப நாள் ஆசையோ.....??
// ஆனா மூச்சு முட்டக் கூடாது. பவளப் பாறை மேலே எல்லாம் ஏறி ஒக்காந்துக்கணும். //

ம்ம்ம்...ம்ம்ம்.. நடத்துங்க... நடத்துங்க....

// வரம் நம்பர் பதினான்கு
வானத்தில் உள்ள நட்ச்சத்திரங்களை லேசா தொட்டு பார்த்து முடிந்தால் கையோட எடுத்திகிட்டு வந்துடனும். //

எடுத்துகிட்டு வந்து .... பெப்பர் ப்ரை பண்ணீருங்க......!! நெம்ப சூப்பரா இருக்கும்....!!

// வரம் நம்பர் பதினைந்து
ஆர்பரிக்கும் கடல் அலைகளின் மீது நான் என் தோழிகளுடன் உல்லாசமாக நடந்து செல்ல வேண்டும். //ஆப்பிரிக்கா கடல் அலைனா உங்குளுக்கு அவ்ளோ இஷ்ட்டமா.......??

R.Gopi said...

ஆஹா...

இப்போதான் ஒண்ணு ஒண்ணா முடிஞ்சுது...

அடுத்த‌து ஆர‌ம்பிச்சுட்டேளா... பேஷ்.. பேஷ்...

இது அடுத்த‌ தொட‌ராகி என்னென்ன‌ ஆக‌ப்போற‌தோ??

இன்னும் அடுத்த‌டுத்து யார் யார் வந்துஎல்லாரையும் டெர‌ர் ஆக்க‌போறாளோ...

கதிர் - ஈரோடு said...

உங்களைப் பார்த்தா இப்பவே பேய் பயப்படுதாமே

பித்தனின் வாக்கு said...

கடல் அளவு ஆசைகள் அது இரண்டு தேவதைகள் போலவே பொது நலமும் சுய நலமும் கலந்துருக்கு. நல்லது வாழ்க வளமுடன்.

எனக்கு ஆசைகள் அதிகம் இல்லை இரண்டுதான் அவை:

// அப்புறம் முக்கியமான் ஒன்று, நானும் எனது தோழிகளும் (வலைத் தோழிகள் உட்பட) சந்திரமண்டலத்திற்கு ஒரு மாதம் சுற்றுலா சென்று வர வேண்டும். இதை தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும். //
1.தயவுசெய்து அங்கனயே விட்டு விட்டு வரவும். திரும்பி இங்க கூட்டிவந்து ரங்கமணிகளை சேகத்தில் ஆழ்த்த வேண்டாம்.

2.எனது தங்கை ரம்யா கேக்கும் இதை தவிர அனைத்து செய்து தரவும்.
பேய் என்னைப் பார்த்து பயப்பட வேண்டும். ( என்ன உங்க வீட்டுல முகம் பாக்குற கண்ணாடி இல்லையா?)
யாரும் சிரிக்காத போது சிரிக்கனுமா அப்பிடினா நீங்க சென்னை 600 010 பார்ட்டியா?
ரிப்பிட்டு. பதிவு சூப்பர்.

Vidhoosh said...

சரிங்க.
-வித்யா

அ.மு.செய்யது said...

//நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும்.

//

அப்ப மீதிய யாரு எடுத்து கொடுப்பா ?

Atleast oru bit ketrukalamla ..

கார்த்திகைப் பாண்டியன் said...

அக்கா.. இப்படி கேட்டது எல்லாம் கொடுக்குற தேவதை வந்த நம்மா ஆளுங்க சும்மாவா இருப்பாங்க? இதுல மாயமா மறையுர வரம் எல்லாம் கிடைச்சா நம்ம ஆளுங்கள கைலையே பிடிக்க முடியாது..

sakthi said...

superb post

பின்னோக்கி said...

//வானத்தில் உள்ள நட்ச்சத்திரங்களை லேசா தொட்டு

ரொம்ப சுடும்ங்க...எதுக்கு இது...அது தான் இங்க இருந்து பார்த்தாலே நல்லா தெரியுமே.. :)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

Pothumanga?

நட்புடன் ஜமால் said...

நமக்கு நாமே திட்டமா

பேஷ் பேஷ் ஜூப்பரா இருக்கு.

நட்புடன் ஜமால் said...

குரும்பு தேவதை - குழந்தைத்தனம் தெரிகிறது - ரம்யா. இரசிக்கும்படியாக இருந்தது.

நட்புடன் ஜமால் said...

வலை நண்பர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் "ஒரு நாள் முதல்வராக" பதவி ஏற்று செயல்பட வேண்டும் என்று மனதார விரும்பி வேண்டிக் கொள்கிறேன். ]]

ஆஹா! இதென்ன கலாட்டா ...

ஸ்ரீ said...

//வலை நண்பர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் "ஒரு நாள் முதல்வராக" பதவி ஏற்று செயல்பட வேண்டும் என்று மனதார விரும்பி வேண்டிக் கொள்கிறேன்.//

இது நல்லாருக்கு.

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க
//

நன்றி குடுகுடுப்பை! (எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் :-) )

RAMYA said...

//
//
வரம் நம்பர் ஒன்று
சிக்கன் குனியா, தக்காளி குனியா, பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் ஒருவரையும் தாக்கக் கூடாது. மேலும் குழந்தைகளை டச் பண்ணவே கூடாது. மீறி இந்த நோய் பரவ வேண்டும் என்று விதி இருந்தால், அதை நீயே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
//

மழலையர் மீதான பரிவு....
//

புரிதலுக்கு நன்றி சகோதரி!!

RAMYA said...

//
கலை அக்கா said...
//
வரம் நம்பெர் இரெண்டு
பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் விடைகளை மறந்து விட்டால்(நம்ம தம்பி பப்பு மாதிரி ஸ்டூடெண்ட்ஸ்), நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும்.
//

மாணாக்கர்களையும் மறக்கவில்லை.
//

இல்லை இல்லை ஒரு போதும் மறக்கமாட்டேன்!

RAMYA said...

//

வரம் நம்பர் மூன்று
சினிமாவில் வக்கிரமான மற்றும் வைலன்ட் காட்சிகளை திரையிடும் போது நீதான் அவற்றை நைசாக அந்த படத்தில் இருந்து நீக்க வேண்டும். ப்ரிவியுவில் காட்சியை பார்க்கும் போது தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் காணமல் போன காட்சிகள் தேடினாலும் கிடைக்கக் கூடாது.
//

சமூக அக்கறை....
//

நன்றி சகோதரி எனது மூச்சே அதுதானே!!

RAMYA said...

//
கலை அக்கா said...
//

வரம் நம்பர் நான்கு
அப்புறம் முக்கியமான் ஒன்று, நானும் எனது தோழிகளும் (வலைத் தோழிகள் உட்பட) சந்திரமண்டலத்திற்கு ஒரு மாதம் சுற்றுலா சென்று வர வேண்டும். இதை தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.
//

அதீத ஆசை.....
//

என்ன செய்ய கொஞ்சம் அதிகமாத்தான் ஆசைகள் மனதில் வட்டமிடுகின்றன :-)

RAMYA said...

கலை அக்கா said...
//

வரம் நம்பர் ஐந்து
எனது நண்பர்கள்(நண்பிகள் அல்ல) அனைவரையும் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக அவர்கள் இருப்பிடம் சேர்க்க வேண்டும். இந்த வரத்தையும் தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.

//

ஆண் நண்பர்கள்மீது ஏன் இந்த பாரபட்சம்....
//

இல்லை இல்லை நாங்க சந்திர மண்டலம் பார்த்தால்...

அவர்கள் செவ்வாய் கிரகத்தை பார்க்கட்டுமே என்ற ஒரு நல்ல எண்ணம்தான்...

RAMYA said...

//
கலை அக்கா said...
//
வரம் நம்பர் எட்டு

நான் தெருவில் நடந்து போகும் போது என் மீது மட்டும் மழை பொழிய வேண்டும். தொடர்ந்து இல்லைன்னாலும் வாரத்தில் ஒரு முறையாவது இது போல் நிகழ வேண்டும்.
//

அப்பட்டமான சுயநலம்.....!
//

ஹா ஹா சூப்பர்! எல்லாருக்கும் மழையில் நனைய பிடிக்காதே அதனுனாலேதான்!

RAMYA said...

//
ஜீவன் said...
///வரம் நம்பர் ஐந்து
எனது நண்பர்கள்(நண்பிகள் அல்ல) அனைவரையும் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக அவர்கள் இருப்பிடம் சேர்க்க வேண்டும். இந்த வரத்தையும் தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.///

கூடவே அங்கே டாஸ் மார்க் கடையும் இருக்கணும்னு சொல்லுறதுக்கு என்னவாம் ?
//

ஆஹா என்ன ஒரு தேடல்
டாஸ்மார்க் கேட்டால் அங்கேயே உங்களை விட்டுவிட்டு வரச் சொல்லி விடுவேன் பரவா இல்லையா :)

RAMYA said...

வாங்க கனகு ஹா ஹா சூப்பர்!

சுத்தி பாக்கத்தான் அனுப்ப கேக்குறேன்.

தேவதை பத்திரமா திரும்ப அழைத்து வந்துடுவாங்க :))

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் ஆரம்பம் அருமை... தொடரட்டும்
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆ.ஞானசேகரன்!

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
ஹை.. தேவதை உங்ககிட்டையும் வந்தாச்சா..

யாராச்சும் அனுப்பி வெச்சாங்களா.. இல்லை நீங்களே கடத்தி கொண்டாந்துட்டிங்களா..
//

வாங்க சுரேஷ் ஏதோ என்னால முடிஞ்சது :))

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
வரம் நம்பெர் இரெண்டு

நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும்.
//
கேக்குறதுதான் கேக்குறிங்க..
எங்களமாதிரி ஆளுங்களுக்கு எழுதியே கொடுக்கசொல்லி கேக்கலாம்ல..
//

இது கொஞ்சம் ஓவர் :-)

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
சினிமாவில் வக்கிரமான மற்றும் வைலன்ட் காட்சிகளை திரையிடும் போது நீதான் அவற்றை நைசாக அந்த படத்தில் இருந்து நீக்க வேண்டும்.
//
அவங்க என்ன சென்சார் போர்டுலையா வேலைபாக்குறாங்க..
//

அவங்க பார்க்கலை நான் தான் அந்த வேலையை அவங்களுக்கு கொடுத்திருக்கேன்:-)

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக அவர்கள் இருப்பிடம் சேர்க்க வேண்டும்.
//
பரவால.. நான் வேற மாதிரி நெனச்சுட்டேன்..
//

அடபாவி நான் நல்லா தானே சொல்லி இருக்கேன்
எப்படி ட்விஸ்ட் பண்ணலாமா :))

கொடுமை கொடுமை இது தம்பியின் கொடுமை :-)

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
என்னுடை வலை நண்பர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் "ஒரு நாள் முதல்வராக" பதவி ஏற்று செயல்பட வேண்டும் என்று மனதார விரும்பி வேண்டிக் கொள்கிறேன்.
//

வெளங்கிடும்..
//

வேளங்கத்தான் அப்படி சொல்லி இருக்கேன் :-)

RAMYA said...

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்!

RAMYA said...

//
அண்ணன் வணங்காமுடி said...
பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் விடைகளை மறந்து விட்டால்(நம்ம தம்பி பப்பு மாதிரி ஸ்டூடெண்ட்ஸ்), நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும்.
//

அதுக்கு பேசாம புத்தகத்தை எடுத்து கொடுதுவிடாலாம்...
//

அது சரி ஆசை ரொம்பத்தான். படிக்காதீங்க :) :(

RAMYA said...

//
ரங்கன் said...
//இமய மலை மேலே இருந்து கீழே குதிக்கணும், ஆனால் எனக்கு எதுவும் ஆகக்கூடாது//

உங்களுக்கு எதுவும் கண்டிப்பா ஆகாது..ஆனா இமயமலையை நினைச்சாத்தான் பாவமா இருக்கு..!!
//

அது சரி! என்ன ஒரு murder வெறி தம்பி :)

RAMYA said...

//
அண்ணன் வணங்காமுடி said...
இமய மலை மேலே இருந்து கீழே குதிக்கணும், ஆனால் எனக்கு எதுவும் ஆகக்கூடாது //

யாரையாவது அழைத்து செத்து செத்து விளையாடவா.
//

அது சரி! சூப்பர் ஜோக் இது :)

RAMYA said...

//
cheena (சீனா) said...
அன்பின் ரம்யா

அருமை அருமை - வரங்கள் அனைத்தும் கிடைத்து மனம் மகிழ நல்வாழ்த்துகள்
//

வாங்க சீனா ஐயா! வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

RAMYA said...

//
pappu said...
ஏன் இப்படி?

இருந்தாலும் என் பரிட்சைய பத்தியெல்லாம் பேசி ஒரே ஃபீலிங்ஸ் ஆக்கிட்டீங்க!
//

பப்பு தம்பி மறந்துட்டா என்ன செய்யறதுன்னு தான்..........

RAMYA said...

//
வால்பையன் said...
அந்த ரெண்டாவது தேவதை என்னை பார்த்து கண்ணடிச்சிகிட்டே இருக்கு!

யாராவது நான் ரொம்ப அழகுங்கிற ”உண்மைய” அந்த தேவதைகிட்ட சொல்லிட்டிங்களா!?
//

அது தேவதைக்கே தெரிஞ்சிருக்கு
இஃகிஃகி இஃகிஃகி இஃகிஃகி இஃகிஃகி

RAMYA said...

//
வால்பையன் said...
//
வரம் நம்பர் எட்டு

நான் தெருவில் நடந்து போகும் போது என் மீது மட்டும் மழை பொழிய வேண்டும். தொடர்ந்து இல்லைன்னாலும் வாரத்தில் ஒரு முறையாவது இது போல் நிகழ வேண்டும்.
//

தலைக்கு மேல ஒரு ஷவர் செட் பண்ணி, முதுகில் ஒரு வாட்டர் டேங்க் மட்டி விட்றலாம்!

எப்பூடி!
//

என்னாலே வெயிட் தூக்க முடியாது
மழைதான் அது சொந்த முயர்ச்சிய்லே பெய்யணும் :)

RAMYA said...

//
வால்பையன் said...
//
கூடவே அங்கே டாஸ் மார்க் கடையும் இருக்கணும்னு சொல்லுறதுக்கு என்னவாம் ?//

அது மட்டும் இல்லைனா நாம செவ்வாயை ”வெறும்வாயா” மாத்திர மாட்டோமா ஜீவன்!
//

அது சரி ரெண்டு பேருக்கும் ஒன்னும் முடியலை :)

RAMYA said...

//
butterfly Surya said...
பதிவு அருமை.

வாலின் பின்னூட்டங்கள் சூப்பர்.
//

நன்றி butterfly Surya
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
என்ன கொடுமையடா சாமி இது...

50 பின்னூட்டம் வந்திருக்கு... ஆனா தமிழிஷில் 3 வோட்டுத்தான் விழுந்திருக்கு...

முதல்ல அந்த தேவதைகளிடம் சொல்லி பின்னூட்டம் போடறவங்களை ஓட்டும் போட வைக்கணும்
//

அதானே அண்ணா உங்களுக்கு தெரியுது!

எல்லார் கிட்டேயும் கேட்டுகிட்டதுக்கு நன்றி!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
அன்பு, பரிவு, பாசம், குறும்பு, ஆசை எல்லாவற்றையும் சேர்த்து வரமாக கேட்டுஇருக்கீன்றீர்கள்.

வெரிகுட்
//

ரசனைக்கு நன்றி அண்ணா!
வரவுக்கும் நன்றி அண்ணா!

RAMYA said...

//
நசரேயன் said...
//ஆர்பரிக்கும் கடல் அலைகளின் மீது நான் என் தோழிகளுடன் உல்லாசமாக நடந்து செல்ல வேண்டும். //

ஆவியாவா ?
//

வாங்க நெல்லை புயலே!
வரவுக்கு நன்றி!

ஆவி இல்லே நாங்கதான்...

RAMYA said...

//
அப்பாவி முரு said...
//பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் விடைகளை மறந்து விட்டால்(நம்ம தம்பி பப்பு மாதிரி ஸ்டூடெண்ட்ஸ்), நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும். //

ஸ்டாடிங் டிரபிள் உள்ள வண்டியானால், முதல்வரியை எடுத்துக் கொடுக்கலாம்.,

ஆனா.,

பெட்ரோலே இல்லாத வண்டியா இருந்தா என்ன செய்யுரதும்மா... என்ன செய்யுறது?
//

இது நெம்ப உள்குத்து :))

கருத்துக்கு நன்றி முரு!

RAMYA said...

வாங்க மேடி உங்கள் கமெண்ட்ஸ் எல்லாம் அருமை!

உக்காந்து யோசிக்கறீங்க பாருங்க அதுக்கு ஹாட்ஸ் ஆப்!

பதிவுக்கு உங்க பின்னூட்டங்கள் அருமை :)

RAMYA said...

//
R.Gopi said...
ஆஹா...

இப்போதான் ஒண்ணு ஒண்ணா முடிஞ்சுது...

அடுத்த‌து ஆர‌ம்பிச்சுட்டேளா... பேஷ்.. பேஷ்...

இது அடுத்த‌ தொட‌ராகி என்னென்ன‌ ஆக‌ப்போற‌தோ??

இன்னும் அடுத்த‌டுத்து யார் யார் வந்துஎல்லாரையும் டெர‌ர் ஆக்க‌போறாளோ...
//

வாங்க கோபி!

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

RAMYA said...

//
கதிர் - ஈரோடு said...
உங்களைப் பார்த்தா இப்பவே பேய் பயப்படுதாமே
//

வாங்க கதிர் அப்படியா சொல்றீங்க
இது வரை நான்தானே பயந்துகிட்டு இருக்கேன் :))

RAMYA said...

//
பித்தனின் வாக்கு said...
கடல் அளவு ஆசைகள் அது இரண்டு தேவதைகள் போலவே பொது நலமும் சுய நலமும் கலந்துருக்கு. நல்லது வாழ்க வளமுடன்.

எனக்கு ஆசைகள் அதிகம் இல்லை இரண்டுதான் அவை:

// அப்புறம் முக்கியமான் ஒன்று, நானும் எனது தோழிகளும் (வலைத் தோழிகள் உட்பட) சந்திரமண்டலத்திற்கு ஒரு மாதம் சுற்றுலா சென்று வர வேண்டும். இதை தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும். //
1.தயவுசெய்து அங்கனயே விட்டு விட்டு வரவும். திரும்பி இங்க கூட்டிவந்து ரங்கமணிகளை சேகத்தில் ஆழ்த்த வேண்டாம்.

2.எனது தங்கை ரம்யா கேக்கும் இதை தவிர அனைத்து செய்து தரவும்.
பேய் என்னைப் பார்த்து பயப்பட வேண்டும். ( என்ன உங்க வீட்டுல முகம் பாக்குற கண்ணாடி இல்லையா?)
யாரும் சிரிக்காத போது சிரிக்கனுமா அப்பிடினா நீங்க சென்னை 600 010 பார்ட்டியா?
ரிப்பிட்டு. பதிவு சூப்பர்.
//

வாங்க பித்தனின் வாக்கு!
என் வலைக்கு புது வரவு, பல எனக்கு ஆதரவான கருத்துக்கள் சொல்லி இருக்கீங்க
உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி

உங்களின் வலைபெயர் புதுமையா நல்லா இருக்கு!

நல்ல வாக்கு சொல்லி இருக்கீங்க! அதற்கும் மிக்க நன்றி!

RAMYA said...

//
Vidhoosh said...
சரிங்க.
-வித்யா
//

வரவிற்கும் உங்களின் கருத்துக்கும் நன்றி :)

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும்.

//

அப்ப மீதிய யாரு எடுத்து கொடுப்பா ?

Atleast oru bit ketrukalamla ..
//

எடுத்துதான் கொடுக்க முடியும்.

மீதியை அவங்க தான் எழுதனும்
ஆசையை பாரேன்!

கருத்துக்கு நன்றி அ.மு.செய்யது!

RAMYA said...

//
கார்த்திகைப் பாண்டியன் said...
அக்கா.. இப்படி கேட்டது எல்லாம் கொடுக்குற தேவதை வந்த நம்மா ஆளுங்க சும்மாவா இருப்பாங்க? இதுல மாயமா மறையுர வரம் எல்லாம் கிடைச்சா நம்ம ஆளுங்கள கைலையே பிடிக்க முடியாது..
//

கிடைச்சா சந்தோஷமா அனுபவிக்கலாம்தான்
ஆனா உஷாராவும் இருக்கனுமில்லே :)

அதுக்குதான் இந்த வரத்தை எனக்கு மட்டும் கேட்டுகிட்டேன்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் கார்த்திகைப் பாண்டியன்!

RAMYA said...

நன்றி sakthi

நன்றி பின்னோக்கி

நன்றி இராஜலெட்சுமி பக்கிரிசாமி

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
குரும்பு தேவதை - குழந்தைத்தனம் தெரிகிறது - ரம்யா. இரசிக்கும்படியாக இருந்தது.
//

வாங்க ஜமால் கருத்துக்கும் நன்றி !

ஆமாம் அது குறும்பு தேவதை!

RAMYA said...

//
ஸ்ரீ said...
//வலை நண்பர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் "ஒரு நாள் முதல்வராக" பதவி ஏற்று செயல்பட வேண்டும் என்று மனதார விரும்பி வேண்டிக் கொள்கிறேன்.//

இது நல்லாருக்கு.

//

வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஸ்ரீ!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அவ்வ்வ்!

பயங்கரமா பாக்குறாங்க.

கண்(ண)டிக்கிறாங்க.

ஜாக்கிரத...!

வரங்கள் வேறா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

எல்லா வரங்களும் ரசனை.. சில கொஞ்சம் ஓவர்னாலும்.. ஹிஹி.!